பின்பற்றுபவர்கள்

15 ஆகஸ்ட், 2008

இந்தியாவின் 61 ஆவது சுதந்திர நாள் ! (என்னுடைய 2 காசு)

'கண்ணீரையும் செந்நீரையும் கொட்டி பெற்ற சுதந்திரம்...!' என்று வீரவசனமெல்லாம் எழுதப் போவதில்லை. பயப்படாமல் படிங்க :)

ஆளும்வர்கம் ஆங்கிலேயர்களை விரட்டிவிட்டு மீண்டும் அடித்தட்டு மக்களை அடிமையாக்கிக் கொண்ட நாளே சுதந்திர தினம் என்கிறார்கள். சுதந்திர நாளை பெரியார் புறக்கணித்ததற்கு அடிப்படைக் காரணமும் இதுவேதான். வெள்ளைக்காரன் வந்திருக்காவிட்டால் ஒருங்கிணைந்த இந்தியா என்ற நிலையை அடைவதற்கான பல்வேறு மாநிலங்களின் இணைப்பு நிகழ்ந்திருக்காது. அதற்காக வெள்ளைக்காரர்களுக்குத் தான் முதலில் நன்றி சொல்லவேண்டும்.

சுதந்திரம் பெற்ற அடுத்த ஆண்டே 90 வயதைத் தாண்டிய முதியவர் மகாத்மாகாந்தி கொடுரமாக கொலை செய்யப்பட்டார். ஆங்கிலேயர் நினைத்திருந்தால் அவரை கொலை செய்வது கடினமான வேலையாக இருந்திருக்காது. அவர்கள் கூட காந்தியின் உயிருக்கு பாதுகாப்பு அளித்து அவரது போராட்டத்தை ஏற்கமுடியாவிட்டாலும் புரிந்து கொள்ளக் கூடியவர்களாகவே இருந்தனர். சுதந்திர இந்தியாவின் முதல் ஆண்டிலேயே காந்தியின் உயிர் சுதந்திரமாக பறிக்கப்பட்டது. மதவாதம் எவ்வளவு கொடியது என்று அந்நிகழ்வு புரியவைத்ததால் இன்னும் இந்தியாவில் மதவாதத்தை எதிர்க்கும் நல்லோர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் காந்தியைக் கொன்ற கொடியவனை இந்திய மக்களுக்கு நல்லவனாக்கிக் காட்ட முடியுமா என்ற நாடகங்களும் சுதந்திரமாகவே நடந்தேறிவருகிறது.

அண்மையில் தீண்டாமை சுவரை இடித்தற்காக எதிர்ப்பு தெரிவித்து ஊரை காலிசெய்து மலையேறிய பிள்ளைமார்களும், தலித் கிறித்துவர்கள் நுழையக் கூடாது என்ற கோஷமிட்டு 'தாய்' மதம் திரும்பப் போவதாக அறிவித்த வன்னிய கிறித்துவர்களும் தீண்டாமை அரக்கனை முதுகில் ஏற்வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். 61 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஒழிக்கப்படாத தீண்டாமை கொடுமை சுதந்திர இந்தியாவைப் பார்த்து பல் இளித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இதையெல்லாம் விட சுதந்திர நாளில் கூட பாதுகாப்பு என்ற பெயரில் எவரையும் சந்தேகித்து ஆடை அவிழ்த்துப் பார்த்து அவர்களின் சுதந்திரத்தைக் கேள்விக் குறியாக்கும் அரசுகளை அவ்வாறு தூண்டுவதற்கு காரணமான தீவிரவாதிகள் ஆகியவை இருந்தாலும் ஆண்டு தோறும் சுதந்திரம் கொண்டாடப்படுகிறது. எப்போதும் போல் சுதந்திர நாள் வீர உரையாற்ற பலத்த பாதுகாப்போடு பிரதமர் உரையாற்றுவது சுதந்திர நாளின் நகை முரண் என்றாலும் பிரதமரின் உயிர் சுதந்திரமாக பறிக்கப்பட விடக் கூடாது என்பதால் அத்தகைய பாதுகாப்பு கெடுபிடிகள் தவிர்க்க முடியாதது என்றாகிவிட்டது.

