பின்பற்றுபவர்கள்

14 ஜூன், 2010

தண்டவாளத் தகர்பில் தி*மலரின் பங்கு !

இந்தியாவில் குண்டு வெடித்தால் இஸ்லாமிய சதி என்று (ஊகம்) கிளப்பி விடும் நாளிதழ்களில் நமது தி*மலருக்கு சிறப்பான இடம் உண்டு. மலேக்கான் குண்டு வெடிப்பு இந்துத்துவ சதி என்பது அம்பலமாகிய பிறகு யார் குண்டு வைத்தது என்று முந்திக் கொண்டு அறிவிப்பதில் சற்று சுனக்கம் காட்டினார்கள்.

வடகிழக்கில் இந்திய அரசுக்கு எதிராக மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் தொடர்ந்து வரும் வேளையில் தி*மலரின் தேசிய பற்று சற்று தூக்கலாகவே உள்ளது. இதன் காரணமாக பொதுப் புத்தி வாசகர்களை உருவாக்கி டீக்கடை பெஞ்சுகளில் தீவிரவாதிகளை கண்டிக்கும் தொடர் கூட்டங்களுக்கு தேவையான பணிவிடைகளை தினமலர் செய்துவருகிறது.

கடலூர் அருகே தண்டவாளத் தகர்ப்பில் இராஜபக்சே வருகைக்கு எதிரான துண்டு அறிவிப்புகள் கிடந்ததாம். இதைவைத்து 'விடுதலை புலி ஆதரவு இயக்கங்கள் மீண்டும் தலை தூக்கல்?' என்ற கேள்விகளுடன் ஒரு கட்டுரையை எழுதி வெளி இட்டிருக்கிறது தினமலர்.

* குண்டு வெடித்த இடத்தில் தி*மலர் நாளிதழ்களின் வாசகர் கடிதப் பகுதிகள் கிடந்தால் தி*மலர் தான் குண்டு வைத்தது என்று சொல்லிவிட முடியுமா ?
* குண்டு வெடித்த இடத்தில் 'இராஜிவ் காந்தி வாழ்க !' என்ற துண்டு அறிவிப்பு கிடந்தால், தமிழ்நாட்டின் எதோ ஒரு காங்கிரசு கோஷ்டி சார்பில் குண்டு வைக்கப்பட்டது என்று கொள்ள முடியுமா ?
* குண்டு வெடித்த இடத்தில் 'புரட்சி தலைவி வாழ்க' என்ற அறிவிப்பு கிடந்தால் அதிமுக காரன் குண்டு வைத்தான் என்று சொல்ல முடியுமா ?
* குண்டு வெடித்த இடத்தில் 'நமீதா வாழ்க, குஷ்பு வாழ்க' என்று எழுதி இருந்தால் கவர்ச்சி சினிமா ரசிகர் எவரோ குண்டு வைத்தார் என்று சொல்ல முடியுமா ?
* குண்டு வெடித்த இடத்தில் 'தாமபிராஸ் வாழ்க' என்று எழுதி இருந்தால் தமிழ்நாடு வாழ் பார்பனர்கள் தான் வைத்தார்கள் என்று சொல்ல முடியுமா ?

குண்டு வெடிப்பிற்கும் கிடைக்கும் அறிவிப்புகளுக்கும் தொடர்பு இருக்கும் என்பது போலவே அவை திசை திருப்பும் நோக்கில் கூட செய்யப்பட்டிருக்கலாம் என்று இவர்களால் ஏன் சிந்திக்க முடியவில்லை. சதிச் செயல் என்று ஒரு செயல் உருவாகும் போது சுய விளம்பரத்திற்காக மட்டும் தான் இவற்றையெல்லாம் செய்வார்களா என்ன ? வேறொரு அமைப்பை சிக்க வைப்பதற்கும் சதிச் செயல்கள் நடைபெறும் என்பதை மலேக்கான் நிகழ்வுகள் சுட்டிக் காட்டிய பிறகும் இவர்களின் பார்வைகள் கோணல் பார்வையாக இருப்பதன் காரணம் என்ன ?

பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று செய்திகள் வெளியான பிறகு,
முள்ளி வாய்கால் படுகொலை தொடர்வது தெரிந்த பிறகு
இராஜ பக்சே மகிழ்ச்சியுடன் போர் வெற்றிக்கு நன்றி தெரிவிக்க திருப்பதி வந்த பிறகு
கடந்த ஓராண்டுகளாகவே இலங்கையிலும் எந்த ஒரு தண்டவாளத்திலும் வெடிக்காத குண்டு
இராஜபக்சே டெல்லி வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது மட்டும் தான் வெடிக்குமா என்ன ?

ஊகமாக யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் ஊடகம் இருக்கிறதே என்று எழுதலாம் என்றால் என்னால் கூட தண்டவாளத் தகர்ப்பில் தினமலருக்கு பங்கு இருக்கிறது என்று எழுத முடியும் அல்லவா ?

