பின்பற்றுபவர்கள்

5 நவம்பர், 2008

தாய்குலங்களின் பேராதரவினால் OBAMA பெற்ற வெற்றி !

வாக்களித்தவர்களிடம் உடனடியாக நடத்திய கருத்துக் கணிப்பின் படி பெண்களின் வாக்குகளைப் பெற்று ஒபாமா வெற்றி பெற்றிருப்பதாகத் தெரிகிறது. ஆண் வாக்காளர்களைவிட சுமார் 7 விழுக்காடு கூடுதலாக பெண் வாக்களர்கள் ஒபாமாவைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

மற்றவகையில்,



65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களில் 45 விழுக்காட்டினர் ஒபாமாவுக்கு ஆதரவாகவும் 55 விழுக்காட்டினர் மெக்கைனுக்கு ஆதரவாகவும் ( பழம் பெருச்சாளிகள் என்பது இவர்கள் தானோ ?) வாக்களித்துள்ளனர்

45 முதல் 64 வரை என நடுத்தர வயதைக் கடந்தவர்கள் இருபக்கமும் சமமாக வாக்களித்துள்ளனர்

30 - 44 வயது வரை நடுத்தர வயதினர் 52 விழுக்காட்டு ஆதரவை ஒபாமாவுக்கு வழங்கியுள்ளனர்

18 - 29 வயது வரை இளம் வயதினர் 66 விழுக்காட்டு ஆதரவை ஒபாமாவுக்கு வழங்கியுள்ளனர்.

- இதன் மூலம் பெண்களும் இளைஞர்களும் ஒபாமாவை ஆதரித்தார்கள், கருப்பினத்தார் ஒருவரை அதிபராக்க விருப்பம் கொண்டிருத்தனர், அவர்களின் வாக்குகளே ஒபாமாவை வெள்ளை மாளிகைக்கு அனுப்புகிறது என்று தெரியவருகிறதூ

நான் முந்தைய பதிவு ஒன்றில், நாடா ? இனமா ? அமெரிக்கர்கள் முடிவெடுக்கும் அரைகூவல் என்ற கேள்விக்கு விடையாக... நாட்டு நலனை பெருவாரியான மக்கள் நினைத்திருந்தனர் என்றே தெரிகிறது.

வாழ்க ஜனநாயகம் !

பின்குறிப்பு : ஆஞ்சநேயரால் ஓபாமா வெற்றிபெற்றதாக சொல்லிக் கொள்ளும் பதிவுகள் இன்னும் வராமல் இருப்பது வியப்பளிக்கிறது, :) :) ஒபாமா வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி சு.சாமி அனைத்துலக நீதிமன்றம் செல்லப் போகிறாராம் ? :) :)

22 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

//ஆஞ்சநேயரால் ஓபாமா வெற்றிபெற்றதாக சொல்லிக் கொள்ளும் பதிவுகள் இன்னும் வராமல் இருப்பது வியப்பளிக்கிறது,//

அதானே

Bharath சொன்னது…

//
- இதன் மூலம் பெண்களும் இளைஞர்களும் ஒபாமாவை ஆதரித்தார்கள், கருப்பினத்தார் ஒருவரை அதிபராக்க விருப்பம் கொண்டிருத்தனர், அவர்களின் வாக்குகளே ஒபாமாவை வெள்ளை மாளிகைக்கு அனுப்புகிறது என்று தெரியவருகிறதூ
//

why do u always think in that line.. ஒபாமாவிற்கு பதிலாக ஹில்லாரி இருந்தாலும் இதே முடிவுதான் வந்திருக்கும்.. இது "Democrats"ன் வெற்றி. ஒபாமாவின் வெற்றிக்கு முழு பொறுப்பு அதிபர் புஷ் மட்டுமே..

நையாண்டி நைனா சொன்னது…

/*ஒபாமா வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி சு.சாமி அனைத்துலக நீதிமன்றம் செல்லப் போகிறாராம் ? :) :) */

போக மாட்டார் அண்ணே... போக மாட்டார்...

ஏன் என்றால் தேர்வு செய்தவர்களோ, செய்யப்பட்டவறோ திராவிட திம்மிகள் அல்லவே.......

பாச மலர் / Paasa Malar சொன்னது…

//ஆஞ்சநேயரால் ஓபாமா வெற்றிபெற்றதாக சொல்லிக் கொள்ளும் பதிவுகள் இன்னும் வராமல் இருப்பது வியப்பளிக்கிறது/

ஹா..ஹா..அதென்ன ஆஞ்சநேயருக்கும் ஒபாமாவுக்கும் தொடர்பு?

