பின்பற்றுபவர்கள்

6 ஜனவரி, 2010

ஏசு காத்திருக்கிறார் !

சென்றவாரம் படித்த தகவல் மத நம்பிக்கைகளில் மற்றொரு மூடத்தனத்தை வெளிச்சமிட்டிருந்தது. அதாவது கருத்தடை செய்து கொள்வதால் ஏசுவின் (மறு) வருகை காலம் எடுத்துக் கொள்கிறது என்று யூதர்கள் கருதுகிறார்களாம். இயற்கையை மனிதன் கட்டுபடுத்த முடியாது, ஆனால் அதிலிருந்து சற்று விலகி இருக்க முடியும், அல்லது இயற்கையின் செயல்பாடுகளை ஓரளவு அறிந்து கொள்ள முடியும், அல்லது இயற்கையை நன்கு ஆராய்வதால் அதன் ஒழுங்கை அறிந்து கொண்டு அதை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.ம். இதைத்தான் அறிவியல் அல்லது மனித நாகரீக வளர்ச்சி என்கிறார்கள். இயற்கையில் இருந்து விலகி இருத்தல் என்பது புயல், கடும் மழை, வெயில் போன்றவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள அதனைத் தாங்கும் வீடுகளை அமைத்துக் கொள்ளுதல் மற்றும் பல. இயற்கையின் செயல்பாடுகள் என்பவை காற்று அடிக்கும் திசை, பருவ காலங்கள் மற்றும் வேதியல், இயற்பியல் விதிகள். இயற்கையின் ஒழுங்கு என்பவை பூமி சுற்றும் கால அளவுகள், மற்றும் புவியின் சுற்றுப்பாதை, புவி ஈர்ப்பு தன்மை ஆகியவை, இவற்றை ஆராய்ந்து அதன் தன்மைக்கு ஈடுகொடுத்து பறக்கும் இயந்திரங்களை அமைத்துக் கொண்டு நாம் அதில் பயணம் செய்வது. இவையெல்லாம் அறிவியல் ரீதியானவை, மனித வாழ்க்கைக்குப் பயன்படும் மருத்துவமும் அறிவியலே. உடலியல் காரணங்கள் தவிர்த்து பருவ மடைந்த ஆண் / பெண் கூடும் போது, சரியான சூழல் வாய்க்கப்பட்டால் கருத்தரிப்பதும், அதன் வழியான இனப்பெருக்கமும் இயற்கையானதே. உடல் உறவு என்னும் செயலின் பக்கவிளைவான கருத்தரித்தலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று கண்டு கொண்டு கருமுட்டையும் விந்தும் சேருவதைத் தடுப்பது தான் கருத்தடை எனப்படுகிறது, இது பற்றி பருவமடைந்த அனைவரும் அறிந்தது தான். கருத்தடை தேவையின் பொதுவானக் காரணம் மிகவும் வெளிப்படையானது, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல், அளவான இல்லம், விரும்பும் போது பெற்றுக் கொள்ளுதல். இதைத் தவிர்த்து பிற காரணங்கள் ஆகிய யாவும் நிரந்தர, தற்காலிக கருத்தடைகளுக்குள் வந்துவிடும்.

மரம் செடி கொடி மற்றும் ஏனைய உயிரினங்கள் யாவும் மறு சுழற்ச்சி அல்லது உணவு சுழற்சி ஆகியவற்றிற்குள் வருவதால் அவற்றிற்கான இனப்பெருக்கம் இயற்கையிலேயே கட்டுப்படுத்தப்பட்ட ஒன்று தான். அதாவது இனப்பெருக்கக் கட்டுபாடு என்பவை இயற்கையுடன் இணைந்த வாழ்கையாக வாழும் உயிரினங்கள் அனைத்தின் மீதும் ஏற்கனவே இருக்கிறது. சிந்திக்கத் தெரிந்த மனித இனம் இயற்கைப் பேரிடர் அல்ல்து இனப் போர் ஆகியவற்றைத் தவிர்த்து இனப்பெருக்கக் கட்டுப்பாடுகள் எதுவும் நேரடியாக இல்லை. கட்டுப்படுத்துவது தெய்வக் குற்றம் என்பதாக மதவாதிகள் பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள். ஆணிய சமூகம் பெண்களை மதக்காரணங்களைச் சுட்டி மனித ஒற்றெடுக்கும் (copy) இயந்திரங்களாகாவே பயன்படுத்தி வந்திருக்கிறது. பெருகும் மக்கள் தொகை பட்டினிச்சாவு, இயற்கைப் பேரிடர் போன்ற புற இனப்பெருக்கக் கட்டுப்பாடுகளைத் தவிர்த்துப் பார்த்தால் மனித இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த இயற்கையும் திணறிப் போகிறது. மனித இனம் பெருகுவதற்கேற்ப காடுகள் அழிக்கப்பட்டு நகரங்கள் ஆவதும், தேவைக்கேற்ப விளைச்சல் நிலங்கள் ஏற்படுத்துவதாலும், தொழிற்சாலைகளின் பெருக்கத்தாலும் புவி வெப்பமடைந்ததுடன், சுற்றுச் சூழல் என்பது இன்றைக்கு அறைகூவலாகவே அச்சமூட்டுகிறது. மனித இனப்பெருக்கம் கட்டுப்படுத்தாவிட்டால் அது மேலும் தீவிரம் அடையும் என்பதைத் தவிர்த்து ஒன்றும் இல்லை. புஷ் போன்றவர்கள் இந்தியர்களும் சீனர்களும் மிகுதியாகச் சாப்பிடுகிறார்கள் அதனால் தான் சுற்றுச் சூழல் கெடுகிறது என்பதாகக் கிளப்பிவிடுகிறார்கள். மிகுதியாகச் சாப்பிடுவது என்பது எண்ணிக்கை அடிப்படையிலான ஒன்றே அன்றி தனி மனிதனைப் பொறுத்ததும் அல்ல.

