எப்படி வாழ்த்து சொல்வது என்பதில் பல்வேறு நம்பிக்கைகள் இருந்தாலும், வாழ்த்துகள் சொல்வது பிறரை மகிழ்விக்க, அன்பை தெரிவிக்க என்கிற புரிந்துணர்வில், வாழ்த்துகள் பலிக்குமா ? இல்லையா ? என்ற கேள்வியை புறம் வைத்துவிட்டு இறைமறுப்பாளர்கள் கூட பிறருக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.
பொதுவாக தமிழர் பண்பாட்டில் புதுமண இணையர்களை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்துவது வழக்கம், அந்த பதினாறு எது என்று தெரியாமல், எல்லோரும் சொல்கிறார்களே என்று சொல்லி வைப்பதும் வழக்கம், அதுக்காக பதினாறு என்ன வென்று மனப்பாடம் செய்து வைத்திருப்பவர்கள் தான் வாழ்த்தனுமா ? என்றெல்லாம் கேட்கக் கூடாது, அவை என்ன வென்று தெரிந்து கொள்வதில்லை என்பதாக மட்டும் புரிந்து கொள்வோம். எல்லா வளங்களையும் பெற்று என்பதற்கும் என்ன என்ன வளம் என்று ஆராய்ச்சி நடத்துவது இல்லையே அதனால் பதினாரையும் அப்படியே எடுத்துக் கொள்வோம், ஒண்ணும் தவறு இல்லை. இணையத்தில் பதினாறு என்னவென்று தேடினால் தமிழ் விக்கிப்பீடியாவிலேயெ தொகுத்து வைத்திருந்தார்கள்
கல்வி
புகழ்
வலி(மை)
வெற்றி
நன் மக்கள்
பொன்
நெல் (உணவு)
நல்லூழ்
நுகர்ச்சி (அனுபவம்)
அறிவு
அழகு
பொறுமை
இளமை
துணிவு
நோயின்மை
வாழ்நாள்
இந்த பட்டியல் வெறும் தகவலுக்காக எடுத்து எழுதினேன்
பொதுவாக வாழ்த்தும் போது மனைவி மக்களோடு (குழந்தைகளோடு) நல்லா இருங்க, நல்ல இருக்கனும் என்று வாழ்த்துவது வழக்கம், வாழ்தும் படியே . குழந்தைகள் மனைவியுடன் நலமாக இருப்பார்கள், ஆனால் 50 - 60 வயதுடைய பெற்றோர்களை விட்டுவிடுவார்கள்.
அடுத்தமுறை வாழ்த்தும் போது, பெற்றோர்கள் துணையுடனும், மனைவி மக்களுடனும் நலமும் வளமும் நிறைந்து வாழ்க அல்லது எப்படி வாழ்த்துச் சொன்னாலும் அதில் பெற்றோர்களை சேர்த்துச் சொல்லிப் பழகலாம்.
ஒருவர் தன்னுடைய 60 வயது வரையிலும் அவரின் 85 வயது பெற்றோர்களுடன் சேர்ந்து வாழ்வதைவிட சிறப்பான வாழ்க்கை இருக்க முடியுமா ?
வாழ்த்துகள் பலிக்குதோ இல்லையோ.....ஒருவரை வாழ்த்தும் போது பெற்றோர்கள் இருந்தால் அவர்களின் பெற்றோர்களின் நலனையும் சேர்த்து வாழ்த்தும் போது, அவை வெறும் (formal) வாழ்த்துச் சொற்கள் அல்ல என்று நினைக்காமல் பெருமகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைவார்கள்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
25 கருத்துகள்:
வாழ்த்துவது நல்ல பண்பாடு. ஒருவரை வாழ்த்துவதால் இவ்வுலகில் நமது நட்பு வட்டம் பெருகும், அதோடு அகந்தையும் நம்மையறியாமல் அகலும்!
வாழ்த்துவதற்கும் காக்காபிடிப்பதற்கும் நூலளவுதான் வித்தியாசம்... இன்னொருவர் நன்றாக இருப்பதற்காக வாழ்த்துவதற்கு பெயர், இயல்பான வாழ்த்து! தான் மட்டுமே நன்றாக இருப்பதற்காக இன்னொருவரை வாழ்த்துவதற்கு பெயர், காக்காய் பிடிப்பது! :)
\\அடுத்தமுறை வாழ்த்தும் போது, பெற்றோர்கள் துணையுடனும், மனைவி மக்களுடனும் நலமும் வளமும் நிறைந்து வாழ்க அல்லது எப்படி வாழ்த்துச் சொன்னாலும் அதில் பெற்றோர்களை சேர்த்துச் சொல்லிப் பழகலாம்.\\
நல்ல கருத்து...
\\அடுத்தமுறை வாழ்த்தும் போது, பெற்றோர்கள் துணையுடனும், மனைவி மக்களுடனும் நலமும் வளமும் நிறைந்து வாழ்க அல்லது எப்படி வாழ்த்துச் சொன்னாலும் அதில் பெற்றோர்களை சேர்த்துச் சொல்லிப் பழகலாம்.\\
நல்லா சொன்னீங்க
நல்லதா சொன்னீங்க
நல்ல பதிவு!!
