பின்பற்றுபவர்கள்

2 பிப்ரவரி, 2012

கேப்டன் முழக்கம் தளபதி கலக்கம் !

நேற்றைய சட்ட மன்றத் தொடர் தமிழக அரசியலில் எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம், கூட்டணி உதவியால் கனிசமான சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டமன்றத்திற்குள் நுழைந்த விஜயகாந்த், உள்ளாட்ச்சித் தேர்தலுக்கு பிறகு சட்ட சபைக்குள் செல்லவே மாட்டார் என்று ஊகங்கள் கிளம்பி இருந்தன, அதற்கு ஏற்றவாறு எதிர்கட்சியாக இருந்த போது கருணாநிதியும், ஜெயலிதாவும் சட்ட சபைக்குச் சென்றார்களா ? என்று கேள்வி எழுப்பி இருந்தார், இதன் மூலம் வழக்கமான வெறும் லாவனி அரசியல் போல் விஜயகாந்தும் அடுத்தத் தேர்தல் வரை ஒப்பேற்றிவிடுவார் என்று ஊடகங்களும் அரசியல் நோக்கர்களும் கருதி இருந்தனர், சட்டசபை கூட்டத்தொடரில் பங்கு பெற்றதுடன் ஆளும் கட்சியை கேள்விகளால் துளைத்து அடித்து திணறடித்தார் விஜயகாந்து.

பெரும்பான்மை ஆதரவுடன் அமைந்துள்ள ஆட்சி என்று முழங்கிக் கொண்டு இருந்த ஜெயலலிதாவுக்கு இது பெரிய அதிர்ச்சி தான். விஜயகாந்தை பேசவிடாமல் கத்திக் கொண்டிருந்த அவரது சட்டமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் ஜெ கட்டுப்படுத்தவில்லை, முடிவில் விஜயகாந்த் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர் அல்லது வெளியேற்றப்பட்டனர்.

தாம் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்ததற்காக வருத்தப்படுவதாகவும், கட்சியினரை திருப்பித்படுத்தவே கூட்டணி அமைத்திருந்ததாகவும் உளறினார். கூடவே வரும் சங்கரன் கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றிபெறும் தேமுதிகவால் தனித்து தேர்தலை சந்திக்க முடியுமா ? என்றக்கேள்விக்கு முன்பு, பேருந்து கட்டணத்தை உயர்த்திய பிறகு, பால் கட்டணத்தை உயர்த்திய பிறகு நாங்கள் வெற்றி பெறுவோம், உங்களால் முடியுமா ? என்று கேட்டார், அந்தக் கேள்வியில் எங்களால் மக்களை பாதிக்கும் எதையும் செய்துவிட்டு இடைத்தேர்தலை சந்திக்க முடியும், நாங்கள் ஆளும் கட்சி என்ற ஆணவம் தெரிந்தது.

இதற்கு பதிலளித்த விஜயகாந்த் ஆளும் கட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெரும் இரகசியம் ஏற்கனவே தெரிந்தது தானே, எதிர்கட்சியாக இருந்த போது அவ்வாறு வெற்றிபெற்றிருக்கிறீர்களா? ஏன் முதல்வராக இருந்தவரில் பர்கூரில் தோற்றவர் தானே ஜெயலலிதா என்று பதிலடிக் கொடுத்தார், முதல்வராக இருந்து தோற்றவர்களில் காமராஜரும் உண்டு, எனவே விஜயகாந்தின் அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் அவரது துணிச்சல் பாராட்டத்தக்கது, ஜெயலலிதாவின் ஆட்சியில் திமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களும் தலைவர்களும் பம்மிக் கொண்டு இருப்பார்கள், தேர்தலின் போது தான் அவர்கள் குரல் வெளிப்படும், இல்லையென்றால் முரசொலியில் 'ஆணவ ஆட்சிப் பாரீர்' என்று கட்டுரை வடிப்பார்கள், இப்படி சட்டமன்றத்திற்குள் காரசாரமாக (கை நீட்டிப்) பேசியதில்லை. (திமுகவினரிடம் இது பற்றிக் கேட்டால் நாங்கள் சபை நாகரீகம் அறிந்தவர்கள் என்றே சமாளிப்பர்)

விஜயகாந்த் சட்டமன்றத்தில் அணல் தெறிக்கப் பேசப் பேச அங்கு அருகில் அமர்ந்திருந்த ஸ்டாலினைப் பார்க்க பரிதாபமே மிஞ்சியது. 'அடுத்தத் தேர்தலுக்கு முன்பே விஜயகாந்த் மேலும் செல்வாக்கு பெற்று திமுகவின் தவிர்க்க முடியாத கூட்டணியில் ஒன்றாகவோ, அல்லது தேமுதிகவின் செல்வாக்கை சமாளிக்க முடியாமல் போவதுடன் திமுகவின் செல்வாக்கும் பாதாளத்திற்கு செல்லும் வாய்ப்பும் இருப்பதாக ஸ்டாலின் நினைத்திருக்கக் கூடும். ஏற்கனவே எதிர்கட்சி சிறப்பையும் விஜயகாந்தால் இழந்த ஸ்டாலின் திமுகவின் எதிர்காலம் குறித்தும் தமது முதல்வர் கனவு குறித்தும் கவலைப்பட்டு அமர்ந்திருந்தது போலவே தெரிந்தது.

