பின்பற்றுபவர்கள்

8 ஆகஸ்ட், 2008

சாகுற மாதிரி க்ளைமாக்ஸ் வைத்தால்... கஜினி பின்னூட்டத்திற்கான பதில் !

//ghajini has left a new comment on your post "ரஜினி - ஒரு இருதலைக் கொள்ளி எறும்பு !":

கோவி.கண்ணன் உங்கள் பல பதிவுகளை ரசித்திருக்கிறேன். ஆனால் இது ஏமாற்றம் தருகிறது
சார் தமிழ்நாட்டில் பல பேர் உங்களை போல் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கண்டுபிடிக்க தெரியாத துர்பாக்கியசாலிகள் சார்.
. நடிகனை நடிகனாய் பார்க்கும் நீங்களே தாங்கமுடியாமல் அவரது சினிமா சம்பந்தமில்லாத தனிப்பட்ட சறுக்கலை வலிந்து வக்காலாத்து வாங்குகிறீர்கள்.
அப்படியானால் அந்த பாமர ரசிகன்??
சக பிற நடிகர்களின் ரசிகர்களால் கேலி செய்யப்படும் அவன்????
எல்லாமே அவன் தவறா??
மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இந்த அளவுக்கு இல்லையே! இப்படி எதிர்பார்ப்புகள் மற்றும் வேதனைகள் அனுபத்ததில்லையே.
இப்போதும் அவன் தான் தவறா?? ஏன்?? யாரால்???
பதில் சொல்லும் முன் - உங்களை போல் நாங்கள் புத்திசாலிகள் இல்லை. எளிதில் உணர்ச்சிவசப்பட்டே(அன்பு காட்டுவது ,கட் அவுட்டுக்கு பால் ஊற்றூவது முதல் அவமானத்தால் தண்ணீயடித்து உளறுவது வரை) எதையும் செய்பவர்கள் என்பதை மனதில் வைத்து சொல்லவும். //

திரு கஜினி,

என்னுடைய எழுத்துக்களை தொடர்ந்து ரசித்துப்படிப்பதாக சொல்வதற்கு மிக்க மகிழ்ச்சி.
ரஜினி பேசுவதற்கு பொருள் கண்டுபிடிப்பவர் நீங்களோ, நானோ அல்ல. அவரை கடவுளுக்கும் மேலாக நினைத்து கட் அவுட் காலையும் நக்கும் தீவிர ரசிகர்களும், ரஜினி தங்கள் பிழைப்பில் மண் போடுவதாக நினைக்கும் அவரைப் பிடிக்காதவர்களும் தான். அந்த இடுகையில் நான் எடுத்துக் கொண்டது ரஜினிக் கன்னடனாக இருப்பதால் 'கன்னடரிடம் மன்னிப்புக் கேட்கிறார் இதில் நாம கவலைப்பட என்ன இருக்கிறது?' என்கிற ஒரு ரஜினி ரசிகனின் ஜூனியர் விகடன் குமுறல் பற்றியது தான்.


'குசேலன்' படத் தயாரிப்பாளர்கள் நஷ்டப்பட்டுவிடுவார் கள் என்று கன்னட மக்களிடம் கருணைக் கோரிக்கை வைத்தீர்களே... 'தலைவர் படம் பிய்ச்சுக்கிட்டுப் போகும்' என்று நம்பி, பல லட்சங்களை முதலீடாப் போட்டு ரசிகர் மன்ற ஷோ எடுத்து நடத்திய அத்தனை மாவட்ட ரசிகர்களும் கையைச் சுட்டுக்கொண்டு தவிப்பது உங்களுக்குத் தெரியுமா? பட ரிலீஸன்று கொடி பிடிக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும்தான் நாங்கள் உங்களுக்குத் தேவை. மற்றபடி, நாங்கள் கையைச் சுட்டுக்கொண்டால் என்ன... தலையை வெட்டிக்கொண்டால் என்ன?

