பின்பற்றுபவர்கள்

1 பிப்ரவரி, 2012

வேதனை மற்றும் எரிச்சல் தந்த ஒரு செய்தி !

பொதுவாகவே செய்தி ஊடகங்கள் மிகைப்படுத்தித் தான் எதையும் சொல்லுகின்றன. வாசிப்பாளர்களின் சிந்தனையை தூண்டுவதும், முடக்குவதும் அவர்களின் செய்திகளின் தரம் வழியாக உருவாக்கப்படுபவை. கள்ளக்காதலர்கள் 'உல்லாசமாக இருந்தனர்' 'ஜாலியாக' இருக்கும் போது கொலை செய்யப்பட்டனர் என்றெல்லாம் நேரில் பார்த்தது போல் எழுதுவார்கள். அவர்கள் உல்லாசமாக இருந்தார்களா ? அவசரகெதியில் நடந்து கொண்டார்களா அல்லது தனக்கு மறுக்கப்பட்ட ஒன்றை வேறு இடத்தில் தேடிக் கொண்டார்களா ? என்பது தொடர்புடைய இருநபர்களுக்குத்தான் தெரியும். இன்றைக்கு கூட அப்படியான செய்தி ஒன்று நக்கீரனின் வெளியாகி உள்ளது, தினமலரின் தரம் அறிந்து அதனை வாசிப்பதை நிறுத்திவிட்டேன். கள்ளத் தொடர்புகளின் கொலைகளை செய்தித்தாள்கள் எழுதுவதே அந்த நிகழ்வுகளுக்காக இல்லை, இந்தக்த் தகவலை தெரிந்து கொள்ளாத தமிழினம் அழிந்துவிடும் அல்லது சபிக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் எழுதுகிறார்களா ? அவற்றில் இருப்பவை பாலியல் சார்ந்த தகவல் என்பதால் அதில் நாட்டமுள்ளவர்களை தொடரும் வாசகராக்கும் திட்டத்துடன் மிகைப்படுத்தி எழுதுகிறார்கள். அவை வெறும் விற்பனை நோக்கம் தான்.

*******
சிங்கப்பூர் தமிழ் முரசு செய்தி பிரிவினருக்கு,

22 ஜனவரி 2012 (சிங்கப்பூர்) தமிழ் முரசு நாளிதழில் முகப்பு பக்கத்தில் மேற்கண்ட செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒரு குழந்தையை முதலை விழுங்கிய தகவல் மிகவும் கவலைக்குரியதும் வேதனையான ஒன்றும் ஆகும், அந்தக் குழந்தையை இழந்த பெற்றோர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. ஆனால் இந்தத் தகவலை 'ஏப்பம் விட்டுவிட்டது' என்று எழுதி நகைச்சுவை ஆக்கி இருந்தது செய்தியின் வெளியிடுதலின் தரம் குறித்த சிந்தனையை தோற்றுவித்தது.

பொதுவாக கடன் வாங்கி ஏமாற்றுதல், அல்லது நிதி நிறுவனங்களின் மோசடி ஆகியவற்றைத்தான் 'ஏப்பம் விடுவது' என்று எழுதுவது அல்லது சொல்லுவது வழக்கம், காரணம் அங்கு நடைபெறுவது நம்பிக்கை மோசடி, நம்பிக்கை மோசடி நகைச்சுவை இல்லை என்றாலும் பிறருக்கு எச்சரிக்கைக்காக முதலை வாயில் விழுந்த பணம் போன்று 'பணத்தை ஏப்பாம் விட்டுவிட்டார்கள்' என்று செய்தியாளர்கள் எழுதுவதுண்டு.

