பின்பற்றுபவர்கள்

6 ஆகஸ்ட், 2009

ஒரு கசப்பான பதிவு ! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

"சர்க்கரை" - நினைத்தாலே இனிக்கும் என்பது நீரிழிவு நோய் (நோய் அல்ல உடலின் இன்சுலின் குறைபாடு) அற்றவர்களுக்குத் தான். நீரிழிவு இருப்பவர்களுக்கு ஒரு துண்டு மைசூர்பாவைக் கூட நஞ்சைப் போல் பாக்கும் நிலைதான் அவர்களது நிலை. இனிப்புகளைப் பார்த்தால் நாவில் எச்சில் ஊரினாலும் அதை அப்படியே துப்பிவிட்டு, முடிந்தால் முழுங்கிவிட்டு, விரல் நுனி அளவிற்கு எடுத்து பெயரளவுக்கு இனிப்புகளை சுவைக்க முடியும்.

"திருப்பதி லட்டுன்னாலும் சர்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு அது ஆலகால விசம்" தான் என்று என் உறவினரிடம் சொன்னேன். நம்ப மறுத்தார். கடவுள் நம்பிக்கை ஆழமாக இருந்தால் உண்மையைக் கூட ஏற்க கசக்கத்தான் செய்கிறது!!!

சர்க்கரைக்கு மாற்றாக இனிப்பு சுவைக்காக பயன்படுத்தப்படும் செயற்கைச் சக்கரை சாக்கரீன் எவ்வளவு கெடுதலான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பதிவர் நண்பர் மருத்துவர் தேவன் மாயம் சிறப்பாக பட்டியல் இட்டிருக்கிறார்.

சர்க்கரை குறைபாடு விலங்குகளுக்குக் கூட வருமாம், நம்ம பதிவர் துளசி அம்மாவிட்டு (செல்லப் பூனை) ஜிகேவுக்கும் அந்தக் குறைபாடு இருந்ததாம். இருவகை சர்கரை குறைபாட்டில் ஒன்று சர்க்கரை மரபுக் கூறுகளால் வரும் என்றாலும் சரியான உணவு முறைகளின் மூலம் அவை அணுகும் நாளைத் தள்ளிப் போடலாம், முற்றிலும் தவிர்த்துவிடக் கடுமையான உணவுப் பழக்கம் மேற்கொள்ளலாம், இருந்தாலும் அவை பாதிக்கப்பட்டவர்களின் உணவு பழக்கத்தைப் போன்றுதான்.

சர்க்கரை நோய் பற்றி மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் ? "இதில் பயப்பட ஒன்றும் இல்லை, வழக்கமான உங்கள் உணவுப் பழக்கத்தில் எதையெல்லாம் சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படுமோ, கூடுமோ அவற்றை தவிர்த்துவிட்டு, பரிந்துரைக்கப்படும் உணவு முறைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும், சர்கரை நோய்கான அறிகுறி வந்துவிட்டால் Time to Change your food habits என்கிறார்கள்.

சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன ?

உச்சிமுதல் உள்ளங்கால் வரை உடல் இயக்கத்திற்கு தேவை இரத்தம், அது நீர்த்(த) தன்மையுடன் இருந்தால் உடல் இயக்கம் சீராக இருக்கும், இன்சுலின் குறைபாட்டடல் இரத்ததில் இருக்கும் சர்க்கரை முழுவதுமாக எரிக்கப்படாத நிலை ஏற்படுவதால், சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களின் இரத்தம் நீர்த்தத் தன்மையிலிருந்து குழைவுத் தன்மைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறும் (Thingkness of Blood) அதனால் இரத்த ஓட்டத்தின் சீர்மை கெட்டுவிடும், குழைவின் காரணமாக இரத்தக் குழாயில் அடைப்புகள் ஏற்படும், இரத்தத்தின் மூலம் இயங்கும் அனைத்து உறுப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகும்.

