பின்பற்றுபவர்கள்

13 ஆகஸ்ட், 2008

மேற்கு மாம்பலம் மாமா மெஸ் !

மாம்பலம் பேச்சிலர்களுக்கு பழகிய பெயர் தான் மாமா மெஸ், ஒரிஜினல் பெயர் எது என்று மறந்துவிட்டது. எனக்கு அலுவலகம் அப்போது ஆரிய கவுடா ரோட்டில் இருந்தது. எங்களைப் போன்ற பேச்சிலர்களுக்கு கட்டுபடியாகும் விலையில் தான் மாமா மெஸ் சாப்பாடு இருக்கும். இரண்டு பொறியல், ஒரு கூட்டு சாம்பார், அப்பளம் ஊறுகாய், மோர், ரசம் மற்றும் வத்தல் குழம்பு இவையே மாமா மெஸ்ஸின் மதிய சாப்பாட்டில் இருப்பவை.

காலை அலுவலகம் நேரத்திற்கு முன்பே சென்றுவிட்டால் மாமா மெஸ்ஸில் பூரி கெழங்கு, ஊத்தப்பம், தோசை இட்லி, மெதுவடை மற்றும் தயி கூட கிடைக்கும். மாமா மெஸ்ஸின் அமைந்திருக்கும் இடம், மேற்கு மாம்பலம் அரங்கநாயகம் ரயில் பாலத்திற்கு அருகில் இருக்கும் டேட்டா உடுப்பி ஓட்டலுக்கு அருகில் இடது பக்கமாக திரும்பும் சாலையில் எஸ்ஆர்எம்கல்லூரி அலுவலகத்திற்கு மிக அருகே, ஆரிய கவுடா சாலைக்கு திரும்பும் சாலையில் அடுத்தார் போல் ஒரு மாடியில் இருக்கிறது.

மாமா மெஸ்ஸுக்கு வாடிக்கையாளர்கள் என்றால் நாள் தோறும் கையில காசு வாயில தோசை என்று கண்டிசன் கிடையாது, 'நாளைக்கு தருகிறேன் மாமா' என்று சொல்லிவிட்டால் போதும். அது போல் மாதந்திர பணம் செலுத்தும் திட்டத்தின் கீழும் பலர் அங்கு கணக்கு வைத்திருப்பார்கள், சாப்பிட்டுவிட்டு நமது பெயருக்கு நேராக அங்கிருக்கும் குறிப்பேட்டில் தேதியைப் போட்டுவிட்டு கையெழுத்து போட்டுவிட்டால் போதும், அந்த மாதத்திற்கான முழுத்தொகைக்கும் சாப்பிட்டு இருக்காமல் விடுமுறைக்குச் சென்றிருந்தால் மீதம் தொகையை அடுத்த மாதக் கணக்கில் வரவாக வைத்துக் கொண்டு கூடுதலாக கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் போதும் என்ற சலுகையெல்லாம் உண்டு.

அவ்வபோது நடக்கும் இந்து பண்டிகைக்களின் சிறப்பு நாட்களுக்கென உள்ள ஒரு உணவை இலவசமாக போடுவார்கள். இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி எல்லாம் வருவது மாமா மெஸ்ஸின் மதிய சாப்பாட்டின் போது தான் தெரியும். மாமா மெஸ்ஸில் எனக்கு பிடித்த ஐயிட்டம் உருளைகிழங்கு பொறியல் தான். நன்றாக வேகவைத்த உருளைகிழங்கில் அளவாக சேர்க்கப்பட்ட காரம், மற்றும் தக்களியுடன் அதன் சுவையே தனி.

மாமா மெஸ்ஸுக்கு அருகிலேயே மேல் நிலைபள்ளியும் இருப்பதால் +2 மாணவிகளை சைட் அடிப்பதற்காகவே சாப்பிட்டு முடித்தது ஒரு சிகெரெட்டை பற்ற வைத்துக் கொண்டு உச்சி வெயிலைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் நிற்பவர்களும் உண்டு.