வேறு எந்தக் காரணங்களுக்காக கருத்தடைகள் தேவை என்பதைவிட சுற்றுச் சூழல் பாதுக்காப்பிற்காக மனித இனப் பெருக்கம் கட்டுப்படுத்துவது மிக மிக தேவையான ஒன்றே. ஏனெனில் இயற்கைச் சூழலில் உயிரினங்கள் அனைத்திலுமான உணவு சுழற்சி அமைப்பு அவற்றின் இனப் பெருக்கத்தை ஏற்கனவே கட்டுப்படுத்துகிறது, அவற்றின் உற்பத்தியை விட மிகுதியாக வேட்டையாடினால் தான் மனித இனத்திற்கு தேவையான உணவை பெற முடியும் என்கிற நிலையில் பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருகின்றன. கருத்தடை எதிர்ப்புக்கு மத ரீதியான காரணங்களை இயற்கை ஆர்வலர்கள் நிராகரிப்பது மனித குலத்துக்கு நல்லது. ஏசு பிறக்க கருத்தடை தடையாக இருக்கிறது என்பது ஏசு மீதே நம்பிக்கை இன்றிய வாதம், ஏனெனில் ஏசு பிறக்க வேண்டுமென்றால் பிறக்க வேண்டிய நேரத்தில் சரியாக பிறப்பார்.

யூதர்களின் இறைத் தூதர் மெசையா கூற்றுபடி ஏசு பிறந்ததை யூதர்கள் நம்பவில்லை, மெசையா சுட்டிய ஏசுவை ரோமானியர்கள் ஏற்றுக் கொண்டார்கள், யூதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. யூதர்களைப் பொருத்த அளவில் ஏசு இன்னும் பிறக்கவே இல்லை. ஏசுவிற்கு பிறகான ஆப்ராகமிய மதங்களின் மற்றொரு இறைத் தூதரான முகமது நபியை யூதர்கள் மற்றும் ரோமானியர்கள் உட்பட அனைத்து கிறித்துவர்களும் நம்பவில்லை, ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்களின் வேத நூல்களின் படி இன்னொரு மீட்பர் வந்தாலும் ஏற்கனவே இருந்த நடைமுறைகளின் படி யூத, கிறித்துவ, இஸ்லாமியர் ஆகிய மூவருமே நம்பப் போவதில்லை. ஏனெனில் தாம் தான் அந்த இறைத் தூதர் என்று ஏசு, முகமது ஆகியோர் சொன்ன போது அதற்கு முந்தைய நம்பிக்கையாளர்களால் நிராகரிக்கப்பட்டே வந்திருப்பது கவனிக்கத் தக்கது. ஆப்ரகாமிய நம்பிக்கைகளின் படி இன்னொரு இறைத் தூதர் வந்தாலும் யூதர், கிறித்துவர், இஸ்லாமியர்களால் கண்டிப்பாக புறக்கணிக்கப் படுவார், காரணம் மிக வெளிப்படையானதும் ஏற்கனவே நடப்பில் இருந்தது என்றும் சொல்லலாம். இன்னொரு இறைத் தூதர் வந்தால் எப்படி அறிந்து கொள்வீர்கள் என்று கிறித்துவ, இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்ட போது 'நம்பிக்கையாளர்களுக்கு உள்ளுணர்வு அவர்களை நம்பச் சொல்லும்' என்றார்கள். ஏசு இறைத் தூதர் என்று யூதர்களுக்கு எந்த உள்ளுணர்வும் ஏற்பட வில்லை, இதுவே முகமதின் வருகையின் போதும் எந்த கிறித்துவர்களுக்கும் உள்ளுணர்வு ஏற்பட்டிருக்க இல்லை, புதிதாக வரும் தூதர் எந்தவிதமான உள்ளுணர்வை ஏற்படுத்தப் போகிறார் ? முகமது இறுதி இறைத் தூதர் என்பது இஸ்லாமிய நம்பிக்கை, அல்லாவே நினைத்தாலும் கூட ஏற்கனவே இருக்கும் இறுதித் தூதர் நம்பிக்கையால் இன்னொரு இறைத் தூதரை இஸ்லாமியர்களுக்கு புதிதாகக் கொடுத்துவிட முடியாது.

