பின்பற்றுபவர்கள்

14 ஆகஸ்ட், 2009

கனவு காணலாம் வாருங்கள் !

1947 இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டு என்று சொல்வதைவிட ஆளும் வர்கத்திற்கு, மதவெறியர்களுக்குக் கிடைத்த சுதந்திரம் என்றே சொல்ல வேண்டும், மதவெறியர்கள் சுதந்திரமாக காந்தியைச் சுட்டுக் கொள்வதற்கும், பாகிஸ்தான் பிரிவினைக்கும் வழிவிடப்பட்ட ஆண்டே 1947. உறுதிமொழி என்ற பெயரில் மாணவர்களுக்கு சொல்லப்படும் நாட்டுப் பற்று, நாட்டை வழி நடத்துவதாகக் கூறப்படும் அரசியல்வாதிகளால் சந்தி சிரிக்கிறது, ஆம் சுவிஸ் போன்ற வெளி நாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள அரசியல்வாதிகளின், பினாமிகளின், முதலாளி வர்கங்களின் பணத்தொகை இந்தியாவைத்திருக்கும் வெளி நாட்டுக் கடனைவிட மிகுதி. இவை அனைத்துமே இந்தியாவை சுதந்திரமாக சுரண்டிய பணம் தானே ?

கையால் தைக்கப்பட்ட பிச்சைக்காரனின் உடை போல ஒட்டுப் போட்ட நாடாக பல்வேறு மொழி பேசும் மானிலங்களை ஒன்றிணைத்து இந்தியா எனப்படுகிறது, ஆனால் வாழ்வாதரமான தண்ணீர் தேவைகள் இந்தியா ஒரே நாடு அல்ல அவை ஒரு தோற்றமே என்பதாக அவ்வப்போது உணர்த்துகின்றன. மதச்சார்பற்ற நாடு என்று மார்தட்டிக் கொண்டாலும் இந்துப் பெரும்பாண்மை, இந்து வெறி தூண்டப்பட்ட மாநிலங்களில் பிற மதத்தினர் அச்சத்துடன் வாழ்வது சுதந்திரமா ?

வெள்ளையர்களிடம் இருந்து விடுதலைப் பெற்றதாக நினைக்கும் நம் நாட்டில் வெள்ளையர்களின் முதலீடுகள் என்ற பெயரில் இந்தியர்கள் (வளம், உழைப்பு என) தொடர்ந்து சுரண்டப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள், மதவாதமும், முதாலித்துவம் (பண்ணையார்கள்) போற்றும் இரு பெரும் தேசியக் கட்சிகளைத் தவிர்த்து வேறொரு நல்ல ஒரு அரசியல் தலைமை இந்தியாவிற்குக் கிடைக்காமல் போனதற்கு மாநில அரசியல்வாதிகளின் சுயநலம் தவிர்த்து வேறென்ன இருக்க முடியும் ? தேசிய, மாநில அரசுகளை எதிர்த்துக் கிளம்பும் போராட்டக்காரர்களை தேசவிரோத குழுக்களாக அடையாள படுத்திவைக்க இன்றைய அரசியல் சட்ட அமைப்பு சுதந்திரம் அளித்திருக்கிறது.

அனைவருக்கும் ஒரே மொழி என்ற பெயரில் வடமாநிலத்தவர் பேசும் இந்தி தமிழகம் தவிர்த்து எங்கும் திணிக்கப்பட்டு அம்மாநிலங்களின் மொழிகளை விழுங்கி வருகின்றன. இதன் காரணமாக தென் மாநிலங்களில் பல துவக்க நிலை பள்ளிகளிலும் மாநில மொழிகளைப் பயில்வதற்கு யாரும் இல்லாமல் மாநில மொழிப் பாடத்திட்டங்கள் கைவிடப் படுவதாக செய்திகள் வருகின்றன. தமிழுக்கும் அதே நிலை என்றாலும் அவ்வளவு சீர்கெட்ட நிலை ஏற்படாதது இந்தி எதிர்பால் நமக்கு கிடைத்த நன்மை. இன்றும் கூட இந்தி அபிமானிகள் எங்களால் இந்தி பேச முடியாமல் போனதற்கு தமிழகத்தின் இந்தி எதிர்ப்பே காரணம் இல்லை என்றால் வடமாநிலத்தின் வளங்களை நாங்கள் வலைபோட்டு தமிழகத்துக்கு அள்ளி வந்திருப்போம் என்று பேசுகிறார்கள் என்பது விந்தைதானே ?