ஒருவாரம் மாமாவிடம் சொல்லாமல் ஊருக்குச் சென்று திரும்பினால், அன்பாக ஆதரவாக 'ஆத்துல அம்மா அப்பா சவுக்கியமோ' விசாரிப்பார். மாமா மெஸ்ஸில் அளவற்ற சாப்பாடு தான். இருப்பு தீறும் வரை கேட்பதெல்லாம் முகம் கோணாமல் வைப்பார்கள்.

தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே முறுக்கு மற்றும் காரம், இனிப்பு வகைகள் மாமா மெஸ்ஸில் ஆயத்தம் ஆகிவிடும், மற்ற இடங்களை விட கிலோவுக்கு 5 ரூபாய் வரை வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் தருவார்கள்.

ஊரில் பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த ஒருவரை மாமா மெஸ்ஸில் வாடிக்கையாளராக பார்த்தேன் என்பதும் மாமா மெஸ் பற்றிய மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்று. மாமா மெஸ்ஸென்றாலும் மாமாக்கள் கையால் அங்கு எல்லோருக்கும் சமபந்தி போஜனம் தான்.

பின்குறிப்பு : இந்த பதிவை தமிழ் வலைப்பதிவு உலகின் முடிசூடா மன்னன் எனது நண்பர் லக்கிலுக் அவர்களுக்காக அளிக்கிறேன்.

25 கருத்துகள்:

லக்கிலுக் சொன்னது…

கலக்குறேள்ணா...

நான் கம்ப்யூட்டர் டிப்ளமோ மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு இண்ஸ்டிடியூட்டில் தான் படித்தேன். அப்போது அயோத்தியா மண்டபத்துக்கு எதிரில் இருந்த ஐஸ்க்ரீம் பார்லருக்கு மாலை வேளைகளில் சாந்தி என்ற ஃபிகரோடு ரெகுலராக வருவதுண்டு.

அங்கிருக்கும் மெஸ்களில் எப்போதாவது சாப்பிட்டிருக்கிறேன். எனக்கென்னவோ மாம்பலத்தில் வைணவ வாடை அடிப்பது போலவும், மயிலாப்பூரில் சைவ வாடை அடிப்பது போலவும் தோன்றும். உங்களுக்கு?

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//லக்கிலுக் said...

2:04 PM, August 13, 2008
//

லக்கிலுக் தென்கலை ஐயங்கார்,

மேற்கு மாம்பலத்தை சைவம் - வைணவம் என்றெல்லாம் பிரிச்சுப் பார்க்காதேள். எல்லோரும் ஒத்துமையாத்தான் இருக்கா.

மீன் வாடை வரலையோன்னோ, வடை வாடை மாத்ரம் தானே வருது விடுங்கோ !
2:07 PM, August 13, 2008

முரளிகண்ணன் சொன்னது…

அடுத்து யாராவது திருவல்லிக்கேணி கற்பக வினாயாகர் மெஸ் பற்றி பதிவு போடுவார்கள் என நினைக்கிறேன்.

ஜெகதீசன் பர்மா கடை அல்லது விஜயம் மெஸ் பற்றி பதிவு எழுதுவார் என எதிர்பார்க்கிறேன்

நான் எங்கள் ஊர் சங்கு மார்க் பிரியானி பற்றி பதிவு போடுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...

முரளிகண்ணன் ,

லக்கிலுக்கை நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்துகிறேன்.
:)

Great சொன்னது…

//
அடுத்து யாராவது திருவல்லிக்கேணி கற்பக வினாயாகர் மெஸ் பற்றி பதிவு போடுவார்கள் என நினைக்கிறேன்.

ஜெகதீசன் பர்மா கடை அல்லது விஜயம் மெஸ் பற்றி பதிவு எழுதுவார் என எதிர்பார்க்கிறேன்

நான் எங்கள் ஊர் சங்கு மார்க் பிரியானி பற்றி பதிவு போடுகிறேன்.