ஏசு காத்திருக்கிறார் இன்னொரு புதிய மதம் உருவா(க்)கும் காலத்திற்காக.

37 கருத்துகள்:

பித்தனின் வாக்கு சொன்னது…

கடவுள் மனிதனைப் படைத்த காலம் தொட்டு, மனிதனும் கடவுளைப் படைத்துக் கொண்டுதான் இருப்பான், இனியும் படைப்பான். இது காலச் சுழற்ச்சி. பிறந்து முதல் இறக்கும் வரை மனிதன் எதையாவது நம்பிக் கொண்டும் அல்லது சார்ந்து கொண்டும் தான் வாழவேண்டும். ஆதலால் இன்னமும் நிறைய கடவுளும், மதமும் பிறக்கும். நன்றி அண்ணா.

பிரபாகர் சொன்னது…

அண்ணா,

மனிதம் என்பதைக் கூட மதம் என்பது சற்று அழுத்தியே வைத்திருக்கிறது.மதங்களின் ஆதிக்கம் ஒழிந்து மனிதம் செழிக்கும்போதுதான் எல்லாம் சரியாகும்.

//
ஏசு காத்திருக்கிறார் இன்னொரு புதிய மதம் உருவா(க்)கும் காலத்திற்காக.
//

முத்தாய்ப்பாய் முடித்திருக்கிறீர்கள்...

பிரபாகர்.

ரோஸ்விக் சொன்னது…

கார் அனுப்பி பிக்-அப் பண்ணிக்கவா?? :-)))

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

அரசன் குழந்தையை கொல்கிறான் என்பதால் மாட்டு தொழுவத்தில் பிறந்தவர் ஏசு...

தற்காலத்தில் கருத்தடை செய்தாலும் கார் செட்டில் பிறக்காமல் இருக்கமாட்டார்...

ஹிமாலயாவில் ஏசு பிறந்திருக்கிறார் என ஒரு குரூப் கூறுகிறார்களே.. :)

Unknown சொன்னது…

இதை நான் படித்துவிட்டேன்... முழுவதுமாக.

ஏன் கோவிஜி அதிககதிகமாக மதத்தை எடுத்து ஆராய்கிறீர்கள்?

<<<
முகமது இறுதி இறைத் தூதர் என்பது இஸ்லாமிய நம்பிக்கை, அல்லாவே நினைத்தாலும் கூட ஏற்கனவே இருக்கும் இறுதித் தூதர் நம்பிக்கையால் இன்னொரு இறைத் தூதரை இஸ்லாமியர்களுக்கு புதிதாகக் கொடுத்துவிட முடியாது.
>>>
இதை பற்றி எந்த கருத்து நான் சொல்ல விரும்பவில்லை.

<<<
ஏசு காத்திருக்கிறார் இன்னொரு புதிய மதம் உருவா(க்)கும் காலத்திற்காக.
>>>

புதிய மதம் உருவாக்குவதற்கு அல்ல, இருக்கும் மக்களை மீட்பதற்காக... நாங்களும் (முஸ்லீம்) ஏசுவை நம்புகிறோம், வருவார் என்று நம்புகிறோம்.

Unknown சொன்னது…

ஆமாம் ஏசு நாதர் மீண்டும் வரும்போது, யூத இனத்தில் இருந்துதான் வருவாறா?

வால்பையன் சொன்னது…

//அல்லாவே நினைத்தாலும் கூட ஏற்கனவே இருக்கும் இறுதித் தூதர் நம்பிக்கையால் இன்னொரு இறைத் தூதரை இஸ்லாமியர்களுக்கு புதிதாகக் கொடுத்துவிட முடியாது.//

அல்லாவாலயே முடியாது!
அப்ப கஷ்டம் தான், ஒருவேளை நீங்க சொல்ற மாதிரி இறைதூதர் வந்தால் எல்லா மதத்துக்குகாரங்களும் சேர்ந்து அடிச்சே கொன்னுபுடுவாங்க போலயே!

நினைச்சுபாக்கவே சிரிப்பா இருக்கு!

வால்பையன் சொன்னது…

//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//


உங்களுக்குமா!?

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
தமிழ் உதயம் சொன்னது…

பகுத்தறிவை சற்று பயன் படுத்தினால், எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்து விடும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...

கடவுள் மனிதனைப் படைத்த காலம் தொட்டு, //

சிலரைப் பார்த்தால் மனிதனாகவே தெரியவில்லை. அவர்களையும் கடவுள் தான் படைத்தாரோ ! :)

கோவி.கண்ணன் சொன்னது…

// பிரபாகர் said...