வாழ்த்துகள்
கோவியார் குடும்பத்திற்கு வாழ்த்துகள்!
//கல்வி
புகழ்
வலி(மை)
வெற்றி
நன் மக்கள்
பொன்
நெல் (உணவு)
நல்லூழ்
நுகர்ச்சி (அனுபவம்)
அறிவு
அழகு
பொறுமை
இளமை
துணிவு
நோயின்மை
வாழ்நாள்
இந்த பட்டியல் வெறும் தகவலுக்காக எடுத்து எழுதினேன்//
நன்றி. இது தகவல் மட்டுமல்ல
சிறு குறிப்பேடு. ஏனென்றால் அதற்குண்டான விளக்கம் என் போன்றவர்களுக்கு இதுவரை தெறிந்திருக்க வில்லை இப்போது தெறிந்து கொண்டேன் மிக்க நன்றி
நல்ல சிந்தனை!
செய்யலாம்!
பெற்றவர் அருளோடு சுற்றமும் உற்றமும் சிறக்க வாழ்த்துகிறேன்!
நல்லா இருங்க.
நல்ல கருத்து
:-))
ம்ம்ம் சொல்லலாமே!!!
//வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...
வாழ்த்துவது நல்ல பண்பாடு. ஒருவரை வாழ்த்துவதால் இவ்வுலகில் நமது நட்பு வட்டம் பெருகும், அதோடு அகந்தையும் நம்மையறியாமல் அகலும்!//
நல்ல கருத்து !
//வாழ்த்துவதற்கும் காக்காபிடிப்பதற்கும் நூலளவுதான் வித்தியாசம்... இன்னொருவர் நன்றாக இருப்பதற்காக வாழ்த்துவதற்கு பெயர், இயல்பான வாழ்த்து! தான் மட்டுமே நன்றாக இருப்பதற்காக இன்னொருவரை வாழ்த்துவதற்கு பெயர், காக்காய் பிடிப்பது! :)
//
காக்கா பிடிப்பதை முகஸ்துதி என்பார்கள். அதைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
//அறிவே தெய்வம் said...
\\அடுத்தமுறை வாழ்த்தும் போது, பெற்றோர்கள் துணையுடனும், மனைவி மக்களுடனும் நலமும் வளமும் நிறைந்து வாழ்க அல்லது எப்படி வாழ்த்துச் சொன்னாலும் அதில் பெற்றோர்களை சேர்த்துச் சொல்லிப் பழகலாம்.\\
நல்ல கருத்து...
//
தப்பிச்சேன் :)
//நட்புடன் ஜமால் said...
\\அடுத்தமுறை வாழ்த்தும் போது, பெற்றோர்கள் துணையுடனும், மனைவி மக்களுடனும் நலமும் வளமும் நிறைந்து வாழ்க அல்லது எப்படி வாழ்த்துச் சொன்னாலும் அதில் பெற்றோர்களை சேர்த்துச் சொல்லிப் பழகலாம்.\\
நல்லா சொன்னீங்க
நல்லதா சொன்னீங்க
//
தம்பி நன்றி !
//அப்பாவி முரு said...
நல்ல பதிவு!!
//
தம்பி நன்றி !
// T.V.Radhakrishnan said...
வாழ்த்துகள்
//
சித்தப்பா நன்றி !
// ஆ.முத்துராமலிங்கம் said...
//கல்வி
புகழ்
வலி(மை)
வெற்றி
நன் மக்கள்
பொன்
நெல் (உணவு)
நல்லூழ்
நுகர்ச்சி (அனுபவம்)
அறிவு
அழகு
பொறுமை
இளமை
துணிவு
நோயின்மை
வாழ்நாள்
இந்த பட்டியல் வெறும் தகவலுக்காக எடுத்து எழுதினேன்//
நன்றி. இது தகவல் மட்டுமல்ல
சிறு குறிப்பேடு. ஏனென்றால் அதற்குண்டான விளக்கம் என் போன்றவர்களுக்கு இதுவரை தெறிந்திருக்க வில்லை இப்போது தெறிந்து கொண்டேன் மிக்க நன்றி
//
பாராட்டுக்கு நன்றி !
//VSK said...
நல்ல சிந்தனை!
செய்யலாம்!
பெற்றவர் அருளோடு சுற்றமும் உற்றமும் சிறக்க வாழ்த்துகிறேன்!
//
நன்றி ஐயா !
//துளசி கோபால் said...
நல்லா இருங்க.
//
நன்றி அம்மா !
//RAHAWAJ said...
நல்ல கருத்து
//
நன்றி அண்ணா !
// ’டொன்’ லீ said...
:-))
//
சிரிப்பானுக்கு நன்றி தம்பி !
//அன்புடன் அருணா said...
ம்ம்ம் சொல்லலாமே!!!
//
நன்றி !
//ஜோதிபாரதி said...
கோவியார் குடும்பத்திற்கு வாழ்த்துகள்!
//
நன்றி ஜோதிபாரதி
சில இடங்களில் தாத்தா பாட்டியும் இருக்கின்றார்கள்?????
அவ்வையின் வாழ்த்து "வரப்புயர"
கருத்துரையிடுக