சர்கரைக் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் கண், சிறுநீரகம் பாதிக்கப்படும், அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும், இரத்த ஓட்டத்தின் சீர்மை கெடுவதால் உடல் அசதி இயல்பாகவே ஏற்படும். சர்க்கரை அளவு மிகுதியாகிவிட்டால் மயக்கம் வரும். இதய நோய், மாரடைப்பு, ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளைப் பெருகிவிடும். அதனால் கண்களையும் சிறுநீரகத்தையும் ஆண்டுக்கு ஒருமுறையேனும் மருத்துவரிடம் சோதித்துக் கொள்ள வேண்டும். பாதங்களை ஒட்டிய கால்பகுதியில் தோலின் நிறம் கறுப்பாகும். கால்களில் மரப்பு (Numbness) ஏற்படும். கால்களை எப்போதும் தூய்மையாக வைத்திருக்காவிட்டால், காலில் காயம் பட்டாலும் உடனடியாக ஆறாது. காலையே எடுத்தால் தான் உயிர்பிழைக்க முடியும் என்கிற நிலை எல்லாம் பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது. ஆண்களுக்கு விரைப்பு / எழுச்சிக் குறைப்பாடு ஏற்பட சாத்தியம் உண்டு.

மேலும் ஆண்களுக்கு......

சர்க்கரை நோய் கண்ட முப்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு, இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லை என்றால் உடல் தோலின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும், விரிவடையும் தன்மையுடன் கூடிய ஆண்குறியின் முனைத் தோல் (foreskin) எழுச்சியின் போது விரிவடைந்த (சுறுக்கம் விரிவு மாறி மாறி ஏற்படும் elasticity) நிலையில் இருப்பதால் அதில் சிரிதளவு இரத்தக் கசிவுடன் கூடிய வெடிப்பு(புண்)கள் சுற்றிலும் அடிக்கடி (அதாவது ஆண்டு/மாதத்தில் பலமுறை) ஏற்பட்டுவிடும். முனைத்தோலுக்கும் ஆண்குறியின் மொட்டுப்பகுதிக்கும் இடையே உள்ள மூடிய பகுதிகளில் பல்வேறு தாது உப்புகளால் அழுக்கு படிமங்கள் (phimosis, டெட்ஸ்கின்) அடிக்கடி உற்பத்தியாகி அரிப்பும் ஏற்பட்டு இரத்தக் களறி ஆகிவிடும். உடல் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தினால் சரியாகிவிடும் என்றாலும் சரியாகும் வரை (தன்னின்பம் அல்லது உடலுறவின் போது) ஒவ்வொரு முறை தோல் விரிவடையும் போதெல்லாம் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தும். ஆண்குறியில் ஏற்படும் இந்த பாதிப்பு குறித்த விவரம் தெரியாதோர் 'பாலியல் நோயாக இருக்கும், நாம இராமனாச்சே....!' என்று பயந்துவிடுவதும், கவலைப்படுவதும் உண்டு. ஏற்கனவே (எங்கும் பாலியல் தொழிலாளியிடம் சென்று வராமல் இருந்து) அப்படி அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு இருப்பவர்கள் எந்த சோதனையும் மேற்கொள்ளாமல் தங்களுக்கு சர்க்கரை நோய் கடுமையாக பாதித்து இருப்பதாக உணர்ந்து உடனடியாக மருத்துவரை அனுகுவது நல்லது. சர்க்கரை நோய்க்கான சிகிச்சையுடன் பாதிப்பு அடிக்கடி ஏற்படுபவர்கள் தோல் (புண்ணின்) எரிச்சலை தவிர்க்க முனைத்தோலை (Foreskin - Circumcision) அகற்றிக் கொள்ளவும் பரிந்துரை செய்யப்படுகிறது.

