பின்பற்றுபவர்கள்

25 ஆகஸ்ட், 2009

கலாச்சாரக் காவலர்கள் கட்டமைக்கும் பெண்ணியம் !

பெண் உரிமை, பெண் சுதந்திரம், பெண்ணியம் ஆகிய சொல்லாடல்களில் பலருக்கும் பல கருத்துகள் இருக்கிறது. ஊருக்கு அறிவுரைக் கூறும் ஆண் சமூகம் வீட்டுப் பெண்களுக்கு அத்தகைய உரிமைகள் கொடுக்கிறதா என்பதே கேள்விக்குறி. தொடர்ந்து அழும் தொலைக்காட்சித் தொடர்கள் இன்னும் என்ன என்னவோ அத்தனை ஊடகங்களும் திடீர் பெண்ணிய வியாதிகளாகி பெண்கள் எதையெல்லாம் செய்யலாம் என்பதாக அவர்கள் எதோ நல்லது செய்வது போல் பெண் சமூகங்களை கீழறுத்ததே நடந்தேறிவருகிறது. இன்னும் ஒரு சிலர், ஆண்களுக்கு நிகராக பெண்களும் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்வதில் தவறே அல்ல என்றெல்லாம் வழியுறுத்துகின்றனர். மேம்போக்காக பார்த்தால் அது சரிதான் என்பது போல் தெரியும், ஆனால் நல்லதொரு ஆணின் மனைவி கேடுகெட்ட ஆண்களின் வலையில் வீழ்வதற்கு இது போன்ற கருத்து வாதிகள் மறைமுகமாக குழிபறிக்கிறார்கள் என்பதே உண்மை.

பெண்கள் மதுக்குடிப்பதும் குடிக்காமல் இருப்பதற்கும் வளர்ப்பு, குடும்ப சூழலே காரணம், அது அவர்களது மிக மிக தனிப்பட்ட செயல் இதில் கருத்து சொல்ல எதுவுமே இல்லை. எனக்கு தெரிந்து சித்தாள் வேலை, சாலைத் தொழிலாளிகள், கூலித் தொழிலாளி பெண்கள் பலருக்கு குடிக்கும் வழக்கம் இருக்கிறது, உடம்பு அசதியை மறந்து தூங்கினால் தான் அடுத்த நாள் வேலைக்குச் செல்ல முடியும் என்கிற காரணம் சொல்லுவார்கள், அது சரியான காரணமா ? இல்லையா ? என்கிற ஆராய்ச்சிக்கு நான் செல்லவில்லை. ஆனால் அவை பொதுச் சமூக ஒழுக்கத்தை நலிவுறச் செய்வது போலவும், பெண் உரிமையுடன் தொடர்புடைய ஒன்று போலவும் ஊடகங்கள் கட்டமைப்பதைத்தான் ஏற்க முடியவில்லை.

கூலித் தொழிலாளி ஒருவர் மதுக்கடை முன்பு நின்று மதுக்குடிப்பதை படமெடுத்துப் போட்டு 'அன்றாடம் காய்சிகளின் பெண்ணொழுக்கம் பாரீர்'
என்பதை மறைமுகக் கருத்தாக திணிப்பது போல் மேல் தட்டு, நடுத்தர குடும்பங்களின் பெண்கள் நட்சத்திர மதுக்கூடங்களில்
ஆண்களுடன், அரைகுறை ஆடைகளுடன் அமர்ந்து மது அருந்துவதைப் படம் எடுத்துப் போட்டு கருத்து தெரிவிக்குமா ? அல்லது அப்படி எதுவுமே நடைபெறுவதில்லையா ?


படம் நன்றி : தினமலர்

26 கருத்துகள்:

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

நட்சத்திர விடுதிகளில் பெண்கல் குடிப்பதையும் டிஸ்கொத்தே டேன்ஸ் ஆடுவதையும் படமாகப் போட்டு பெரிய பிரச்சனை ஆனது இங்கே (சுமார் இரண்டு வருடங்கள் முன்பு).

பிரச்சனை என்னவென்றால், இவர்கள் தாங்களாகவே பெண்களுக்காக முடிவெடுக்கும் இடத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கட்தக்கது.

மங்களூர் சிவா சொன்னது…

:))

வால்பையன் சொன்னது…

அய்யயோ சந்ரு கண்ணுல பட்டுறப்போகுது!
காக்கி சட்டைய மாட்டிகிட்டு கிளம்பீருவார்!

ஜோ/Joe சொன்னது…

// மேல் தட்டு, நடுத்தர குடும்பங்களின் பெண்கள் நட்சத்திர மதுக்கூடங்களில்
ஆண்களுடன், அரைகுறை ஆடைகளுடன் அமர்ந்து மது அருந்துவதைப் படம் எடுத்துப் போட்டு கருத்து தெரிவிக்குமா ? அல்லது அப்படி எதுவுமே நடைபெறுவதில்லையா ?//

அதானே ! நல்ல கேள்வி.

