பின்பற்றுபவர்கள்

17 பிப்ரவரி, 2012

இந்துத் தீவு - பகுதி 3

நாட்டுக்கு நாடு எதோ ஒரு தனித் தனியான பண்டிகைகள் உண்டு, இவை பெரும்பாலும் மதம் தொடர்பில் வருபவை, ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்மஸ் சீசன், இந்தியாவிற்கு தீபாவளி என்பது போல் பாலியில் கொண்டாடப்படும் பண்டிகைகள் தீபாவளி மற்றும் முன்பு சொன்ன குனிங்கன் - களுங்கன், பாலியின் தனித்துவமாக இந்தப் பண்டிகைகளின் முகங்களாக வாழ்த்து விளம்பரங்களும், தோரண அமைப்புகளும் காணப்பட்டன. உடலெங்கும் ஆணி அடிக்கப்பட்டு அதில் மாட்டப்படும் படங்களாக பண்டிகைகளை, மதச்சின்னங்களை அங்கங்கே அணிந்து கொண்டு இதில் எதிலும் க(ல)வரப்படாமல் சுத்துகிறது இந்த பூமி.

******

உலுவாட் டெம்பிளுக்கு செல்லும் வழியில் குனிங்கன் - களுங்கன் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தார் வழிகாட்டி, பின்னர் இணையத்தில் தேடி பார்த்த போது அது குறித்த மேலும் தகவல்கள் கிடைத்தன. ஆங்கில நாட்கள் தவிர்த்து பாலியர்களுக்கென்றே தனித்த இரு நாட்காட்கள் உள்ளது, ஒன்று 210 நாட்கள் கொண்டதாகவும், மற்றொண்டு 365 நாட்கள் கொண்ட நாட்காட்டி மதம் மற்றும் சடங்குகளுக்கு, அறுவடைகள் தொடர்பில் 210 நாட்கள் கொண்ட (Pawukon) நாட்காட்டி உள்ளது. இந்த நாட்காட்டி வழக்கப்படி பாலி இந்து குழந்தையின் முதல் பிறந்த நாள் 210 நாட்களில் வந்துவிடும். குனிங்கன் - களுங்கன் 210 நாள் நாட்காட்டி படி அவர்களின் கடைசி பண்டிகை, குனிங்கனில் பூமிக்கு வரும் கடவுள்கள் பத்து நாட்கள் தங்கிவிட்டு களுங்கன் அன்று செல்வார்களாம். இந்த நாட்களின் கடவுள்களை வரவேற்கும் முகமாக அனைத்து பாலி இந்து வீடு, கடைகள், நிறுவனங்கள் மற்றும் நிலங்களில் ஒற்றை மூங்கில் ஓலை அலங்காரம் செய்யப்பட்டு அவை உச்சி வளைவாக நிற்கின்றன, அடிப்பாகத்தில் கழுத்து உயரத்தில் மூங்கில்களால் மாடம் போல் செய்யப்பட்டதில் சிறிய ஓலைத்தட்டில் பூக்கள் மற்றும் உணவு பொருள் சிலவற்றை வைத்திருக்கிறார்கள். பாலியின் பண்டிகைகளில் பெரும்பாலானவை 210 நாட்களுக்கு ஒருமுறை திரும்பவரும்.

நாங்கள் சென்ற சனிக்கிழமை 'களுங்கன்' அதாவது கடவுள்கள் திரும்பும் நாளாம், அன்று கோவில்களுக்குச் சென்றுவிட்டு அடுத்த நாள் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வார்களாம், நகரெங்கும் வீடுகள் கடைகள் முகப்பில் மூங்கில் அலங்கார வரவேற்புகள் தென்பட்டன. பாலித் தீவு எங்கும் இவ்வாறான காட்சிகள் சாலை தோறும் காண முடிந்தது. கோவில்கள் 'புரா' என்று அழைக்கப்படுமாம், நாங்கள் சென்றது 'உலுவாட் புரா' மேலும் பார்க்க