புலி என்பதாக ஈழ ஆதரவாளர்களையும், ஈழப் பொதுமக்களையும் முற்றிலும் ஒழிக்காமல் இவனுங்க அடங்கமாட்டானுங்கப் போல. அந்த அளவுக்கு தமிழர்கள் மீது கசப்புடன் இருக்கும் இவர்கள் நடத்துவதோ தமிழ் நாளிதழ், அதையும் காசு கொடுத்து வாங்கிப் படித்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்கிறான் தமிழன்.

52 கருத்துகள்:

Unknown சொன்னது…

அப்போ குண்டு வெச்சது யாருங்கண்ணா?

கோவி.கண்ணன் சொன்னது…

// ரம்மி said...

அப்போ குண்டு வெச்சது யாருங்கண்ணா?//

அதுக்கு தான் போலிசும், நாய்களும் இருக்கே கண்டுபிடிக்க.

priyamudanprabu சொன்னது…

ஊகமாக யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் ஊடகம் இருக்கிறதே என்று எழுதலாம் என்றால் என்னால் கூட தண்டவாளத் தகர்ப்பில் தினமலருக்கு பங்கு இருக்கிறது என்று எழுத முடியும் அல்லவா ?
///////

aamaam

they not give news
they give only their thoughts
thats thinamalam
so we should think

Vijays சொன்னது…

தமிழ் நாடு நல்ல இருக்கனும்ன தி*மலர் ஒழிக்கணும்

Kesavan சொன்னது…

திரு கண்ணன் , சில தினங்களுக்கு முன்பு ஒரு மருத்துவரை பற்றி தின மலரில் வந்த செய்திக்கு "செய்தியின் நம்பகத்தன்மை எவ்வளவு என்று தெரிய வில்லை " என்று நான் எழுதினேன் . அதற்கு நீங்கள் "உங்கள் உறவினர்களில் மருத்துவர்களும் உள்ளார்களா ? " . அன்று உங்கள் பதில் தினமலர் செய்தியை அமோதிபதாக இருந்தது . இன்று வந்த செய்தி உங்களால் ஒத்துக் கொள்ள முடியாததால் இவ்வாறு புலம்புகிறீர்கள் . அவ்வளவு தான். மற்ற படி பத்திரிகையில் வரும் செய்தி முற்றிலும் உண்மையோ , அல்லது முற்றிலும் பொய்யோ கிடையாது . எல்லாமே 50:50 தான் .

Kesavan சொன்னது…

இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள். அவர்கள் கடிதத்தை பப்ளிஷ் பண்ணார்கள். இவர்கள் கடிதம் கிடைத்தது என்கிறார்கள் . இது மட்டும் தான் வித்தியாசம்

Kesavan சொன்னது…

http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=8095&id1=12

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...

திரு கண்ணன் , சில தினங்களுக்கு முன்பு ஒரு மருத்துவரை பற்றி தின மலரில் வந்த செய்திக்கு "செய்தியின் நம்பகத்தன்மை எவ்வளவு என்று தெரிய வில்லை " என்று நான் எழுதினேன் .//

சாட்சி அடிப்படையிலான தகவல்களுக்கும், ஊகமாக வெளி இடும் தகவல்களுக்கும் வேறுபாடு இருக்கு

Kesavan சொன்னது…

//சாட்சி அடிப்படையிலான தகவல்களுக்கும், ஊகமாக வெளி இடும் தகவல்களுக்கும் வேறுபாடு இருக்கு //

கண்ணன் உணர்ச்சி வாச படாதீர்கள். பத்திரிகையில் வரும் செய்தி அனைத்தும் நம்பக தன்மை உள்ளவை அல்ல என்று அன்றும் நான் சொன்னேன் . இங்கு கடிதம் கிடைத்தது என்று தின மலர் மற்றும் தினகரன் இரண்டு பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது . இந்த செய்தி உங்கள் கருத்துக்கு எதிரானது . அதனால் இந்த பத்திரிகையை சாடுகிறீர்கள் . இதே செய்தி தினகரனில் வந்துள்ளது . அதை நீங்கள் சொல்ல வில்லை. இதன் மூலம் உங்கள் தின மலர் மீதான வெறுப்பு தெரிகிறதே தவிர வேறு ஒன்றும் இல்லை

Sanjai Gandhi சொன்னது…

அதான, செத்தப் பாம்ப எவ்ளோ வாட்டி தான் அடிப்பானுங்க.. கிறுக்குப் பயலுவ..

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...

//சாட்சி அடிப்படையிலான தகவல்களுக்கும், ஊகமாக வெளி இடும் தகவல்களுக்கும் வேறுபாடு இருக்கு //

கண்ணன் உணர்ச்சி வாச படாதீர்கள். பத்திரிகையில் வரும் செய்தி அனைத்தும் நம்பக தன்மை உள்ளவை அல்ல என்று அன்றும் நான் சொன்னேன் . இங்கு கடிதம் கிடைத்தது என்று தின மலர் மற்றும் தினகரன் இரண்டு பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது . இந்த செய்தி உங்கள் கருத்துக்கு எதிரானது . அதனால் இந்த பத்திரிகையை சாடுகிறீர்கள் . இதே செய்தி தினகரனில் வந்துள்ளது . அதை நீங்கள் சொல்ல வில்லை. இதன் மூலம் உங்கள் தின மலர் மீதான வெறுப்பு தெரிகிறதே தவிர வேறு ஒன்றும் இல்லை//

வெறுப்பு, பருப்பு இன்னும் வேற எதுவும் இருக்கா ? நான் எழுதி இருப்பது 'விடுதலை புலி ஆதரவு இயக்கங்கள் மீண்டும் தலை தூக்கல்?' எஎன்ற தினமலரின் திரித்தலை வைத்தே.