இன்றைக்கு மருத்துவ உலகினருக்கு வற்றாத பணமழைப் பொழிவதற்கு நீரிழிவு நோய் ஒன்றே போதுமானதாக இருக்கிறது. சர்கரை நோய் கட்டுப்படுத்தலாம் முற்றிலும் போக்கிவிட முடியாது என்பதே மருத்துவ உலகம் இதுவரை சொல்லிவரும் தகவல்.

அப்படி இருந்தும் நம்ம ஊர் ரூம்போட்டு மருத்துவம் பார்க்கும் டுபாக்கூர் மருத்துவர்கள் எல்லாவற்றையும் குணப்படுத்துவதாக புளுகிவருவதும் அவர்களிடம் நோயாளிகள் ஏமாறுவதும் வாடிக்கை.

எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது, அதை முயற்சி செய்து பார்க்கலாம், பக்க விளைவுகள் எதுவும் கிடையாது. மின் அஞ்சலில் வந்த விவரங்களை இணையத்தில் தேடிப்பார்த்தேன். தகவல் பரவலாக சென்று கொண்டு இருக்கிறது. இது வதந்தியா இல்லையா என்று தெரியாது. காசு பணம் மிகுதியாக செலவும் இல்லை, பக்க விளைவுகள் இல்லை, முயற்சித்துப் பார்க்கலாம், இதோ சிகிச்சை முறை (ஆங்கிலத்தில்)

DIABETIC?
FINALLY GOOD NEWS FOR ALL DIABETICSA woman (65) was diabetic for the last 20+ years and was taking insulin twice a day,
she used the enclosed homemade medicine for a fortnight and now
she is absolutely free of diabetes and taking all her food as normal including sweets ............ ......... ......

The doctors have advised her to stop insulin and any other blood sugar controlling drugs.
I request you all please circulate the email below to as many people as you can and
let them take the maximum benefit from it.


AS RECEIVED :


DR. TONY ALMEIDA (Bombay Kidney Speciality expert ) made the extensive
experiments with perseverance and patience and discovered a successful treatment for diabetes.
Now a days a lot of people, old men & women in particular suffer a lot due to Diabetes.

Ingredients:
1 - Wheat flour 100 gm
2 - Gum(of tree) (gondh) 100 gm ( மரப் பிசின்...இது எங்கே கிடைக்கும் ?)
3 - Barley 100 gm
4 - Black Seeds (kalunji) 100 gm (கருஞ்சீரகம்)

Method of Preparation :
Put all the above ingredients in 5 cups of water.
Boil it for 10 minutes and put off the fire. Allow it to cool down by itself.
When it has become cold, filter out the seeds and preserve the water in a glass jug or bottle.

How to use it?
Take one small cup of this water every day early morning when your stomach is empty.
Continue this for 7 days. Next week repeat the same but on alternate days. With these 2 weeks of treatment you
will wonder to see that you have become normal and can eat normal food without problem.

SINCE THESE ARE ALL NATURAL INGREDIENTS, TAKING THEM IS NOT HARMFUL. SO THOSE WHO ARE SCEPTICAL ABOUT THIS TREATMENT MAY STILL TRY IT WITHOUT ANY HARM. WORST CASE SCENARIO WILL BE THAT YOU REMAIN STILL SAME AS YOU WERE BEFORE

45 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

எல்லாரும் தெரிஞ்சிக்க வேண்டியது தான் இது.

வானம்பாடிகள் சொன்னது…

ரொம்ப முக்கியமான பயனுள்ள தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி.

Balaji சொன்னது…

just a joke::
the home remedy ,i think prescribed vidivel Sir !(Gum-should be Tar, it will stop intake of food! ,hence no diabetic
VSB

கோவி.கண்ணன் சொன்னது…

நட்புடன் ஜமால் மற்றும் வானம்பாடிகள் ஆகியோருக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//just a joke::
the home remedy ,i think prescribed vidivel Sir !(Gum-should be Tar, it will stop intake of food! ,hence no diabetic
VSB//

foreskin வெடிப்பு எப்போதாவது ஏற்படுவதைப் பற்றி குறிப்பிடவில்லை. அடிக்கடி அவ்வாறு பாதிப்பு ஏற்படுவதைத் தான் சர்கரை நோயினால் வரும் பாதிப்பு என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.

