மதில்மேல் பூனை எந்தப் பக்கம் வேண்டுமானாலும் குதித்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும். அதாவது சந்தர்ப்பவாதம். பூனை சந்தர்பவாதத்தை வைத்து பெரிதாக என்னத்த சாதித்துவிடப் போகிறது, அது தன்னைக் காத்துக்கொள்ள அதை ஒரு உத்தியாக வைத்திருக்கும். அவ்வளவுதான். ஒரு உதாரணத்துக்காக பல்டி அடிக்கும் அரசியல்வாதிகளை, இரட்டை நிலை கொண்டோரைக் குறிக்க குறிப்பிட மதில்மேல் பூனையைக் குறிப்பிடுவார்கள். இந்த பக்கமா ? அந்த பக்கமா ? என்பதில் மதில்மேல் பூனை ஆட்கள் எப்போதும் தனக்கு சாதகமான முடிவைத்தான் எடுப்பார்கள்.
******
இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையோ வேறுமாதிரி, இரண்டு பக்கமும் மண்டைக் குடைச்சலாகவே இருக்கும். இருதலையை அதுவே கேட்டுப் பெறாவிட்டாலும் அதன் நிலை என்றுமே சங்கடத்திலேயே தான் இருக்கும், எந்த முடிவெடித்தாலும் எதிர்தரப்பின் விமர்சனம் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு என்றுமே பதிலடியாகவே இருக்கும். உண்மையில் இருதலைக் கொள்ளி எறும்புக்கு அது போன்ற துன்பம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. மனிதர்களில் பலருக்கு அதுபோன்ற நிலைதான். இருமாறுபட்ட, வேறுபட்ட பிரிவினர்களை சேர்ந்த / சார்ந்த ஒருவருக்கு, இதுபோன்ற நிலையே. பெரும்பாலும் கணவர்களுக்கு இந்நிலைதான். மனைவி சொல்வதைக் கேட்பதா, தன்னுடைய பெற்றோர்களின் மனம் குளிர நடந்து கொள்வதா ஆண்கள் பலரின் வாழ்கையில் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைதான் இருக்கும்.
*******
சரி விசயத்துக்கு வருவோம், தான் பேசியதை 'கன்னடர்களை உதைக்க வேண்டாமா ?' தெளிவாக பேசாததால் ஏற்பட்ட குழப்பமே தனக்கு பெரும் அவப்பெயரைத் தந்துவிட்டது என்று கருதிய ரஜினிகாந்த் அதற்கு வருத்தம் தெரிவித்ததாக செய்தி ஊடகங்களில் வெளியானது. தனிப்பட்ட தமிழர் ஒருவருக்காக தனிப்பட்ட கன்னடர் எவரும் போராட்டத்தில் குதிக்கவில்லை. ஒட்டுமொத்த கர்நாடகத்தின் எதிர்ப்பாகவே தான் அந்த பிரச்சனை இருந்தது. வன்முறையாளர்கள் சிலர் வரம்பு மீறி நடந்து கொண்டனர்.
இதற்கு தமிழர் சார்பில் எதிர்ப்பு, கண்டனம் தெரிவிக்க வேண்டுமென்றால்,ஞாயமாக எடுத்துச் சொல்லி பொதுவாக கண்டனம் தெரிவித்திருக்கலாம். அன்று திரையுலகினர் குறிப்பாக சத்தியராஜ் அவர்களின் ஆவேசப் பேச்சின் போது ரஜினிகாந்தின் ரியாக்சன் என்ன என்பதையே கேமராக்கள் கூர்ந்து பதிவு செய்தன. இதில் உணர்ச்சிவசப்பட்டவராக ரஜினி தன்பங்குக்கோ, தானும் தமிழன் என்று காட்டுவதற்கோ உணர்ச்சிவசப்பட்டே 'கன்னடர்களை' உதைக்க வேண்டுமா ?' என்று சொல்லிவிட்டார்.
அதன் பிறகு ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று பலமாக நடந்த பெங்களூர் ஆர்பட்டத்தில் உடனடியாக தன் சொன்னவற்றை அவர் மீட்டுக் கொள்ளவில்லை. மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவி 'பர்வதம் அம்மாள், நான் பேசியது ஞாயத்துக்கு புறம்பானது என்று சொன்னால் நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்று அறிக்கை விடுத்தார். பர்வதம்மாள் தரப்பில் இருந்து எந்த பதிலும் பொதுவில் வைக்கப்படவில்லை. ராஜ்குமாரின் குடும்பம் சொல்வதை உன்னிப்பாக கவனித்துவரும் கன்னடர்கள் இதுவிசயத்தில் பர்வதம்மாளுக்கு நெருக்கடி கொடுத்தது போல் தெரியவில்லை. குசேலன் படம் வெளியீடு வரையில் இதுவிசயத்தில் எந்த முடிவும் எடுக்காத நிலையில், கிட்டதட்ட மறந்துவிட்ட நிலையில் இதையே தொழிலாக செய்து கொண்டிருக்கும் வாட்டாள் நாகராஜ் குரூப் இதை மீண்டும் கிளறிவிடவே, தன்னால் யாரும் நஷ்டப்பட வேண்டாம், தான் அவமானப்பட்டாலும் பரவாயில்லை என்று ஆழ்ந்து சிந்தித்தே ரஜினி இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும். வெறும் இரண்டு கோடி பணத்துக்காக என்றால் அவரிடம் இல்லாத பணமா ? என்றே சிந்திக்க வேண்டி இருக்கிறது, அப்படியே 2 கோடி தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்தாலும் அது அவரால் தரக்கூடிய ஒன்றே. முன்பு பாபா நஷ்டத்தின் போது பணத்தைத் திருப்பிக் கொடுத்தார் என்ற செய்திகள் வந்தது. பணத்துக்காக தன்மானத்தை அடகுவைத்தார் என்று சொல்வது டூ மச் என்றே நினைக்கிறேன். பெங்களூரூவில் குசேலன் படமே வெளியிடவேண்டாம், நான் பணத்தைத் தருகிறேன் என்று சொல்லி இருந்தால், அடுத்த மற்ற தமிழ்படங்களையும் ஓடவிடாமல் செய்திருப்பார்கள், இது குசேலன் படத்துடன் முடிவடைகிற ஒன்றே அல்ல என்று கருதி இருப்பார் என்றே நினைக்கிறேன்.