நீங்கள் கர்நாடக மக்களிடம் வருத்தம் தெரிவித்ததற்கு நாங்கள் ஏன் அவமானப்படுகிறோம் என்றால், இப்போதும் உங்களைப் பச்சைத் தமிழனாக நினைப்பதால்தான். இல்லை என்றால் 'ஒரு கன்னடத்து ஆள் கன்னடத்து மக்கள்கிட்ட மன்னிப்புக் கேட்டதில் என்ன ஆச்சர்யம்' என்று நினைத்துக்கொண்டு எங்கள் வேலைகளில் மூழ்கியிருப்போமே...! அப்ப... நீங்க தமிழகம்தான் எனக்கு எல்லாமே என்று சொல்றதெல்லாம் 'குசேலன்' படத்துல வர்ற மாதிரி கெஸ்ட் ரோல்தானா?

- இப்படிக்கு
நேற்று வரை உங்கள் ரசிகனாக
இருந்த தமிழன்.

(ஜூனியர் விகடன் http://www.vikatan.com/jv/2008/aug/10082008/jv0501.asp)

அதாவது இதுவரை தெய்வத்துக்கும் மேலாக புகழ்ந்தவர்கள், ரஜினி தமிழ் மூச்சு, தமிழ் பால் என்றதையெல்லாம் பெருமை பொங்க அடுத்த நடிகர்களின் ரசிகர்களிடம் கூறிக் கொண்டு இருந்தவர்கள் ரஜினியின் இந்த வெளிப்படையான பேச்சில் அதிர்ச்சி அடைந்தனர். மற்ற நடிகர்களின் ரசிகர்களால் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி இதுநாளும் ரஜினி தமிழர்களின் நகையும் சதையும் என்றுக் கூறிய தாங்கள் அவமானம் அடைந்தாக நினைத்து 'எழவு வீடு' போல புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள். இவ்வளவு உணர்ச்சிவசப்படுவது தேவையற்றது, எந்த ஒரு மனிதனுக்கும் தாய்மொழிப் பற்றும், அதைப் பேசுபவர்களிடம் அவர்களின் தொடர்பில்லாது தனித்து வசிக்கும் போதும், இனப்பற்று இருக்கவே செய்யும். அதைக் குறிப்பிடத்தான் அந்த இடுகையை எழுதினேன். மற்றபடி ரஜினி வருத்தம் தெரிவித்தது சரி / தவறு என்றெல்லாம் சொல்லவில்லை. அது அவரது முடிவு. அதுல நம்மைப் போன்றோர் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. ரஜினி பிடித்தவர்களுக்கும், பிடிக்காதவர்களும் செய்யும் வேலை அது. தமிழ்தவிர்த்து பிற தாய்மொழியைப் பேசும் தமிழர்கள் தங்கள் தாய்மொழியை வெறுத்தால் தான் அவனை தமிழன் என்று சொல்ல முடியும் என்றெல்லாம் நினைப்பது அபத்தம் தானே.

திரை நட்சத்திரங்களின் ரசிகர் ஆவது தவறு அல்ல, உலகமுழுவதும் உள்ள நடைமுறைத்தான். சிலருக்கு சிலரைப் பிடிக்கும் வெகு சிலரே திரைப்படம் பொழுது போக்கு சாதனம் என்றே நினைப்பார்கள். நான் வக்காலத்து வாங்கவில்லை நடைமுறையில் இருப்பதைத் தான் சொன்னேன். திரைப்படம் பொழுது போக்கு சாதனம் என்பதில் எல்லோருக்கும் தெளிவு கிடையாது. சமூக சீர்கேட்டில் முன்பெல்லாம் ஆன்மிகமும், அரசியலும் தான் கலந்து இருக்கும், இப்போது இவற்றுடன் திரையுலகமும் சேர்ந்து கொண்டுள்ளது.

