பின்பற்றுபவர்கள்

20 பிப்ரவரி, 2012

இந்துத் தீவு - பகுதி 5

நாகரீகம் என்பது வெற்றி பெற்ற இனம் பின்பற்றும் வாழ்வியல் முறைகள் என்ற புரிந்துணர்வே என்று பரவலாக பிற இனங்கள் அவர்களை பின்பற்றுவதில் இருந்து புரிய வைக்கப்படுகிறது. பொருளியல் மற்றும் பகட்டின் பகடையாக பயன்படுத்தப்படும் இவ்வித பிற இன வாழ்வியல் முறைகளை பின்பற்றுவதன் சலிப்பில் இருந்து தற்காலிக மீட்சி, இழந்ததைத் தேடுதல் என்ற அளவில் அவற்றை நோக்கிய பயணம் தான் கிராமிய கலைகள் பற்றிய ஆர்வம். எதையும் இழந்துவிட்டு தேடுவதுதான் அன்றும் இன்றும் வாடிக்கையாக நடைபெறும் மனிதனின் தேடுதலாக இருக்கிறது

******

இரண்டாம் நாள் பாலித் தீவு சுற்றுலாவில் எங்களுக்கு மிக முக்கியமான நாள், அன்று நாள் முழுவதும் சுற்றுலாவிற்கான திட்டமிடல் இருந்தது, விடுதியில் இலவச காலை உணவு, 40க்கும் மேற்பட்ட உணவு வகைகள், ப்ரட் வகைகள், பானங்கள். எது எது அசைவம், சைவம் என்று கண்டிபிடிக்க ஆர்வம் இல்லாததால், ப்ரட் மற்றும் ஓட்ஸ் வகை உணவுகளையும், கொஞ்சம் பழங்களையும், காஃபி குடித்துவிட்டு ஆயத்தமானேன், பிறர் அனைத்தையும் கட்டு கட்டினர். காலை 8:30 மணிக்கு சுற்றுலா பேருந்தில் ஏறி அமர்ந்தோம், நேற்றைக்கு வானூர்தி நிலையத்தில் இருந்து அழைத்துவந்த அதே வழிகாட்டி தான். பொதுவாக பாலித் தீவின் வழிகாட்டிகள், சுற்றுலாவாசிகள் விரும்பிக்கேட்கும் இடங்கள் தவிர்த்து செல்லப் போகும் இடங்களையும் பாலித் தீவினர் பின்பற்றும் பண்பாடுகள் பற்றி தான் நிறைய பேசுகிறார்கள். பேச்சினிடையே அவர்கள் பின்பற்றும் பண்பாடுகள், கலை பற்றிய பெருமிதம் அவர்களின் பேச்சில் இருந்து தெரியவருகிறது. நாங்கள் அன்று செல்லப் போகும் இடத்தில் முதலாவது 'பாரங் நடனம்'. விடுதியில் இருந்து 40 நிமிடங்களில் அந்த இடம் வந்துவிடும், இடையே பயணத்தின் போது, பாலித் தீவினர் பண்பாடு மற்றும் கலைகள் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தார்.

"பாலி இந்துத் தீவு (பதிவுக்கு தலைப்பிட இதுவே காரணம், பாலியை அவர்கள் Ba..lli என்றே கொஞ்சம் இழுத்துச் சொல்லுகிறார்கள்), இந்தோனேசியவிலுனுள் இந்துக்கள் பெரும்பான்மை பெற்ற தீவு, பாலி இந்துக்களின் தனி உரிமைகள் இங்கு சட்டமாக்கப்பட்டுள்ளது, இந்தோனேசிய அரசு எங்களை எங்கள் விருப்பப்படி வாழ அனுமதிக்கிறது, தன்னுடைய (இஸ்லாம்) மதம் சார்ந்த சட்டங்களை பாலியில் இந்தோனேசியா வலியுறுத்துவதில்லை, இந்தியாவில் இந்து மதத்திற்கு எங்கள் மதத்திற்கும் நிறைய வேறுபாடுகள், நாங்களும் சாதிகளை பின்பற்றுகிறோம், ஆனால் இந்தியாவில் இருக்கும் அளவிற்கு கட்டுப்பாடுகள் இல்லை (இதை சிலர் வருத்தத்தோடு குறிப்பிடுகிறார்கள், அட நாங்களே சாதிகளை ஒழிக்க இந்துத்துவாக்களிடம் முட்டிக் கொண்டு இருக்கிறோம், உங்களுக்கு அப்படி இல்லையேன்னு வருத்தமா ? என்று நினைத்துக் கொண்டேன்) , நாங்கள் நான்கு அடுக்கு சாதி முறையை பின்பற்றுகிறோம்" என்று கூறி நான்கு வருணங்களையும் அவற்றில் இருப்பவர்களின் வேலையையும் குறிப்பிட்டார்.