//
அப்படின்னா யாரும் எங்க ஏரியா (வடிவேலு புகழ்) ப்ரபா ஒயின்ஸ் பத்தி எழுத மாட்டீங்க....??? நல்லா இருங்க.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அண்ணே, இப்பத்தான் பரிசல்கார் வலைப்பூவுல போயி இந்த வாரம் கடித வாரம்னு அறிவிச்சுட்டு வர்ரேன், வடகலையும் , தென்கலையும் சேர்ந்து மெஸ் வாரமாக்கிட்டீங்க.
தங்கமணி ஊர்ல இருக்கப்பயே நல்ல சாப்பாடு கிடைக்காது, இப்ப அதவிட மோசமா ஏதோ ஒரு வழியா சமாளிச்சுக்கிட்டு இருக்கேன். நீங்க எல்லாம் செய்யிறது கொஞ்சம்கூட நல்லா இல்லை. அப்றம் வேளா வேளைக்கு உங்க வீட்டுக்கு சாப்பிட வந்துடுவேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Great said...
//
அடுத்து யாராவது திருவல்லிக்கேணி கற்பக வினாயாகர் மெஸ் பற்றி பதிவு போடுவார்கள் என நினைக்கிறேன்.

ஜெகதீசன் பர்மா கடை அல்லது விஜயம் மெஸ் பற்றி பதிவு எழுதுவார் என எதிர்பார்க்கிறேன்

நான் எங்கள் ஊர் சங்கு மார்க் பிரியானி பற்றி பதிவு போடுகிறேன்.

//
அப்படின்னா யாரும் எங்க ஏரியா (வடிவேலு புகழ்) ப்ரபா ஒயின்ஸ் பத்தி எழுத மாட்டீங்க....??? நல்லா இருங்க.

3:03 PM, August 13, 2008
//

Great,
சேத்துப்பட்டு மேம் பாலத்துக்கு அருகில் குஷ்பு ஒயின்ஸ் இருக்கு, அதைப் பற்றி தாங்கள் பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
அண்ணே, இப்பத்தான் பரிசல்கார் வலைப்பூவுல போயி இந்த வாரம் கடித வாரம்னு அறிவிச்சுட்டு வர்ரேன், வடகலையும் , தென்கலையும் சேர்ந்து மெஸ் வாரமாக்கிட்டீங்க.
தங்கமணி ஊர்ல இருக்கப்பயே நல்ல சாப்பாடு கிடைக்காது, இப்ப அதவிட மோசமா ஏதோ ஒரு வழியா சமாளிச்சுக்கிட்டு இருக்கேன். நீங்க எல்லாம் செய்யிறது கொஞ்சம்கூட நல்லா இல்லை. அப்றம் வேளா வேளைக்கு உங்க வீட்டுக்கு சாப்பிட வந்துடுவேன்.

3:13 PM, August 13, 2008
//

பால்ராஜ்,
எப்போ வருகீறீர்கள் என்று சொல்லுங்க வீட்டைக் காலிப்பண்ணனும் !
:)

துளசி கோபால் சொன்னது…

//வடை வாடை...//

எங்கே ????? எங்கே???????

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
//வடை வாடை...//

எங்கே ????? எங்கே???????

3:40 PM, August 13, 2008
//

துளசி அம்மா,

ஏற்கனவே லக்கிபதிவில் மாமி மெஸ் அட்ரசை குறித்து வைத்து இருக்கிறேன் என்று பின்னூட்டம் போட்டு இருக்கிறீர்கள், அடுத்த இந்திய பயணத்தின் போது அங்கு செல்வீர்கள். அப்பொழுது தெரியும்.

எனக்கு பிடித்தது வாசனையான வாழைப்பூ வடைதான். கொஞ்சம் கூடுதலாக சாப்பிட்டால் அதுவும் திகட்டிவிடும்

Athisha சொன்னது…

விட்டா அரக்கோணம் அத்திம்பேர் மெஸ்
திண்டிவனம் ராமையா மெஸ் பத்திலாம் கூட பதிவுகள் போடுவாங்க போல இருக்கே

கலி முத்திடுத்து.. அம்பிகளா

manikandan சொன்னது…

பெங்களூர் அன்பர்கள் மல்லேஸ்வரம் ஐயர் மெஸ், சக்தி மெஸ், அஜந்தா மெஸ் பத்தி எல்லாம் பதிவு போடலாம்.