ஆர்எஸ்எஸ் பெயரில் இந்துத்துவ தீவிரவாத இயங்கள் தமிழ்நாட்டில் ஊடுறுல் என்று இவர்களால் எழுத முடியுமா ? ஆர்எஸ்எஸும் கூட ஒரு காலத்தில் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு தீவிரவாத இயக்கம் என்றே அழைக்கப்பட்டது

Sanjai Gandhi சொன்னது…

//அதற்கு நீங்கள் "உங்கள் உறவினர்களில் மருத்துவர்களும் உள்ளார்களா ? " . அன்று உங்கள் பதில் தினமலர் செய்தியை அமோதிபதாக இருந்தது //

ஒரு வேளை, குண்டு வச்சவனுங்க நம்ம கோவியாருக்கு சொந்தமோ என்னவோ? :))

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...

http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=8095&id1=12//

தினகரன் தின்றது சாணி, தினமலர் தின்றது மலம் என்றால் ஒப்புக் கொள்வீர்களா ? வேறுபாடு அது தான்

Kesavan சொன்னது…

//ஆர்எஸ்எஸ் பெயரில் இந்துத்துவ தீவிரவாத இயங்கள் தமிழ்நாட்டில் ஊடுறுல் என்று இவர்களால் எழுத முடியுமா ? ஆர்எஸ்எஸும் கூட ஒரு காலத்தில் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு தீவிரவாத இயக்கம் என்றே அழைக்கப்பட்டது //

நான் இப்போது கூட தின மலரில் வந்த செய்தி உண்மை என்று சொல்ல வில்லையே கண்ணன். நீங்கள் தேவை இல்லாததை என்னிடம் பேச வேண்டாம். அது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம் என்று தான் சொல்கிறேன். நான் இப்போது சொல்வது கூட பத்திரிகை செய்தி முற்றிலும் நம்பகத்தன்மை உடையவை அல்ல என்று தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் .

கோவி.கண்ணன் சொன்னது…

//
நான் இப்போது கூட தின மலரில் வந்த செய்தி உண்மை என்று சொல்ல வில்லையே கண்ணன். நீங்கள் தேவை இல்லாததை என்னிடம் பேச வேண்டாம். அது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம் என்று தான் சொல்கிறேன். நான் இப்போது சொல்வது கூட பத்திரிகை செய்தி முற்றிலும் நம்பகத்தன்மை உடையவை அல்ல என்று தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் .//

ஐயா,

உண்மையா பொய்யாங்கிறதோ யார் வாந்தி எடுக்கிறார்கள் என்பதோ முக்கியம் இல்லை, அது மக்கள் மனதில் என்ன மாதிரியான புரிதலை ஏற்படுத்தும் முயற்சி என்பது தான் பேச்சு.

யார் வேண்டுமானாலும் வாந்தி எடுக்கலாம் அது காலராவை தோற்றுவிக்கும் விதத்தில் பொது இடத்தில் எடுக்காதிருப்பது நல்லது. அதைத்தான் இங்கு குறிப்பிடுகிறேன்.

Kesavan சொன்னது…

//ஐயா,

உண்மையா பொய்யாங்கிறதோ யார் வாந்தி எடுக்கிறார்கள் என்பதோ முக்கியம் இல்லை, அது மக்கள் மனதில் என்ன மாதிரியான புரிதலை ஏற்படுத்தும் முயற்சி என்பது தான் பேச்சு.

யார் வேண்டுமானாலும் வாந்தி எடுக்கலாம் அது காலராவை தோற்றுவிக்கும் விதத்தில் பொது இடத்தில் எடுக்காதிருப்பது நல்லது. அதைத்தான் இங்கு குறிப்பிடுகிறேன். //

தினமலரில் வரும் செய்தி ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடுமா என்ன . மக்கள் தெளிவானவர்கள் . அவர்களுக்கு என்ன தேவையோ அதை தான் அவர்கள் செய்வார்கள் . ஒரு செய்தியை பற்றி பல பத்திரிகைகள் பல மாதிரி எழுதுகின்றனர் . இதில் எது உண்மை என்று யாருக்கு தெரியும். தமிழ்நாடு உண்ணாவிரதம் பற்றி அல்லது தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும் கட்சியை பற்றியும் , ஜான்சி ராணி கட்சியை பற்றியும் மக்கள் அறிய மாட்டார்களா. எல்லாம் அவர்களுக்கு தெரியும் . பத்திரிகை படித்து மனம் மாறும் அளவுக்கு மக்கள் ஒன்னும் ஏமாளிகள் அல்ல .

கோவி.கண்ணன் சொன்னது…

//எல்லாம் அவர்களுக்கு தெரியும் . பத்திரிகை படித்து மனம் மாறும் அளவுக்கு மக்கள் ஒன்னும் ஏமாளிகள் அல்ல //

அந்த குறிப்பிட்ட செய்தியில் வாசகர் கருத்து (பின்னூட்டங்களைச் சென்று பார்த்துவிட்டு) அவர்கள் கூமுட்டைகள் என்று உங்களால் சொல்ல முடியுமா ?

