பின்பற்றுபவர்கள்

21 ஜனவரி, 2010

பிள்ளையார் சுழி - பிஸ்மில்லா 786 !

திருவள்ளுவருக்கு முன்பே 'அல்லா' என்ற சொல் வழக்கு தமிழில் புழங்கி இருந்தால் ஒருவேளை 'அகரமுதல் எழுத்தெல்லாம் ஆதி அல்லா முதற்றே உலகு' என்று எழுதி இருந்தாலும் எழுதி இருப்பார் வள்ளுவர். 'அல்லா' என்றால் இறைவன் தானே. இன்ஷா அல்லா !!! :). திருவள்ளுவருக்கு திருநீறும் பூணூலும் அணிந்து அழகு பார்த்து அவரை சைவர் என சுறுக்கி குறுக்கி பரப்பும் இந்துத்துவாக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ள விருப்பம் இல்லை, அதைவிடுகிறேன்.

பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கம் தமிழகத்தில், தமிழில் சைவ எழுச்சி அல்லது பக்தி இயக்கம் ஏற்பட்ட காலத்திற்கு பிறகே ஏற்பட்டு இருக்கலாம், அதற்கு முன் சங்க இலக்கியங்களில் பிள்ளையார் வணக்கத்துடன் பாடல்கள் இல்லை. திருமந்திரம் பாடலில் துவக்கத்தில் வருவதாகச் சொல்லபபடும் 'ஐந்துகரத்தனை ஆனை முகத்தனை' பாடல் கூட திருமூலர் எழுதியதில்லை பிற்காலத்திய இடைச் சொருகல் என்று சொல்லப்படுகிறது (யார் சொன்னது என்று கேட்பவர்கள் இணையத்தில் தேடலாம்) தமிழர் இறை இலக்கிய மரபுகளில் பக்தி இலக்கியங்களில் 'உலகெலாம்' என்று துவங்குவது பலபாடல்களில் மரபாக இருக்கிறது என்பதையும் நோக்க வேண்டும். திருமூலர் திருமந்திரத்தை சைவ இலக்கியம் என்கிற வழியுறுத்தலை வைத்து எழுதவில்லை, ஆனால் சைவ வெறியர்களால் திருமந்திரம் சைவ இலக்கியம் என்ற அளவிற்கு சுறுக்கப்பட்டு சிறைபட்டுள்ளது என்பதில் எனக்கும் வருத்தம் உண்டு, தமிழில் இருக்கும் பல்வேறு பக்தி இலக்கியங்களில் திருமந்திரம் சிறப்பானதும் பெயர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் சமய சார்பற்றதும் ஆகும், அதில் பல்வேறு இடைச் சொருகல் புகுத்தப்பட்டு திருமந்திரம் வேத சார்புடையது, சைவ நூல் என்பதாக திரிக்கப்பட்டது தனிக்கதை. திருமந்திரத்திரத்தில் 'அந்தணர் ஒழுக்கம்' போன்ற பகுதிகளை தவிர்த்துவிட்டு படித்தால் உண்மையிலேயே சிறப்பாகவே இருக்கும்.

பிள்ளையார் முழுமுதற்கடவுள் என்று தமிழர்களுக்கும் வலிந்து சொல்லப்பட்ட பிறகு 'அ' போட்டு எழுதத் தொடங்கும் நடை முறை 'உ' போட்டு தொடங்குவதாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன். எழுத்தறிவித்தால் போதும் என்ன போட்டு தொடங்கினால் என்ன ? என்பதாக அவற்றைவிட்டுவிடலாம். மளிகை பட்டியல் இடும் போது பிள்ளையார் சுழி போட்ட பிறகு 'மஞ்சள்' என்று எழுதி பிறகு பிற பொருள்களை எழுதுவார்கள், வீட்டில் மஞ்சள் இருந்தாலும் பொருள் வாங்கும் துவக்கம் மங்களமாக இருக்கட்டுமே என்பதாகச் சொல்லுவார்கள், சிலர் 'லாபம்' என்று எழுதுவதும் உண்டு. திருமணப் அழைப்பிதழில் 'லாபம்' இருக்காது பிள்ளையார் சுழியும் விருப்ப தெய்வப் பெயருடன் தான் துவங்கும். நாம (அதாவது இந்துக்கள்) பிள்ளையார் சுழி போட்டு துவங்குவது போலவே இஸ்லாமியர்கள் '786' போட்டும், கிறித்துவர்கள் சிலுவைக் குறியீடான '+' போட்டு துவங்குவதையும் பார்த்திருக்கிறேன்.

