பின்பற்றுபவர்கள்

12 ஜூன், 2010

பார்வதி அம்மா, டக்ளஸ், இந்திய சட்டம் !

80 வயதை கடந்த மூதாட்டி சிகிச்சைக்கு விசா அனுமதி பெற்றும் அவரை விமானத்திலிருந்து இறங்கவிடாமல் திருப்பி அனுப்பினர் மத்திய அரசின் கூலிப் படைகள். அதே மத்திய அரசு தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவனந்ததிற்கு விசா கொடுத்ததுடன் சிவப்பு கம்பள வரவேற்பும் கொடுத்துள்ளனர். காரணம் டக்ளசால் கொல்லப்பட்டவன் இராஜிவ் குடும்பத்தை சேர்ந்தவன் இல்லை, தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழன் பொதுமக்களில் ஒருவன்.

மத்திய அரசின் அடிவருடி ஆட்சி நடத்தும் திமுக அரசின் தலைவர் கருணாநிதி பார்வதி அம்மா திருப்பி அனுப்பப்பட்ட விவரம் செய்திதாள்களைப் பார்த்து அறிந்து கொண்டதாக வெட்கம் இல்லாமல் தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாதது என்பது போல் ஒப்புதல் வாக்குமூலமாக அதனை தெரிவித்தது எரிச்சலை ஏற்படுத்தியது, அதற்கு பதிலாக 'சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிறோம்' என்று புளுகி இருந்தாலும் அடடே ன்னு உச் கொட்டி இருக்கலாம்.

டக்களஸ் இந்தியா வந்ததும் பல்வேறு அமைப்புகளின் நெருக்கடியால் டக்ளசை கைது செய்ய முடியுமா என்ற அலோசனையில் டெல்லி காவல்துறையிடம் பேசி இருப்பதாகச் சொல்லுகிறார்கள். சிவப்பு கம்பள மரியாதை செய்யப்பட்டவரை கைது செய்ய மத்திய அரசும், மன்மோகனும் அல்லது அவரின் சாட்டை சோனியாவும் கேணையா ?

அழும் குழந்தைக்கு வாழைப்பழம் காட்டுவதைப் போல இவர்கள் காட்டுவது தமிழர்களை முற்றிலும் உணர்ச்சியற்றவன் என்று குத்திக்காட்டும் ஒரு உத்தி....... இதே போல் போனால் நாளைக்கு பாகிஸ்தான் பிரதமருடன் ஒட்டிக் கொண்டு வர தாவூத் இப்ராஹிமுக்கு கூட வாய்ப்பு இருக்கும் போல.

இவர்களெல்லாம் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுகிறார்களாம்.......தமிழர்கள், இந்தியர்களும் ஐயோ பாவம் என்று வெளிநாட்டுக்காரன் சிரிப்பான். போபால் ஆண்டர்சனை தனி விமானத்தில் தப்பவிட்டதாக குற்றச் சாட்டுகள் காங்கிரசார் மீது கூறப்படுகிறது, இதை எதிர்கொள்ளத் தயங்கும் காங்கிரசு வீரப்ப மொய்ழி வழியாக 'ஓய்வு பெற்றவர்கள் வாயையும் பின்னாடியும் மூடிக் கொண்டு இருப்பது நல்லது, எதையாவது பேசி விவகாரம் ஆக்கவேண்டாம்...' என்று அவர்களை பொத்துவதிலேயே குறியாக இருக்கின்றனர்.

டக்ளசுக்கு சிவப்பு கம்பளம் விரித்தவர்கள் பார்வது அம்மாளுக்கு நிபந்தனைகளை தளர்த்தி இருக்கிறார்களாம், நல்ல கூத்து, அவர் இங்கு வருவதாக இருந்தால் அரசியல் தலைவர்களை சந்திக்கக் கூடாதாம், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான அரசியல்வாதிகள் மனிதர்கள் இல்லையா ? எல்லோரும் எப்போது அரசியல் முகமூடிகளை இவர்களைப் போலவே அணிந்து கொண்டு இருக்கிறார்களா ?

இலங்கை இராஜபக்சேவும், டக்ளசும் டெல்லியில் விருந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே இராமாஷ்வரம் பகுதியில் மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு, மீனவர்கள் கடத்தல் என்ற செய்திகள் வருகின்றன. எவன் எப்படிப் போனால் என்ன சோனியா வாழ்க, கருணாநிதி வாழ்க என்று கோசம் போடுபவர்களிலும் தமிழர்கள் உள்ளார்கள் என்பதைவிட இது வெட்கப்பட வேண்டிய விசயமாக தெரியவில்லை. புல்லுரிவிகளை கூடவே வைத்திருக்கும் நாம உணர்ச்சிவசப்படுவதைவிட இது விசயத்தில் வெட்கப்படவேண்டியதே முதன்மையாக உள்ளது.

