பின்பற்றுபவர்கள்

8 மார்ச், 2009

சிங்கையில் சைவ சிறுத்தை !

கவிஞர் பாண்டித்துரை மற்றும் ஜோதி.பாரதி ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், ஈழமக்களின் நலன் குறித்து உண்மையான அக்கறை கொண்டுள்ள ஒரே அரசியல் தலைவருமான தொல்.திருமாவளவன் பங்குபெற்று சிறப்புரையாற்றும், இலக்கிய நிகழ்வு பற்றி பதிவின் மூலமாக அறிவிப்பு செய்ததுடன், கலந்து கொள்ள வேண்டுமென்றும் அன்புடன் அழைத்திருந்தனர்.நேற்று சிங்கை கவிமாலை கவிஞர்கள் சார்பாக, ஈழத்தமிழர்கள் குறித்த கலந்துரையாடல்களுடன் கூடிய மதிய உணவுடன் தொல்.திருமாவுடன் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தனர், அதற்கும் நண்பரும் பதிவர்களுமான ஜோதிபாரதி மற்றும் பாண்டிதுரை ஆகியோர் அழைத்திருந்தனர் அலுவல் அழுத்தம் காரணமாக செல்ல முடியாமல் போயிற்று.

நேற்று சொல்லமுடியாமல் போனதால் இன்று எப்படியும் திருமாவைக் கண்ணுற வேண்டும், பேச்சை கேட்டுவரவேண்டும் என்று சென்றேன். மாலை 6 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிகழ்ச்சி காலமெடுத்து 7 மணிக்கு துவங்கியது.

இன்றைய நாள் உலக மகளிர் நாளாக இருப்பதால் சிங்கப்பூர் கவிமாலை கவிஞர்கள் சார்பாக அறியபெற்ற கவிதாயினி திருமதி மலர்விழி இளங்கோவன் தலைமையில் மகளிர் நாள் பற்றிய கவியரங்கத்துடன் விழா தொடங்கியது

கவிதாயினிகள் உஷா, சாந்தி, பாரதி மற்றும் இன்பா ஆகியோர்களின் பெண்ணிய கவிதைகள் இன்றைய நன்னாளுக்கு சிறப்பு சேர்க்கும்படி அமைந்தது.

அதன் பிறகு தொல்.திருமா அவர்களின் சிறப்புரை தொடங்கியது. தொடங்கும் முன்பே திருமா அவர்களிடம் சில இளைஞர்கள் தங்களுக்கு தமிழ் பெயர் சூட்டுமாறு வேண்டுகோள் வைத்தனர். (வடமொழி) கடவுள்கள் (இங்கே அந்த பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை) பெயர் தாங்கி இருந்த இருவருக்கும், முத்தழகன், அறிவழகன் என்று பெயர் சூட்டினார். திருமாவிற்கு ஆவலுடனும் மகிழ்ச்சியுடன் பலர் பொன்னாடை போத்தினார்கள். பிறகு தனது உரையைத் தொடங்கினார் திருமா.


"அடங்கமறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பித்தாக்கு" என்பதை ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சி முழுக்கமாக வைத்திருக்கும் திருமா, வள்ளுவரையும் வள்ளலாரையும் பற்றிப் பேசச் சொல்வது அவரது வீர உரையை கேட்கவேண்டும் என்பதற்காக செல்லும் என்போன்றவர்களுக்கு ஏமாற்றம்தான், ஆனால் திருமா மிகச் சிறப்பாகவே பேசினார். பெளத்தம், சமணம், வள்ளுவம், வள்ளலார் கொள்கை இவற்றிற்கிடையேயான ஒற்றுமைகள் அவை வழியுறுத்துவது என்ன என்பதை மிகவும் சிறப்பாக பேசினார். எல்லா மதங்களுமே மனிதர்களிடம் அன்பு வைக்கச் சொல்கிறது, ஆனால் புத்தரும், வள்ளலாரும், வள்ளுவரும், பிற உயிர்கள் அனைத்தின் மீதும் அன்பு செய்யச் சொல்லி இருக்கிறார்கள், வாடிய பயிறை கண்ட வள்ளலாரும், பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும் என்ற திருவள்ளுவரும், அன்னப் பறவையை காப்பாற்றி மருந்திட்ட புத்தரும் உயிர்கள் அனைத்தின் மீதும் அன்பு செய்யச் சொல்லி இருக்கிறார்கள், ஆனால் நாமோ ஒரு மனிதன் விபத்தில் சிக்கினால், அவன் சொந்தக்கரான, சாதிக்காரனா, மதத்தைச் சேர்ந்தவனா, இந்தியனா என்றெல்லாம் பார்த்தே அவர்களுக்காக வருந்துகிறோம்"

"மனித நேயம் மறைந்துவிட்டதாலேயே, துன்பப்படும் மனிதன் நமக்கு வேண்டியவர் என்றால் மட்டுமே அதுபற்றி ஏதேனும் சிந்திக்கிறோம், பிற உயிர்களை நேசிக்கத் தெரிந்தால் தான் சக மனிதனையும் நேசிக்க முடியும், இதைத்தான் வள்ளுவரும், வள்ளலாரும் வழியுறுத்தி இருக்கிறார்கள். இதைத்தான் ஆன்ம நேயம் என்கிறோம். ஆன்மநேயம் இருந்தால் மனிதன் விடுதலை பெறலாம், மனித விடுதலையே ஆன்மநேயம்" என்று முடித்தார்....ஏறக்குறைய ஒரு மணி நேர சொற்பொழிவு மிக அருமையாக இருந்தது, இடையிடையே ஈழத்தமிழர்கள் துயர் குறித்து திருமா அவர்கள் பார்வையாளர்களுக்கு நினைவு படுத்தும் விதமாக பேச்சுரையை அமைத்துக் கொண்டார்.