ப்ராமணா உயர் வகுப்பு, அவர்கள் தான் எங்கள் கோவில்களில் சடங்குகளையும் எங்களது பிறப்பு, திருமண, இறப்பு நிகழ்ச்சிகளை செய்து தருவார்கள், ஆனால் இங்கு இந்தியாவில் இருக்கும் தீண்டாமை கிடையாது, நாங்கள் ப்ராமணாக்களை மிகவும் மதிக்கிறோம். என்றார் (இது போல் இந்தியாவிலும் இருந்தால் என்ன பிரச்சனை ஆகிடப் போகிறது, அது தவிர்த்து உயர் பதவிகள், அரசியல் பதவிகள் முதற்கொண்டு, நகரத்தில் நல்ல வருமானம் தரும் கழிவறையையும் குத்தகை எடுத்துக் கொண்டு, அனைத்து பணம் கொழிக்கும் தொழில்கள், ப்யூட்டி பார்லர் என நடத்திக் கொண்டு நாங்கள் ப்ராமணர் உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டால் யார் தான் ஏற்பார்கள் ?, தவிர தீண்டாமைக்கு தூபமிட்டு கோவில்களின் கதவுகளை அடைத்துக் கொண்டு, நீ தீண்டத்தகாதவன், ஒதுக்கப்பட்டவன், சேரியில் வசிப்பவன் என்று தூற்றியதால் பலர் வேண்டாம்யா உங்க 'சோ' கால்ட் இந்து மதம் என்று ஓடிவிட்டார்கள்)

நான்கு வருணம் இருந்தாலும் 90 விழுக்காடு சூத்திரர்களாகத் தான் அறியப்படுகிறோம் என்றார், எங்களுக்குள் பிரிவு என்பது தொழில் அடிப்படையிலானது மற்றபடி ஒருவர் இல்லாது எந்த நிகழ்வும் இங்கே நடைபெற சாத்தியமே இல்லை. என்றார்

பாலி இந்துக்கள் சாதிப்பகுப்பு பற்றிய சுட்டி


அடுத்து பாலியில் வைக்கப்படும் பெயர்கள் பற்றிச் சொன்னார். பாலித் தீவினர் பெயர்கள் புற உலகில் இருந்து மாறுபட்டவை, ஒருவரது பெயரில் ஆண்-பெண், பிறந்த வரிசை அமைப்பு, சாதி அடையாளம் மற்றும் தனிப் பெயர் ஆகிய நான்கு பகுதிகள் உண்டு. அதாவது ஒருவரின் முழுப் பெயரை வைத்து அவர் ஆணா பெண்ணா, அவர் பெற்றொருக்கு அவர் எத்தனையாவது குழந்தை, அவருடைய சாதி என்ன மற்றும் அவரது தனிப் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்

முதல் குழந்தைக்கு 'வயான்(Wayan)', இரண்டாம் குழந்தைக்கு 'மேட்(Made), மூன்றாம் குழந்தைக்கு நியோமன்(Nyoman), நான்காம் குழந்தைக்கு கேடுட் (Kedut)'. இதன் தொடர்ச்சியில் ஐந்தாம் குழந்தை பிறந்தால் அதற்கு பெயர் 'அடுத்த வயான்', ஆறுக்கு 'அடுத்த மேட்', ஏழுக்கு 'அடுத்த நியூமான்', எட்டுக்கு 'அடுத்த கேடுட்'. ஒன்பதாம் குழந்தைக்கு 'கடைசி வயான்' இப்படியாக 12 குழந்தைகள் பிறக்கும் வரிசைக்கு பெயர் வைத்து அதன் படியே எந்த ஒரு குழந்தை அது ஆண் பெண் என்றாலும் வரிசைப்படி இருக்கும். பிறகு ஆண் பெண் குறித்த அடையாளம் 'I' (ஆண்) மற்றும் 'Ni' (பெண்) குறித்த அடையாளம், பிறகு சாதிப் பெயர்கள் இடம் பெறும், சூத்திரர்களுக்கு தனி அடையாள சாதிப் பெயர்கள் கிடையாது மற்றவர்களுக்கு உண்டு. பிறகு தனிப் பெயர்கள்.


There's no special names for people from Sudra caste. They usually only use the names which denotes birth position. Traditionally they will only add word I for male and Ni for female in front of their names.

K'satria caste
Names for K'satria caste :
Anak Agung (male), Anak Agung Ayu or Anak Agung Istri (female)
Tjokorda, sometimes abbreviated as Tjok (male), Tjokorda Istri (male)
. The word Agung means "great", or "prominent". The word Tjokorda is a conjunction of the Sanskrit words Tjoka and Dewa. It literally means the foot of the Gods, and is awarded to the highest members of the aristocracy. A typical name might be Anak Agung Rai, meaning a Ksatrya,whose personal name means "The Great One". It is more difficult to differentiate sexes among the k'satrya people, though personal names often tell, like Putra, or Prince, for a boy, and Putri, or Princess, for a girl.

