பின்பற்றுபவர்கள்

27 ஆகஸ்ட், 2008

ஆவி மதனும் - மூக்கறுப்பும் !

ஆவியில் மதன் பதில்களை படித்துக் கொண்டு இருந்தேன்... அதில் ஒரு கேள்வி,

இன்று 'மூக்கறுப்பு' (Nose Cut) என்று சொல்வது ராமாயணத்தில் லட்சுமணனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகைக் காலத்திலிருந்து வந்திருக்கலாமோ? - வீ.சுந்தரமகாலிங்கம், மம்சாபுரம்.

பண்டைய இந்தியாவில் 'மூக்கறுப்பு' என்பது திருடர்கள் மற்றும் சமூக விரோதிகளுக்கு ஒரு தண்டனையாகவே வழங்கப்பட்டது. அப்போது (திருத்தி) எழுதப்பட்ட ராமாயணத்தில், அந்தத் தண்டனையை சூர்ப்பனகைக்கு லட்சுமணன் வழங்கியதாக ஓர் ஐடியா சேர்க்கப்பட்டு இருக்கலாம். சூர்ப்பனகையின் மூக்கு நிஜமாகவே அறுக்கப்பட்டதா என்பதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது!

*******
சூர்பனகைக்கு உண்மையிலேயே முக்கை அறுத்தார்களா என்று வாசகர் கேட்கவில்லை, இராமயணத்தில் உள்ள ஒரு நிகழ்வை ஒட்டியே கேள்வி எழுப்பினார். அது ஒரு எளிய கேள்வி, அதற்கு பதிலாக அதைத் தொடர்பு படுத்தும் ஆதாரம் எதுவும் இருப்பது போல் தெரியவில்லை என்று சொல்லி இருக்கலாம், ஆனால் மதன் வழக்கம் போல் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா தகவலாக ... சூர்பனகை மூக்கறுக்கப்பட்டதற்கே ஆதாரம் எதுவும் இல்லை என்கிறார்.

இராமயண நிகழ்வுகள் மற்றதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா ? குறிப்பாக இராமன் என்கிற அவதார புருசன் உண்மையிலேயே இருந்தான் என்பதற்கு எதுவும் ஆதாரம் இருக்கிறதா ? வால்மிகி எழுதிய ஒரு காவியம் என்பதைத் தவிர்த்து இராமயண காலத்தின் தடயம் என்று நாசா புகைப்படத்தை வைத்து திரிக்கப்பட்ட மணல் திட்டு தான் இராமர் பாலம் தான் என்று நம்புவதற்கு எதேனும் ஆதாரம் இருக்கிறதா ?

மதன் சூர்பனகை மூக்கறுக்கப்பட்ட நிகழ்வின் ஆதாரம் பற்றி பேசி அது நம்பதகுந்தது அல்ல என்று ஐயம் கிளப்ப முயல்வது ஏன் ? என்னதான் கொடுமைக்காரியாக இருந்தாலும், தானே விரும்பி தன் காதலை தெரிவித்த ஒரு பெண்ணை மூக்கறுத்த செயல் அவ்வளவு உயர்வான செயலே அல்ல, அதுவும் அவதாரமாக சித்தரிக்கப்படும் இராமனின் தம்பியின் அந்த செயல் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல, அந்த செயல் இலக்குவனின் புனித தன்மைக்கு பங்கம் என்பதால் மதன் மறுக்கிறார் போலும்.

மூக்கறுத்த நிகழ்வு உண்மையா ?

அந்த கதையைப் பொறுத்து, தனது தங்கையான சூர்பனகை மூக்கறுக்கப்பட்டு அவமானப்படுத்தப் பட்டதால் தான் இராவணன் சினந்து சீதையைத் தூக்கிச் சென்றான். இராமயணத்தின் திருப்பு முனையே மூக்கறுப்பு நிகழ்வுதான், அதன் பிறகு இராவணனின் சூழ்சியாக, மாரீசன் மாயமானக வந்து சீதையின் கண்ணில் பட அதனை பிடித்துத்தரச் சொல்லுவாள், இராமன் இலக்குவன் மானைத் தேடிச் செல்ல தனித்திருக்கும் சீதையை தூக்கிச் செல்வான் ( கம்ப இராமயணத்தில் சீதைக்கு மேலும் புனிதம் கற்பித்து தொடாமல் தரையோடு பெயர்த்துச் செல்வதாக சொல்லப்படுகிறது)

