பின்பற்றுபவர்கள்

29 மார்ச், 2009

"கை" காட்டும் விஜயகாந்த் !

ஒவ்வொடு தேர்தல் கூட்டத்திலும், அதிமுகவும், திமுகவும் (ஏற்கனவே) ஊழல் செய்துவிட்டன அதனால் எனக்கு(ம்) வாய்ப்புக் கொடுங்கள் என்கிறார் விஜயகாந்த் :)

ஏற்கனவே காங்கிரசுடன் போட்டுக் கொண்டுள்ள (மறைமுக) ஒப்பந்தத்தின் படி, காங்கிரஸார் நிற்கும் தொகுதிகளில் தேமுதிக தனது வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என்பதை பல்வேறு செய்தி இதழ்கள் அறிவிக்கின்றன, தேமுதிகவின் இந்த உதவிக்கு பண்டமாற்றாக தேமுதிகவின் தேர்தலுக்கு ஆகும் ( பல கோடிகள்) செலவுகளை காங்கிரஸ் கவனித்துக் கொள்வதாக ஒப்பந்தமாம்.

விஜயகாந்தின் தேர்தல் முழக்கத்தைக் கேட்போருக்கு இவை வெளிச்சமாகவே தெரிகிறது, தமிழக திராவிடக் கட்சிகளை சாடும் வி.காந்த் மறந்தும் கூட காங்கிரஸ் ஆட்சியை விமர்சிப்பது இல்லை. 40 தோகுதிகளிலும் தேமுதிக நிற்பதாக எந்த கூட்டத்திலும் அறிவிக்கவில்லை. இதன் மூலம் தெரியவருவது என்ன வென்றால் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பிரச்சாரம் செய்கிறதோ இல்லையோ ஆனால் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து தேமுதிக வேட்பாளர்களை நிறுத்தாது என்று அறிய முடிகிறது. இதனை உறுதி படுத்தும் விதமாக, வி.காந்த், நான் "கை" காட்டும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்கிறார்.

"கை" மற்றும் அதன் அல்லக்கைளின் வேட்பாளர்களை துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாண்மை ஈழ ஆதரவு தமிழர்களின் நிலை. கை ஆதரவு நிலை எடுத்திருக்கும் தேமுதிகவும் ஈழ ஆதரவு தமிழக வாக்களர்களால் (அடையாளம்) கண்டு கொள்ளப் போகிறார்கள். "கை" காட்டும் விஜயகாந்துக்கு அவரது கையே அவருக்கு கிடைக்கும் வாக்குகளில் கை வைத்து விடும் போல் ஊகிக்க முடிகிறது. இது மறைமுக மாக அம்மா கூட்டணிக்கு லாபமாக மாறி வெற்றி வாய்ப்புகளை கூட்டும்.

மக்களோடும் தெய்வத்தோடும் கூட்டணி என்கிறார் வி.காந்த். மற்றவர்களெல்லாம் மாக்களோடும் பேய்களோடும் (சத்தியமாக நான் காங்கிரஸ் பற்றி சொல்லவில்லை) கூட்டணி வைத்திருக்கிறார்களா என்ன ?

25 கருத்துகள்:

Sanjai Gandhi சொன்னது…

ஈழ ஆதரவு என்ற பெயரில் எத்தனை நளைக்குத் தான் அந்த அப்பாவிகளின் அவல நிலையை வைத்து அரசியல் செய்வீர்களோ. திருமாவளவன் காங்கிரஸ் கூட்டணியில். வைகோ மற்றும் ரமதாஸ் அதிமுக கூட்டணியில்.

இதில் யார் ஈழத்துக்கு ஆதர்வாளர் ? யார் எதிரி? தெளிவாக சொல்கிறேன். காங்கிரஸ் மீது எவனுக்கு எவ்வளவு காண்டு இருந்தாலும் ஒன்றும் புடுங்க கூட முடியாது. ஏன்னா இங்க காங்கிரசை விமர்சிக்கிற எவனும் யோக்கிய வெங்காயங்கள் இல்லை. எல்லாம் மொள்ளமாறிகள் வெத்து ஜால்றா கும்பல்கள். தனக்கான ஆதாயம் என்று வந்தால் ஈழமாவது ஒன்றாவது என்று கிளம்பிவிடுவானுங்க. அது இப்போ நிரூபணம் ஆகிட்டும் வருது.