14 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

இதுக்கு பெயர்தான் அரசியல்

AkashSankar சொன்னது…

எங்கோ பிரச்சனை இருக்கிறது...இல்லை என்றல் தமிழர்கள் இப்படி அமைதியாய் இருக்கமாட்டார்கள்.

ஜோதிஜி சொன்னது…

வெட்கம், அச்சம், மடம், நாணம் இத்யாதிகளை இப்போது நான் நெடுந்தொடரில் தேடிக்கொண்டு இருக்கிறோம்.

வந்த கொடுங்கோலன் எம்பிகளிடம் எம்பி எம்பி பேசியதை படித்துப் பாருங்கள்?

பட் அவர் தைரியம் புடுச்சுருக்கு.

ராஜவம்சம் சொன்னது…

செருப்பால அடிக்கனும் நாய்கல

{என்ன செய்ரதுங்க என் தைரியம் எல்லாம் வலையுலகில் மட்டும் தான்

Unknown சொன்னது…

//80 வயதை கடந்த மூதாட்டி சிகிச்சைக்கு விசா அனுமதி பெற்றும் அவரை விமானத்திலிருந்து இறங்கவிடாமல் திருப்பி அனுப்பினர் மத்திய அரசின் கூலிப் படைகள். அதே மத்திய அரசு தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவனந்ததிற்கு விசா கொடுத்ததுடன் சிவப்பு கம்பள வரவேற்பும் கொடுத்துள்ளனர்//

மிகவும் கண்டனத்துக்குரியது !
முதலாவது நெறியற்ற செயல் என்றால் இரண்டாவது நீதியற்ற செயல்

//கருணாநிதி பார்வதி அம்மா திருப்பி அனுப்பப்பட்ட விவரம் செய்திதாள்களைப் பார்த்து அறிந்து கொண்டதாக வெட்கம் இல்லாமல் தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாதது என்பது போல் ஒப்புதல் வாக்குமூலமாக அதனை தெரிவித்தது எரிச்சலை ஏற்படுத்தியது//


டக்ளஸ் வந்திட்டு போன விஷயமே அவருக்கு, உங்க பதிவைப் பார்த்த பிறகு தான் தெரியப்போவுதோ என்னமோ???
;)

Unknown சொன்னது…

தமிழ்நாட்டு காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியுடன் இந்திய பிரதமர்

http://www.asiantribune.com/files/images/Douglas%20-%20Manmohan%20Singh.jpg

பத்திக்கிட்டு வருது

Sanjai Gandhi சொன்னது…

//காரணம் டக்ளசால் கொல்லப்பட்டவன் இராஜிவ் குடும்பத்தை சேர்ந்தவன் இல்லை, தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழன் பொதுமக்களில் ஒருவன்.//

தமிழ்நாட்ல தினம் தினம் எத்தனையோ மூதாட்டிகளுக்கு சிகிச்சை மறுக்கப் படுது.. நர்சுகளுக்கு 5 ரூபாய் 10 ரூபாய் லஞ்சம் கூட குடுக்க முடியாமல் சிகிச்சைக்கு வழி இல்லாம தினம் தினம் எவ்வளோ பேர் செத்துட்டு இருக்காங்க.. இவங்கள்ளாம் தமிழ்நாட்டுப் பொதுமக்கள்ல யாரோ தான.. ஆனா நாம பணபலம் கொண்ட பிரபாகரன் அம்மாவுக்கு தானே ஓடி ஓடி கருத்து சொல்றோம்.. என்ன யோக்கிதையில் நீங்க அரசை குறை சொல்றிங்கன்னே புரியலை பாஸ்..

கோவி.கண்ணன் சொன்னது…

// SanjaiGandhi™ said...

//காரணம் டக்ளசால் கொல்லப்பட்டவன் இராஜிவ் குடும்பத்தை சேர்ந்தவன் இல்லை, தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழன் பொதுமக்களில் ஒருவன்.//

தமிழ்நாட்ல தினம் தினம் எத்தனையோ மூதாட்டிகளுக்கு சிகிச்சை மறுக்கப் படுது.. நர்சுகளுக்கு 5 ரூபாய் 10 ரூபாய் லஞ்சம் கூட குடுக்க முடியாமல் சிகிச்சைக்கு வழி இல்லாம தினம் தினம் எவ்வளோ பேர் செத்துட்டு இருக்காங்க.. இவங்கள்ளாம் தமிழ்நாட்டுப் பொதுமக்கள்ல யாரோ தான.. ஆனா நாம பணபலம் கொண்ட பிரபாகரன் அம்மாவுக்கு தானே ஓடி ஓடி கருத்து சொல்றோம்.. என்ன யோக்கிதையில் நீங்க அரசை குறை சொல்றிங்கன்னே புரியலை பாஸ்..//

