இஸ்லாம் மதத்தில் நான் முதன்மையாக கருதுவது அவர்கள் இறை நம்பிக்கையில் காட்டும் ஈடுபாடே. இறை உணர்வில் நீக்கு போக்கு (காம்ப்ரமைஸ்) என்பது அவர்களின் மதத்தில் கிடையாது, ஒரு வகையில் அது அவர்களின் இறைநம்பிக்கையி்ன் ஆழத்தைக் காட்டுகிறது. அதை உறுதியான பிடிமானமாக வைத்திருப்பதால் ஒன்றும் கெடுதல் இல்லை. ஆனால் ஒரு சிலர் இறைபற்று என்பதை விடுத்து அந்த உறுதியினால் பிற மத நம்பிக்கையை பழிக்கவே செய்கின்றனர். அவ்வாறு மாற்று மதத்தினரை தூற்றுபவர்கள் எண்ணிக்கை விழுக்காட்டு அளவில் குறைவே அதைப் பற்றி பேச பலர் இருக்கின்றனர். நான் இங்கு எழுத நினைப்பது வேறு.
நாள் தோறும் 5 வேளைத் தொழுகையும், சமயப்படாமும் ஒரு இஸ்லாமியரின் வாழ்நாள் கடமையாக இருக்கிறது, இதைச் செய்யாதவர்கள் மிகக் குறைவே. பிற மதங்களில் இந்த செயல் உறுதி மிகக் குறைவே. வாழ்கையில் ஒரு அம்சமாகவே இறை நம்பிக்கையையும், அதன் தொடர்பிலான சடங்குகளையும் வைத்திருப்பவர்கள் இஸ்லாமியர்கள். இந்த கட்டுறுதி (டெடிகேசன்) மற்ற மதங்களில் குறைவே. பிறமதங்களில் இருப்போர்க்கு, தேவைக்கான வேண்டுதலுக்காகவும், சமயபண்டிகையின் போதுமே இறையின் நினைவு வருகிறது. அதில் ஒருசிலர் மட்டுமே விதிவிலக்கு.
இஸ்லாமியர்கள் அளவுக்கு இறைப்பற்றும், நம்பிக்கையும் உடைய பிறமதத்தினர்களைப் பார்த்ததே இல்லை. ரமலான் மாதத்தில் அவர்கள் இருக்கும் உண்ணா நோம்பு மிகவும் சிறப்பானது, சிறுகுழந்தைகள், தாய்மார்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்கள் தவிர்த்து கிட்டதட்ட அனைவருமே நோம்பை மேற்கொள்கிறார்கள். எனது இஸ்லாமிய நண்பர்கள் பலரும் உண்ணா நோண்பு இருப்பதைப் பார்த்து இரு்க்கிறேன். அதைக் கடனுக்குச் செய்யாமல் வாழ்வியல் கடமையாகவே செய்கிறார்கள்.
இறைவன் மீது நம்பிக்கை உடைய மாற்று மதத்தினர், இஸ்லாமியர்களின் நம்பிக்கையைத் தூற்றும் முன் இந்த படத்தைப் பார்த்துவிட்டு, தங்களிடம் தாங்களே கேட்டுக் கொள்ளவேண்டும் என முக்கிய கேள்வியாக நான் கருதுவது,
புனித மெக்காவில் கூடும் மக்கள் வெள்ளத் திரள், இறைவனின் விருப்பம் ஏதுமின்றிய சாத்தியமா ?
'இறைவன் ஒருவனே' என்பதில் இஸ்லாமியர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்துகிறது. இறைவனுக்கு இணையாக எவரும் இல்லை என்பதை ஆணித்தரமாகவே பின்பற்றுவார்கள். என்னைப் பொருத்து மிகச் சரிதான். ஒப்பற்றவன் இறைவன் என்றே எல்லா மதத்தினரும் நம்பும் போது அதற்கு ஒப்புக் கற்பித்து மனிதனை இறைவனாக்குவதும் தவறானது தானே. மனிதர்கள் இறைவனின் சித்தங்களை நிறைவேற்றினானும், மனிதன் இறைவன் இல்லை. மனிதன் இறைவன் ஆகமுடியாது. மனிதன் இறைத்தூதன் தான்... எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லும் இஸ்லாமிய கோட்பாட்டை மிகவும் மதிக்கிறேன். அவற்றை செய்யாததாலேயே பிற மதங்களில் போலி சாமியார்கள் பெருத்துவிட்டனர். இஸ்லாம் மீது சில விமர்சனங்கள் எனக்கும் இருக்கிறது, அவை பொதுவாக எல்லோரும் வைக்கும் விமர்சனங்கள் தான் என்பதால் நானும் அதைப்பற்றி எழுத விரும்புவதில்லை.
நாளை (திங்கள் சிங்கையிலும், இந்தியாவில் செவ்வாய்) முதல் உண்ணா நோம்பு தொடங்கும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இறைவனின் ஆசிர்வாதம் கிட்டட்டும்.
இந்த பதிவின் மூலம் இஸ்லாமிய பதிவர்கள், நண்பர்களுக்கு ரமலான் மாத நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் !
57 கருத்துகள்:
இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் நோன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கோவி.க அண்ணாவின் உன்னத பதிவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் நோன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கோவி.க அண்ணாவின் உன்னத பதிவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!
மிக அருமையான பதிவு கோவியாரே.
இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
அருமையான பதிவு கோவி.
நம்மால் முடிந்தவரை அவர்கள் நோன்புக்கு இடையூறின்றி ஆதரவு அளிக்க வேண்டும்.
இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.
நண்பர்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள்.
கோவி, இப்படியொரு பதிவு, விநாயக சதுர்திக்கும் எதிர்பார்க்கிறேன். நன்றி.
தன் மதம் மட்டுமே நிஜம் என்ற வெறி மண்டையில் ஏறி குண்டு வைக்கும் முஸ்லீம்கள் மட்டும் அழிந்து போக போக எல்லாம் வல்ல அல்லாவை வேண்டுகிறேன்,
அப்பாவி இந்து
இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் என் உள்ளார்ந்த நோன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் பதிவு மனத்தைத் தொட்டது!
நன்றி ஜி!
கோவியார் நன்றி!
இறைவன் ஒருவனே என்பதையும் அவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன், இதில் நீக்குபோக்கு(Compromise) கூடாது என்பதையும், ஈசா(இயேசு)வுக்கு பிறகு வந்த முஹம்மதுநபி (ஸல்) அவனுடைய இறுதித் தூதர் என்பதையும் முஸ்லிம்கள் உறுதியாக நம்புகின்றனர்.
மேலும், மரணத்திற்குப் பிறகு ஒரு நிலையான மறுமை வாழ்வு உண்டென்பதும், எந்த ஒரு ஆத்மாவும் அநீதம் செய்யப்படமாட்டாது என்பதும்
அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அணுவளவு தீமை செய்திருந்தாலும் அதற்குரிய பலனை அவரவர் அடைவர் என்பதும் இஸ்லாமிய நம்பிக்கையே.
