பின்பற்றுபவர்கள்

18 ஜனவரி, 2010

சிவனுக்கு அர்சனை செய்த நல்ல பாம்பு !

என்ற தலைப்பில் படத்துடன் ஒரு தகவலை வெளி இட்டிருக்கிறது தினமலர், இந்த தகவலை ஆத்திக அன்பர் ஒருவர் அனுப்பி அதில் இருக்கும் பின்னூட்டங்களையும் படிக்கச் சொல்லி அனுப்பினார்.

பாம்பு மரத்தில் ஏறி வில்வ இலையைப் பறித்து வந்து பறித்து வந்து அர்சனை செய்ததாம். படிப்போருக்கு மெய் சிலிர்க்க வைக்கும் தகவல். மாட்டுக் கண்ணில் கிருஷ்ண பகவான் தோன்றுவது, பிள்ளையார் பால் குடித்தது, ஏசுவின் கண்ணில் இரத்தம் வழிவது மண்ணறையில் கடுமையான தண்டனை கிடைப்பதற்கான ஆதாரமாக ஒரு பிணத்தை தோண்டி காட்டியது போன்று பல்வேறு மத நம்பிக்கை வதந்திகளில் இதுவும் ஒன்று. பாம்பு அபிஷேகம் செய்வது, தாலாட்டுவது, இதையெல்லாம் ராமராஜன் படத்தில் என்றோ பார்த்துவிட்டோம். பல ஆண்டுகளுக்கு முன்பு குரங்கு ஒன்று கோவிலுக்குள் சென்று அங்கு பக்தர்கள் கொடுக்கும் தேங்காயை உண்டு வாழ்ந்து அங்கேயே இறந்ததாம். அனுமாரே வந்ததாக கிளப்பி விட்டனர். எங்கும் யாரும், காக்கைகளும் துறத்தாத இடம், உணவு கிடைக்கும் இடம் என்றால் குரங்கு நகராமல் அங்கேயே இருப்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை. பாம்பு சிலை மீது படுத்து இருப்பதும், தன்னுடைய பாதுகாப்பிற்காக யாரும் வருகிறார்களாக என்கிற கவனத்துடன் தலையை முன்பாக வைத்திருப்பதும் அதிசயம் இல்லை. வில்வ இலையைப் பறித்து அர்சனை செய்ததாக சொல்லி இருப்பது வெறும் வதந்தி என்றே நினைக்கிறேன்.


"இதே போன்ற சிவலிங்க சன்னதியின் கருவரையில் தான் தேவ நாதன் என்பவன் காம லீலைகளையும் நடத்தினான். பாம்பு அர்சனை செய்தது உண்மை என்றால் அது போன்ற மற்றொரு பாம்பு தேவ நாதனுக்கு கொத்த வேண்டிய இடத்தில் கொத்தி இருக்க வேண்டும், அப்படியெல்லாம் எதுவுமே நடக்காமல் தேவ நாதன் தொடர்ந்து பல பெண்களுடன் கருவரையை விந்தாபிஷேகம் செய்து வந்திருக்கிறான். பல நாள் திருடன் என்கிற ரீதியில் தான் தேவ நாதன் சிக்கினான்."


மனிதர்கள் தொட்டாலே தீட்டு, பாம்பு படுத்து இருந்தால் தெய்வீகமாம், அதிசயமாம். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.........தமிழ்நாட்டிலே. இதை இறை அற்புதம், அதிசயமாகக் காட்டுவதன் மூலம் மக்கள் மனதில் வேதனையாக இருக்கும் தேவநாதன் திருவிளையாடலை மறக்க வைத்துவிடும் என்கிற ஒரு நம்பிக்கையோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. சிலந்தி அர்சனை செய்ததாக கூறிய பெரிய புராணக் கதையின் தற்கால வடிவமாக இதனைக் கொள்ளலாம் போலத் தெரிகிற


எத்தனையோ கோவில்கள், புராணங்கள், மந்திரங்கள், பக்தி நூல்கள் இருந்தும் கடவுள், மனிதனுக்கு இறை நம்பிக்கை ஏற்படுத்த, வலுப்படுத்த ஒரு வாயில்லா உயிரை நம்புகிறார் என்று நினைப்பது பக்தியா ? அறியாமையா ?