ஆரம்பத்தில் 2 கோடி ரூபாய்க்கு ரஜினிகாந்த் இந்த முடிவெடுத்துவிட்டாரோ என்று நானும் தவறாகவே நினைத்தேன். ரஜினிகாந்த் ஹிட்டான ஒரு நடிகர், அவரது படம் மக்களுக்கு பிடித்து இருக்கிறது. அவரை ஒட்டுமொத்த தமிழரின் பிரதிநிதியாக நான் நினைக்கவில்லை. அவர் மன்னிப்புக் கேட்டது தமிழன் ஒவ்வொருவருக்கும் அவமானம் என்றெல்லாம் நான் கருதவில்லை. அவர் அரசியல்வாதியோ, பொதுமக்களால் முன்மொழியப்படுபவரோ அல்ல. தீவிர ரசிகர்களும், செய்தித்தாள்களும் தாங்கிப்பிடிக்கின்றன அவ்வளவு தான். பின்பு ஏன் அவருடைய தனிப்பட்ட முடிவை தமிழர்களின் மானப்பிரச்சனையாக்க வேண்டும் ? தமிழனின் மானம் ஒரு நடிகனின் கையில் இருப்பதாக நினைப்பவர்களைப் பார்த்து உண்மையில் எவ்வளவு பலவீனமானவர்கள் என்றே பரிதாபப்படவேண்டி இருக்கிறது. கலைஞர் கருணாநிதியும் சரி, ஜெயலலிதாவும் சரி, இதுவிசயத்தில் வாய்திறக்கமல் இருப்பதற்கு அது ரஜினியின் தனிப்பட்ட முடிவு என்று தெளிவாக அறிந்து இருக்கிறார்கள். அன்று அவர் 'கன்னடர்களை உதைக்க வேண்டாமா ?' என்று கூறியதும் அவரது தனிப்பட்ட உணர்வே, சென்ற நாளில் 'வருத்தம் தெரிவித்ததும்' அவரது தனிப்பட்ட முடிவே.
பொதுவாக ஆணிய சமூக மனப்பான்மையால், ஒரு பெண் திருமணம் செய்துகொண்டு கணவர் வீட்டுக்கு வந்துவிட்டால், அவளுடைய பெற்றோருக்கு ஆதரவாக எதுவும் பேசிவிடக் கூடாது என்பது போலவே தான், கர்நாடகத்தில் பிறந்த ரஜினிகாந்த் தமிழ்நாட்டுமக்களால் போற்றப்படுவதால் கன்னடர்கள் மீது அன்பு வைக்கக் கூடாது என்று சொல்வதும். தமிழர்களான நாம் மட்டும் எந்த நாட்டுக்குச் சென்றாலும் தமிழன் என்ற உணர்வை மறந்துவிடக் கூடாது என்று வாய்கிழிய பேசுகிறோம். அதே உணர்வு மற்றவர்களுக்கும் இருக்கும் அல்லவா, அதுதானே இயல்பு. ரஜினி தான் ஒரு கன்னடர் என்ற முறையில் கன்னடமக்களிடம் வருத்தம் தெரிவித்ததில் என்ன தப்பு இருக்கிறது ? நான் வன்முறையாளர்களுக்கு எதிராகத்தான் பேசினேன், என்று விளக்கிவிட்டாரே, அவர்களிடமும் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று சொல்லவில்லையே.
தமிழன் தமிழனாகவே வாழவேண்டும், சாகவேண்டும் என்று நினைப்பது போலவே அந்தந்த மொழியை தாய்மொழியாக உடையவர்கள் நினைப்பார்கள், அப்படி நினைப்பதால் வாழும் நாட்டை அவமதிக்கிறோம் என்று பொருளல்ல, பழசை மறக்காத நற்பண்பு ஈரமாக ஒரு ஓரத்தில் இருக்கிறது என்றே பொருள். இதில் நமக்கொரு ஞாயம், ரஜினிக்கு ஒரு ஞாயமா ? கிரியின் தலைப்பு :)
நல்லவிசயம் குறித்து நாம என்னிக்கும் தெளிவான முடிவு எடுக்கனும், பலர் எதிர்த்தாலும் அதில் உறுதியோடு நிற்கனும்னு நினைப்பது தன்னம்பிக்கை, பலரால் எதிர்க்கப்படும் தவறான ஒன்றை, சொல்லிவிட்டோம் என்று மாற்றிக் கொள்ளாமல் நாம் உறுதியாக இருந்தால் அதன் பெயர் பிடிவாதம். இரண்டையும் பலர் ஒன்றாகவே நினைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள்.
வாழும் நாட்டைப் எப்போதும் போற்றுங்க... வாழ்ந்த நாட்டை ஒருபோதும் மறந்திடாதிங்க ! - இதை ரஜினி சொல்லவில்லை. நான் சொல்றேன் ! :))))))))))))
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
52 கருத்துகள்:
நான் தான் முதல்ல...
//பொதுவாக ஆணிய சமூக மனப்பான்மையால், ஒரு பெண் திருமணம் செய்துகொண்டு கணவர் வீட்டுக்கு வந்துவிட்டால், அவளுடைய பெற்றோருக்கு ஆதரவாக எதுவும் பேசிவிடக் கூடாது என்பது போலவே தான்.//
நல்ல ஒப்புமை. ஆனால் இங்கு ரஜினியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாம் அந்த அடிப்படையில் எழுந்தது அல்ல என்பதே என் கருத்து. ரஜினியின் மீது எழும் எதிர்ப்புகளை நாம் இருவகையாக பிரிக்கலாம்.
1) அவரை எப்போதும் வெறுப்பவர்கள் , இந்த சந்தர்பத்தில் தங்கள் சினத்தை வகையாக காண்பிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டதால் அதை பயன்படுத்திக்கொள்பவர்கள்.
2) அவரை மிகவும் நேசிப்பவர்கள், தங்களால் நேசிக்கப்படும் ஒருவர் இப்படி நடந்துகொண்டாரே என்பதால் அந்த நிமிடத்தில் ஏற்பட்ட சினத்தினால் செயல்படுபவர்கள்.
நீங்கள் கூட இந்த நிகழ்வுகள் நடந்து இத்தனை நாட்களுக்குப்பிறகாவது இப்படி ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கின்றீர்கள். ஆனால் ரஜினியின் இன்றைய நிலைப்பாட்டிற்கு அதுதான் காரணமென்றால் அதை அவர் விளக்கமாக சொல்லியிருக்கலாமே? இன்னும் விளக்கம் என்ற பெயரில் குழப்பிக்கொண்டேதானே இருக்கின்றார்?
//வாழும் நாட்டைப் எப்போதும் போற்றுங்க... வாழ்ந்த நாட்டை ஒருபோதும் மறந்திடாதிங்க //
அதாவது நாம சிங்கப்பூர்ல எப்படி இருக்கோமோ அதேமாதிரி ரஜினி இருக்கனும்னு சொல்றீங்க, சரிதானே?