சுதந்திரநாள் பழிப்புக்குறியதல்ல, ஆனால் சுதந்திரம் என்பதன் உண்மையான உணர்வை யாரும் அனுபவிக்கவில்லை என்பது உண்மைதானே ? வெறும் சடங்காகக் கொண்டாடப்படும் சுதந்திர நாள், உண்மையிலேயே அந்த நிலையை முற்றிலும் அடைந்து நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நான் சுதந்திரமானவன் என்று நினைக்கும் படியும், ஒவ்வொருவரும் மதிக்கப்படும் நாள், வரும் ஆண்டுகளின் கொண்டாடப்படும் எதோ ஒரு சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் கிடைக்கும், என்ற எதிர்கால நம்பிக்கையை இன்று கொண்டாடப்படும் சுதந்திர நாளும் ஏற்படுத்தும், என்ற இன்றைய நம்பிக்கையில் இருக்கும் உங்களைப் போல், நானும் மகிழ்வோடு இருக்கிறேன்.

தாய் திருநாடு இந்தியாவின் புகழும் வெற்றியும் என்று நிலைக்கட்டம் !

அனைவருக்கும் இனிய இந்திய விடுதலை திருநாள் வாழ்த்துகள் !

19 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

"இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை எனும் நிலையே சுதந்திரம்"
அப்படின்னு இன்னைக்கு காலைல சுகி.சிவம் சொன்னார்..
****************
நாம் இழப்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறதே.. ஒகேனக்கல், முல்லைப் பெரியாறு, பாலாறு இன்னும் பல...
:P

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அணுசக்தி சுதந்திரத்தை அமெரிக்காவிடம் அடகு வைத்தாகிவிட்டது. அதில் கொள்ளை லாபம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத்தான். எல்லாம் இந்த கம்யூனிஸ்ட் கட்சியும், பாரதிய சனதாவும் செய்த வேலை. பணத்தைக் கொட்டியவர்கள் இத்தாலிய ராணியார். யார் கொடுத்ததோ?(அமெரிக்கா என்று சொல்றாங்க, நமக்கேன் வம்பு)

அன்புடன்,
ஜோதிபாரதி.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

கடந்த சனி அன்று கொட்டும் மழையிலும் ஆரவாரத்தோடு நடந்த சிங்கப்பூர் சுதந்திர தினக் கொண்டாட்டங்களையும், இன்று கடுமையான பாதுகாப்புகளுடன் நடக்கும் நமது சுதந்திரதின கொண்டாட்டங்களையும் பார்க்கும் போது வேதனையாக இருக்கின்றது.

ஒற்றுமையாய் போராடி வாங்கிய கண்ணாடிப் பாத்திரத்தை (விடுதலை) வாங்கும் போதே இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டாக உடைத்தோம். பின்னர் பாகிஸ்தான் எனும் ஒரு பகுதியை வங்க தேசம் பாகிஸ்தான் என உடைக்க உதவினோம். இந்தியா எனும் ஒரு பகுதி இன்னும் பெரிதாய் உடையவில்லை என்றாலும் கீரல்கள் இல்லாத இடமேயில்லை என்றளவுக்கு கேடு விளைவித்துவிட்டோம்.
சுத‌ந்திர‌மாக‌ கொண்டாட‌க்கூட‌ முடியாத‌ போது சுத‌ந்திர‌தின‌த்தை கொண்டாடாம‌ல் விட்டால்தான் என்ன‌ என‌க் கோப‌மாய் கேட்க்க‌த் தோணுது.

ரொம்ப‌ சிந்திக்காத‌ , ஒன்னு ந‌க்ஸ‌ல் ஆயிடுவ‌, இல்ல‌ன்னா பைத்திய‌மாயிடுவ‌ அப்டினு என் ஆசிரிய‌ர் ஒருவ‌ர் என்னிட‌ம் சொல்வார். அதுதான் நினைவுக்கு வ‌ருகின்ற‌து.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
"இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை எனும் நிலையே சுதந்திரம்"
அப்படின்னு இன்னைக்கு காலைல சுகி.சிவம் சொன்னார்..
****************
நாம் இழப்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறதே.. ஒகேனக்கல், முல்லைப் பெரியாறு, பாலாறு இன்னும் பல...
:P

10:05 AM, August 15, 2008
//

ஜெகதீசன், சேதுவை விட்டுவிட்டீர்கள். நீங்கள் சேது திட்ட எதிர்பாளரா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
அணுசக்தி சுதந்திரத்தை அமெரிக்காவிடம் அடகு வைத்தாகிவிட்டது. அதில் கொள்ளை லாபம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத்தான். எல்லாம் இந்த கம்யூனிஸ்ட் கட்சியும், பாரதிய சனதாவும் செய்த வேலை. பணத்தைக் கொட்டியவர்கள் இத்தாலிய ராணியார். யார் கொடுத்ததோ?(அமெரிக்கா என்று சொல்றாங்க, நமக்கேன் வம்பு)

அன்புடன்,
ஜோதிபாரதி.