எல்லோருமே தீவிர ரசிகர்கள் அல்ல, ஒரு சில வேலையத்த வீனர்கள் தங்கள் இன்னாருக்கு ரசிகர் என்று சொல்லிக் கொண்டு திரிந்தால் அது தனக்கான பெருமை என்பதாகவே நினைத்து நாளடைவில் அடிமையாகவே ஆக்கிக் கொள்கிறார்கள். இது பெருமைக்குரிய ஒன்றே இல்லை. இன்னாருக்கு ரசிகன் என்று சொல்வது பெருமைக்கானதா ? தனக்கென்று சிறிதளவாவது தனிப்பெருமை தேடாமல் அடுத்தவரின் புகழ்நிழலில் காலெமெல்லாம் ஒதுங்கி இருப்பது தான் பெருமையா ? தனது எஜமானர் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் அவரிடம் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று ஆறரிவு இல்லாதா விலங்குகள் மட்டுமே நினைக்கும். மனிதர்களான நாம் இன்னாருக்கு ரசிகராக இருப்பது தப்பே இல்லை. அடுத்த வேளை அடுப்பு எரிவது அவரை நம்பி இல்லை அதனால் அவர் சொல்வதையெல்லாம் தற்காக்க வேண்டிய தேவையில்லை. இது திரையுலக நட்சத்திரங்கள் எவருக்கும் தீவிர ரசிகர்களாக இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

"சாகுற மாதிரி க்ளைமாக்ஸ் வைத்தால், ரசிகர்கள் தாங்கிக் கொள்ளமாட்டார்கள், படம் ஊத்திக்கும்" என்று சொல்வதெல்லாம் எந்த அளவு ஒரு ரசிகன் எந்த ஒரு நடிகனுக்கும் தனக்குத் தெரியாமலேயே அடிமை ஆகி இருக்கிறான் என்று சொல்வதையே காட்டுகிறது. அது போன்று கண்மூடித்தனமாக பற்று வைத்து என்னை அவமானப்படுத்தாதீர்கள் என்று எந்த நடிகரும் சொல்வதும் இல்லை. தமிழன் படம் தோல்வி ஏன் என்று கேட்ட போது எஸ்ஏ சந்திரசேகர் சொன்னாராம், 'படத்தில் கடைசி காட்சியில் விஜய் உயிருக்குப் போராடுவது போன்று இருப்பதால், ரசிகர்கள் இரண்டாவது முறை பார்க்க தயங்கினார்கள் அதனால் படம் தோல்வி..' என்று. இதெல்லாம் கேட்கும் போதே மிகக் கொடுமையாக இருக்கிறதே. தன்(மான) உணர்வையெல்லாம் நடிகர்களின் காலில் வைத்துவிட்டார்களே ! விழியற்றவராக இருந்து வாழ்க்கையில் போராடி வெற்றி பெற துடிக்கிறவர்களைப் பார்க்கிறோம், கால் ஊனமுற்றோர் அதே போல் போராடி வெற்றி பெருவதையெல்லாம் பார்க்கிறோம். எல்லாம் சரியாக இருந்தும் இன்னாரின் செயல்பாடுகளையே தங்கள் வாழ்க்கையாக நினைத்து மன ஊனமாகி தனது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக ஆக்கிக் கொள்பவர்களைப் பற்றி உயர்வாக நினைக்க ஒன்றுமே இல்லை.

'மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இந்த அளவுக்கு இல்லையே! 'ஏன்று நீங்கள் சொல்வதை மறுக்கிறேன். நீங்கள் சொல்வதைப் போல் வைத்துப் பார்த்தால் ஒவ்வொரு நடிகரின் தீவிர ரசிகர்களுக்கும் தனித்தனி குணம் இருப்பதாகச் சொல்கிறீர்கள். எதோ ஒரு காரணம் சொல்லி இவரைப் பிடிக்கிறது என்று ரசிகராகுகிறார்கள், எல்லோரும் ஒரே ரகம் தான். சைவம் சாப்பிடுவன் சாது, அசைவம் சாப்பிடுபவன் கொலைகாரன் என்று சொல்வது போல் இருக்கு. மற்ற ரசிகர்களின் எண்ணிக்கையை விட ரஜினிக்கு மிக மிக அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள், அதனால் அவர்கள் செயல் உங்களுக்கு மிகைப்பட்டதாக தெரிகிறது. அவ்வளவுதான்.