அதனால் கோவியாரே.. அல்லைக்கை மாக்கள் பேய்கள் என்று எப்படி வேண்டுமானாலும் பிதற்றிக் கொள்ளுங்கள். இயலாமையை பாவம் எப்படித்தான் வெளிபடுத்துவீர்கள். :))

கோவி.கண்ணன் சொன்னது…

// Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
ஈழ ஆதரவு என்ற பெயரில் எத்தனை நளைக்குத் தான் அந்த அப்பாவிகளின் அவல நிலையை வைத்து அரசியல் செய்வீர்களோ. திருமாவளவன் காங்கிரஸ் கூட்டணியில். வைகோ மற்றும் ரமதாஸ் அதிமுக கூட்டணியில்.
//

முதலில் உங்க காங்கிரஸார் திருமாவை மதிக்கிறார்களா இல்லையா என்று சொல்லிவிட்டு திருமாவைப் பற்றி பேசவும், அண்மையில் கூட மாணவர் காங்கிரஸ் என்ற பெயரில் இளைஞர்கள் திருமாவுக்கு எதிராக முழக்கமிட்டார்கள்

//இதில் யார் ஈழத்துக்கு ஆதர்வாளர் ? யார் எதிரி? தெளிவாக சொல்கிறேன். காங்கிரஸ் மீது எவனுக்கு எவ்வளவு காண்டு இருந்தாலும் ஒன்றும் புடுங்க கூட முடியாது. ஏன்னா இங்க காங்கிரசை விமர்சிக்கிற எவனும் யோக்கிய வெங்காயங்கள் இல்லை. எல்லாம் மொள்ளமாறிகள் வெத்து ஜால்றா கும்பல்கள். தனக்கான ஆதாயம் என்று வந்தால் ஈழமாவது ஒன்றாவது என்று கிளம்பிவிடுவானுங்க. அது இப்போ நிரூபணம் ஆகிட்டும் வருது. //

இங்கே வலைப்பதிவில் ஈழ ஆதரவு நிலை எடுத்து காங்கிரசுக்கு எதிராக எழுதுபவர்கள் எவருக்கும் பைசா, அண்ட் ஆதாயம் எதுவும் கிடையாது

G.Ragavan சொன்னது…

பாஜக பேவாரின்னா... காங்கிரசு காவாலி...
அதிமுக அசிங்கம்மா திமுக தீட்டு
இதுல எந்தப் பயலையுமே நம்ப முடியாது. நம்பக்கூடாது. ஆனா மூனு கட்சிகளுக்கு இந்த வாட்டி ஓட்டுப் போடக்கூடாது. கூட்டணிகளுக்குப் போட்டாலும் சரிதான். ஆனா காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தமிழுணர்வு கொண்டவர்கள் ஓட்டுப் போடக்கூடாதுங்குறது என் கருத்து.

அப்பாவி முரு சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அப்பாவி முரு சொன்னது…

”இது அந்த நாளில் வந்த ரத்தமாக இருக்குமோ” என்று சொன்ன $@#@@நிதியுடன், மீண்டும் வெக்கமில்லாமல் சேர்ந்தவனெல்லாம் பேசவே கூடாது.

சி தயாளன் சொன்னது…

விஜயகாந்த் என்ற பெயரில் இன்னொரு அரசியல்வாதி தமிழ்நாட்டுக்கு....

அண்மையில் நான் சோ எழுதிய “கூவம் நதிக்கரையிலே” கதையை படித்தேன்...அதில் வரும் சம்பவங்கள் அப்படியே மீண்டும் மீண்டும் நடக்கின்றன..

