காலங்கார்த்தால இன்னிக்கு குறுஞ்செய்தி வந்தது, கடிதம், மின் அஞ்சல் என்றெல்லாம் உலாவியது இப்போதெல்லாம் குறுஞ்செய்திலும் உலாவுது.
"ஓம் சனிஸ்வராயா நமஹ" - இதை 19 பேர்களுக்கு அனுப்ப நாளைக்கு உங்களுக்கு நல்ல செய்தி வரும், தவறினால் நாளைக்கு பேதியாகிடும் வெளியே போக முடியாது (வெளியே போகலை என்றால் எப்படி பேதியாகும்னு தெரியல, தண்ணீராகப் போவதைத்தான் அப்படிச் சொல்கிறார்களோ ! அவ்வ்வ் ) - இது 100 விழுக்காடு உண்மை உண்மை உண்மை
- என்று ஒரு பொய்யான குறுந்தகவலை நண்பர், உறவினர்கள் அனுப்பி வைத்தார்கள்.
நானும் அதையே சொல்கிறேன். இந்தப் பதிவை படிப்பவர்கள், இந்தப் பதிவு படிச்சிட்டு இதே போல் ஒரு பதிவு அல்லது இந்தப் பதிவை பத்து நகல் எடுத்து எதாவது முட்டுச் சந்துக்கு முன்னால் நின்று 10 பேருக்கு கொடுக்க
* உங்கள் பதிவில் பின்னூட்டம் பெருகும்.
* திருமணம் ஆகாத பதிவர்களுக்கு உடனடியாக திருமணம் நடக்கும்
* பதிவு எழுத மேட்டர் கிடைக்காதவர்களுக்கு மேட்டர் கிடைக்கும்
* உன்னைப் போல் விமர்சனம் படிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள்
* அலுவலக நேரத்தில் பதிவு எழுதும் போது யாரும் பார்த்துவிட மாட்டார்கள்
***
உலக நாடுகளில் எதிலுமே இல்லாத வழக்கமாக இந்த கிரகப் பெயர்சிகள் இந்தியர்களை குறிப்பாக தமிழர்களை ரொம்பவே ஆட்டுகிறது. மில்லியன் டாலர்கள் சொத்துகள் வைத்திருப்பர்களையெல்லாம் கண்டுகொள்ளாத சனிப் பெயர்ச்சி அன்றாடங்காய்சிகளையும், நடுத்தரவர்கத்தையும் ஆட்டிப் படைத்து அவர்களுடைய வாழ்க்கையை (ஏ)மாற்றுகிறதாம்.
சோசியக்காரர்களிடம் இருந்து இந்தியர்கள் விடுதலை அடையாதவரையில் தன்னம்பிக்கை என்று ஒன்றை இந்தியர்கள் வளர்த்துக் கொள்ளப் போவதில்லை.
"நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும், நாவில் நமச்சிவாய" வென்ற நாமம் இருக்கையிலே
என்று சொல்வதும் பொய்யா என்று எண்ணிப் பாருங்கள். நல்லதொரு இறை நம்பிக்கை மூலம் எந்த ஒரு கிரகமும் அப்படிப்பட்ட நம்பிக்கைக் கொண்ட ஒருவரை அசைத்துவிட முடியாது.
பித்தலாட்ட சோதிடர்களை தண்டிக்காமல் விடும் சனி பிறரை தண்டித்துவிடுமா ?
சோதிடப் பெயர்சிகளும் பலன்களும், பாதகங்களும் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற குழப்பத்தில் இருப்பவர்களுக்கே, அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் பிழைப்பு வாதிகளுக்கே.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
27 கருத்துகள்:
//எதாவது முட்டுச் சந்துக்கு முன்னால் நின்று 10 பேருக்கு கொடுக்க //
அண்ணாச்சி தெரு.நோ அவர்கள் சொன்னது போல முயற்சிக்கிறீங்களோ
:)
ஃஃஃஃஃஃ
சனி பெயர்ந்தாலும் பெயராவிட்டாலும், உழைத்தால் தான் சோறு.
அடுப்பில் வைத்தால் தான் அதுவும் வேகும்.
//இந்தப் பதிவை படிப்பவர்கள், இந்தப் பதிவு படிச்சிட்டு இதே போல் ஒரு பதிவு அல்லது இந்தப் பதிவை பத்து நகல் எடுத்து எதாவது முட்டுச் சந்துக்கு முன்னால் நின்று 10 பேருக்கு கொடுக்க//
அருமை அருமை :-))
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடிக் கொண்டிருக்கும் மக்கள் தான் இது மாதிரியான செயல்களில் நம்பிக்கை வைக்கிறார்கள்.