டக்ளஸ் அரசியல்வியாதின்னா அவன் குற்றவாளி இல்லைன்னு ஆகிடுமா ? ஒரு குற்றவாளிக்கு கைகொடுத்த பிரதமரின் கயமையைப் பற்றித்தான் பேச்சு. தேவை இல்லாமல் திசை திருப்ப முயன்ற உங்களை நெனச்சா பாவமா இருக்கு மாமோய்.
:)

Sanjai Gandhi சொன்னது…

இது திசை திருப்பலாம் .. கேட்டுக்கோங்க மக்களே.. நான் பதிவில் இருக்கும் வரிகளை சுட்டிக் காட்டி உங்கள் யோக்கிதையை மட்டுமே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறேன்.. பிரபாகரன் அம்மாவுக்கு முக்கி முக்கி கொரல் குடுக்கும் நீங்க தமிழகத்தின் பொதுமக்களில் சிலருக்கு ஏன் கொரல் குடுக்கலை என்பது தான் கேள்வி.. பதிலை சொல்லுங்க பாஸ்..


//டக்ளஸ் அரசியல்வியாதின்னா அவன் குற்றவாளி இல்லைன்னு ஆகிடுமா ? ஒரு குற்றவாளிக்கு கைகொடுத்த பிரதமரின் கயமையைப் பற்றித்தான் பேச்சு. தேவை இல்லாமல் திசை திருப்ப முயன்ற உங்களை நெனச்சா பாவமா இருக்கு மாமோய்.
:) //

அப்டியே இவுரு, ராஜபக்‌ஷேவுக்கு கை குடுத்து சாலவ போத்தி கூடவே சமோசா சாப்ட திருமாவளவனை கிழிகிழின்னு கிழிச்சி எழுதிட்டாரு. இப்போ பிரதமருக்கு வந்துட்டாரு.. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க பாஸ்.. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi™ said...

இது திசை திருப்பலாம் .. கேட்டுக்கோங்க மக்களே.. நான் பதிவில் இருக்கும் வரிகளை சுட்டிக் காட்டி உங்கள் யோக்கிதையை மட்டுமே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறேன்.. பிரபாகரன் அம்மாவுக்கு முக்கி முக்கி கொரல் குடுக்கும் நீங்க தமிழகத்தின் பொதுமக்களில் சிலருக்கு ஏன் கொரல் குடுக்கலை என்பது தான் கேள்வி.. பதிலை சொல்லுங்க பாஸ்..//

அப்படி என்றால் ராஜிவ் காந்தியும் பொதுமக்களில் ஒருத்தன் தான் அவர் செத்ததற்கு நாங்க இவ்வளவு கூப்பாடு போட்டிருக்கத் தேவை இல்லை என்று ஒப்புக் கொள், நீ சொல்வதை நானும் ஒப்புக் கொள்கிறேன்

Sanjai Gandhi சொன்னது…

பயங்கரவாதி பிரபாகரன் கும்பலால் தமிழகத்தில் வைத்துக் கொல்லப் பட்ட இலங்கைத் தமிழர் தலைவர்களுக்காகவும் கூப்பாடு போட்டோமே.. நாங்க எல்லார்க்காகவும் பேசறோம்.. நீங்க அப்டி இல்லையே பாஸ்.. :)

கோவி.கண்ணன் சொன்னது…

// SanjaiGandhi™ said...

பயங்கரவாதி பிரபாகரன் கும்பலால் தமிழகத்தில் வைத்துக் கொல்லப் பட்ட இலங்கைத் தமிழர் தலைவர்களுக்காகவும் கூப்பாடு போட்டோமே.. நாங்க எல்லார்க்காகவும் பேசறோம்.. நீங்க அப்டி இல்லையே பாஸ்.. :)//

சொல்லிக் கொண்டார்கள், இந்திராகாந்தி இறப்பின் போது கொலை செய்யப்பட்ட சிங்குகளின் ஆவிகள் வந்து நீங்கச் சொல்றது 100க்கு 1000 சரிங்கிறது, கூடவே போபால் படுகொலையில் குற்றவாளிகளைத் தப்பவிட்டதற்கு ஆவிகள் சேர்ந்து காங்கிரசுக்கு பாராட்டுவிழா நடத்துகிறதாம்.

Sanjai Gandhi சொன்னது…

அப்டியா? சொல்லவே இல்லை.. உங்களுக்கும் அழைப்பு அனுப்ப சொல்றேன்..

கோவி.கண்ணன் சொன்னது…

// SanjaiGandhi™ said...

அப்டியா? சொல்லவே இல்லை.. உங்களுக்கும் அழைப்பு அனுப்ப சொல்றேன்..//

மாமு பல்பு கொடுக்கப் போறேன்னு சொல்லிட்டு வந்து கேட்டு வாங்கிட்டுப் போறியே நீ ரொம்ப.......ப நல்லவன்.
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்