பின்பற்றுபவர்கள்

10 நவம்பர், 2009

மஹா ராஷ்ட்ராவில் பரவும் திராவிட வியாதி :)

இருமொழி திட்டம் என்ற பெயரில் தேசிய ஒருமைப் பாட்டுக்கு ஏற்ற ஹிந்தி மொழியை தமிழகத்தில் நுழைய விடாமல் செய்துவிட்டனர் திராவிட இன வெறியர்கள். தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் இராமசாமி இதற்கு தலைமை ஏற்று தேசிய மொழி ஹிந்தியை புறக்கணிக்கச் செய்தார்

ஹிந்தியை பேசவும் எழுதவும் கேட்கவும் முடியாததால் தமிழ்மக்கள் பட்ட துன்பங்களாக சான்றோர்கள் ஆவணப்படுத்துவது,

1. அமிதாப்பச்சன், ஷாருக்கான் போன்ற ஹிந்தி சூப்பர் ஸ்டார்களின் திரைப்படங்களை தமிழக மக்கள் பார்க்க முடியாமல் அவதி உறுகின்றனர்
2. தமிழகத்தில் இருந்து வட இந்தியாவிற்கு சுற்றுலா செல்லும் தமிழக மக்கள் அங்கு எல்லா மாநிலங்களிலும் இருக்கும் ஹிந்தி அறிவிப்புகளை படிக்க முடியாமல் திணறுகின்றனர்
3. தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கும் வரும் தேசியத் தலைவர்களால் இந்திய தாய் மொழியான ஹிந்தியால் உரையாற்ற முடியாமல் போவதால் அவர்களால் தமிழக மக்களோடு மக்களாக பழகவோ, அவர்களை உள்ளப்பூர்வமாக அறிந்து கொள்ளவோ முடியவில்லை
4. பாம்பே மிட்டாய் விற்பவரும், சேட்டுகளும் தமிழ் கற்றுக் கொண்டால் தான் தமிழகத்தில் பிழைக்க முடியும் என்கிற துர்பாக்கிய நிலைக்கு இந்தியாவின் பிற பகுதி மக்கள் தமிழகத்திற்கு பிழைக்க வரும் போது அடைய நேரிடுகிறது
5. ஹிந்தியும், இந்துஸ்தானி இசையும் தமிழக மக்களிடம் அன்னியப்பட்டு நிற்பதால் இந்திய தேசியத்தின் பொது அடையாளமான தேசிய உணர்வுகள் அவமானப்பட்டுக் கிடக்கிறது

ஹிந்தியும் ஹிந்தி பேசுவதன் மகத்துவத்தையும் நாம் உணராததால் வட இந்திய மக்களுடன் நம்மால் ஒற்றுமையுடன் இந்தியாவை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் தமிழ் இனவாத திராவிட சித்தாந்த திராவிட கட்சித் தலைவர்களே.

திராவிட தலைவர்களின் ஹிந்தி எதிர்ப்பு காற்று மகாராஷ்டிரா பக்கமும் வீசிவிட்டதோ என்னவோ, இப்போதெல்லாம் மகாராஷ்டிராவில் ஹிந்தி மொழிக்கும், ஹிந்தி பேசுபவர்களுக்கும் எதிராக வன்முறைகள் நடக்கின்றன. தேசிய மொழி ஹிந்தியில் பதவி பிராமணம் செய்து கொண்டது தவறாம், மஹாராஷ்டிராவில் நடந்த வன்முறைகளைப் இங்கே பாருங்கள், குறிப்பாக அதற்கு வாசகர்களிடம் இருந்து வந்த எதிர்வினையைப் பாருங்கள். திராவிடக் கலாச்சாரம் இந்தியாவையே கெடுத்துக் கொண்டிருக்கிறது. தேசிய உணர்வாளர்களே விழுமின் எழுமின் :)

டிஸ்கி : இந்தப் பதிவு தற்சிந்தனையில், நல்ல மனநிலையில் எழுதியது. சொல்வதெல்லாம் உண்மை :)

எதற்கும் இதையும் படித்துவிடுங்கள் : (வட) இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படுவது ஏன் - எழுத்தாளர் ஜயமோகன்

இந்தி, தேசியமொழி வாதம் ஆகியவை குறித்து நான் எழுதிய பிற பதிவுகள்:

அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(யா ?) தேசியவாத பம்மாத்தும் !

இந்தி யா ?

நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

ஜெய்'ஹிந்தி'புரம் !