நல்ல பதிவு (அல்லது)
மீ த ஃபர்ஸ்ட்!
நீங்கள் சொன்ன கருத்துக்கள் நடுநிலமை போல தோன்றினாலும் ,ரஜினிக்கும் மற்றவர்களிக்கும் உள்ள வேறுபாட்டை மறந்து அல்லது மறைத்து பேசுவதாக படுகிறது ..ஒப்புக்கொள்ள முடியவில்லை .
பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய
விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.
உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்
ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்
இறுதி வெற்றி நமதே
மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.
இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
தங்களின் கருத்து ரஜினிக்கு ஆதரவாகவே உள்ளது. நிங்கள் சொல்லுவது சரி என்றே இருந்தாலும், படத்திற்கு படம் நான் தமிழன், தமிழன் என்று சொல்லுவது எதனால். மொழி பற்று இருந்தால் அவர் நான் கன்னடம் என்று அல்லவா சொல்ல வேண்டும். ஏன் சொல்ல வில்லை??? கன்னடர்கள் அனைவரும் புத்திசாலிகள் என்று ரஜினிக்கு தெரியும்.
சரி, ஒக்கனேக்கல் பிரச்சினையில் ரஜினியின் நிலை என்ன??? தயவு செய்து எனக்கு தெளிவு படுத்துங்கள்?
இது ரஜினியின் தனிபட்ட கருத்தா??? அதை அவர் தனியாக அல்லவா சொல்ல வேண்டும். தமிழரின் சார்பில் நடந்த மேடையில் ஏன் சொல்ல வேண்டும்? சரி, நீங்கள் தமிழர் தானா?
மீ த ஃபர்ஸ்ட்டேய்ய்ய்ய்!
இந்தப் பதிவிற்கு மீத ஃபர்ஸ்ட் போட்டதன் மூலம், நான் சிங்கைப் பதிவர் கூட்டத்தில் டெலி கான்ஃபரன்ஸ் மூலம் கலந்து கொண்டது உறுதியாகிறது.
கோவி. கண்ணன் ஜி.. ஒரு கேள்வி:-
நீங்க நல்லவ்ரா, கெட்டவரா?
இந்தப் பதிவை பெரியகிரி ரஜினிக்கு... ச்சே., சின்னரஜினி கிரிக்கு சமர்ப்பணம் செய்திருக்கலாம்!
//பொதுவாக ஆணிய சமூக மனப்பான்மையால், ஒரு பெண் திருமணம் செய்துகொண்டு கணவர் வீட்டுக்கு வந்துவிட்டால், அவளுடைய பெற்றோருக்கு ஆதரவாக எதுவும் பேசிவிடக் கூடாது என்பது போலவே தான், கர்நாடகத்தில் பிறந்த ரஜினிகாந்த் தமிழ்நாட்டுமக்களால் போற்றப்படுவதால் கன்னடர்கள் மீது அன்பு வைக்கக் கூடாது என்று சொல்வதும். தமிழர்களான நாம் மட்டும் எந்த நாட்டுக்குச் சென்றாலும் தமிழன் என்ற உணர்வை மறந்துவிடக் கூடாது என்று வாய்கிழிய பேசுகிறோம். அதே உணர்வு மற்றவர்களுக்கும் இருக்கும் அல்லவா, அதுதானே இயல்பு.//
ஒரு ராயல் சல்யூட் உங்களுக்கு!
நேற்று லக்கி போட்ட குண்டு வேலை செய்யுதுன்னு நெனைக்கறேன்!
வாழ்த்துக்கள்!
கோவி கண்ணன் அருமையாக (நியாயமாக) கூறினீர்கள். புரிந்து கொண்டு பேசியதற்கு மிக்க நன்றி.
இந்த பிரச்சனை எப்படி தேவை இல்லாமல் வந்தது என்று கூறுகிறேன், முதலில் படத்தை அங்கு வெளியிட விட மாட்டோம் என்று வாட்டாள் முதல் அனைவரும் கூறியதால் ரஜினி அதற்க்கு வருத்தம் தெரிவித்து கடிதம் அனுப்பினார், அதனால் அனைவரும் (திரை துறையினர்) ஏற்றுக்கொண்டு படத்தை திரையிட அனுமதித்தார்கள் அதனால் அதை நம்பி படம் வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்கள். டிக்கெட் எல்லாம் விநியோகிக்கப்பட்டு விட்டது. பிறகு கடைசி நாளில் வாட்டாள் படத்தை வெளியிட பிரச்சனை செய்ததால் தான் தற்போது இத்தனை பிரச்சனையும். ரஜினியும் பேட்டியின் போது தெளிவாக கூறி இருக்க வேண்டும், அது அவருடைய தவறு..அதனால் சன் தொலைக்காட்சி தனக்கு குசேலன் படம் தராமல் (சிவாஜி யும் கிடைக்கவில்லை) கலைஞர் தொலைக்காட்சிக்கு கொடுத்ததால் இருந்த கடுப்பில் பிளாஷ் செய்தி போட்டு பெரிய பிரச்சனை ஆக்கி விட்டார்கள். இது தான் நடந்தது. பத்திரிகைகளும் தங்கள் பங்குக்கு தங்கள் கடமை! ஆற்றி விட்டார்கள்.
//நல்லவிசயம் குறித்து நாம என்னிக்கும் தெளிவான முடிவு எடுக்கனும், பலர் எதிர்த்தாலும் அதில் உறுதியோடு நிற்கனும்னு நினைப்பது தன்னம்பிக்கை, பலரால் எதிர்க்கப்படும் தவறான ஒன்றை, சொல்லிவிட்டோம் என்று மாற்றிக் கொள்ளாமல் நாம் உறுதியாக இருந்தால் அதன் பெயர் பிடிவாதம்.//
இதை விட தெளிவாக யாரும் கூற முடியாது என்றே நினைக்கிறேன்.
என் மனதில் இருந்ததை கூறி விட்டீர்கள்.
//இதை விட தெளிவாக யாரும் கூற முடியாது என்றே நினைக்கிறேன்.//
ரிப்பீட்டேய்ய்
ஒகேனக்கல் பிரச்சினனையில் குரல் கொடுக்க வேண்டியவர்கள் அரசியல்வாதிகள்.
நடிகர்களை இதில் இழுத்து, அவர்கள் கருத்துக்கு ஒரு மதிப்பு கொடுப்பது மஹா கேவலம்!
இப்போது ரஜினியை எதிர்ப்பவ்ர்கள எல்லாம் என்ன.... ரஜினியின் குரலுக்காக காத்திருப்பவர்களா?்
சூப்பரான அலசல்!!!
