பின்பற்றுபவர்கள்

14 ஆகஸ்ட், 2009

தப்பாக ஒரு கொலை !

அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் தான், வீட்டில் எதோ சத்தம் கேட்டு மயங்கி விழுந்திருந்த கல்பனாவை மருத்துவ மனையில் சேர்த்திருந்தார்கள்.

சிகிச்சைக்கு எல்லா ஏற்பாடுகளும் தாயராகி அவளை ஸ்டெச்சரில் போட்டு அறுவை சிகிச்சை அறைக்கு உள்ளே அழைத்துச் செல்லப் போகும் அந்த வினாடியில்...

பதட்டத்துடன் ஓடிவந்த கணவன் குமாரை கடைசியாக பார்த்துவிட்டு கண் மூடினாள் கல்பனா

மருத்துவர்கள் கைவிரிக்க உடலை எடுத்துச் செல்லும் முன்... உடல் நிறம் லேசாக கருமை அடைவதை வைத்து...மருத்துவர்....ப்ரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்

"ஐயோ.......என் கல்பனாவை கூறு போட்டுவிடாதீர்கள்.......என்ற கூய்ச்சலில் குமாரின் குரலில் மேலும் பதட்டம் நடுக்கம் தெரிந்தது"

"அவங்களுக்கு என்ன நடந்ததுன்னு தெரிந்து கொள்ளுங்கள்......சார்" என்று சொல்லிய டாக்டர், அவன் அனுமதிக்கு காத்திருக்காமல்

"நர்ஸ்......போலிசுக்கு தகவல் சொல்லிவிட்டு....பிரேத பரிசோதனைக்கு பாடியை அனுப்பிவிடுங்கள்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் டாக்டர்

"குமார் வெடித்து அழுதான்......"

ஐந்து நிமிடத்தில் இன்ஸ்பெக்டர் சாம்ப மூர்த்தி அங்கு வந்தார்

"நீங்க தானே அவங்க ஹஸ்பெண்ட்"

"ஆமா சார்"

"எத்தனை மணிக்கு சம்பவம் நடந்தது"

"தெரியலை சார்...பக்கத்துவீட்டுக்காரங்க அலுவலகத்துக்கு அழைத்துச் சொன்னாங்க"

"சரி உங்க வீட்டுக்கு வாங்க ......போவோம்"

****

கல்பனாவின் அறையில்

ஏகப்பட்ட மருந்துகள், டானிக்குகள் அலமாரியில் இருந்தன.....மேசை மீது திறந்து இருந்த சிரப் பாட்டில் காலியாக இருந்தது....பக்கத்தில் செல்போன்.....எடுத்துப் பார்த்தார்.

"மிஸ்டர் குமார் உங்கள் மொபைல் நம்பர் என்ன ?"

சொன்னான்

"உங்களுக்கு உங்க ஒய்ப் கால் பண்ணி இருக்காங்களே......மூன்று மணி 5 நிமிடத்தில் பதிவாகி இருக்கிறதே"

"சார் அந்த நேரத்தில் நான் மீட்டிங்கில் இருந்தேன்.....வாய்ஸ் மெயிலில் போய் இருக்கும்....நான் செக் பண்ணவில்லை"

குறித்துக் கொண்டார்

"உங்களுக்கு யாரேனும் எதிரிகள் நண்பர்கள் ?"

"அப்படி யாரும் இல்லை சார். நாங்க காதலித்து திருமணம் செய்து கொண்டவங்க...பெற்றோர் பெரிதாக எதிர்கல...எங்க வாழ்க்கை நல்லா இருந்தது.....நான் கல்பனாவை உயிருக்கு உயிராக நேசித்தேன்"

"ம்ம்......இங்கே இருக்கும் மருந்துகள் யாருடையது......?"

"கல்பனாவுடையது தான் சார்"

"இந்த டானிக் ?"

"இதுவும் கல்பனாவுடையது தான் சார்.....மதியம் சாப்பிட்ட பிறகு சாப்பிடுவாள்..இரண்டு நாளைக்கு முன்பு தீரப் போவதாக சொன்னாள்... இன்னிக்கு மாலை வாங்கி வர இருந்தேன்.......அதுக்குள்ளே"

இடையில் ஒரு அலைபேசி அழைப்பிற்கு.....

"நினைச்சேன்.....வச்சிடுங்க" என்று சொல்லிவிட்டு,

மருந்து பெயர்களைப் படித்ததும் முகம் ஓரளவு பிரகாசமானார் இன்ஸ்பெக்டர்

"சொல்லுங்க.....கல்பனாவை ஏன் கொலை பண்ணினிங்க ?"