கோவியாரே,
கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது ஒரு வேதப்புத்தகம். இறைவனுக்கு அஞ்சுபவர்கள் (மறு உலக வாழ்வின் பொருட்டோ அல்லது அல்லாவின் தண்டனைக்கு அஞ்சியோ) அதன் வழி நடக்கின்றனர்.
அந்த புத்தகத்தின் மேல் கேள்வி எழுப்புதலோ, கருத்து தெரிவிப்பதோ அந்த சமயத்தவருக்கே மறுக்கப்பட்டிருக்கிறது. பகுத்தறிவின் பின்புலத்தினின்று இதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சக பயணி என்ற வகையில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி.
ஜோசப் பால்ராஜ், விஜய் ஆனந்த், ஜோ, வடகரை வேலன் அண்ணாச்சி மற்றும் பரிசல்காரன் ஆகியோருக்கு நன்றி !
//SurveySan said...
நண்பர்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள்.//
SurveySan,
நன்றி !
//கோவி, இப்படியொரு பதிவு, விநாயக சதுர்திக்கும் எதிர்பார்க்கிறேன். நன்றி.
2:13 AM, September 01, 2008
//
2006ல் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துப் பதிவு போட்டு இருக்கிறேன். பார்த்துச் சொல்லுங்கள் மீள் பதிவு செய்துவிடலாமா ?
//நிழலின் குரல் said...
தன் மதம் மட்டுமே நிஜம் என்ற வெறி மண்டையில் ஏறி குண்டு வைக்கும் முஸ்லீம்கள் மட்டும் அழிந்து போக போக எல்லாம் வல்ல அல்லாவை வேண்டுகிறேன்,
அப்பாவி இந்து
2:41 AM, September 01, 2008
//
இஸ்லாமியர்கள் மீது ஏன் இப்படி ஒரு கொலைவெறி ? மதத்தின் பெயரால் அப்பாவிகளைக் கொல்பவர்களில் இந்து மதத்தினர் இல்லையா ?
வாருங்கள் வேண்டிக் கொள்வோம், இந்துப் பெயரில் தீவிரவாதம் செய்யும் கோத்ரா நாயகர்களுடன், இஸ்லாம் பெயரில் தீவிரவாதம் செய்யும் தீவிரவாதிகளும் சேர்ந்தே அழிந்துப் போகட்டம் என்று.
தற்பொழுது ஒரிசாவில் சிறுபான்மையினர் வாழ்கை மீண்டும் கேள்விக் குறியாகி இருப்பது தெரிந்தே இப்படியெல்லாம் எழுதும் நீங்கள் அப்பாவி இந்துவாகத்தான் இருக்க முடியும்.
:(
//பாபு said...
கோவியார் நன்றி!
இறைவன் ஒருவனே என்பதையும் அவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன், இதில் நீக்குபோக்கு(Compromise) கூடாது என்பதையும், ஈசா(இயேசு)வுக்கு பிறகு வந்த முஹம்மதுநபி (ஸல்) அவனுடைய இறுதித் தூதர் என்பதையும் முஸ்லிம்கள் உறுதியாக நம்புகின்றனர்.
மேலும், மரணத்திற்குப் பிறகு ஒரு நிலையான மறுமை வாழ்வு உண்டென்பதும், எந்த ஒரு ஆத்மாவும் அநீதம் செய்யப்படமாட்டாது என்பதும்
அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அணுவளவு தீமை செய்திருந்தாலும் அதற்குரிய பலனை அவரவர் அடைவர் என்பதும் இஸ்லாமிய நம்பிக்கையே.
//
சகோதரர் பாபு,
பின்னூட்டத் தகவலுக்கு நன்றி. தங்களுக்கும் ரமலான் மாத வாழ்த்துகள்.
//KARMA said...
கோவியாரே,
கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது ஒரு வேதப்புத்தகம். இறைவனுக்கு அஞ்சுபவர்கள் (மறு உலக வாழ்வின் பொருட்டோ அல்லது அல்லாவின் தண்டனைக்கு அஞ்சியோ) அதன் வழி நடக்கின்றனர்.
//
KARMA,
அவர்களுடைய நம்பிக்கைப் படி அவர்கள் நடக்கிறார்கள். நீங்கள் கட்டுப்பாடு என்பதை அவர்கள் ஒழுக்க வரையரையாகப் பார்க்கின்றனர்
//அந்த புத்தகத்தின் மேல் கேள்வி எழுப்புதலோ, கருத்து தெரிவிப்பதோ அந்த சமயத்தவருக்கே மறுக்கப்பட்டிருக்கிறது. பகுத்தறிவின் பின்புலத்தினின்று இதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சக பயணி என்ற வகையில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி.
4:28 AM, September 01, 2008
//
அந்த புத்தகத்தின் மேல் கேள்வி எழுப்புதலோ, கருத்து தெரிவிப்பதோ அந்த சமயத்தவருக்கே மறுக்கப்பட்டிருக்கிறது - இதனால் ஒரு நன்மை உண்டு, புனித நூல்களில் திருத்தமோ, திரித்தலோ செய்ய முடியாது.
இந்து மததில் ஒரு கடவுளின் தோற்றத்திற்கு காரணமாக ஆயிரம் கதைகள் திரிக்கப்பட்டு சொல்லப்பட்டு இருக்கிறது. அதில் ஒன்று பிள்ளையார் அழுக்கில் இருந்து தோன்றியதாக அருவருக்கத்தக்க கதைகள். பிள்ளையார் வடிவத்தின் உண்மையை நான் உயர்வாகவே எழுதி இருக்கிறேன் நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.
இந்துமதத்தில் கடவுள் மதிக்கப்படாமல் திரைப் படத்திலும் அவைகளை பற்றி நகைச்சுவைகள் என்ற பெயரில் கேவலமாக வைத்திருப்பதற்குக் காரணம் இந்துமதத்தில் சொல்லப்பட்ட கதைகளே.
இவ்வாறு இஸ்லாமியர்கள் தங்கள் நம்பிக்கையை தாங்களே தூற்றிக்கொள்வதில்லை என்பதற்குக் காரணம் அவற்றில் வைத்திருக்கும் கட்டுப்பாடுகளே என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா ?
வாழ்த்துக்கு நன்றி கோவியாரே
மீள் பதிவு பண்றதைவிட, re-mix பண்றது பெட்டர்.
///அதை மெய்பிக்கும் விதமாக சுனாமி சீரழிவுகள் அதே கடற்கரையில் நட்ந்தேறுகிறது.////
இது கொஞ்சம் அபத்தம். தசாவதார விஷ்ணு சிலை மாதிரி பெரிய கற்சிலைன்னா, பட்டர்ஃப்ளை எஃபெக்டுன்னு நம்பலாம். பேப்பர் விநாயகர் பாவங்க. நல்லவரு.
அட்வான்ஸ்ட் கணேஷ் சதுர்த்தி விஷ்ஷஸ்! :)
"ஒன்றே குலம் ஒருவனே தேவன் !"
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுக்கு ஆட்சிக் கட்டிலைக் கொடுத்தது.
அந்த அறிவார்ந்த பெரியோனின் உயிரைக் காலத்துடன், காலம் பறித்துக்கொண்டது.