வெ.இராதாகிருஷ்ணன் சொன்னது…

மிகவும் பயனுள்ள பகுதி, மிகவும் தெளிவாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அருமையாகவும், எச்சரிக்கைத் தருவதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எழுதப்பட்ட அழகிய கட்டுரை இது.

பல வருடங்களாக ஆராய்ச்சி செய்தும் ஒரு முடிவுக்கு வராத இந்தப் பிரச்சினைக்கு இதுபோன்ற விளம்பரங்களை நம்பி ஏமாறும் நிலைதான் ஏற்படும்.

மிக்க நன்றி கோவியாரே.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெ.இராதாகிருஷ்ணன் said...
மிகவும் பயனுள்ள பகுதி, மிகவும் தெளிவாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அருமையாகவும், எச்சரிக்கைத் தருவதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எழுதப்பட்ட அழகிய கட்டுரை இது.

பல வருடங்களாக ஆராய்ச்சி செய்தும் ஒரு முடிவுக்கு வராத இந்தப் பிரச்சினைக்கு இதுபோன்ற விளம்பரங்களை நம்பி ஏமாறும் நிலைதான் ஏற்படும்.

மிக்க நன்றி கோவியாரே.
//

ஒரு மருத்துவரே குறிப்பிட்டு பாராட்டும் போது கட்டுரையில் தவறான தகவல் எதையும் எழுதிவிட வில்லை என்று மனம் நிறைகிறது.

நன்றி ஐயா !

அக்பர் சொன்னது…

உபயோகமான நல்ல தகவல்.

நன்றி கோவி.கண்ணன்.

Barari சொன்னது…

THAYAVU KOORNTHU ENTHA MARATHTHU GUM (GONDU) ENDRU THRINTHAVARKAL VILAKKINAAL ANAIVARUKKUM PAYANULLATHAAKA IRUKKUM.

கோவி.கண்ணன் சொன்னது…

//Barari said...
THAYAVU KOORNTHU ENTHA MARATHTHU GUM (GONDU) ENDRU THRINTHAVARKAL VILAKKINAAL ANAIVARUKKUM PAYANULLATHAAKA IRUKKUM.
//

மருந்தாகப் பயன்படுத்தும் மரக் கோந்து எது - என்று நாட்டு மருந்து கடைக்களில் தான் கேட்கவேண்டும், வேறெந்த விவரமும் தெரியவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்பர் said...
உபயோகமான நல்ல தகவல்.

நன்றி கோவி.கண்ணன்.
//

நன்றி அக்பர் !

கோவி.கண்ணன் சொன்னது…

////just a joke::
the home remedy ,i think prescribed vidivel Sir !(Gum-should be Tar, it will stop intake of food! ,hence no diabetic
VSB////

கோந்து உட்கொண்டால் வாய் உதடுகள் ஒட்டிக் கொள்ளும், கொஞ்சம் நாள் மருந்து சாப்பிடுவதாகச் சொல்லி பேச்சுக் கொடுக்காமல் துணையிடம் தப்பிக்கலாம் :)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சர்க்கரை கசக்கும் கோவியாரே!

என்ன செய்வது...

இந்தியர்களுக்கு இது பிராண்டட் நோய் ஆகிவிட்டது...

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
சர்க்கரை கசக்கும் கோவியாரே!

என்ன செய்வது...

இந்தியர்களுக்கு இது பிராண்டட் நோய் ஆகிவிட்டது...
//

இந்தியர்களில் பலர் இனிப்பினால் ஆனவர்கள் !
:)
:)

வால்பையன் சொன்னது…

சிகிச்சையை தமிழில் இடுங்களேன்!