http://baliwww.com/event/galungan.htm

வழிகாட்டி பாலி பண்பாடுகள் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தார், பாலியில் மட்டும் ஏன் இவ்வளவு இந்துக்கள் ? என்று கேட்டேன், ஜாவா தீவில் 400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இஸ்லாமிய மதமாற்றத்தை ஏற்க விரும்பாதவர்கள் அதிலிருந்து தப்பி தஞ்சமடைந்தது பாலி தான். எங்களுக்கு எங்கள் கல்சர் முக்கியம் அதைத் தற்காத்துக் கொள்ள சரியான இடம் என்று பாலிக்கு பல்வேறு இந்தோனேசிய பழங்குடிகள் மற்றும் இந்துக்கள் இங்கு குடியேறி பாலியினமாக மாறிக் கொண்டனர் என்றார். அவர் குறிப்பிட்டதை பின்னர் இணையத்தில் தேடிய போது பாலியை நோக்கி கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக மூன்று முறை பழங்குடி இந்துக்களின் இடப் பெயர்வு நிகழ்ந்திருப்பது தெரிந்தது, ஆகக் கடைசியாக நிகழ்ந்ததை அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அவ்வாறு அவர் சொல்லும் போது, தொடர்ந்து இஸ்லாமிய பிரச்சாரப்பதிவுகளை படிப்பதால் என்னவோ, 'ஏக இறைவனையும் இறுதித் தூதரையும் ஏற்றுக் கொண்டு நிரந்தர சொர்கமும் அங்கே நித்திய கன்னிப் பெண்களையும் பெற வேண்டிய பாக்கியத்தை உதறித்தள்ளிவிட்டு ஓடிவந்த அதிர்ஷ்டம் அற்றவர்கள் இவர்கள் தானா ? ஜாவா, மலேசியாவாழ் மக்களுக்கு வாய்த்த அதிர்ஷ்டம், அவர்களை நாடிய ஏக இறைவன் இவர்களை ஏன் நாடவில்லையோ?' இருந்த போதிலும் இறைவன் நன்கு அறிந்தவன்' என்று நினைத்துக் கொண்டேன்.

When Islam surpassed Hinduism in Java (16th century), Bali became a refuge for many Hindus. Balinese Hinduism is an amalgam in which gods and demigods are worshipped together with Buddhist heroes, the spirits of ancestors, indigenous agricultural deities and sacred places. Religion as it is practiced in Bali is a composite belief system that embraces not only theology, philosophy, and mythology, but ancestor worship, animism and magic. It pervades nearly every aspect of traditional life. Caste is observed, though less strictly than in India. With an estimated 20,000 puras (temples) and shrines, Bali is known as the "Island of a Thousand Puras", or "Island of the Gods".[48]
http://en.wikipedia.org/wiki/Bali


Main article: History of Bali
The origins of the Balinese came from three periods: The first waves of immigrants came from Java and Kalimantan in the prehistoric times of the proto-Malay stock; the second wave of Balinese came slowly over the years from Java during the Hindu period; the third and final period came from Java, between the 15th and 16th centuries, at the time of the conversion of Islam in Java, aristocrats fled to Bali from the Javanese Majapahit Empire to escape Islamic conversion, reshaping the Balinese culture into a syncretic form of classical Javanese culture with many Balinese elements.

பாலியினர் உணவு ஹலால் கிடையாது, ஒரு சில சடங்குகளின் போது பச்சை இரத்தத்தில் (பன்றி, கோழி) பழங்களை வெட்டிப் போட்டு சாப்பிடுவார்களாம், பன்றி இறைச்சி அவர்களின் உணவுக்களுக்குள் முக்கியமானது

பாலியின் விலையேறிய நிலங்கள் என்ற அளவில் நூசாதுவாவிற்கே அதிக விலையாம், ஒரு காலத்தில் இலவசமாக இங்கு குடியமற்விற்காக நிலங்கள் வழங்கப்பட்டதாம், இப்போது நடுத்தரவர்கம் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளதாகவும், அங்கே பன்னாட்டி விடுதிகள் கட்டப்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டார். நூசாதுவாவின் எதிர்புறம் 3 கிலோ மீட்டர் தள்ளி அதே கடல் பகுதியில் கடலுக்கு 70 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைப்பாங்கான அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது தான் உலுவாட் டெம்பிள், அங்கு நுழைவாயிலுக்கு அருகே பேருந்து நிற்க, கோவிலுக்குள் செல்வதற்கான கட்டுபாடுகள் குறித்து வழிகாட்டிக் கூறினார்."மாதவிலகான பெண்கள் கோவில் வளாகத்தினுள் நுழைய அனுமதி இல்லை, ஏனெனில் இந்த இடம் புனித இடம், பாலியினர் தவிர்த்து பிறர் கோவில் வளாகத்தினுள் செல்லலாம் ஆனால் கோவிலின் மையப் பகுதிக்குச் செல்ல அனுமதி இல்லை, தவிர அரைக்கால் சட்டை அல்லது முட்டி தெரியும் படி ஆடை அணிந்திருப்பவர்களுக்கு அதை மறைத்து சுற்றிக் கட்டிக்கொள்ள இலவசமாக துண்டு வழங்கப்படுகிறது, மற்றவர்கள் அங்கு வழங்கப்படும் நாடக்களை இடுப்பில் சுற்றிக் கொள்ள வேண்டும்" என்றார்