அந்த வாசகமும் மரித்துப் போனது.
அதைக் கோவியார் பயன்படுத்தியது நன்று.
நண்பர்கள் அனைவருக்கும் விழாக்கால வாழ்த்து(க்)கள்.
எதுவுமே..... நம்புனாதான் கடவுள். அவரவர் நம்பிக்கை நிலைக்கணும்.
எனக்கு சர்வ மதமும் சம்மதம்.
கோவிக் கண்ணன்!
//ஒப்பற்றவன் இறைவன் என்றே எல்லா மதத்தினரும் நம்பும் போது அதற்கு ஒப்புக் கற்பித்து மனிதனை இறைவனாக்குவதும் தவறானது தானே. மனிதர்கள் இறைவனின் சித்தங்களை நிறைவேற்றினானும், மனிதன் இறைவன் இல்லை. மனிதன் இறைவன் ஆகமுடியாது.//
இஸ்லாமிய நம்பிக்கைகளை அழகிய முறையில் விளக்கியிருக்கிறீர்கள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாடுதான் நம் முன்னோர்களின் (தமிழர்களின்) வழியாக இருந்தது. பிறகு வந்த கலாச்சார படையெடுப்பால் பல தெய்வ வணக்கத்திற்க்கு மாற்றப் பட்டோம்.
இன்றுதான் சவுதியிலும் ரமலான் ஆரம்பம் ஆகிறது. வேலை நேரங்கள் முற்றிலுமாக மாறுபடும். இரவு 8 அல்லது 9க்கு வேலை தொடங்கி நடு நிசி 2 அல்லது 3 க்கு வேலை முடியும். 4 மணிக்கு நோன்பு வைப்பதற்காக சாப்பாடு. பிறகு தொழுகை. அதன் பிறகு ஒரு நீண்ட தூக்கம். நோன்பின் களைப்பே தெரியாத அளவுக்கு சவுதி ஆட்சியாளர்கள் வேலை நேரத்தை மாற்றி அமைத்திருப்பது பாராட்டத்தக்கது.
நண்பர்கள் அனைவருக்கும் ரமளான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ஜி.கே. பதிவு அருமை.
இந்த ரமளான் எல்லோரும் அதிகமதிகம் நன்மைகளை பெற காரணமாகட்டும்.
வாழ்த்துக்கு நன்றி கோவி கண்ணன்
வாழ்த்துக்கு நன்றி கோவி கண்ணன்
மற்ற மதத்தை பின்பற்றும் சகோதரர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஒரு 'S' தான் வித்தியாசம்.
Everything is God for other beleivers
Everything is God's for Muslims
உங்கள் நல்ல மனதிற்கு நன்றிகள்
"இவ்வாறு இஸ்லாமியர்கள் தங்கள் நம்பிக்கையை தாங்களே தூற்றிக்கொள்வதில்லை என்பதற்குக் காரணம் அவற்றில் வைத்திருக்கும் கட்டுப்பாடுகளே என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா ? "
இதை நான் ஒப்புக்கொள்ளும் வேளையில் நீங்கள் இன்னொன்றையும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்.
ஒரு சர்வாதிகார ஆட்சியின் கீழ் எவரும் அரசை எதிர்த்து பேச அஞ்சுவர், அதனால் அந்த ஆட்சியில் எந்த குறையுமில்லை என்று கூற முடியுமா?, ஜனநாயக நாட்டில் எவர் வேண்டுமானாலும் அரசை பழித்துக்கூறலாம், ஆட்சி சிறப்பாக இருந்தலும் கூட.
I disapprove of what you say, but I will defend to the death your right to say it. - voltar
மனித நாகரிக வளர்ச்சியின் உன்னத நிலையாக மேற்கண்ட வரிகளை காண்கிறேன். இதை அனுமதிக்காத சமயம் நாகரிக வளர்சிக்கு உதவுவது கேள்விக்குறியான போது, ஆன்மிக வளர்சிக்கு எப்படி உதவும் என்ற விளக்கமே நான் தங்களிடம் எதிர்பார்ப்பது.
நன்றி.
//இக்பால் said...
வாழ்த்துக்கு நன்றி கோவியாரே
8:18 AM, September 01, 2008
//
இக்பால்,
வருகைக்கு நன்றி
//சுவனப்பிரியன் said...
கோவிக் கண்ணன்!
//ஒப்பற்றவன் இறைவன் என்றே எல்லா மதத்தினரும் நம்பும் போது அதற்கு ஒப்புக் கற்பித்து மனிதனை இறைவனாக்குவதும் தவறானது தானே. மனிதர்கள் இறைவனின் சித்தங்களை நிறைவேற்றினானும், மனிதன் இறைவன் இல்லை. மனிதன் இறைவன் ஆகமுடியாது.//
இஸ்லாமிய நம்பிக்கைகளை அழகிய முறையில் விளக்கியிருக்கிறீர்கள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாடுதான் நம் முன்னோர்களின் (தமிழர்களின்) வழியாக இருந்தது. பிறகு வந்த கலாச்சார படையெடுப்பால் பல தெய்வ வணக்கத்திற்க்கு மாற்றப் பட்டோம்.
//
சுவனப்பிரியன்,
நீங்கள் சொல்வது சரிதான், பாராட்டுக்கும், ரமாலான் தொடர்பான பிற செய்திகளுக்கும் மிக்க நன்றி !
//சுல்தான் said...
தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ஜி.கே. பதிவு அருமை.
இந்த ரமளான் எல்லோரும் அதிகமதிகம் நன்மைகளை பெற காரணமாகட்டும்.
4:58 PM, September 01, 2008
//
சுல்தான் ஐயா,
தங்கள் பாராட்டுக்கு நன்றி, எல்லோரும் நன்மைகள் பெறுவது குறித்த தாங்களின் எண்ணங்கள் சிறப்பானது
//SurveySan said...
மீள் பதிவு பண்றதைவிட, re-mix பண்றது பெட்டர்.
///அதை மெய்பிக்கும் விதமாக சுனாமி சீரழிவுகள் அதே கடற்கரையில் நட்ந்தேறுகிறது.////
இது கொஞ்சம் அபத்தம். தசாவதார விஷ்ணு சிலை மாதிரி பெரிய கற்சிலைன்னா, பட்டர்ஃப்ளை எஃபெக்டுன்னு நம்பலாம். பேப்பர் விநாயகர் பாவங்க. நல்லவரு.
அட்வான்ஸ்ட் கணேஷ் சதுர்த்தி விஷ்ஷஸ்! :)
8:39 AM, September 01, 2008
//
SurveySan,
விநாயக சதுர்த்தி குறித்து தாங்கள் சுட்டிக் காட்டி எழுதச் சொன்ன இடுகை எழுதி இட்டாகிவிட்டது.
//சாதிக் said...
வாழ்த்துக்கு நன்றி கோவி கண்ணன்
12:13 AM, September 02, 2008
//
சாதிக்
வருகைக்கு நன்றி !
// VANJOOR said...
வாழ்த்துக்கு நன்றி கோவி கண்ணன்
11:08 AM, September 02, 2008
//
VANJOOR ஐயா,
வருகைக்கு நன்றி !