42 கருத்துகள்:

நாகா சொன்னது…

எல்லாரும் நம்ம ஆளுங்களப் பாத்து தொழில் பண்றாங்கன்னு நெனக்கறேன். இன்னும் தார் டின்னு எடுக்கல தண்டவாளத்துல தல வெக்கல.. கூடிய சீக்கிரம் அதுவும் நடக்கும் அப்புறம் பாருங்க நம்ம புகழ் எல்லாப் பக்கமும் பரவும் (கத்துக்குடுத்த வாத்தியாருங்க நாம தானே)

Bharath சொன்னது…

பெரியார் செய்ததைத்தான் ராஜ் தாக்கரே செய்கிறார் என்று சர்டிபிகேட் கொடுத்த கோவிய என்ன செய்யலாம்??? :)

வட்டாள் நாகராஜ் அதே சர்டிபிகேட்க்காக் க்யூல் நிற்கிறாராம்..

மணிகண்டன் சொன்னது…

கோவி, உங்களுக்கு உள்குத்து நகைச்சுவை சுத்தமாக வரவில்லை என்பதற்கு வராத/வந்திருக்கும் பின்னூட்டங்களே சாட்சி.

arul சொன்னது…

தாய்மொழியில் பேசும் உரிமை மகாராஷ்ட சட்டசபையில் ஹிந்தி பேசுபவருக்கும் உண்டு,அதே போல் இந்திய பாராளுமன்றத்தில் தமிழ்பேசும் அமைச்சருக்கும் தாய் மொழியில் பேசும் உரிமை உண்டுதானே!
ஹிந்தி பேசுபவரை மகாராஷ்டாவில் தடுப்பது வன்முறை என்றால் டெல்லியில் தமிழ் பேசுபவரைத் தடுப்பதும் இந்திய ஒருமைப்பாடு என்ற புரளிக்குள் மறைந்திருக்கும் ஒரு வன்முறைதான்.

TBCD சொன்னது…

என்னாதிது...?

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
என்னாதிது...?
//

அதான் மணிகண்டன் சொல்லிட்டாருல்லே !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

/நாகா said...
எல்லாரும் நம்ம ஆளுங்களப் பாத்து தொழில் பண்றாங்கன்னு நெனக்கறேன். இன்னும் தார் டின்னு எடுக்கல தண்டவாளத்துல தல வெக்கல.. கூடிய சீக்கிரம் அதுவும் நடக்கும் அப்புறம் பாருங்க நம்ம புகழ் எல்லாப் பக்கமும் பரவும் (கத்துக்குடுத்த வாத்தியாருங்க நாம தானே)
//

தமிழர்களுக்கு 60 ஆண்டுகளுக்கு முன் உறைத்தது தற்பொழுது தான் அவர்களுக்கு உறைக்கிறது போலும். தேசியவியாதிகள் ஆப்பு மேல ஆப்பு வைத்தால் அவர்கள் அலறத்தானே செய்வார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// Bharath said...
பெரியார் செய்ததைத்தான் ராஜ் தாக்கரே செய்கிறார் என்று சர்டிபிகேட் கொடுத்த கோவிய என்ன செய்யலாம்??? :)

வட்டாள் நாகராஜ் அதே சர்டிபிகேட்க்காக் க்யூல் நிற்கிறாராம்..
//

அதே போல் தீண்டாமைகள், சாதிக் கொடுமைகளை ஒழித்தால் (ஜெமோ கட்டுரை இணைப்பை வாசிக்கவும்) வாட்டாளும், தாக்ரே குடும்பமும் போற்றப்படும்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//கண்டன் said...
கோவி, உங்களுக்கு உள்குத்து நகைச்சுவை சுத்தமாக வரவில்லை என்பதற்கு வராத/வந்திருக்கும் பின்னூட்டங்களே சாட்சி.
//

அவங்க புரிஞ்சு தான் போட்டாங்க என்று நினைக்கிறேன். ரெண்டுபேருமே கட்டுரையை சீரியசாக எடுத்துக்கலையே :)

கோவி.கண்ணன் சொன்னது…

//arul said...
தாய்மொழியில் பேசும் உரிமை மகாராஷ்ட சட்டசபையில் ஹிந்தி பேசுபவருக்கும் உண்டு,அதே போல் இந்திய பாராளுமன்றத்தில் தமிழ்பேசும் அமைச்சருக்கும் தாய் மொழியில் பேசும் உரிமை உண்டுதானே!
ஹிந்தி பேசுபவரை மகாராஷ்டாவில் தடுப்பது வன்முறை என்றால் டெல்லியில் தமிழ் பேசுபவரைத் தடுப்பதும் இந்திய ஒருமைப்பாடு என்ற புரளிக்குள் மறைந்திருக்கும் ஒரு வன்முறைதான்.
//

மாநில மொழி மாநிலத்திலேயே மதிக்கப்படவில்லை என்பது தான் அவர்களின் சினத்துக்கு காரணம்.