"சார்..............!"

"மிஸ்டர் தெரியும்......இனிமேல் மழுப்ப முடியாது...."

"சார் நான் ஏன் மனைவியை கொலை பண்ண முயற்சிக்கப் போறேன் ?"

பரிதாபமாக கேட்டான்

அதை நான் சொல்கிறேன்

"அவங்களுக்கு ஆஸ்மா இருந்திருக்கு.........அதை சொல்லாமல் தான் அவங்க உங்களை காதலிச்சிருக்காங்க...."

"திருமணம் ஆன பிறகுதான் அவங்க நோய் உங்களுக்கு தெரியவந்திருக்கு......சதா இருமல் ...மருத்துவம்....உங்களை ரொம்பவே வெறுப்படைய வைச்சிருக்கு....."

"........" குமாருக்கு ராட்டினத்தில் தலைகீழாக சுற்றுவது போல் இருந்தது

"கல்பனாவை தீர்த்து கட்டிவிட்டால்.......வேறொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டம் போட்டிங்க....டானிக் தீரும் சமயத்தில் கொஞ்சமாக சயனைடு கலந்து வச்சிட்டிங்க.....அவங்க வழக்கமாக சாப்பிட்டுவிட்டு மூன்று மணிக்கு டானிக் சாப்பிடுபவர்... எடுத்து சாப்பிட்டு இருக்கிறார்.......என்னவோ செய்யவும் ....உங்களுக்கு போன் பண்ணி இருக்கிறார்.....போனை எதிர்பார்த்த நீங்கள் எடுக்க வில்லை.... இயற்கை மரணம் .....என்று சொல்லிவிடலாம் என்று திட்டம் போட்டிங்க...அக்கம் பக்கத்தவர் பார்க்கவில்லை என்றால்...."

எத்தனை கேஸ்களைப் பார்த்தாரோ.... அவர் ஊகமாக சொல்லச் சொல்ல...'வீடியோ எடுத்த காட்சி போல் சொல்கிறாரே....' என்று அதிர்ந்த குமார்...அதற்கும் மேல் இன்ஸ்பெக்டர் என்ன சொன்னார் என்பதை கேட்கும் நினைவு எதுவும் இல்லாது மயங்கி விழுந்துவிட்டான்

39 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

அடுத்த ராஜேஷ்குமார் ரெடி!

பரிசல்காரன் சொன்னது…

கோவி-ஜி!

உங்ககிட்டேர்ந்து இந்த சரவெடியை எதிர்பார்க்கல!

கலக்கல்!

நட்புடன் ஜமால் சொன்னது…

நல்லாயிருக்கு அண்ணா!

கோவி.கண்ணன் சொன்னது…

// வால்பையன் said...

அடுத்த ராஜேஷ்குமார் ரெடி!//

இராஜேஷ் குமார் அவர் ஒருவர் தான் வால். அதுபோல் எழுதுவது கடினம், இது முயற்சி தான்.

சத்ரியன் சொன்னது…

பட்டையக் கெளப்புங்க.தலைப்பப் பாத்து ஏதோ செய்தின்னு படிக்க ஆரம்பிச்சேன்.
இப்படியெல்லாம் சஸ்பென்ஸ் குடுக்குறீங்களே...!

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...

கோவி-ஜி!

உங்ககிட்டேர்ந்து இந்த சரவெடியை எதிர்பார்க்கல!

கலக்கல்!//

பரிசல்,
நாங்களும் இராஜேஷ்குமார் கதைகள் படிச்சிருக்கோம்னு எப்படித்தான் காட்டுவது ?
:)

இன்னும் நீளமாக எழுதினால் சிறப்பாக வந்திருக்கும். நிறைய காட்சிகளை எடிட் செய்துவிட்டேன் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...

நல்லாயிருக்கு அண்ணா!//

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger சத்ரியன் said...

பட்டையக் கெளப்புங்க.தலைப்பப் பாத்து ஏதோ செய்தின்னு படிக்க ஆரம்பிச்சேன்.
இப்படியெல்லாம் சஸ்பென்ஸ் குடுக்குறீங்களே...!

9:14 PM, August 14, 2009//

பாராட்டுக்கு நன்றி கண்ணன், தூங்கிட்டு இருந்த சிறுகதை சிறுத்தை விழித்துக் கொண்டது,

துபாய் ராஜா சொன்னது…

\\தூங்கிட்டு இருந்த சிறுகதை சிறுத்தை விழித்துக் கொண்டது,\\

சிறுத்தையை அடிக்கடி சீண்டுங்க. நல்லா சீறட்டும் சிறப்பாக......