தினமலரின் கருத்தை ஒட்டித்தான் (உண்மை என்று நம்பித்தான்) அவர்களுக்கும் அதுபற்றிப் பேசுகிறார்கள்.

Kesavan சொன்னது…

//அந்த குறிப்பிட்ட செய்தியில் வாசகர் கருத்து (பின்னூட்டங்களைச் சென்று பார்த்துவிட்டு) அவர்கள் கூமுட்டைகள் என்று உங்களால் சொல்ல முடியுமா ?

தினமலரின் கருத்தை ஒட்டித்தான் (உண்மை என்று நம்பித்தான்) அவர்களுக்கும் அதுபற்றிப் பேசுகிறார்கள். //

அதை படித்து விட்டு பல பேர் தன்னுடைய கருத்தை அளிக்க வில்லையே ஏன்? அதை பதில் அளித்தவர்கள் மட்டும் தான் மக்களா, மற்றவர்கள் இல்லையா . நீங்கள் அதை படித்துவிட்டு ஏன் அதை ஒத்து கொள்ள வில்லை . உங்களுக்கு பதில் அளித்தவர்களில் சிலரும் அதை ஒத்து கொள்ள வில்லையே. கருத்து அளிபவர்கள் கூமுட்டைகள் என்று சொல்வதை கண்டிக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi™


அதான, செத்தப் பாம்ப எவ்ளோ வாட்டி தான் அடிப்பானுங்க.. கிறுக்குப் பயலுவ..//

தம்பி சஞ்செய்,

செத்த பாம்பு உயிரோடு வரும், இது உயிர்பாம்புன்னு பாடம் செய்யப்பட்ட பாம்பை தமிழ்நாட்டு காங்கிரஸ் வாதிகள் காட்டுவதில்லையா ?
என்ன சொல்றேன்னு புரியலையா ? தமிழ்நாட்டில் காங்கிரசு ஆட்சி என்னும் காங்கிரசு கனவைத்தான்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//கருத்து அளிபவர்கள் கூமுட்டைகள் என்று சொல்வதை கண்டிக்கிறேன்//

நான் எங்கய்யா அப்படிச் சொன்னேன், நீ சொல்லுவியான்னு தானே கேட்டேன் ?

Iyappan Krishnan சொன்னது…

இவ்ளோ களேபரம் எதுக்கு ? தினமலர் பிடிக்கலை பிடிக்கலைன்னு அதையே வால் பிடிச்சுட்டு படிச்சுட்டு இருக்காம ஒதுங்கிப் போனாலே போதுமே ? ஏன் யாரும் செய்யறதில்லை ?

கோவி.கண்ணன் சொன்னது…

// Jeeves said...

இவ்ளோ களேபரம் எதுக்கு ? தினமலர் பிடிக்கலை பிடிக்கலைன்னு அதையே வால் பிடிச்சுட்டு படிச்சுட்டு இருக்காம ஒதுங்கிப் போனாலே போதுமே ? ஏன் யாரும் செய்யறதில்லை ?//

எனக்கு போலி சாமியார்களையும் தான் பிடிக்காது, பிடிக்கிறது பிடிக்காதது பிரச்சனையே இல்லை. விசமிகள் விதைக்கும் விதைகளை விமர்சிக்க அதனை பிடித்து இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை பாஸ். கண்டும் காணாமல் போவது தான் நடுநிலைன்னு யாரோ உங்களுக்கு தப்பு தப்பாகச் சொல்லி இருக்காங்க பாஸ்.

Sanjai Gandhi சொன்னது…

ஜீவ்ஸ், பலான புக்கை படிச்சிட்டு, அய்யய்யோ ஆபாசமா இருக்கேன்னு சவுண்டு விடற நல்லவர் தான் நம்ம கோவிஜி.. ஃப்ரீயா விடுங்க.. நம்மாள் எப்போவுமே இப்டி தான் :))

Kesavan சொன்னது…

//விசமிகள் விதைக்கும் விதைகளை விமர்சிக்க அதனை பிடித்து இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை பாஸ். கண்டும் காணாமல் போவது தான் நடுநிலைன்னு யாரோ உங்களுக்கு தப்பு தப்பாகச் சொல்லி இருக்காங்க பாஸ். //

அவங்க விசமிகள் என்று சொல்லி விட்டு அவர்களுடைய மற்ற செய்திகளை உண்மை என்று ஏன் ஏற்று கொள்கிறீர்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

// SanjaiGandhi™ said...

ஜீவ்ஸ், பலான புக்கை படிச்சிட்டு, அய்யய்யோ ஆபாசமா இருக்கேன்னு சவுண்டு விடற நல்லவர் தான் நம்ம கோவிஜி.. ஃப்ரீயா விடுங்க.. நம்மாள் எப்போவுமே இப்டி தான் :))//

இப்படித்தான், நீ தான் கோவிலுக்குப் போவதில்லையே, பிறகு ஏன் தலித்துகளை கோவில் உள்ளே செல்ல அனுமதிக்கனும் என்று நீ போராடுகிறாய் என்று லாஜிக் பேசுவார்கள். உங்கள் ஞாயங்களை உடைப்பில் போடுங்க பாஸ்.

