பின்பற்றுபவர்கள்

10 ஆகஸ்ட், 2008

வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் - ஒரு சிறந்த ...

ஒரு சிறந்த படத்தைப் பற்றி இப்படியெல்லாம் எழுத உங்களுக்கு எப்படி மனது வந்தது? என்ற பதிவர் ஜெகதீசன் எழுதிய பதிவைப் படித்ததும் தெளிந்தேன்.

நானும் 5 கோடி தமிழ்மக்களும் ரஜினியின் வருத்தம் குறித்த பேச்சை தவறாக புரிந்து கொண்டதால் குசேலன் படத்தை ஒருமுறை தான் பார்த்தோம்.

அன்று பாபாவை பாமகவினர் படப் பெட்டியைத் தூக்கி ஓடிச்சென்று பொதுமக்களுக்கு அச்சம் கொடுத்து, திரையரங்கு பக்கம் வரவிடாமல் செய்து படத்தைத் தோல்விப்பட மாக்கினர், இன்று ஆருயிர் ரசிகர்களும் ரஜினியின் விளக்கத்தை மன்னிப்புக் கேட்டதாக தவறாக புரிந்து கொண்டு இரண்டாவது முறை பார்பதைத் தவிர்த்துவிட்டனர், ஆடி தள்ளுபடி நடப்பதால் பெண்கள் அடுத்த மாதம் தான் குசேலன் பார்பதாக முடிவெடுத்துள்ளனர். இதைத் தெரிந்தும் விஷமிகள் குசேலன் 'ப்ளாப்' என்று வதந்தி பரப்பிவருகின்றன. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவியில் விரைவில் கலைஞரின் புதல்வி கனிமொழி தயவால் 'இந்திய தொலைக்காட்சியில் முதன்முறையாக' வெளியாகும் என்றெல்லாம் கொக்கறிக்கின்றனர்.

நான் பார்த்தவரை குசேலன் படம் மிகச் சிறந்த படம் (முன்பு காழ்புணர்வால் தவறாக எழுதிவிட்டேன்), மீனாவின் நடிப்பாகட்டும், பசுபதியாகட்டும் நடிப்பில் பின்னி எடுக்கின்றனர். உலகில் எந்த படத்திலும் வராத காட்சியாக சலூன்கடையே ஒரு பாத்திரமாக படைக்கப்பட்டு இருக்கின்றன, சலூன் கடை மட்டும் தானா ? ஒரு சலூனில் உடைந்த பழைய மரநாற்காலி கூட பார்த்திரமாக வைக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் எத்தனையோ பாத்திரங்கள், இதையெல்லாம் பார்க்க நல்ல கண்ணாடி அணிந்திருக்க வேண்டும். சரியாக பார்க்காமல் படம் வெளியீட்டாளர்கள் பிச்சைபாத்திரம் ஏந்துகிறார்கள் என்றெல்லாம் வதந்தீ வருகிறது. வெளியீட்டாளர்களே ரஜினியின் பேரைச் சொல்லி கோடிகளை குவிக்கும் போது பங்கு தருகிறீர்களா ? இப்போது மட்டும் நஷ்ட ஈடு கேட்பது ஏன் ?

இதையெல்லாம் பொதுமக்கள் நம்பவேண்டாம், குசேலன் படத்தில் சில காட்சிகளை மாற்றி படத்தில் 90 விழுக்காடு ரஜினி வருவதாக பேக்ரவுண்டிலாவது ரஜினியை நுழைத்து திரும்ப வெளியிடப் போகிறாராம் வாசு. தயவு செய்து குசேலனை இரண்டாவது முறை பார்த்தீர்களாயின் அதன் மீதுள்ள காழ்ப்புணர்வை மறந்து 3 ஆவது முறையும் 4 ஆவது முறையும் யாராவது ஓசியில் அழைத்துச் சென்றால் 5 ஆவது முறையும், திருட்டு விசிடி கிடைத்தால் 6 ஆவது முறையும் கூட பார்ப்பீர்கள்.

நான் முன்பு குசேலன் படம் அவ்வளவாக நல்லா இல்லை என்று எழுதி இருந்தேன் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் புரூனோ : குசேலன் படம் நன்றாக இல்லை என்று யார் சொன்னது ? நன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தானே சொன்னேன் !