என் பக்கம் சொன்னது…

//"திருப்பதி லட்டுன்னாலும் சர்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு அது ஆலகால விசம்" //

அருமை

T.V.Radhakrishnan சொன்னது…

உபயோகமான தகவல்

துளசி கோபால் சொன்னது…

kalunji =கருஞ்சீரகம்

நல்ல இடுகை கோவியாரே.

விலங்குகளுக்கு, மனிதனுக்கு வரும் எல்லா நோய்களும் வரும், எய்ட்ஸ் உள்பட.

நமக்குக் கண்டிபிடிப்பதுபோல அவுங்களுக்குச் சட்னு முடியாது. செலவும் கூடுதல் பாருங்க. மனுசனுக்குத் தன்னைப் பார்த்துக்கவே நேரம் சரியாப் போயிருதுல்லே(-:

புருனோ Bruno சொன்னது…

//பக்க விளைவுகள் எதுவும் கிடையாது.//

என்னென்ன பரிசோதனைகள் செய்து இந்த முடிவிற்கு வந்தார்கள் என்று தெரிந்து கொள்ளலாமா

kumar சொன்னது…

கோவிகண்னன் அவர்களுக்கு‍ அருமையான பதிவு தொடரட்டும் உங்களின் இது போன்ற பனியும் பதில்களும் நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//புருனோ Bruno said...

//பக்க விளைவுகள் எதுவும் கிடையாது.//

என்னென்ன பரிசோதனைகள் செய்து இந்த முடிவிற்கு வந்தார்கள் என்று தெரிந்து கொள்ளலாமா//

புருனோ சார், ஆங்கிலத்தில் உள்ளது மின் அஞ்சலில் வந்தது, அது பற்றிய முழுவிவரம் தெரியாது. வெளி இடும் முன் இது வதந்தியா என்று கூகுளில் தேடினேன். இந்தத் தகவல்கள் வேகமாக பரவுகிறது. ஆனால் வதந்தி என்று பிறகு தேடிப்பிடித்த பக்கங்களில் இல்லை. என்பதால் தான் அதை இங்கு இணைத்தேன். குறிப்பிட்டு இருக்கும் மருந்துப் பொருள்களில் குறிப்பாக மரப் பிசின் நாட்டுமருந்து கடைகளில் மருந்துக்காக விற்கப்படுகிறது. மற்றவை அன்றாடம் உணவில் பயன்படுத்துவைதான். அதனால் பக்க விளைவுகள் இருக்காது என்று நம்புகிறேன்.


எப்படியும் கொஞ்ச நாளில் தெரிஞ்சிடும் !
:)

துளசி கோபால் சொன்னது…

குமார்,


பனியும் = பணியும்

டீச்சரா இருப்பது கஷ்டம்(-:

Simulation சொன்னது…

"இயற்கை பொருட்களால் ஆனது. எனவே பக்க விளைவுகள் ஏதும் கிடையாது" இது பொதுவாகக் கூறப்படும் ஒரு தவறான கருத்தாகும்.

எருக்கு, ஊமத்தை, அரளி விதை இவையெல்லாம் கூட இயற்கைப் பொருட்கள்தானே! அவையெல்லாம் விஷமல்லவா?

- சிமுலேஷன்

SINCE THESE ARE ALL NATURAL INGREDIENTS, TAKING THEM IS NOT HARMFUL. SO THOSE WHO ARE SCEPTICAL ABOUT THIS TREATMENT MAY STILL TRY IT WITHOUT ANY HARM.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...

kalunji =கருஞ்சீரகம்

நல்ல இடுகை கோவியாரே.

விலங்குகளுக்கு, மனிதனுக்கு வரும் எல்லா நோய்களும் வரும், எய்ட்ஸ் உள்பட.