10:34 AM, August 15, 2008
//

:( ஹூம், எதிர்கட்சிகளுக்கு பணப்பட்டுவாடா செய்து காங்கிரஸ் அரசை காப்பாற்றியது அமெரிக்கா என்று தான் சொல்கிறார்கள். கையூட்டு பெற்றுக் கொள்ளும் எதிர்கட்சிகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் வருமானத்தில் குறையில்லாமலேயே இருக்கின்றன. இவர்கள் நாடளுமன்றத்தின் நடுபகுதி வரை சென்று போடுவதெல்லாம் வெற்றுக் கூச்சல் தான் போலும். தின்றது செறிப்பதற்காக தொண்டையை பயன்படுத்துகிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
கடந்த சனி அன்று கொட்டும் மழையிலும் ஆரவாரத்தோடு நடந்த சிங்கப்பூர் சுதந்திர தினக் கொண்டாட்டங்களையும், இன்று கடுமையான பாதுகாப்புகளுடன் நடக்கும் நமது சுதந்திரதின கொண்டாட்டங்களையும் பார்க்கும் போது வேதனையாக இருக்கின்றது.//

இந்தியாவின் நிலையை சிங்கபூருடன் ஒப்பிட முடியாது, சிங்கபூர் சிறிய நாடு. நமது வேதனைகள், ஆதங்கம், இந்தியாவின் சூழல் வேறு வகையானவை.

//ரொம்ப‌ சிந்திக்காத‌ , ஒன்னு ந‌க்ஸ‌ல் ஆயிடுவ‌, இல்ல‌ன்னா பைத்திய‌மாயிடுவ‌ அப்டினு என் ஆசிரிய‌ர் ஒருவ‌ர் என்னிட‌ம் சொல்வார். அதுதான் நினைவுக்கு வ‌ருகின்ற‌து.
//

அதென்னவோ சரிதான். போராளிகள் பலர் உருவாதற்கு காரணம் அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளே காரணம். பயப்படாதிங்க நாமெல்லாம் அப்படியெல்லாம் ஆகமாட்டோம், நமக்கெல்லாம் பிற உயிர்கள் குறித்த பயமும், அன்பும் உண்டு !

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//கோவி.கண்ணன் said...
//ஜோதிபாரதி said...
அணுசக்தி சுதந்திரத்தை அமெரிக்காவிடம் அடகு வைத்தாகிவிட்டது. அதில் கொள்ளை லாபம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத்தான். எல்லாம் இந்த கம்யூனிஸ்ட் கட்சியும், பாரதிய சனதாவும் செய்த வேலை. பணத்தைக் கொட்டியவர்கள் இத்தாலிய ராணியார். யார் கொடுத்ததோ?(அமெரிக்கா என்று சொல்றாங்க, நமக்கேன் வம்பு)

அன்புடன்,
ஜோதிபாரதி.

10:34 AM, August 15, 2008
//

:( ஹூம், எதிர்கட்சிகளுக்கு பணப்பட்டுவாடா செய்து காங்கிரஸ் அரசை காப்பாற்றியது அமெரிக்கா என்று தான் சொல்கிறார்கள். கையூட்டு பெற்றுக் கொள்ளும் எதிர்கட்சிகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் வருமானத்தில் குறையில்லாமலேயே இருக்கின்றன. இவர்கள் நாடளுமன்றத்தின் நடுபகுதி வரை சென்று போடுவதெல்லாம் வெற்றுக் கூச்சல் தான் போலும். தின்றது செறிப்பதற்காக தொண்டையை பயன்படுத்துகிறார்கள்.//

"இவர்கள் நாடளுமன்றத்தின் நடுபகுதி வரை சென்று போடுவதெல்லாம் வெற்றுக் கூச்சல் தான் போலும்."

