பின்பற்றுபவர்கள்

4 ஆகஸ்ட், 2008

இட்லிவடையில் விடுபட்டவை :)

இட்லி வடைப் பதிவில் கன்னடர்களிடம் ரஜினி வருத்தம் தெரிவித்த தொலைக்காட்சி ஏற்பாடு நிகழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு திரையுலக தரப்பினரின் கருத்துக்கள் இடம் பெற்றிருக்கிறது. பச்சை தமிழர்களின் ரியாக்ஷன் என்று சிலவற்றைக் குறிப்பிட்டுவிட்டு, அதில் மேலும் சிலரின் கருத்துக்களைப் பற்றி ஒரு வரி கூட எழுதாமல் (வேண்டுமென்றே?) விட்டுவிட்டார்.

இயக்குனர் சீமான் : கன்னடர்களுக்கு ஆதரவான நிலையை எடுப்பதால் தமிழ்நாட்டில் அவருக்கு இழப்பு ஏற்படாதுன்னு அவருக்குத் தெரியும் ஏன்னா தமிழன் மான ரோசம் உள்ளவன் கிடையாதுன்னு இங்கவர்றவங்க எல்லோரும் தெரிஞ்சு வச்சிருக்காங்க, ரஜினியைப் பொறுத்தவரைக்கும் தன்மானத்தைவிட வரும் வருமானம் பெரித்துன்னு நினைக்கிறவர். நமக்கு வருமானத்தைவிட இனமானமே பெரிது.

இதில் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது ரஜினியின் தனிப்பட்ட நிலைப்பாட்டை அல்ல, கன்னடர்களின் பிரதிநிதியாகவே இருந்தாலும் தமிழ்நாட்டில் இருக்கும் ரஜினி படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று சொல்கிற கன்னட வெறியர்களைத்தான் கவனிக்க வேண்டும். இந்த இனத்தின் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு வைத்திருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.

பத்திரிக்கையாளர் சோ : எனக்கு இன்னமும் முழுவிபரம் வந்து சேரவில்லை சார். விபரம் கிடைத்த பிறகு அடுத்த வாரம் என் கருத்தைச் சொல்கிறேன்

[கலைஞரின் அந்த நிமிட அரசியல் செயல்பாடுகள், மறறும் கலைஞர் (அறிக்கை) விடுவது எதையும் அடுத்த நிமிடமே இவருக்கு தெரிந்து, நுகர்ந்து மூன்றாம் நிமிடம், இவரது கருத்து என அந்த வார கார்டூனாகவும், கேள்விபதிலாகவும் மாறும் பொழுது. இவருக்கும் இன்னும் ரஜினி பேச்சின் முழுவிபரம் தெரியவில்லையாம். தமிழர்கள் சார்பில் சோ ராமசாமிக்கு உடனடியாக ரஜினி 'மனம் வருந்திய' வீடியோ காட்சிகளை அனுப்பி வைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். கிடைத்தாலும் அடுத்தவாரம் தான் கருத்து சொல்வாராம். ரஜினி ரசிகர்கள் கவனிக்க... இப்போதாவது தெரிகிறதா கலைஞருக்கு முதன்மைத்துவம் கொடுக்கும் அளவுக்கு ரஜினிக்கு சோ ராமசாமி முதன்மைத்துவம் கொடுக்காமல் ரஜினியை புறக்கணிக்கிறார் சோ :)

ரஜினியின் அரசியல் ஆசான் என்றெல்லாம் சொல்லுகிறார்கள், ரஜினியை ஜெவுக்கு சசிகலா போலவே (தவறான ?) ஆலோசனைக் கூறி வழிநடுத்துபவர் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. ரஜினி என்ன பேசினார் என்பது இவருக்குத் தெரியாதாம். :) நம்புங்கள், தன் பதிவில் சோ ராமசாமியின் கருத்தை வெளியிடாததற்குக் காரணம் இட்லி வடைக்கு சோ ராமசாமி பச்சைத் தமிழனாக தெரியவில்லையோ ? :) ]

வேணுகோபால் (ரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர்) : பேனரைக் கிழித்த யாரும் ரஜினி மன்றத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. ரஜினி மன்றத்தைச் சேர்ந்தவர்கள் அவர் எந்த முடிவெடுத்தாலும் (தமிழர்கள் மற்றும் என்னுடைய ரசிக சிகாமணிகள் சுரணையற்றவர்கள் என்று சொன்னாலும் கூட ?) ஆதரிப்பார்கள்.