மேலும் பார்க்க சுட்டி

சாதி முறையைப் பின்பற்றாத பிற இந்தோனேசியர்கள் குறிப்பாக இந்தோனேசிய இஸ்லாமியர்களின்(மேகவதி சுகர்னோ புத்ரி), சீனர்களின் பெயர்கள் அண்மைவரையிலும் வடமொழிச் சார்ந்த பெயர்களே பின்பற்றப்படுகிறார்கள். கிறிஸ்துவத்தைப் பின்பற்றாத பிற நாடுகளில் குறிப்பாக தைவன், ஹாங்காக், சிங்கப்பூரில் சீனர்களிடையே கிறிஸ்துவ பெயர்கள் மிகவும் பயன்படுத்தப்படுபவை, 'Andrew Wong' 'Stephen Lee' போன்று ஆங்கிலப் பெயர்களுடன் குடும்ப பெயர்களை சேர்த்து வைத்துக் கொள்வார்கள், இதன் பொருள் அவர்கள் ஆங்கில நாகரீகத்தை அல்லது கிறிஸ்வது நாகரீகத்தை போற்றுகிறார்கள் என்று பொருளல்ல, வேறு காரணம் ஆங்கிலப் பெயர்களில் ஆண் பெண் பெயர்கள் ஏற்கனவே பலரால் அறியப்பட்டவை என்பதால் தான் முழு சீனப் பெயரை வைத்து ஒருவர் ஆணா பெண்ணா என்று அறிய முடியாது என்பதால் பல்சமூகமாக வசிக்கும் இடங்களில் கிறித்துவ பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள், முகம் தெரியாத ஒருவரை நிறுவனம் தொடர்பில் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போது அவர் 'மிஸ்டர்' அல்லது 'மிஸ்' என தெரிந்து கொள்ள கிறிஸ்தவ பெயர்கள் பயன்படுகின்றன. இந்தோனேசிய பழங்குடி சமூகங்களாக இருந்து பல்வேறு மதத்தினராக வளர்ந்த பிறகும் முன்பு பின்பற்றிய வடமொழிப் பெயர்களையே தொடர்கிறார்கள், பாலித் தீவில் வடமொழிப் பெயர்களுடன் கூடுதலாக பிறந்த வரிசை, ஆண்-பெண் அடையாளம் மற்றும் சாதிப் பெயர்களும் இடம் பெறும்.

வழிகாட்டி 10 நிமிடம் பேசிக் கொண்டு இருந்தார், கடற்கரை நகரம் தாண்டி வயல்வெளி நிறைந்த கிராமங்களுக்கு நுழைந்தது பேருந்து, நெருக்கமான வீடுகள் கடைகள், பசுமைகள் என்பது தவிர்த்து நகரம் மற்றும் கிராமங்களுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை, காரணம் வீடுகளில் 95 விழுக்காடு பாலி கட்டிடக் கலையே பின்பற்றப்பட்டு இருந்தது, பெட்ரோல் பங்குகள் மற்றும் நான்கு மாடி கடைகள் கூட பாலி கட்டிடக் கலையின் முகப்புகளையே கொண்டு இருந்தன.

பாலியில் உயரடுக்கு மாடிக் கட்டிடங்களை காண முடியாது, அதற்கு தடையாம், இயற்கைச் சூழலை கெடுக்கிறது என்பதாக அவை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூடவே நிலநடுக்கத்திற்கு வாய்பான இடம் என்பதால் தென்னை மர உயரத்திற்கு மேல் பாலியில் வீடுகள் நிறுவனங்கள் கட்டத் தடை.