முன்பெல்லாம் எம்ஜிஆர் படத்துக்குக் கூடும் வயதான பெண்கள்...'வந்துட்டான் பாரு கட்டயில போறவன்' நம்பியார் முகம் தெரிந்தவுடனே திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். :)

இனிமேல் ரசிகர்கள் ரஜினியை வாய்ஸ் கொடுக்கச் சொல்லி சிறிது காலம் வற்புறுத்தமாட்டார்கள். :)))

16 கருத்துகள்:

விஜய் ஆனந்த் சொன்னது…

மீ த பஷ்ட்ட்டூ!!!

கோவி.கண்ணன் சொன்னது…

// விஜய் ஆனந்த் said...
மீ த பஷ்ட்ட்டூ!!!
//

மீத செகண்டூ !!!

விஜய் ஆனந்த் சொன்னது…

// தமிழன் படம் தோல்வி ஏன் என்று கேட்ட போது எஸ்ஏ சந்திரசேகர் சொன்னாராம், 'படத்தில் கடைசி காட்சியில் விஜய் உயிருக்குப் போராடுவது போன்று இருப்பதால், ரசிகர்கள் இரண்டாவது முறை பார்க்க தயங்கினார்கள் அதனால் படம் தோல்வி..' என்று. //

டாக்டருதான் அடுத்த ரஜினியாமே????

VIKNESHWARAN சொன்னது…

நான் மூன்றாவது :))

Sambath சொன்னது…

பின்னி பெடலெடுத்துட்டிகங்க போங்க!

அதிஷா சொன்னது…

கட்டதுரைக்கு , ரஜினியோட வெளாட்றதே வேலையா போச்சு

கட்டதுரைக்கு கட்டம் சரி இல்ல

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அண்ணண், ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. இப்போ வருகை பதிவு மட்டும் தான், ஆணி நிறையா இருக்கு, வீட்டுக்கு வந்துட்டு விரிவான பின்னூட்டம் போடுறேன்.

SurveySan சொன்னது…

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...

டாக்டருதான் அடுத்த ரஜினியாமே????
//

ஹிஹி அப்படியெல்லாம் இல்லை,

எம்ஜிஆருக்கும் மேல் ரசிகர்களின் அன்பைப் பெற்றார் ரஜினி, எப்படின்னு கேட்கிறீர்களா ? எம்ஜிஆர் சிகெரெட், தண்ணியெல்லாம் அடிப்பது போன்ற காட்சிகள் அவரது திரைப்படத்தில் இல்லை.

விஜய் ? ரஜினியையும் மிஞ்சுவார் !
:))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
நான் மூன்றாவது :))

11:44 AM, August 08, 2008
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Sambath said...
பின்னி பெடலெடுத்துட்டிகங்க போங்க!

11:52 AM, August 08, 2008
//

அப்படியெல்லாம் சொல்லி எனக்கு யாராவது எடுக்க வச்சிடாதிங்க !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிஷா said...
கட்டதுரைக்கு , ரஜினியோட வெளாட்றதே வேலையா போச்சு

கட்டதுரைக்கு கட்டம் சரி இல்ல

11:56 AM, August 08, 2008
//

யார் அந்த கட்டதுரை ? சத்தியராஜா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
அண்ணண், ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. இப்போ வருகை பதிவு மட்டும் தான், ஆணி நிறையா இருக்கு, வீட்டுக்கு வந்துட்டு விரிவான பின்னூட்டம் போடுறேன்.