ரஜினியோட மன்னிப்பு, குசேலன் அலையெல்லாம் ஓஞ்ச பிறகு, நிதானமா யோசிச்சு பாத்தா, அவரோட stands கொஞ்சம் தெளிவா புரியுது....என்ன, அவர் கொஞ்சம் தெளிவா விளக்கியிருக்கலாம்.......ஆனா ரஜினிகிட்ட இத எதிர்பார்க்க முடியாது...ஏன்னா, எனக்கு தெரிஞ்சு இது வரைக்கும் அவர் தன்னோட நிலைப்பாட்ட எந்த விஷயத்துலயும் பளிச்சுன்னு தெரிவிச்சதில்ல...உணர்ச்சிவசத்துல சொல்ற statements & சினிமா வசனங்கள வச்சி, நாமே assume பண்ணிக்கிறதால, எதிர்பார்ப்புகள் அதிகமாயிடுச்சி.....அதனாலதான் இத்தன களேபரங்களும்...
// பெரும்பாலும் கணவர்களுக்கு இந்நிலைதான். மனைவி சொல்வதைக் கேட்பதா, தன்னுடைய பெற்றோர்களின் மனம் குளிர நடந்து கொள்வதா ஆண்கள் பலரின் வாழ்கையில் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைதான் இருக்கும் //
புட்டு....புட்டு.......வச்சிட்டீங்க!!!!!!!!!
இருதலை எறும்புக்கு இல்லீங்க.
ஒரு கொள்ளியின் இரண்டு தலைப்பக்கத்திலும் எரியும் கொள்ளிதான் இருதலைக் கொள்ளி.
அதுக்கு இடைப்பட்ட பகுதியில் மாட்டிக்கிட்ட ஒரு தலையுடைய எறும்புதான் இருதலைக்கொள்ளி எறும்பு.
விளக்கம் சரிதானே?
//ஜோசப் பால்ராஜ் said...
நல்ல ஒப்புமை. ஆனால் இங்கு ரஜினியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாம் அந்த அடிப்படையில் எழுந்தது அல்ல என்பதே என் கருத்து. ரஜினியின் மீது எழும் எதிர்ப்புகளை நாம் இருவகையாக பிரிக்கலாம்.
1) அவரை எப்போதும் வெறுப்பவர்கள் , இந்த சந்தர்பத்தில் தங்கள் சினத்தை வகையாக காண்பிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டதால் அதை பயன்படுத்திக்கொள்பவர்கள்.
//
ஜோசப்,
ரஜினியை நிலைப்பாட்டையும் அரசியல் வாதியின் நிலைப்பாட்டையும் ஒப்பிடுவது தவறு !
ரஜினி சொல்வது சரி என்று பாராட்டுபவர்களுக்கு மட்டுமே அவர் சொல்வது தவறு என்று கண்டிக்கும் உரிமை இருக்கிறது.
நீங்கள் சொல்வதும் சரிதான், காரணமின்றி ஆதரிப்பவர்களும், காரணமின்றி எதிர்பவர்களும் தான் இது பற்றி நிறைய பேசி இருக்கிறார்கள்.
//அதாவது நாம சிங்கப்பூர்ல எப்படி இருக்கோமோ அதேமாதிரி ரஜினி இருக்கனும்னு சொல்றீங்க, சரிதானே?//
- அதே அதே !!!!
//ஜோ / Joe said...
நீங்கள் சொன்ன கருத்துக்கள் நடுநிலமை போல தோன்றினாலும் ,ரஜினிக்கும் மற்றவர்களிக்கும் உள்ள வேறுபாட்டை மறந்து அல்லது மறைத்து பேசுவதாக படுகிறது ..ஒப்புக்கொள்ள முடியவில்லை .
10:22 AM, August 07, 2008
//
ரஜினி கருத்தை நீங்கள் பெரிதும் மதித்தால், அவரா இப்படி சொன்னார் என்றெல்லாம் எதிர்க்கலாம். :)
நான் ரஜினியின் தீவிர ரசிகன் இல்லை. அவர் படங்கள் பிடிக்கும்
உங்கள் நடுநிலமையில் தெளிவு தெரியவில்லையென்பது, உங்களுக்கும் புரியும் என்பது என் எண்ணம்.. கருத்துச் சொல்ல முடியவில்லை, கண்ணன் சார்...
//Thiravidan said...
தங்களின் கருத்து ரஜினிக்கு ஆதரவாகவே உள்ளது. நிங்கள் சொல்லுவது சரி என்றே இருந்தாலும், படத்திற்கு படம் நான் தமிழன், தமிழன் என்று சொல்லுவது எதனால். மொழி பற்று இருந்தால் அவர் நான் கன்னடம் என்று அல்லவா சொல்ல வேண்டும். ஏன் சொல்ல வில்லை??? கன்னடர்கள் அனைவரும் புத்திசாலிகள் என்று ரஜினிக்கு தெரியும்.
சரி, ஒக்கனேக்கல் பிரச்சினையில் ரஜினியின் நிலை என்ன??? தயவு செய்து எனக்கு தெளிவு படுத்துங்கள்?
இது ரஜினியின் தனிபட்ட கருத்தா??? அதை அவர் தனியாக அல்லவா சொல்ல வேண்டும். தமிழரின் சார்பில் நடந்த மேடையில் ஏன் சொல்ல வேண்டும்? சரி, நீங்கள் தமிழர் தானா?
10:45 AM, August 07, 2008
//
தாய்மொழி பற்று எவராக இருந்தாலும் இருக்கவே செய்யும். பெங்களூர் தமிழர்கள் தமிழர்கள் என்று சொல்லுவார்கள், அதற்க்காக பெங்களூருக்கு எதிராகவும் செயல்படமாட்டார்கள், புலம்பெயர்ந்தவர்கள் அனைவரின் நிலையும் இதுதான்.
அவர் 'தமிழர்களின் சார்பில் கண்டனம் தெரிவிக்கிறேன்' என்று சொல்லிக் கொண்டது போல் தெரியவில்லை. அவர் ஒரு விஐபியாக இருப்பதால் அவரது தனிப்பட்ட கருத்துக்கு முதன்மைத்துவம் கொடுக்கிறார்கள்.
//சரி, ஒக்கனேக்கல் பிரச்சினையில் ரஜினியின் நிலை என்ன??? தயவு செய்து எனக்கு தெளிவு படுத்துங்கள்?//
என்னங்க இது அதுபற்றி முடிவெடுக்க வேண்டிய கலைஞரே வெளிப்படையாக ஒகனேக்கல் பற்றிப் பேசாதபோது ரஜினியின் கருத்து என்ன என்று தெரிந்து கொண்டு என்னச் செய்யப் போகிறோம்.
:)
//பரிசல்காரன் said...