786 இஸ்லாமியச் சின்னம் என்பதாக பலர் தெரிந்தும் வைத்திருக்கிறார்கள். 786 எதைக் குறிக்கிறது என்பதை பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாற்று மதம் என்பதைத் தவிர்த்து அந்த மதம் சார்ந்தவற்றை அறிந்து கொள்ளுவதை பலரும் விரும்புவது இல்லை, இது எந்த மதத்தினருக்கும் பொருந்தும் கூற்றுதான். திக கூட்டங்களில் பரிசுத்த ஆவியில் இட்டலி வேகுமா ? 786 என்ன அல்லாவின் வீட்டு நம்பரா ? என்கிற மென்மையான பகுத்தறிவு சீண்டல்களைக் பலரும் கேள்விப் பட்டிருக்கிறோம். இந்து நம்பிக்கையை வன்மையாக கண்டிக்கும் திகவினர் மற்ற மதங்களை மென்மையாகத்தான் கண்டிப்பார்கள் அது அவர்களது நேர்மை (?) என்று சந்தேகிப்பதைவிட அவர்களின் மததிற்குள்ளிருந்து கண்டிக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கு அந்த உரிமையும் உண்டு என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

சரி, 786 க்கு வருவோம், 786 என்றால் என்ன ? இதற்கும் (முகமது நபிக்கும், பிறகான) இஸ்லாமிய வரலாற்றிற்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா ? என்று தேடிப்பார்த்தேன். நியூமராலஜி எனப்படும் எண் கணித முறை ஆங்கில எழுத்துகளுக்கு எண் வடிவம் கொடுத்து இருப்பது போன்று வேறொரு முறையில் அரபி எழுத்துகளுக்கு எண் வடிவம் கொடுக்கப்பட்ட முறையில் 'BISMILLAAHIR RAHMAANIR RAHEEM (பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம் - இறைவனின் திருப்பெயரால்) ' என்பதன் சுறுக்கமாக '786' எழுதப்படுகிறது. அப்படி எண்ணாக மாற்றி எழுதும் போது 787 வரும் என்றும் 786 வரும் என்று இருவேறு குழப்பங்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இருந்தாலும் 786 என்று எழுதுவது பரவலாக புழக்கத்தில் இருக்கிறது. இதிலும் விவகாரமான தகவல் என்னவென்றால் 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' என்பதை அரபியில் எழுதி அந்த எண் முறைக்கு மாற்றினாலும் '786' தான் வரும் என்று '786 உண்மைகள்(The Myth of 786)' பற்றிய ஆங்கிலக் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

786 என்று எழுதுவது குரான்(வஹீ என்னும் இறைச் செய்தி), மற்றும் ஹதீஸ்(முகமது நபியின் வாழ்க்கை மற்றும் பொன்மொழிகள்) ஆகியவற்றில் இடம் பெறவில்லை எனவே அவ்வாறு எழுதுவதை ஈமான் (நம்பிக்கை) கொண்ட இஸ்லாமியர்கள் பின்பற்றக் கூடாது அதற்கு பதிலாக 'பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்' என்று எழுதவேண்டும் என்றும் கூறிவருகிறார்கள். '786' பற்றிய இஸ்லாமிய இணையத் தள தமிழ் கட்டுரை இது.

29 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

கோவி - என்ன இது - ஆராய்ச்சி எல்லாம் பலமா இருக்கே

ம்ம்ம் - படிக்க நல்லாருக்கு - யாரெல்லாம் பதில் போடறாங்க பாப்போம்

நல்வாழ்த்துகள் கோவி

ஜெகதீசன் சொன்னது…

//
ஒருவேளை 'அகரமுதல் எழுத்தெல்லாம் ஆதி அல்லா முதற்றே உலகு' என்று எழுதி இருந்தாலும் எழுதி இருப்பார் வள்ளுவர்.
//
இலக்கணப்படி ஒத்து வராதே.. புளிமா வுக்கு பதில் தேமா...
:P

நட்புடன் ஜமால் சொன்னது…

கடைசி பத்தியில் இருப்பதை சரியென நம்புவன் - அப்படியே பின்பற்றுபவன்.


------------------

மனம் நோகடிக்காமல் இருக்கும் இஸ்லாம் சம்பந்தமான பதிவுகளுக்கு பதில் போடுவதுண்டு

கோவி.கண்ணன் சொன்னது…

// cheena (சீனா) said...

கோவி - என்ன இது - ஆராய்ச்சி எல்லாம் பலமா இருக்கே

ம்ம்ம் - படிக்க நல்லாருக்கு - யாரெல்லாம் பதில் போடறாங்க பாப்போம்

நல்வாழ்த்துகள் கோவி//

நன்றி ஐயா !

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜெகதீசன் said...

//
ஒருவேளை 'அகரமுதல் எழுத்தெல்லாம் ஆதி அல்லா முதற்றே உலகு' என்று எழுதி இருந்தாலும் எழுதி இருப்பார் வள்ளுவர்.
//
இலக்கணப்படி ஒத்து வராதே.. புளிமா வுக்கு பதில் தேமா...
:P//

:) எனக்கு இலக்கணம் தெரியாது !