குழந்தையை முதலை விழுங்கிய செயல் நம்பிக்கை மோசடி அல்ல, அது விரும்பத்தகாத எதிர்பாராத வேதனையை உருவாக்கிய நிகழ்வு, தங்கள் வெளியிட்ட செய்தியில் இடம் பெற்றிருக்கும் 'ஏப்பம் விட்டுவிட்டது' என்ற கருத்தாக்கம் பத்திரிக்கை உத்தி என்று பார்த்தாலும் கூட ஏற்றுக் கொள்ள இயலவில்லை, செய்தி இதழ்கள் தான் மனிதர்களின் சிந்தனையை வளர்க்க உதவுகின்றன அதே போன்று பொதுவான சிந்தனைகளையும் தோற்றுவிக்கின்றன. மேற்கண்ட தகவலை படித்த போது குழந்தையின் மறைவு வேதனையை ஏற்படுத்திய அதே வேளையில் செய்தியில் இடம் பெற்றிருந்த நகைச்சுவை எரிச்சலை ஏற்படுத்தியது. அந்த செய்தியை தகவல் அடிப்படையில் நகைச்சுவை சேர்க்காமல் கொடுத்திருக்காலம் என்பதே என் கருத்து.

இது போன்ற மிகைப்படுத்தப்பட்ட அல்லது விரும்பத் தகாத சொற்களை செய்திகளில் தவிர்க்க வேண்டும் என்று உங்களின் நாளிதழ் வாசகன் என்ற முறையில் வேண்டுகோள் வைக்கிறேன்

அன்புடன்
கோவி.கண்ணன்

******

இந்த கருத்தை மின்னஞ்சல் வழியாக தமிழ் முரசிற்கு அனுப்பி இருக்கிறேன், வாசகர்கள் கடிதங்களுக்கு மதிப்பு கொடுப்பார்கள் என்றே நினைக்கிறேன், என்ன பதில் சொல்லுவார்கள் என்று பார்ப்போம்.

15 கருத்துகள்:

VIKNESHWARAN சொன்னது…

முதலை ஏப்பம் விடாத இல்ல ஏப்பம் விட கூடாதா?

** இப்படி அவுங்க கேட்பாங்களோனு ஒரு சந்தேகம் தான்.

நிலாந்தன் சொன்னது…

உங்கள் கருத்துகள் மிகவும் சரியானது.நியாயமானது.

நிலாந்தன் சொன்னது…

உங்கள் கருத்துகள் மிகவும் சரியானது.நியாயமானது.

ஷர்புதீன் சொன்னது…

i agreed!

Kabilan சொன்னது…

தன்னுடைய குழந்தை இப்படி பாதிக்கப்பட்டா இப்படி எழுதுவோமான்னு யோசிச்சு எழுதுனா இப்படி எல்லாம் எழுத மாட்டாங்க. ஆனால் இதை எடிட்டோரியல் தவறு என்று சொல்வதை விட....மொழிபெயர்ப்புத் தவறு என்று தான் சொல்ல வேண்டும். யாரோ ஒருவர் ஆங்கிலத்தில் ஒரு செய்தி தருகிறார்...அதில் இந்த மொழிபெயர்ப்பு பத்திரிக்கையாளர் தன் திறமையை உள்ளே புகுத்தி ஒரு கோணத்தில் செய்தியை தருகிறார். ரொம்ப தேவையான பதிவு. ஆனால், கொஞ்சம் ஸ்ட்ராங்கா சொல்லி இருக்கலாம் !

கபிலன் சொன்னது…

தன்னுடைய குழந்தை இப்படி பாதிக்கப்பட்டா இப்படி எழுதுவோமான்னு யோசிச்சு எழுதுனா இப்படி எல்லாம் எழுத மாட்டாங்க. ஆனால் இதை எடிட்டோரியல் தவறு என்று சொல்வதை விட....மொழிபெயர்ப்புத் தவறு என்று தான் சொல்ல வேண்டும். யாரோ ஒருவர் ஆங்கிலத்தில் ஒரு செய்தி தருகிறார்...அதில் இந்த மொழிபெயர்ப்பு பத்திரிக்கையாளர் தன் திறமையை உள்ளே புகுத்தி ஒரு கோணத்தில் செய்தியை தருகிறார். ரொம்ப தேவையான பதிவு. ஆனால், கொஞ்சம் ஸ்ட்ராங்கா சொல்லி இருக்கலாம் !

சென்னை பித்தன் சொன்னது…

மலிவான பத்திரிகையியல்.
நல்ல கருத்தைச் சொன்னீர்கள்.