பெயரளவில் திராவிடம் வைத்துக் கொண்டு குடும்ப அரசியல் நிறுவனங்களாக தமிழக அரசியல் கட்சிகள் வளர்ந்து நிற்பதும் சுதந்திர இந்தியாவின் பரிணாமம், பிற மாநிலங்களிலும் இதே நிலைமை என்பதால் தமிழன் தனித்துவிடப் படவில்லை என்று ஆறுதல் அடையலாம். வெள்ளையர் ஆட்சியில் முன்பு கொத்தடிமைகளாக இருந்தவர்கள் இன்று இலவச அடிமைகளாக அடிமை வாழ்கையைத் தொடர்கின்றனர்.

படித்தவன் வெளிநாடுகளுக்கு ஓடிவிடுகிறான் நாட்டை முன்னேற்றுவது எப்படி ? என்கிற ஞாயமான கேள்வி கேட்பதாக நினைப்பவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்கவும். வேறெந்த காலகட்டங்களிலும் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றவர்கள் கடந்த 20 ஆண்டுகளில் மிகுதி. நாள் ஊதிய வேலை முதல் நாசா விஞ்ஞானிகள் ஆகும் அளவுக்கு மக்கள் வளமும், கல்வி அறிவும் பெற்ற ஒரு நாட்டில் அவர்கள் அனைவருக்குமே இந்தியாவில் நல்லொதொரு வேலை வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு யார் காரணம் ? சுதந்திரம் பெருவதற்கு முன்பு கூட வெளிநாட்டிற்கு படிக்கச் செல்பவர்கள் கூட திரும்பி இந்தியாவில் வந்து வேலை பார்க்கும் நிலை இருந்தது, சுதந்திரம் பெற்ற பிறகு படித்தவர்களும், படிக்காதவர்களும் வெளிநாடுகளைத் தேடி ஓடும் நிலைதான் உள்ளது. படித்தவன் வாய்ப்புக் கிடைத்தால் ஓடிவிடுகிறான் என்றே ஒத்துக் கொண்டாலும், அரபு நாடுகளிலும் ஆசிய நாடுகளில் நாள் கூலிக்கு செல்பவர்கள் அங்கே கொத்தடிமைகளாகத் தொடர்வதும், அவர்கள் முறையான வேலை அனுமதியின்றி ஏமாற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு சிறைகளில் அடைபடுவதும், அப்படியே எல்லாமும் பெற்றுச் செல்பவர்கள் அந்நாட்டில் ஊதியம் இல்லாமல் வேலை பார்த்து, சித்திரவதை பட்டு எதிர்த்துக் கேள்வி கேட்டால் சிறை தண்டனைப் பெறுபவர்கள் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 1000க் கணக்கில் கூடிக் கொண்டே செல்கிறது, இந்த நிலை நமக்கு மட்டும் அல்ல, பாகிஸ்தான், பங்களாதேஷ் மக்களுக்கும் இதே நிலைதான்.

சுதந்திரம் பெற்ற 60 ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவை விட்டு வெளியேறினால், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புத் தேடினால் தான் பிழைக்க முடியும் என்ற நிலையில் இந்தியா இருக்கிறது. நமக்கும் எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று "கனவு காணலாம் வாருங்கள்" என்று ஊக்கப்படுத்த கலாம்கள் இருக்கிறார்கள், அந்தப் பெருமையில் இன்னொரு சுதந்திர நாள் வந்து போகப் போகிறது.

சென்ற ஆண்டு எழுதியது இங்கே...

17 கருத்துகள்:

நிஜமா நல்லவன் சொன்னது…

:)

நிஜமா நல்லவன் சொன்னது…

முதல் வரியே நெத்தியடி!

அப்பாவி முரு சொன்னது…

திறமை இருக்கு
ஆனால்,
களம் தானில்லை.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இந்தியா ஒரே நாடு அல்ல //

ஐ ஸ்ட்ராங்லீ அக்ரீ வித் யுவர் ஒபீனியன்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

படித்தவன் வெளிநாடுகளுக்கு ஓடிவிடுகிறான் நாட்டை முன்னேற்றுவது எப்படி ? என்கிற ஞாயமான கேள்வி //

ஞாயமான கேள்வி இல்லை என்று நான் கருதுகிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பெயரளவில் திராவிடம் வைத்துக் கொண்டு குடும்ப அரசியல் நிறுவனங்களாக தமிழக அரசியல் கட்சிகள் வளர்ந்து நிற்பதும் சுதந்திர இந்தியாவின் பரிணாமம், பிற மாநிலங்களிலும் இதே நிலைமை என்பதால் தமிழன் தனித்துவிடப் படவில்லை என்று ஆறுதல் அடையலாம். வெள்ளையர் ஆட்சியில் முன்பு கொத்தடிமைகளாக இருந்தவர்கள் இன்று இலவச அடிமைகளாக அடிமை வாழ்கையைத் தொடர்கின்றனர்.//

நூறு விழுக்காடு சரி!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சுதந்திரம் பெற்ற 60 ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவை விட்டு வெளியேறினால், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புத் தேடினால் தான் பிழைக்க முடியும் என்ற நிலையில் இந்தியா இருக்கிறது. நமக்கும் எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று "கனவு காணலாம் வாருங்கள்" என்று ஊக்கப்படுத்த கலாம்கள் இருக்கிறார்கள், அந்தப் பெருமையில் இன்னொரு சுதந்திர நாள் வந்து போகப் போகிறது.//

எனது நாடு இந்தியா என்கிற அபிமானம் ஒரு காலத்தில் என்னிடம் நிரம்ப இருந்தது.