அண்ணா,

மனிதம் என்பதைக் கூட மதம் என்பது சற்று அழுத்தியே வைத்திருக்கிறது.மதங்களின் ஆதிக்கம் ஒழிந்து மனிதம் செழிக்கும்போதுதான் எல்லாம் சரியாகும்.

//
ஏசு காத்திருக்கிறார் இன்னொரு புதிய மதம் உருவா(க்)கும் காலத்திற்காக.
//

முத்தாய்ப்பாய் முடித்திருக்கிறீர்கள்...

பிரபாகர்.//

நன்றி பிராபகர்

கோவி.கண்ணன் சொன்னது…

//ரோஸ்விக் said...

கார் அனுப்பி பிக்-அப் பண்ணிக்கவா?? :-)))//

தலைப்பை மட்டும் படித்து போட்ட பின்னூட்டமா ? அவ்வ்வ்வ்வ் !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...

அரசன் குழந்தையை கொல்கிறான் என்பதால் மாட்டு தொழுவத்தில் பிறந்தவர் ஏசு...//

கண்ணன், ஏசு, குழந்தையைக் கொல்லும் கொலைகார அரசன் சிறைக்கூடம் மாட்டுத் தொழுவம் - எங்கேயோ இடுக்குது

// தற்காலத்தில் கருத்தடை செய்தாலும் கார் செட்டில் பிறக்காமல் இருக்கமாட்டார்...//

ம்கூம் லாஜிக் படி குளோனிங்கில் பிறக்கமாட்டாரான்னு கேட்டிருக்கனும் !
:)

// ஹிமாலயாவில் ஏசு பிறந்திருக்கிறார் என ஒரு குரூப் கூறுகிறார்களே.. :)//

அவங்க அஹமதியா குரூப்

கோவி.கண்ணன் சொன்னது…

// ..:: Mãstän ::.. said...

இதை நான் படித்துவிட்டேன்... முழுவதுமாக.//

ஆஹா முழுமையாகப் படித்தது முதன் முறையாகவா ? :)

// ஏன் கோவிஜி அதிககதிகமாக மதத்தை எடுத்து ஆராய்கிறீர்கள்?//

மதங்களில், மதங்களால் தெரிந்து கொள்ள வேண்டியவை நாள் தோறும் இருக்கின்றன, கிடைக்கின்றன.

//
புதிய மதம் உருவாக்குவதற்கு அல்ல, இருக்கும் மக்களை மீட்பதற்காக... நாங்களும் (முஸ்லீம்) ஏசுவை நம்புகிறோம், வருவார் என்று நம்புகிறோம்.//

வருவார் என்று யூத, கிறித்துவ, இஸ்லாமிய நம்பிக்கை இருப்பது தெரியும். அப்படியே வந்தால் நம்புவார்களா என்பதே கேள்வி !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// ..:: Mãstän ::.. said...

ஆமாம் ஏசு நாதர் மீண்டும் வரும்போது, யூத இனத்தில் இருந்துதான் வருவாறா?//

:)

அப்படித்தான் யூதர்கள் நம்புகிறார்கள். ஏனெனில் ஆசிர்வதிக்கப்பட்ட பிறவிகள் நாங்கள் என்பது அவர்களது நம்பிக்கை

கோவி.கண்ணன் சொன்னது…

// வால்பையன் said...

//அல்லாவே நினைத்தாலும் கூட ஏற்கனவே இருக்கும் இறுதித் தூதர் நம்பிக்கையால் இன்னொரு இறைத் தூதரை இஸ்லாமியர்களுக்கு புதிதாகக் கொடுத்துவிட முடியாது.//

அல்லாவாலயே முடியாது!
அப்ப கஷ்டம் தான், ஒருவேளை நீங்க சொல்ற மாதிரி இறைதூதர் வந்தால் எல்லா மதத்துக்குகாரங்களும் சேர்ந்து அடிச்சே கொன்னுபுடுவாங்க போலயே!

நினைச்சுபாக்கவே சிரிப்பா இருக்கு!//

எல்லா சர்சுகளிலும் சிலுவை இருக்கு. சிலுவை குறித்து ஏசுவுக்குத்தான் நல்லா தெரியும். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...

//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//


உங்களுக்குமா!?//

ஆபாச பின்னூட்டங்கள் வருது. அதனால் தான் மாடுரேசன் வைத்திருக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

// tamiluthayam said...

பகுத்தறிவை சற்று பயன் படுத்தினால், எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்து விடும்.//

பகுத்தறிவைப் மதவிற்பனைக்கு பயன்படுத்த முடியுமான்னு தான் பார்ப்பாங்க. விடையாவது வடையாவது.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//பித்தனின் வாக்கு


கடவுள் மனிதனைப் படைத்த காலம் தொட்டு, மனிதனும் கடவுளைப் படைத்துக் கொண்டுதான் இருப்பான்,//

அப்ப ரெண்டு”மே” உண்மைங்கிறியளா ஐயா!?

//இனியும் படைப்பான். இது காலச் சுழற்ச்சி. //

யாரு மனிதனா? அல்லது ....?