[ரஜினியின் கட்வுட் காலையும் நக்கும் ஒருசில முற்றிப் போனவர்கள் தவிர்த்து, தவிர்த்து மற்ற ரஜினி ரசிகர்கள், ரஜினியின் பேச்சை அவமானமாகவே கருதுவதாக குறிப்பிட்டு இருந்தனர். எல்லா ரஜினி ரசிகர்களுமே ரஜினி சொல்வதெல்லாம் சரி என்ற கண்மூடித்தனமான பற்று வைக்கவில்லை. ]

கன்னட ரக்ஷ்ன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவின்குமார் ரெட்டி : ரஜினிகாந்த் மட்டுமல்ல, வேறு எந்த நடிகரும் கன்னட மக்களை இழிவாக பேசினால் அவருக்கு கர்நாடகத்தில் அனுமதி இல்லை. (கர்நாடகம் எப்போது தனி நாடானது ?) ரஜினியை இந்த முறை மன்னித்தோம். இன்னொருமுறை அவர் கன்னடமக்கள், அவர்களது உரிமைகள் இவற்றிற்கு எதிராக பேசினால் வெறும் போராட்டம் நடத்தமாட்டோம், கர்நாடகத்தில் அவரது சொத்துக்களை கைப்பற்றுவோம் (மிரட்டல்?)

ரஜினிகாந்து மாத்ரமுமல்லறி, பேறு எந்தா நடிகரோ கன்னட ஜெனங்களுக்கெ வீரோதவாக மாத்தாடுதரே, அவருக்கே இ கன்னட தேசதல்லி அனுமதி கொடுவக்காகல்ல. இ தர ரஜினியை பிட்பிடுத்தோம். மத்தொந்துதர இ தர மாத்தாடுதரே, கன்னட ஜனங்க்களு மத்து அவரென்ன சொந்த பிரச்சனைக்களுக்கெ எதிரே மாத்தாடுதரே, கேவலம் கலட்டா மாத்ரம் நடியக்காகில்லே. கர்நாடகதல்லி
அவரன்ன ஆஸ்திகளு ஒட்டுக்கெ எத்தோகுவோம்.


(தமிழ்லிருந்து கன்னட மொழிபெயர்ப்பு சரியா ?)

[ரஜினி பயந்து போய் ஏன் வருத்தம் தெரிவித்தார் என்பது இப்பொழுதுதான் புரிகிறது]

ரஜினி வட்டாரம் : 6 கோடி வசூல் பெற்று தரும் கர்நாடகாவிற்காக 6 கோடி தமிழர்களை ரஜினி விட்டுக் கொடுக்க முன்வருவாரா ? அவர் எடுத்துள்ளது வணிக ரீதியிலான நிலைப்பாடு. மற்றபடி 'உப்பிட்ட தமிழ் மண்ணை என்றும் மறக்கமாட்டார்.

[இவிங்க என்ன சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. தன்மானம் அடகுவைக்கப்பட்டது வருமானத்தின் காரணமாகத்தான் வேறு இல்லை, அதற்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை என்று நாசுக்காக சொல்கிறார்களோ ? அடுத்த முறை ரஜினிக்கு பாட்டெழுதும் வைரமுத்து போன்றோர், ரஜினிக்கு இருப்பது கன்னட கொழுப்பு அல்ல என்பதைக் காட்ட உப்போடு பருப்பும், நெய்யும் கூட தமிழர்கள் தான் இட்டார்கள் என சேர்த்து பாட்டெழுத வேண்டும்]நன்றி நக்கீரன்

25 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

இங்கும் மீ த பர்ஸ்ட் மட்டும் போட்டுக் கொள்கிறேன்...

