பின்பற்றுபவர்கள்

30 ஆகஸ்ட், 2008

இப்படியும் 'நடந்துடுது' !

நாளைக்கு என்னச் செய்யப் போகிறோம் என்று இன்று தெரியாமல் இருக்கும், ஆனால் இன்னிக்கு என்னச் செய்யப் போகிறோம் என்பதே தெரியமல் எதிர்பாராதவைகள் நடந்துவிடும்.

இன்னிக்கு மாலை 1 மணி வரை 8 பதிவரை இன்றே ஒன்றாக பார்க்க முடியும் என்று நினைக்கவில்லை. இவரு அவருக்குச் சொல்லி அவர் இவருக்குச் சொல்லி, 2 நண்பர்களையும் அழைத்துக் கொண்டு 10 பேராக சிங்கை சன்டெக் சிட்டி பகுதியில் அறிவிக்கப்படாத பதிவர் சந்திப்பு நடந்துவிட்டது.

சிங்கையில் அவ்வப்போது கணணி மற்றும் தகவல் தொழில் நுட்ப சிறப்பு விற்பனைக் காட்சியகம் நடக்கும், இந்த வாரம் சன்டெக் சிட்டியில் COMEX 2008 என்ற பெயரில் நடந்தது, நாளை வரை உண்டு, 3 மணிக்கு வருகிறேன் என்று சொல்லி இருந்தாலும், சென்று சேர 4 மணியாகி இருந்தது, ஓவ்வொருவராக வந்து சேர மாலை 5:30 ஆகி இருந்தது. கட்டுக்கடங்காத மக்கள் நெருக்கத்தால் பிதிங்கி வழியும் அந்த கூ(ட்)டத்திலிருந்தே
வெளியே வருவதே சவாலாக இருந்தது....அதன் பிறகு அருகில் மில்லினியாவாக் உணவு அங்காடியில் அமர்ந்து காஃபி குடித்துக் கொண்டே 10 பேரும் அமர்ந்து பேசினோம். திட்டமிட்ட சந்திப்பு இல்லை என்பதால் இது பதிவர் சந்திப்பு என்ற வகையில் வராது.



* ஜெகதீசன் பிட்(டு)க்கு கேமரா சுமந்து, சாய்ந்து சாய்ந்து நின்று நேராக இருந்த கட்டிடங்களை சாய்த்து படமெடுத்தார்

* மழையும் குளிருமாக இருக்கு அதுக்கு இதமாக 2 கப் காஃபி சாப்பிட்டு வீட்டுல கவுந்தடிச்சி தூங்கி இருப்பேன் நான் என்னைய்யா துரோகம் பண்ணினேன் - கடிந்து கொண்டவர் பாரி.அரசு

* துபாய் எப்ப போறிங்க என்று யாராவது இனி கேட்டால் கொலை விழும் - பயமுறுத்தினார் எப்போதும் சாதுவாக இருக்கும் அண்ணன் வடுவூரார்

* பார்டிக்கு நான் ரெடி நீங்க ரெடியா - 15 நாளுக்கு முன் அப்பாவாகி இருக்கும் மகிழ்ச்சியில் விஜய்.ஆனந்த்

* முதலில் வந்து, நன்றாக அலைந்து... பின்பு எல்லோரிடமும் மென்மையாக சிரித்தபடி... கொஞ்சமாக, பேசி காஃபிக்கு ஸ்பான்சர் செய்தவர் - சிவராம் முருகன் (ஜீவன்)

* சின்ன ரஜினி கிரியும் விஜய் ஆனந்தும் முதல் முறை சந்தித்ததால் ரொம்ப சீரியசாக பேசிக்கிட்டாங்க

* ஜோசப்.பால்ராஜ் கூட்டத்தில் நசுங்கினாலும் பராவாயில்லை திரும்ப சன்டெக் சிட்டிக்கு விஜய் ஆனந்துடன் சென்றார்...அவர்கள் இருவரையும் பதிவு போடும் வரை காணும் :(



படத்தில் இருப்பவர்கள் இருவர் தவிர அனைவரையுமே உங்களுக்குத் தெரியும், என் பக்கத்தில் நிற்பவர் சதகத்துல்லா, மீடியா துறையில் பணியாற்றுகிறார். பதிவரல்லாத மற்றொருவர் ஜோசப்.பால்ராஜின் அருகில் இருப்பவர் அவருடைய நண்பர்

இப்படியும் நடந்துடுது ? பதிவர்கள் சந்திப்புதான் !

