விஜயகாந்த் இதுவரையில் தான் ஒரு தெளிவான அரசியல்வாதி என்பதாகக் கூட மக்கள் மன்றத்தில் காட்டவில்லை. ஒருகூட்டத்தில் திமுக தனது தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து செயல்படுத்தி வருவதாகவும், மறுநாள் கூட்டத்தில் திமுக அரசு எதுவுமே செய்யவில்லை என்பதாக நாளொரு பேச்சு பேசி வருகிறார். எதுவுமே செய்யாதவர்கள் இவரது தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து செயல்படுத்துவதாக முன்னுக்கு பின் முரணாக பேசுவதில் இருந்தே விஜயகாந்தின் அரசியல் வெறும் தூற்றல் தான் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். சென்ற சட்டமன்ற தேர்தலில் 'பதிவான' வாக்குகளில் வி.காந்த் வாங்கியது வெறும் 8 விழுக்காடு, அதாவது 'மொத்த' வாக்களர்களில் 5 விழுக்காட்டினர் வி.காந்துக்கு வாக்களித்தனர், அதிலும் 3 விழுக்காட்டினர் முதல் முறை நிற்கிறார் என்பதாலும் திராவிட கட்சிகளைப் பிடிக்கவில்லை என்பதற்காக கிடைத்த வாக்குகள் தான். 1 விழுக்காடு ரஜினி கட்சி ஆரம்பிக்காத எரிச்சலில் வி.காந்தை ஆதரித்த ரஜினியின் முன்னால் ரஜினி ரசிகர்க்கள், 1 விழுக்காடு சரத்குமாருக்கும் மதுரை இடைத்தேர்தலுக்கு கிடைத்தது போல் தெளிவற்ற வாக்களர்களால் போடப் பட்டது, அதிலும் மீதம் ஒரே ஒரு விழுக்காடு தான் விஜயகாந்தின் ரசிகர்கள் மற்றும் அவரது சாதியைச் சேர்ந்தவர்களில் வாக்குகள், வி.காந்தின் வாக்கு வங்கி என்றால் அது அந்த ஒரு விழுக்காடு மட்டுமே, சென்ற முறை வி.காந்துக்கு வாக்களித்த மற்ற 4 விழுக்காட்டினர் எப்போதும் அளிப்பார்கள் என்று சொல்ல முடியாது.
இந்த கணக்கு பெரிய கட்சிகளுக்கு தெரியாமல் இல்லை, வி.காந்தை கூட்டணியில் சேர்ப்பதன் மூலம் கூட்டணியின் பலம் கூடுவதாக மக்கள் மன்றத்தில் கணக்கு காட்ட வி.காந்துக்கு அழைப்பு விடுத்தனர். எல்லோரும் ஊழல் செய்தவர்கள் என்று தொடர்ந்து கூறிவிட்டு அவர்களுடன் கூட்டணியில் இணைவாரா சங்கடமாக இருக்காதா, அதற்குத்தான் அவர் தயங்குகிறார் என்பது போல் விஜயகாந்த் கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்காததை வைத்து சிலர் பேசிக் கொள்கிறார்கள். அரசியலிலாவது தயக்கமாவது அதெல்லாம் ஒன்றும் இல்லை, கலைஞரின் காலில் பலமுறை விழுந்த வி.காந்த் அரசியல் என்று வந்த பிறகு படுகேவலாமாகவெல்லாம் பேசி இருக்கிறார். அதே போன்று இராமதாசும் கலைஞரை பலமுறை பேசி இருக்கிறார், ஜெவையும் பலமுறை பேசி இருக்கிறார். அரசியல்வாதிகளைப் பொறுத்து வசையாடல்கள் இயல்பானதே, அப்படி செய்பவர்களைத் தான் தங்கள் அரசியல்வாதி தொழிலைச் சேர்ந்தவர்கள் என்றே நினைப்பார்கள் எவ்வளவு கேவலாமாக பேசினாலும் தேர்தல் நெருங்க, புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் ஆயத்தமாகிவிடுவார்கள், இப்படியெல்லாம் இருந்தும் எதாவது திராவிடக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் அடுத்த தேர்த்தலில் தாம் வருங்கால முதல்வர் என்று பிரச்சாரம் செய்ய முடியாது என்பதே வி.காந்தின் எண்ணம், அடுத்த தமிழக தேர்த்தலுக்கு இன்னும் இரு ஆண்டுகளே உள்ளன, வி.காந்த் கொஞ்சம் காலம் மருத்துவரிடம் பாடம் பாடிக்கலாம்.

இதோ ஐயாவும் அம்மாவும் தேர்தல் கால கூட்டணியில் செருகிறார்கள், தேர்தலுக்கு மறு நாளே......'ஜெ ஒரு நல்ல அரசியல்வாதி அல்ல...பழிவாங்கும் நோக்கம் கொண்டவர் என்று ஐயாவும், 'பாமக ஒரு சாதிக்கட்சி, இராமதாஸ் ஒரு மரம் வெட்டி' என்று அம்மாவும் சொல்லப் போவதையும் நாம் கேட்கலாம்.