//பிறந்து முதல் இறக்கும் வரை மனிதன் எதையாவது நம்பிக் கொண்டும் அல்லது சார்ந்து கொண்டும் தான் வாழவேண்டும்.
//
யாரு? ஏன்? நம்பாமல் வாழ முடியாதா?
இது இந்தித் திணிப்பை விட கொடுமையா இல்லையா?

//ஆதலால் இன்னமும் நிறைய கடவுளும், மதமும் பிறக்கும். நன்றி அண்ணா.//

அண்ணா சொன்னாரா இல்ல கோவியை அண்ணா என்கிறியளா?

ரெண்டாவதுன்னா நீங்க யூத்துதான்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஸ்வாமி ஓம்கார் said...
அரசன் குழந்தையை கொல்கிறான் என்பதால் மாட்டு தொழுவத்தில் பிறந்தவர் ஏசு...

தற்காலத்தில் கருத்தடை செய்தாலும் கார் செட்டில் பிறக்காமல் இருக்கமாட்டார்...

ஹிமாலயாவில் ஏசு பிறந்திருக்கிறார் என ஒரு குரூப் கூறுகிறார்களே.. :)
//

சுவாமிகள், எ(எல்லா)ள்ள, மதங்களிலும் இதுமதிரி ஒரு குரூப்பு அலைஞ்சுகிட்டுதான் இருக்கு!

ஒன்னுக்கு ஒன்னு பஞ்சை இல்லை சாமியோய்!

ஆனா டாலருக்கும், ரூபாய்க்கும் உள்ள பணமாற்றுக்காடு நொம்ப தொலைவா இருக்கு!

Samuel | சாமுவேல் சொன்னது…

//அரசன் குழந்தையை கொல்கிறான் என்பதால் மாட்டு தொழுவத்தில் பிறந்தவர் ஏசு...//

குடிமதிப்பு எழுத சொல்லி ஆணை பிறப்பிக்க படுகிறது, அதற்காக தான் ஜோசப் மரியாளுடன் நாசரேத்தில் இருந்து தன்னுடைய பிறப்பிடமான பெத்லஹெம் செல்கிறார்.. அங்கு தங்க இடம் கிடைக்காமல் தான் மட்டு தொழுவத்தில் தங்குகிறார்கள்.

அரசன் குழந்தைகளை கொல்லும் சம்பவம், பிறந்த குழந்தையை தரிசித்த வேத சாஸ்த்ரிகள் திரும்ப வந்து அரசனிடம் இடத்தை சொல்லுவதாக சொல்லுகிறார்கள், ஆனால் திரும்ப செல்லும் போது வேறு வழியாய் சொல்லாம கிளம்பி விடுகிறார்கள்....இதற்கு அப்புறம் தான் கொலை ஆணையே பிறப்பிக்க படுகிறது....இந்த சம்பவங்களை எல்லா சர்ச்சிலும் கிறிஸ்துமஸ் சமயத்தில் நடித்து காமிப்பார்கள்..எல்லாரும் அறிந்த விஷயம்.

ஓம்கார்,கோவி அவர்களின் கற்பனை திறனை பாராட்டி ஆகவே வேண்டும்..விஷயம் சரியா தெரியா விட்டாலும் எப்படியோ மாட்டு தொழுவம் --கார் செட் ---க்ளோனிங்..அப்படின்னு ஒரு முடிச்சு போட்டு ஒரு சிரிப்பிலி போட்டாச்சு. மற்றபடி நடக்க போவதாக சொல்லும் கருத்தும், நல்ல கற்பனை. மொத்தத்தில் இது நல்லதொரு கற்பனை பதிவு.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஓம்கார்,கோவி அவர்களின் கற்பனை திறனை பாராட்டி ஆகவே வேண்டும்..விஷயம் சரியா தெரியா விட்டாலும் எப்படியோ மாட்டு தொழுவம் --கார் செட் ---க்ளோனிங்..அப்படின்னு ஒரு முடிச்சு போட்டு ஒரு சிரிப்பிலி போட்டாச்சு. மற்றபடி நடக்க போவதாக சொல்லும் கருத்தும், நல்ல கற்பனை. மொத்தத்தில் இது நல்லதொரு கற்பனை பதிவு.
//

:)

வரிசை மாறி இருக்கலாம் ஆனால் மாட்டுத் தொழுவம், அரசன் பிறந்தக் குழந்தைகளைக் கொன்று வருவது இவை யாவும் கிறிஸ்த்து புனைவில் உள்ளவைதானே. கிறிஸ்து பிறப்பு / வாழ்க்கை பைபிள் தவிர்த்து வரலாற்று ரீதியில் மெய்பிக்கப்படவில்லை என்று சொல்கிறார்களே, இது பற்றி உங்கள் மேலான கருத்தை எதிர் நோக்குகிறேன்

Samuel | சாமுவேல் சொன்னது…

//கிறிஸ்து பிறப்பு / வாழ்க்கை பைபிள் தவிர்த்து வரலாற்று ரீதியில் மெய்பிக்கப்படவில்லை என்று சொல்கிறார்களே//

அப்படியா ? சொல்றது யாருங்க ? என்னுடைய மேலான கருத்தை சொல்லுவதற்கு முன்னாடி, வரலாற்று ரீதியில் மெய்ப்பிக்க பட்டா... கடவுளை நம்புவீங்களா ?. அதையும் சொல்லுங்க.