கூச்சல் மட்டும் போடவில்லை கோவியாரே!
பணக்கட்டுகளையும் போடுகிறார்கள் என்பது சமீபத்திய நிலவரம்.
மக்கள் புரிந்து கொண்டால் சரி.

அன்புடன்,
ஜோதிபாரதி.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நாடாளுமன்றத்தைத் தகர்க்க முனைந்து, அதில் சில காவலர்கள் உயிர்களைப் பலிகொண்டவர்கள் சுதந்திரமாக வாழும் வகையில் சுதந்திரம் த(லை)ழைத்(தொ)தோங்கி இருக்கிறது. கீதா சாம்பசிவம் (http://sivamgss.blogspot.com/2008/08/blog-post_14.html) அவர்கள் பாரதி பாடல்களின் படி இந்தியா இல்லை என்பதை சொல்லியிருக்கும் விதத்தைப் பாருங்கள்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

SurveySan சொன்னது…

//ஆளும்வர்கம் ஆங்கிலேயர்களை விரட்டிவிட்டு மீண்டும் அடித்தட்டு மக்களை அடிமையாக்கிக் கொண்ட நாளே சுதந்திர தினம் என்கிறார்கள்//

:) சுதந்திரம் இல்லாதவங்களுக்குத்தான் சுதந்திரத்தின் அருமை புரியும்னு ஒரு தத்துவத்த சொல்லி இப்பதான் பதிவுபோட்டேன் :)

Sivaram சொன்னது…

“லட்சக் கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.
வாக்குச்சாவடியைக் கைப்பற்ற சதி என தகவல்..வெடிகுண்டு

சோதனை நடத்தப்படும்.கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு.
பொதுமக்கள் பயமில்லாமல் வந்து ஓட்டுப் போட வேண்டும்..”

Sivaram சொன்னது…

(மன்னிக்கவும். கட் பேஸ்ட் செய்த்தில், பாதி பின்னூட்டம் போய் விட்டது..) மேலே உள்ளது ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வழக்கமாக சொல்லப்படுவது. அதே போல , ஆகஸ்ட்15, ஜனவரி 26, டிசம்பர் 6 என்று நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாட்கள் கூடிக் கொண்டே போகிறது..

கோவி.கண்ணன் சொன்னது…

/ஜோதிபாரதி said...
நாடாளுமன்றத்தைத் தகர்க்க முனைந்து, அதில் சில காவலர்கள் உயிர்களைப் பலிகொண்டவர்கள் சுதந்திரமாக வாழும் வகையில் சுதந்திரம் த(லை)ழைத்(தொ)தோங்கி இருக்கிறது. கீதா சாம்பசிவம் (http://sivamgss.blogspot.com/2008/08/blog-post_14.html) அவர்கள் பாரதி பாடல்களின் படி இந்தியா இல்லை என்பதை சொல்லியிருக்கும் விதத்தைப் பாருங்கள்.

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

அந்த பதிவைப் பார்த்து பின்னூட்டமும் போட்டு இருக்கிறேன்.

சேது பற்றியும் கருத்து சொல்லி ரொம்பவே வருத்தப்பட்டு இருக்கிறார்கள்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
//ஆளும்வர்கம் ஆங்கிலேயர்களை விரட்டிவிட்டு மீண்டும் அடித்தட்டு மக்களை அடிமையாக்கிக் கொண்ட நாளே சுதந்திர தினம் என்கிறார்கள்//

:) சுதந்திரம் இல்லாதவங்களுக்குத்தான் சுதந்திரத்தின் அருமை புரியும்னு ஒரு தத்துவத்த சொல்லி இப்பதான் பதிவுபோட்டேன் :)

1:23 PM, August 15, 2008
//

இது என்ன கருத்து ? அப்போ ஜெயிலில் இல்லாதவங்களுக்குத்தான் ஜெயில் பற்றிய அருமை தெரியுமா ?
:)

புகைப்பிடிக்காதவர்களுக்குத்தான் புகையின் அருமை தெரியுமா ?

சும்மா ட்டாமாஷூ......
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவன் said...
(மன்னிக்கவும். கட் பேஸ்ட் செய்த்தில், பாதி பின்னூட்டம் போய் விட்டது..) மேலே உள்ளது ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வழக்கமாக சொல்லப்படுவது. அதே போல , ஆகஸ்ட்15, ஜனவரி 26, டிசம்பர் 6 என்று நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாட்கள் கூடிக் கொண்டே போகிறது..