ரஜினி மீது எந்தத் தப்பும் இல்லை...

புருனோ Bruno சொன்னது…

//இன்னொருமுறை அவர் கன்னடமக்கள், அவர்களது உரிமைகள் இவற்றிற்கு எதிராக பேசினால் வெறும் போராட்டம் நடத்தமாட்டோம், கர்நாடகத்தில் அவரது சொத்துக்களை கைப்பற்றுவோம் (மிரட்டல்?)//

அப்படியா ??

ஜோ/Joe சொன்னது…

ஆனால் நிஜத்தில் சீமான் ரஜினிக்கு ஆதரவாக பேசியதாக கேள்வி.

கோவி.கண்ணன் சொன்னது…

//புருனோ Bruno said...
//இன்னொருமுறை அவர் கன்னடமக்கள், அவர்களது உரிமைகள் இவற்றிற்கு எதிராக பேசினால் வெறும் போராட்டம் நடத்தமாட்டோம், கர்நாடகத்தில் அவரது சொத்துக்களை கைப்பற்றுவோம் (மிரட்டல்?)//

அப்படியா ??

10:47 AM, August 04, 2008


ஜோ / Joe said...
ஆனால் நிஜத்தில் சீமான் ரஜினிக்கு ஆதரவாக பேசியதாக கேள்வி.
//

புருனோ மற்றும் ஜோ,

இந்த ஞாயிற்றுக்கிழமை நக்கீரனில் வெளியான தகவல்கள் இவை. என்னுடைய கருத்தை சாய்வெழுத்துகளில் மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன்.

யாத்ரீகன் சொன்னது…

http://thatstamil.oneindia.in/movies/specials/2008/08/03-ameer-seeman-praises-rajini-for-his-stand.html

விஜய் ஆனந்த் சொன்னது…

என்னமோங்க...ஆளாளுக்கு தப்புதான்றாங்க...ரைட்டுதான்றாங்க....நெம்ப கன்ஃப்யூஸ் ஆய்ட்டேன்...

ஆனா,
// தன்மானம் அடகுவைக்கப்பட்டது வருமானத்தின் காரணமாகத்தான் வேறு இல்லை, அதற்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை என்று நாசுக்காக சொல்கிறார்களோ ? அடுத்த முறை ரஜினிக்கு பாட்டெழுதும் வைரமுத்து போன்றோர், ரஜினிக்கு இருப்பது கன்னட கொழுப்பு அல்ல என்பதைக் காட்ட உப்போடு பருப்பும், நெய்யும் கூட தமிழர்கள் தான் இட்டார்கள் என சேர்த்து பாட்டெழுத வேண்டும் //.....இது மட்டும் நல்லா புரியிதுங்க...கரெக்டா சொன்னீங்க....

கோவி.கண்ணன் சொன்னது…

//யாத்ரீகன் said...
http://thatstamil.oneindia.in/movies/specials/2008/08/03-ameer-seeman-praises-rajini-for-his-stand.html
//

நக்கீரனில் இப்படிப் போட்டு இருக்கிறார்களே. அந்த பக்கத்தை இணைத்துள்ளேன்.

நக்கீரன் ரஜினிக்கு மிகவும் நெருக்கமான செய்தி இதழ். 'ரஜினி ரசிகன்' என்ற ரஜினி புகழ் இதழ் நக்கீரன் குழுமத்தைச் சேர்ந்ததுதான். சிற்சில திமுக ஜால்ராக்களைத் தவிர்த்து நக்கீரன் இதழை 80 விழுக்காடு அரசியல் சார்பற்றே நடத்துகிறார்கள்.