குசேலன் குருவியைத் தாண்டி நிச்சயம் சாதனை படைக்கத்தான் போகிறது, படம் சரியில்லை என்று சொன்னவர்கள் எல்லோரும் முகத்தில் கரியை பூசிக் கொள்ளத்தான் போகிறார்கள் !

குசேலன் படம் பற்றிய தரமான விமர்சனத்திற்கு மனசாட்சி சொல்வதைப் பாருங்கள் !

34 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

:)))))))

ஜெகதீசன் சொன்னது…

இப்போதாவது திருந்தினீர்களே... அது போதும்...

குசும்பன் சொன்னது…

//ஜெகதீசன் எழுதிய பதிவைப் படித்ததும் தெளிந்தேன். //

அப்படி என்னா மட்டமான சரக்கு அடிச்சு இருந்தீங்க தெளியுறதுக்கு?

மோர் குடிச்சாதான் தெளியும் என்று சொல்வார்கள்!!!

குசும்பன் சொன்னது…

//உலகில் எந்த படத்திலும் வராத காட்சியாக சலூன்கடையே ஒரு பாத்திரமாக படைக்கப்பட்டு இருக்கின்றன,//

என்ன பாத்திரம் என்று தெளிவாக சொல்லவும்...வெள்ளி பாத்திரம் என்றால் போய் திருட்டிவிட்டு வரலாம்?

குசும்பன் சொன்னது…

//ஒரு சலூனில் உடைந்த பழைய மரநாற்காலி கூட பார்த்திரமாக வைக்கப்பட்டு இருக்கிறது. //

பாத்திரம் என்றால் அது சமைக்க பயன் படவேண்டும் அந்த நாற்காலியில் சோறுவைக்க முடியுமா? அங்கு காட்சி பிழை அதான் அந்த படம் ஓடவில்லை என்று சொல்கிறார்கள்.

ஜெகதீசன் சொன்னது…

குசும்பன், ரஜினி படம் நன்றாக ஓடுகிறதே என்ற காழ்ப்புணர்ச்சியில் இது போல் பின்னூட்டமிடுகிறீர்கள்...

கோவியார் திருந்தியது போல் நீங்களும் விரைவில் திருந்துங்கள்.. இல்லையேல் ரஜினி ரசிகர்கள் உங்கள் தோலையும் உரித்துவிடுவோம்..இது உங்களுக்கு இறுதி எச்சரிக்கை..

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

//இப்போதாவது திருந்தினீர்களே... அது போதும்...//

அண்ணே, இந்த மொக்கைய கூட நம்புற அளவுக்கு நம்ப ஜெகு ரொம்ப நல்லவருண்ணே, நீங்க எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாரு. விடாம அடிங்கண்ணே.

ஜெகதீசன் சொன்னது…

////
ஜோசப் பால்ராஜ் said...

//இப்போதாவது திருந்தினீர்களே... அது போதும்...//

அண்ணே, இந்த மொக்கைய கூட நம்புற அளவுக்கு நம்ப ஜெகு ரொம்ப நல்லவருண்ணே, நீங்க எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாரு. விடாம அடிங்கண்ணே
////
:)))))))))))))))))))))))))

ஜெகதீசன் சொன்னது…

பின்னூட்ட P.வாசுத்தனம்!!! :P

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
இப்போதாவது திருந்தினீர்களே... அது போதும்...

4:52 PM, August 10, 2008
//

இப்ப குசேலன் மறுமுறை பார்க்க கிளம்புகிறேன். வந்துதான் மறுமொழி இடமுடியும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
//ஜெகதீசன் எழுதிய பதிவைப் படித்ததும் தெளிந்தேன். //

அப்படி என்னா மட்டமான சரக்கு அடிச்சு இருந்தீங்க தெளியுறதுக்கு?

மோர் குடிச்சாதான் தெளியும் என்று சொல்வார்கள்!!!

4:52 PM, August 10, 2008
//

சரவணா நீயே சொல்லு ! எல்லோரும் உன்னய குழப்பினால் குழம்ப மாட்டியா ? சரக்கு அடிச்சிட்டுத்தான் குழம்புவியா ? குழப்பமாக இருக்கா ?
நிதானமாக யோசிச்சி பாரு !