சிவன் கோவிலில் பாம்பு வில்வ அர்சனை செய்தது என்று கேள்விப்பட்டால் உடனடியாக முகம் சுளிபவர் இந்து வைணவர்கள் மற்றும் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தான், நாத்திகனுக்கு இவை பெரிய விசயமே இல்லை வழக்கமான ஒன்று தான்.

தினமலர் இணையப்பக்கத்தில் குறிப்பிட்ட தகவலுக்கு வந்த சுவையான பின்னூட்டங்கள் :

அன்புள்ள வாசகர்களே,

"இந்த செய்தியை படித்த இவளவு மக்கள் கமெண்ட் எழுதிகிறார்கள் என்றால் அதுவே இறை நம்பிக்கைக்கு வெற்றி, அதிலும், வரலாற்றில் படித்து, பெரியோர் சொல்லி கேட்டு,பெற்ற அனுபவத்தை கட்டிலும் இதுபோன்ற தெய்வதினம் மிக்க விஷயம் கண்டிப்பாக நாஸ்திகர் மனதிலும் ஒரு மிக மெகா பெரிய கேள்வி எழுப்பும், யோசி, யோசி, யோசித்திகொண்டே இரு ஒரு நாளேனும் விஷயம் புரியும் , அயல் நாடுகளில் வசிக்கும் மனிதனும் கர்ம பலன்களை நம்புகிறான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று இன்டியானகிய எனக்கு சொல்கிறான்,இனியாவது கேடு செய்யாதே, இறைவன் இருக்கிறான், அவன் , சிவனாக இருந்தால் என்ன, ஏசுவாக இருந்தால் என்ன, அல்லாவாக இருந்தால் என்ன, புத்தனாக, இருந்தால் என்ன, அல்லது வேறு உருவில் இருந்தால் என்ன, அவன் மீது நம்பிக்கை வைத்து நல்லதையே செய், நிச்சயம் பலன் உண்டு."


" நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய த்ரியம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னி ருத்ராய நீலகண்டாய மிர்தியுன்ஜெயாய
ஸர்வேஸ்வராய சதாசிவாய ஸ்ரீமண் மகாதேவாய நமக
இந்த மந்திர்ரத்தை தினமும் சொல்லுங்கள் ஒரு மணி நேரம்
உங்கள் வாழ் முழுவதும் உங்களுக்கு ஒருநாள் சித்தி கெடைக்கும் இது முழு உண்மை . ஆனால் நீங்கள் இதை யாரிடமும் உங்களுக்கு சித்தி கெடைக்கும்வரை நான் இந்த மந்திரத்தை சொல்வதாக சொல்லக் கூடாது, பொதுப்படையாக இந்த மந்திரத்தை சொல்லுங்கள் உங்களுக்கு சித்தி கெடைக்கும் என்று சொல்லலாம் "


" உண்மை என்ன?! எல்லோருக்கும் புரிய வேண்டும். பொதுவாக, விஞ்ஞான ரீதியாக, இயற்கை ரீதியாக, நடப்பது இதுதான்: இங்கும் கிரிஸ் நாட்டில் பாம்புகள் பெரிய பாறைகள் புதர்கள் பக்கத்தில் முட்டைகள் இட்டு அவைகளை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டி, இலைகள் பூக்கள் போன்றவைகளை பறித்து வந்து மூடும்; அடிக்கடி வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு செல்லும்; இது இயற்கையில் நடக்கும் உண்மை; இதுதான் அங்கும் நடந்திருக்கும்! பாம்பு வகைகளுக்கு மட்டும் அல்ல; பல விலங்கினங்களுக்கே மனிதனைவிட அறிவுக்குர்மை அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது!! வீணாக கடவுள் அது இது என்று புலம்ப வேண்டாம்! நாங்களும் நம்பிக்கை உடையவர்கள்தான் ; ஆனால் மூடர்கள் அல்ல!! "