S.Gnanasekar சொன்னது…

ஹிந்தியும் ஹிந்தி பேசுவதன் மகத்துவத்தையும் நாம் உணராததால் வட இந்திய மக்களுடன் நம்மால் ஒற்றுமையுடன் இந்தியாவை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் தமிழ் இனவாத திராவிட சித்தாந்த திராவிட கட்சித் தலைவர்களே.

நல்ல அருமையான பதிவு நன்பர் கோவி.கண்ணன் அவர்களே. ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..
சோ.ஞானசேகர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//S.Gnanasekar said...

நாமும் ஹிந்தி கற்றுக் கொண்டு இருந்தால் தமிழகத்திலும் வடமாநிலத்தினர் கடை திறந்திருப்பார்கள் தமிழன் மண்ணை அள்ளித் திங்க வேண்டியது தான்.
பெங்களூரும், மும்பாயும் அப்படித்தான் சீரழந்து வருகிறது

ஹிந்தி கற்ற பிறகு நாம எங்கே இந்தியாவை பகிர்வது தமிழக பெருநகரங்களையும் நம்மிடம் பிடுங்கிவிடுவார்கள்.
:)

மஹாராஷ்டிர மக்களுக்கு காலம் கடந்த ஞானம் ஏற்பட்டு இருக்கிறது

தமிழினியன் சொன்னது…

///மஹாராஷ்டிர மக்களுக்கு காலம் கடந்த ஞானம் ஏற்பட்டு இருக்கிறது///

காலம் கடந்த ஞானமாக இருந்தாலும் கட்டாயம் வர வேண்டிய ஞானம். ஒட்டுமொத்த மஹராஸ்டிர மக்களுக்கும் இந்த ஞானம் வரவில்லையே:-) கற்பனையான இந்தியத்தேசியத்துக்கு அடி விழுவதும் நன்மையே.

மணிகண்டன் சொன்னது…

****
பெங்களூரும், மும்பாயும் அப்படித்தான் சீரழந்து வருகிறது
****

சீரழிந்து வருகிறதா ? அப்படின்னா என்ன அர்த்தம் உங்க பார்வையிலே ?

மும்பை விட்டுடுவோம். எனக்கு நேரடி அனுபவம் கிடையாது.

பெங்களூர் ஒன்னும் சீரழியுதா தெரியலையே. எங்கேந்து வந்தாலும் வேலை கிடைக்குது. அடிப்படை வாழ்க்கை நிலை முன்னேறி தான் இருக்கு (மாநிலத்தில் உள்ள மற்ற எடங்களுடம் கம்பேர் பண்ணினா - நியூயார்க் கூட சேர்த்து பாக்காதீங்க ப்ளீஸ்)

மக்களுக்கு பல மொழிகள் தெரிஞ்சி இருக்கு. புதுசா வந்தாலும் ஈசியா integrate ஆகமுடியுது. என்ன பெங்களூர்ல பொறந்து வளர்ந்த கன்னடம் பேசும் மக்களோட பாரம்பரியம் அழியலாம். நல்லது தானே. இன்னும் முன்னூறு வருஷம் கழிச்சி இதுவே பாரம்பரியம் ஆகிட்டு போகட்டுமே.

எவனோ ஒரு லூசுப்பைய சட்டசபைல இன்னொருத்தனை அடிச்சானாம். அதுக்கு நமக்கு ஒரு புளகாங்கித உணர்வு !

சிநேகிதன் அக்பர் சொன்னது…

மறுபடியும் வாரேன். இப்ப வருகையை பதிஞ்சுக்கிறேன்.

Unknown சொன்னது…

இந்தியாவை ஒருங்கிணைத்தது இங்கிலீஷ்காரந்தான். அதனால, இங்கிலீஷை இணைப்பு மொழியாக வைத்துக்கொள்வதில் எந்த தவறும் இல்லை.
தமிழனுக்கு இங்கிலீஷ், இந்தி இரண்டுமே அன்னிய மொழிதான்.

Samuel | சாமுவேல் சொன்னது…

கோவி
நான் அறிந்த வரை ஹிந்தி எதிர்ப்பு முதலில் ராஜாஜி என்று அழைக்கப்படும் ராஜகோபாலாச்சாரி, ஆரம்பித்தார்.
அவரை மறந்திட்டு பெரியார் என்று அழைக்கப்படும் இராமசாமி பெரிதாக எழுதி இருக்கீர்கள்.