கோவி.கண்ணன் சொன்னது…

// நட்புடன் ஜமால் said...

கடைசி பத்தியில் இருப்பதை சரியென நம்புவன் - அப்படியே பின்பற்றுபவன்.


------------------

மனம் நோகடிக்காமல் இருக்கும் இஸ்லாம் சம்பந்தமான பதிவுகளுக்கு பதில் போடுவதுண்டு//

உன்னைத் தான் தெரியுமே ஜமால். ஐந்துவேளை தொழுகை, நோன்பு என்று மார்க்கமாகவே இருப்பவன் நீ.

VANJOOR சொன்னது…

DEAR READERS KINDLY READ THE LINKS BELOW.

" 786 " அல்லாவின் தொலைபேசி எண்?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' என்பதை அரபியில் எழுதி அந்த எண் முறைக்கு மாற்றினாலும் '786' தான் வரும் என்று '786 உண்மைகள்(The Myth of 786)' பற்றிய ஆங்கிலக் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.\\

786 என்றால் முஸ்லீம் அன்பர்களின் நினைவுதான் எனக்கு வரும்,

அதற்கும் ஆப்பு வைத்துவிட்டீர்கள்..

இதெல்லாம் மனிதசமுதாயம் பிரிந்து கிடக்கவே உதவும். ஒன்று சேர்க்கும் வண்ணம் எதாவது இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்..:))

கோவி.கண்ணன் சொன்னது…

//786 என்றால் முஸ்லீம் அன்பர்களின் நினைவுதான் எனக்கு வரும்,

அதற்கும் ஆப்பு வைத்துவிட்டீர்கள்..//

நான் எதுவும் வைக்கவில்லை, அந்த இணைய பக்கங்களில் சொல்லி இருப்பதைத்தான் எடுத்து எழுதினேன்.

//இதெல்லாம் மனிதசமுதாயம் பிரிந்து கிடக்கவே உதவும். ஒன்று சேர்க்கும் வண்ணம் எதாவது இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்..:))//

மனித சமுதாயம் லாப நோக்கில் தான் குழுவாக பிரிந்து இயங்கிக் கொள்கிறது. அனைவரையும் ஒன்றிணைப்பது/இணைவது லாபமற்ற செயலாக இருக்கும் என்பதால் யாரும் அவ்வாறு ஒன்றிணைய விரும்ப மாட்டார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//VANJOOR said...

DEAR READERS KINDLY READ THE LINKS BELOW.

" 786 " அல்லாவின் தொலைபேசி எண்?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்//

வாஞ்சூர் பாய்,

வெறும் வெளம்பரம் மட்டும் தானா ? வேற ஒண்ணும் சொல்ல விரும்பவில்லையா ?

VANJOOR சொன்னது…

திரு. கோவி அவர்களே,

முஸ்லீம்கள் சிலர் கடைபிடிக்கும் அறியாமை நடைமுறைகளில் ஒன்றுக்கு தங்களின் இப்பதிவு மிகவும் பொருந்தும்.

நன்றி.

வாழ்த்துக்கள்.

வாஞ்சையுடன் வாஞ்சூர்.

வால்பையன் சொன்னது…

சொல்லிட்டாங்களா!?

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல பகிர்வு கோவிஜி.

கோவி.கண்ணன் சொன்னது…

//VANJOOR said...

திரு. கோவி அவர்களே,

முஸ்லீம்கள் சிலர் கடைபிடிக்கும் அறியாமை நடைமுறைகளில் ஒன்றுக்கு தங்களின் இப்பதிவு மிகவும் பொருந்தும்.

நன்றி.

வாழ்த்துக்கள்.

வாஞ்சையுடன் வாஞ்சூர்.//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// வால்பையன் said...

சொல்லிட்டாங்களா!?//

என்னாதிது ?

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்பர் said...

நல்ல பகிர்வு கோவிஜி.//

நன்றி அக்பர்

ஸ்ரீராம். சொன்னது…

786 பெயர்க் காரணம் தெரிந்து கொண்டேன். நன்றி

Barari சொன்னது…

intha 786 kkum islaththirkkum sambantham illai.vanjoor solliyathu pol sila muslimkalin aryaamai.

Radhakrishnan சொன்னது…

ஏழேழு பிறவிக்கும் அதாவது எழுகின்ற ஒவ்வொரு பிறப்புக்கும், ஆறாக அதாவது ஆறுதலாக இருப்பது எட்டெழுத்து மந்திரமே அதாவது ஓம் நமோ நாராயணா.

786 ன் மகிமை கண்டேன். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

அப்துல்மாலிக் சொன்னது…

786 போடுவது என்பது அறியாமையின் வெளிப்பாடு, இது பற்றி எங்கும் குறிப்பிடபடவில்லை..