25 கருத்துகள்:
Me The First!
//ஜோதிபாரதி said...
Me The First!
//
இப்படி பின்னூட்ட ஆர்வமாக
ரொம்ப நாளாக காத்திருந்தது போல் தெரிகிறது. இன்னிக்கு ஜென்ம சாபல்யம் அடைஞ்சாச்சா ?
:)
ஜகஜமுங்கோ!
ஜமாலுக்கு முன்னாடி போட்டு நாம ஜமாய்ச்சுபுட்டோமுள்ள!
போட்டோவை போட்டிருக்கலாமே!
ஐயையோ இந்த பதிவுளையும் முதல் இடத்தை விட்டுட்டனே....
கண்ணன்,
இலங்கை தமிழர்கள் விஷயத்தில் மேடமும் பெரிதாக ஒன்றும் செய்துவிடப்போவதில்லை. உண்ணாவிரதம் எல்லாம் வெறும் தேர்தலுக்காக நடத்திய நாடகம்.
ஐயாவின் எண்ணம் எல்லாம் அடுத்த ஆட்சியிலும் மகனை அமைச்சராக்க வேண்டும் என்பது மட்டுமே.
இலங்கை தமிழர்களுக்காக கோஷமிடும் திருமா ஏன் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்க வேண்டும்?
இதெல்லாம் அரசியல் கூத்து என்றில்லாமல் வேறென்ன?
இன்றைய சூழலில் அஇஅதிமுகவுக்கு திமுகவே மேல்.
ஒன்று மட்டும் சொல்வேன். இலங்கை தமிழர்கள் விஷயத்தில் மத்தியிலோ மாநிலத்திலோ யார் வந்தாலும் ஒன்றும் செய்துவிட முடியாது.
ஹ்ம்ம்.... ஜோதி அண்ணன் அப்புறமா தனியா வருவாரு. அப்போ வச்சிக்கிறேன் கச்சேரியை
ராமதாஸ் கிட்டே சொல்லி அம்மாகிட்டே புடுச்சி கொடுக்க சொல்றேன்.
பாருங்க, இவங்க எல்லோருமே மருத்துவருங்க(அதான் டாக்டர்னு சொல்ல வர்றேன்) மக்களுக்கு நல்லா வைத்தியம் பாக்குறாங்க.
தொழில் யாவாரத்துல பயங்கர கெட்டி சாமியோவ்! எந்த பொருளாதார நெருக்கடியோ, பண வீக்கமோ, பங்கு சந்தை ஏற்ற இரக்கமோ இவர்களோட யாவாரத்த துளிகூட பாதிக்காது.
தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி கட்சிகளை மாற்றாத கட்சி தமிழ்நாட்டில் உள்ளதா?
...//தமிழனை வெறும் குதிரையாக நினைத்து சவாரி செய்யலாம் என்கிற காங்கிரஸ் நினைப்புக்கு இந்த முறை தமிழர்கள் பாடம் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள் என்பதை தமிழக சிறுவன் கூட அறிந்திருப்பான், இதை அறிந்ததால் பாமக திமுக கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்து ஜெ வுடன் கூட்டணியில் இணைய முடிவு செய்து அதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்த ஜெ வை ஈழத்ததமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கக் கேட்டுக்கொண்டு அதன் படியே பாமக அரசியல் காய்நகர்த்தல் நடைபெறுகிறது.//
....//சொல்லப் போனால் தாவித் தாவித்தான் பாமகவை மத்திய அமைச்சர் அவை வரையில் வளர்த்துச் சென்றிருக்கிறார் இராமதாஸ்.//
காங்கிரஸ் போடும் கணக்கொன்று
திமுக போடும் கணக்கொன்று
இரண்டுமே தவறானது.
வாக்களிக்கப்போகும் தமிழன்
போடும் கணக்கிற்கு
இருவரும் விடையாகி
(ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு)
தெருவில் நிற்கப் போவது
முடிவானது.
நன்றி:கருணாநிதிக்கு.அவர் எழுதிய
பூம்புகார்ப் பாடலைச்
சிறிது மாற்றி எழுதியிருக்கிறேன்.
என்ன சொல்ல்றதுன்னும் தெரியலை. அவிய்களுக்கு நம்மளை எல்லாம் பாத்தா எப்பிடி இருக்கும்ன்னும் தெரியலை.
கே.கு மாதிரி இருக்குமோ?