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
”இது அந்த நாளில் வந்த ரத்தமாக இருக்குமோ” என்று சொன்ன $@#@@நிதியுடன், மீண்டும் வெக்கமில்லாமல் சேர்ந்தவனெல்லாம் பேசவே கூடாது.
//

முரு என்கிற நீங்கள், மேலே நீங்கள் போட்ட பின்னூட்டத்தின் வழி நீங்களும் சஞ்செயும் நகையும் சதையும் என்று நினைக்க வைத்தது, பிறகு ஏன் எடுத்தீர்கள் என தெரியவில்லை
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
பாஜக பேவாரின்னா... காங்கிரசு காவாலி...
அதிமுக அசிங்கம்மா திமுக தீட்டு
இதுல எந்தப் பயலையுமே நம்ப முடியாது. நம்பக்கூடாது. ஆனா மூனு கட்சிகளுக்கு இந்த வாட்டி ஓட்டுப் போடக்கூடாது. கூட்டணிகளுக்குப் போட்டாலும் சரிதான். ஆனா காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தமிழுணர்வு கொண்டவர்கள் ஓட்டுப் போடக்கூடாதுங்குறது என் கருத்து.

1:20 AM, March 29, 2009
//

உங்கள் கருத்துதான் என்னுடையதும், நானும் இதுவரை இவர்களுக்கு ஓட்டுப் போடலாம் என்று எவரையும் குறிபிட்டுச் சொன்னதில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ said...
விஜயகாந்த் என்ற பெயரில் இன்னொரு அரசியல்வாதி தமிழ்நாட்டுக்கு....

அண்மையில் நான் சோ எழுதிய “கூவம் நதிக்கரையிலே” கதையை படித்தேன்...அதில் வரும் சம்பவங்கள் அப்படியே மீண்டும் மீண்டும் நடக்கின்றன..
//

போச்சுடா சாமி, 'சோ' ஒரு தீர்க்க தரிசின்னு சோக்காளிகள் கிளம்பிடுவாங்க :)

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
”இது அந்த நாளில் வந்த ரத்தமாக இருக்குமோ” என்று சொன்ன $@#@@நிதியுடன், மீண்டும் வெக்கமில்லாமல் சேர்ந்தவனெல்லாம் பேசவே கூடாது.
//

ஆதயம் இருந்தால் அம்மணமாக நிற்கவும் காங்கிரஸ் தயார் :)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

///ஆதயம் இருந்தால் அம்மணமாக நிற்கவும் காங்கிரஸ் தயார் :)//

:-))))

அப்பாவி முரு சொன்னது…

//கோவி.கண்ணன் 12:02 PM, March 29, 2009
//அப்பாவி முரு said...
”இது அந்த நாளில் வந்த ரத்தமாக இருக்குமோ” என்று சொன்ன $@#@@நிதியுடன், மீண்டும் வெக்கமில்லாமல் சேர்ந்தவனெல்லாம் பேசவே கூடாது.
//

முரு என்கிற நீங்கள், மேலே நீங்கள் போட்ட பின்னூட்டத்தின் வழி நீங்களும் சஞ்செயும் நகையும் சதையும் என்ற நினைக்க வைத்தது, பிறகு ஏன் எடுத்தீர்கள் என தெரியவில்லை
:)//

நகசுத்தி வந்திருச்சு அண்ணே, சதையான நான் நகத்தை (காங்ரஸை) பிச்சு எறிஞ்சுட்டேன்.

அப்பாவி முரு சொன்னது…

// கோவி.கண்ணன் said...
//அப்பாவி முரு said...
”இது அந்த நாளில் வந்த ரத்தமாக இருக்குமோ” என்று சொன்ன $@#@@நிதியுடன், மீண்டும் வெக்கமில்லாமல் சேர்ந்தவனெல்லாம் பேசவே கூடாது.
//

ஆதயம் இருந்தால் அம்மணமாக நிற்கவும் காங்கிரஸ் தயார் :)//

அவன் மட்டுமில்லை, அவங்குடும்பத்துல இருக்குற எல்லாத்தையும் கூட நடுரோட்டுல அம்மணமா நிக்கவைப்பான்.

Shajahan.S. சொன்னது…

விஜயகாந்தின் நிலை தினமும் மாறிக்கொண்டுள்ளது போலும். நேற்று எங்கள் ஊர் கடையநல்லூரில் (தென்காசி தொகுதிக்கு) பிரச்சாரத்துக்கு வந்த அவர் அனைத்து அரசியல் கட்சிகளையும் சாடினார். குறிப்பாக காங்கிரசையும் காமராஜர் ஆட்சி என்ற பொய் அரசியல் நடத்துவதாக கூறினார்.