அறிவு ஜீவியான மதன் மூக்கறுப்பு பற்றி சொல்லும் போது ஆதாரம் இல்லை என்கிறவர், மதன் வரலாற்று(வரலாற்றைக் கட்டமைக்கும் கதை) ஆசிரியர் என்ற முறையில், இராமனும்,இராமர் பாலமும் இருந்ததற்கு ஆதாரம் இல்லை என்று வெளிப்படையாக எழுதுவாரா ? அல்லது அவை இருந்ததற்கான நம்பந்தகுந்த ஆதாரம் காட்டுவாரா ?

21 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

நோ கமெண்ட்ஸ்

SurveySan சொன்னது…

////என்னதான் கொடுமைக்காரியாக இருந்தாலும், தானே விரும்பி தன் காதலை தெரிவித்த ஒரு பெண்ணை மூக்கறுத்த செயல் அவ்வளவு உயர்வான செயலே அல்ல//


ஹி ஹி. எனக்குத் தெரிஞ்ச ராமானந்த சாகர் ராமாயணத்துல, சூர்ப்பனகை, சீதையை ஒதைக்க வருவாங்க, அப்பதான் லட்சுமணன் டென்ஷன்ல, மூக்கறுப்பாரு.

அவங்க சீதையை வெட்ட வரும்போது, லட்சுமணன் என்ன பூப்பறிக்கவா முடியும்? :)

வெட்டப்பட்ட மூக்கு கீழே விழுந்த இடத்தில், இன்னிக்கு மூக்கு ஷேப்ல ஒரு மலை இருக்கே. பாத்ததில்லையா நீங்க? அத்த விட என்ன பெரிய ஆதாரம் வேணும் உங்களுக்கு?

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...

ஹி ஹி. எனக்குத் தெரிஞ்ச ராமானந்த சாகர் ராமாயணத்துல, சூர்ப்பனகை, சீதையை ஒதைக்க வருவாங்க, அப்பதான் லட்சுமணன் டென்ஷன்ல, மூக்கறுப்பாரு.

அவங்க சீதையை வெட்ட வரும்போது, லட்சுமணன் என்ன பூப்பறிக்கவா முடியும்? :)

வெட்டப்பட்ட மூக்கு கீழே விழுந்த இடத்தில், இன்னிக்கு மூக்கு ஷேப்ல ஒரு மலை இருக்கே. பாத்ததில்லையா நீங்க? அத்த விட என்ன பெரிய ஆதாரம் வேணும் உங்களுக்கு?

11:47 AM, August 27, 2008
//

SurveySan அண்ணாச்சி,

அப்போ பெண்கள் சண்டையில் தலையிட்டு மூக்கை அறுத்தது சரிதான் என்கிறீர்களா ?

அந்த மலை ஆதாரத்தை (எம்மாம் பெரிய மூக்கு) அதை மதனுக்கு மின் அஞ்சல் அனுப்பி தெரிவியுங்கள். அடுத்து யாராவது இராமயணம் உண்மையா என்ற கேள்வி எழுப்பினல அந்த மூக்கை அதில் நுழைத்து பதில் சொல்லுவார்.

:)

கிரி சொன்னது…

கோவி கண்ணன் நீங்க கோபம் ஆகி அவர் மூக்கை அறுத்து விடுவீங்க போல இருக்கே ஹி ஹி ஹி

ஆமா எப்படிங்க இத்தனை பதிவு போடுறீங்க.. தலை சுத்துது எனக்கு ....

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் மூக்கு விஷயம் பற்றி இல்ல உங்க பதிவு விஷயம் :-))))

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
கோவி கண்ணன் நீங்க கோபம் ஆகி அவர் மூக்கை அறுத்து விடுவீங்க போல இருக்கே ஹி ஹி ஹி //

நான் அவர் மூக்கை அறுக்கலை, அவரே அறுத்துக் கொண்டுள்ளார் !
:)

//ஆமா எப்படிங்க இத்தனை பதிவு போடுறீங்க.. தலை சுத்துது எனக்கு ....//

முதலில் பகுத்தறிவை ஓரம் வைத்துவிட்டு கண்திருஷ்டி சுற்றிப் போட்டுவிடச் சொல்லப் போறேன் !