Iyappan Krishnan சொன்னது…

போலிச்சாமியார்களும் சரி இது போன்ற பத்திரிகைகளும் சரி, ஆட்கள் வர வர தான் அவர்கள் வியாபாரம் அதிகரிக்கிறது. இன்ஃபாக்ட். இது போன்ற செய்திகள் மேலும் விளம்பரமே அவர்களுக்கு. 2000 பேர் பத்திரிகை வாங்கும் போது பிடிக்கவில்லை என்று 1000ம் பேர் ஒதுங்கி இருந்தாலுமே அவன் யோசித்திருப்பான். அதை விட்டு அவன் தப்பு செய்றான்னு சொல்லி சொல்லி 2500 பேர் வாங்கினா அவன் மேல மேல அதைத்தான் செய்வான். அவனுக்குத் தேவை சர்குலேஷன். - My thought.

கோவி.கண்ணன் சொன்னது…

//
அவங்க விசமிகள் என்று சொல்லி விட்டு அவர்களுடைய மற்ற செய்திகளை உண்மை என்று ஏன் ஏற்று கொள்கிறீர்கள்//

கலப்பட அரிசியில் கல் கிடக்கிறதுன்னு குற்றம் சொல்லும் போது, அதில் அரிசியே இல்லைன்னும் சொல்லனுமா ? உங்க புரிதல் ஜூப்பராகீது.

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi™ said...

ஜீவ்ஸ், பலான புக்கை படிச்சிட்டு, அய்யய்யோ ஆபாசமா இருக்கேன்னு சவுண்டு விடற நல்லவர் தான் நம்ம கோவிஜி.. ஃப்ரீயா விடுங்க.. நம்மாள் எப்போவுமே இப்டி தான் :))//

மாமோய் புரொபைல் புகைப்படத்தை மாத்து ரொம்ப வயசானமாதிரி தெரிகிறது. பாலான மோரான ன்னு எழுதினா மட்டும் யூத்துன்னு சொல்லமாட்டாங்க மாமா.

Sanjai Gandhi சொன்னது…

//இப்படித்தான், நீ தான் கோவிலுக்குப் போவதில்லையே, பிறகு ஏன் தலித்துகளை கோவில் உள்ளே செல்ல அனுமதிக்கனும் என்று நீ போராடுகிறாய் என்று லாஜிக் பேசுவார்கள். உங்கள் ஞாயங்களை உடைப்பில் போடுங்க பாஸ்//

இதான் கோவியாரே உங்க கிட்ட இருக்கிற கெட்டப் பழக்கமே.. கோவிலுக்குப் போகாதவங்கள பார்த்து அப்டி சொல்லலை.. கோவிலுக்குப் போகக் கூடாதுன்னு சொல்றவங்களப் பார்த்து தான் அப்டி சொன்னேன்.. பொது சுவர்ல ஆபாச போஸ்டர் பார்த்தா கிழிப்பாங்களாம்.. ஆனா யாரையாச்சும் பலான தியேட்டர்ல உள்ள விடலைனா இவங்க போராடி உள்ள அனுப்புவாங்களாம்.. இன்னாமே இது..


( ச்ச.. இந்த பெருசுங்க கூட சேர்ந்து இன்னைக்கு கன்றாவி உதாரணமா சொல்லிட்டு இருக்கேன் :) )

கோவி.கண்ணன் சொன்னது…

//இதான் கோவியாரே உங்க கிட்ட இருக்கிற கெட்டப் பழக்கமே.. கோவிலுக்குப் போகாதவங்கள பார்த்து அப்டி சொல்லலை.. கோவிலுக்குப் போகக் கூடாதுன்னு சொல்றவங்களப் பார்த்து தான் அப்டி சொன்னேன்.. பொது சுவர்ல ஆபாச போஸ்டர் பார்த்தா கிழிப்பாங்களாம்.. ஆனா யாரையாச்சும் பலான தியேட்டர்ல உள்ள விடலைனா இவங்க போராடி உள்ள அனுப்புவாங்களாம்.. இன்னாமே இது..


( ச்ச.. இந்த பெருசுங்க கூட சேர்ந்து இன்னைக்கு கன்றாவி உதாரணமா சொல்லிட்டு இருக்கேன் :) )//

இன்னிக்கு தொடர்ந்து பல்பு வாங்கனும் என்கிற முடிவில் இருக்கும் உன் தைரியத்தை நான் பாராட்டுகிறேன்.

பொதுச்சுவற்றில் ஆபாசப்படம் அதை விருபாதவர்களுக்கும் கண்ணில் படும் அசிங்கம் சங்கடம், அதைக் கிழிப்பதில் யாதொரு தவறும் இல்லை. அதே சமயத்தில் (சிறுவர்கள் அல்லாத வயது வந்தவர்களில் சிலர்) விரும்பி பாலான படங்களுக்குச் செல்பவர்களில் சிலர் கருப்பாக இருக்கிறார்கள் என்பதற்காக சிவப்பான நடிகையை கருப்பன் பார்த்திடக் கூடாதுன்னு தடை போடுவது ஐயோகியத் தனம் இல்லையா மிஸ்டர்.