Unknown சொன்னது…

ஈழ தமிழ் ஆதரவு என்று நீங்கள் காண்பது என்ன? இந்த அரசியல் கட்சிகளின் நாடகங்களையா? காங்கிரஸை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்று முழங்கிய திருமா இப்போது காங்கிரஸூக்காக ஓட்டு கேட்டு வரப்போகிறார், இவர்களை நம்பி நீங்கள் எழுதுகின்றீர்கள், இந்த தேர்தலில் ஈழம் பிரச்சினையாக இருக்கும் என்றால் வெறும் சுயேட்சைகள் மட்டும்தான் ஜெயிக்கவேண்டும், அது நிச்சயமாக நடக்கப்போவதில்லை, அப்படியானால் ஈழம் பிரச்சினையாக இருக்கப்போவதில்லை.

மணிகண்டன் சொன்னது…

மொத்த பதிவுமே இல்லாத ஒரு செய்தியை வச்சி எழுதப்பட்டுள்ளது. இதை வன்மையா கண்டிக்கறேன். விஜயகாந்த் 40 தொகுதிலயும் நிப்பாரு. ஜெயித்து ஈழத்துக்கு ஏதாவது செய்வாரு.

சீமான், திருமா கட்சி சார்பா காங்கிரஸ்க்கு எதிரா நின்னு சிதம்பரத்த எப்படி தோக்கடிப்பாருன்னு தான் புரியல.

கோவை சிபி சொன்னது…

தமிழக அரசியலில் இருபெரும் கள்ள
நாணயங்கள் தி.மு.க வும்,அ.தி.மு.க வும்.ஆனால் பெரிய
கள்ள நோட்டு காங்கிரஸ்.எவனுக்கும்
எதைப்பற்றிப் பேச அருகதை இல்லை.ஈழம் உள்பட.
தற்போதைய பொருளாதார சூழலை வைத்து,தேசிய அரசியலின் எதிர்காலக்கடமையாக தோற்கடிக்கப்படவேண்டிய கட்சி காங்கிரஸ்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Shajahan.S. 3:56 PM, March 29, 2009
விஜயகாந்தின் நிலை தினமும் மாறிக்கொண்டுள்ளது போலும். நேற்று எங்கள் ஊர் கடையநல்லூரில் (தென்காசி தொகுதிக்கு) பிரச்சாரத்துக்கு வந்த அவர் அனைத்து அரசியல் கட்சிகளையும் சாடினார். குறிப்பாக காங்கிரசையும் காமராஜர் ஆட்சி என்ற பொய் அரசியல் நடத்துவதாக கூறினார்.
//

நான் அடிக்கிற மாறி அடிக்கிறேன், நீ அழற மாறி அழு ன்னு சொல்லுவாங்க. வி.காந்த் திரைப்பட நடிகர் அன்றோ :)

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
மொத்த பதிவுமே இல்லாத ஒரு செய்தியை வச்சி எழுதப்பட்டுள்ளது. இதை வன்மையா கண்டிக்கறேன். விஜயகாந்த் 40 தொகுதிலயும் நிப்பாரு. ஜெயித்து ஈழத்துக்கு ஏதாவது செய்வாரு.

சீமான், திருமா கட்சி சார்பா காங்கிரஸ்க்கு எதிரா நின்னு சிதம்பரத்த எப்படி தோக்கடிப்பாருன்னு தான் புரியல.
//

மணி,
பார்போம் 40 தொகுதிக்கும் வேட்பாளர்களை நிறுத்துகிறாரா ? அப்படியே நிறுத்தினாலும் 40 வேட்பாளர்களை ஆதரிந்த்து அந்தந்த தொகுதிகளுக்கும் சென்று காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்று சொல்கிறாரா பார்ப்போம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//தவநெறிச்செல்வன் said...
ஈழ தமிழ் ஆதரவு என்று நீங்கள் காண்பது என்ன? இந்த அரசியல் கட்சிகளின் நாடகங்களையா? காங்கிரஸை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்று முழங்கிய திருமா இப்போது காங்கிரஸூக்காக ஓட்டு கேட்டு வரப்போகிறார், //

திருமாவை காங்கிரஸார் வரவேற்கிறார்களா என்பதை சொல்லிவிட்டு திருமா பற்றிய ஊகங்களைச் சொல்லலாம்.