"
பாம்பு செய்தது தெய்வச் செயல் என்பது போல் பரவசப்படுபவர்கள் மச்சேஸ்வரர் கோவில் பாம்புகளே வசிக்காத நகரத்தில் இருக்கவில்லை என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அதிசயங்கள் நிகழ்வதாகக் கூறிக் கொள்வது எதுவுமே ஆன்மிகம் சார்ந்த ஒன்று அல்ல. அதை குடுகுடுப்பைக்காரன் மற்றும் மோடிமஸ்தான்களாலும், ப்ளாக் மேஜிக் காரர்களாலும், மேஜிக் காரர்களாலும் நிகழ்த்த முடியும். எல்லாம் தெரியமல் 'மெய் பொருள் காண்பதறிவு' என்று முன்னோர் சொல்லி வைத்துவிடவில்லை."



"இந்த அதிசயம் மூலம் இறைவன் சகல ஜீவராசிகளுக்கும் சொந்தமானவன் என்று நம்மால் உணரமுடிகிறது. இதை நாம் பல கதைகளில் படித்தும் இருக்கிறோம். அனால் கொடுமை என்னவென்றால் இந்த சம்பவத்தை படித்து கேலி சேயும் பல ''''பகுதரிவளிகள்'''' ஒரு பாம்பு சிவ வழிபாடு செய்வதை ஒப்புகொள்வது இல்லை, தான் பிராணிகளைவிட கேவலமானவர்கள் என்று நிருபிகின்றனர். ஈசன் ஒருவனால் மட்டுமே இவர்களை காபற்றமுடியும்."



"
இது அனைவரையும் மெய் சிலிர்க்கவைத்த காட்சியாக இருந்தது என்று செய்தியில் இருந்தாலும் ஒரு அர்ச்சகர் மட்டும்தான் பார்த்தார் என்று கூசாமல் கமென்ட் அடித்த நாத்திக அன்பரின் இச்செய்தி பொய்யாக வேண்டும் என விரும்பும் உள் உணர்வு நன்கு தெரிகிறது பூனை கண்ணை மூடினால் எனும் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது ஓம் நமசிவாயா சிவாய நாம ஓம் = விஜயகோபால் "


"நாத்திகம் பேசுபவனும் நிச்சயம் ஒரு நாள் ஆதிக்கம் பேசுவான்...இதற்கு எந்த கொம்பனும் விதி விலகு கிடையாது ...இதற்கு ஒரு நல்ல எடுத்து காட்டே '''' மஞ்சள் சலவை '''' போர்த்தி கொண்டு பவனி வரும் தமிழின தலைவர்..எல்லா வற்றுக்கும் காலம் பதில் சொல்லும்.பாலாவிற்கும் இது தான் பதில்.ஓம் நமாஹ் சிவாய."


"தயவு செய்து தினமலர் இதை பிரசுரிக்க வேண்டும்.......

நம சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் நம் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.
நாதர் முடியில் இருக்கும் நல்ல பாம்பே ..உன்னை பார்த்த பிறகாவது நல்ல புத்தி வருமா இவர்களுக்கு சொல்லு பாம்பே ..
உன் வாயில் வில்வம் இருப்பதை பார்த்த பிறகாவது அறிவுக்கண் திறக்குமா இவர்களுக்கு சொல்லு பாம்பே ..ஓம் சிவோஹம், ஓம் சிவோஹம்!!! "

9 கருத்துகள்:

