பின்பற்றுபவர்கள்

8 ஆகஸ்ட், 2008

லக்கிலுக் ஐயங்காரிடம் கேட்கக் கூடாத கேள்விகள் !

டி.எம்.சவுந்தராஜன் தமிழர்களின், இசை ஆர்வளர்களின் அன்புக்குரிய மிகப்பெரிய பாடகர், இசைக் கலைஞர். திரையுலகினர் குறிப்பாக எம்ஜிஆர் உட்பட்ட பல்வேறு நடிகர்களை இவரது பாடல்கள் ஆட்டிப்படைத்தன.பக்தி, காதல், தத்துவம் ஆகிய பிரிவுகளில் இவர் பாடிய பாடல்கள் என்றுமே சாகாவரம் பெற்றவை. இவ்வளவு புகழ்பெற்ற பாடகருக்கு வாழும் காலத்தில் மிகப்பெரிய பாராட்டு நடத்தவில்லை என்று வருத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன். சென்ற ஆண்டு அண்ணன் அழகிரி தலைமையில் டிஎம்எஸ் அவர்களுக்கு பாராட்டு என்றதும் மிகவும் மகிழ்ந்தேன். அதன் பிறகு பேச்சு எதுவும் எழவில்லை.

சென்ற வார நக்கீரனைப் புரட்டியபோது 10 பக்கங்களில் அண்ணன் அழகிரியைப் பாராட்டிய விளம்பரங்கள் வந்தது, அண்ணனுக்கு பாராட்டு எப்போதும் நடப்பது தானே, அண்ணன் தற்பொழுது என்ன சாதனை செய்திருக்கிறார் என்று பார்க்கலாம் என்று விளம்பரததைப் பார்த்ததும் தான் தெரிந்தது, டிஎம்எஸ்க்கு மதுரையில் பாராட்டுவிழாவாம். 10 விளம்பரங்களில் சிலவற்றில் டிஎம்எஸ் படமே இல்லை. இருந்த சிலவற்றில் தக்குனியோண்டு படமும், அண்ணன் படத்தை பெரிதாகவும் அடித்து இருந்தார்கள். அண்ணன் விளம்பரம் கொடுக்கவில்லை, அண்ணனின் அன்பு உடன்பிறப்புக்கள் தான் கொடுத்திருப்பார்கள், அண்ணன் தான் விளம்பரத்துக்கு ஆசைப்பட மாட்டாரே. டிஎம்எஸ்சை பாராட்டும் அண்ணனுக்கு பாராட்டாக தம்பிகள் தான் வெளம்பரம் செய்து இருக்கிறார்கள். கூச்ச சுபாவம் உள்ள அண்ணன் இதையெல்லாம் பார்த்து இருப்பாரா என்றே தெரியவில்லை.

*****

அண்ணனைப் பாராட்டிய திமுக தலைவர் கலைஞர், தான் பெற்ற பிள்ளையென்பதால் வாழ்த்தாமல் விட்டால் நாளைய உலகம் அப்பா - மகன் உறவால் மகனைப் புறக்கணித்தார் என்று தூற்றாதா, சிறந்த சேவையாற்றும் ஒருவரை மகனென்பதால் பாராட்டாமல் விட்டால், நாளைய உலகம் தந்தையாக நடந்து கொண்டாரேயன்றி ஒரு கட்சித்தலைவராக நடந்து கொள்ளவில்லை என்று பின்னால் பேசமாட்டார்களா ? என்றெல்லாம் கருதி ... மனப்போராட்டம் ஒரு ஓரத்தில் இருந்தாலும், பாசத்தை புறம் தள்ளிவிட்டு அண்ணனுக்கு
பெரும் பாராட்டையே நடத்திவிட்டார் கலைஞர். இது பற்றி விரிவாக தட்ஸ்தமிழில் வந்திருக்கிறது.

கலைஞரின் பாராட்டில் சில துளிகள் :

"மு.க.அழகிரிக்கு இன்னொரு பெயர் உண்டு. அது அஞ்சா நெஞ்சன். அப்படி அழைத்தே பழக்கப்பட்டவர்கள் மதுரை மக்கள். அழகிரிக்கு அஞ்சா நெஞ்சன் என்ற பட்டப் பெயர் வந்ததற்கு ஒரு காரணம் உண்டு.

திருவாரூரில் அழகிரி பிறந்து, குழந்தையாக அறைக்குள்ளே கிடத்தப்பட்டிருந்தபோது, என் வீட்டுக்கு வந்தார் பெரியார்.

குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறாய், என்றார். நான் உடனே அழகிரி என்றேன். சரியான முரட்டுப் பெயரைத்தான் வைத்திருக்கிறாய் என்று அன்றைக்கே பெரியார் சொல்லிவிட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள காளையர்களும் தோழர்களும் அதை உறுதி செய்திருக்கிறீர்கள்.

இதைக் கண்டு உள்ளம் பூரிக்கிறேன். பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். எதற்கு அஞ்சாவிட்டாலும் கூட, ஏழைகளின் கண்ணீருக்கு அஞ்சவேண்டும் என்றான் ஒரு கவிஞன். அந்தப் பெருமையும் அழகிரிக்கு உண்டு. அந்த உள்ளம் வளர வாழ்த்துகிறேன்."

*******

அண்ணனுக்கு யார் அஞ்சுகிறார்களோ, மாறன் மகன்கள் அஞ்சுவார்கள்.

லக்கி ஐயங்கார்,

அண்ணன் அஞ்சா நெஞ்சனாகவே இருப்பதில் மிக்க மகிழ்ச்சி,

1. மதுரைக்கு அருகில் தான் இருக்கிறது சேதுக்கால்வை, அண்ணன் அஞ்சா நெஞ்சன் அந்த திட்டத்தை விரைவில் நிறைவேற்ற உதவுவாரா ?

2. ஒகனேக்கல் கெனத்துல போட்ட கல் மாதிரி கிடக்கு, அதையும் அண்ணன் தான் நிறைவேற்ற முடியும் என்று நினைக்கிறேன், அண்ணன் மனது வைப்பாரா ?

3. சிறந்த உள்ளாட்சித்துறை அமைச்சராக செயல்பட்டார் என்ற பாராட்டு தளபதி ஸ்டாலினுக்கும், அண்ணனின் பெருமையையும் கூறியாகிவிட்டது, பெண்களை பெருமை படுத்துவிதமாக கலைஞரின் கண்மணிக்கு பாராட்டு விழா எதுவும் நடக்க இருக்கிறதா ?

32 கருத்துகள்:

லக்கிலுக் சொன்னது…

கோவி.கண்ணன் வடகலை அய்யங்கார் வாள்!

//1. மதுரைக்கு அருகில் தான் இருக்கிறது சேதுக்கால்வை, அண்ணன் அஞ்சா நெஞ்சன் அந்த திட்டத்தை விரைவில் நிறைவேற்ற உதவுவாரா ?//

அஞ்சாநெஞ்சன் அரசுப்பொறுப்பு எதிலுமில்லை. சேதுகால்வாய் அமையவேண்டும் என்ற திமுகவின் ஆசை அஞ்சாநெஞ்சனுக்கும் இருக்கும்.

//2. ஒகனேக்கல் கெனத்துல போட்ட கல் மாதிரி கிடக்கு, அதையும் அண்ணன் தான் நிறைவேற்ற முடியும் என்று நினைக்கிறேன், அண்ணன் மனது வைப்பாரா ?//

ஒகேனக்கல் பேப்பர் ஒர்க் மும்முரமாக நடந்துவருகிறது. விரைவில் கர்நாடகா ஒத்துக்கொண்டாலும் சரி, பிரச்சினை செய்தாலும் சரி. ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் நிறைவேறும். அண்ணன் மனது வைக்க வேண்டிய அவசியமேயில்லை.

//3. சிறந்த உள்துறை அமைச்சராக செயல்பட்டார் என்ற பாராட்டு தளபதி ஸ்டாலினுக்கும், அண்ணனின் பெருமையையும் கூறியாகிவிட்டது, பெண்களை பெருமை படுத்துவிதமாக கலைஞரின் கண்மணிக்கு பாராட்டு விழா எதுவும் நடக்க இருக்கிறதா ?//

நீங்கள் நடத்துவதாக இருந்தால் சொல்லுங்கள். கலைஞர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி தருகிறேன்.

narsim சொன்னது…

"அஞ்சா நெஞ்சானூர்" னு எங்க ஊர் பேரையே மாத்தப்போராங்களாம்..தெரியுமா??

நர்சிம்

விஜய் ஆனந்த் சொன்னது…

meee the first!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...

//

லக்கிலுக் ஐயங்கார் தென்கலை வாள்,
அண்ணன் மனது வைத்தால் நெடி நேரத்தில் முடிந்துவிடுமே என்று கேட்டேன்.

