பின்பற்றுபவர்கள்

25 ஆகஸ்ட், 2008

வி.காந்த் தான் - ஜெவுக்கு நோ மோர் சாய்ஸ் !

ஒருவழியாக பாமக பூனை ஆட்டம் காட்டிவிட்டு திமுக பக்கமே பாய்ந்துவிட்டது. ஒரு காரணம் சின்ன ஐயாவின் நடுவன் அமைச்சர் பதவி, இரண்டாவது காரணம் மூன்றாவது அணி அமைக்கத் திட்டமிட்டிருந்த கம்யூனிஸ்ட் தோழர்களின் தடுமாற்றம். தோழர்கள் மூன்றாவது அணி அமைத்தால், ஓட்டு பிரிந்து பிஜேபிக்கு வாய்பாக அமைந்து இந்திய இறையாண்மையான மதச்சார்பின்மைக்கு வேட்டு விழுந்துவிடும் என்று காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளை எச்சரித்ததைத் தொடர்ந்து தேசிய அளவிலான கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாவது அணி அமைப்பு ஏற்படுத்தும் முயற்சியில் பின்வாங்கியதாக அரசியல் செய்திகள் வழி அறியமுடிகிறது.

எப்போதுமே பலமிக்க கூட்டணி எது என்பதில் தான் மருத்துவர் ஐயா கவனம் செலுத்தி முடிவெடுப்பார், அந்த வகையில் நடுவன் காங்கிரஸ் கூட்டணி பலமிக்கதாகவும், அதன் தொடர்பில் இருக்கும் திமுக கூட்டணி தமிழகத்தில் பலம் வாய்ந்ததாக மருத்துவர் ஐயா கருதுகிறார். அதனைத் தொடர்ந்தே திமுக ரயிலிலேயே மீண்டும் பாமக பயணத்தை தொடர இருப்பதாக நினைக்க முடிகிறது.

பாமகவை நிபந்தனையுடன் கூட்டணியில் வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்கலாம் என்று நினைத்த ஜெவுக்கு மீண்டும் கூட்டணிக்கு கட்சிகளை சேர்ப்பதில் தொய்வு, இது முன்பே தெரிந்திருந்தால் 'வி.காந்தின் அரசியல் நுழைவு குறித்து ஜெ 'தமிழக வியாதி' என்றோ, வி.காந்த் அதற்கு பதிலடியாக 'தமிழக பெரும் வியாதி' என்றோ தூற்றிக் கொண்டு இருக்கமாட்டார்கள்.

தற்போதைய சூழலில் நடுவன் அரசின் தேர்தலை நோக்கிய ஜெ தலைமையிலான தமிழக கூட்டணி அமைப்பில் ஏற்பட்ட திட்டமிடலில் ஏற்பட்ட அடிக்கு வி.காந்த் மட்டுமே மருந்து. ஜெ வி.காந்துடன் சேர்ந்து கூட்டணி அமைப்பது தவிர்த்து வேறு வழியில்லை.

அனேகமாக அண்ணன் காடுவெட்டி குரு இந்நேரம் வெளியில் தான் இருப்பார்.

பாமகவை அதிமுக கூடுதல் இடங்களைக் கொடுத்து வளர்த்துவிட்டது போல், இந்த முறை தேமுதிகாவிற்கு அந்த யோகம் கிடைக்கப் போகிறது.

'இனியும் திமுக அரசுவுடன் கூட்டணியா ? இனி திரும்பிக் கூட பார்க்க மாட்டோம்' என்பது தான் அவரின் உச்சகட்ட நகைச்சுவை. தேர்தல் நெருங்க நெருங்க...'இது கொள்கை கூட்டணி அல்ல...தேர்தல் கால கூட்டணி' என்ற அறிவிப்புகளும் வரும். - எழுதி ஒருமாதம் கூட ஆகவில்லை ! :)

8 கருத்துகள்:

விஜய் ஆனந்த் சொன்னது…

ஒண்ணும் சொல்றதுக்கில்ல...எல்லாரும் எப்ப வேணா அணி மாற ரெடியா இருக்காங்க...

கலைஞர் - புரட்சித்தலைவி கூட்டணிதான் பாக்கி...

" அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா!!"

மனதின் ஓசை சொன்னது…

//திமுக பக்கமே பாய்ந்துவிட்டது//

?? தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம்னு தானெ சொல்லி இருக்கார்?