:)

//எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் மூக்கு விஷயம் பற்றி இல்ல உங்க பதிவு விஷயம் :-))))

11:52 AM, August 27, 2008
//

அடுத்த மாதத்திலிருந்து ஆலம் விழுது அளவுக்க்கு பெரிய பெரிய ஆணிகள் இருக்கு, பிறகு எழுத முடியுமா என்பதே ஐயம் தான்.

பெயரில்லா சொன்னது…

கோவி,

என்ன இப்படி கோவிச்சுக்கிறீங்க. மதன் பதில்கள், அவர் விகடினிலிருந்து வெளியேறியபின் வீர்யம் இழந்து விட்டன என்பது உண்மை.

பட்டுக்கோட்டைக்கு வழி எது என்றால், கொட்டைப் பாக்கு துட்டுக்கு மூன்று ரகப் பதில்கள்தான் இப்போது வருகின்றது.

இதைப் போய் சீரியஸாக எடுக்காதீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
கோவி,

என்ன இப்படி கோவிச்சுக்கிறீங்க. மதன் பதில்கள், அவர் விகடினிலிருந்து வெளியேறியபின் வீர்யம் இழந்து விட்டன என்பது உண்மை.

பட்டுக்கோட்டைக்கு வழி எது என்றால், கொட்டைப் பாக்கு துட்டுக்கு மூன்று ரகப் பதில்கள்தான் இப்போது வருகின்றது.

இதைப் போய் சீரியஸாக எடுக்காதீர்கள்.

11:56 AM, August 27, 2008

//

வேலன் அண்ணாச்சி (நேற்று கதம்பம் படித்ததிலிருந்து இனிமே அண்ணாச்சி தான்),

வெகு மக்கள் ஊடகத்தில் மதன் பதில்கள் வருகிறது. அதை மதிக்க வேண்டாம் என்கிறீர்களா ?

மதன் அறிவு சீவி என்கிறார்கள், தமிழனுக்கு வரலாறே இல்லை என்று சொல்கிறவர், அவ்வளவு தெளிவாக இந்திய வரலாற்றை காலைக் காப்பியில் கலந்து குடித்தவர், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் மூக்கறுப்புக்கு ஆதாரம் இல்லை என்கிறார் என்பது புரியவில்லை.

குசும்பன் சொன்னது…

ஆமாம் அந்த மலை இருக்கு அதன் ஓட்டை வழியாகதான் இருவழி இரயில் பாதையில் இரயில் ஜிகுபுகு ஜிகுபுகு என்று போகிறது!

SurveySan சொன்னது…

காசா பணமா,

இதோ சூர்ப்ஸின் மூக்கு, மலையாகி இன்று நமக்கு ஆதாரமாய்

குசும்பன் சொல்ற ரயில் கூட அங்க விடறாங்க போல. :)

http://flickr.com/photos/79859657@N00/57533743

SurveySan சொன்னது…

actually, this fits the bill, much better.

நான் நேர்ல பாத்த சாட்சி! :)

http://www.flickr.com/photos/surveysan/2643970632/

முகவை மைந்தன் சொன்னது…

@சர்வேசன்
என்னங்க, கீழ விழுந்த மூக்கு தான் மலை, அது ஒரு ஆதாரம்ன்னுகிட்டு. ஒருவேளை கலாய்க்கிறீங்களோ?

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜெகதீசன் said...
நோ கமெண்ட்ஸ்

11:35 AM, August 27, 2008
//
நோ கமெண்ட்ஸ் என்றால் எதுவும் எழுதி இருக்கக் கூடாது ! :)

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
ஆமாம் அந்த மலை இருக்கு அதன் ஓட்டை வழியாகதான் இருவழி இரயில் பாதையில் இரயில் ஜிகுபுகு ஜிகுபுகு என்று போகிறது!

1:37 PM, August 27, 2008
//

குசும்பன்,
மும்பைக்கு பூனேவுக்கும் இடையில் இருக்கும் அந்த மலையா ?