கிரி சொன்னது…

//இரண்டு பொறியல், ஒரு கூட்டு சாம்பார், அப்பளம் ஊறுகாய், மோர், ரசம் மற்றும் வத்தல் குழம்பு இவையே மாமா மெஸ்ஸின் மதிய சாப்பாட்டில் இருப்பவை.//

டபுள் ஓகே

//அவ்வபோது நடக்கும் இந்து பண்டிகைக்களின் சிறப்பு நாட்களுக்கென உள்ள ஒரு உணவை இலவசமாக போடுவார்கள்//

மெஸ் சிறப்பே இது தான்.

//முரளிகண்ணன் said...
அடுத்து யாராவது திருவல்லிக்கேணி கற்பக வினாயாகர் மெஸ் பற்றி பதிவு போடுவார்கள் என நினைக்கிறேன்.
ஜெகதீசன் பர்மா கடை அல்லது விஜயம் மெஸ் பற்றி பதிவு எழுதுவார் என எதிர்பார்க்கிறேன்//

:-)))))))))

Kanchana Radhakrishnan சொன்னது…

உங்க பதிவு..பின்னூட்டம் எல்லாம் பார்த்து எனக்கு மல்லேஸ்வரம் கிருஷ்ணாபவன் ஞாபகம் வந்துவிட்டது.நான் ஆரம்பகாலங்களில் 3 வருஷம் அங்கு வேலை செய்தேன்.சேஷாத்ரிபுரத்திலே
ரூம்,கிருஷ்ணா பவன்லே சாப்பாடு.ரொம்ப அருமையான சாப்பாடு.அந்த ஓட்டல் இன்னும் இருக்கு...ஆனால் ரொம்ப கமர்ஷியல் ஆகி விட்டது.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சாப்பாடு அருமை!

//எனக்கு அலுவலகம் அப்போது ஆரிய கவுடா ரோட்டில் இருந்தது. எங்களைப் போன்ற பேச்சிலர்களுக்கு கட்டுபடியாகும் விலையில் தான் மாமா மெஸ் சாப்பாடு இருக்கும்.//

தங்கள் அலுவலகம் இருந்த சாலையின் பெயரை ரசித்தேன்.

சென்னையிலும் தவணை முறையில் தாராளமாக சாப்பாடு போட்ட அந்த மாமாவின் மனசு மல்லிப் பூ இட்லியைப் போன்றது.

அன்புடன்.
ஜோதிபாரதி.

கோவி.கண்ணன் சொன்னது…

\\ஜெகதீசன் said...
:)))
//
ஜெகதீசன் ஐயர்,
உங்களுக்கு மெஸ் அனுபவம் எதுவும் இல்லையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிஷா said...
விட்டா அரக்கோணம் அத்திம்பேர் மெஸ்
திண்டிவனம் ராமையா மெஸ் பத்திலாம் கூட பதிவுகள் போடுவாங்க போல இருக்கே

கலி முத்திடுத்து.. அம்பிகளா

5:57 PM, August 13, 2008
//
அதிஷா,
கலி முத்திடுத்தா ? அப்போ பறிச்சு வித்துட வேண்டியதுதான் ! கோயம்பேடு மார்கெட்டில் ஒரு இடம் பிடிங்க. கடை போட்டுவிடுவோம்

பரிசல்காரன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே, இப்பத்தான் பரிசல்கார் வலைப்பூவுல போயி //

அதென்ன கார்? பரிசல்கார்? புதுசா மார்க்கெட்ல வந்திருக்கா? ஒருவேளை தண்ணியிலயும், தரையிலயும் ஓடுமோ? அதுனாலதான் பரிசல்-காரா?

பரிசல்காரன் சொன்னது…

சீரியஸாவே திருப்பூர்ல இருக்கற கவுண்டர் மெஸ் பத்தி ஒரு பதிவு போடணும்!