’டொன்’ லீ சொன்னது…

இனி சிறுகதைகளிலும் கோவியார் கலக்குவார் போல்..:-))

தருமி சொன்னது…

பல் துறை வித்தகரே.......

வாழ்த்துக்கள்

Vidhoosh சொன்னது…

:) super.
--vidhya

RR சொன்னது…

சயனைடு சாப்பிட்டா அடுத்த நொடியே உயிர் போய்விடும் என்று கேள்வி....

அப்பாவி முரு சொன்னது…

என்னாது இது?

T.V.Radhakrishnan சொன்னது…

கலக்கல்

பீர் | Peer சொன்னது…

ஆரம்பத்திலேயே முடிவு ஊகிக்க முடிந்தது...

//கல்பனாவை தீர்த்து கட்டிவிட்டால்.......வேறொரு திருமணம் செய்து கொள்ளலாம்//

நல்லாயிருக்கு ;)

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\உடல் நிறம் லேசாக கருமை அடைவதை வைத்து...\\

இங்கேயே சஸ்பென்ஸை உடைத்துவிட்டு, வேறு எந்த கதாபாத்திரமும் இல்லாமல்..

இன்னும் கொஞ்சம் மெருகூட்டுங்கள்

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ஏன் இப்படி?

அப்பாவி முரு சொன்னது…

பீர் | Peer


ஆரம்பத்திலேயே முடிவு ஊகிக்க முடிந்தது...

//கல்பனாவை தீர்த்து கட்டிவிட்டால்.......வேறொரு திருமணம் செய்து கொள்ளலாம்//

பீர், இதென்ன அக்கிரமம். குறிக்குள் அடைத்து சொல்லியிருப்பதைப் பார்த்தால் மனசு பதறுது, இது உங்களுக்கான டைலாக் இல்லை.

வந்தியத்தேவன் சொன்னது…

கதை நல்லாயிருக்கு, ஒரு சின்ன சந்தேகம் அந்த டானிக் பாட்டிலில் சயனைட்டை கணவர் தான் கலந்திருப்பார் என எப்படி இன்பெக்ஸ்டர் சந்தேகிக்கலாம், எனெனில் கல்பனாவே தற்கொலை செய்திருக்கலாம், குமார் போனை எடுக்காமல் இருந்தது ஒருவிதத்தில் அவரின் மேல் சந்தேகத்தை அதிகரிக்கவே செய்தது. அந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் ஆதாரத்தை கூட்டியிருக்கலாம். ஆனாலும் கதை கலக்கல்.

நிகழ்காலத்தில்... சொன்னது…

இரண்டாவது பின்னூட்டம்

இங்கே பின்னூட்டமிட்டவர்கள் அனைவரும் உங்களை கவிழ்க்கனும்னே இந்த பாராட்டு பாராட்டி இருக்காங்க, ஏதோ திட்டத்தோடுதான் இருக்காய்ங்க

எச்சரிக்கையா இருங்க கோவியாரே:))

குறிப்பா பரிசல்:))

கோவி.கண்ணன் சொன்னது…

//வந்தியத்தேவன் said...

கதை நல்லாயிருக்கு, ஒரு சின்ன சந்தேகம் அந்த டானிக் பாட்டிலில் சயனைட்டை கணவர் தான் கலந்திருப்பார் என எப்படி இன்பெக்ஸ்டர் சந்தேகிக்கலாம், எனெனில் கல்பனாவே தற்கொலை செய்திருக்கலாம்,//

பெண்களுக்கு சயனைடு அவ்வளவு எளிதாக கிடைக்குமா ? :)

// குமார் போனை எடுக்காமல் இருந்தது ஒருவிதத்தில் அவரின் மேல் சந்தேகத்தை அதிகரிக்கவே செய்தது. அந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் ஆதாரத்தை கூட்டியிருக்கலாம். ஆனாலும் கதை கலக்கல்.

9:38 AM, August 15, 2009//

நீட்டித்து எழுத ஆசை, வலையுலகம் ஒருவர் பதிவில் 5 நிமிடத்திற்கு மேல் படிக்க ஆசைப்படாது.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// நிகழ்காலத்தில்... said...