B.C / A.D அப்படின்னு வரலாற்று காலங்களை பிரிதவன்கலாம் முட்டாள் .."காலம்"அப்படின்னு பதிவு எழுதுற நீங்கள் தான் வரலாற்று அறிஞர்...சரியா கோவிஜி.

கோவி.கண்ணன் சொன்னது…

// Sammy said...

அப்படியா ? சொல்றது யாருங்க ? என்னுடைய மேலான கருத்தை சொல்லுவதற்கு முன்னாடி, வரலாற்று ரீதியில் மெய்ப்பிக்க பட்டா... கடவுளை நம்புவீங்களா ?. அதையும் சொல்லுங்க.//

sammy, எனக்கு ஏசுவின் வாழ்க்கை வரலாறு உண்மையா பொய்யா என்பதில் எந்த அக்கரையும் இல்லை. ஆனால் ஏசு பிறப்பு வரலாற்றில் பதியவைக்கப்படவில்லை அல்லது வரலாற்றில் இல்லை என எப்போதும் பேசப்பட்டு வருகிறது.

மேலும் ஏசு பிறந்த நாள் எது என்பதில் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. டிசம்பர் 25 என்பது கத்தோலிக்க தலைமைகளினால் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்ட நாள் என்றே சொல்கிறார்கள்
Jesus was born on or before 4BCE, because Herod died 4BCE.
Jesus was born on or after 6CE, because Cyrenius became governor of Syria on 6CE:-
மேலும் படிக்க ...

//B.C / A.D அப்படின்னு வரலாற்று காலங்களை பிரிதவன்கலாம் முட்டாள் .."காலம்"அப்படின்னு பதிவு எழுதுற நீங்கள் தான் வரலாற்று அறிஞர்...சரியா கோவிஜி.
//

B.C / A.D வழக்கில் வந்து அல்லது வழக்கப்படுத்திக் கொண்டு 500 ஆண்டுகளே ஆகின்றன. இது பற்றி...

The Gregorian calendar is the internationally accepted civil calendar.[1][2][3] It was introduced by Pope Gregory XIII, after whom the calendar was named, by a decree signed on 24 February 1582, a papal bull known by its opening words Inter gravissimas. The reformed calendar was adopted later that year by a handful of countries, with other countries adopting it over the following centuries.

ஏசு பிறந்த போதோ, மறைந்த போது
B.C / A.D ஆண்டு கணக்கு முறைகள் இல்லை அலெக்சாண்டர் எரா மற்றும் பல்வேறு காலெண்டர் முறைகள் ஏசு வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட காலத்தில் இருந்தன. 1582 ஆண்டில் ஏசு பிறப்பை அடிப்படையாக வைத்து நாட்காட்டி உருவாக்குவோம் என்று கிறிஸ்து சபை முயன்று, அன்றிலிருந்து அறிமுகம் ஆனதே தற்போதைய ஆங்கில காலெண்டர் முறை. அதாவது B.C / A.D ஆண்டு முறைகள் பிறந்த நாள் கொண்டாடிய ஆண்டு 1582 அல்லது இன்றைக்கு (2010) சரியாக 1592 ஆண்டுகளுக்கு முன்பு தான் B.C / A.D என்றும் சொல்லலாம்.

நம்பிக்கைகளே போதும் என்றால் நீங்கள் வரலாற்றை சட்டை செய்யத் தேவை இல்லை. நம்பிக்கை உடையவர்களை புண்படுத்தும் நோக்கமும் எனக்கு இல்லை. அதனால் எனக்கு எந்த பலனும் ஏற்படப் போவதும் இல்லை

தருமி சொன்னது…

//B.C / A.D அப்படின்னு வரலாற்று காலங்களை பிரிதவன்கலாம் முட்டாள் .."காலம்"அப்படின்னு பதிவு எழுதுற நீங்கள் தான் வரலாற்று அறிஞர்.//

பிதாவே! சிலர் தாங்கள் பேசுவது என்னவென்று தெரியாமல் பேசுகிறார்கள்; அவர்களை மன்னித்து விடும்.

ஆமென்.

Samuel | சாமுவேல் சொன்னது…

//sammy, எனக்கு ஏசுவின் வாழ்க்கை வரலாறு உண்மையா பொய்யா என்பதில் எந்த அக்கரையும் இல்லை.//

முதலில் கேள்வி கேட்டீங்க .....பதில் சொன்னா உங்கள் புரிதல் மாறுமா அப்படின்னு கேட்டா.......எனக்கு அதில் அக்கறை இல்லை அப்படின்னு சொல்றீங்க.. எனக்கு என்னமோ நீங்கள் பின்வாங்குவதாக தோன்றிகிறது...