வெண்பூ சொன்னது…

இந்த தேர்தலில் ஒபாமா வெற்றி என்பதை விட ரிபப்ளிகன்ஸ் தோல்வி என்பதுதான் நிஜம்.. 1996 தமிழகத் தேர்தலில் எந்த பிரசாரமும் செய்யாமல் இருந்திருந்தால் கூட திமுக வெற்றிபெற்றிருக்கும். அதேபோல்தான் இதுவும்..

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நான் அப்பவே சொன்னேன் கோவியாரே!
உங்களோட பதிவில் நான் விட்டுச்சென்ற பின்னூட்டத்தைப் பாருங்கள்.
தங்களின் வட அமெரிக்கப் பயணத்தின் போது திரு.ஒபாமாவைச் சந்திக்கும் திட்டம் ஏதும் உள்ளதா?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
நான் அப்பவே சொன்னேன் கோவியாரே!
உங்களோட பதிவில் நான் விட்டுச்சென்ற பின்னூட்டத்தைப் பாருங்கள்.//

நீங்கள் தீர்க்க தரிசி ! :) நான் ஒபாமா தோல்வியடைய வேண்டும் என்று எழுதவில்லை. தோற்கடிக்கப்படுவாரோ என்று தான் எழுதினேன்.

//தங்களின் வட அமெரிக்கப் பயணத்தின் போது திரு.ஒபாமாவைச் சந்திக்கும் திட்டம் ஏதும் உள்ளதா?
//

யார் வட அமெரிக்கா போறாங்க ?

கோவி.கண்ணன் சொன்னது…

//Bharath said...

why do u always think in that line.. ஒபாமாவிற்கு பதிலாக ஹில்லாரி இருந்தாலும் இதே முடிவுதான் வந்திருக்கும்.. இது "Democrats"ன் வெற்றி. ஒபாமாவின் வெற்றிக்கு முழு பொறுப்பு அதிபர் புஷ் மட்டுமே..
//
Bharath,
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப் படுபவருக்கு, குறிப்பாக அவர் கருப்பர் என்பதால் அதிர்ஷ்டத்தால், புஷ் எதிர்பால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார், அவருக்கு திறமையே இல்லை என்று என்னால் துணிச்சலாகவோ, ஊகமாகவோ கூடச் சொல்ல முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
அதானே//

நீங்களாவது அப்படி ஒரு பதிவைப் போடக் கூடாதா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
/*ஒபாமா வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி சு.சாமி அனைத்துலக நீதிமன்றம் செல்லப் போகிறாராம் ? :) :) */

போக மாட்டார் அண்ணே... போக மாட்டார்...

ஏன் என்றால் தேர்வு செய்தவர்களோ, செய்யப்பட்டவறோ திராவிட திம்மிகள் அல்லவே.......
//

நைனா,

அப்போ அவர் சீசன் அரசியல்வாதி இல்லையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//பாச மலர் said...
//ஆஞ்சநேயரால் ஓபாமா வெற்றிபெற்றதாக சொல்லிக் கொள்ளும் பதிவுகள் இன்னும் வராமல் இருப்பது வியப்பளிக்கிறது/

ஹா..ஹா..அதென்ன ஆஞ்சநேயருக்கும் ஒபாமாவுக்கும் தொடர்பு?

9:10 PM, November 05, 2008
//

மேட்டரே தெரியாதா ? அவருடைய அலுவலகத்திலும் சட்டைப் பையிலும் ஆஞ்சநேயர் படம் வைத்திருந்தார் என்று ஊடகங்கள் எழுதின.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
இந்த தேர்தலில் ஒபாமா வெற்றி என்பதை விட ரிபப்ளிகன்ஸ் தோல்வி என்பதுதான் நிஜம்.. 1996 தமிழகத் தேர்தலில் எந்த பிரசாரமும் செய்யாமல் இருந்திருந்தால் கூட திமுக வெற்றிபெற்றிருக்கும். அதேபோல்தான் இதுவும்..
//

ஒருவரின் வெற்றிக்கு பலகாரணங்கள் இருக்கலாம், அதில் புஷ்ஷின் மோசமான நிர்வாகமும் காரணம். மற்றபடி ஒபாமா திறமையானவராக இருந்ததால் தானே அவரால் ஹில்லாரியை விஞ்சி வரமுடிந்தது.

வெண்பூ சொன்னது…

//ஆஞ்சநேயரால் ஓபாமா வெற்றிபெற்றதாக சொல்லிக் கொள்ளும் பதிவுகள் இன்னும் வராமல் இருப்பது வியப்பளிக்கிறது,//

பதிவு வரலன்னா மட்டும் அது உண்மையில்லன்னு ஆயிடுமான்னு ஒருத்தர் கேக்குறாரு.. அது நான் இல்லிங்க..