படங்கள் : அண்ணன் வடுவூர் குமார்

21 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

அடுத்த மீட்டிங்க அந்த ஹோட்டல் மேலேயே வைத்துவிடலாமா?

ஜெகதீசன் சொன்னது…

அடங்குங்கய்யா....

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
அடுத்த மீட்டிங்க அந்த ஹோட்டல் மேலேயே வைத்துவிடலாமா?
//

ஸ்பான்சருக்கு ஆள் பிடிப்போம், கவரேஜுக்கு சதக்கத்துல்லா இருக்கிறார். தொலைகாட்சியில் போட்டுவிடுவார் !

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
அடங்குங்கய்யா....

11:13 PM, August 30, 2008
//

"காலம்" சுழலாமல் இருக்குமா ?

கிரி சொன்னது…

ஆஹா சோனி!!!! நடனத்தை ;-) பார்க்காம போய்ட்டேனே ..அடேய்! கிரி இப்படி ஆகி போச்சே ..சரி மனச தேத்திக்கோ

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

PITல எப்படியாவது ஜெயிக்கனும்கிற வெறியில இருக்க ஜெகு, நின்னுகிட்டே படம் எடுத்தாரு, நடந்துகிட்டே படம் எடுத்தாரு, காபி குடிச்சுகிட்டே படம் எடுத்தாரு, பேசிகிட்டே படம் எடுத்தாரு, பேசாம படம் எடுத்துக்கிட்டே இருந்தாரு, விழுந்து விழுந்து படம் எடுத்தாரு, படுத்துக்கிட்டு படம் எடுக்க பார்த்தாரு ஆனா மழை பெஞ்சு ஈரமா இருந்ததால அத மட்டும் செய்யல. இப்டியெல்லாம் படம் எடுத்து சிங்கப்பூர்ல பிரமாண்ட நிக்கிற மெரினா மாண்டரின் ஹோட்டலையே கோணமாணல ஒரு படம் எடுத்து அதPITக்கு அனுப்பியே தீருவேன்னு நின்னாரு. நல்ல வேளை கிரியும், விஜய் ஆனந்தும் அந்த படத்த அழிச்சு வலையுலகத்த காப்பாத்திட்டாங்க.

விரைவில் துபாய் செல்லவிருக்கும் அண்ணண் வடுவூர் குமார் அவர்களை இன்று சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

ஆனால் இன்று நான் செய்த ஒரு காரியம் நல்லதா கெட்டதா என்ற குழப்பத்திலேயே இன்னும் இருக்கிறேன். அது என்ன என்றால் துபாய்க்கு செல்லும் அண்ணன் வடுவூர் குமார் அவர்களுக்கு குசும்பனின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து ஏதேனும் உதவி வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளச் சொல்லியுள்ளேன். இனி நடப்பவை அனைத்திற்கும் ஆண்டவணும், குசும்பனுமே பொறுப்பு.

பரிசல்காரன் சொன்னது…

அடிக்கடி சந்திச்சு எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறீங்க!

சிங்கை பதிவர்களுக்கு சுத்திப் போடுங்கப்பா!

விஜய் ஆனந்த் சொன்னது…

:-)))...

சூப்பர் ஃபாஸ்ட் பதிவர் கோவியார் வாழ்க வாழ்க!!!

மங்களூர் சிவா சொன்னது…

இன்னைக்கு போட்டிருக்க மாதிரி டவுசர் தீ.வெங்கட் பாக்க போனபோது போட்டு போயிருக்கலாம்ல எதாவது வர்க் அவுட் ஆகியிருக்கும்!?!?

:)))))))))))))

SurveySan சொன்னது…

நான் மில்லீனியா டவர்ல ஒரு வருஷம் குப்ப கொட்டியிருக்கேன். சன்டெக்ல இருக்கர ஃபுட்கோர்ட் 'வாசனை'(??) இப்பவும் ஞாபகம் வருது.

முதல் முதலில் சிங்கையில் கால் எடுத்து வைத்ததும் ஆகஸ்ட் மாசம் தான் (ஆகஸ்ட் 15) :)

டைம் ரன்னிங்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சிறப்பாக நடந்த சிங்கபுர வலைப்பதிவர் சந்திப்பு.
கோவியாரின் ஆடைக்குறைப்பு பலவாறாகப் பேசப்படுகின்றன!
திரைப்பட கதாநாயகன் வாய்ப்பும் தேடிவரலாம்!