கொஞ்சம் விரிவடைந்து மின்னஞ்சல் ஃபர்வர்ட் செய்திகளாக, இப்போது எஸ் எம் எஸ் ஆக வளர்ந்திருக்கிறது போல!
/இந்தப் பதிவு படிச்சிட்டு இதே போல் ஒரு பதிவு அல்லது இந்தப் பதிவை பத்து நகல் எடுத்து எதாவது முட்டுச் சந்துக்கு முன்னால் நின்று 10 பேருக்கு கொடுக்க
* உங்கள் பதிவில் பின்னூட்டம் பெருகும்.
* திருமணம் ஆகாத பதிவர்களுக்கு உடனடியாக திருமணம் நடக்கும்
* பதிவு எழுத மேட்டர் கிடைக்காதவர்களுக்கு மேட்டர் கிடைக்கும்
* உன்னைப் போல் விமர்சனம் படிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள்
* அலுவலக நேரத்தில் பதிவு எழுதும் போது யாரும் பார்த்துவிட மாட்டார்கள்
பாருங்களேன், எனக்கெல்லாம் இந்த மாதிரி எதுவும் மாட்டுவதில்லை! //
பதில் குடுகுடுப்பை பிரமாதம்!
//"நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும், நாவில் நமச்சிவாய" வென்ற நாமம் இருக்கையிலே//
நாள் என்செய்யும் வினைதான் என் செய்யும் என பாடினது திருஞானசம்பந்தர்... உமக்குதான் திருதொண்டரையும்.. திருதொண்டர் புராணத்தையும் பிடிக்காதே :) அப்பறம் ஏன் ஐயா கோளருபதிகம் பாடுகிறீகள் :)
அது எல்லாம் திருஞான சம்பந்தர் போன்ற திருதொண்டருக்கு பொருந்தும்.. நான் இப்பதான் சனிபெயர்ச்சி யாகத்துக்கு 501 ரூபாய் டிக்கெட் கட்டிகிட்டுவரேன். சிறுதொண்ருக்கு சனி எப்பொழுதும் உண்டு..! :)
//* உங்கள் பதிவில் பின்னூட்டம் பெருகும்.
* திருமணம் ஆகாத பதிவர்களுக்கு உடனடியாக திருமணம் நடக்கும்
* பதிவு எழுத மேட்டர் கிடைக்காதவர்களுக்கு மேட்டர் கிடைக்கும்
* உன்னைப் போல் விமர்சனம் படிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள்
* அலுவலக நேரத்தில் பதிவு எழுதும் போது யாரும் பார்த்துவிட மாட்டார்கள்//
எல்லாம் அப்படியே எனக்குப்பொருந்துகிறது...அவ்வ்வ்வ்வ்
சீக்கிரம் எனக்கும் பார்வார்ட பண்ணுங்கோ முட்டுச்சந்துப்போவணும்...
சனிப்பெயர்ச்சியால் நன்மை தீமை உண்டு என்பதைக்கூட சில சமயம் கண்டிஷனலாக நம்பலாம். ஆனால் பரிகாரம் என்று ஆரம்பிக்கிறது பச்சை டுபாக்கூர் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். பிரார்த்தனைகள் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்கிற சக்தியைத் தரும் என்கிற அளவில் ஒத்துக் கொள்ளலாம்.
http://kgjawarlal.wordpress.com
செயலும் சொல்லும் வேறு வேறு இருக்கிறதே கோவி????
அனுப்புன ஆளுக்கே பத்தொம்போது தடவை அனுப்பீட்டிதான் வர்றேன்...
எனக்கு நல்ல பலன் தானே கிடைக்கும்?
//Mãstän said...
செயலும் சொல்லும் வேறு வேறு இருக்கிறதே கோவி????
//
நீங்கள் எப்படி விளங்கிக் கொண்டீர்கள் என்று தெரியவில்லை, ஏன் அப்படிக் கேட்கிறீர்கள் என்பதை விளக்கவும்.
//ஸ்வாமி ஓம்கார் said...
//"நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும், நாவில் நமச்சிவாய" வென்ற நாமம் இருக்கையிலே//
நாள் என்செய்யும் வினைதான் என் செய்யும் என பாடினது திருஞானசம்பந்தர்... உமக்குதான் திருதொண்டரையும்.. திருதொண்டர் புராணத்தையும் பிடிக்காதே :) அப்பறம் ஏன் ஐயா கோளருபதிகம் பாடுகிறீகள் :)
அது எல்லாம் திருஞான சம்பந்தர் போன்ற திருதொண்டருக்கு பொருந்தும்.. நான் இப்பதான் சனிபெயர்ச்சி யாகத்துக்கு 501 ரூபாய் டிக்கெட் கட்டிகிட்டுவரேன். சிறுதொண்ருக்கு சனி எப்பொழுதும் உண்டு..! :)
//
ஸ்வாமி,
தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது - இதை பலரும் சொல்கிறார்கள், அது உண்மையும் கூட. அது போன்றது தானே நாளும் கோளும் பற்றிய கருத்தும். யார் சொன்னால் என்ன ?