அண்ணன் மனது வைத்தார், 'கலைஞர்' டிவி உதயமாகியது.

அண்ணன் மனது வைத்தார் டிஎம்எஸ் பாராட்டுவிழாவும் நடந்து, சவுராஷ்ட்ரா ஒட்டு சிந்தாமல் சிதறாமல் கிடைக்கப் போகிறது. இப்படி திமுகவே அண்ணனைப் பயன்படுத்திக் கொண்டால், தமிழகத்திற்கும் அவர் பொன்னான நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வெறொன்றும் தப்பாக எடுத்துக்காதேள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//narsim said...
"அஞ்சா நெஞ்சானூர்" னு எங்க ஊர் பேரையே மாத்தப்போராங்களாம்..தெரியுமா??

நர்சிம்

4:29 PM, August 08, 2008
//

அப்படி செய்தால் அது ஆண்குலத்துக்கே பெருமைக்குரியது, மதுரை என்றாலே பெண் ஆட்சி என்ற பெயரில் தான் ஆண்குலத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறது, அஞ்சா நெஞ்சனூர் என்று வைத்துவிட்டால் நாமெல்லாம் தலைநிமிரலாம் !

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
meee the first!!!!

4:32 PM, August 08, 2008
//

இல்லை இல்லை 3 ஆவது தான் நீங்கள் !

லக்கிலுக் சொன்னது…

//லக்கிலுக் ஐயங்கார் தென்கலை வாள்,
அண்ணன் மனது வைத்தால் நெடி நேரத்தில் முடிந்துவிடுமே என்று கேட்டேன்.//

அண்ணனுக்கு தலைவர் ஆணையிட்டால் உடனே நடந்துவிடும் என்பது உண்மைதான். ஆனாலும் திமுக ஆட்சி இன்னமும் இரண்டு ஆண்டுகளுக்காவது நீடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது :-)

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

வருகை பதிவு மட்டுமே இடுகிறேன். உங்கள் கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன், ஏற்கனவே இவை குறித்து நான் நிறைய எழுதிவிட்டேன்.
எனவே இப்போது சொல்ல புதிதாய் என்ன இருக்கு ?

கோவையில் ஒரு விழாவில் கனிமொழியின் மகன் ஆதித்யாவிற்கே கட் அவுட் வைத்தவர்கள் நம் உடன்பிறப்புகள்.

இராம்/Raam சொன்னது…

என்னத்த பண்ணி வைச்சீங்க??? ))said'ன்னு வருது!

//அப்படி செய்தால் அது ஆண்குலத்துக்கே பெருமைக்குரியது, மதுரை என்றாலே பெண் ஆட்சி என்ற பெயரில் தான் ஆண்குலத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறது, அஞ்சா நெஞ்சனூர் என்று வைத்துவிட்டால் நாமெல்லாம் தலைநிமிரலாம் !//

எங்கூரு பேரை வைச்சே காமெடியா??? :))

ஜோதிபாரதி சொன்னது…

//சிறந்த உள்துறை அமைச்சராக செயல்பட்டார் என்ற பாராட்டு தளபதி ஸ்டாலினுக்கும், அண்ணனின் பெருமையையும் கூறியாகிவிட்டது, பெண்களை பெருமை படுத்துவிதமாக கலைஞரின் கண்மணிக்கு பாராட்டு விழா எதுவும் நடக்க இருக்கிறதா ?//

அது கனிமொழிக்கு நடந்தாயிற்றே!!! அதான் சென்னை சங்கமம்!!!

உள்துறை என்பதை உள்ளாட்சித்துறை என்று மாற்றி விடுங்கள். உள்துறை முதல்வர் கருணாநிதியிடம் உள்ளது.

அன்புடன்,
ஜோதிபாரதி.

புதுகை.எம்.எம்.அப்துல்லா சொன்னது…

சிறந்த உள்துறை அமைச்சராக செயல்பட்டார் என்ற பாராட்டு தளபதி
//

என்ன ஓய் நீரு...ஒரு மேட்டர் எழுதுறச்சே நன்னா தெருஞ்சுன்டு எழுதப்படாதோ? அவா உள்துறை அமைச்சர் இல்லை ஓய்! உள்ளாட்சித் துறை அமைச்சர்.

முரளிகண்ணன் சொன்னது…

மீ த 10 த்து

அதிஷா சொன்னது…

\\
அண்ணனுக்கு யார் அஞ்சுகிறார்களோ, மாறன் மகன்கள் அஞ்சுவார்கள்.
\\

மாறன் மகன்கள் அஞ்சும் நெஞ்சர்களா!!!?