ராஜாஜி கட்சி மேல உள்ள கோபமா ? இல்லை நான் தப்பா வரலாறு படிச்சிடேனா ?

Samuel | சாமுவேல் சொன்னது…

//திராவிட தலைவர்களின் ஹிந்தி எதிர்ப்பு காற்று மகாராஷ்டிரா பக்கமும் வீசிவிட்டதோ என்னவோ, இப்போதெல்லாம் மகாராஷ்டிராவில் ஹிந்தி மொழிக்கும்//

ஒ ..அப்ப பெரியார், ராஜாஜி அவர்கள் எல்லாம் ராஜ் தாகரே மாதிரி அரசியல் பண்ணாங்களா ? என்ன கொடுமை.

கபிலன் சொன்னது…

பெரியார் இந்தியை எதிர்த்தார் என்பதற்கு காரணம் அதன் மூல மொழி/தழுவல் மொழி சமஸ்கிருதம் என்பதால் தான். அவர் தமிழின் மீது பற்றுகொண்டு இந்தியை எதிர்க்கவில்லை. தமிழை காட்டுமிராண்டி மொழி என்றவர் பெரியார்.

ராஜ்தாக்கரே மராத்தி மொழி மீதுள்ள பற்றினால் இந்தியை எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்கிறார்.

காங்கிரசிலிருந்து பிரிந்து வந்து அவர்களுக்கு குடைச்சல் கொடுத்தார் பெரியார்.
சிவசேனாவிலிருந்து பிரிந்து அவர்களுக்கு குடைச்சல் தருகிறார் ராஜ்தாக்கரே.

ஆனால் ராஜ் தாக்கரே ஒவ்வொரு பேட்டியிலும் ஒப்பிடுவது என்னவோ தமிழையும் தமிழ்நாட்டையும் தான்.

இரண்டு பேருமே அவரவர் சொந்த அரசியல் ஆதாயத்துக்காக, பிரித்து ஆளும் சூழ்ச்சி செய்கிறவர்கள் தான்.

ராஜவம்சம் சொன்னது…

மொழி என்பது உயிர் அல்ல.

உலகில் உள்ள அனைத்து மொழிகலும் சிறந்த மொழிதான் அவரவருக்கு.

எந்த மொழி சிறந்த மொழி என்று ஊமையிடம் கேட்டால் தன் தாய் மொழிக்கூட அவனுக்கு அன்னியமாகதான் தெரியும்.

எவன் ஒருவன் வேற்றுமொழியை கூடாது என்று போராட்டம் செய்கிறானோ அவன் யாராக இருந்தாலும் அறிவற்றவன் என்பதில் மாற்றுக்கறுத்து இல்லை

மொழி என்பது ஒரு செய்தி பரிமாற்றம்(communication)காகவே தவிர வேரு எதர்கும் இல்லை

ராஜவம்சம் சொன்னது…

http://nizamroja01.blogspot.com/2009/11/blog-post.html

சிநேகிதன் அக்பர் சொன்னது…

கோவி கண்ணன் அண்ணனுக்கு,

1. இந்தி தமிழனுக்கு தேவையா இல்லையா?

2. திராவிட ஆட்சிகள் இல்லாமல் தேசிய கட்சி ஆட்சி செய்தால் காவேரி, முல்லை பெரியாரில் நமக்கு சாதகமா?

பித்தனின் வாக்கு சொன்னது…

// அமிதாப்பச்சன், ஷாருக்கான் போன்ற ஹிந்தி சூப்பர் ஸ்டார்களின் திரைப்படங்களை தமிழக மக்கள் பார்க்க முடியாமல் அவதி //
நாங்க எங்க கஷ்டப் பட்டேம் நாங்க ஹேமாமாலினி, கஜோல், பிரித்தி ஜிந்தாவை வேடிக்கைப் பார்த்தேம்.
// தமிழகத்தில் இருந்து வட இந்தியாவிற்கு சுற்றுலா செல்லும் தமிழக மக்கள் அங்கு எல்லா மாநிலங்களிலும் இருக்கும் ஹிந்தி அறிவிப்புகளை படிக்க முடியாமல் திணறுகின்றனர் //
இது உண்மை.
// பாம்பே மிட்டாய் விற்பவரும், சேட்டுகளும் தமிழ் கற்றுக் கொண்டால் தான் தமிழகத்தில் பிழைக்க முடியும் //
தவறு தமிழைக் கடித்து துப்பினால் தான் என்று மாற்றவும், அவங்க எங்க தமிழ் பேசுறாங்க.