கோவி.கண்ணன் சொன்னது…

இங்கு பின்னூட்டமிட்ட ஒரு பதிவர் இலைக்காரன் பதிவு போல் வஞ்சப் புகழ்ச்சியாக இருக்கிறது, என்று இந்த பதிவிற்கு உட்பொருள் கற்பித்து பின்னூட்டமிட்டார், ரிஜெக்ட் செய்துவிட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
குசும்பன், ரஜினி படம் நன்றாக ஓடுகிறதே என்ற காழ்ப்புணர்ச்சியில் இது போல் பின்னூட்டமிடுகிறீர்கள்...

கோவியார் திருந்தியது போல் நீங்களும் விரைவில் திருந்துங்கள்.. இல்லையேல் ரஜினி ரசிகர்கள் உங்கள் தோலையும் உரித்துவிடுவோம்..இது உங்களுக்கு இறுதி எச்சரிக்கை..

5:08 PM, August 10, 2008
//

நீங்கள் வேண்டுமானாலும் பாருங்கள், இன்று திருந்தாதவர்களெல்லாம் குசேலன் வெள்ளிவிழாவின் போது பதிவு போட்டு பாராட்டி எழுதத்தான் போகிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
//இப்போதாவது திருந்தினீர்களே... அது போதும்...//

அண்ணே, இந்த மொக்கைய கூட நம்புற அளவுக்கு நம்ப ஜெகு ரொம்ப நல்லவருண்ணே, நீங்க எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாரு. விடாம அடிங்கண்ணே.

5:24 PM, August 10, 2008
//

இந்த பதிவு மொக்கையா ? வன்மையாக கண்டிக்கிறேன், குறிசொல் போடும் போது தட்டச்ச சுலபமாக இருக்கும் என்று மூன்றெழுத்தில் ஒரு குறிசொல் சேர்த்தேன். அதை வைத்து இந்த பதிவை மொக்கை என்று எப்படி சொல்லலாம் ?

இவ்வளவு சீரியாக இருக்கும் ஒரு பதிவை மொக்கை என்று காழ்புணர்ச்சி கொண்டவரால் தான் கூற முடியும்.

நிஜமா நல்லவன் சொன்னது…

ஆம்....இல்லை....இல்லை இல்லை....ஆம்....ஏதோ ஒண்ணு....ஆனா பயங்கர நுண்ணரசியல் பதிவா இருக்கு:)))))))))

நிஜமா நல்லவன் சொன்னது…

//கோவி.கண்ணன் said...
இவ்வளவு சீரியாக இருக்கும் ஒரு பதிவை மொக்கை என்று காழ்புணர்ச்சி கொண்டவரால் தான் கூற முடியும்.//

உங்களாலேயே சீரியசாக என்று சரியாக சொல்ல முடியவில்லையே:))))))))))))

ஜெகதீசன் சொன்னது…

//////////////
நிஜமா நல்லவன் said...

//கோவி.கண்ணன் said...
இவ்வளவு சீரியாக இருக்கும் ஒரு பதிவை மொக்கை என்று காழ்புணர்ச்சி கொண்டவரால் தான் கூற முடியும்.//

உங்களாலேயே சீரியசாக என்று சரியாக சொல்ல முடியவில்லையே:))))))))))))
////////////
ரிப்பீட்டேய்ய்ய்ய்

ஜெகதீசன் சொன்னது…

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்...

ஜெகதீசன் சொன்னது…

//
ஜெகதீசன் said...

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்...
//
வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்....

ஜெகதீசன் சொன்னது…

///
ஜெகதீசன் said...

//
ஜெகதீசன் said...

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்...
//
வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்....

///
மறுக்காச்சொல்லேய்ய்ய்ய்....