திருமா வள்ளலார், வள்ளுவர் பற்றிப் பேச மிகவும் தகுதி படைத்தவர் ஏனெனில் கொல்லாமை அறத்தை கடைபிடித்து புலால் உணவு மறுத்தவர் என்று பின்னர் அறிந்தேன்.

நிகழ்ச்சியின் நிறைவில் திருமா அருகில் சென்று கைகுலுக்க வாய்ப்புக் கிடைத்தது, அருகில் செல்வோர்கள் அனைவரையுமே மிக தோழமையுடன், கனிவு, அன்புடன் நடத்துகிறார். இதுபோன்ற தன்னலமற்ற தலைவர்கள் தமிழர்களுக்கு கிடைப்பது அரிதே என்றுணர்ந்தேன். அரசியல் நோக்கின்றி ஈழத்தமிழர்களுக்காக கண்ணீர் விடுவதுடன், பல வழிகளில் அவர்களின் துயர் துடைக்கும் போராட்டம் நடத்தும் ஒரே அரசியல் தலைவன் திருமா மட்டுமே.

ஏற்பாடு செய்திருந்த இடம் சிறிய இடம் என்றாலும் சுமார் 500 பேர்களுடன் அரங்கு நிறைந்திருந்தது


நிகழ்ச்சியில் பேசிய சிலர் 'பிரபாகரன்' என்ற பெயரைச் சொல்லியதும் கூட்டத்தினரின் கைதட்டல் ஆரவாரம், கனன்று கொண்டிருக்கும் நெருப்பை காற்று அடித்து வெளிக்காட்டியதைப் போன்று உணர்ந்தேன்.

திருமாவை நேரில் பார்க்க வேண்டும் என்கிற எனது ஆவல் முழுமையடைந்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த நண்பர் பாண்டித் துரைக்கும், ஜோதிபாரதிக்கும், நிழல்படம் எடுக்க உதவிய முகவை இராம் அவர்களுக்கும் நன்றி.நிகழ்ச்சிக்கு பதிவர்கள் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர்.


(முகவை இராம், பாண்டிதுரை, மீனாட்சி சுந்தரம், தமிழ் ஐயா இளங்குமரன்)


நிகழ்ச்சி முடிந்ததும், பிறகு திருமா வசந்தம் தமிழ் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்தார்.

15 கருத்துகள்:

TBCD சொன்னது…

சந்திக்கு வாய்ப்பு பெற்றவர்கள், இனிமேலாவது இவ்வாறு சொல்லுங்க.

ஃஃஃஃஃஃஃ

கலைஞரின் நிழலில் வெகு காலம் திருமா காலம் தள்ளினால் காணமல் போய்விடுவார். வெகுண்டு, தனியாக வரவேண்டும்.

தனியொரு தலைவராக பரிமாணம் பெற்றாலே, தமிழர்களின் தலைவராக முடியும்.

ஃஃஃஃஃஃஃஃஃ

விரிவான பதிவிற்கு நன்றி அண்ணாச்சி

TBCD சொன்னது…

மேலே ”சந்திக்கும்” என்று மேலே இருக்கும் பின்னுட்டத்தை படிக்குமாறு அன்பர்களை கேட்டுக்”கொல்லு”கிறேன்.

தமிழன்-கறுப்பி... சொன்னது…

பகிர்வுக்கு நன்றி..!

நசரேயன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

நசரேயன் சொன்னது…

மச்சான் மஞ்ச சொக்காயிலே மாப்பிள்ளை மாதிரி இருக்கான், ஹும் உனக்கு நல்லா சாப்பாடு கிடைக்குது போல!!

ARASIAL சொன்னது…

தொல் திருமா உயரிய சிந்தனை கொண்ட மனிதர். அவர் தனியொரு நல்ல தலைவராக பரிணமிக்கும் நாள் வெகு விரைவில் வரத்தான் போகிறது.

இருத்தலின் கட்டாயம்தான் இப்போது அவரை ஏதோ ஒரு கூட்டணிக்குள் தள்ளிவிடுகிறது.

ஜாதிக் கண்ணோட்டத்தை விட்டுவிட்டு அவரை ஒரு தமிழர் தலைவராகப் பார்க்கத் தொடங்கினால் போதும்... இன்றைக்குள்ள பல போலிகள் காணாமல் போவார்கள்.