துளசி கோபால் சொன்னது…

பதிவர் சந்திப்புன்னு அறிவிப்பு கொடுத்து நடப்பதைவிட, இதில்தான் அதிகம் பேர் கலந்துகிட்டாங்க போல:-)))

வடுவூர்கிட்டே நானும் அந்தக் கேள்வியைக் கேட்டுருந்தேன்.....

நல்லவேளை .... கொலை செய்யணுமுன்னு இவ்வளவு தூரம் வரமாட்டாருதானே? ;-))))

ஜெகதீசன் சொன்னது…

//

* ஜெகதீசன் பிட்(டு)க்கு கேமரா சுமந்து, சாய்ந்து சாய்ந்து நின்று நேராக இருந்த கட்டிடங்களை சாய்த்து படமெடுத்தார்
//

தப்பான தகவல் தராதீங்க!!!

நான் மொபைல் போன் தான் சுமந்தேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
பதிவர் சந்திப்புன்னு அறிவிப்பு கொடுத்து நடப்பதைவிட, இதில்தான் அதிகம் பேர் கலந்துகிட்டாங்க போல:-)))

வடுவூர்கிட்டே நானும் அந்தக் கேள்வியைக் கேட்டுருந்தேன்.....

நல்லவேளை .... கொலை செய்யணுமுன்னு இவ்வளவு தூரம் வரமாட்டாருதானே? ;-))))
//

துளசி அம்மா,

குமார் அப்படியெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு பேசுபவர் அல்ல,

பதிவுவின் சுவைக்காக நானே அள்ளிவிட்டேன்.

குமார் அண்ணன் அதுபற்றிக் கேட்ட போது அவரும் சேர்ந்தே சிரித்தார். செப்டம்பருக்குள் துபாய் சென்றுவிடுவார்.

வடுவூர் குமார் சொன்னது…

துளசி
பதில் தெரியாத கேள்வி என்பதால் சாய்ஸில் விட்டுவிட்டேன்.
:-))

Mahesh சொன்னது…

இப்பிடி திடீர்னு சொல்லாமா கொள்ளாம சந்திச்சுக்கும்போது நம்மளையும் ஆட்டைல சேத்திக்கிட்டு இருக்கலாம். ஜோசஃப் கிட்ட நம்ம நம்பர் இருக்கே.... இருந்தாலும் கூட்ட நெரிசலுக்கு பயந்துக்கிட்டு நான் வெள்ளி மதியமே போய்ட்டு வாங் வேண்டியத வாங்கீட்டு, அப்பறம் வீட்டுக்கு வந்து 'வாங்க வேண்டியதயும்' வாங்கீட்டு.... ஹி ஹி ஹி... அடுத்த முறை கண்டிப்பா கூப்புடுங்க.

இக்பால் சொன்னது…

அடுத்த தடவையாவது கூடும்போது, கொஞ்சம் தகவல் சொல்லுங்கண்ணே. நான் கப்பல் பட்டரையில வேலை செய்யரதனால வாரத்தில ஏழு நாளும் வேல. கடைசியா இருமுறை கூடியபோது நான் சிங்கையில் இல்லாத காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. அடுத்த முறை அவசியம் சொல்லுங்கண்ணே. செல்லிட பேசி : 90058624
email - iqba007@gmail.com

குசும்பன் சொன்னது…

தீபா வெங்கட் வரவில்லையா?

ஆமா அது என்ன அரை டவுசரோட நிக்கிறீங்க மனசுல யூத்துன்னு நினைப்போ!!!

குசும்பன் சொன்னது…

ஜோசப் பால்ராஜ் said...
//துபாய்க்கு செல்லும் அண்ணன் வடுவூர் குமார் அவர்களுக்கு குசும்பனின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து ஏதேனும் உதவி வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளச் சொல்லியுள்ளேன். //

பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே இந்த பாவியை இரட்சியும். ஆமென்.

குசும்பன் சொன்னது…

//துபாய் எப்ப போறிங்க என்று யாராவது இனி கேட்டால் கொலை விழும்//

எக்யுஸ்மீ அவரிடம் இதே கேள்வியை ஒரு முறை கேட்டு இருக்கலாமே:))

Sivaram சொன்னது…

நாளொரு சந்திப்பும், பொழுதொரு பதிவுமாக, காலத்தை ஓட்டும் சிங்கை பதிவர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது..( பின்னே, பொழுது போல ன்றதை, எப்படி சொல்வதாம் ?)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்