கோவி. கண்ணன் ஜி.. ஒரு கேள்வி:-
நீங்க நல்லவ்ரா, கெட்டவரா?
10:52 AM, August 07, 2008
//
தெரியல, பிடிக்காதவங்க கெட்டவராக பார்பாங்க, பிடிச்சவங்க நல்லவராக பார்ப்பாங்க.
:)
//ஒரு ராயல் சல்யூட் உங்களுக்கு!
நேற்று லக்கி போட்ட குண்டு வேலை செய்யுதுன்னு நெனைக்கறேன்!
வாழ்த்துக்கள்!
10:55 AM, August 07, 2008
//
லக்கி, என்ன குண்டு போட்டார் ?
எனக்கு தெரியாதே, நம்ம குண்டு நண்பரை (டிபிசிடி) இரண்டு அடிப்போட்டாரா ?
//பரிசல்காரன் said...
இந்தப் பதிவை பெரியகிரி ரஜினிக்கு... ச்சே., சின்னரஜினி கிரிக்கு சமர்ப்பணம் செய்திருக்கலாம்!
10:53 AM, August 07, 2008
//
அவரு ஏற்கனவே அவரை வச்சுக் காமடி செய்கிறோம் என்று ரொம்ப பீல் பண்ணுறார். அப்படியும் அவர் பெயரை ஒரு இடத்தில் நுழைத்திருக்கிறேன்.
கோவி,
:-) வித்தியாசமான அலசல்.
// ரஜினியின் மீது எழும் எதிர்ப்புகளை நாம் இருவகையாக பிரிக்கலாம்.
1) அவரை எப்போதும் வெறுப்பவர்கள் , இந்த சந்தர்பத்தில் தங்கள் சினத்தை வகையாக காண்பிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டதால் அதை பயன்படுத்திக்கொள்பவர்கள்.
2) அவரை மிகவும் நேசிப்பவர்கள், தங்களால் நேசிக்கப்படும் ஒருவர் இப்படி நடந்துகொண்டாரே என்பதால் அந்த நிமிடத்தில் ஏற்பட்ட சினத்தினால் செயல்படுபவர்கள்.
//
100% சரி.
//ரஜினி சொல்வது சரி என்று பாராட்டுபவர்களுக்கு மட்டுமே அவர் சொல்வது தவறு என்று கண்டிக்கும் உரிமை இருக்கிறது.//
சரியா சொல்லி இருக்கீங்க..
காலம் கடந்த மன்னிப்பு(மன்னிக்கவும் "வருத்தம்") தெரியப்படுத்தியது தனது படம் வியாபரநொக்கம் என்பது எல்லொரும் புரிந்தும் புரியாது பொல பெசிக்கொள்கின்றனர். இருக்கட்டும் அப்படி அவர் வருத்தம் கேட்டது கன்னட மக்களுக்கா? இல்லை வாட்டாளுக்கா? அப்படி அவர் கேட்காமல் இருந்தால் என்ன நஷ்டப்பட்டுருப்பார்? அப்படி வருத்தம் தெரியப்படுத்தியதின் உள்நோக்கம் என்ன? இவரின் தனிப்பட்ட கருத்தை மக்கள் முன் வைப்பது எதனால்? வாட்டாளிடம் நேரில் சொல்ல வெண்டியது தானே?
http://cdjm.blogspot.com/2008/08/blog-post.html
ரஜினி பற்றிய மனம் திறந்த, மடை திறந்த பதிவு.
அன்புடன்,
ஜோதிபாரதி.
////ரஜினி பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் ஒரு பாவப்பட்ட மனிதர். வாலிபப்பருவத்தில் முடிவெடுப்பதில் எல்லோருக்கும் ஏற்படும் குழப்பம் இவருக்கு இந்த வயதில் ஏற்படுகிறது. தாம் வாழும் இடத்தின் வரலாறு தெரியாத மனிதர். உலக விசயத்தில் அவருக்கு வெறும் பாமரனின் அறிவு மட்டும் தான். வேடிக்கை பார்த்துகொண்டிருந்தவரை இழுத்து வந்து கும்மியின் நடுவே நிற்க வைத்துவிட்டார்கள், பாவம் யார் பெற்ற பிள்ளையோ!. ஒருபுறம் தன் பிராமண வேல்யூக்களை தூக்கி பிடிக்க இவரது பிரபலத்தை சுரண்டும் பார்பன மனைவி, வழிகாட்டுகிறேன் பேர்வழி எனக்கூறிக்கொண்டு அவரை நிரந்தரமாய் குழப்பத்தில் வைக்கும் சில மொட்டை போட்ட பேர்வழிகள், எவர்க்கேனும் அடிமையாய் இல்லாமல் ஒரு நாளையும் ஒட்டமுடியாத, விரட்டினாலும் காலையே சுற்றி சுற்றி வரும் ஒரு பெருங்கூட்டம், ஒன்றுக்கும் உதவாத குப்பை குப்பையாய் அவரது பணம். இப்படிப்பட்ட ஒரு துரதிஷ்டவாதியை ஆளாளுக்கு வெளுப்பது பார்க்க பாவமாயிருக்கிறது. இதெல்லாம் சத்தியராஜுக்கு தெரிந்தாலும் அவரை வேண்டும் என்றே வம்பிழுப்பது "விஷயம் தெரியாவிட்டால் ஓரமாக உட்கார வேண்டியதுதானே, அரைவேக்காட்டுதனமாக அரசியல் செய்து ஏன் இருக்கிறவன் உசிரை ரஜினி வாங்கவேண்டும்" என்ற எண்ணமாக இருக்கலாம்.////
"புகையும் பாறை, சத்யராஜ் : என் கேரட்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே.." -என்ற தலைப்பில் நண்பர் TBCD எழுதிய பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இது. தாம் பேசும் பேச்சின் வீச்சு தெரியாமல் இருக்கும் இவரை எப்படி புரிந்து கொள்வது? வெகுளி என்றா? அறிவிலி என்றா? எப்படி இருந்தாலும் இவர் அதிருஷ்டசாலி தான். இவ்வளவு குழப்பங்களை வேறு பிரபலம் செய்திருந்தால் அவர் கதை கந்தலாகி இருக்கும். தெரிந்தோ தெரியாமலோ தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்றதற்காக மன்னிப்போம்.
சினிமாவாவை விட மானம் தானே முக்கியம் என்று சொல்பவர்களை கேட்கிறேன், மானம் எங்கே போச்சு? ரஜினியின் எதிரிகளுக்கும், சினிமாக்காரரனை ரட்சகனாக பார்ப்பவர்களுக்கும் மானம் போச்சு! தமிழனின் மானத்தை ரஜினிமேல் வைக்காதவர்களுக்கு மானம் இன்னும் அப்படியேதான் இருக்கு. ஒக்கேனக்கல் திட்டமோ, சேது சமுத்திரத்திட்டமோ நிறைவேறாமல் போனால் ஒரு வேளை மானம் போகலாம்!