இரண்டாவது பின்னூட்டம்

இங்கே பின்னூட்டமிட்டவர்கள் அனைவரும் உங்களை கவிழ்க்கனும்னே இந்த பாராட்டு பாராட்டி இருக்காங்க, ஏதோ திட்டத்தோடுதான் இருக்காய்ங்க

எச்சரிக்கையா இருங்க கோவியாரே:))

குறிப்பா பரிசல்:))//

:)

பரிசல் கவிழ்பதற்க்காக பின்னூட்டம் போடுபவர் அல்ல !

கோவி.கண்ணன் சொன்னது…

// பீர் | Peer said...

ஆரம்பத்திலேயே முடிவு ஊகிக்க முடிந்தது...

//கல்பனாவை தீர்த்து கட்டிவிட்டால்.......வேறொரு திருமணம் செய்து கொள்ளலாம்//

நல்லாயிருக்கு ;)

10:19 PM, August 14, 2009//

முடிவை ஊகிக்கக் கூடாதுன்னு நான் நினைத்து எழுதவில்லை, கொலைக்கான முடிச்சுகளைச் சொல்வது தான் நோக்கம் !
:)

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//பீர், இதென்ன அக்கிரமம். குறிக்குள் அடைத்து சொல்லியிருப்பதைப் பார்த்தால் மனசு பதறுது, இது உங்களுக்கான டைலாக் இல்லை.

9:01 AM, August 15, 2009//

ஆகா.......அப்பாவி,

கதையை காதையாக்கிடுவிங்கப் போல !

கோவி.கண்ணன் சொன்னது…

// நிகழ்காலத்தில்... said...

\\உடல் நிறம் லேசாக கருமை அடைவதை வைத்து...\\

இங்கேயே சஸ்பென்ஸை உடைத்துவிட்டு, வேறு எந்த கதாபாத்திரமும் இல்லாமல்..

இன்னும் கொஞ்சம் மெருகூட்டுங்கள்

11:50 PM, August 14, 2009//

சஸ்பென்ஸ் கதை இல்லிங்க, சஸ்பென்ஸ் கதை முடிவில் டிவிஸ்ட் இருக்கும், இது ஒரு கொலை, அந்தக் கொலைக்கான காரணம் என்ன என்று சொல்லி இருக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//Vidhoosh said...

:) super.
--vidhya
//

நன்றி !

//RR said...

சயனைடு சாப்பிட்டா அடுத்த நொடியே உயிர் போய்விடும் என்று கேள்வி....//

அதுக்குத்தான் முன்கூட்டியே 'கொஞ்சமாக' என்று எழுதி இருக்கிறேன்
:)

//அப்பாவி முரு said...

என்னாது இது?//

நாங்களும் துப்பறியும் கதை எழுதுவோம்ல :)


//T.V.Radhakrishnan said...

கலக்கல்//

நன்றி ஐயா !

கோவி.கண்ணன் சொன்னது…

// துபாய் ராஜா said...

\\தூங்கிட்டு இருந்த சிறுகதை சிறுத்தை விழித்துக் கொண்டது,\\

சிறுத்தையை அடிக்கடி சீண்டுங்க. நல்லா சீறட்டும் //

துபாய் ராஜா, பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி !


//’டொன்’ லீ said...

இனி சிறுகதைகளிலும் கோவியார் கலக்குவார் போல்..:-))

//

:) ஏற்கனவே 30 சிறுகதை வரை எழுதியாச்சே !


//தருமி said...

பல் துறை வித்தகரே.......

வாழ்த்துக்கள்
//

உங்கள் பாராட்டைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், வழக்கமாகச் சொன்னால் சிக்கல், அதனால

"பெரியவங்கப் பாராட்டினால் பெரியாரே பாராட்டுவது போல" மகிழ்ச்சியாக இருக்கு !
:)

மங்களூர் சிவா சொன்னது…

/
வால்பையன் said...

அடுத்த ராஜேஷ்குமார் ரெடி!
/

வழிமொழிஞ்சிக்கிறேன்
:)

Kala சொன்னது…

ஒரு மனிதாபிமானம் இல்லாத கணவன்
இதே நிலைமை அந்தக் கணவனுக்கு
ஏற்பட்டிருந்தால்.....நிட்சயமாக இப்படி
நடந்திருக்கமாட்டார்.அந்த மனைவி

இப்படி நிஐவாழ்கைகளிலும் நடந்திருக்கின்றன

இதைத்தான் அன்று பாடினாரோ.....
ஆண்டவனுக்கொரு மனசு
ஆண்களுக்கிரு மனசென்று....
அந்தக் கோ.....கிலக் கண்ணனே
ஒரு............அபுறம் இந்த குமாரை என்ன சொல்ல?
உங்கள் கற்பனைக்கு...எப்படி
என் கருத்து?