(செய்யுறதும் செய்யாததும் அவங்க இஷ்டம் ..ஆனா இங்கே வலியவன் பண்ணினா நாகரீகம் ,எளியவன் பண்ணினா மட்டும் வேறயா ? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறீர்கள் ..வழிமொழிகிறேன்)

துபாய் ராஜா சொன்னது…

இதுதான் இவர்களின் பத்திரிக்கை தர்மம், கொள்கை, இலட்சியம், கருமாந்திரம் எல்லாம்........

டக்ளஸ்... சொன்னது…

\\வால்பையன்
அய்யயோ சந்ரு கண்ணுல பட்டுறப்போகுது!
காக்கி சட்டைய மாட்டிகிட்டு கிளம்பீருவார்!\\

நீங்க உங்க குழுவோட கிளம்பிப் போகமா இருந்தா நல்லதுதான்.
:)

அப்பறம் , ஞாயிற்றுக்கிழமை நீயா நானா பாத்தீங்களா..?
உங்களோட குழுவுக்கு அங்க அனேகமா வேலை இருக்கும்ன்னு நினைக்கிறேன்.
:)

க. பாலாஜி சொன்னது…

//'அன்றாடம் காய்சிகளின் பெண்ணொழுக்கம் பாரீர்'
என்பதை மறைமுகக் கருத்தாக திணிப்பது போல் மேல் தட்டு, நடுத்தர குடும்பங்களின் பெண்கள் நட்சத்திர மதுக்கூடங்களில்
ஆண்களுடன், அரைகுறை ஆடைகளுடன் அமர்ந்து மது அருந்துவதைப் படம் எடுத்துப் போட்டு கருத்து தெரிவிக்குமா ? //

உண்மைதான், அடித்தட்டு மக்களின் பழக்கவழக்கங்களில் சில மாறுபாடுகள் இருக்கும்பட்சத்தில் அதை பெரிதுப்படுத்தி விளம்பரம் தேடிக்கொள்ளும் ஊடகங்கள் சிலவும், பெரிய இடங்களில் நடக்கும் சில அதிகப்பட்ச இழிவுகளை கண்டுகொள்வதில்லை. இதில் பெண்ணியமும இகழப்படுகிறது...

டி.பி.ஆர் சொன்னது…

இந்த படம் ஏதாச்சும் பத்திரிகையில வந்துருக்கா என்ன?

ஜோவின் கருத்துதான் என்னுடையதும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//டி.பி.ஆர் said...
இந்த படம் ஏதாச்சும் பத்திரிகையில வந்துருக்கா என்ன?

ஜோவின் கருத்துதான் என்னுடையதும்.
//

படம் நன்றி : தினமலர் னு இடுகையின் முடிவில் சொல்லி இருக்கிறேன்.

கருத்துக்கும் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நட்சத்திர விடுதிகளில் பெண்கல் குடிப்பதையும் டிஸ்கொத்தே டேன்ஸ் ஆடுவதையும் படமாகப் போட்டு பெரிய பிரச்சனை ஆனது இங்கே (சுமார் இரண்டு வருடங்கள் முன்பு).//

பெரும்புள்ளிகளை மிரட்ட போட்டு இருப்பாங்க, அப்பறம் அடங்கி இருப்பாங்க அப்பறம் சைலண்டாகி இருந்திருப்பாங்க.

தகவலுக்கு நன்றி சுந்தர்.

//பிரச்சனை என்னவென்றால், இவர்கள் தாங்களாகவே பெண்களுக்காக முடிவெடுக்கும் இடத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கட்தக்கது.//

மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

// மங்களூர் சிவா said...
:))
//

சிவா நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
அய்யயோ சந்ரு கண்ணுல பட்டுறப்போகுது!
காக்கி சட்டைய மாட்டிகிட்டு கிளம்பீருவார்!
//

வால்ஸ் இப்படியெல்லாம் பயமுறுத்தாதிங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//செய்யுறதும் செய்யாததும் அவங்க இஷ்டம் ..ஆனா இங்கே வலியவன் பண்ணினா நாகரீகம் ,எளியவன் பண்ணினா மட்டும் வேறயா ? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறீர்கள் ..வழிமொழிகிறேன்)//

ஜோ, கருத்துக்கு நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

// துபாய் ராஜா said...
இதுதான் இவர்களின் பத்திரிக்கை தர்மம், கொள்கை, இலட்சியம், கருமாந்திரம் எல்லாம்........