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
//லக்கிலுக் ஐயங்கார் தென்கலை வாள்,
அண்ணன் மனது வைத்தால் நெடி நேரத்தில் முடிந்துவிடுமே என்று கேட்டேன்.//

அண்ணனுக்கு தலைவர் ஆணையிட்டால் உடனே நடந்துவிடும் என்பது உண்மைதான். ஆனாலும் திமுக ஆட்சி இன்னமும் இரண்டு ஆண்டுகளுக்காவது நீடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது :-)

5:12 PM, August 08, 2008
//

லக்கி ஐயங்கார் வாள்,

அண்ணனுக்கு வாய்ப்புக் கொடுத்தால் 2 ஆண்டு என்ன தொடர்ந்து ஆட்சி திமுகவிற்கே கிடைக்கும் ! தலைவர் காதில் போட்டு வைங்க !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
வருகை பதிவு மட்டுமே இடுகிறேன். உங்கள் கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன், ஏற்கனவே இவை குறித்து நான் நிறைய எழுதிவிட்டேன்.
எனவே இப்போது சொல்ல புதிதாய் என்ன இருக்கு ?

கோவையில் ஒரு விழாவில் கனிமொழியின் மகன் ஆதித்யாவிற்கே கட் அவுட் வைத்தவர்கள் நம் உடன்பிறப்புகள்.

5:32 PM, August 08, 2008
//

பால்ராஜ்,

மதுரை, சென்னை என்கிற இரு மாநகரங்களும் மகன்களுக்கே செல்வாக்கு, பேரனுக்கு கோவையில் செல்வாக்கு கிடைக்கப் போவதைப் பார்த்து ஏன் இப்படி பொகையுறிங்க ! தாத்தா சொத்து பேரனுக்குத்தானே !

கோவி.கண்ணன் சொன்னது…

//இராம்/Raam said...
என்னத்த பண்ணி வைச்சீங்க??? ))said'ன்னு வருது!//

சரி பண்ணிவிட்டேன் !

//எங்கூரு பேரை வைச்சே காமெடியா??? :))
//
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
//சிறந்த உள்துறை அமைச்சராக செயல்பட்டார் என்ற பாராட்டு தளபதி ஸ்டாலினுக்கும், அண்ணனின் பெருமையையும் கூறியாகிவிட்டது, பெண்களை பெருமை படுத்துவிதமாக கலைஞரின் கண்மணிக்கு பாராட்டு விழா எதுவும் நடக்க இருக்கிறதா ?//

அது கனிமொழிக்கு நடந்தாயிற்றே!!! அதான் சென்னை சங்கமம்!!!

உள்துறை என்பதை உள்ளாட்சித்துறை என்று மாற்றி விடுங்கள். உள்துறை முதல்வர் கருணாநிதியிடம் உள்ளது.

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

ஓ அப்படியா, மகளுக்குத்தான் முதல்மரியாதையா ? :)

உள்துறையை மாற்றிவிட்டு 'உள்ஆட்சி' என்று மாற்றிவிட்டேன். மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
சிறந்த உள்துறை அமைச்சராக செயல்பட்டார் என்ற பாராட்டு தளபதி
//

என்ன ஓய் நீரு...ஒரு மேட்டர் எழுதுறச்சே நன்னா தெருஞ்சுன்டு எழுதப்படாதோ? அவா உள்துறை அமைச்சர் இல்லை ஓய்! உள்ளாட்சித் துறை அமைச்சர்.

6:35 PM, August 08, 2008
//

அப்துல்லா,

தப்பா எழுதினால் தான் என்ன ? உள்ளாட்சித்துறை ஸ்டாலினால் கட்டுப்பாட்டில் இல்லையா ? அப்பா சொல்வதைக் கேட்பவர்கள், அவரன்பு மகன் சொல்வதைக் கேட்கமாட்டாங்களா ? கோப்பில் மட்டும் தானே கையெழுத்திட முடியாது !
:))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...
மீ த 10 த்து

7:13 PM, August 08, 2008
//

முரளிகண்ணன்,
பின்னூட்ட கடமைக்கு மிக்க நன்றி ! பதிவிட்டால் கொஞ்சம் தெரியபடுத்துங்கள் ! பதிலுக்கு செய்யனும் !
:))))

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிஷா said...
\\
அண்ணனுக்கு யார் அஞ்சுகிறார்களோ, மாறன் மகன்கள் அஞ்சுவார்கள்.
\\

மாறன் மகன்கள் அஞ்சும் நெஞ்சர்களா!!!?