//ஜோதிபாரதி said...
"ஒன்றே குலம் ஒருவனே தேவன் !"
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுக்கு ஆட்சிக் கட்டிலைக் கொடுத்தது.
அந்த அறிவார்ந்த பெரியோனின் உயிரைக் காலத்துடன், காலம் பறித்துக்கொண்டது.
அந்த வாசகமும் மரித்துப் போனது.
அதைக் கோவியார் பயன்படுத்தியது நன்று.
8:48 AM, September 01, 2008
//
ஜோதிபாரதி,
என் கொள்கையும் அதுதான்.
"ஒன்றே குலம் ஒருவனே தேவன் !" - இந்த சுலோகம் தவிர்த்து வேறெந்த சுலோகத்தாலும் உலக ஒற்றுமையை வலியுறுத்த முடியாது. மற்றபடி வேற்றுமையில் ஒற்றுமை காணவே அணைவரும் முயல்கின்றனர்.
//துளசி கோபால் said...
நண்பர்கள் அனைவருக்கும் விழாக்கால வாழ்த்து(க்)கள்.
எதுவுமே..... நம்புனாதான் கடவுள். அவரவர் நம்பிக்கை நிலைக்கணும்.
எனக்கு சர்வ மதமும் சம்மதம்.
//
துளசி அம்மா,
வருகைக்கு நன்றி !
//nagoreismail said...
மற்ற மதத்தை பின்பற்றும் சகோதரர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஒரு 'S' தான் வித்தியாசம்.
Everything is God for other beleivers
Everything is God's for Muslims
உங்கள் நல்ல மனதிற்கு நன்றிகள்
5:48 PM, September 02, 2008
//
nagoreismail,
Everything is God for other beleivers
Everything is God's for Muslims
நீங்கள் சொல்வது மிகச் சரிதான். பாம்பு, பல்லி, பூராண், திருடன், குடிகாரன் இவர்களையும் கடவுள் என்பதால் தான் கடவுள் என்பதற்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது !
வருகைக்கும், பாராட்டுச் சொற்களுக்கும் மிக்க நன்றி !
//KARMA said...
"இவ்வாறு இஸ்லாமியர்கள் தங்கள் நம்பிக்கையை தாங்களே தூற்றிக்கொள்வதில்லை என்பதற்குக் காரணம் அவற்றில் வைத்திருக்கும் கட்டுப்பாடுகளே என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா ? "//
KARMA,
நீங்கள் கட்டுபாடு என்பதை அவர்கள் ஒழுக்க வரையறை என்கிறார்கள், பின்பற்றுபவர்களுக்கு இல்லாத கஷ்டம் பற்றி நாம் ஏன் யோசிக்க வேண்டும் ?
//இதை நான் ஒப்புக்கொள்ளும் வேளையில் நீங்கள் இன்னொன்றையும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்.
ஒரு சர்வாதிகார ஆட்சியின் கீழ் எவரும் அரசை எதிர்த்து பேச அஞ்சுவர், அதனால் அந்த ஆட்சியில் எந்த குறையுமில்லை என்று கூற முடியுமா?, ஜனநாயக நாட்டில் எவர் வேண்டுமானாலும் அரசை பழித்துக்கூறலாம், ஆட்சி சிறப்பாக இருந்தலும் கூட.//
இது ஒரு தவறான உதாரணம், அவர்கள் எங்கே கடவுளையும் சர்வாதிகாரியையும் ஒப்பிடுகிறார்கள் ?
ஒரே இறைவனை நம்புவதும், திடீரென ஆட்சியைக் கைப்பற்றும் சர்வ அதிகாரியும் ஒன்றா ?
நீங்கள் இங்கே மனிதனையும் கடவுளையும் ஒப்பிடுகிறீர்கள், அவர்கள் செய்வதில்லை. இதுதான் அவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள வேறுபாடு.
சர்வ வல்லமை, சர்வ அதிகாரம் என்பதன் பொருள் அனைத்தையும் கட்டுபடுத்தக் கூடியவர் என்பதே, ஆனால் அரசை கைப்பற்றும் ஆட்சியாளர்களுக்கு நாம் சொல்லும் 'சர்வ அதிகாரத்தின்' பொருள் அடாவடி. அவர்கள் இறைவனுக்குச் சொல்லும் சர்வ அதிகாரத்தின் பொருள் வேறு, நீங்கள் சொல்லும் சர்வ அதிகாரத்தின் பொருள் வேறு. சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு முடிவு உறுதி. அதையே இறைவனுக்கும் உங்களால் சொல்ல முடியுமா ?
//I disapprove of what you say, but I will defend to the death your right to say it. - voltar
மனித நாகரிக வளர்ச்சியின் உன்னத நிலையாக மேற்கண்ட வரிகளை காண்கிறேன்.//
நல்ல வரிகள் தான்.
//இதை அனுமதிக்காத சமயம் நாகரிக வளர்சிக்கு உதவுவது கேள்விக்குறியான போது, ஆன்மிக வளர்சிக்கு எப்படி உதவும் என்ற விளக்கமே நான் தங்களிடம் எதிர்பார்ப்பது.
நன்றி.//
இந்துமதத்தில் மத நூல்களில் வழி சொல்லப்படுபவை 'ஆன்மிகம்' என்று பேசுகிறோம். அவர்கள் ஆன்மிகம் என்று பேசாமல் அவர்களின் மத நூல்படி அவை 'வாழ்வியல் நெறியாக' கருதுகிறார்கள். அதனால் அவர்களுக்கு மாற்றிக் கொள்ளத் தேவை இருக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
"ஒன்றே குலம் ஒருவனே தேவன் !"
கழகம் கண்ட அண்ணாவின் வழியில் பீடு நடை போடும் அண்ணன் உண்மை திராவிடன் கோவி.கண்ணன் வாழ்க
கோவியாரே,
நான் சர்வாதிகாரியையும் கடவுளையும் ஒப்பிடவில்லை. தாங்களின் புரிதலில் தவறுள்ளதாகத்தெரிகிறது, otherwise, மன்னிக்கவும்.
ஒரு system உங்களை ஏற்கவும், விலக்கவும், கருத்து தெரிவிக்கவும் ஏன், நகைக்கவும் கூட அனுமதிக்கிறது (Hinduism, comparing with Democracy).
இன்னொரு system உங்களை கொடுக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களுக்குள் வாழச்சொல்கிறது விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டலும் சரி. (Islam, comparing with dictatorship).
you may find fault with the way people abuse the system of democracy, but the system by itself is wonderful.
On the otherhand, even if the dictator loves his subjects like god, I find fault with that system, where subjects are not allowed to open their mouth.
This is what I tried to say by the following.
"I disapprove of what you say, but I will defend to the death your right to say it. - voltair"
ஆங்கிலத்தில் எழுதியதற்கு மன்னிக்கவும். மேலும் தாங்கள் நான் ஹிந்து, என்பதாக assume செய்து கொண்டதையும் இங்கு குறிப்பிடவிரும்புகிறேன்.