சி தயாளன் சொன்னது…

//நான் முந்தைய பதிவு ஒன்றில், நாடா ? இனமா ? அமெரிக்கர்கள் முடிவெடுக்கும் அரைகூவல் என்ற கேள்விக்கு விடையாக... நாட்டு நலனை பெருவாரியான மக்கள் நினைத்திருந்தனர் என்றே தெரிகிறது//

ஆகா...இதுக்கு சு.சுவாமி பரவாயில்லை போல இருக்கே..

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

விசயமே தெரியாம இருக்கீங்களேண்ணே?

வைகோ அமெரிக்காவுல போயி ஓபாமாவ பார்தாருல்ல, அப்ப "நான் உங்கள் வீட்டு பிள்ளை" பாட்ட ஒபாமாவுக்கு சொல்லிக்கொடுத்துட்டு வந்துருகாரு. இதப் பாடியே எல்லாத் தாய்குலங்களோட வாக்கையும் பெற்றுட்டாரு நம்ம ஒபாமா.
ஆகா புரட்சித்(??) தலைவரோட பாட்டும், அதச் சொல்லிக் கொடுத்த வைகோவும் தான் வெற்றிக்கு காரணம்.

வர்ற ஜனவரிக்குள்ள கலைஞர் வைகோவ விடுதலை செய்யலைன்னா, ஒபாமா கலைஞர் மேல கடும் நடவடிக்கை எடுத்துருவாரு தெரியும்ல.

பூச்சாண்டியார் சொன்னது…

//ஒபாமா வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி சு.சாமி அனைத்துலக நீதிமன்றம் செல்லப் போகிறாராம் ? :) :)

சி.டி எதாவது சிக்கிடிச்சோ..

Arizona penn சொன்னது…

எந்த எனமா இருந்தாலும், எந்த மதமா இருந்தாலும், எந்த நிறமா இருந்தாலும் மக்களோட வாழ்வாதாரமே பறிபோகுதுன்னு நிலைமை வரும்போது, எல்லாரும் ஒத்துமையா சேர்ந்து இன, மத, நிற வேறுபாடுகளை தூக்கி தூரப்போட்டுட்டு, நாட்டுக்கு தேவையான ஒருத்தரை மட்டுமே தலைமை பொறுப்புக்கு கொண்டு வருவாங்க....அதுக்கு பேருதான் உண்மையான ஜனநாயகம்... அமெரிக்காவில் உண்மையான ஜனநாயகம் இன்னும் செழிப்பா இருக்குன்னு தெரியுது.... அப்படியே என்னோட கருத்துக்களுக்கும் (http://aviyalselvi.blogspot.com) உங்களோட விமர்சனத்தை பின்னூட்டமா தெரிவிச்சீங்கன்னா ரொம்ப நல்லாருக்கும் !!!!!ஹீ...ஹீ...ஹீ...

குடுகுடுப்பை சொன்னது…

ஒபாமா வெற்றி பெற்றதில் எங்கள் வீட்டுல வருங்கால அமெரிக்க ஜனாதிபதிக்கு ரொம்ப சந்தோசம்.

நவநீதன் சொன்னது…

இந்த தேர்தல் போகட்டும்....
அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு கீழ்கண்டவர்கள் களத்தில் இருப்பார்கள் என்று நம்புகிறேன்....
1 கருணாநிதி
2 ஜெயலலிதா
3 விஜயகாந்த்
4 ராமதாஸ்
5 நடிகர் விஜய், கார்த்திக், சரத் குமார்
மற்றும் பலர்..

குமரன் (Kumaran) சொன்னது…

//ஒபாமா வெற்றி பெற்றதில் எங்கள் வீட்டுல வருங்கால அமெரிக்க ஜனாதிபதிக்கு ரொம்ப சந்தோசம்.//

அப்படி போடுங்க அருவாளை. எங்க வீட்டுலயும் நான் என் மகளிடம் அதைத் தான் சொல்லிக் கொண்டிருந்தேன் நேற்று. நீயோ தம்பியோ வருங்காலத்தில் அமெரிக்க அதிபர் ஆகவேண்டும் என்று நினைத்தால் இதோ ஒபாமா பாதையிட்டுத் தந்திருக்கிறார் என்று. :-)

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

1996 தமிழகத் தேர்தலில் எந்த பிரசாரமும் செய்யாமல் இருந்திருந்தால் கூட திமுக வெற்றிபெற்றிருக்கும். அதேபோல்தான் இதுவும்..//
சன்னமாக தமிழ் சரித்திரத்தை அசைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

http://varungalamuthalvar.blogspot.com/2008/11/blog-post_05.html
இது என்னோடதல்ல

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்