"இங்கு குரங்குகள் ஏரளமானவை, மிகவும் அறிவுள்ளவை மற்றும் ஆபத்தானவை, உங்கள் உடைமைகளை பறித்துக் கொண்டுவிடும், எனவே மூக்கு கண்ணாடி, தோடு, கழுத்து சங்கிலி ஆகியவற்றை மறைவாக வைத்துக் கொள்ளவும் " என்று எச்சரித்தார்.

கோவில் வளாகத்தின் மையப் பகுதிக்கு நுழைவாயிலில் நுழைந்து ஐந்து நிமிடம் நடக்க கோட்டை போன்ற சற்று உயரமான அமைப்பின் மேல் பழைய கோவில்கள் போல் காணப்பட்டன, அதற்கு முன்பே சுவர்களில் அங்கங்கே குரங்குகள் காத்துக் கொண்டு இருந்தன. மேலே ஏறிச் செல்லும் படிக்கட்டுகள் இருபக்கமும் குரங்கள் யாராவது ஏமாறுவார்களா என்று பார்த்தப்படி இருந்தன, அவைகளுக்கு பழங்கள் வெட்டப்பட்டு வைக்கப்பட்டு இருந்தன. கொஞ்ச தூரம் நடந்ததும் உடன் வந்த ஒரு பெண் அலறினார், செருப்பை கவ்விச் சென்ற குரங்கு ஒன்று அதை கடித்துக் கொண்டு இருந்தது, வேறு வழியின்றி அடுத்த செருப்பையும் கழட்டிப் போட்டு நடக்கத் துவங்கினார், இன்னும் சற்று மேலே மூக்குகண்ணாடியின் பாகங்கள் கிடந்தன. அதையும் தாண்டி மேலே செல்ல இடது பக்கம் பார்க்க செங்குத்தாக முடிவுற்ற பாறைகள் அதன் அடிப்பாகத்தில் கடல் அலை அலையாக மோதி ஆர்பறித்துக் கொண்டு இருந்தது.
எட்டிப் பார்க்க கிடு கிடு பள்ளம். இன்னும் சற்று மேலே ஒரு 60 அடி அகலத்திற்கு உச்சி முடிவுற்றது அங்கே கோவில் கோபுரங்கள் தென்பட்டன, அதில் அன்றைய நாள் களுங்கன் என்பதால் பாலியினர் தங்கள் சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். அவர்களில் சிலருக்கு ஒரு முதியவர் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். ஆர்வக்கோளாரால் அவர்கள் எடுத்துச் செல்லும் கூடைகளில் என்ன வைத்திருக்கிறார்கள் என்று கேட்க, திறந்து காட்டினார்கள், எல்லாம் அசைவம். அங்கு இந்து சாமிகள் அசைவம் தான் சாப்பிடுகின்றனர். விசாரிக்க அவர்களும் மும்மூர்த்திகளை வணங்குவார்களாம். எல்லாக் கோவில்களிலும் மும்மூர்த்திகள் உண்டு. கூடவே துட்ட தேவதைகளுக்கான பயமும் அவர்களுக்கு உண்டு, அவைகளுக்கான உணவை தரையில் வைத்துப் படைக்கின்றனர். மதில் மேல் காணப்பட்ட படையலில் கருவாட்டு துண்டு கூட இருந்தது. உச்சியின் கீழ் இறங்க வலது பக்கம் படிகள், மதில் சுவற்றை ஒட்டி அடுத்தப் பக்கம் பார்க்க அதே போன்று செங்குத்தாக முடிவுறும் மலைப்பகுதி மற்றும் இந்திய பெருங்கடல் காணப்பட்டது.