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
காசா பணமா,

இதோ சூர்ப்ஸின் மூக்கு, மலையாகி இன்று நமக்கு ஆதாரமாய்

குசும்பன் சொல்ற ரயில் கூட அங்க விடறாங்க போல. :)

http://flickr.com/photos/79859657@N00/57533743
//

சுட்டி(த்தனத்துக்கு) நன்றி ! அதைப் பார்த்தேன் படம் மூக்கு மாதிரி இல்லை, முதுகு மாதிரி இருக்கு !

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
actually, this fits the bill, much better.

நான் நேர்ல பாத்த சாட்சி! :)

http://www.flickr.com/photos/surveysan/2643970632/

2:07 PM, August 27, 2008
//

SurveySan, இந்த சுட்டியில் லாடு லபக்கு தாஸ் இருக்காரா ? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//முகவை மைந்தன் said...
@சர்வேசன்
என்னங்க, கீழ விழுந்த மூக்கு தான் மலை, அது ஒரு ஆதாரம்ன்னுகிட்டு. ஒருவேளை கலாய்க்கிறீங்களோ?

4:42 PM, August 27, 2008
//

முகவை மைந்தன்,
பக்கத்துல எதும் ஆறு ஓடினால் அதுதான் சூர்பனகையின் நாக்கு !

:)

Thamira சொன்னது…

கிரி ://ஆமா எப்படிங்க இத்தனை பதிவு போடுறீங்க.. தலை சுத்துது எனக்கு ....// ரிப்பீட்டேய்.. எனக்கு ஒண்ணு எழுதுவற்கே நாக்கு தள்ளிவிடுகிறது, விரல் வீங்கிவிடுகிறது.

ஸயீத் சொன்னது…

//பக்கத்துல எதும் ஆறு ஓடினால் அதுதான் சூர்பனகையின் நாக்கு !//

இங்கு ஏதோ சொற்குற்றம் அல்லது பொருட்குற்றம் உளதாக நான் அறிகிறேனே ஐயா. :))

பாபு சொன்னது…

அந்த ஆள் ஏதோ உலக மகா புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு அவரிடம் கேள்வி கேட்கிறார்கள்.அவரும் தனக்கு தெரிந்தது ,தெரியாதது என்று எல்லா துறைகளையும் பற்றி ஏடாகூடமாக பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

:)

//படம் மூக்கு மாதிரி இல்லை, முதுகு மாதிரி இருக்கு !//

அட வெட்டுப்பட்ட மூக்கைக் கீழே குனிஞ்சி தேட மாட்டாங்களா அண்ணா? அதான் முதுகு மாதிரி தெரியிது :))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//ஹி ஹி. எனக்குத் தெரிஞ்ச ராமானந்த சாகர் ராமாயணத்துல, சூர்ப்பனகை, சீதையை ஒதைக்க வருவாங்க, அப்பதான் லட்சுமணன் டென்ஷன்ல, மூக்கறுப்பாரு.

அவங்க சீதையை வெட்ட வரும்போது, லட்சுமணன் என்ன பூப்பறிக்கவா முடியும்? :)//

ஹா ஹா ஹா
சர்வேசன் அண்ணாச்சி,
ராமானந்த் சாகர் மட்டுமல்ல, வால்மீகி சாகர், துளசி சாகர், கவிச்சக்கரவர்த்தி கம்ப சாகர் கூட அப்படித் தான் சொல்வாரு! :)

சீதையை ஒரு கட்டத்தில் கொல்லவே வருவாங்க சூர்ப்பஸ்!

காதல் எல்லாம் இல்ல!
இராமனைப் பாத்து சைட் அடிச்சிட்டு, தேறாத கேஸ்-ன்னு அடுத்த நிமிடமே இலக்குவன் மேல் பாய்வதற்குப் பேரு தான் காதலா? :)

இதைச் சூர்ப்பஸே காதல் இல்லைன்னு சொல்லிருவாங்க! நீங்க வேற தனியா எதுக்குண்ணா? பாவம்! :)

கோவி அண்ணா,
இப்போ நீங்க முன்ன மாதிரி இல்ல! மூத்த பதிவர்! (மு இல்ல, மூ)
பொறுப்பா, தரவெல்லாம் படிச்சிட்டுத் தான் எழுதணும்!

தரவெல்லாம் இனி பின்னூட்டத்தில் கொடுக்கப்பட மாட்டாது! உங்க பதிவில் இருந்து தான் எடுக்கப்படும்! :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்