// படத்திற்கு படம் நான் தமிழன், தமிழன் என்று சொல்லுவது எதனால். //
தமிழ் படத்தில் நடிக்கும் போது தமிழன் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லனுமாம்? நல்ல வேளை ரஜினி படத்தில் நூறு பேரை ஒரே அடியில் வீழ்த்துவதை, நிஜ வாழ்விலும் செய்வாரானு கேட்காம விட்டீங்களே அதுவரைக்கும் சந்தோசம்.
//சரி, ஒக்கனேக்கல் பிரச்சினையில் ரஜினியின் நிலை என்ன??? தயவு செய்து எனக்கு தெளிவு படுத்துங்கள்?//
திராவிடன்,
இதில் என்ன உங்களுக்கு அக்கறை. இந்த கேள்வி நீங்கள் தமிழிநாட்டை ஆளுகின்ற கருணாநிதியைதான் கேட்க வேண்டும். நாட்டை ஆளுகின்ற அவரே கர்நாடக தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு. நடிகர், நடிகள் நடத்தின உண்ணாவிரதம் நடந்த அன்றிறவே, இத்திட்டம் கர்நாடகாவில் புதிய அரசு வரும் நிறுத்திவைக்கிறோம்னு சொன்னப்ப நீங்கள் எல்லோம் எங்கே போயிருந்தீர்கள்.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வேண்டுமானால் அதை ஏன் போய் ஒரு நடிகனிடம் கேட்கிறீர்கள். ரஜினி தமிழகத்திற்கு ஆதரவாக பேசினால் உடனே நமக்கு தண்ணீர் வந்துவிடுமா.
கர்நாடகாவில் புதிய அரசு அமைந்து நாலு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் தமிழக அரசு பேச்சுவார்த்தையை துவங்கவில்லை.
இதை கேட்க நாதியில்லாத நீங்கள் ரஜினியை குறை கூற எந்த தகுதியும் இல்லை.
கர்நாடகாவில் இருந்து ஒருவன் இங்கே வந்து ஒருவன் பணம் பண்ணுகிறான் என்பது தான் உங்களுக்கு பொறுக்கவில்லை.
அதே பெங்களுரில் தமிழர்கள் ஆயிரக்கனக்கான பேர் IT Iindustryயில் பணி புரிகிறார்கள். அவர் சம்பாதிப்பதை முக்கால் வாசி பேர் அங்கே முதலீடு செய்வதில்லை, தமிழ்நாட்டில் தான் வீடு,நிலங்களை வாங்குகிறார்கள். இதையும் தவறு என்கிறீர்களா?
ஒரு நடிகனிடம் போய் அரசியல் தீர்வு கேட்கிறீர்களே வெட்காமயில்லை.
//வாழும் நாட்டைப் எப்போதும் போற்றுங்க... வாழ்ந்த நாட்டை ஒருபோதும் மறந்திடாதிங்க !/
அமீரகத்தை போற்றுவது போல் ஒரு பெரிய போர்வை ஆர்டர் செய்யவேண்டும்.
இந்தியா
இந்தியா
இந்தியா
(மறக்கவில்லை)
இந்த பதிவில் எத்தனை ”கருத்துக்களை” கோவி சொல்லி இருக்கிறார் என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு.
தக்க பரிசு இருக்கிறது.
கன்னட முன்னாள் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் ஒரு தமிழராமே!!!
//கிரி said...
கோவி கண்ணன் அருமையாக (நியாயமாக) கூறினீர்கள். புரிந்து கொண்டு பேசியதற்கு மிக்க நன்றி.
//
கிரி,
ஹிஹி, குசேலன் மோசமான படம் என்பதில் மாற்றுக் கருத்து என்னிடம் இல்லை. ப்ரேமுக்கு பிரேம் ரஜினியின் புகழ்பாடுவதால் படத்தில் ஏழை நண்பனுக்கும் புகழடைந்த நண்பனுக்கானும் இடையில் நடக்கும் கதை என்பதாக இல்லாமல் இயல்பில்லாமல் இருக்கிறது.
// குசும்பன் said...
இந்த பதிவில் எத்தனை ”கருத்துக்களை” கோவி சொல்லி இருக்கிறார் என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு.
தக்க பரிசு இருக்கிறது. //
பரிசு என்னன்னு மொதல்ல சொல்லுங்க...நீங்க பாட்டுக்கு உங்க வைரஸ் DVD குடுத்துட போறீங்க..:-))
\\\\\\\\விஜய் ஆனந்த் said...
சூப்பரான அலசல்!!!
ரஜினியோட மன்னிப்பு, குசேலன் அலையெல்லாம் ஓஞ்ச பிறகு, நிதானமா யோசிச்சு பாத்தா, அவரோட stands கொஞ்சம் தெளிவா புரியுது....என்ன, அவர் கொஞ்சம் தெளிவா விளக்கியிருக்கலாம்.......ஆனா ரஜினிகிட்ட இத எதிர்பார்க்க முடியாது...ஏன்னா, எனக்கு தெரிஞ்சு இது வரைக்கும் அவர் தன்னோட நிலைப்பாட்ட எந்த விஷயத்துலயும் பளிச்சுன்னு தெரிவிச்சதில்ல...உணர்ச்சிவசத்துல சொல்ற statements & சினிமா வசனங்கள வச்சி, நாமே assume பண்ணிக்கிறதால, எதிர்பார்ப்புகள் அதிகமாயிடுச்சி.....அதனாலதான் இத்தன களேபரங்களும்...
11:33 AM, August 07, 2008
விஜய் ஆனந்த் said...
// பெரும்பாலும் கணவர்களுக்கு இந்நிலைதான். மனைவி சொல்வதைக் கேட்பதா, தன்னுடைய பெற்றோர்களின் மனம் குளிர நடந்து கொள்வதா ஆண்கள் பலரின் வாழ்கையில் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைதான் இருக்கும் //
புட்டு....புட்டு.......வச்சிட்டீங்க!!!!!!!!!
////////////
இரண்டு பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ! அவர் தெளிவாக பேசாதவர் என்று அவரே சொல்லிவிட்டார் அப்பறம் நாம சொல்ல என்ன இருக்கு ! மேடையில் வசனம் எழுதிக் கொடுத்து பேச முடியாதே !
:)
//துளசி கோபால் said...
இருதலை எறும்புக்கு இல்லீங்க.