கோவிலுக்கு நேர் எதிரே மரங்கள் நிறைந்த திடல் ஏராளமான குரங்குகள், சுற்றுலாவாசிகள் இருந்தனர், ஒரு குரங்கு லாவகமாக ஒருவரின் கண்ணாடியை லபக்கிக் கொள்ள, அங்கு குரங்குகளிடம் இருந்து அதை பறித்து கொடுத்து பேரம் பேசி பணம் வாங்கிக் கொள்பவர்களும் இருந்தனர், அவர்களில் ஒருவர் குரங்கிடம் பழத்தை நீட்ட கண்ணாடியை தூக்கி எறிந்து பழத்தைப் பெற்றுக் கொண்டது, கண்ணாடி உடையாமல் இருந்தால் அதிர்ஷடம் பின் பக்கம் வீசி இருந்தால் கடலுக்கு இரை.

(மேலே உள்ளபடத்தில் குரங்கு சுற்றுலாவாசியின் கண்ணாடியைத் தூக்கிக் கொண்டு உடைக்கத் துவங்கியது)


சுமார் ஒரு மணி நேரம் சுற்றிப் பார்த்தோம் மாலை மங்கி இருந்து இரவு பொழுது விழிக்கத் துவங்கி இருந்தது. நாங்கள் பேருந்தில் ஏறி விடுதிக்கு வந்தோம், அன்றைய நாள் இரவு விருந்தை தான் அளிப்பதாக எங்கள் அலுவலக உடைமையாளர் கூறி இருந்தார். அதுவும் ஒரு கடற்கரை பகுதியில் தான், 7:30 மணிக்கு புறப்பட்டு போக்குவரத்தில் ஊர்ந்து செல்ல இரவு விருந்து நடக்கும் ஜிம்பாரான் பகுதிக்கு வர இரவு 8:30 ஆகி இருந்தது. கடற்கரை மணலில் மேசை நாற்காலி போடப்பட்டு அசத்தலான இரவு உணவு. எனக்கும் எதோ சைவ உணவு ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லி இருந்தனர்.


(கீழே உள்ள படங்கள், இணையத்தில் எடுத்தவை, இது போன்ற காட்சிகள் அங்கங்கே காணப்பட்டன, பேருந்துனுள் இருந்து தெளிவாக எடுக்க முடியவில்லை)

********

சலாமத் குனிங்கன் - களுங்கன்


இந்த ஒருநாள் நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் ஒரு பதிவு மீதம் இருக்கிறது, முக்கியமாக பாலி வெடிகுண்டு தீவிரவாத தாக்குதல் பற்றி எழுத வேண்டியது உள்ளது, பதிவின் நீளம் கருத்தில் கொள்ளும் போது நிறைய எழுத இயலவில்லை மற்றும் ஒரே பகுதியில் அனைத்தையும் எழுதினாலும் படிக்க அலுப்பாகிவிடும். இறைவன் நாடினால்....தொடர்வேன்

4 கருத்துகள்:

பிரியமுடன் பிரபு சொன்னது…

:)

துளசி கோபால் சொன்னது…

அப்ப நான் ஞானக்கண்ணால்தான் சாமியைப் பார்க்கணும். மதுராவிலும், ஹர்துவாரிலும் குரங்குகள் அட்டகாசம் சொல்லிமாளாது.

அங்கங்கே சில தட்டச்சுப்பிழைகள் இருக்கின்றன. சரி பண்ணிருங்க.

எ.கா: //மதவிலகான பெண்கள்//
எப்பவும் மதமே நினைவா:-)))))

கோவி.கண்ணன் சொன்னது…

//எ.கா: //மதவிலகான பெண்கள்//
எப்பவும் மதமே நினைவா:-)))))//

பெண்களை மதம் விலக்குது என்று எனக்குள் ஆழமாக பதிந்துவிட்டதோ என்னவோ!

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்ப நான் ஞானக்கண்ணால்தான் சாமியைப் பார்க்கணும். மதுராவிலும், ஹர்துவாரிலும் குரங்குகள் அட்டகாசம் சொல்லிமாளாது.//

அங்கு சாமின்னு எனக்கு ஒண்ணும் தெரியவில்லை, துவாரபாலகர் போன்று கோபுரம் அருகே சிலைகள் உண்டு, உள்ளே எட்டிப்பார்க்க துளசி மாடம் போன்று பெரிய அளவி செய்து அதில் மஞ்சள் துணி சுற்றி இருக்கிறார்கள், மற்ற சிவா, விஷ்னு, பிரம்மாவை எங்கும் காணவில்லை, அவை அந்த மண்டப்பத்திற்குள் இருப்பதாக நினைப்பார்கள் போலும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்