கார்குழல் கூந்தலுக்கு மட்டுமே மயங்காதவன்...இவன்
வெண்ணையும் கூடத் தேவையில்லை
வெண்குழலே போதுமென்பான்,
துளசி தீர்த்தம் தேவையில்லை
சுண்டக்கஞ்சி போதுமென்பான் !
டாஸ்மாக்கில் சிறந்ததை தேர்ந்தெடுத்து
(எப்போதும்) பாஸ்மார்க்கு வாங்குபவன் இவன் !
பரங்கிமலையில் தவமிருந்து
ஜோதியிலே கலந்தவன்,
ஆவடியா ? அம்பத்தூரா ?
பட்டாபிராமா ? பாடியா ?
எல்லாமே என் ஊர்தான் என்றே
பால(ன) பாடம் படித்துவிட்டு
மோட்சம் அறிந்தவன் !
நகைச்சுவை...
வேண்டுவோர் மகிழ்வதற்கே,
காண்டு கஜேந்திர மோட்சம் கொடுப்பவன் இவன் !
மடிப்பாக்கம் மாதவனாம் கிருஷ்ண குமார்
மகிழ்வுடன் நிதமிருக்க வாழ்த்துகிறேன்
நண்பனாக !

லக்கி லுக் என்கிற கிருஷ்ண குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் !
டவுசரைக் கழட்டியவர்
கோவி.கண்ணன்
***********
என்னைப் பொருத்து.....
இன்னிக்குத்தான் தமிழ்பதிவில் கிருஷ்ண ஜெயந்தி !
11 கருத்துகள்:
கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!!!
கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!!!
கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!!!
தாவு தீத்தவரே..
டமாரு காவலரே...
ஷகீலா இல்லன்னாலும்
சோனாவ வா வான்னு சொன்னவரே...
இந்த நாப்பது போல்
நானூறு வாழுங்கண்ணே!!!
அடப்பாவமே, இதுவரைக்கும் லக்கிய அண்ணண்ணு சொல்லிக்கிட்டு இருந்தவன் நானு, இன்னைக்கு அவரோட பிறந்த நாளுக்கு வாழ்த்துச்சொல்ல தொலைபேசியில அழைச்சுட்டு அவரோட வயச கேட்டப்பத்தான் என்னோட 2 மாதம் சின்னவருன்னு தெரியவந்துச்சு. எங்களுக்கெல்லாம் வயசு ரொம்ப கம்மிப்பா. நாங்க எல்லாம் யூத்துதான் . 40ன்னு சொல்லி பின்னூட்ட புயல் விஜய் ஆனந்த் வாழ்த்துறது இன்னும் 12 வருசம் கழிச்சு வாழ்த்த வேண்டியது. யூத் பசங்கப்பா நானும் லக்கியும். விஜய் ஆனந்த் இதை நான் வன்மையா கண்டிக்கிறேன். கோவி.க மாதிரி வயசானவங்க வாழ்த்துனா லக்கி வயசானவரா ? உன்னைய அடுத்த சந்திப்புல கவனிச்சுக்கிறேன்.
கிருஷ்ணகுமாருக்கு
கிருஷ்ணகுமாரின்
கிருஷ்ணஜெயந்தி
வாழ்த்துக்கள்!!
கிருஷ்ணனுக்கு வாழ்த்துச் சொன்ன
கண்ணனுக்கு வந்தனங்கள்!
@ விஜய் ஆனந்த்
//விஜய் ஆனந்த் said...
தாவு தீத்தவரே..
டமாரு காவலரே...
ஷகீலா இல்லன்னாலும்
சோனாவ வா வான்னு சொன்னவரே...
இந்த நாப்பது போல்
நானூறு வாழுங்கண்ணே!!!//
கவுஜ நிஜமாவே நல்லாயிருக்கு நண்பா!
வயசைக் கரெக்டா சொல்லீருக்கலாம் நீங்க. நல்ல பாஸ்மதி பிரியாணில கல்லு மாதிரி ஆய்டுச்சு!
லக்கிலுக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
கோவியாரே!
தங்கள் கவித்துவமான பாடல் அருமை!
இந்த பாடலில் எந்த அணியை வைத்து எழுதியிருக்கிறீர்கள்?
//பரங்கிமலையில் தவமிருந்து
ஜோதியிலே கலந்தவன்,
ஆவடியா ? அம்பத்தூரா ?
பட்டாபிராமா ? பாடியா ?
எல்லாமே என் ஊர்தான் என்றே
பால(ன) பாடம் படித்துவிட்டு
மோட்சம் அறிந்தவன் !//
???...!!!...
சபையோரே...
லக்கியாரே...
ஏதோ ஆர்வக்கோளாறுல வயச (மெய்யாலுமே தப்பா??)எழுதிட்டேன்..என்ன மன்னிச்சுடுங்க.. கவனிக்காம வுட்டுடுங்க...
உவமையோடு கலாய்த்த போட்காரரே..கவுஜன்னு நம்புனதுக்கு நன்றிகள் பல!!!
நன்றி! நன்றி!! நன்றி!!! :-))))
many more happy returns of the day
kavithai super
கருத்துரையிடுக