Kesavan சொன்னது…

// பாலான படங்களுக்குச் செல்பவர்களில் சிலர் கருப்பாக இருக்கிறார்கள் என்பதற்காக சிவப்பான நடிகையை கருப்பன் பார்த்திடக் கூடாதுன்னு தடை போடுவது ஐயோகியத் தனம் இல்லையா மிஸ்டர். //

இங்க பலான படத்துக்கு போறது போகாதது பிரச்னை இல்லை பாஸ் . ஆனா உங்களுக்கு அந்த பலான படத்துல உங்களுக்கு பிடிச்ச (நடிகை - செய்தி ) சீன் வந்தா பாராட்டறது பிடிக்காத (நடிகை - செய்தி )சீன் வந்தா திட்டறது நல்லா இல்லைன்னு சொல்றேன். அந்த படமே அப்படிதான் தெரிஞ்சுண்டு அப்பறம் அதை பத்தி பேசறது சரி இல்லை.

கருப்பா இருப்பவங்க பலான படத்துக்கு அனுமதி இல்லையா. எந்த ஊருல . தியேட்டருக்கு போயிட்டா அப்பறம் தியேட்டரே கருப்பா தானே இருக்கும் ( நான் பொதுவா சொன்னேன் )

கோவி.கண்ணன் சொன்னது…

//
கருப்பா இருப்பவங்க பலான படத்துக்கு அனுமதி இல்லையா. எந்த ஊருல . தியேட்டருக்கு போயிட்டா அப்பறம் தியேட்டரே கருப்பா தானே இருக்கும் ( நான் பொதுவா சொன்னேன் )//

தங்க மனசுக்காரன் இந்த கேசவன், போய் வந்ததை ஒப்புக் கொள்ளும் மனது எல்லோருக்கும் அமையாது.

Kesavan சொன்னது…

திரு சஞ்சய். உங்க பின்னூட்டம் சூப்பர் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...

திரு சஞ்சய். உங்க பின்னூட்டம் சூப்பர் :)//

சஞ்செய் வாங்குன பல்புல பாதியை எனக்கும் கொடுன்னு கேட்பதிலும் ஒரு நாகரீகம். பாராட்டுகிறேன் உன்னை.

Sanjai Gandhi சொன்னது…

//படங்களுக்குச் செல்பவர்களில் சிலர் கருப்பாக இருக்கிறார்கள் என்பதற்காக சிவப்பான நடிகையை கருப்பன் பார்த்திடக் கூடாதுன்னு தடை போடுவது ஐயோகியத் தனம் இல்லையா மிஸ்டர். //

ஹாஹா.. எப்டி கோவிஜி இப்டி எல்லாம்? நீங்க தான் பலான நடிகையை எதிர்க்கிறீங்களே.. அவங்கள பார்க்கக் கூடாதுன்னு சொல்றிங்களே.. ஆகவே , அவங்கள பார்க்க விட்டா என்ன விடலைனா என்ன? .. விட்டா பிக் பாக்கெட் அடிக்கிறவங்களுக்கும் இந்த லாஜிக்ல பதில் சொல்விங்க போல.. :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//விட்டா பிக் பாக்கெட் அடிக்கிறவங்களுக்கும் இந்த லாஜிக்ல பதில் சொல்விங்க போல.. :)))//

அதையெல்லாம் சொல்லுவது நீ, உனக்கு தான் பிட்பாக்கெட் அடிப்பவர்களைப் பிடிக்காதே பிறகு ஏன் பிட்பாக்கெட் அடிக்கிறவர்களை கண்டிக்கனும் என்று நீ தான் லாஜிக் பேசுவாய்.

பல்புகள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகுது சஞ்செய். கேசவனுடன் பகிர்ந்து கொள்ளவும்

Kesavan சொன்னது…

//பல்புகள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகுது சஞ்செய். கேசவனுடன் பகிர்ந்து கொள்ளவும் //

தின மலர் செய்தியை பற்றி நான் தெரியாம சொல்லிட்டேன் . இதை இப்படியே விட்டுடுங்கன்னு சொல்லாம சொல்றீங்களா. அப்படியே விட்டுடறோம் . நோ பிராப்ளம். அதை விட்டுட்டு பல்பு புல்புன்னு சொல்லிண்டு .