ஒரு கொள்ளியின் இரண்டு தலைப்பக்கத்திலும் எரியும் கொள்ளிதான் இருதலைக் கொள்ளி.
அதுக்கு இடைப்பட்ட பகுதியில் மாட்டிக்கிட்ட ஒரு தலையுடைய எறும்புதான் இருதலைக்கொள்ளி எறும்பு.
விளக்கம் சரிதானே?
//
துளசி அம்மா,
இப்பதான் இதுபோல் விளக்கம் கேள்விபடுகிறேன். பொதுவாக எறும்புகளுக்கு தலைபெரிதாக இருக்கும், அதைத்தான் இருதலைக் கொள்ளி எறும்பு என்று சொல்கிறார்கள் என்று நினைத்தேன்.
//VSK said...
//இதை விட தெளிவாக யாரும் கூற முடியாது என்றே நினைக்கிறேன்.//
ரிப்பீட்டேய்ய்
ஒகேனக்கல் பிரச்சினனையில் குரல் கொடுக்க வேண்டியவர்கள் அரசியல்வாதிகள்.
நடிகர்களை இதில் இழுத்து, அவர்கள் கருத்துக்கு ஒரு மதிப்பு கொடுப்பது மஹா கேவலம்!
இப்போது ரஜினியை எதிர்ப்பவ்ர்கள எல்லாம் என்ன.... ரஜினியின் குரலுக்காக காத்திருப்பவர்களா?்
11:21 AM, August 07, 2008
//
வீஎஸ்கே ஐயா,
சரிதான்,
ரஜினியை இன்று எதிர்ப்பவர்கள், அன்று அவர் ஆவேசமாக பேசிய போது அவரை ஆதரித்தவர்கள் அல்லர். எப்போதும் அவரை எதிர்ப்பவர்களே.
//ஆ.ஞானசேகரன் said...
உங்கள் நடுநிலமையில் தெளிவு தெரியவில்லையென்பது, உங்களுக்கும் புரியும் என்பது என் எண்ணம்.. கருத்துச் சொல்ல முடியவில்லை, கண்ணன் சார்...
12:06 PM, August 07, 2008
//
ஞான்ஸ்,
உங்காந்து யோசித்துப் பார்த்தால் நாம சொல்வதே சிலசமயம் அபத்தம் என்பதாக தெரியும், அறிக்கை கொடுத்து 4 மாதம் யோசித்துவிட்டு முடிவெடுத்து இருக்கிறார். பாராட்டாவிட்டாலும் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது.
//மனதின் ஓசை said...
கோவி,
:-) வித்தியாசமான அலசல்.
//
பாராட்டுக்கு மிக்க நன்றி !
//ஆ.ஞானசேகரன் said...
காலம் கடந்த மன்னிப்பு(மன்னிக்கவும் "வருத்தம்") தெரியப்படுத்தியது தனது படம் வியாபரநொக்கம் என்பது எல்லொரும் புரிந்தும் புரியாது பொல பெசிக்கொள்கின்றனர். இருக்கட்டும் அப்படி அவர் வருத்தம் கேட்டது கன்னட மக்களுக்கா? இல்லை வாட்டாளுக்கா? அப்படி அவர் கேட்காமல் இருந்தால் என்ன நஷ்டப்பட்டுருப்பார்? அப்படி வருத்தம் தெரியப்படுத்தியதின் உள்நோக்கம் என்ன? இவரின் தனிப்பட்ட கருத்தை மக்கள் முன் வைப்பது எதனால்? வாட்டாளிடம் நேரில் சொல்ல வெண்டியது தானே?
//
ஞானசேகரன் சார்,
அவர் எதற்காக எந்த முடிவு எடுத்தாரோ அது அவரது விருப்பம், ரஜினி தமிழனை அவமானப்படுத்திவிட்டார் என்று சொல்வதெல்லாம் டூ மச். அவர் ஒன்றும் மக்கள் பிரதிநிதி அல்ல.
ரஜினி 'கன்னடர்களை உதைக்க வேண்டும்' என்று சொன்ன போது அவர்களது ரசிகர்களைத் தவிர வேறு யாரும் அதைப் பாராட்டிப் பேசவில்லை.
// ஜோ / Joe said...
http://cdjm.blogspot.com/2008/08/blog-post.html
1:17 PM, August 07, 2008
//
ஜோ, உங்க பதிவை படிச்சு பின்னூட்டம் போட்டாச்சு.
ரஜினி விரலைக்காட்டி இவருக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்று சொன்னாலும் வெளிப்படையாக அவரது ரசிகர்களிடம் இன்னாருக்கு போடுங்க என்று சொன்னது கிடையாது. ஒட்டுமொத்தமாக கன்னடர்களை உதைக்கவேண்டும் என்று சொன்னது சரியா ? அவர் சொன்னது சரிதான் என்று எவரும் அவரைப் பாராட்டி எழுதவில்லை. சத்தியராஜைத்தான் புகழ்ந்தார்கள். தனக்கு ஆதரவு கிடைக்காமல் எதிர்தரப்பினடம் எதிர்ப்புக் கிளம்பிய பேச்சை திரும்பப் பெற்றதை தவறு என்று சொல்ல முடியவில்லை.
//ஜோதிபாரதி said...
ரஜினி பற்றிய மனம் திறந்த, மடை திறந்த பதிவு.
அன்புடன்,
ஜோதிபாரதி.
//
ஜோதிபாரதி,
மிக்க நன்றி, எப்போதும் ஒருவர் குற்றவாளியாகவே இருப்பார் என்று நினைத்துக் கொண்டிருப்பதும், அதை அரசியலாக்கிப் பார்ப்பதும் கூட தவறுதான். சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள், மிக்க நன்றி !
//மானம் எங்கே போச்சு? ரஜினியின் எதிரிகளுக்கும், சினிமாக்காரரனை ரட்சகனாக பார்ப்பவர்களுக்கும் மானம் போச்சு! தமிழனின் மானத்தை ரஜினிமேல் வைக்காதவர்களுக்கு மானம் இன்னும் அப்படியேதான் இருக்கு. ஒக்கேனக்கல் திட்டமோ, சேது சமுத்திரத்திட்டமோ நிறைவேறாமல் போனால் ஒரு வேளை மானம் போகலாம்!//
மோகன்,
பதிவின் கருத்தை நாளே வரியில் நச்சென்று சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றி !
//Bleachingpowder said...
// படத்திற்கு படம் நான் தமிழன், தமிழன் என்று சொல்லுவது எதனால். //
தமிழ் படத்தில் நடிக்கும் போது தமிழன் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லனுமாம்? நல்ல வேளை ரஜினி படத்தில் நூறு பேரை ஒரே அடியில் வீழ்த்துவதை, நிஜ வாழ்விலும் செய்வாரானு கேட்காம விட்டீங்களே அதுவரைக்கும் சந்தோசம்.