நமக்குக் கண்டிபிடிப்பதுபோல அவுங்களுக்குச் சட்னு முடியாது. செலவும் கூடுதல் பாருங்க. மனுசனுக்குத் தன்னைப் பார்த்துக்கவே நேரம் சரியாப் போயிருதுல்லே(-://


துளசி அம்மா kalunji தமிழில் என்ன வென்று தெரியவில்லை கூகுளில் தேடினேன். கருப்பு எள்ளு படம் போல் இருக்கு, இன்னும் ஒரு தடவை உறுதி படுத்திச் சொல்லுங்கள், பதிவில் மாற்றிவிடுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// Simulation said...

"இயற்கை பொருட்களால் ஆனது. எனவே பக்க விளைவுகள் ஏதும் கிடையாது" இது பொதுவாகக் கூறப்படும் ஒரு தவறான கருத்தாகும்.

எருக்கு, ஊமத்தை, அரளி விதை இவையெல்லாம் கூட இயற்கைப் பொருட்கள்தானே! அவையெல்லாம் விஷமல்லவா?

- சிமுலேஷன்

SINCE THESE ARE ALL NATURAL INGREDIENTS, TAKING THEM IS NOT HARMFUL. SO THOSE WHO ARE SCEPTICAL ABOUT THIS TREATMENT MAY STILL TRY IT WITHOUT ANY HARM.//

திரு சிமுலேஷன்,

இது எனது கருத்துக்கள் இல்லை. அதில் குறிப்பிட்டு இருந்ததை அப்படியே ஒட்டினேன். மருத்துவர் புருனோ அவர்களுக்கான பின்னூட்டத்தில் கூகுளில் தேடிக் கிடைத்த தகவல்களை இணைத்திருக்கிறேன்.

இதை எனது கருத்தாக தற்காக்க ஒன்றுமே இல்லை. வெறும் தகவல் பரிமாற்றம் தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...

சிகிச்சையை தமிழில் இடுங்களேன்!

7:25 PM, August 06, 2009//

அது எளிமையாக இருப்பதாகத்தான் எனக்கு தெரிந்தது வால்.

ஜனராஜ் சொல்வது போல் அதுல ஒரு 100 கிராமைப் போடு இதுல ஒரு 100 கிராமைப் போடு, எல்லாத்தையும் 10 நிமிடம் கொதிக்கவைத்து ஆறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் ஒரு சிறிய டம்ளர் அளவுக்கு 7 நாள் குடிக்கச் சொல்றாங்க, அப்பறம் ஒண்ணு விட்டு ஒரு நாள் ஒருவாரம் குடித்தால் போதுமாம்.

வேலை செய்யுமா என்று தெரியல.

கோவி.கண்ணன் சொன்னது…

//kumar said...

கோவிகண்னன் அவர்களுக்கு‍ அருமையான பதிவு தொடரட்டும் உங்களின் இது போன்ற பனியும் பதில்களும் நன்றி

9:52 PM, August 06, 2009//

பாராட்டுக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//என் பக்கம் said...

//"திருப்பதி லட்டுன்னாலும் சர்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு அது ஆலகால விசம்" //

அருமை//

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...

உபயோகமான தகவல்//

T.V.R ஐயா மிக்க நன்றி !

வால்பையன் சொன்னது…

கோதுமை மாவையும், பார்லியையும் ஒருவாரம் வைத்திருந்தால் வாசம் வராது!
அது கெட்டுப்போகாதா!?

ஏற்கனவே அது பசை மாதிரி ஆகியிருக்குமே!?

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...

கோதுமை மாவையும், பார்லியையும் ஒருவாரம் வைத்திருந்தால் வாசம் வராது!
அது கெட்டுப்போகாதா!?

ஏற்கனவே அது பசை மாதிரி ஆகியிருக்குமே!?//

ஒவ்வொரு நாளும் ஆயத்தம் செய்ய வேண்டும், என்பதாகத்தான் புரிந்து கொண்டேன். வடிகட்டி வெறும் நீரைத்தான் குடிக்க சொல்லி இருக்கிறார்கள், எல்லாம் கொழகொழன்னு இருப்பதால் வடித்தால் ஒரு டம்ளர் தான் வரும்.