மீண்டும் எனது கேள்வியை வைக்கிறேன். வேதப்புத்தகம் இறைவனால் கொடுக்கப்பட்டது என்றாலும், அதன் மீது கருத்து சொல்ல அனுமதியில்லை என்பது பகுத்தறிவின் பார்வையில் நியாயமானதா?
பிற மதங்களின் குறைகளை சுட்டாமல், இதற்கு நேரடியான விளக்கம் மட்டுமே நான் வேண்டுவது.
நன்றி.
" ஒன்றே குலம். ஒருவனே தேவன்"
என்பது உலக மக்கள் அனைவருக்கும் இணக்கம்தான். ஆனால் அந்த ஒன்று எது என்பதில்தான் குழப்பம்.
எல்லாரும் அவுங்கவுங்க நம்பிக்கைதான் ' அந்த ' ஒன்று என்று நம்பறாங்களே!!!!
// KARMA said...
கோவியாரே,
நான் சர்வாதிகாரியையும் கடவுளையும் ஒப்பிடவில்லை. தாங்களின் புரிதலில் தவறுள்ளதாகத்தெரிகிறது, otherwise, மன்னிக்கவும்.
ஒரு system உங்களை ஏற்கவும், விலக்கவும், கருத்து தெரிவிக்கவும் ஏன், நகைக்கவும் கூட அனுமதிக்கிறது (Hinduism, comparing with Democracy).//
இன்னொரு system உங்களை கொடுக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களுக்குள் வாழச்சொல்கிறது விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டலும் சரி. (Islam, comparing with dictatorship).
you may find fault with the way people abuse the system of democracy, but the system by itself is wonderful.
On the otherhand, even if the dictator loves his subjects like god, I find fault with that system, where subjects are not allowed to open their mouth.
This is what I tried to say by the following.
"I disapprove of what you say, but I will defend to the death your right to say it. - voltair"
ஆங்கிலத்தில் எழுதியதற்கு மன்னிக்கவும். மேலும் தாங்கள் நான் ஹிந்து, என்பதாக assume செய்து கொண்டதையும் இங்கு குறிப்பிடவிரும்புகிறேன்.
மீண்டும் எனது கேள்வியை வைக்கிறேன். வேதப்புத்தகம் இறைவனால் கொடுக்கப்பட்டது என்றாலும், அதன் மீது கருத்து சொல்ல அனுமதியில்லை என்பது பகுத்தறிவின் பார்வையில் நியாயமானதா?
பிற மதங்களின் குறைகளை சுட்டாமல், இதற்கு நேரடியான விளக்கம் மட்டுமே நான் வேண்டுவது.
நன்றி.//
கர்மா,
இந்து மதம் என்பது இந்திய சமயங்களின் கலவை. இதில் சைவர்களும், உண்டு அசைவர்களும் உண்டு, சைவம் உயர்வு என்று சொல்லும் சைவர்களைப் பார்த்து அசைவர்கள், சிவபெருமானே பிள்ளைக்கறிக் கேட்கவில்லையா என்று எதிர்கேள்வி கேட்பார்கள். இந்து மதத்தில் அடிப்படைக் கொள்கைகள் என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றையும் உள்ளடக்கி இருப்பதாக மதப்பற்றாளர்கள் பெருமை பேசுகிறார்கள். இந்து மதத்தில் கேள்வி எழுப்ப அனுமதி இருக்கிறது என்பதை நான் மறுக்கிறேன்.... எனெனில் இந்து மதத்தில் கொள்கை என்று இருந்தால் தானே கேள்வி அனுமதி எல்லாமே, இஸ்லாம், பெளத்தம், கிறித்தவம் எல்லாமே வரையறை செய்யப்பட்டவை அதில் அம்மதத்தைப் பின்பற்றோவர்கான கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் எதையும் அவர்கள் மாற்றி அமைக்க முடியாது. நீக்கு போக்கு பற்றி பேசும் நீங்கள் முடிந்தால் ஒரு வைணவரிடம் சென்று விஷ்ணுவைவிட சிவன் மேலானவர் என்று சொல்லிப் பாருங்கள், ஒப்புக் கொள்கிறாரா என்று பாருங்கள்.
இந்துமதம் நீக்கு போக்கானது என்று நீங்கள் சொல்வது அது இந்திய சமயங்கள் அனைத்தும் அதனுள் விழுங்கி இருப்பதால் வேறு வழியின்றியே கேள்விகளை, விமர்சனங்களை அனுமதிக்கிறது. அப்படியும் மதவெறியர்களின் தூண்டுதலால் கிராம தெய்வங்களுக்கு ஆடு கோழி பலி இடுதலை தடைசெய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதா இல்லையா ? இன்றைய இந்து மதத்தில் நீக்கு போக்கு இருப்பதாகச் சொல்கிறீர்கள், அதற்கு முன்பு யார் வேதம் படிப்பது, யார் கோவிலில் பூசை செய்யும் உரிமை பெற்றவர், யார் காலில் செருப்பு அணியக்கூடாது என்றெல்லாம் இருந்ததா இல்லையா ? நீக்கு போக்கு எல்லாம் அண்மையில் ஏற்பட்ட்வையே......பெரியாருக்கு
முன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை
அனுமதிப்பதில்லை என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல. அவர்கள் மதத்தில் குறை இருந்தால் பின்பற்றுபவர்கள் தானே கவலைப்பட வேண்டும், வீணான கவலை நமக்கு எதற்கு ?
இந்து மதத்தில் நீங்கள் சொல்லும் Flexblity என்பதற்கு பொருள் தேடித்தான் பார்க்க வேண்டும். இந்து என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டது என்பதைத் தவிர்த்து அதனால் உள்வாங்கப்பட்ட சமயங்களைப் பின்பற்றுபவர்கள் தன்னுடைய சமயமே உயர்ந்தது என்று சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதிலும் தென்கலை உயர்வு, வடகலை தாழ்வு ( மாற்றியோ ?) என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள், இது தான் இந்துமதம் அனுமதிக்கும் நீக்கு போக்கா ?
//துளசி கோபால் said...
" ஒன்றே குலம். ஒருவனே தேவன்"
என்பது உலக மக்கள் அனைவருக்கும் இணக்கம்தான். ஆனால் அந்த ஒன்று எது என்பதில்தான் குழப்பம்.
எல்லாரும் அவுங்கவுங்க நம்பிக்கைதான் ' அந்த ' ஒன்று என்று நம்பறாங்களே!!!!
4:32 AM, September 03, 2008
//
துளசி கோபால்,
தேடுங்க...அந்த ஒன்று என்றாவது உங்களுக்கும் கிடைக்கலாம். :)
//உடன்பிறப்பு said...
"ஒன்றே குலம் ஒருவனே தேவன் !"
கழகம் கண்ட அண்ணாவின் வழியில் பீடு நடை போடும் அண்ணன் உண்மை திராவிடன் கோவி.கண்ணன் வாழ்க
1:05 AM, September 03, 2008
//
உடன்பிறப்பு,
வாழ்த்துக்கு மிக்க நன்றி !