2:07 PM, August 15, 2008
//

ஜீவன்,

முதலில் வேறெங்கோ போடவேண்டியதை இங்கு போட்டுவிட்டீர்களோ என்று நினைத்தேன். :)

ஆண்டுக்கு ஆண்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு அற்ற நாட்களாகவே மேற்சொல்லியுள்ள நாட்கள் இருக்கிறது. பொதுமக்களின் வரிபணம் மூலம் அரசியல் வாதிகளுக்கு அரசு செலவில் போதிய பாதுகாப்பு கிடைக்கும். மக்களுக்கு (?)
:(

சுரேஷ் ஜீவானந்தம் சொன்னது…

// வெள்ளைக்காரன் வந்திருக்காவிட்டால் ஒருங்கிணைந்த இந்தியா என்ற நிலையை அடைவதற்கான பல்வேறு மாநிலங்களின் இணைப்பு நிகழ்ந்திருக்காது. அதற்காக வெள்ளைக்காரர்களுக்குத் தான் முதலில் நன்றி சொல்லவேண்டும்.
//
கோவி "ஒருங்கிணைந்த" இந்தியாவால் யாருக்கு என்ன பயன் என்று சிந்தித்து ஒரு தனி பதிவிட்டால் நன்றாக இருக்கும்.
இந்தியா என்ற கருத்தாக்கமும் "கடவுள்" போல ஒரு கேள்விக்கப்பாற்பட்ட புனிதமாக்கப்பட்டு விட்டது. கடவுளைக் கேள்விக்குள்ளாக்குபவர்கள்கூட "இந்தியா"வைக் கேள்விக்குள்ளாக்குவதில்லை :)
-
சுரேஷ்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//கோவி.கண்ணன் said...
/ஜோதிபாரதி said...
நாடாளுமன்றத்தைத் தகர்க்க முனைந்து, அதில் சில காவலர்கள் உயிர்களைப் பலிகொண்டவர்கள் சுதந்திரமாக வாழும் வகையில் சுதந்திரம் த(லை)ழைத்(தொ)தோங்கி இருக்கிறது. கீதா சாம்பசிவம் (http://sivamgss.blogspot.com/2008/08/blog-post_14.html) அவர்கள் பாரதி பாடல்களின் படி இந்தியா இல்லை என்பதை சொல்லியிருக்கும் விதத்தைப் பாருங்கள்.

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

அந்த பதிவைப் பார்த்து பின்னூட்டமும் போட்டு இருக்கிறேன்.

சேது பற்றியும் கருத்து சொல்லி ரொம்பவே வருத்தப்பட்டு இருக்கிறார்கள்.
:)//

நன்றி திரு.கோவி.கண்ணன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. நமது கருத்தை நாம் பதிவு செய்கிறோம். மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். பொது வாழ்க்கையில் இருக்கிறேன் என்பவர்களை தாராளமாக விமர்சிக்கிறோம். அதுதான் சரியும் கூட...!

அன்புடன்,
ஜோதிபாரதி.

பாபு சொன்னது…

காந்தி இறந்த பொது அவருக்கு 79 வயதுதானே???
பிறந்த வருடம் 1969 .கணக்கு பாருங்கள்

வெண்பூ சொன்னது…

அருமையான கருத்துக்கள் கோவி.கண்ணன். பெரும்பாலான கருத்துகளில் உங்களுடன் ஒத்துப்போகிறேன். உதாரணமாக ஒருங்கிணைந்த இந்தியா சாத்தியப்பட்டது ஆங்கிலேயர்களால்.

அதேபோல் அவர்கள் செய்த இன்னொரு நல்ல விசயம் பாகிஸ்தான் பிரிவினை. ஒருவேளை அது நடக்காமல் இருந்திருந்தால் உள்நாட்டுக் கலவரத்தால் நம் பொருளாதாரம் ஏற்கனவே இன்னொரு ஜிம்பாவே ஆகியிருக்கும். :(

ஒரு சிறு திருத்தம்.. காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது அவரது வயது 78. நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல் 90ம் மேல் அல்ல.

பாபு சொன்னது…

முதல் பின்னூட்டத்தில் 1869 க்கு பதிலாக 1969 என்று எழுதிவிட்டேன்,மன்னிக்கவும்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்