கே.குன்னா- கேட்டபதெல்லாம் குடுக்குறவங்க - ன்னு அர்த்தம்
வந்தபின் பேசிக்கலாம்
//தேர்தலுக்கு மறு நாளே......'ஜெ ஒரு நல்ல அரசியல்வாதி அல்ல...பழிவாங்கும் நோக்கம் கொண்டவர் என்று ஐயாவும், 'பாமக ஒரு சாதிக்கட்சி, இராமதாஸ் ஒரு மரம் வெட்டி' என்று அம்மாவும்//
வெட்கம், மானம், ரோஷ உணர்வற்றவர்கள் மட்டும்தான் அரசியலுக்கு வருவார்களோ? சே. என்ன கொடுமை.
ஈழ பிரச்சனை தேர்தல் ல எதிர்ஒலிக்காது னு திட்டவட்டம கலைஞர் நினைக்கிறார்.
//செந்தேள் 5:21 PM, March 24, 2009
ஈழ பிரச்சனை தேர்தல் ல எதிர்ஒலிக்காது னு திட்டவட்டம கலைஞர் நினைக்கிறார்.
//
:) பின்னே எதிரொலிக்கும் என்று சொல்லியா ஆளுங்களை நிறுத்த முடியும். சமக கூட தங்களுக்கு 15 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். சிரிச்சிட்டு போகனும் !
//ஜோதிபாரதி said...
ஜமாலுக்கு முன்னாடி போட்டு நாம ஜமாய்ச்சுபுட்டோமுள்ள!
//
என்னது ஸ்மால் பாய் தனமாக இருக்கு :) நான் ஜாமலைச் சொல்லவில்லை :)
//பாண்டித்துரை said...
போட்டோவை போட்டிருக்கலாமே!
//
உங்க வேண்டுகோளை நிறைவேற்றியாச்சு ஆனால் கொஞ்சம் பழைய படம், அடிக்கடி போஸ் கொடுப்பாங்க, நாமதான் அட்ஜெஸ்டு பண்ணிக்கிடனும்
//நட்புடன் ஜமால் said...
ஜகஜமுங்கோ!
//
செகெண்டு கேப்புல ஜோதி.பாரதியை விட்டுட்டிங்களே !
//நையாண்டி நைனா said...
ஐயையோ இந்த பதிவுளையும் முதல் இடத்தை விட்டுட்டனே....
//
எத்தனை பேரு ?
மித செகண்ட், தேர்டு, போர்த் க்கெல்லாம் காம்பெட்டிசன் இல்லாயே :)
//டி.பி.ஆர் said...
கண்ணன்,//
வாங்க ஜோசப் ஐயா, இந்த முறையும் சென்னையில் உங்களை சந்திக்க வாய்ப்பில்லாமல் போனதில் வருத்தம் தான்.
//இலங்கை தமிழர்கள் விஷயத்தில் மேடமும் பெரிதாக ஒன்றும் செய்துவிடப்போவதில்லை. உண்ணாவிரதம் எல்லாம் வெறும் தேர்தலுக்காக நடத்திய நாடகம்.
ஐயாவின் எண்ணம் எல்லாம் அடுத்த ஆட்சியிலும் மகனை அமைச்சராக்க வேண்டும் என்பது மட்டுமே.
//
தந்தை மகற்காற்றும் உதவின்னு இதைத்தான் சொல்றாங்களோ.
//இலங்கை தமிழர்களுக்காக கோஷமிடும் திருமா ஏன் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்க வேண்டும்? //
திருமா கூட்டணியில் இருந்தாலும் காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டார் என்றே நினைக்கிறேன்
//இதெல்லாம் அரசியல் கூத்து என்றில்லாமல் வேறென்ன?
இன்றைய சூழலில் அஇஅதிமுகவுக்கு திமுகவே மேல். //
எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி ? என்பதாக பழமொழி உண்டு.
//ஒன்று மட்டும் சொல்வேன். இலங்கை தமிழர்கள் விஷயத்தில் மத்தியிலோ மாநிலத்திலோ யார் வந்தாலும் ஒன்றும் செய்துவிட முடியாது.
//
அதைத்தான் மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். எதிர்ப்புகளை பதியவைப்பாங்க.
//அரியாங்குப்பத்தார் said...
தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி கட்சிகளை மாற்றாத கட்சி தமிழ்நாட்டில் உள்ளதா?
//
இந்திய அரசியலிலேயே இது தற்பொழுது நடைமுறையில் இல்லை என்பதே உண்மை
நான் நேற்று போட்ட பதிவில் வரும் சம்பவம் உண்மையாகப் போகுது போல....
:-)
ஏதோ நல்லா இருந்தா சரி
இன்றைய தமிழ்நாட்டு அரசியல்
விபச்சார அளவிற்குச் சென்று விட்டது.
அவர்களில் பலர் வயிற்றிற்காகச்
செய்கிறார்கள்,மன்னிக்கலாம்.
அரசியல் விபச்சாரம் செய்பவர்கள்
நம்து வயிற்றெரிச்சலுக்காகவே
செய்கிறார்கள்!
வெட்கம்!வேதனை!
கருத்துரையிடுக