நிஜமா நல்லவன் சொன்னது…

///குசும்பன் said...
//உலகில் எந்த படத்திலும் வராத காட்சியாக சலூன்கடையே ஒரு பாத்திரமாக படைக்கப்பட்டு இருக்கின்றன,//

என்ன பாத்திரம் என்று தெளிவாக சொல்லவும்...வெள்ளி பாத்திரம் என்றால் போய் திருட்டிவிட்டு வரலாம்?///

ஹா...ஹா...ஹா...குசேலன்....ஒரு ஏழை.....மண்ணில் செய்த பாத்திரமா இருக்கும்.....:)

கிரி சொன்னது…

இன்னும் எத்தனை "காலத்துக்கு" தான் குசேலன் பற்றி பேசிட்டு இருக்க போறீங்களோ :-))

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
இன்னும் எத்தனை "காலத்துக்கு" தான் குசேலன் பற்றி பேசிட்டு இருக்க போறீங்களோ :-))

7:14 PM, August 10, 2008 //

கிரி ஐயா,
விட்டுத்தள்ளுங்க பாஸ் பேசுகிற அளவுக்கு அதில் ஒன்னும் இல்லைன்னு சொல்ல வர்றீங்களா ? புரியல தயவு செய்து விளக்கவும் !

கோவி.கண்ணன் சொன்னது…

//நிஜமா நல்லவன் said...
///குசும்பன் said...
//உலகில் எந்த படத்திலும் வராத காட்சியாக சலூன்கடையே ஒரு பாத்திரமாக படைக்கப்பட்டு இருக்கின்றன,//

என்ன பாத்திரம் என்று தெளிவாக சொல்லவும்...வெள்ளி பாத்திரம் என்றால் போய் திருட்டிவிட்டு வரலாம்?///

ஹா...ஹா...ஹா...குசேலன்....ஒரு ஏழை.....மண்ணில் செய்த பாத்திரமா இருக்கும்.....:)

6:17 PM, August 10, 2008 //

மண்ணில் செஞ்ச பாத்திரமா ? சட்டிப்பானையும் கெட்டியாகத்தான் இருக்கும் உடையும் வரை

ஜெகதீசன் சொன்னது…

!@#$த்%^&*(ச்%^&**(*(ம்%%$%$^$%^$%B4#%$#$#$%$#%FD ff4345#$#$%$^% ட்f@##454^%$^% ச்ட்f#$%$%#V ட்fக்f $#%$#%# DFDFG #$%$#

kanchana Radhakrishnan சொன்னது…

திரைப்படங்களின் 75ம் ஆண்டு நிறைவில்..இப்படிப்பட்ட ஒரு படம் வந்து..அதை சரிவர உணராது தாக்கியதற்காக நானும் உங்கள் வருத்தத்தில் பங்கேற்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
!@#$த்%^&*(ச்%^&**(*(ம்%%$%$^$%^$%B4#%$#$#$%$#%FD ff4345#$#$%$^% ட்f@##454^%$^% ச்ட்f#$%$%#V ட்fக்f $#%$#%# DFDFG #$%$#
//

என்னைய்யா கெட்ட வார்த்தையால திட்டுறீரு.

கோவி.கண்ணன் சொன்னது…

// kanchana Radhakrishnan said...
திரைப்படங்களின் 75ம் ஆண்டு நிறைவில்..இப்படிப்பட்ட ஒரு படம் வந்து..அதை சரிவர உணராது தாக்கியதற்காக நானும் உங்கள் வருத்தத்தில் பங்கேற்கிறேன்.
//

மிக்க நன்றி,

ஒரு வேளை விசமிகளின் பிரச்சாரத்தை உண்மை என்று நம்பி பொதுமக்கள் படம் பார்ர்க வராவிட்டால் ?

படம் விநியோகஸ்தர்களை பாதிக்கக் கூடாது, நாமெல்லாம் சேர்ந்து உண்டியல் குலுக்கி அதில் சேரும் பணத்தை வைத்து டிக்கெட் வாங்கி இலவசமாக ஏழைமக்களுக்கு கொடுத்து தொண்டாட்டற்ற வேண்டும்.

ஜெகதீசன் சொன்னது…

////
கோவி.கண்ணன் said...

//ஜெகதீசன் said...
!@#$த்%^&*(ச்%^&**(*(ம்%%$%$^$%^$%B4#%$#$#$%$#%FD ff4345#$#$%$^% ட்f@##454^%$^% ச்ட்f#$%$%#V ட்fக்f $#%$#%# DFDFG #$%$#
//

என்னைய்யா கெட்ட வார்த்தையால திட்டுறீரு.