ஹிந்தி திணிப்பு என்பது கூடாது, விருப்பம் இருந்தால் படிக்கலாம் என்று கூறியிருந்தால் திராவிடப் போராட்டம் நன்மையில் முடிந்து இருக்கும். ஆனால் ஹிந்தியே கூடாது என்று கூறி அவர்களின் பிள்ளைகள் கான்வெண்டில் படிப்பதுதான் சிக்கல். நன்றி.

Unknown சொன்னது…

ரெம்ப நல்லா சொல்லீருக்கீங்க கோவிஜி... ஹிந்தி தெரியாததால் எவ்வளவு கஷ்டபடுகிறார்கள் என்பது உண்மைதான்.

<<<
தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் இராமசாமி இதற்கு தலைமை ஏற்று தேசிய மொழி ஹிந்தியை புறக்கணிக்கச் செய்தார்
>>>

இது தப்பா இருக்கே கோவிஜி... பெரியார் எப்பவும் ஒரு மொழிக்கு ஆதரவா இருந்ததே இல்லே..

ஜோ/Joe சொன்னது…

கோவியார்,
நீங்க எதிர்மறை நக்கலோடு எழுதியிருக்கிறீர்கள் என புரிந்தாலும் ...

//திராவிட தலைவர்களின் ஹிந்தி எதிர்ப்பு காற்று மகாராஷ்டிரா பக்கமும் வீசிவிட்டதோ என்னவோ, இப்போதெல்லாம் மகாராஷ்டிராவில் ஹிந்தி மொழிக்கும், ஹிந்தி பேசுபவர்களுக்கும் எதிராக வன்முறைகள் நடக்கின்றன. //

இந்த வரிகள் ஏதோ இந்தி திணிப்பு எதிர்ப்பு காலத்தில் தமிழகத்தில் இந்தி பேசுபவர்களுக்கு எதிராக வன்முறை நடந்ததாக ஒரு தோற்றத்தை கொடுக்கிறது ..அது உண்மையா?

ஜோ/Joe சொன்னது…

//ஆனால் ஹிந்தியே கூடாது என்று கூறி அவர்களின் பிள்ளைகள் கான்வெண்டில் படிப்பதுதான் சிக்கல்.//

ஐயா,
கான்வெண்டுக்கும் இந்திக்கும் என்ன சம்பந்தம் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ/Joe said...
கோவியார்,
நீங்க எதிர்மறை நக்கலோடு எழுதியிருக்கிறீர்கள் என புரிந்தாலும் ...

//திராவிட தலைவர்களின் ஹிந்தி எதிர்ப்பு காற்று மகாராஷ்டிரா பக்கமும் வீசிவிட்டதோ என்னவோ, இப்போதெல்லாம் மகாராஷ்டிராவில் ஹிந்தி மொழிக்கும், ஹிந்தி பேசுபவர்களுக்கும் எதிராக வன்முறைகள் நடக்கின்றன. //

இந்த வரிகள் ஏதோ இந்தி திணிப்பு எதிர்ப்பு காலத்தில் தமிழகத்தில் இந்தி பேசுபவர்களுக்கு எதிராக வன்முறை நடந்ததாக ஒரு தோற்றத்தை கொடுக்கிறது ..அது உண்மையா?
//

அவர்கள் வன்முறையாக எதிர்கிறார்கள் என்று பதியவைத்தேன். நாம வன்முறையாக அதைச் செய்தோம் என்று அல்ல.

காந்தியும் நேதாஜியும் ஆங்கிலேயர்களுக்கு எதிரானவர்கள் இருவரும் ஒரே வழியில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, சுதந்திர தாகம் ஒன்று தான்

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...

நாங்க எங்க கஷ்டப் பட்டேம் நாங்க ஹேமாமாலினி, கஜோல், பிரித்தி ஜிந்தாவை வேடிக்கைப் பார்த்தேம்.

இது உண்மை.

தவறு தமிழைக் கடித்து துப்பினால் தான் என்று மாற்றவும், அவங்க எங்க தமிழ் பேசுறாங்க.

ஹிந்தி திணிப்பு என்பது கூடாது, விருப்பம் இருந்தால் படிக்கலாம் என்று கூறியிருந்தால் திராவிடப் போராட்டம் நன்மையில் முடிந்து இருக்கும். ஆனால் ஹிந்தியே கூடாது என்று கூறி அவர்களின் பிள்ளைகள் கான்வெண்டில் படிப்பதுதான் சிக்கல். நன்றி.
//

பித்தன் அண்ணே,

உங்கள் கொளுகைகளை பின்பற்றி நானும் பழமை வாழ்க கோசம் போடலாம்னு இருக்கேன்
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்பர் said...