பித்தனின் வாக்கு சொன்னது…

// மனிதர்கள் தொட்டாலே தீட்டு, பாம்பு படுத்து இருந்தால் தெய்வீகமாம், அதிசயமாம். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....... //
நல்ல கருத்து. நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கு. வடனாட்டில் தொட்டால் புனிதம். தென்னாட்டில் சிலையைத் தொட்டால் குற்றம். இது என்ன வேறுபாடு என்று தெரியவில்லை. கட்டுரை மிகவும் நன்று. இது போன்ற புனைக்கதைகளை எவ்வாறு நம்புகின்றார்கள் என்று புரியவில்லை.

ஆமா இன்னமும் தேவனாதன் பாதிப்பில் இருந்து நீங்க வெளிவரவில்லையா? பத்திரிக்கைகாரர்கள் கூட மறந்துவிட்டார்கள்.
நன்றி கோவி அண்ணா.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

//ஆத்திக அன்பர் ஒருவர் அனுப்பி அதில் இருக்கும் பின்னூட்டங்களையும் படிக்கச் சொல்லி அனுப்பினார்.//

அந்த ஆத்திக அன்பரை உதைச்சா உங்க கிட்ட இப்படி பட்ட பதிவு வராது.. அவர் டீட்டேயில் பிளீஸ்....:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆமா இன்னமும் தேவனாதன் பாதிப்பில் இருந்து நீங்க வெளிவரவில்லையா? பத்திரிக்கைகாரர்கள் கூட மறந்துவிட்டார்கள்.
நன்றி கோவி அண்ணா.

2:21 PM, January 18, 2010//

தேவநாதன் ஒரு வாழும் உதா'ரணம்' எப்படி விட்டுவிட முடியும்

கோவி.கண்ணன் சொன்னது…

// ஸ்வாமி ஓம்கார் said...

//ஆத்திக அன்பர் ஒருவர் அனுப்பி அதில் இருக்கும் பின்னூட்டங்களையும் படிக்கச் சொல்லி அனுப்பினார்.//

அந்த ஆத்திக அன்பரை உதைச்சா உங்க கிட்ட இப்படி பட்ட பதிவு வராது.. அவர் டீட்டேயில் பிளீஸ்....:)//

முகவரியா ?

சங்கிலி சம்பந்தம்,
கொருக்குப் பேட்டை !

ஊர்சுற்றி சொன்னது…

தமிழ்மண விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். :)

அப்படியே பாம்பு மேட்டருக்கு - "என்ன பண்ணாலும் இவிங்களைத்(இந்த மாதிரி கண்றாவிகளை நம்பிகிட்டு திரியுறவங்க) திருத்தவே முடியாதோ?!!".

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அண்ணே !! காலத்தின் கோலம் என்று இதைத் தான் சொல்வாங்களோ !

இவங்களை திருத்த என்ன வழி ...

சிநேகிதன் அக்பர் சொன்னது…

// எல்லா வற்றுக்கும் காலம் பதில் சொல்லும்.பாலாவிற்கும் இது தான் பதில்.//

அவரு தெரியாம காலம்தான் பதில்சொல்லும்ன்னு சொல்லிட்டார்.

நீங்க இருக்கிறீங்கன்னு தெரியாம.

priyamudanprabu சொன்னது…

அட போங்கண்ணே

சொன்னா புரிஞ்சிடுமா அவிகளுக்கு????

குட்டிபிசாசு சொன்னது…

//பாம்பு அபிஷேகம் செய்வது, தாலாட்டுவது, இதையெல்லாம் ராமராஜன் படத்தில் என்றோ பார்த்துவிட்டோம்.//

ராமராஜன் அல்ல. ராமநாராயணன். ஆன்மீகத்தின் சரக்கு ஒன்றொன்றாக பொய்யாகிப் போகும் போது, இப்படி எதாவது மோடிமஸ்தான் வேலை செய்ய வேண்டுமே!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்