கோவி.கண்ணன் சொன்னது…

//தின மலர் செய்தியை பற்றி நான் தெரியாம சொல்லிட்டேன் . இதை இப்படியே விட்டுடுங்கன்னு சொல்லாம சொல்றீங்களா. அப்படியே விட்டுடறோம் . நோ பிராப்ளம். அதை விட்டுட்டு பல்பு புல்புன்னு சொல்லிண்டு .//

தின மலர் செய்தியின் தன்மை பற்றி நீ தெரியாமல் / தெரிஞ்சு சொன்னதை எப்படி அப்படியே விட்டுவிட முடியும்.
:)

Kesavan சொன்னது…

//தின மலர் செய்தியின் தன்மை பற்றி நீ தெரியாமல் / தெரிஞ்சு சொன்னதை எப்படி அப்படியே விட்டுவிட முடியும். :) //

அப்படீன்னா என்ன சொல்றீங்க. உங்களுக்கு பிடிச்ச செய்தி தின மலர்ல வந்த சரியான செய்தி(பத்திரிகை)ன்னும் பிடிக்காத செய்தி வந்த தவறான செய்தி , அல்லது திரிக்கும் செய்தின்னு (பத்திரிகை) சொல்றீங்க அவ்வளவு தானே :)

Sanjai Gandhi சொன்னது…

//அதையெல்லாம் சொல்லுவது நீ, உனக்கு தான் பிட்பாக்கெட் அடிப்பவர்களைப் பிடிக்காதே பிறகு ஏன் பிட்பாக்கெட் அடிக்கிறவர்களை கண்டிக்கனும் என்று நீ தான் லாஜிக் பேசுவாய்.//

இந்த டகால்ட்டி எல்லாம் வேற வேற எங்கன்னா இருக்கட்டும் தலீவா.. :) நான் கண்டிக்கிறதை பத்தி எதும் சொல்லலையே.. பிக் பாக்கெட் அடிக்கிறது தப்புன்னு சொல்லிட்டு அவனை தடுப்பவர்கள் கிட்ட மல்லுக்கு போறத தானே தப்புன்னு சொல்றேன்.. நீங்க தான் பிக் பாக்கெட் அடிபப்வனை சப்போர்ட் பன்றிங்க,, ஏன்னா அது அவர் உரிமைனு சொல்றிங்க.. ஏன் பாஸ் தப்பு தப்பா ப்ளேட்ட திறுப்பறிங்க? எல்லாம் கொட்டிடிச்சிப் பாருங்க.. :))


விக்கிறது எல்லாம் ஃப்யூஸ் போன பல்பு.. இதுல பெருமை வேற :)))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தினமலம்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

மலம்தினம்!

Unknown சொன்னது…

இது இந்திய உளவுத் துறையினரின் சதி வேலையாகக்கூட இருக்க வாய்ப்புள்ளது.

இந்திய உளவுத் துறை ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு அதிகரிக்கும் போது இந்திய உளவுத் துறை இந்த மாதிரியான சதி நடவடிக்கைகளில் இப்படி முன்னரும் ஈடுபட்டது என தமிழின உணர்வாளர்கள் கருத்துத் தெர்விக்கின்றனர்.

அப்துல்மாலிக் சொன்னது…

நாய் வாலை நிமித்த முடியாதுனு சும்மாவா சொன்னாங்க...

ஆல் இன் ஆல் அழகு ராஜா சொன்னது…

அது தினமலம் நன்பரே.. அது எப்படி மனக்கும்...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தின மலம் கழிஞ்சு போவும் சாமி!

திரிச்சு திரிச்சு.........!

அடப்பாவியளா.........!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

* குண்டு வெடித்த இடத்தில் தி*மலர் நாளிதழ்களின் வாசகர் கடிதப் பகுதிகள் கிடந்தால் தி*மலர் தான் குண்டு வைத்தது என்று சொல்லிவிட முடியுமா ?//

தினமல குண்டா! அய்யோ! தாங்கமுடியாது!


* குண்டு வெடித்த இடத்தில் 'இராஜிவ் காந்தி வாழ்க !' என்ற துண்டு அறிவிப்பு கிடந்தால், தமிழ்நாட்டின் எதோ ஒரு காங்கிரசு கோஷ்டி சார்பில் குண்டு வைக்கப்பட்டது என்று கொள்ள முடியுமா ?//

சாரே வாழ்கன்னு சொன்னா, மேப்படியார் எப்படி இனி வாழுறது?


* குண்டு வெடித்த இடத்தில் 'புரட்சி தலைவி வாழ்க' என்ற அறிவிப்பு கிடந்தால் அதிமுக காரன் குண்டு வைத்தான் என்று சொல்ல முடியுமா ?//

முடியாது! ஆனா கோவியார் வச்சிருக்கார்ன்னு சொல்லலாம்!


* குண்டி வெடித்த இடத்தில் 'நமீதா வாழ்க, குஷ்பு வாழ்க' என்று எழுதி இருந்தால் கவர்ச்சி சினிமா ரசிகர் எவரோ குண்டு வைத்தார் என்று சொல்ல முடியுமா ?

கோவியாரே எழுத்துப் பிழை இல்லையே! நெம்ப குறும்புதான்! குழ்பு தனி ஆள் இல்ல. குழ்பு கலைஞர் கச்சி, நமீதா ராசபச்சே கச்சி...(டிபிசிடி எதும் நினைப்பாரோ)

* குண்டு வெடித்த இடத்தில் 'தாமபிராஸ் வாழ்க' என்று எழுதி இருந்தால் தமிழ்நாடு வாழ் பார்பனர்கள் தான் வைத்தார்கள் என்று சொல்ல முடியுமா ?//

அண்மையில் நடந்த சண்டையில இலவசமா சுட்டதா கோவியாரே!? நடத்துங்க!