பெயரில்லா சொன்னது…

//தினமலரின் தரம் அறிந்து அதனை வாசிப்பதை நிறுத்திவிட்டேன்.

இருந்தாலும் படித்தால்தான் தவறான பரப்புதல்களுக்கு பதில் கருத்து தர முடியும்.

naren சொன்னது…

வர வர ஊடகங்கள் உணர்வற்ற (insensitive), மனிதாபிமானம் அற்றதாக மாறி கொண்டுவருவதை காட்டுகிறது. செய்தியில் ஒரு கிளு கிளுப்பு வேண்டும் என்பதற்காக இப்படி எழுதுகிறார்கள் என நினைக்கிறேன்.

Jagannath சொன்னது…

தினமலரில் தலைப்புகளின் தரம் மிக மட்டமாக உள்ளது. நான் ஞாயிற்றுக்கிழமை மட்டும் வாரமலர் படிப்பதற்காக வாங்குகிறேன். தானே புயல் செய்திக்கு தினமலர் கொடுத்த தலைப்பு " தானே புயலில் கடலூர் காலி" .

ராமலக்ஷ்மி சொன்னது…

கண்டனத்துக்குரிய வார்த்தைப் பிரயோகம். தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புவோம்.

சுவனப்பிரியன் சொன்னது…

ஊடகத்தின் முக்கியத்துவத்தையும் பொருப்பையும் சுட்டிக்காட்டும் பதிவு.

தமிழ்மலர் சொன்னது…

தினமலரில் பணியாற்றிய போது ஒரு முறை // விபத்து இருவர் பரிதாப பலி// என்று நான் எழுதிக்கொடுத்த செய்தி // லாரி&பைக் நச் உயிர் போச்// என்று வெளிவந்தது.

செய்தி ஆசிரியர் அறைக்கு சென்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இந்த தலைப்பு வேதனையை தராதா என்றேன். அதற்கு ஆசிரியர் அளித்த பதில் தான் வியப்பாக இருந்தது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த 10 பேர் ஆதங்கப்படுவார்கள். அதே நேரத்தில் தொடர்பே இல்லாத லட்சக்கணக்கான வாசகர்கள் தலைப்பை ரசிப்பார்கள். 10 பேரை விட லட்சக்கணக்கான வாசகர்கள் தான் முக்கியம் என்றார். இதே பாணியில் தான் எல்லா பத்திரிக்கைகளும் செய்திகளை வெளியிடுகின்றன.

நக்கீரன் பற்றி சொல்லவே வேண்டாம். 1 வயது குழந்தை கதற கதற கற்பழிப்பு என்று அட்டைபட செய்தி போட்ட பத்திரிக்கை அது. எப்படி தான் இவர்களுக்கு மட்டும் இதுபோன்ற செய்தி கிடைக்கிறதோ தெரியவில்லை.
பெரும்பாலான பத்திரிக்கைகளும் செய்தியை செய்தியாக எழுதாமல் தங்கள் வியாபாரத் திணிப்பையும் சேர்த்தே எழுதுகிறார்கள்.

செய்திகளை தெரிந்துகொள்ள பிரபல பத்திரிக்கைகளை வாங்கி படிப்பதை தவிர வாசகர்களுக்கு வேறு வழி இல்லை. சிறிய பத்திரிக்கைகளால் பொருளாதாரம் காரணமாக நிறைய செய்திகளை தர முடிவதில்லை. இதை பயன்படுத்தி பெரிய பத்திரிக்கைகள் வாசகர்களை முழுங்கி ஏப்பம் விடுகின்றன.

அவர்களை பொருத்தவரை மனித உணர்வுகளுக்கு மதிப்பில்லை பரபரப்பு விருவிருப்பு ஒன்று தான் முக்கியம். வாசகர்கள் தான் இடம் பொருள் ஏவல் அறிந்து உச்சு கொட்டிக்கொள்ள வேண்டும்.

நன்றி.

துளசி கோபால் சொன்னது…

அடப்பாவமே:(

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்டம் அளித்த அனைத்து மனித நல ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்