இந்த நிகழ்வைப் பொருத்த அளவில்
இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி எழுதுவதற்கான தேவை எதுவும் அவர்களுக்கு இல்லை என்றே நினைக்கிறேன்.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

சின்ன கோடம்பாக்கம் தந்த சின்ன ரஜினி கிரிக்காக , நான் எனது கருத்தை பதியாமல் வெறும் வருகையை மட்டும் பதிவு செய்து அடக்கி வாசிக்கிறேன்.

ஆனா இட்லி வடையில் விடுபட்டவைங்கிற தலைப்ப பார்த்தவுடனே, நேத்து சந்திப்புக்கு நீங்க கொண்டுவந்த சட்னியைப்பத்தி எழுதியிருப்பீங்கன்னு நினைச்சேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
சின்ன கோடம்பாக்கம் தந்த சின்ன ரஜினி கிரிக்காக , நான் எனது கருத்தை பதியாமல் வெறும் வருகையை மட்டும் பதிவு செய்து அடக்கி வாசிக்கிறேன்.

ஆனா இட்லி வடையில் விடுபட்டவைங்கிற தலைப்ப பார்த்தவுடனே, நேத்து சந்திப்புக்கு நீங்க கொண்டுவந்த சட்னியைப்பத்தி எழுதியிருப்பீங்கன்னு நினைச்சேன்.

1:43 PM, August 04, 2008
//


ஜோசப்.பால்ராஜ்,
கூடாது கூடாது, நட்புக்காக கொள்கைகளையோ, கொள்கைக்காக நட்புகளையோ அடமானம் வைக்கக் கூடாது, இரண்டும் வெவ்வேறு என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அவர்களிடம் மட்டுமே நட்பு கொள்ள வேண்டும். கிரி இதெற்கெல்லாம் அலட்டிக் கொள்ள மாட்டார். :)

நேத்துச் சட்டினியெல்லாம் விடுபட்டவையில் வராது. அது வெளியேறிவையில் வரும் !
:))))))))))

புருனோ Bruno சொன்னது…

//புருனோ மற்றும் ஜோ,

இந்த ஞாயிற்றுக்கிழமை நக்கீரனில் வெளியான தகவல்கள் இவை. என்னுடைய கருத்தை சாய்வெழுத்துகளில் மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன்.//

அப்படியா ?? என்று கேட்டது அந்த கருத்து சரியா என்றல்ல

ரஜினிக்கு கருநாடகத்தில் சொத்து இருப்பது ஊரறிந்த உண்மை

புருனோ Bruno சொன்னது…

அப்படியா ?? என்று கேட்டது அந்த கருத்து சரியா என்றல்ல

ரஜினிக்கு கருநாடகத்தில் சொத்து இருப்பது ஊரறிந்த உண்மை

ஒருவரின் சொத்தை அபகரிப்போம் என்று கூறுபவர்களை கண்டு பயப்படும் நிலையிலா இந்தியாவில் (கருநாடகம் இந்தியாவின் ஒரு மாநிலம்தானே) சட்டம் ஒழுங்கு இருக்கிறது என்று தான் ”அப்படியா ??” என்று ஆச்சரியம் வந்தது.

enRenRum-anbudan.BALA சொன்னது…

Latest post from Idlyvadai:

http://idlyvadai.blogspot.com/2008/08/blog-post_04.html

இதில் சீமான் பேசியது வேற மாதிரி உள்ளதே ?

கோவி.கண்ணன் சொன்னது…

//enRenRum-anbudan.BALA said...
Latest post from Idlyvadai:

http://idlyvadai.blogspot.com/2008/08/blog-post_04.html

இதில் சீமான் பேசியது வேற மாதிரி உள்ளதே ?
//

எ.அ.பாலா,

நானும் இடுகையில் நக்கீரன் 'கட்டிங்' இணைத்திருக்கிறேன். நானாக எழுதவில்லை. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//புருனோ Bruno said...
//புருனோ மற்றும் ஜோ,

இந்த ஞாயிற்றுக்கிழமை நக்கீரனில் வெளியான தகவல்கள் இவை. என்னுடைய கருத்தை சாய்வெழுத்துகளில் மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன்.//