////
)($E@#$%^&HHFGர 454%^%^$#$#%$^ஜி ~!@#@$FDனி R%%^^89 %^%^*((சா DFS3@##$%%$^ர் #$%$^%^வா& &^&ழ் *^& ^க *!@#$%$#V! G567வா ^&%^&%ழ் ^%^&%^க*&*&*!

பரிசல்காரன் சொன்னது…

வஞ்சப் புகழ்ச்சி அணிக்கு இந்தப் பதிவு ஒரு சிறந்த உதாரணம்!

`மனசாட்சி'யைத் தொட்டுச் சொல்லுங்க, கிரி கேக்கறது நியாயம் தானே??

வெண்பூ சொன்னது…

//குசேலன் குருவியைத் தாண்டி நிச்சயம் சாதனை படைக்கத்தான் போகிறது, படம் சரியில்லை என்று சொன்னவர்கள் எல்லோரும் முகத்தில் கரியை பூசிக் கொள்ளத்தான் போகிறார்கள் !//

குருவியின் 100வது நாள் போஸ்டர்கள் சென்னையெங்கும் நாறடிக்கும் .. ச்சீ.. அலங்கரிக்கும் இந்த நாளில் குசேலன் அதையும் தாண்டி வெள்ளிவிழா காணப்போவதை உணர்ந்த கோவி.கண்ணனுக்கு பாராட்டுக்கள்..

அடுத்தவர்களின் முகத்தில் பூசுவதற்கான கரியை அண்ணன் கோவி.கண்ணன் ஸ்பான்ஸர் செய்ய ஒத்துக்கொண்டுள்ளார் என்பது ரஜினி ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாகும்.

பி.கு.: சுதந்திர தினத்திற்கு கலைஞர் டிவியில் குசேலன் போட்டால் நான் பொறுப்பல்ல...

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
வஞ்சப் புகழ்ச்சி அணிக்கு இந்தப் பதிவு ஒரு சிறந்த உதாரணம்!

`மனசாட்சி'யைத் தொட்டுச் சொல்லுங்க, கிரி கேக்கறது நியாயம் தானே??

12:21 AM, August 11, 2008 //

பரிசல் சார்,
நானும் அவர் கேள்விக்கு ஞாயமாகத்தானே பதில் சொல்லி இருக்கேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// வெண்பூ said...

குருவியின் 100வது நாள் போஸ்டர்கள் சென்னையெங்கும் நாறடிக்கும் .. ச்சீ.. அலங்கரிக்கும் இந்த நாளில் குசேலன் அதையும் தாண்டி வெள்ளிவிழா காணப்போவதை உணர்ந்த கோவி.கண்ணனுக்கு பாராட்டுக்கள்..

அடுத்தவர்களின் முகத்தில் பூசுவதற்கான கரியை அண்ணன் கோவி.கண்ணன் ஸ்பான்ஸர் செய்ய ஒத்துக்கொண்டுள்ளார் என்பது ரஜினி ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாகும்.//

வெண்பூ நன்றி,

கரிவாங்க இப்போதே உண்டியலில் சேமித்துக் கொண்டு இருக்கிறேன். கரியை அரைத்துக் கொடுக்க கிரியையும் ஜெகதீசனும் உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

//பி.கு.: சுதந்திர தினத்திற்கு கலைஞர் டிவியில் குசேலன் போட்டால் நான் பொறுப்பல்ல...

2:01 AM, August 11, 2008//

இங்கு கலைஞர் டிவி கனெக்சன் இல்லை. போட்டாலும் பார்க்க முடியாது ! :(
//

அவனும் அவளும் சொன்னது…

திருந்தினதுக்கு நன்றி. குசேலன் வெற்றி படமா / தோல்வி படமா ன்னு கண்டுபிடிக்கற ஒரு அறிவியல் புனை கதை எழுதலாமான்னு யோசிச்சி கிட்டு இருக்கேன்.

நானும் இது சம்பந்தமா (உண்மையா இல்ல ) ஒரு பதிவு எழுதி இருக்கேன். வந்து பாத்துட்டு கருத்து சொல்லுங்க.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்