7:39 PM, August 08, 2008
//

இல்லாட்டி ஏன் 'ரவுடி' அழகிரி என்று செய்திவாசிக்கப் போகிறார்கள் !

jackiesekar சொன்னது…

இந்த காமெடியில எம்ஜியார் ஆரம்பித்த கட்சியில, எம்ஜியார் பேரை சொல்லி ஓட்டு வாங்கறவங்களே எம்ஜியார் படத்தை போடறது கிடையாது, அப்புறம் ஒரு கேள்வி, புரட்சி தலைவி என்றால் என்ன?

அவனும் அவளும் சொன்னது…

*****இல்லாட்டி ஏன் 'ரவுடி' அழகிரி என்று செய்திவாசிக்கப் போகிறார்கள்*****

ஒருவேள ரவுடித்தனம் பண்ணினதுனால அப்படி சொன்னான்களோ ?

அவனும் அவளும் சொன்னது…

*****தாத்தா சொத்து பேரனுக்குத்தானே ****

:)--

இல்லாட்டி உடன்பிறவா சகோதர / சகோதரிகளுக்கு

பரிசல்காரன் சொன்னது…

இந்தப் பத்தி நான் என்ன சொல்ல வர்றேன்னா..

ஒண்ணே ஒண்ணுதான்..

ஒண்ணே ஒண்ணு!
(புரிஞ்சவங்களுக்கு புரியும்!!)

குசும்பன் சொன்னது…

உள்ளேன் ஐயா!!!

வடுவூர் குமார் சொன்னது…

இந்த நிகழ்ச்சியைப் பற்றி தோழமைக்கட்சிகள் ஒன்றும் சொல்லவில்லையா?

குசும்பன் சொன்னது…

கோவி.கண்ணன் பிள்ளைவாளிடம் ஒரு கேள்வி.. லக்கி எப்பொழுது வடகலை அய்யங்கார் வாள் ஆனார்?

அய்யங்காரு வீட்டு அழகேன்னு ஏதும் பாட்டு பாடிக்கிட்டு இருக்காரா?
சந்தேகத்தை உடனடியாக விளக்கவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
கோவி.கண்ணன் பிள்ளைவாளிடம் ஒரு கேள்வி.. லக்கி எப்பொழுது வடகலை அய்யங்கார் வாள் ஆனார்?

அய்யங்காரு வீட்டு அழகேன்னு ஏதும் பாட்டு பாடிக்கிட்டு இருக்காரா?
சந்தேகத்தை உடனடியாக விளக்கவும்.

6:07 PM, August 09, 2008
//

அவர் ஐயங்கார் என்கிற மேட்டரே உங்களுக்கு தெரியாதா ?

அடுத்த முறை அவரை சந்தித்தால் டவுசரை சாரி சாரி சட்டையைக் கழட்டிப் பார்க்கவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
இந்த நிகழ்ச்சியைப் பற்றி தோழமைக்கட்சிகள் ஒன்றும் சொல்லவில்லையா?

3:23 PM, August 09, 2008
//

தோழமைக் கட்சி எது ?
காங்கிரஸ் ? அதுவும் குடும்ப கட்சிதானே !

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
இந்தப் பத்தி நான் என்ன சொல்ல வர்றேன்னா..

ஒண்ணே ஒண்ணுதான்..

ஒண்ணே ஒண்ணு!
(புரிஞ்சவங்களுக்கு புரியும்!!)

9:17 AM, August 09, 2008
//

ஒண்ணே ஒண்ணுதான்..

ஒண்ணே ஒண்ணு! ????

எனக்கு இரண்டு புரிஞ்சது !

கோவி.கண்ணன் சொன்னது…

//அவனும் அவளும் said...
*****இல்லாட்டி ஏன் 'ரவுடி' அழகிரி என்று செய்திவாசிக்கப் போகிறார்கள்*****

ஒருவேள ரவுடித்தனம் பண்ணினதுனால அப்படி சொன்னான்களோ ?

12:17 AM, August 09, 2008

அவனும் அவளும் said...
*****தாத்தா சொத்து பேரனுக்குத்தானே ****

:)--

இல்லாட்டி உடன்பிறவா சகோதர / சகோதரிகளுக்கு

12:19 AM, August 09, 2008
//

உண்மையெல்லாம் உரக்கப் பேசப்படாது !
:)

தமிழ்நெஞ்சம் சொன்னது…
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்