//அவர்கள் மதத்தில் குறை இருந்தால் பின்பற்றுபவர்கள் தானே கவலைப்பட வேண்டும், வீணான கவலை நமக்கு எதற்கு ? //
தாங்களுடைய இந்த பதிப்பு அவர்களுடைய மதத்தில் உள்ள நிறைகளை சொல்வதாய் இருக்கிறது. நிறைகளை எடுத்துச்சொல்ல தாங்கள் உரிமை எடுத்துக்கொள்வதைப்போல் குறைகள் இருப்பின், சொல்வதற்கோ, ஒத்துக்கொள்வதற்கோ என்ன தயக்கம்?
காலகாலமாய் இந்து சமயத்தில் இவ்வாறு குறைகள் கண்டு களைந்திருப்பின் தாங்கள் கூறும் இந்த மாசுகள் இந்து சமயத்தில் இருந்திருக்காது. வைஷ்ணவர்களும், சைவர், இன்னும் பலர் பெருமை பாடித்திருந்தனரேயன்றி பெரியார் அவர்களுக்கு இருந்த பொறுப்புணர்வு வேறு எவர்க்கும் இல்லை.
இந்து சமயத்தில் குறைகள் இருந்தால், அதை பின்பற்றுபவர்கள்தான் கவலைப்படவேண்டும், நமக்கு என்ன என்று நாம் இருக்கமுடியாது அல்லவா?
நிறைகள் எங்கு இருப்பினும் பாராட்டுபவதும், குறைகள் இருப்பின் பொறுப்புணர்வோடு சுட்டிக்காட்டுவதும் நமது கடமையாக நினைக்கிறேன்.
நன்றி.
//KARMA said...
நிறைகள் எங்கு இருப்பினும் பாராட்டுபவதும், குறைகள் இருப்பின் பொறுப்புணர்வோடு சுட்டிக்காட்டுவதும் நமது கடமையாக நினைக்கிறேன்.
நன்றி.
//
திரு கர்மா,
இது விவாதப் பதிவு அல்ல, நோண்பு இருக்கும் இஸ்லாமிய பதிவர் / நண்பர்களை வாழ்த்துவதற்காகப் போடப்பட்டது, வாழ்த்துப்பதிவில் குறைகளைச் சொல்லி வாழ்த்த வேண்டும் என்று தாங்கள் சொல்வது வியப்பளிக்கிறது.
விநாயகர் பற்றிய பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் என்னுடைய 'ஏழைப் பிள்ளையார்' பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துப்பதிவில் அவற்றையெல்லாம் நான் சொல்லவில்லை.
ஒரு பதிவின் நோக்கம் சொல்ல வந்ததைச் சொல்வது தானே. நோக்கத்தை விட்டுச் செல்லவேண்டுமென்றால் அது விவாதப் பதிவாக இருக்க வேண்டும்.
இஸ்லாம் பற்றிய விவாதங்களைப் பலர் செய்துவருகிறார்கள், அதற்கு இஸ்லாமிய நண்பர்கள் பதில் அளித்துவருகிறார்கள். நான் அதுபற்றி எழுதுவதில்லை. இந்து மதத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டுகிறேன் ஏனென்றால் அது நானே விரும்பாத என் மீது இருக்கும் அடையாளம், சுட்டிக் காட்டும் உரிமை இருக்கிறது.
தந்தை பெரியார் கூட மதம் மாறாமல் இந்து மதத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டினார்.
//இது விவாதப் பதிவு அல்ல, நோண்பு இருக்கும் இஸ்லாமிய பதிவர் / நண்பர்களை வாழ்த்துவதற்காகப் போடப்பட்டது, வாழ்த்துப்பதிவில் குறைகளைச் சொல்லி வாழ்த்த வேண்டும் என்று தாங்கள் சொல்வது வியப்பளிக்கிறது.//
வாழ்த்து பதிவை தவறாகப்புரிந்து கொண்டுவிட்டேன். வாழ்த்துகையில் குறைகள் சொல்வது முறையன்று.
//இந்து மதத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டுகிறேன் ஏனென்றால் அது நானே விரும்பாத என் மீது இருக்கும் அடையாளம், சுட்டிக் காட்டும் உரிமை இருக்கிறது. //
மிக்க நன்று. இந்து மதத்தை சுட்டிக்காட்டும் அதே வேளையில்,
இஸ்லாம் மீதாக உள்ள விமர்சனங்களையும், குறைகளையும் நடுநிலமை தவறாது முன்வைப்பீர்களா? வாழ்த்து பதிவில் அல்லாமல் ம்ற்றொரு பதிவில்.
தாங்கள் தயாரில்லை என்றால், அதை செய்யக்கூடிய உரிமையும், பொறுப்பும், தைரியமும் யாருக்கு இருக்கவேண்டுமென நினைக்கிறீர்கள்?
அல்லது தாங்களுக்குத் தெரிந்தவரை இஸ்லாம் மதத்தில் எந்த குறையுமில்லை என நினைக்கிறீர்களா?
இந்த பதிவை விவாதமாக்கும் நோக்கம் எனக்கு இல்லை. அதே நேரத்தில், எனக்கு நேர்மையாக எழுந்த வினாக்களுக்கு விடை தேட முயற்ச்சிக்கிறேன்.
//கர்மா said...
மிக்க நன்று. இந்து மதத்தை சுட்டிக்காட்டும் அதே வேளையில்,
இஸ்லாம் மீதாக உள்ள விமர்சனங்களையும், குறைகளையும் நடுநிலமை தவறாது முன்வைப்பீர்களா? வாழ்த்து பதிவில் அல்லாமல் ம்ற்றொரு பதிவில்.
தாங்கள் தயாரில்லை என்றால், அதை செய்யக்கூடிய உரிமையும், பொறுப்பும், தைரியமும் யாருக்கு இருக்கவேண்டுமென நினைக்கிறீர்கள்?
அல்லது தாங்களுக்குத் தெரிந்தவரை இஸ்லாம் மதத்தில் எந்த குறையுமில்லை என நினைக்கிறீர்களா?
இந்த பதிவை விவாதமாக்கும் நோக்கம் எனக்கு இல்லை. அதே நேரத்தில், எனக்கு நேர்மையாக எழுந்த வினாக்களுக்கு விடை தேட முயற்ச்சிக்கிறேன்.//
விவாதமாக எல்லா மதத்தையுமே விமர்சித்து வருகிறேன். இந்துத்துவாதிகள் மற்ற மதங்களை கடுமையாக விமர்சனம் செய்வது போல் என்னால் விமர்சிக்க முடியாது,
நேரம் இருந்தால் இந்த பதிவைப் படித்துப் பாருங்கள் !
மிக்க நன்றி கோவி...
தாங்களுக்கு இறைவனின் சாந்தியிம் சமாதனமும் உண்டாவதாக.
எல்லாப் புகழும் அல்லாவிற்கே...
@ அன்பு கர்மாவிற்கு,
இஸ்லாம், மதத்தை தன்தோன்றிதனமாக அல்லது பிற்போக்கு தனமாகவே அல்லது இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்த காரனத்தினாலே பின்பற்ற சொல்ல வில்லை. இதை நன்றாக ஆராந்து பாருங்கள் என்று அறைக்கூவல் விடுக்கிறது.