அவங்க ஆதிமுக பக்கம்தான் கடைசியில போவாங்கன்னு நினைக்கிறேன்.. ஜெயாகிட்ட மரியாதை கிடைக்கிறதுக்கு இத வாய்ப்பா பயன்படுத்துவாங்க.. கம்யூனிஸ்ட்டும் ஆதிமுக பக்கம் போயிடும்.

//தோழர்கள் மூன்றாவது அணி அமைத்தால், ஓட்டு பிரிந்து பிஜேபிக்கு வாய்பாக அமைந்து இந்திய இறையாண்மையான மதச்சார்பின்மைக்கு வேட்டு விழுந்துவிடும் என்று காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளை எச்சரித்ததைத் தொடர்ந்து தேசிய அளவிலான கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாவது அணி அமைப்பு ஏற்படுத்தும் முயற்சியில் பின்வாங்கியதாக அரசியல் செய்திகள் வழி அறியமுடிகிறது.//

அப்படியெல்லாம் இருக்காது.. மூணாவது அணி அமைக்க சரியான வாய்ப்பு இல்லாததுதான் காரணம்.. மத்தபடி பாஜாக வந்துடும்கிற பயம் எல்லாம் இல்லை.. காங்கிரசை கவிழ்க்க என்ன வேணாலும் செய்யத்தயார்ங்கிற நிலைதான் கம்யூனிஸ்டுகளுக்கு இப்பொது.

//எப்போதுமே பலமிக்க கூட்டணி எது என்பதில் தான் மருத்துவர் ஐயா கவனம் செலுத்தி முடிவெடுப்பார், //

100% சரி.

மாயவரத்தான் சொன்னது…

Adhu sari.

Vaangayyaannu kaalila vizhadha koraiyaa koopittadhu Karunanidhiyilla?

Unknown சொன்னது…

//திரும்பிக் கூட பார்க்க மாட்டோம்' என்பது தான் அவரின் உச்சகட்ட நகைச்சுவை. தேர்தல் நெருங்க நெருங்க...'இது கொள்கை கூட்டணி அல்ல...தேர்தல் கால கூட்டணி' என்ற அறிவிப்புகளும் வரும்.//

குடும்பத்தினர் பதவிக்காக முச்சந்தியில் வைத்து அடிக்கச் சொன்னவர். பதவிக்காக என்னவெல்லாம் செய்வார் என வேடிக்கை பார்ப்போம்.

அறிவிப்புகள் வளரும்.

narsim சொன்னது…

"கருவாடு மீனாகாது..
கறந்த பால் மடி புகாது"

மயிலுக்கு தோகை
கனக்கிறது என்று குயிலுக்கு
என்ன கவலை??

போன்ற காளிமுத்துவின் வார்த்தைகள் தான் நினைவிற்கு வருகிறது...

அதை விட..கவுண்டரின் "அரசியல்ல இதல்லாம் சகஜம்ப்பா.." தான் மறுபடி மறுபடி நிரூபிக்கப்படுகிறது..

manikandan சொன்னது…

எனக்கு என்னவோ அப்படி தெரியல கோவி சார். தேர்தலுக்கு ஒரு ரெண்டு மாசம் முன்னாடி தான் முடிவு ஆகும்.

கம்யூனிஸ்ட் மூணாவது அணி மட்டும் தான் வழின்னு சொல்ற அளவுக்கு முட்டாள்கள் கிடையாது.

ஆனா எனக்கு என்னவோ தேர்தலுக்கு முன்னாடி ஒரு கட்சியோட கூட்டும், தேர்தலுக்கு பிறகு வேற கூட்டணியும் அமைய வாய்ப்புக்கள் அதிகம். (இந்த முறை)

கிரி சொன்னது…

அரசியல் செ(இ)த்து போய் நீண்ட வருடங்களாகி விட்டது

இதை போல நாம் புலம்புவதை தவிரவும் ஆதங்கப்படுவதை தவிரவும் வேறு வழி இருப்பதாக தோன்றவில்லை.

manikandan சொன்னது…

இன்னிக்கு காங்கிரஸ் தலைமை தேமுதிக கூட அழைப்பு விடுத்து இருக்கின்றனர். அதுனால விஜயகாந்த் கொடுமையும் கலைஞருக்கே போகட்டும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்