அராபிக் தெரிந்தவர்கள் பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிற்றஹீம் (இறைவனின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்), தெளிவான விளக்கத்திற்குப்பிறகு "அல்லாஹ்வின் திருப்பெயரால்....." போட்டு எழுதுகிறார்கள்.

எந்த வேலை செய்யும்போதும் "பிஸ்மில்லாஹ்.." என்று சொல்லி செய்யவேண்டும் என்பது கட்டாயம்.

நல்ல பகிர்வு கோவியார்...

priyamudanprabu சொன்னது…

உள்ளேன் அய்யா.........

ஆ.ஞானசேகரன் சொன்னது…

தமிழ்மண விருதிற்கு வாழ்த்துகள்

Paleo God சொன்னது…

ஏழாவது அறிவு எட்டாது அறாவது அறிவுக்குன்னு இருக்குமோ..??:)

கல்வெட்டு சொன்னது…

786 தகவலுக்கு நன்றி கோவி!
.
என்ன ஏது என்று கேள்வி கேட்காமல் செய்வதுதான் நல்லது.

.

பச்சை வண்ணம்,பிறை நிலா, மிலாடி நபி , காபா என்று பல பிரச்சனைகள் உள்ளது.

பிறை நிலா , காபா முகம்மது காலத்திற்கு முந்திய உருவ வழிபாட்டுக் குறிப்பீடு.

பிறை நிலா
http://islam.about.com/od/history/a/crescent_moon.htm

//Islam forbids the images (statues) of any kinds of humans, animals or any of Allah’s creations, so how about using a symbol for Islam?”//

http://www.islamonline.net/servlet/Satellite?pagename=IslamOnline-English-Ask_Scholar/FatwaE/FatwaE&cid=1119503544398

காபா
http://atheism.about.com/od/muslimholysitestexts/p/KaabaMecca.htm

சிங்கக்குட்டி சொன்னது…

//என்று எழுதி இருந்தாலும் எழுதி இருப்பார் திருவள்ளுவர்//

அவரு பாட்டுக்கு எழுத்தானிய வச்சுகிட்டு ஒரு ஓரமா இருக்காரு, அவர எதுக்குங்க இங்க கோர்த்து விடனும் அவ்வ்வ்வ் ...

இதனால்தானோ என்னவோ அவருக்கு எங்கும் முழுமையான வரலாறு கொடுக்க படுவதில்லை.

ஒருவேளை கொடுத்திருந்தால் அப்புறம்(இந்தி எதிர்ப்பு மாதிரி) இது எங்கள் மதத்தவர் எழுதியது இல்லை அதனால் திருக்குறள் படிக்க மாட்டோம் என்று நம் நல்லவர்கள், அதாங்க அரசியல் தலைவர்கள் போராட்டம் நடத்தும் படி இருந்திருக்கும் :-)

விஜய் சொன்னது…

http://www.scribd.com/doc/1035217/HINDU-SACRED-SYMBOL-OM-IS-MUSLIMS-786-Read-from-right-to-left-this-figure-of-OM-represents-the-numbers-786-Look-at-this-symbol-of-Om-in-a-mirror-and-

786 also represents OM

Vijay

Chittoor Murugesan சொன்னது…

கோவி.கண்ணன் அவர்களே,
786 பற்றிய விளக்கம் ரொம்ப பயனுள்ளதாக இருந்தது. நன்றி

தருமி சொன்னது…

இஸ்லாமிற்கும் பச்சை வண்ணத்துக்கும் உள்ள தொடர்பிற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவல்.

கோவி.கண்ணன் சொன்னது…

/ தருமி said...
இஸ்லாமிற்கும் பச்சை வண்ணத்துக்கும் உள்ள தொடர்பிற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவல்.

9:54 PM, April 23, 2010
//

Symbols of Islam
Green is commonly used when representing Islam. It is much used in decorating mosques, tombs, and various religious objects. Some say this is because green was the favorite color of Muhammad and that he wore a green cloak and turban. Others say that it symbolizes vegetation. Some say that after Muhammad, only the caliphs were allowed to wear green turbans. In the Qur'an, 18:31, it is said that the inhabitants of paradise will wear green garments of fine silk.

The reference to the Qur'an is verifiable; it is not clear if the other traditions are reliable or mere folklore. However, the association between Islam and the color green is firmly established now, whatever its origins may have been.

* The color green is absent from medieval European coats of arms as during the Crusades, green was the color used by their Islamic opponents.

* In the palace of Topkapi, in Istanbul, there is a room with relics of Muhammad. One of the relics, kept locked in a chest, is said to have been Muhammad's banner, under which he went to war. Some say that this banner is green with golden embroidery, others say that it is black and others think there is no banner in the chest at all.

http://www.falsemessiahs.com/world_religions/islam/beliefs.htm

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்