இப்போது எனக்கு வெறும் வேதனையையும், ஆற்றாமையையும் கொடுத்த என் நாடு, விரக்தியடைய வைத்து விரட்டும் நிலையில் இருக்கிறது என்பது நிதர்சன உணமை.

ஒரு மொழி பேசும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத நாடு அந்த மொழி பேசும் மக்களுக்கு எப்படி நாடாக இருக்கமுடியும் என்பது எனது வலிமையான கேள்வி!

இதற்கு பதில் சொல்லும் நிலையில் எந்த ஆளும் வர்க்க அரசியல் தலைவர்கலும் இல்லை என்பதும் உண்மை.

(பாஸ்போட்டை தூக்கி வீசுடா நாயே என்று தேசிய வியாதிகள் கேட்பது என் காதில் விழுகிறது. கவலை இல்லை)

ஜெகதீசன் சொன்னது…

"இந்தி"யர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

பீர் | Peer சொன்னது…

சார்... ஒவ்வொரு வரியும் தீட்டிருக்கீங்க.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நல்ல இடுகை

மங்களூர் சிவா சொன்னது…

/
இன்றும் கூட இந்தி அபிமானிகள் எங்களால் இந்தி பேச முடியாமல் போனதற்கு தமிழகத்தின் இந்தி எதிர்ப்பே காரணம் இல்லை என்றால் வடமாநிலத்தின் வளங்களை நாங்கள் வலைபோட்டு தமிழகத்துக்கு அள்ளி வந்திருப்போம் என்று பேசுகிறார்கள் என்பது விந்தைதானே ?
/

/

சுதந்திரம் பெற்ற 60 ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவை விட்டு வெளியேறினால், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புத் தேடினால் தான் பிழைக்க முடியும் என்ற நிலையில் இந்தியா இருக்கிறது.
/

வெளி நாட்டிற்கு போய் கழட்டுபவர்கள் வெளி மாநிலங்களில் போய கழட்ட ஹிந்தி அவசியம்தானே ? எதற்கு எதிர்ப்பு?

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

துபாய் ராஜா சொன்னது…

தொடர்ந்து கனவு காண்போம்.

அது சரி சொன்னது…

உண்மையை "பொளேர்"னு அறையற மாதிரி சொல்லிட்டீங்க!

அது சரி சொன்னது…

//
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
இந்தியா ஒரே நாடு அல்ல //

ஐ ஸ்ட்ராங்லீ அக்ரீ வித் யுவர் ஒபீனியன்!

2:10 PM, August 14, 2009
//

மீ டூ!

அது சரி சொன்னது…

//
மங்களூர் சிவா
/
இன்றும் கூட இந்தி அபிமானிகள் எங்களால் இந்தி பேச முடியாமல் போனதற்கு தமிழகத்தின் இந்தி எதிர்ப்பே காரணம் இல்லை என்றால் வடமாநிலத்தின் வளங்களை நாங்கள் வலைபோட்டு தமிழகத்துக்கு அள்ளி வந்திருப்போம் என்று பேசுகிறார்கள் என்பது விந்தைதானே ?
/

/

சுதந்திரம் பெற்ற 60 ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவை விட்டு வெளியேறினால், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புத் தேடினால் தான் பிழைக்க முடியும் என்ற நிலையில் இந்தியா இருக்கிறது.
/

வெளி நாட்டிற்கு போய் கழட்டுபவர்கள் வெளி மாநிலங்களில் போய கழட்ட ஹிந்தி அவசியம்தானே ? எதற்கு எதிர்ப்பு?
1:48 PM, August 15, 2009
//

சிவா அண்ணாச்சி,

எதிர்ப்பு இந்தி என்ற மொழிக்கல்ல....அந்த மொழி மற்ற மொழி பேசுபவர்களின் மீதும் தேசிய மொழி என்ற போர்வையில் திணிக்கப்படுவதற்குத் தான்....

பதி சொன்னது…

முதல் வரிக்காகவே ஒரு ஓட்டு !!!

//வெள்ளையர் ஆட்சியில் முன்பு கொத்தடிமைகளாக இருந்தவர்கள் இன்று இலவச அடிமைகளாக அடிமை வாழ்கையைத் தொடர்கின்றனர்.//

அதிலொரு பெருமை வேறு.... :-(

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்