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

கதை ரொம்ப நல்லா இருக்கு

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

இது தப்பாக ஒரு கொலை அல்ல

குறி தப்பாமல் செய்த கொலை

பிரபாகர் சொன்னது…

நண்பரே,

க்ரைம் சிறுகதைக்கு இலக்கணமாக இருக்கிறது.

இது போன்று நிறைய எழுதுங்கள்..

பிரபாகர்.

ச.செந்தில்வேலன் சொன்னது…

கதை வேகமாக நகர்கிறது. கலக்கல்.

PITTHAN சொன்னது…

நல்லா இருக்கு கதை, ஆனால் இதை இன்ஸ்பெக்டர் கண்டுபுடிக்க கூடாது, ஒரு துப்பறியும் நிபுனறும் அவர் காதலியும் கடைசி அத்தியத்தில் தான் கண்டுபுடிக்கனும்.

அப்புறம் உங்க கதையில ஏன் அய்யா அந்த பார்ப்பன குமார் கைது செய்யப்பட்டான் சொல்லம விட்டுடிங்க....

கோவி.கண்ணன் சொன்னது…

/PITTHAN said...

நல்லா இருக்கு கதை, ஆனால் இதை இன்ஸ்பெக்டர் கண்டுபுடிக்க கூடாது, ஒரு துப்பறியும் நிபுனறும் அவர் காதலியும் கடைசி அத்தியத்தில் தான் கண்டுபுடிக்கனும்.//

:) நன்றி !

// அப்புறம் உங்க கதையில ஏன் அய்யா அந்த பார்ப்பன குமார் கைது செய்யப்பட்டான் சொல்லம விட்டுடிங்க....//

தாங்கள் பார்பனர்கள் என்று சொல்லிக் கொள்ளாத, சாதிப் பெருமை பேசாத பார்பன நண்பர்களும் இருக்கிறார்கள். அதனால் நான் அவ்வாறெல்லாம் எழுதுவது குறைவு !

கோவி.கண்ணன் சொன்னது…

//ச.செந்தில்வேலன் said...

கதை வேகமாக நகர்கிறது. கலக்கல்.

4:42 PM, August 16, 2009//

மிக்க நன்றி செந்தில் !

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...

/
வால்பையன் said...

அடுத்த ராஜேஷ்குமார் ரெடி!
/

வழிமொழிஞ்சிக்கிறேன்
:)
//

நன்றிங்கண்ணா ! :)

//Kala said...

ஒரு மனிதாபிமானம் இல்லாத கணவன்
இதே நிலைமை அந்தக் கணவனுக்கு
ஏற்பட்டிருந்தால்.....நிட்சயமாக இப்படி
நடந்திருக்கமாட்டார்.அந்த மனைவி

இப்படி நிஐவாழ்கைகளிலும் நடந்திருக்கின்றன

இதைத்தான் அன்று பாடினாரோ.....
ஆண்டவனுக்கொரு மனசு
ஆண்களுக்கிரு மனசென்று....
அந்தக் கோ.....கிலக் கண்ணனே
ஒரு............அபுறம் இந்த குமாரை என்ன சொல்ல?
உங்கள் கற்பனைக்கு...எப்படி
என் கருத்து?
//

பாராட்டுக்கு நன்றி , அருமையான கருத்து !

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கதை ரொம்ப நல்லா இருக்கு

9:22 PM, August 15, 2009

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இது தப்பாக ஒரு கொலை அல்ல

குறி தப்பாமல் செய்த கொலை//

குறித்தப்பாமல் செய்தாலும் தப்ப மாட்டார்கள் ! :)


//பிரபாகர் said...

நண்பரே,

க்ரைம் சிறுகதைக்கு இலக்கணமாக இருக்கிறது.

இது போன்று நிறைய எழுதுங்கள்..

பிரபாகர்.//

பிரபாகர், மிக்க நன்றி !

வெ.இராதாகிருஷ்ணன் சொன்னது…

மிகவும் வித்தியாசமான சிறுகதை. காதல் திருமணம்னா புரிந்துணர்வு இருக்கும் என எதிர்பார்க்கும் காதலர்களுக்கு ஒரு எச்சரிக்கை.

ஆண்களை கொஞ்சம் தவறாகவேச் சித்தரித்து விட்டீர்கள்! கொலை செய்துதான் இன்னொரு திருமணம் செய்ய வேண்டும் என யார் கதாநாயகனுக்குச் சொல்லித் தந்தது? தப்பாகத்தான் இந்த கொலை. அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்