//சரி, ஒக்கனேக்கல் பிரச்சினையில் ரஜினியின் நிலை என்ன??? தயவு செய்து எனக்கு தெளிவு படுத்துங்கள்?//
திராவிடன்,
இதில் என்ன உங்களுக்கு அக்கறை. இந்த கேள்வி நீங்கள் தமிழிநாட்டை ஆளுகின்ற கருணாநிதியைதான் கேட்க வேண்டும். நாட்டை ஆளுகின்ற அவரே கர்நாடக தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு. நடிகர், நடிகள் நடத்தின உண்ணாவிரதம் நடந்த அன்றிறவே, இத்திட்டம் கர்நாடகாவில் புதிய அரசு வரும் நிறுத்திவைக்கிறோம்னு சொன்னப்ப நீங்கள் எல்லோம் எங்கே போயிருந்தீர்கள்.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வேண்டுமானால் அதை ஏன் போய் ஒரு நடிகனிடம் கேட்கிறீர்கள். ரஜினி தமிழகத்திற்கு ஆதரவாக பேசினால் உடனே நமக்கு தண்ணீர் வந்துவிடுமா.
கர்நாடகாவில் புதிய அரசு அமைந்து நாலு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் தமிழக அரசு பேச்சுவார்த்தையை துவங்கவில்லை.
இதை கேட்க நாதியில்லாத நீங்கள் ரஜினியை குறை கூற எந்த தகுதியும் இல்லை.
கர்நாடகாவில் இருந்து ஒருவன் இங்கே வந்து ஒருவன் பணம் பண்ணுகிறான் என்பது தான் உங்களுக்கு பொறுக்கவில்லை.
அதே பெங்களுரில் தமிழர்கள் ஆயிரக்கனக்கான பேர் IT Iindustryயில் பணி புரிகிறார்கள். அவர் சம்பாதிப்பதை முக்கால் வாசி பேர் அங்கே முதலீடு செய்வதில்லை, தமிழ்நாட்டில் தான் வீடு,நிலங்களை வாங்குகிறார்கள். இதையும் தவறு என்கிறீர்களா?
ஒரு நடிகனிடம் போய் அரசியல் தீர்வு கேட்கிறீர்களே வெட்காமயில்லை.
2:23 PM, August 07, 2008
//
நல்லது, ரஜினியின் மற்ற செயல்பாடுகளையும் விமர்சித்தீர்கள் என்றால் நல்லது. வெறும் நடிகன் என்று அழுத்தமாக சொல்ல முடியுமா உங்களால். ? இல்லையென்றால் கருணாநிதியைத் திட்ட ரஜினி பயன்படுத்திக் கொள்வதாகவே தெரியும். ரஜினி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்று ரசிகர்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும். பிறரை விமர்சனம் செய்யும் உரிமையை எடுத்துக்க்கொள்ளும் ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவரை பிறர் விமர்சிக்கும் போது நாகரீமாக எதிர்கொள்ள வேண்டியதும் தேவையாகிறது, அப்படி இல்லை என்றால் வெறும் தற்காத்தல் என்றே புரிந்து கொள்ளப்படும்.
//குசும்பன் said...
//வாழும் நாட்டைப் எப்போதும் போற்றுங்க... வாழ்ந்த நாட்டை ஒருபோதும் மறந்திடாதிங்க !/
அமீரகத்தை போற்றுவது போல் ஒரு பெரிய போர்வை ஆர்டர் செய்யவேண்டும்.
இந்தியா
இந்தியா
இந்தியா
(மறக்கவில்லை)
3:00 PM, August 07, 2008
//
டேய்..... 'போற்ற' வேற 'போர்த்த வேற...இன்னும் ஹினிமூன் மூடில் தான் இருக்கியா ? திருமணம் ஆகி 4 மாசம் ஆச்சு !
//குசும்பன் said...
இந்த பதிவில் எத்தனை ”கருத்துக்களை” கோவி சொல்லி இருக்கிறார் என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு.
தக்க பரிசு இருக்கிறது.
3:03 PM, August 07, 2008
//
'தக்க' அல்லது எழுத்துப்பிழையுடன் கூடிய 'தக்கை' சரியாக சொல்லுய்யா....ஒன்னும் பிரியல.
:)
//Pisasu said...
கன்னட முன்னாள் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் ஒரு தமிழராமே!!!
3:08 PM, August 07, 2008
//
அப்படித்தான் சொல்கிறார்கள், வாட்டாள் கூட தமிழன் தானாம்.
:)
ரஜினியை தமிழ் ரசிகர்கள் அன்பால் தத்து எடுத்துக் கொண்டது போல !
//விஷயம் தெரியாவிட்டால் ஓரமாக உட்கார வேண்டியதுதானே, அரைவேக்காட்டுதனமாக அரசியல் செய்து ஏன் இருக்கிறவன் உசிரை ரஜினி வாங்கவேண்டும்//
-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)
நான்தான் 50
கோவி.கண்ணன் உங்கள் பல பதிவுகளை ரசித்திருக்கிறேன். ஆனால் இது ஏமாற்றம் தருகிறது
சார் தமிழ்நாட்டில் பல பேர் உங்களை போல் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கண்டுபிடிக்க தெரியாத துர்பாக்கியசாலிகள் சார்.
. நடிகனை நடிகனாய் பார்க்கும் நீங்களே தாங்கமுடியாமல் அவரது சினிமா சம்பந்தமில்லாத தனிப்பட்ட சறுக்கலை வலிந்து வக்காலாத்து வாங்குகிறீர்கள்.
அப்படியானால் அந்த பாமர ரசிகன்??
சக பிற நடிகர்களின் ரசிகர்களால் கேலி செய்யப்படும் அவன்????
எல்லாமே அவன் தவறா??
மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இந்த அளவுக்கு இல்லையே! இப்படி எதிர்பார்ப்புகள் மற்றும் வேதனைகள் அனுபத்ததில்லையே.
இப்போதும் அவன் தான் தவறா?? ஏன்?? யாரால்???
பதில் சொல்லும் முன் - உங்களை போல் நாங்கள் புத்திசாலிகள் இல்லை. எளிதில் உணர்ச்சிவசப்பட்டே(அன்பு காட்டுவது ,கட் அவுட்டுக்கு பால் ஊற்றூவது முதல் அவமானத்தால் தண்ணீயடித்து உளறுவது வரை) எதையும் செய்பவர்கள் என்பதை மனதில் வைத்து சொல்லவும்.
தல, நல்ல பதிவு...
கருத்துரையிடுக