விக்கி நம்புவரா நீங்கள் இருக்கட்டும் பின்னாடி விக்கி விஷயங்களை வைத்து உங்கள் மற்ற பதிவுகளை விமர்சினம் பண்றேன்...:-)

Samuel | சாமுவேல் சொன்னது…

//The Gregorian calendar is the internationally accepted civil calendar.[1][2][3] It was introduced by Pope Gregory சிஈ///

ஒரு POPE சொன்னார் அப்படின்ற ஒரே காரணத்துக்காக உலகமே ஒத்து கொண்டு விட்டதா ? ஆச்சர்யமா இருக்கே....பாருங்க நீங்க இந்த விக்கி பிடியாவில் எழுதுவதை நம்புவது போல நம்பிருகாங்க ..உலகமே நம்பிருக்கு...அந்த காலத்தில் POPE தான் விக்கி போல..

ஏன் கோவியாரே அந்த POPE GREGORY ஒரு வரலாற்று ஆய்வலரா இருந்திருக்க குடாதா...உங்களுக்கு ஒரு நாத்திகர் சொன்னா தான் நம்புவீங்களா?

//.."காலம்"அப்படின்னு பதிவு எழுதுற நீங்கள் தான் வரலாற்று அறிஞர்.//
பிதாவே! சிலர் தாங்கள் பேசுவது என்னவென்று தெரியாமல் பேசுகிறார்கள்; //

தருமி ஐயா ...உங்களுக்கு கோவியார் மீது கோபம் இருக்கலாம்..அதற்காக அவரை நான் வரலாற்று அறிஞர் அப்படின்னு புகழ்வதற்கு எல்லாம்...என் சார்பாக கடவுளிடம் மன்னிப்பு கேட்க குடாது.

தருமி சொன்னது…

//உங்களுக்கு கோவியார் மீது கோபம் இருக்கலாம்..அதற்காக அவரை நான் வரலாற்று அறிஞர் அப்படின்னு புகழ்வதற்கு எல்லாம்...என் சார்பாக கடவுளிடம் மன்னிப்பு கேட்க குடாது.//

பிதாவே! சிலர் தாங்கள் பேசுவது என்னவென்று தெரியாமல் பேசுகிறார்கள்; அவர்களை மன்னித்து விடும்.

ஆமென்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒரு POPE சொன்னார் அப்படின்ற ஒரே காரணத்துக்காக உலகமே ஒத்து கொண்டு விட்டதா ? ஆச்சர்யமா இருக்கே....பாருங்க நீங்க இந்த விக்கி பிடியாவில் எழுதுவதை நம்புவது போல நம்பிருகாங்க ..உலகமே நம்பிருக்கு...அந்த காலத்தில் POPE தான் விக்கி போல..

ஏன் கோவியாரே அந்த POPE GREGORY ஒரு வரலாற்று ஆய்வலரா இருந்திருக்க குடாதா...உங்களுக்கு ஒரு நாத்திகர் சொன்னா தான் நம்புவீங்களா?//

அடிப்படை ஆதாரம் இல்லாமல் சிலவற்றை நான் எழுதும் போது சிலர் எரிச்சல் அடைவார்கள். அவர்களின் உணர்வு இப்பொழுது உங்கள் பின்னூட்டங்களைப் படிக்கும் போது தான் எனக்கு புரிகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

// தருமி said...

//உங்களுக்கு கோவியார் மீது கோபம் இருக்கலாம்..அதற்காக அவரை நான் வரலாற்று அறிஞர் அப்படின்னு புகழ்வதற்கு எல்லாம்...என் சார்பாக கடவுளிடம் மன்னிப்பு கேட்க குடாது.//

பிதாவே! சிலர் தாங்கள் பேசுவது என்னவென்று தெரியாமல் பேசுகிறார்கள்; அவர்களை மன்னித்து விடும்.

ஆமென்.//

ஆமென் ஆமென் !
:)

priyamudanprabu சொன்னது…

உள்ளேன் அய்யா

Samuel | சாமுவேல் சொன்னது…

கோவி ...

முதலில் நீங்கள் என்னை கேட்ட கேள்வி
//கிறிஸ்து பிறப்பு / வாழ்க்கை பைபிள் தவிர்த்து வரலாற்று ரீதியில் மெய்பிக்கப்படவில்லை என்று சொல்கிறார்களே, இது பற்றி உங்கள் மேலான கருத்தை எதிர் நோக்குகிறேன்//

என்னுடைய பதில் கேள்வி...
//அப்படியா ? சொல்றது யாருங்க ? என்னுடைய மேலான கருத்தை சொல்லுவதற்கு முன்னாடி, வரலாற்று ரீதியில் மெய்ப்பிக்க பட்டா... கடவுளை நம்புவீங்களா ?. அதையும் சொல்லுங்க.//