1:32 PM, August 25, 2009
//

பத்திரிக்கா (அ)தர்மம் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

டக்ளஸ்,

உங்களது வால்பையனோட தனி ட்ராக் போல. :)

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//உண்மைதான், அடித்தட்டு மக்களின் பழக்கவழக்கங்களில் சில மாறுபாடுகள் இருக்கும்பட்சத்தில் அதை பெரிதுப்படுத்தி விளம்பரம் தேடிக்கொள்ளும் ஊடகங்கள் சிலவும், பெரிய இடங்களில் நடக்கும் சில அதிகப்பட்ச இழிவுகளை கண்டுகொள்வதில்லை. இதில் பெண்ணியமும இகழப்படுகிறது...

1:51 PM, August 25, 2009
//

க.பாலாஜி,

கருத்துக்கு மிக்க நன்றி !

SUBBU சொன்னது…

அது எல்லாம் ஒரு பேப்பருன்னு அந்த செய்திய இங்க போடுர உங்கள சொல்லனும்!!!!!

T.V.Radhakrishnan சொன்னது…

நல்ல பதிவு...பெண்களுக்கான முடிவுகளை பெண்களே எடுக்கும் நிலை வந்தால்தான் உண்மையான பெண் சுதந்திரம் கிடைத்திருக்கிறது எனலாம்.
நம் நாட்டில் கவுன்சிலர் பெண்கள் கூட அவர்களது கணவன் சொல்படிதானே ஆடமுடிகிறது.

கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

/இவர்கள் தாங்களாகவே பெண்களுக்காக முடிவெடுக்கும் இடத்தை எடுத்துக் கொள்கிறார்கள்./

/நம் நாட்டில் கவுன்சிலர் பெண்கள் கூட அவர்களது கணவன் சொல்படிதானே ஆடமுடிகிறது./

அப்படி ஒட்டு மொத்தமாகச் சொல்லி விட முடியாது.

சுயமாக முடிவெடுக்கப் பெண்கள் தயங்குகிறார்கள் என்பதும் ஒரு காரணம்.
@வால்பையன்,
சந்துரு கொஞ்சம் எதிர்ப்பு வந்தவுடனேயே, காக்கிச் சட்டையைக் கழற்றிப்போட்டு விட்டார்! நீங்கள் தான் பெண்ணைப் பெற்ற பெருமையோடு, கராடே குங் ஃபு எல்லாம் சொல்லிக் கொடுத்து, எவன் பக்கத்தில் வர்றான் பாத்துடலாம்னு பயமுறுத்திக்கிட்டிருக்கீங்க:-))

அபுஅஃப்ஸர் சொன்னது…

//நடுத்தர குடும்பங்களின் பெண்கள் நட்சத்திர மதுக்கூடங்களில்
ஆண்களுடன், அரைகுறை ஆடைகளுடன் அமர்ந்து மது அருந்துவதைப் படம் எடுத்துப் போட்டு கருத்து தெரிவிக்குமா ?//

யோசிக்கவேண்டிய கேள்விதான்..

நல்ல பதிவு சார்

பீர் | Peer சொன்னது…

//டக்ளஸ்..
அப்பறம் , ஞாயிற்றுக்கிழமை நீயா நானா பாத்தீங்களா..?
உங்களோட குழுவுக்கு அங்க அனேகமா வேலை இருக்கும்ன்னு நினைக்கிறேன்.//

நானும் பார்த்தேன், டக்ளஸ். கிராமம், காதல், சாதி.

குழு ஏதாவது செய்யுதான்னு பார்ப்போம். ;)

அருண்மொழிவர்மன் சொன்னது…

வணக்கம் கோவி. கண்ணன்

கலாசார காவலர் என்ற பெயரில் மிகப்பெரிய அராஜகங்கள் எல்லாம் நடந்தேறியிருக்கின்றன. அதிலும் பெண்கள் விடயத்தில் அவர்களுக்கான எல்லா உரிமைகளையும் தாமே எடுத்தும் விடுகிறார்கள்.

பெண்கள் மதுசாலைகளில் மது வாங்குவது அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிபரம் ஒன்று சொன்னபோது கலாசாரக் கட்சிகள் சிலிர்த்தெழுந்தது நினவு இருக்கலாம்...

குடுகுடுப்பை சொன்னது…

யாரு குடிச்சா இவனுங்களுக்கு என்ன வந்திருச்சு.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

///ஆண்களுடன், அரைகுறை ஆடைகளுடன் அமர்ந்து மது அருந்துவதைப் படம் எடுத்துப் போட்டு கருத்து தெரிவிக்குமா ? அல்லது அப்படி எதுவுமே நடைபெறுவதில்லையா ?///

நல்ல கேள்வி தினமலரில் இதுபோல நிறைய வருகின்றதே என்ன செய்யலாம்

PITTHAN சொன்னது…

good ideas and words, money does evrything. if she had it she also not inthat picture.

காலப் பறவை சொன்னது…

நல்ல பதிவு..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்