////* உங்கள் பதிவில் பின்னூட்டம் பெருகும்.
* திருமணம் ஆகாத பதிவர்களுக்கு உடனடியாக திருமணம் நடக்கும்
* பதிவு எழுத மேட்டர் கிடைக்காதவர்களுக்கு மேட்டர் கிடைக்கும்
* உன்னைப் போல் விமர்சனம் படிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள்
* அலுவலக நேரத்தில் பதிவு எழுதும் போது யாரும் பார்த்துவிட மாட்டார்கள்
////
இது ரொம்ப நல்லாயிருக்கு……….
!!!!!?????
-:)
பின்னூட்டம் ரொம்ப கம்மியா இருக்கே நீங்க 10 பேருக்கு குடுக்கலையா???
இறைவனை நினைத்துக் கொண்டால் எந்த சக்தியும் நம்மை நெருங்காது ...
//சோதிடப் பெயர்சிகளும் பலன்களும், பாதகங்களும் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற குழப்பத்தில் இருப்பவர்களுக்கே, //
சரியாகச் சொல்லி விட்டீர்கள்,
வாழ்த்துக்கள்
//* உங்கள் பதிவில் பின்னூட்டம் பெருகும்.
* பதிவு எழுத மேட்டர் கிடைக்காதவர்களுக்கு மேட்டர் கிடைக்கும்
* உன்னைப் போல் விமர்சனம் படிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள்
* அலுவலக நேரத்தில் பதிவு எழுதும் போது யாரும் பார்த்துவிட மாட்டார்கள்//
சிரிச்சு சிரிச்சு கண்ல தண்ணி.... :)))))))))))))))))))
//Mahesh said...

சென்னைப் பக்கம் போய்விடாதிங்க, தண்ணீர் பஞ்சம் வந்தால் உங்கள் கண்ணுக்கு முன்பே குடம் வச்சிடுவாங்க
:)
//நிகழ்காலத்தில்... said...
//சோதிடப் பெயர்சிகளும் பலன்களும், பாதகங்களும் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற குழப்பத்தில் இருப்பவர்களுக்கே, //
சரியாகச் சொல்லி விட்டீர்கள்,
வாழ்த்துக்கள்
//
நன்றி சிவா
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இறைவனை நினைத்துக் கொண்டால் எந்த சக்தியும் நம்மை நெருங்காது ...
//
:)
வீட்டில் இருக்கும் மகா சக்தியுமா ?
:)
//மங்களூர் சிவா said...
பின்னூட்டம் ரொம்ப கம்மியா இருக்கே நீங்க 10 பேருக்கு குடுக்கலையா???
//
:) பின்னூட்டம் போடுகிறவர்களுக்கு பயம் தான் தெய்வக் குத்தமுனா யார் பார்ப்பது ? கோவியா வருவாரு ?
:)
//ஞான]-[பி]-[த்]-[த]-[ன்] said...
-:)
//
யோவ்.... பேரை மாற்றியாச்சே கட்டம் கட்டி இருப்பதை எடுய்யா
//T.V.Radhakrishnan said...
!!!!!?????
//
:)
ஆச்சரியமான கேள்விக் குறியா ?
//மருதமூரான். said...
இது ரொம்ப நல்லாயிருக்கு……….
//
நன்றி !
//அப்பாவி முரு said...
அனுப்புன ஆளுக்கே பத்தொம்போது தடவை அனுப்பீட்டிதான் வர்றேன்...
எனக்கு நல்ல பலன் தானே கிடைக்கும்?
//
எஸ்எம்எஸ் ப்ரியா..........அவ்வ்வ்வ்வ்
//கிருஷ்ணமூர்த்தி said...
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடிக் கொண்டிருக்கும் மக்கள் தான் இது மாதிரியான செயல்களில் நம்பிக்கை வைக்கிறார்கள்.
கொஞ்சம் விரிவடைந்து மின்னஞ்சல் ஃபர்வர்ட் செய்திகளாக, இப்போது எஸ் எம் எஸ் ஆக வளர்ந்திருக்கிறது போல!
//
நன்றி ஐயா.
இறைவன் முன்னால் திருத்தொண்டர் சிறுத்தொண்டர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது சைவர்கள் அனைவரும் திருத்தொண்டர்கள் தான். உன் பருப்புப்பை இங்கு வேக வைக்காதே..
கருத்துரையிடுக