எஸ்எஸ்

பழமைபேசி சொன்னது…

//கவிதாயினிகள் உஷா, சாந்தி, பாரதி//

கவிஞர்கள் உஷா, சாந்தி, பாரதி என்பதே வழமையானது. கவிஞன்கள் என்று குறிப்பிடுவோமா நண்பரே? கவிஞர் கோவி என்றால் பொதுப்பால். கவிஞன் கோவி என்றால், உரிமையுடன் ஒருமையில் விளிப்பது. அதுவே ஒன்றுக்கு மேற்பட்டோர் எனில், கவிஞர்கள் கோவி, பழனி ஆகியோர் எனச் சொல்வது வழமை! இஃகிஃகி!!

பழமைபேசி சொன்னது…

//அக்கரை உடையவர்//

அக்கறை....

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அருமையான தொகுப்பு, விளக்கம், பதிவு!
திருமாவை சந்தித்த போது, நானும் கொஞ்ச நேரம், திருமாவுடைய பாத்திரமாகிப் பார்த்தேன். அதன் கடினத்தை உணர்ந்தேன். வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியதால், தமிழக அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள் என்று ஓரளவுக்கு சிந்திக்க, கற்பனை செய்ய முடிந்தது. தாங்கள் திருமாவை சந்தித்தது மகிழ்ச்சியைத் தருகிறது.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//TBCD said...

சந்திக்கு வாய்ப்பு பெற்றவர்கள், இனிமேலாவது இவ்வாறு சொல்லுங்க.

ஃஃஃஃஃஃஃ

கலைஞரின் நிழலில் வெகு காலம் திருமா காலம் தள்ளினால் காணமல் போய்விடுவார். வெகுண்டு, தனியாக வரவேண்டும்.

தனியொரு தலைவராக பரிமாணம் பெற்றாலே, தமிழர்களின் தலைவராக முடியும்.//

டிபிசிடி சார்,
தனிமையில் சந்தித்தபோது அதையும் கேட்டாயிற்று, அதில் உள்ள சிரமங்களைச் சொன்னார். தற்போதைய நிலையில் அவர் எந்தக் கூட்டணியில் இருக்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. கலைஞர் ஈழத்தமிழர்களுக்கு ஏன் பெரிதாக ஏதும் செய்யவில்லை என்பதையும் விளக்கினார். அவர் யாரையும் தங்க ஊசியாக நினைத்து கண்ணில் எடுத்துக் குத்திக் கொள்ள மாட்டார் என்றே கருதுகிறேன்.

இளங்குமரன் சொன்னது…

இந்த இணைப்பு கிடைக்கக் காரணமான மீனாட்சிக்கு முதலில் நன்றி.

வியப்பாக உள்ளது. இரவு நடைபெற்ற நிகழ்ச்சி இத்தனை விரைவாக வலையேற்றம் செய்துள்ளார் என்பதை நினைக்கும்போது வியப்பாகத்தான் உள்ளது. வலைப்பதிவர்க்கு என் வாழ்த்துகளும் வணக்கங்களும்.

அண்மைக் காலமாகத் திருமா வைச் சந்தித்துப் பேச நினைத்திருந்தோம். சந்திக்க மட்டும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. பேசமுடியாமல் போனது வருத்தம்.

இவரைப்போன்று தமிழர்களுக்காகவும் தமிழ்நாட்டிற்காகவும் போராடும் உண்மையான போராளிகள் ஒன்றிணைய வேண்டும். அவர்களை ஆதரிக்கும் மனப்பான்மை தமிழனுக்கு வரவேண்டும். அதற்கு நம்மைப் போன்றவர்கள் ஊடகங்களை முழுமையாக முழுவீச்சில் பயன்படுத்தவேண்டும். இந்த எண்ணம் ஈடேற "காலம்" உறுதுணையாக உள்ளது என்பது மகிழ்ச்சிக்குரியது வாழ்த்துகள்.

பாண்டித்துரை சொன்னது…

///நேற்று சிங்கை கவிமாலை கவிஞர்கள் சார்பாக, ஈழத்தமிழர்கள் குறித்த கலந்துரையாடல்களுடன் கூடிய மதிய உணவுடன் தொல்.திருமாவுடன் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தனர்///

கவிமாலை நண்பர்கள் என்பது தவறு. தமிழ்மரையான் மற்றும் அவர்களை சார்ந்த நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் பல கவிமாலை நண்பர்கள் ஆர்வமாக கலந்துகொண்டதுடன் தனது நண்பர்களையும் அழைத்திருந்தனர்

பாண்டித்துரை சொன்னது…

தோழர் திருமா பற்றி பதிவிட எனக்கு சில நாட்கள் தேவைபடும். தெரியும் உங்கள் பதிவு முதன்மையாக வரும் என்று.

உங்களின் சில புகைப்படங்கள் என்னிடம் உள்ளது. இன்றிரவு மின்னஞ்சல் செய்கிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமையான தொகுப்பு

மீனாட்சி சுந்தரம் சொன்னது…

அருமையான தொகுப்பு அண்ணா..என் புகைப்படம் மிக அருமை..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்