உங்களுடைய பதில்..
//sammy, எனக்கு ஏசுவின் வாழ்க்கை வரலாறு உண்மையா பொய்யா என்பதில் எந்த அக்கரையும் இல்லை.....//

எந்த ஒரு "அடிப்படை அக்கரையும்" இல்லாத ஒரு கேள்வி, விஷயம் .....அதற்கு "அடிப்படை ஆதாரம்" இல்லாமல் பதில் சொல்றேன் என்று திடீர் எரிச்சல் எதற்கு....கேள்வி கேட்பவரின் அக்கரைக்கு தகுந்து தான் பதில் சொல்ல முடியும்...நீங்க தேடின அதே விக்கியில் இருந்து ஆதாரம் கண்டுபிடிக்க ரொம்ப நேரம் ஆகாது..இருந்தாலும் பதில் கேட்கரவற்கு கொஞ்சமாவது விஷயத்தில் அக்கறை இருக்கனும்னு ஒரு எதிர்பார்ப்பு...அவ்ளவே.

கோவி.கண்ணன் சொன்னது…

//எந்த ஒரு "அடிப்படை அக்கரையும்" இல்லாத ஒரு கேள்வி, விஷயம் .....அதற்கு "அடிப்படை ஆதாரம்" இல்லாமல் பதில் சொல்றேன் என்று திடீர் எரிச்சல் எதற்கு....கேள்வி கேட்பவரின் அக்கரைக்கு தகுந்து தான் பதில் சொல்ல முடியும்...நீங்க தேடின அதே விக்கியில் இருந்து ஆதாரம் கண்டுபிடிக்க ரொம்ப நேரம் ஆகாது..இருந்தாலும் பதில் கேட்கரவற்கு கொஞ்சமாவது விஷயத்தில் அக்கறை இருக்கனும்னு ஒரு எதிர்பார்ப்பு...அவ்ளவே.//

சாமி, கிறிஸ்து பிறப்பு பற்றி மற்றும் காலெண்டர்கள் முறைகள் பற்றி வரலாற்று தரவுகளைத் தான் மதம் சாராதவர்கள் நம்புவார்கள். உங்கள் நம்பிக்கையே எனக்கு இருக்க வேண்டியதில்லை என்று புரிந்து கொண்டால் சரி. அதை ஏற்கவேண்டும் என்று நான் யாரையும் வழியுறுத்துவதில்லை.

ஜோ/Joe சொன்னது…

கோவியார்,
‘இயேசு’ என்ற ஒருவர் குறிப்பாக எந்த ஆண்டு எந்த நாளில் பிறந்தார் ,அவர் இறை தூதரா இல்லையா , அவர் இறைமகனா இல்லையா ,அவர் காஷ்மீருக்கு வந்தாரா இல்லையா ,அவர் சிலுவையில் அறையப்பட்டாரா இல்லையா ,அவர் உயிர்த்தெழுந்தாரா இல்லையா இவை அனைத்திலுமே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ,மறுப்புகள் இருக்கலாம் ..ஆனால் ‘இயேசு’ என்ற ஒருவர் பிறந்து வாழ்ந்தார் என்பதில் கருத்து வேறுபாடு அல்லது வரலாற்று ஐயம் இருப்பதாக நான் கேள்விப்படவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோ/Joe said...

கோவியார்,
‘இயேசு’ என்ற ஒருவர் குறிப்பாக எந்த ஆண்டு எந்த நாளில் பிறந்தார் ,அவர் இறை தூதரா இல்லையா , அவர் இறைமகனா இல்லையா ,அவர் காஷ்மீருக்கு வந்தாரா இல்லையா ,அவர் சிலுவையில் அறையப்பட்டாரா இல்லையா ,அவர் உயிர்த்தெழுந்தாரா இல்லையா இவை அனைத்திலுமே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ,மறுப்புகள் இருக்கலாம் ..ஆனால் ‘இயேசு’ என்ற ஒருவர் பிறந்து வாழ்ந்தார் என்பதில் கருத்து வேறுபாடு அல்லது வரலாற்று ஐயம் இருப்பதாக நான் கேள்விப்படவில்லை.

10:12 AM, January 08, 2010//

ஹிஸ்டாரிக்கல் எவிடன்ஸ் எனப்படும் வரலாற்று வழி தரவுகள் இல்லை என்பதாக பல கட்டுரைகள் இருக்கின்றன. என்னைப் பொருத்த அளவில் அனைத்தையும் தகவல், கருத்து என்ற அளவில் அவற்றை எடுத்துக் கொள்வது உண்டு. மதங்கள் தொடர்பான அனைத்து தகவல்கள், கருத்துகள் அனைத்திலும் என் நிலைப்பாடு இது தான்.

http://en.wikipedia.org/wiki/Historicity_of_Jesus

Kesavan சொன்னது…

என்ன சொல்ல வருகிறீர்கள் . இயேசு இருந்திருக்கிறார் என்றா இல்லை என்றா ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்