கோவி கண்ணன் அண்ணனுக்கு,

1. இந்தி தமிழனுக்கு தேவையா இல்லையா?//

தமிழர்களுக்கு தேவை சரளமான ஆங்கில அறிவு, உலகளாவிய போட்டித் தன்மையில் தமிழர்கள் பொருளாதார நிலை உயர ஆங்கிலக் கல்வி மிகவும் தேவை. இந்தி அதைக் கொடுக்காது.

//2. திராவிட ஆட்சிகள் இல்லாமல் தேசிய கட்சி ஆட்சி செய்தால் காவேரி, முல்லை பெரியாரில் நமக்கு சாதகமா?//

பக்கத்து மாநிலத்தில் தேசிய கட்சிகள் அதுவும் தமிழக அரசு கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தான் மாறி மாறி வந்திருக்கின்றன. தண்ணீர் பிரச்சனையும் அவர்களால் ஏற்படுவதே. தேசிய கட்சிகள் மெகா பிழைப்பு வாதிகள்.

ஜோ/Joe சொன்னது…

//அவர்கள் வன்முறையாக எதிர்கிறார்கள் என்று பதியவைத்தேன். நாம வன்முறையாக அதைச் செய்தோம் என்று அல்ல.//

நீங்க சொல்ல வந்தது அது தான் என்பது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது ..ஆனால் பலரும் வேறுமாதிரி எடுத்துக்கொள்வார்களோ என்ற ஐயத்தை தான் சொன்னேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜவம்சம் said...

மொழி என்பது உயிர் அல்ல.

உலகில் உள்ள அனைத்து மொழிகலும் சிறந்த மொழிதான் அவரவருக்கு.

எந்த மொழி சிறந்த மொழி என்று ஊமையிடம் கேட்டால் தன் தாய் மொழிக்கூட அவனுக்கு அன்னியமாகதான் தெரியும்.

எவன் ஒருவன் வேற்றுமொழியை கூடாது என்று போராட்டம் செய்கிறானோ அவன் யாராக இருந்தாலும் அறிவற்றவன் என்பதில் மாற்றுக்கறுத்து இல்லை

மொழி என்பது ஒரு செய்தி பரிமாற்றம்(communication)காகவே தவிர வேரு எதர்கும் இல்லை//

மிகவும் குறுகிய சிந்தனை மொழி வெறும் தகவல் பரிமாற்றம் என்றால் வெள்ளைகாரன் அதனை வளர்க்க மிகுந்த பொருள் செலவு செய்யமாட்டான். அவன் ஆளுமையும் மொழி செல்லும் இடங்களில் எல்லாம் ஏற்படும், அவனுடைய தொடர்புகளுக்கு இலகுவாக இருக்கும், இந்திக்காரர்கள் இந்தியை திணிக்க நினைப்பதும் இதற்குத்தான், ஆனால் அவர்கள் வெறும் கையை முழம் போட வருகிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//..:: Mãstän ::.. said...

ரெம்ப நல்லா சொல்லீருக்கீங்க கோவிஜி... ஹிந்தி தெரியாததால் எவ்வளவு கஷ்டபடுகிறார்கள் என்பது உண்மைதான்.
//

:) நான் எழுதியது உங்களுக்கு புரியல, இடுகையின் கடைசியில் உள்ள மற்ற இணைப்புகளையும் படித்து இருக்கலாம்

<<<
//தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் இராமசாமி இதற்கு தலைமை ஏற்று தேசிய மொழி ஹிந்தியை புறக்கணிக்கச் செய்தார்
>>>

இது தப்பா இருக்கே கோவிஜி... பெரியார் எப்பவும் ஒரு மொழிக்கு ஆதரவா இருந்ததே இல்லே..//

பெரியார் பற்றிய தவறான பிம்பம், தமிழ் மொழியில் இலக்கியம் என்ற பெயரில் மிகுதியாக இருந்த கட்டுக்கதைகளை அகற்ற கொஞ்சம் கடுமையாக பேசினார் என்பது தவிர்த்து இன்று நாம் எழுதும் எளிமை படுத்தப்பட்ட எழுத்துகள் கூட பெரியாரின் சிந்தனைதான்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

3. தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கும் வரும் தேசியத் தலைவர்களால் இந்திய தாய் மொழியான ஹிந்தியால் உரையாற்ற முடியாமல் போவதால் அவர்களால் தமிழக மக்களோடு மக்களாக பழகவோ, அவர்களை உள்ளப்பூர்வமாக அறிந்து கொள்ளவோ முடியவில்லை//

தவறு செய்துவிட்டீர்கள் கோவியாரே!

முதலில் இதைத் திருத்துங்கள்!