விஜயகாந்த் இந்த ரீதியில் சென்றால் மேலும் செல்வாக்குப் பெறுவது உறுதி என்றே தெரிகிறது. நான் விஜயகாந்தின் அரசியலை பேச்சை விமர்சனம் செய்திருக்கிறேன், இப்போது பார்க்கும் போது அவர் சரியான திசையில் தான் பயணிக்கிறார், கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார் என்றே தெரிகிறது, எந்த தனிப்பட்ட அரசியல்வாதிகளால் எனக்கும் தனிப்பட்ட நன்மை கிடையாது, விஜயகாந்த் கட்சி மற்றும் கொள்கை ஆகியவற்றில் எனக்கு எந்த ஈர்ப்பும் எப்போதும் இல்லை. என்னைப் பொருத்த அளவில் விஜயகாந்தின் வளர்ச்சி மற்ற அரசியல் வாதிகளின் வளர்ச்சியைப் போன்றது தான், பலமான எதிர்கட்சி சட்டசபையின் தன்னிச்சையான முடிவுகளை எதிர்க்க மிக மிகத் தேவையான ஒன்று.

இதே அரசியல் கட்சிகள் அடுத்தும் தேர்தலை சந்தித்தால் என்னுடைய வாக்கு இப்போதைய சூழலைப் பொருத்து தேமுதிகவிற்குத் தான்.

கமான் கேப்டன்............கமான் !

7 கருத்துகள்:

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

முதல்வராக இருந்தவரில் பர்கூரில் தோற்றவர் தானே ஜெயலலிதா என்று பதிலடிக் கொடுத்தார், முதல்வராக இருந்து தோற்றவர்களில் காமராஜரும் உண்டு, எனவே விஜயகாந்தின் அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.////

இதுவும் தவறான தகவலே....
முதலமைச்சராக இருந்து முதலில் தோற்றது பக்தவத்சலம் தான். ஜெயலலிதாவிற்கு இரண்டாவது இடமே இதில். காமராஜர் முதலமைச்சராக இருந்து தோற்றவர் என்ற ஒரு தவறான தகவல் உலவுகிறது.அதுவும் அறியாமையே... ஆனால், காமராஜர் விருதுநகரில் போட்டியிட்டு தி.மு.க.,வேட்பாளர் சீனிவாசனிடம் தோற்றபோது அவர் முதலமைச்சராகவே இல்லை. அதற்கு முன்பே கே பிளான் மூலம் பக்தவத்சலத்திடம் தன் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டார்.

Unknown சொன்னது…

இதை நான் ஆமோதிக்கிறேன்!

Kite சொன்னது…

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க அணி பெற்ற வாக்குகள் 1.9 கோடி. தி.மு.க அணி பெற்ற வாக்குகள் 1.45கோடி. வித்தியாசம் 45 லட்சம்தான். தே.மு.தி.க தனித்துப் போட்டியுடும்போதேல்லாம் 30 லட்சம் வாக்குகள் பெறுகிறது. இந்த கணக்குப்படி பார்த்தால் தே.மு.தி.க சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டிருந்தால் அ.தி.மு.க பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்து 100-120இடங்கள் பெற்றிருக்கும் என்று புரிகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த அளவுக்கு சுதந்திரமாக ஜெ வால் ஆட்சி செய்ய முடியாது. கூட்டணியால் தே.மு.தி.க எவ்வளவு பலனைப் பெற்றதோ அதே அளவு
அ.தி.மு.க வும் பெற்றுள்ளது. ஜெ இதை மறந்து விட்டு தன் ஆணவத்தைக் காட்டுகிறார்.

suvanappiriyan சொன்னது…

வாழ்க தமிழகம்! :-)

ராஜ நடராஜன் சொன்னது…

யாருகிட்ட?ரஹீம் கஸாலிகிட்டேவா:)

கோவி!நீங்க சன் தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கவே போல இருக்குது.இப்பத்தான் பதிவர் ஹாஜா மைதீன் கடைல காணொளி பார்த்துட்டு ஒரு பின்னூட்டமும் போட்டு விட்டு வந்தேன்.

ஊர் ரெண்டான்னா பழமொழியே எனக்கு நினைவுக்கு வருகிறது.தமிழக ஓட்டு வங்கியில் கணிசமான ஓட்டுக்கள் தி.மு.கவுக்கு இன்னும் இருக்கவே செய்கிறது.ஏன்னா இன்னுமொரு 5G வந்தாலும் கூட உடன் பிறந்த பாசம் விடாதவங்க தமிழ்நாட்டுல இன்னும் நிறைய பேர் இருக்காங்க.இன்னும் 5 வருசத்துக்கா மக்கள் பழையவற்றையெல்லாம் நினைவுல வச்சிகிட்டிருக்கப் போறாங்க.

எப்பவோ போடுற ஓட்டுக்கு இப்பவே மை வச்சிக்கிறேன்னு சொல்றீங்களே:)

Astrologer sathishkumar Erode சொன்னது…

ஸ்டாலின் நேற்றே காலியாகிவிட்டார்..அடுத்த தேர்தலின் போதெல்லாம் ..ஏன் சார்...மக்கள் அவரை கண்டுக்கமாட்டாங்க..போன தேர்தலிலேயே தி.மு.க காரங்களை வெச்சுத்தான் ஸ்டாலின் கூட்டத்துக்கு ஒப்பேத்துனாங்க..இனி விஜயகாந்த் vs ஜெயலலிதா தான்!!

ஜோதிஜி சொன்னது…

விஜயகாந்த் அதிர்ஷ்டக்காரர்.

அன்றும் என்றும் எப்போதும் சொல்வேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்