நான் கண்டவரை வேறெந்த நகரைக்காட்டிலும் பாலித் தீவு முழுவதும் 1000க் கணக்கான, லட்சக்கணக்கான கோவில்களால் நிரம்பியுள்ளது, அவர்கள் அதனை கடவுளின் நாடு என்று கேரளத்தவர் போன்று சொல்லிக் கொள்கிறார்கள், கேரளத்தவரை விட இவர்கள் சொல்வதில் பொருளும் உண்டு, ஆம் நான் கண்ட சாலைகள், பயணம் செய்த இடங்கள் அனைத்திலும் கோவில்கள் இல்லாத இடங்களே இல்லை. ஏன் எதற்கு இவ்வளவு கோவில்கள் ? வழிகாட்டி அதனையும் விளக்கினார்.
பாலி இந்துக்கள் பொதுவாக கூட்டுக் குடும்பமாக வசிப்பவர்கள், அவர்களின் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் குடும்பக் கோவில்கள் அவர்களின் வீட்டுச் சுற்றுவரினுள்ளேயே வெளியே தெரியும் படி கட்டப்பட்டுள்ளது, நம் ஊரில் குலதெய்வம் கோவில் என்று எதோ ஒரு வயல்காட்டில் ஆள் அரவம் அற்ற பகுதியில் இருப்பதைப் போல் இல்லாமல் இவர்கள் வீடும் கோவிலும் அடுத்து அடுத்து உள்ளது. 30 லட்சம் மக்கள் தொகையில் குடும்பத்திற்கு 10 பேர் என்று வைத்தாலும் 3 லட்சம் கோவில்கள் தேறும் போல் தெரிந்தது. அது தவிற கிராமத்திற்கு பொதுவான கோவில்கள் , உலுவாட் புரா போன்ற எல்லை கோவில்கள் என பெரிய கோவில்களும் பொது வழிபாடு தளமும் 100க் கணக்கானவை. ஒரு பெண் திருமணம் ஆன பிறகு அவளுக்கு குடும்பக் கோவிலில் உரிமை கிடையாது, ஒரே பெண்ணாக இருக்கும் போது மருமகனிடம் ஒப்படைக்கப்படுமாம், வாரிசே இல்லை என்றால் பொதுச் சொத்தாக்கப்படுமாம்.

பாராங் நடனம் நடைபெறும் இடத்தை அடைந்தோம்.

தொடரும்....

6 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

பெயர்களிலேயே முழு ஜாதகமும் இருக்கே:-))))

குலதெய்வம் குடும்பக்கோவில்களில் எந்த சாமி வச்சுக் கும்பிடுறாங்க?

கோவி.கண்ணன் சொன்னது…

//குலதெய்வம் குடும்பக்கோவில்களில் எந்த சாமி வச்சுக் கும்பிடுறாங்க?//

அவர்களுக்கு பொதுவானவை மும்மூர்த்தி வழிபாடு அவையும் குடும்பக் கோவினுள் உண்டு, தவிர முன்னோர்களில் வணங்கத்தக்கவர்களுக்கான நினைவு மண்டபமும் உள்ளே இருக்குமாம். பொதுவாக தனித் தனி மண்டபம் போன்ற அமைப்பைக் கட்டுகிறார்கள் உள்ளே சிலை எதுவும் இல்லை, அங்கு பூக்கள் மற்றும் உணவு பொருள்களை ஓலைத்தட்டில் வைத்து வழிபடுகிறார்கள், மண்டபங்களில் சிவப்பு வெள்ளை மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களில் ஏதோ ஒன்றை சுற்றி இருக்கிறார்கள், துணியின் நிறம் அவர்கள் வணங்கும் கடவுளுக்கு முன்னோர்களுக்கு ஏற்றதாக கட்டுவார்கள் என்றே நினைக்கிறேன்

naren சொன்னது…

வெளி நாடுகளுக்கு சுற்றுலா சென்று பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று பாலி தீவும் ஒன்று என்ற பேராசை இருக்கின்றது நிறைவேறுமா என்று தெரியவில்லை. ஆனால் இந்த தொடர் பதிவுகளால் ஒசியில் பாலி தீவுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளீர்கள். நன்றி.

R.Puratchimani சொன்னது…

//ஒருவரது பெயரில் ஆண்-பெண், பிறந்த வரிசை அமைப்பு, சாதி அடையாளம் மற்றும் தனிப் பெயர் ஆகிய நான்கு பகுதிகள் உண்டு. அதாவது ஒருவரின் முழுப் பெயரை வைத்து அவர் ஆணா பெண்ணா, அவர் பெற்றொருக்கு அவர் எத்தனையாவது குழந்தை, அவருடைய சாதி என்ன மற்றும் அவரது தனிப் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்//

வயது?:)

பயணக்கட்டுரை அருமை

கோவி.கண்ணன் சொன்னது…

//வயது?:)
//

முகத்தை வைத்து தான் சொல்லனும் :)


//பயணக்கட்டுரை அருமை//

மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

// naren said...
வெளி நாடுகளுக்கு சுற்றுலா சென்று பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று பாலி தீவும் ஒன்று என்ற பேராசை இருக்கின்றது நிறைவேறுமா என்று தெரியவில்லை. ஆனால் இந்த தொடர் பதிவுகளால் ஒசியில் பாலி தீவுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளீர்கள். நன்றி.//

பாலி பார்க்க வேண்டிய தீவு தான், பாரம்பரியம் பின்பற்றப்படும் ஒரு சில நாடுகளில் பாலித் தீவும் ஒன்று. மாச மாசம் பணம் கொஞ்சம் சேர்த்து வையுங்கள். முயற்சி வெற்றியாகும்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்