பின்பற்றுபவர்கள்

28 ஜூன், 2010

350 கோடி செலவில் இல்லவிழா !

தமிழர் நலனை புறக்கணிக்கும் மைய அரசு நூற்றாண்டுகள் (காலம்) கடந்து செம்மொழி என்னும் தகுதியை தமிழுக்கு கொடுத்ததால் தமிழ் தற்பொழுது தான் தாவணி உடுத்திக் கொண்டது போலவும், அதனால் "மஞ்சள்" நீராட்டுவிழா என்பதாக முதன் முதலில் தமிழுக்காக என்பதாக 18 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு காலகட்டத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் முதன் முறையாக மாநாடு நடத்திய கருணாநிதி அதை செம்மொழி மாநாடு என்று பெயரிட்டு நடத்தினார். முதல் செம்மொழி மாநாடு என்னும் பெயர் அரசியலில் இதுவரை தமிழுக்காக எந்த ஒரு நிகழ்வும் நடந்ததே இல்லை என்கிற தோற்றம் ஏற்படுத்தினார். தமிழ்மொழி மாநாடு நடப்பது முதன் முறையன்று. இதற்கு முன்பு செம்மொழி மாநாடு நடத்திய எம்ஜிஆர் மற்றும் ஜெவின் பெயர்கள் மாநாட்டில் திட்டுவதற்குக் கூட பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மாநாட்டில் கவியரங்கம் என்பதாக முழுக்க முழுக்க கருணாநிதியின் புகழ்பாடினார்கள் அண்டிப்பிழைக்கும் கவிஞர்களும், கவிதாயினிகளும், உச்சகட்டமாக கருணாநிதியின் உமிழ்நீரும் தமிழ் நீர் என்று செம்மொழி மீது பச்சையாக மஞ்சள் எச்சிலை உமிழ்ந்தார் தமிழச்சி தங்கபாண்டியன் என்கிற ஒரு ஒருகவிதாயினி. ஏற்கனவே கவிதைவடிவில் இருக்கும் புராண புளுகுகளுக்கு புதுக்கவிதை புனுகு பூசி உலாவிட்ட வாலி ஒருபடி மேலே போய் கருணாநிதியை வாழ்த்துவது ஜெவைச் சாடுவதாது தான் என்பதாக புரிந்து கொண்டு "மாமிகள், சாமிகள் என்று, அறிவாலயம்" என்றெல்லாம் எளுதி கூடவே பார்பனர்களையும் வம்பிக்கிலுத்தார், வாலி அக்கிரகாரத்து அக்மார்க் என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை, இருந்தாலும் பொற்கிழி பெரும் ஆர்வக் கோளாரில் வாய்கிழித்துப் பாடுவதாக நினைத்து இவர் பாடிய ஆசனவாய்கவிதைகள் அருவெருப்பானவையே.

முதல்வர் இல்லத்தில் இருந்து மொத்தம் 84 பேர் கலந்து கொண்டார்களாம். இது இல்லவிழா இல்லை என்றும் யாரும் உதட்டுச் சாயம் கூடப் பூசி சாயம் ஏற்படுத்த வேண்டாம் என்று முதல்வர் சொன்னதால் கட்சி பேனர்கள் அகற்றப்பட்டதாம், ஆறுமாதங்களாக நடக்கும் ஏற்பாடு, திமுக அரசின் ஏற்பாடு இதில் உடன்பிறப்புகள் எந்த அளவுக்கு வரவேற்புகாட்டுவார்கள் என்பது கூட ஒரு முதல்வரால் யூகிக்க முடியாமல் போனதும் அதை வைக்கும் முன்பே தவிர்க்கச் சொல்ல தடுக்கச் சொல்ல ஒரு முதல்வரால் முடியாமல் போனதை அனைவரும் நம்பித்தான் ஆகவேண்டும். உடன்பிறப்புகள் பேனர் வைத்தப் பிறகு அகற்றச் சொன்னது பெருந்தன்மை என்றெல்லாம் கூட சில அப்பாவிகள் எழுதுகிறார்கள், நினைக்கிறார்கள். வைக்கச் சொல்லி எடுக்கச் சொல்லுவது பெரும்தன்மையாம்.