THE UFO சொன்னது…

//இப்படித்தான், நீ தான் கோவிலுக்குப் போவதில்லையே, பிறகு ஏன் தலித்துகளை கோவில் உள்ளே செல்ல அனுமதிக்கனும் என்று நீ போராடுகிறாய் என்று லாஜிக் பேசுவார்கள். உங்கள் ஞாயங்களை உடைப்பில் போடுங்க பாஸ்//

---தலித்துகள் கோவிலுக்குள் சென்று சிலையை வணங்க அவர்களுக்கு உரிமை வேண்டும் என்று போராடி பெற்றுத்தருவது முக்கியமா?

---கடவுளில்லை, கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவது மூலம் அவர்களை கோவிலுக்குள்ளே செல்லாமல் தடுப்பது முக்கியமா?

ஒன்றுடன் ஒன்று நேரடியாக முரன்படுகிறதே, கோவியார்...

அவ்வளவு ஈஸியாய் இந்த லாஜிக்கை உடைப்பில் போடமுடியவில்லையே பாஸ்...

விளக்கம் தேவை...

கோவி.கண்ணன் சொன்னது…

//அவ்வளவு ஈஸியாய் இந்த லாஜிக்கை உடைப்பில் போடமுடியவில்லையே பாஸ்...

விளக்கம் தேவை...//

குடும்பக் கட்டுப்பாடு தேவை என்று சொல்லுவது வாரிசுகள் தேவை இல்லை என்று சொல்வதாக பொருள் தராது.

ஒவ்வொரு மதத்து நம்பிக்கையாளரும் பிற மதத்தைப் பொறுத்த அளவில் நாத்திகரே. எனவே கடவுள் மறுப்பு என்பதை பகுத்தறிவாளர்கள் மட்டுமே செய்வதில்லை. ஒன்றே குலம் தான் வா வந்து என் சாமியையும் கும்பிடு என்று கூப்பிட்டால் ஒரு பய வரமாட்டான்.

ஆனால் வழிபாட்டு உரிமை மறுப்பு என்பது தீண்டாமைக் கொடுமையின் எச்சம், பிடிக்கிறதோ பிடிக்கலையோ ஆனால் பிடிக்கிறவர்களுக்கு உரிமை பெற்றுத்தரனும்.

உங்களுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை என்று உயிருக்கு போராடும் ஒருவரை அப்படியே விட்டுச் செல்ல முடியுமா என்ன ? முதலில் முதல் உதவி, பிறகே நீ போன பாதை சரி இல்லை விளக்க முடியும்.

கோவில் உள்ளே போகனும் என்று ஆசைப்பட்டியே உன்னை தடுப்பவன் அவன் உன்னை விட எந்த விதத்திலும் உயர்ந்தவன் இல்லை என்று காட்ட அவனை உள்ளே அனுப்பி வைக்கனும் பாஸ்.

:)

THE UFO சொன்னது…

தங்கள் பதிலுக்கு நன்றி கோவி கண்ணன் அவர்களே...

//கோவில் உள்ளே போகனும் என்று ஆசைப்பட்டியே உன்னை தடுப்பவன் அவன் உன்னை விட எந்த விதத்திலும் உயர்ந்தவன் இல்லை என்று காட்ட அவனை உள்ளே அனுப்பி வைக்கனும் பாஸ்.// ---இதை....

{{ 'கோவில் உள்ளே வரக்கூடாது என்று சொன்னியே... உன்னால் தடுக்கப்பட்டவன், அவன் உன்னை விட எந்த விதத்திலும் தாழ்ந்தவன் இல்லை' என்று காட்ட அவனை உள்ளே அனுப்பி வைக்கனும் பாஸ்}}

....என்று சொல்லி இருந்திருந்தால் இன்னும் உங்கள் தரப்பு வாதத்துக்கு நியாயமாய் இருந்திருக்கும்...

ஆனாலும், தலித்துகள் விஷயத்தில் ஒற்றை வேலைக்கு வீணாய் இரட்டை வேலை பார்க்கிறீர்கள் என்றே தோனுகிறது பாஸ்....

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிரைக்காரன் has left a new comment on your post "தண்டவாளத் தகர்பில் தி*மலரின் பங்கு !":


பிழைய சரி செய்ங்க கோவி.

திஸ்டார்மலர்னு புதுசா செய்தித்தாள் எதுவும் வெளியாகிறதா? :)) //

அதிரைக்காரன்,

மிக்க நன்றி !

பெயரில்லா சொன்னது…

செவிடன் காதில் ஊதிய சங்கு என்பது தான் நினைவுக்கு வருகிறது இதைப் படிக்கும் போது.இப்போதைய ஊடகங்கள் சார்பு நிலைக்கும்,பரபரப்புக்கும் தான் செய்திகள் போடுகின்றன.எந்த அளவுக்கு இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்ட பிறகு,அந்த சம்பவத்துக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கும் தொடர்பு இல்லை என்று தெரிந்த பிறகு மறுப்பு வெளியிடதான் முலம் அவர்கள் சுயருபம் நல்ல தெரிகிறது.அதனால் அவர்களை கண்டிப்பதன் முலம் ஒன்று நடக்க போவதில்லை.அதிலும் தின மலர் தமிழர்களுக்கு ஏதிரான நாளிதழ் எனபது நிதர்சன உண்மை

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்