(மெஸ் கவுண்டர் எதுவும் கடிதமெழுதமாட்டாருன்னு நம்பி போடப்போறேன்!)

கோவி.கண்ணன் சொன்னது…

//kanchana Radhakrishnan said...
உங்க பதிவு..பின்னூட்டம் எல்லாம் பார்த்து எனக்கு மல்லேஸ்வரம் கிருஷ்ணாபவன் ஞாபகம் வந்துவிட்டது.நான் ஆரம்பகாலங்களில் 3 வருஷம் அங்கு வேலை செய்தேன்.சேஷாத்ரிபுரத்திலே
ரூம்,கிருஷ்ணா பவன்லே சாப்பாடு.ரொம்ப அருமையான சாப்பாடு.அந்த ஓட்டல் இன்னும் இருக்கு...ஆனால் ரொம்ப கமர்ஷியல் ஆகி விட்டது.
//

இராதகிருஷ்ணன் ஐயா,
சேஷாத்ரிபுரமா ? அப்போ கிருணாபவன் மாமா மெஸ் போலத்தான் எழுதுங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//அவனும் அவளும் said...
பெங்களூர் அன்பர்கள் மல்லேஸ்வரம் ஐயர் மெஸ், சக்தி மெஸ், அஜந்தா மெஸ் பத்தி எல்லாம் பதிவு போடலாம்.

6:17 PM, August 13, 2008
//

பதிவை சுடச் சுட நீங்களே போடலாமே.

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
//ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே, இப்பத்தான் பரிசல்கார் வலைப்பூவுல போயி //

அதென்ன கார்? பரிசல்கார்? புதுசா மார்க்கெட்ல வந்திருக்கா? ஒருவேளை தண்ணியிலயும், தரையிலயும் ஓடுமோ? அதுனாலதான் பரிசல்-காரா?

9:04 AM, August 14, 2008//

பரிசல் கார் இல்லை என்றால் பரிசல் காரு ன்னு தெலுங்குவாடாக ஆக்கிடலாம் !

// பரிசல்காரன் said...
சீரியஸாவே திருப்பூர்ல இருக்கற கவுண்டர் மெஸ் பத்தி ஒரு பதிவு போடணும்!

(மெஸ் கவுண்டர் எதுவும் கடிதமெழுதமாட்டாருன்னு நம்பி போடப்போறேன்!)//

பார்த்து ஊருக்குள்ள உள்ளதைப் பற்றி எழுதினால் பின் விளைவு பற்றியும் ஆயத்தமாக இருங்க !
:)

9:08 AM, August 14, 2008
//

Balamanian சொன்னது…

மேற்கு மாம்பலத்தில்
Data உடுப்பி ஹோடெல் அருகே இருப்பது அரங்கநாயகம் பாலம் இல்லை.
அதன் பெயர் துரைசாமி பாலம்.

T.N.Balasubramanian

Karthi V சொன்னது…

உங்கள் பதிவுக்கு நன்றி. நான் பலமுறை அங்கு தேடி பார்த்தேன். கண்டு பிடிக்க முடியல. SRM School அருகே உள்ளதா?

கோவி.கண்ணன் சொன்னது…

//Karthi V said...
உங்கள் பதிவுக்கு நன்றி. நான் பலமுறை அங்கு தேடி பார்த்தேன். கண்டு பிடிக்க முடியல. SRM School அருகே உள்ளதா?

12:53 AM, August 24, 2008
//

Karthi சார்,

SRM தாண்டி சென்றால் ஆரியகவுடா சாலைக்குச் செல்லும் ஒரு குறுக்குசாலைவரும், அதைக் குறுக்காக கடந்து சென்றால் உடனே மாடியில் இருக்கும் அந்த மெஸ், 17 ஆண்டுகளுக்கு (1991) முந்தைய நிகழ்வு..இப்போது அந்த இடமே மாறி இருக்கும் என்று நினைக்கவும் வேண்டி இருக்கிறது

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்