அப்படியா ?? என்று கேட்டது அந்த கருத்து சரியா என்றல்ல

ரஜினிக்கு கருநாடகத்தில் சொத்து இருப்பது ஊரறிந்த உண்மை
//

புரூனோ ஐயா,
நீங்களும் கருத்தைச் சரியில்லை என்று சொல்வதாக நானும் கருதவில்லை. அதை 'மிரட்டல்' என்று குறிப்பிட்டதைப் பற்றி வியப்போடு கேட்டதாக எடுத்துக் கொண்டேன். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//புருனோ Bruno said...
அப்படியா ?? என்று கேட்டது அந்த கருத்து சரியா என்றல்ல

ரஜினிக்கு கருநாடகத்தில் சொத்து இருப்பது ஊரறிந்த உண்மை

ஒருவரின் சொத்தை அபகரிப்போம் என்று கூறுபவர்களை கண்டு பயப்படும் நிலையிலா இந்தியாவில் (கருநாடகம் இந்தியாவின் ஒரு மாநிலம்தானே) சட்டம் ஒழுங்கு இருக்கிறது என்று தான் ”அப்படியா ??” என்று ஆச்சரியம் வந்தது.

4:13 PM, August 04, 2008
//
புருனோ ஐயா,

இந்தியாவிலேயே மாநிலத்திற்கு என தனிக்கொடி கொண்டுள்ள ஒரே மாநிலம் என்ற பெருமை கர்நாடகாவையும், கன்னட மக்களையுமே சேரும். திராவிட நாடு கோஷம் போட்டவர்கள் கூட அப்படி ஒரு கொடியை வைத்திருக்கவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
என்னமோங்க...ஆளாளுக்கு தப்புதான்றாங்க...ரைட்டுதான்றாங்க....நெம்ப கன்ஃப்யூஸ் ஆய்ட்டேன்...
.....இது மட்டும் நல்லா புரியிதுங்க...கரெக்டா சொன்னீங்க....//

பின்னூட்ட கருத்துக்கு நன்றி !

manikandan சொன்னது…

******இதில் சீமான் பேசியது வேற மாதிரி உள்ளதே ?******

இருந்தா என்ன ? சீமான் வேற வேற மாதிரி பேசி இருக்கலாம்..
இல்லாட்டி அவர் பேசாதத எதாவது ஒரு பத்திரிகை பிரசுரிச்சு இருக்கலாம். இல்லாட்டி, இந்த ரெண்டுமே சீமானோட கருத்தா இருக்கலாம்.
எதுவுமே அவர் சொல்லாம கூட இருந்து இருக்கலாம்.

இது எல்லாமா முக்கியம் ? நமக்கு பொழுது போகுதா இல்லையா ?

இத சாக்கா வச்சி நம்ப ஆறு கோடி தமிழர்கள திட்டலாம்.. இல்லாட்டி பாராட்டலாம். சில bloga குறை சொல்லலாம்.
என்னைய மாதிரி ரெண்டு பக்கமும் திரிச்சி வுட்டு பேசி பாக்கலாம்.
எவ்வளவு அருமையான சேவை இது ?

சோ பதில் சொல்லாம இந்த மாதிரி கேவலமா இருக்க வேண்டாம். ஒரு பத்திரிகையாளர் சமூக உணர்வோட செயல்படனும். அத தவிர, ரஜினி சம்பந்தபட்ட அத்தனை விஷயத்துக்கும் முந்தி முந்தி பதில் சொல்லிக்கிட்டு இருந்தார். ரஜினிக்கு கொள்கை பரப்பு செயலாளரா இருந்தார். ரஜினியோட பழைய பேச்சு கூட அவர் எழுதி கொடுத்ததுன்னு ஒரு வதந்தி உண்டு. அந்த அளவுக்கு நெருக்கமானவர். அப்படிப்பட்ட சோவின் கேவலமான இந்த மௌனத்தை கோவி கண்ணன் கண்டித்ததை நான் வரவேற்கிறேன்.