கையேடு சொன்னது…

வாசிக்க இனிப்பாவே இருந்துது..

கோவி.கண்ணன் சொன்னது…

/கையேடு said...

வாசிக்க இனிப்பாவே இருந்துது..//

ஒரு கசப்பான பதிவுக்கு எதிரான கருத்து !

:)

மிக்க நன்றி !

கீழை ராஸா சொன்னது…

இனிப்பால் ஏற்படும் கசப்பான அனுபவங்கள் சொன்னாலும் இது ஒரு இனிப்பான பதிவுதான் நண்பரே...

Mãstän சொன்னது…

எப்படில்லாம் கிளப்புறாங்ப்பா பீதிய...

நன்றி கோவி சார். :)

அது சரி சொன்னது…

நல்லதொரு உபயோகமான பதிவு...நன்றி..

(உங்களின் பாலியல், ஆபாசம், கூகுள் பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டம் விளையாட்டாக இட்டது...வில்லங்கமாக அல்ல....ஆனால் பின்னே வந்தவர்கள் அதிலிருந்தும் கொஞ்சம் பிக்கப் செய்துவிட்டார்கள் போல...உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு வருந்துகிறேன்...மன்னிக்க)

சுவனப்பிரியன் சொன்னது…

மிகவும் பயனுள்ள பகுதி, மிகவும் தெளிவாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அருமையாகவும், எச்சரிக்கைத் தருவதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எழுதப்பட்ட அழகிய கட்டுரை இது.

புருனோ Bruno சொன்னது…

//எப்படியும் கொஞ்ச நாளில் தெரிஞ்சிடும் !
:)//

பலருக்கு சிறுநீரக கோளாறு, கண்பார்வை பரிபோதல், நுரையீரல் பிரச்சனை எல்லாம் வந்த பின்னரா ;)

புருனோ Bruno சொன்னது…

//இது எனது கருத்துக்கள் இல்லை. அதில் குறிப்பிட்டு இருந்ததை அப்படியே ஒட்டினேன். மருத்துவர் புருனோ அவர்களுக்கான பின்னூட்டத்தில் கூகுளில் தேடிக் கிடைத்த தகவல்களை இணைத்திருக்கிறேன்.
//

ஆடிட்டர்கள் கருத்து பரிமாற்றம் செய்யும் தளத்தில் இருந்த தகவல்களுக்கு நன்றி :) :)

கோவி.கண்ணன் சொன்னது…

//புருனோ Bruno said...
//எப்படியும் கொஞ்ச நாளில் தெரிஞ்சிடும் !
:)//

பலருக்கு சிறுநீரக கோளாறு, கண்பார்வை பரிபோதல், நுரையீரல் பிரச்சனை எல்லாம் வந்த பின்னரா ;)
//

மருத்துவரே,

அந்த குறிப்பில் உள்ளவை அனைத்தும் நாட்டு மருந்தாகப் பயன்படுத்துவதானே. அதுவும் 2 வாரத்துக்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிய டம்ளர் அளவுக்குத்தானே குடிக்கச் சொல்கிறார்கள், அதற்குள் நீங்கள் குறிப்பிடும் பாதிப்புகள் ஏற்பட்டுவிடுமா ? இன்றைக்கு சர்க்கரைக்கு கொடுக்கப்படும் அலோபதி சிகிச்சை மருந்துகளில் பக்க விளைவுகள் எதுவும் இல்லாதவை இருக்கிறதா ?