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. (2:256)
தயவு செய்து படித்து பாருங்கள். http://www.tamililquran.com
திரும்பவும் நன்றிகள் கோவி...
ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குரான் 2:62)
நன்றி மஸ்தான் அவர்களே.
உங்களுக்கு ஒரு கேள்வி. திருகுரான் என்ற ஒரு புத்தகத்தையோ அல்லாஹ் என்பதையோ கேட்டறிய வாய்ப்பில்லாத, ஆப்பிரிக்க காட்டில் வசிக்கும் ஒரு காட்டுவாசிக்கு, வாழ்நாள் முடிந்தபின் சொர்க்கமா? நரகமா? ஏன் என்றும் விளக்கவும்.
கோவியாரே,
மஸ்தான் அவர்களுக்கு தனியாக ப்ளாக் இல்லாத காரணத்தால், இந்த கேள்வியை இங்கே தொடர அனுமதிக்க வேண்டுகிறேன்.
நன்றி.
கோவியாரே,
நான் மேலே கேட்டிருக்கும் கேள்வி பல காலம் நான் பதில் தேடிய ஓன்று. தாங்களும் பதில் தெரிந்தால் சொல்லலாம். இல்லயேல், தாங்களுக்கு தெரிந்த இஸ்லாம் நண்பரை பதில் அளிக்க சொன்னாலும் மிக்க பலனுள்ளதாக இருக்கும்.
நன்றி.
/
உங்களுக்கு ஒரு கேள்வி. திருகுரான் என்ற ஒரு புத்தகத்தையோ அல்லாஹ் என்பதையோ கேட்டறிய வாய்ப்பில்லாத, ஆப்பிரிக்க காட்டில் வசிக்கும் ஒரு காட்டுவாசிக்கு, வாழ்நாள் முடிந்தபின் சொர்க்கமா? நரகமா? ஏன் என்றும் விளக்கவும்.
/
@கர்மாவிற்கு,
நன்றிகள்.
தயவு செய்து, அல்குரான் கூறியதை பாருங்கள்.
ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அல்குரான் 2:62)
அதாவது, அல்லாஹ் என்றால் அரபியில் கடவுள் என்று பொருள், இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே அனைவரும் அல்லாஹ் மிகவும் தெரிந்த வார்த்தைதான். என்ன ஒன்று அல்லாஹ்களை வணங்கி கொண்டுஇருந்தனர் (அதாவது பல கடவுள் கொள்கைகளை கொண்டுஇருந்தனர்); இஸ்லாம் தோன்றுவதறியதுக்கு பிறகுதான் ஓரிறை கொள்கை வந்தது. அதாவது முஹம்மது(ஸ்ல்) நபி அவர்கள் ஓரிறை கொள்கைகளை விளக்கினார்கள். யூதர்களாளுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அனுப்ப பட்ட நபியை அந்த சமுதாயத்தினர் கடவுளாக்கி கொன்டனர்.
இஸ்லாமிய நம்பிக்கையின் படி, நல்லவங்களை இறைவன் கைவிடுவது இல்லை. ஆப்பிரிக்க காட்டில் வசிக்கும் ஒரு காட்டுவாசிய இருக்கட்டும், சிங்கப்பூரில் வசிக்கும் கோவி ஆகட்டும். கடவுள் ஒருவனே என்று நம்பும் அனைத்து நல்வுள்ளங்களுக்கவே சொர்க்கம் உருவாக்கபட்டுள்ளது.
"/கடவுள் ஒருவனே என்று நம்பும் அனைத்து நல்வுள்ளங்களுக்கவே சொர்க்கம் உருவாக்கபட்டுள்ளது./"
தயவு செய்து கேள்வியை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.
நான் கூறும் காட்டுவாசிக்கு இஸ்லாம் பற்றி எதுவும் தெரியாது. கடவுள் பற்றி எதுவும் தெரியாது. ஒரு இறை கொள்கை, பல இறை கொள்கை என புரிந்துகொள்ள எந்த வாய்ப்பும் இல்லை. திருக்குரான் பற்றியோ, ஒரு கடவுள் பற்றியோ அந்த காட்டுவாசி சமூகத்திற்கு சொல்வதற்கு யாருமில்லை.
இவ்வாறாக வாழ்கையை கழித்தபின் அவர்க்கு சொர்க்கமா? நரகமா? ஏன்?
நன்றி.
கர்மா,
வாழ்த்துப்பதிவில் தொடர்பற்ற விவாதத்துக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை. தொடர்ந்து அதையே கேட்கிறீர்கள். அவர்களின் நம்பிக்கைப்படி தீர்ப்பு நாளில் எல்லோரிடமும் 'ஈமான்' என்னும் இறை கொள்கை நம்பிகைக் குறித்து கேட்கப்படுமாம். நம்புபவர்கள் சொர்கம் செல்வார்களாம்.
கர்மா,
நீங்கள் கேட்பது போலவே நான் அதே கேள்வியை இன்னும் ஆழமாகவே கேட்டு இருக்கிறேன். மகாத்மா காந்திக்கு நரகமா ? சொர்கமா ? பிறந்தவுடன் இறக்கும் குழந்தைக்கு சொர்க்கமா ? நரகமா ? இன்னும் பல
அதற்கு கிறித்துவர்களும், இஸ்லாமியர்களும் தீர்ப்பு நாளில் எல்லோருக்கும் விடை இருக்கும் என்றே சொல்கிறார்கள்.
திரும்பவும் சொல்கிறேன், அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு அதை தோண்டுவதால் நமக்கு என்ன கஷ்டம் ?
கர்மா ? என்று பெயர் வைத்திருகிறீர்களே ?
கர்மா அற்ற நிலையில் ஆன்மாவுக்கு பிறப்பு உண்டா ? ஒரு ஆன்மா முதன் முதலில் பிறப்பெடுக்கும் (முதல் பிறவிக்கு) முன் அதன் எந்த கர்ம வினை அதன் பிறப்புக்கு காரணமானது ?
//வாழ்த்துப்பதிவில் தொடர்பற்ற விவாதத்துக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை.//
வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். முன்னமே சொன்னது போல், வேறு இடம் தெரியதால் இங்கே இதை தொடரும்படி நேர்ந்துவிட்டது.
//திரும்பவும் சொல்கிறேன், அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு அதை தோண்டுவதால் நமக்கு என்ன கஷ்டம் ?//
இந்த புனித ரமலான் மாதத்தில், இஸ்லாத்தை புரிந்துகொள்வதற்காக கேட்கப்படும் கேள்விக்கு பதில் அளிப்பதில் ஒரு நிறைவு இருக்கும் என்றே நம்புகிறேன். மேலும் புதையல் இருக்கும் பட்சத்தில் தோண்டுவதில் சிரமமோ, தவறோ அல்லவே.
//மகாத்மா காந்திக்கு நரகமா ? சொர்கமா ? பிறந்தவுடன் இறக்கும் குழந்தைக்கு சொர்க்கமா ? நரகமா ? //
இந்து மத ஆன்மீகவாதிகளிடம் இதுபோல் கேட்டதற்கு, மறுபிறப்பை காரணம் காட்டி Escape ஆகி விட்டனர்.