”ஹிந்தியத் தாய் மொழியான ஹிந்தியில் உரையாற்ற”

இப்படி இருக்கனும்...!

கோவி.கண்ணன் சொன்னது…

//கபிலன் said...

பெரியார் இந்தியை எதிர்த்தார் என்பதற்கு காரணம் அதன் மூல மொழி/தழுவல் மொழி சமஸ்கிருதம் என்பதால் தான். அவர் தமிழின் மீது பற்றுகொண்டு இந்தியை எதிர்க்கவில்லை. தமிழை காட்டுமிராண்டி மொழி என்றவர் பெரியார்.
//
பெரியார் ஏன் அப்படிச் சொன்னார் என்கிற சூழலைக் குறிக்காது குறிப்பட்ட பகுதியை மட்டுமே சுட்டி இட்டுக்கட்டும் முயற்சி இதை பலர் அறியாமலும் செய்கிறார்கள், அதில் தாங்களும் ஒருவராக இருக்கலாம். வே.மதிமாறன் பெரியாரின் தமிழ் குறித்த சிந்தனைகளை எழுதி இருக்கிறார். நேரம் இருந்தால் படியுங்கள்
//இரண்டு பேருமே அவரவர் சொந்த அரசியல் ஆதாயத்துக்காக, பிரித்து ஆளும் சூழ்ச்சி செய்கிறவர்கள் தான்.
1:26 AM, November 11, 2009//
பெரியார் சூழ்ச்சியும் செய்யவில்லை வீழ்ச்சியும் செய்யவில்லை, உயர்சாதி மேலாண்மைகளை ஒழித்தார். தாக்ரே போல் வாரிசுகளின் நலனும் போற்றவில்லை. பெரியாரை தாக்ரேவுடன் ஒப்பிடுவதற்கு தாக்ரே தகுதியானவர் இல்லை

Robin சொன்னது…

முன்பெல்லாம் ஹிந்தி படிக்கவில்லையே என்று வருத்தப்பட்டதுண்டு. பின்னர் ஹிந்திக்கரர்களிடம் பழகிய பின்னர் தமிழர்கள் மட்டுமாவது சரணடையாமல் இருக்கிறோமே என்று நினைக்க தோன்றுகிறது. ஹிந்திக்காரர்களிடம் இருக்கும் தற்பெருமையும் தலைக்கனமும் மற்ற மாநிலத்தவரையும் மற்ற மொழிகளையும் இழிவாக நினைப்பதும் ஹிந்தி எதற்காக படிக்கவேண்டும் என்ற எண்ணத்தைதான் ஏற்படுத்துகிறது. மற்றவர்கள் ஹிந்தி படித்துக்கொண்டு இவர்களிடம் பேசவேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர மற்ற மாநில மொழிகளை தெரிந்துகொள்ள இவர்கள் விரும்புவது இல்லை. உலகம் முழுவதும் ஹிந்திதான் பொதுமொழியாக இருக்கவேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

ஜோ/Joe சொன்னது…

//உலகம் முழுவதும் ஹிந்திதான் பொதுமொழியாக இருக்கவேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்.//

சொன்னாலும் சொல்வார்களா? ஏதோ சொல்லாத மாதிரி :)

தாமிரபரணி சொன்னது…

வணக்கம் அறவேக்காடு,
உணக்கு ஒற்றுமை, இறையாண்மை, சுயமரியாதை அகியவற்றிக்கான வேறுபாடுகள் தெரியவில்லை என்று நன்கு விளங்குகிறது,
அது சரி எல்லாரும் கோ(மாளி)வி கண்ணன் மாதிரி இருக்க முடியுமா, அப்படி அண்ணன் என்ன பண்ணிடாருனு கேட்கிறிங்களா அண்ணன் ஒற்றுமைக்காக தன் மனைவி, அம்மா, பொன்னுங்கள், உடன் பிறந்த தமைக்கைகள் என எல்லாரையும் நண்பர்களிடம் படுக்க அனுப்புவார் அவ்வளவு நல்லவரு, யாராவது இத தப்புனு சொன்னா மண்ணு திங்க போற உடம்பு நண்பன் அனுபவிச்சா என்னனு விளக்கு பிடிப்பார்,
அப்பறம் பெரியார் இந்திய எதிர்க்கல, ஆதிக்கத்தைதான் எதிர்த்தார்
அதுபோலதான் சாதி என்னும் கொடுமையையும் எதிர்த்தார்.
தமிழ்நாடு தனிநாடாகும் போது இதுபோன்ற சிக்கல்கள் ஓழியும்,
ஆங்கிலேயரின் ஆதிக்கதில் இருந்து விடுதலை அடையவே 200 வருடங்கள் ஆகின, அதுபோல இந்தி என்னும் இந்திய ஆதிக்கதில் இருந்து விடுதலை அடைய வருடங்கள் ஆகதான் செய்யும

கோவி.கண்ணன் சொன்னது…

தாமிரபரணி said...