அதுக்குள்ளே பீதியைக் கிளப்புறிங்களே !
:)

ஆ.ஞானசேகரன் சொன்னது…

பயனுள்ள தகவல் நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//புருனோ Bruno said...
//இது எனது கருத்துக்கள் இல்லை. அதில் குறிப்பிட்டு இருந்ததை அப்படியே ஒட்டினேன். மருத்துவர் புருனோ அவர்களுக்கான பின்னூட்டத்தில் கூகுளில் தேடிக் கிடைத்த தகவல்களை இணைத்திருக்கிறேன்.
//

ஆடிட்டர்கள் கருத்து பரிமாற்றம் செய்யும் தளத்தில் இருந்த தகவல்களுக்கு நன்றி :) :)

9:16 AM, August 07, 2009
//

கூகுள் தேடுபொறிகளில் வரும் இணைப்பையும் தானே கொடுத்து இருக்கிறேன்.

ஆடிட்டர்களுக்கும் சர்க்கரை நோய் வரும். அதுபற்றி அவங்க விவாதிக்க உரிமை உண்டு.

நாட்டு மருந்து கொடுப்பவர்கள் முறைப்படி படிக்கவில்லை என்பதற்காக நாட்டு மருந்து சிகிச்சை முறைகள் தவறுன்னு சொல்லமாட்டிங்கன்னு நினைக்கிறேன், எனக்கு தெரிந்து அவர்களால் யாரும் இறந்தால் பிரச்சனை ஆகும், மருத்துவம் படித்தவர்களால் இறந்தால் பிரச்சனை ஆகாது :)

என். உலகநாதன் சொன்னது…

பயனுள்ள தகவல்கள்தான். ஆனால் பயன்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. அலோபதி மருந்துசாப்பிடுபவர்கள் திடீரென வேற்று மருந்துகளுக்கு மாறுவது அவ்வளவு நல்லதல்ல.

Vetrimagal சொன்னது…

This is a kind of hoax treatment.
Please see this link

http://www.indiansinkuwait.com/iikForum/threadView.aspx?id=31597

Some "
posted by Surve -
DIABETIC? FINALLY GOOD NEWS FOR ALL DIABETICS

A woman (65) was diabetic for the last 20+ years and was taking insulin twice a day, she used the enclosed homemade medicine for a fortnight and now
she is absolutely free of diabetes and taking all her food as normal including sweets .......................
The doctors have advised her to stop insulin and any other blood sugar controlling drugs. I request you all please circulate the email below to as many
people as you can and let them take the maximum benefit from it.

AS RECEIVED :
Sheikh Saleh Mohammed Tuwaijiri , the Supreme judge of Tabuk Court has made the extensive experiments with perseverance and patience and discovered
a successful treatment for diabetes. Now a days a lot of people, old men & women in particular suffer a lot due to Diabetes.
Ingredients:
1 - Wheat flour 100 gm
2 - Gum(of tree) (gondh) 100 gm
3 - Barley 100 gm
4 - Black Seeds (kalunji) 100 gm

There are other links too which had some other doctor

http://diabetesinformationhub.com/WhatCausesDiabetes.php
//AS RECEIVED :

DR. TONY ALMEIDA (Bombay Kidney Speciality expert ) made the extensive
experiments with perseverance and patience and discovered a successful treatment for diabetes.
Now a days a lot of people, old men & women in particular suffer a lot due to Diabetes.

Ingredients:
1 - Wheat flour 100 gm
2 - Gum(of tree) (gondh) 100 gm
3 - Barley 100 gm
4 - Black Seeds (kalunji) 100 gm

Method of Preparation Put all the above ingredients in 5 cups of water.
Boil it for 10 minutes and put off the fire. Allow it to cool down by itself.
When it has become cold, filter out the seeds and preserve the water in a glass jug or bottle."

I did a search in Google.

And found this shocking information.

http://www.caclubindia.com/forum/message_display.asp?group_id=37062&offset=3


Please read anbazhagan's message and also about " no Tony almieda" in Mumbai.

This treatment is kind of fake. The entire concotion gets to be a messy mass of flour and there is no water left . It had to be simply thrown away.

Your blog is a distinguished one. Please write about this fake suggestion , so that people will continue with their medication and not fall short of it.

Vetrimagal சொன்னது…

Hope to get response from your blog. thanks.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்