//தீர்ப்பு நாளில் எல்லோரிடமும் 'ஈமான்' என்னும் இறை கொள்கை நம்பிகைக் குறித்து கேட்கப்படுமாம். நம்புபவர்கள் சொர்கம் செல்வார்களாம்.//
தீர்ப்பு நாளன்று ஒன்று இருந்து, கடவுள் நம் முன் தோன்றி இங்கனம் கேட்டால் நாம் எல்லோரும் என்ன சொல்வோம்?
//கர்மா அற்ற நிலையில் ஆன்மாவுக்கு பிறப்பு உண்டா ? //
என் புரிதலுக்குத் தெரிந்தவரை, ஆன்மா விரும்பும் பட்சத்தில், கர்மா இல்லாத நிலையிலும் பிறப்பு சாத்யமே. கடவுளின் அவதாரங்கள் அனைத்தும் இங்கனம் ஏற்பட்டதாய் நினைக்கிறேன். இத்தகைய பிறப்பு விருப்பபட்டு எடுப்பது.
நமது பிறப்பு, மீதமுள்ள கர்மாவின் விளைவு (Not our choice).
If someone knows better, please corrct me.
//ஒரு ஆன்மா முதன் முதலில் பிறப்பெடுக்கும் (முதல் பிறவிக்கு) முன் அதன் எந்த கர்ம வினை அதன் பிறப்புக்கு காரணமானது ? //
சொன்னால் நம்பமாட்டீர்கள். சரியாக 8 நாட்களுக்குமுன் நான் சந்தித்த இந்து சமய ஆன்மீக பெரியவரிடம் நான் இதே கேள்வியை கேட்டிருந்தேன்.
அவர் சொன்ன பதில் இது. முதல் என்றோ, முடிவென்றோ எதுவும் இல்லை. இது ஒரு cyclic event. அதேபோல் பிறப்பு/ இறப்பு என்றும் எதுவும் இல்லை. அனைத்தும் நிகழ்வது நம் கற்பனையில், அதிலிருந்து விழித்தெழும்போது இது முடிவுக்கு வருகிறது.
கவலைப்படாதீர்கள். எனக்கும் ஒன்றும் புரியவில்லை.
இஸ்லாமியர்களுக்கு புனித ரமலான் வாழ்த்துகள்.
//சொன்னால் நம்பமாட்டீர்கள். சரியாக 8 நாட்களுக்குமுன் நான் சந்தித்த இந்து சமய ஆன்மீக பெரியவரிடம் நான் இதே கேள்வியை கேட்டிருந்தேன்.
அவர் சொன்ன பதில் இது. முதல் என்றோ, முடிவென்றோ எதுவும் இல்லை. இது ஒரு cyclic event. அதேபோல் பிறப்பு/ இறப்பு என்றும் எதுவும் இல்லை. அனைத்தும் நிகழ்வது நம் கற்பனையில், அதிலிருந்து விழித்தெழும்போது இது முடிவுக்கு வருகிறது.
கவலைப்படாதீர்கள். எனக்கும் ஒன்றும் புரியவில்லை.
//
பெரியவர் சொன்ன பதில் மொக்கையாக இருந்தாலும் பேரண்டத்தின் பெரு-வெடிப்புக் கொள்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.
இஸ்லாமைப் பற்றி புனித மாதத்தில் கேள்வி எழுப்ப வேண்டாமே என்று வேண்டுகோள் விடுக்கிறீர்கள். OK. ஆனால் இந்து மதம் பற்றி கேள்வி எழுப்புகிறீர்களே. அவர்களுக்கு இந்த மாதம் புனிதமில்லையா?
//இஸ்லாமைப் பற்றி புனித மாதத்தில் கேள்வி எழுப்ப வேண்டாமே என்று வேண்டுகோள் விடுக்கிறீர்கள். OK. ஆனால் இந்து மதம் பற்றி கேள்வி எழுப்புகிறீர்களே. அவர்களுக்கு இந்த மாதம் புனிதமில்லையா?//
கண்டிப்பாக இரு மதத்தவருக்கும் இது புனிதமான மாதம்தான். யாரும் மனம் புண்படாத படி பார்த்துக்கொள்ள வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. அதே சமயத்தில் தயவுசெய்து keep this thread in its scope.
தெளிவுபெற வேண்டி கேட்கப்படும் கேள்விகளும், பயனுள்ள பதில்களும் வரவேற்கப்படும், கோவியாருக்கு இதில் மாற்று கருத்து இருக்காது என்று எண்ணுகிறேன்.
நன்றி.
/
KARMA said...
இந்த புனித ரமலான் மாதத்தில், இஸ்லாத்தை புரிந்துகொள்வதற்காக கேட்கப்படும் கேள்விக்கு பதில் அளிப்பதில் ஒரு நிறைவு இருக்கும் என்றே நம்புகிறேன். மேலும் புதையல் இருக்கும் பட்சத்தில் தோண்டுவதில் சிரமமோ, தவறோ அல்லவே.
/
சபாஷ்... தாங்களின் கேள்விகளை வரவேற்கிறேன், கர்மாவை மனம்திறந்து பாரட்டுகிறேன். இதே போல் கேள்விகள் தான் இஸ்லாத்தை பற்றி தெளிவாக்குகின்றன.
நல்லது செய்பவர்களுக்கே செர்க்கம், காட்டுவாசியாக இருந்தலும் கூட.
காட்டுவாசியாக இருந்தாலும் படைத்தவனை பற்றி அறியாமல் இருப்பார், அவர் செய்கின்ற நல்ல செயல்கள் அவரை செர்க்கதிற்கு அழைத்து செல்லும். காட்டுவாசியாக இருந்தாலும், கிரமவாசியா/நகரவாசிய இருந்தாலும் மனிதன் மனிதன்தான், நல்லது கெட்டது எங்கும் உள்ளது. நல்லவர்களுக்காவே உருவாக்க பட்டதுதான் செர்க்கம். இதை பற்றி இஸ்லாமிய அறிஞர்களிடம் கேட்டு மேலும் தாங்களுக்கு கூறுகிறேன்.
பிகு. கோவி தயவு செய்து இப்பதிவில் இஸ்லாமிய கேள்விகளை அனுமதியும். கேள்விகள் கேட்க கேட்கதான் தவறுகள் தெளிவுபிறக்கும்.
நட்புடன்
--மஸ்தான்
பிறந்தவுடன் இறக்கும் குழந்தைக்கு கண்டிப்பாக சொர்க்ம்தான். ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன்தான் தவறுகள்/நல்லதுகள் செய்ய ஆரம்பிக்கின்றனர், பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகள் சொர்க்ம்தான் செல்லும். தவறுகள் செய்வத்ற்கு வாய்ப்பே இல்லை.
மஸ்தான் அவர்களே,
தாங்கள் பதிலுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
எனது ப்ளாக்கில் இதே கேள்வியை பதிவிடுகிறேன். உங்கள் பதில்களை அங்கே தொடருங்கள். இஸ்லாமிய அறிஞரிடம் கேட்டு கண்டிப்பாக விளக்கம் சொல்லவும்.
நன்றி.
கருத்துரையிடுக