மாநாட்டில் நடுவில் திரு சுதர்சனம் மறைவு. அந்நிகழ்வை 'இதயத்தை தாக்கிய இடி' என்று குறிப்பிட்டு இருக்கிறார் கருணாநிதி. இதற்கும் சேர்த்து 'இடியையும் இதயத்தில் தாங்கும் எங்கள் ஒரே தலைவன்' என்று எவரேனும் அடுத்து பாராட்டுவிழா ஏற்பாடு செய்தாலும் வியக்க ஒன்றுமில்லை.

மாநாட்டை பிடிக்காதவர்கள் விமர்சிக்க இதை செம்மொழி மாநாடு இல்லை என்று உடன்பிறப்புகளைப் போல் சொல்லிவிட்டு போனால் யார் விமர்சிக்கப் போகிறார்கள் ? அதுவும் அரசு வரிப்பணத்தில் நடக்காவிட்டால் யார் விமர்சனம் செய்வார்கள்? பொதுமக்கள் வரிப்பணத்தில் இப்படி ஒரு கேலிக்கை நடந்ததை விமர்சனம் செய்வது வெறும் காழ்புணர்வு அன்று.

இங்கு, அங்கு எநத ஒரு அசாதராண சூழலும் இல்லை, கிரிக்கெட் நடக்கிறது பாருங்கள் என்று முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நடுவில் கிரிக்கெட் நடத்திக் காட்டியாது இலங்கை, அதற்கு வீரர்களை அனுப்பி ஆசிர்வதிதது இந்தியா, அதன் தொடர்ச்சியாக தமிழர்கள் மத்தியில் துயர் இல்லை, இதோ அவர்கள் கொண்டாடும் மனநிலையில் தான் இருக்கிறார்கள், அப்படி இல்லை என்றால் மொழிக்கு மகுடம் சூட்ட அவர்களால் இயலுமா ? இராஜபக்சே கூப்பிட்டு சுட்டிக்காட்ட உலகினருக்கு இன்னொரு நிகழ்வு நடந்து முடிந்த கேலி(க்கை) செம்மொழி மாநாடு.......வெற்றி வெற்றி........மாபெரும் வெற்றி!

படம் நன்றி : ஜூவி

நெஞ்சு பொறுக்குதில்லையே - செம்மொழி (திரு வந்தியத்தேவன்)

6 கருத்துகள்:

வந்தியத்தேவன் சொன்னது…

ம்ம்ம் நானும் இதையே தான் குமுறியிருக்கின்றேன். செம்மொழி மாநாட்டில் ஏன் கமல், ரஜனி கலந்துகொள்ளவில்லை?

மக்கள் தான் பாவம்.

mkr சொன்னது…

செம்மொழி மாநாட்டில் நடந்த கவியரங்கத்தை பார்க்கும் போது கலைஞருக்கு நடக்கும் பாரட்டு விழாவாக இருந்தது.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ம்ம்ம் நானும் நினைத்தேன்

துளசி கோபால் சொன்னது…

என்னங்க, பூராக் குடும்பமும் தமிழ்ச்சேவை பிழியுது!!!!!

பாராட்டமாட்டீங்களா?

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...

என்னங்க, பூராக் குடும்பமும் தமிழ்ச்சேவை பிழியுது!!!!!

பாராட்டமாட்டீங்களா?//

அவங்க சேவை வரிக்கு தான் 350 கோடி !
:)

priyamudanprabu சொன்னது…

mmஎன்னமோ போங்க ........... ம்ம்ம்ம்ம்ம்ம்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்