தானே கேள்வி தானே பதில் சொல்லும் கலைஞர், ஓய்வெடுக்கும் அம்மையார் மற்றும் சல்மான் ருஷ்டி அவர்களின் கருத்தை போடாமல் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்த கோவிகன்ணனை கண்டிக்கறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அவனும் அவளும் said... தானே கேள்வி தானே பதில் சொல்லும் கலைஞர், ஓய்வெடுக்கும் அம்மையார் மற்றும் சல்மான் ருஷ்டி அவர்களின் கருத்தை போடாமல் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்த கோவிகன்ணனை கண்டிக்கறேன்.//

செய்திகளில் வந்தவற்றில் இட்லிவடையில் விடுபட்டவற்றைத்தான் போட்டேன். கலைஞர் கருத்து சொல்லவில்லையே.
:)

அப்பறம் 'சோ' வை நான் கண்டிக்கவில்லை. அது ஏன் என்று கேள்வி மட்டுமே எழுப்பினேன்.

manikandan சொன்னது…

******இந்தியாவிலேயே மாநிலத்திற்கு என தனிக்கொடி கொண்டுள்ள ஒரே மாநிலம் என்ற பெருமை கர்நாடகாவையும், கன்னட மக்களையுமே சேரும்.*******

சில வடகிழக்கு மாநிலத்துக்கு கூட உண்டுன்னு கேள்விப்பட்டு இருக்கேன்.

manikandan சொன்னது…

******அப்பறம் 'சோ' வை நான் கண்டிக்கவில்லை. அது ஏன் என்று கேள்வி மட்டுமே எழுப்பினேன்.*******

சரி மன்னிச்சிக்கோங்க. கேள்வி எழுப்பிய கோவி கண்ணனை பாராட்டுகிறேன்.

manikandan சொன்னது…

******கலைஞர் கருத்து சொல்லவில்லையே*****

சோவிடம் கேட்டது போல் கலைஞர், அம்மையார் மற்றும் சல்மான் ருஷ்டியுடம் கருத்து கேட்காத நக்கீரனை கண்டிக்கிறேன்.

Athisha சொன்னது…

என்ன இங்க சண்ட என்ன இங்க சண்ட

இங்கனயும் ரசினி தாத்தாவதான் அசிங்க படுத்துதீகளா

சோ தாத்தாவும் கருணாநிதி தாத்தாவும் இத பத்தி இன்னுமா ஒண்ணும் சொல்லல ,

ரசினி கோந்து வாலுக

Kanchana Radhakrishnan சொன்னது…

என் பதிவில் கஜினி கதை படிக்கவும்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//அடுத்த முறை ரஜினிக்கு பாட்டெழுதும் வைரமுத்து போன்றோர், ரஜினிக்கு இருப்பது கன்னட கொழுப்பு அல்ல என்பதைக் காட்ட உப்போடு பருப்பும், நெய்யும் கூட தமிழர்கள் தான் இட்டார்கள் என சேர்த்து பாட்டெழுத வேண்டும்//

நியாயமான ஆதங்கம் திரு கோவி.கண்ணன்.

தடை செய்யப்பட்ட பப்புள் காமை மெல்லுவதால் நமக்கு வாய் வலிப்பது தான் மிச்சம். (தேவை இல்லாத (சம்மந்தம் இல்லாத)விமர்சனத்துக்கு பதில் சொல்லி**** உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்.)

அன்புடன்,
ஜோதிபாரதி.

manikandan சொன்னது…

*******தடை செய்யப்பட்ட பப்புள் காமை மெல்லுவதால் நமக்கு வாய் வலிப்பது தான் மிச்சம். (தேவை இல்லாத (சம்மந்தம் இல்லாத)விமர்சனத்துக்கு பதில் சொல்லி**** உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்.)********

வழிமொழிகிறேன். ( உங்கள் நேரம் பொன்னானதாக இருக்கும் பட்சத்தில் )

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்