//வணக்கம் அறவேக்காடு,
உணக்கு ஒற்றுமை, இறையாண்மை, சுயமரியாதை அகியவற்றிக்கான வேறுபாடுகள் தெரியவில்லை என்று நன்கு விளங்குகிறது,
அது சரி எல்லாரும் கோ(மாளி)வி கண்ணன் மாதிரி இருக்க முடியுமா, அப்படி அண்ணன் என்ன பண்ணிடாருனு கேட்கிறிங்களா அண்ணன் ஒற்றுமைக்காக தன் மனைவி, அம்மா, பொன்னுங்கள், உடன் பிறந்த தமைக்கைகள் என எல்லாரையும் நண்பர்களிடம் படுக்க அனுப்புவார் அவ்வளவு நல்லவரு, யாராவது இத தப்புனு சொன்னா மண்ணு திங்க போற உடம்பு நண்பன் அனுபவிச்சா என்னனு விளக்கு பிடிப்பார்,
அப்பறம் பெரியார் இந்திய எதிர்க்கல, ஆதிக்கத்தைதான் எதிர்த்தார்
அதுபோலதான் சாதி என்னும் கொடுமையையும் எதிர்த்தார்.
தமிழ்நாடு தனிநாடாகும் போது இதுபோன்ற சிக்கல்கள் ஓழியும்,
ஆங்கிலேயரின் ஆதிக்கதில் இருந்து விடுதலை அடையவே 200 வருடங்கள் ஆகின, அதுபோல இந்தி என்னும் இந்திய ஆதிக்கதில் இருந்து விடுதலை அடைய வருடங்கள் ஆகதான் செய்யும//

தனிமனிதர்களை மிகக் கேவலமாக அவர்கள் இல்லத்து பெண்களையும் மிகவும் கேவலாமாக பேசும் உங்களைப் போன்றோர்களால் தான் பெரியாரின் கருத்துகள் பொது மக்களிடம் இருந்து அன்னியப்பட்டுக் கிடக்கிறது. மனித உரிமை, மசுரு மட்டை, மண்ணாங்கட்டி தெருப்புழுதி இவை எல்லாம் தனி மனிதனை மதித்த பிறகு பேசப்பட வேண்டியவை, பெரியாரின் முக்கியமான கருத்து சுயமரியாதை அது தனக்கும் கொடுக்கப்படவேண்டும் பிறருக்கும் தரப்படவேண்டும் என்று வழியுறுத்தினார். அரைவேட்டுத் தனமாக எதையும் முழுதாகப் படிக்காமல் பின்னூட்டம் இடும் உங்களுக்கு பெரியார் பற்று இருப்பது போல் தெரியவில்லை. முகமூடிப் போட்டு பெரியாரைப் பழிக்க வேண்டும், அல்லது பெரியாரை நான் தூற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு எழுதி இருப்பது எனக்கு புரிகிறது. அதனால் தான் இந்த அரைகுறை அநாகரீக பின்னூட்டத்தை நான் நீக்கவில்லை. ஒரு பெரியார் தொண்டன் அல்லது பெரியாரைப் படித்தவனின் அடிப்படை புரிதலே சுயமரியாதைத்தான். அது உங்கள் பின்னூட்டத்தில் இல்லை. நீங்கள் பெரியார் பற்றாளராக இருக்க முடியாது பெரியாரைத் தூற்ற முயலும் உயர்வர்க்க சிந்தனையாளரான ஒரு 'போலி'. உங்கள் உள்னோக்கம் பிறரும் அறிய வேண்டும் என்பதற்காகவே அழிக்காமல் பதில் சொல்லி விட்டு வைத்திருக்கிறேன்

Voice on Wings சொன்னது…

மேலே உள்ள அநாகரீகமான பின்னூட்டத்தை நீக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

Matra சொன்னது…

Robin said
//உலகம் முழுவதும் ஹிந்திதான் பொதுமொழியாக இருக்கவேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்.//

இது ஏற்கனவெ நடந்து கொண்டிருக்கிற‌து

மதிபாலா சொன்னது…

எப்படியோ நல்லது நடக்கணும்..

அதுக்கு மஹாராஷ்டிரா ஒரு நல்ல ஆரம்பம்.

Sanjai Gandhi சொன்னது…

ராமசாமி அண்ணாதுரை கருணாநிதி ஒழிக...!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்