இதன் மையக் கருத்து அப்படியே இருக்க, இதை அரசு மற்றும் சுற்றுலா சார்ந்த விழாவாக்குவதன் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி வெளிநாட்டு பயணிகளை ஈர்க்க முடியும் என்பதற்காக இந்த ஊர்வலங்களை சிங்கப்பூர் அரசு இணைந்து நடத்துவதுடன், நடைபெறும் நாளில் நடக்கும் சாலைகள் உள்ளிட்டவைகளில் போக்குவரத்து ஒழுங்குகளையும் அமைத்து வழிவிடுகிறது. சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் கண்டு களிக்கும் முக்கிய ஊர்வலங்களில் தைப்பூசக் காவடி ஊர்வலமும், இந்த சிங்கே ஊர்வலமும் குறிப்பிடத் தக்கவை. (இன்று முதல் நாளை பின்னிரவு வரை தைப்பூச காவடி ஊர்வலங்களை சிங்கையில் காணலாம், கிட்டதட்ட 4 கிமீ அளவுக்கு ஊர்வல சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி வசதி செய்து தரும்)




சிங்கே ஊர்வல விழாவில் சீனர்கள் மட்டுமென்றி பல்வேறு இனங்களும் தங்கள் பண்பாட்டுச் சின்னங்களுடன் ஆடிச் செல்வர், சீன, மலாய், இந்திய, ஐரோப்பிய மற்றும் ஆசிய கலாச்சார ஊர்வல ஊர்திகளுடன் அந்தந்த நாட்டு பாடல் நடனம் ஆகியவையும் இடம் பெறும், மொத்தம் 10,000 கலைஞர்கள் பங்குபெறும் ஊர்வலம் கிட்டதட்ட ஒரு கிலோமீட்டர் எல்லைக்கு ஊர்ந்து சென்று அங்கே குறிப்பிட்ட இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி நகர்ந்து நகர்ந்து செல்வர், துவக்க இடத்தில் பார்வையாளர் அரங்கம் அமைக்கப்பட்டு இருக்கைகளுக்கான கட்டணம் 25,50,75, 100 வெள்ளிகள் அளவில் விற்பனை செய்யப்படுகிறது, மற்ற இடங்களின் ஊர்வலத்தை இலவசமாக கண்டு களிக்கலாம், ஊர்வலம் நிறைவை ஒட்டு சுமார் 10 நிமிடங்களுக்கு கண்கவர் வான வேடிக்கைகளுடன் நிறைவு பெறும்.
சீன ஆண்டின் விலங்குச் சின்னங்களுக்கு ஏற்ப சீன நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டும் பிற இனம் தொடர்பில் ஆண்டுக்கு ஒருமுறை அவர்களின் பண்பாட்டு சின்னங்களும் ஊர்வலத்தில் இடம் பெறும், இந்த ஆண்டு இந்தியர் சார்பில் அமைக்கப்பட்ட ஊர்வலத்தில் பட்டத்து யானை மாலை சுமந்து செல்வது போன்ற காட்சி, சுமார் 300 இந்திய கலைஞர்கள் பல்வேறு வண்ணங்கள், அலங்காரங்களில் ஆடிச் சென்றனர். இந்த ஆண்டு டிராகன் ஆண்டு என்பதால் 100க் கணக்கான டிராகன்களை ஊர்வலத்தில் பார்க்க முடிந்தது.
சிங்கைக்கு சுற்றுலாவருபவர்கள் சீனப் புத்தாண்டின் பிறகு வரும் வாரங்களில் வருகைக்கு திட்டமிட்டால் இந்த நிகழ்ச்சியை காணலாம், இவை பெரும்பாலும் சிங்கப்பூர் ப்ளையர் எனப்படும் சுற்றுலா தளத்தில் இருந்தே துவங்குகிறது. இந்த ஆண்டு அங்கே தண்ணீர் தடாகம் அமைக்கப்பட்டு அதன் மீது நிகழ்ச்சிகள் நடந்தன




படங்கள் : http://www.facebook.com/passionchingayclub
மேலும் படங்கள் : இங்கே
3 கருத்துகள்:
படங்கள் அருமை கோவியாரே.
அருமை!!!! ரசித்தேன்!
நானும் சென்று இருந்தேன்.. சிறப்பாக இருந்தது பெரும்பாலும் மாணவர்கள் தான் வந்தார்கள்.. கடைசியாக வயதானவர்கள் 1200 பேர் ஓடியது எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. எப்படித்தான் ஓடினார்களோ!
கருத்துரையிடுக