//இவர்களை நம்பி நீங்கள் எழுதுகின்றீர்கள், இந்த தேர்தலில் ஈழம் பிரச்சினையாக இருக்கும் என்றால் வெறும் சுயேட்சைகள் மட்டும்தான் ஜெயிக்கவேண்டும், அது நிச்சயமாக நடக்கப்போவதில்லை, அப்படியானால் ஈழம் பிரச்சினையாக இருக்கப்போவதில்லை.
//

நான் இங்கே யாருக்கு வாக்களியுங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவை சிபி said...
தமிழக அரசியலில் இருபெரும் கள்ள
நாணயங்கள் தி.மு.க வும்,அ.தி.மு.க வும்.ஆனால் பெரிய
கள்ள நோட்டு காங்கிரஸ்.எவனுக்கும்
எதைப்பற்றிப் பேச அருகதை இல்லை.ஈழம் உள்பட.
தற்போதைய பொருளாதார சூழலை வைத்து,தேசிய அரசியலின் எதிர்காலக்கடமையாக தோற்கடிக்கப்படவேண்டிய கட்சி காங்கிரஸ்.
//

கோவை சிபி, வெற்றி பெற்ற வேட்பாளர்களை விலை கொடுத்து வாங்குவது அவ்வளவு சிரமமானதா என்ன ? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//
T.V.Radhakrishnan said...
///ஆதயம் இருந்தால் அம்மணமாக நிற்கவும் காங்கிரஸ் தயார் :)//

:-))))
//

வருகைக்கு நன்றி

Naresh Kumar சொன்னது…

கோவி கண்ணன்,

நாட்டில் வர வர இப்ப ஆட்சி சரியில்லை என்றோ தவறுகளை சுட்டிக்காட்டியோ சொல்ல முடியாது போலிருக்கு, உடனே, உங்களுக்கு இயலாமை, உங்களுக்கு யோக்கியதை இல்லை அது இதுன்னு பேச ஆரம்பிச்சுருவாங்க போலிருக்கு...

எந்தக் கட்சியும் யோக்கியமில்லை என்பதால், காங்கிரஸ் யோக்கியமாகிவிடாது. யாருக்கு ஓட்டு என்பதில் குழப்பம் இருக்கலாம், ஆனால், எக்காரணம் கொண்டும் காங்கிரசிற்கு ஓட்டு இல்லை என்பதில் தெளிவாக இருக்கிற பலரை பார்க்க முடிகிறது...

இதுல காமெடி என்னன்னா, காங்கிரஸ் நிற்கிற தொகுதிகளில் தேமுதிக நிற்காவிட்டால், லாபம் அதிமுக கூட்டணிக்கே. (ஒருவேளை அவங்களுக்கு ஓட்டு போடாட்டி தேசிய பாதுகாப்பு சட்டத்துல உள்ள போட்டுருவாங்களோ!!!)

ராம்.CM சொன்னது…

நான் அரசியல் என்றாலே காதை பொத்திக்கொள்வேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//ஒவ்வொடு தேர்தல் கூட்டத்திலும், அதிமுகவும், திமுகவும் (ஏற்கனவே) ஊழல் செய்துவிட்டன அதனால் எனக்கு(ம்) வாய்ப்புக் கொடுங்கள் என்கிறார் விஜயகாந்த் :)//

நிறைய குடிக்கலாம்,
நாக்கை மாத்திப் போட்டு கொழரலாம்
ஆனா வாய் மட்டும் குழறக் கூடாது!
-விஜயகாந்து

நிறைய குடிக்கலாம்
பொது இடங்களுக்கு வரும் போது
குடித்துவிட்டு வரக்கூடாது
அம்மாவிற்கு வாசனை
பொறுக்க முடியலையாம்.
-பொதுசனம்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்