12:19 PM, August 08, 2008
//

ஹிஹி திரும்பவும் வாங்க !

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
:)

1:23 PM, August 08, 2008
//

எங்களெயெல்லாம் பார்த்தா....
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
அண்ணண், ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. இப்போ வருகை பதிவு மட்டும் தான், ஆணி நிறையா இருக்கு, வீட்டுக்கு வந்துட்டு விரிவான பின்னூட்டம் போடுறேன்.
//

பால்ராஜ்,
வாக்குக் கொடுத்தால் காப்பற்றனும் !
:)

ghajini சொன்னது…

ஆகா!! என்னுடைய பின்னூட்டத்திற்கு ஒரு பதிவா. ஆச்சரியத்தில் ஒரு நிமிடம் உறைந்து விட்டேன் தலைப்பையே பார்த்தபடி. ஏனென்றால் நான் கடந்த 2 ஆண்டுகளாக பதிவுகள் படித்து வந்தாலும் நான் இடும் முதல் பின்னூட்டம் இதுதான். மிக்க நன்றி.
உங்கள் கருத்துக்கல் ஏதொ என் மண்டைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உறைக்க ஆரம்பித்துள்ளது. நல்ல பதிவு.

மேலும்
மற்ற நடிகர்களின் ரசிகர்களை விட சூப்பர் ஸ்டார் ரசிகர்களில் பல வகைப்பாடுகள் உண்டென்று கருதுகிறேன். ஒரு நடிகராக மட்டும் பார்ப்பவர்கள், அவர் அரசியலுக்கு வரவேண்டுமென்று விரும்புபவர்கள், அரசியலுக்கு வரவேண்டாம் நிறைய படம் நடிக்க வேண்டுமென்று விரும்புபவர்கள், அவர் எது செய்தாலும் சொன்னாலும் வெறித்தனமாக பின்பற்றுபவர்கள் என்று. ஏனெனில் இடையில் கொடுக்கப்பட்ட அரசியல் பில்ட் அப்புகள் தான் காரணம். இதனால் ஏற்பட்ட எதிர்பார்ப்புகளும் அதன் பின் ஏற்ப்பட்ட ஏமாற்றங்களும் அதிகம். இதையே நான் குறிப்பிட்டிருந்தேன். "மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இந்த அளவுக்கு இல்லையே! இப்படி எதிர்பார்ப்புகள் மற்றும் வேதனைகள் அனுபத்ததில்லையே". என்று.
இவ்வாறு பாதிக்கப்பட்டது பெரும்பாலும் கட் அவுட் கட்டி மகிழ்ந்த அடிமட்டத் தொண்டனே.
அவரின் நாடே வியக்கும் இவ்வளவு பெரிய உச்சத்திற்கு நிச்சயம் இவர்களின் பங்களிப்பே பிரதானம் என்று சொல்வேன். அவரை ஒரு தலைவராக போற்றும்(உங்கள் பதிவுகளை படித்து நான் தெளிந்து விட்டேன்) இவர்களுக்கு நிச்சயம் அவர் ஏதாவது செய்ய வேண்டும் என்பது என் கருத்து. உனக்கு தேவை படம் பொழுதுபோக்கு அதை தருகிறேன். அவ்வளவே நமது உறவு என்று இருப்பது சரியல்ல..

நீங்கள் வேறு பதிவுகள் வேறு டாபிக் என்று பரபரப்பாகி விட்டதால் மேலும் இவ்விதாதத்திற்குள் இழுக்க விரும்பவில்லை.
நல்ல ஒரு பதிவுக்கு நான் காரணாமாயிருந்திருக்கிறேன் என்ற மகிழ்ச்சியில் மீண்டும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
(இதை யோசிக்க மற்றும் அடிக்கவே 2 மணி நேரம். எப்படித்தான் நித்தம் நித்தம் அவ்வளவு எழுதுகிறீர்களோ. ஆச்சர்யம் தான்)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்