பின்பற்றுபவர்கள்

26 ஆகஸ்ட், 2009

கலவை 26/ஆக/2009 !

இலவச வடை : அரசு செலவில் சந்திப்பு : நம்ம ஊரில் பதிவர்களுக்கு இப்படிப் பட்ட வாய்ப்புக் கிடைக்குமா தெரியலை. ஆனால் சிங்கப்பூரில் தமிழ் சார்ந்த நிகழ்ச்சி நடத்த உரியவர்களை அணுகி தேதி நேரம் சொல்லிவிட்டால் இடம் ஒதுக்கி, இணைய இணைப்புடன் கணிணி மற்றும் காட்சித் திரை, காஃபி, தேனீர், சமோசா, வடையும் இலவசமாக ஏற்பாடு செய்து தருகிறார்கள், சிங்கப்பூரில் தான் இப்படி நடக்கிறது. வாழ்க சிங்கப்பூர் அரசு. சென்ற ஞாயிறு சிங்கைப் பதிவர்களும் நூலக தமிழ் வாசகர் வட்டமும் இணைந்து ஒரு நிகழ்ச்சி நடந்தது, பதிவர் உலகம் பற்றி வாசகர் வட்டத்துடன் உரையாடினோம். பயனான சந்திப்பாக அமைந்தது. இவ்வளவு வசதி செய்தி தந்தாலும் நண்பர்கள் சொன்னது, 'நமக்கெல்லாம் பூங்காங்களில் அமர்ந்து இயற்கை காற்றுடன், கொஞ்சம் பொகையைப் போட்டு சந்திப்பு நடந்தால் தான் மனநிறைவாக இருக்கு'. ஆனால் இப்போதெல்லாம் பூங்காக்களில், பொது இடங்களில், புகைக்கு பகைன்னு அறிவிச்சிட்டாங்க. பூங்காவை விட்டு கொஞ்சம் தள்ளிப் போகனும். எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு கஷ்டம் எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளவு கஷ்டம்.

கஷ்டம் சாமி : கந்தசாமி பற்றி தனி விமர்சனப் பதிவு போடலாம் என்று நினைத்தேன். பதிவர்கள் டெரர் ஆகி, கொல வெறி ஆகி துறத்தினால் என்ன செய்வது, கைப்பேசி எண்ணையும் பொதுவில் வைத்தாகிவிட்டது, கந்தசாமி விமர்சனம் எழுதினால் எதிர்வினையாக கண்டிப்பாக நல்லிரவில் அழைத்து டார்சர் கொடுப்பாங்கன்னு தனிப்பதிவாகப் போடவில்லை. இருந்தாலும் நாலுவார்த்தை 10 வெள்ளி செலவு செய்ததற்காக எழுதியே ஆகனும், பதிவர் கடமைன்னு ஒண்ணு இருக்கே.

இடைவேளையில் எழுந்து வந்திருந்தால் ஒரு படம் பார்த்த உணர்வு கிடைத்து இருக்கலாம், 3:15 மணி நேரம் இழுவை, போதைப் பொருள், கள்ளச் சந்தை, மெக்சிகோ, கருப்புப் பணம், ஏழைகள், ப்ளாட்பார வாசிகள், (கவர்ச்சி காந்தமாக விக்ரமுடன் ஓடிவந்து அடிக்கடி ஒட்டிக் கொள்ளும்) ஷ்ரேயா, க(வ)டிவேலு (சோக்கெல்லாம் நல்லா இல்லிங்க) , ஏற்கனவே ஜெண்டில் மேன், குரு படங்களில் சொல்லப்படுவது போல் இல்லாதவங்களுக்கு இருக்கிறவர்களிடம் இருந்து அள்ளிக் கொடுக்கும் கதையாம். சுசி.கனேசன் விரும்புகிறேன், திருட்டுப் பயலே படம் செய்திருந்தார், திருட்டு பயலே அட்டகாசமாக இருந்தது, ஷங்கர் அவதாரமெடுக்க முயற்சித்து தயாரிப்பாளர் காசில் மஞ்சள் குளித்து இருக்கிறார்.....பாவம் விக்ரம்.... நல்ல நடிகர்....அடுத்து நல்லப்படம் கொடுக்க வேண்டும். கவர்ச்சிக்கு வாரி இறைத்த காசை கதைக்கும், திரைக்கதைக்கும் இறைத்திருக்கலாம்........ரொம்ப இழுழுழுழுழுழுழுழுழுழுவை. படம் முழுவதும் ஏழைகள் ஏழைகள் என்று ஏழைகள் நலன் பேசுவதால் படம் பார்க்கும் பெரும்பாண்மை நடுத்தர வர்க்கமே முகம் சுளிக்கிறது. ஏழைகள் பற்றிய படமெல்லாம் எம்ஜிஆர் காலத்துக்கு பிறகு எடுபடுவதில்லை, வெற்றிப்படங்கள் அனைத்துமே நடுத்தர மக்களை சுற்றி நடப்பதாகக் காட்டப்படும் கதைகள் தான் என்பதை இயக்குனர்கள் புரிந்து கொள்ளாமல் போவது வியப்பு.

புரிந்து கொள்ளாத இந்தி மொழி வெறியர் : நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி கற்பிக்கப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
பிற மாநில மொழிகளையும் கற்றுக் கொள்வதன் மூலம்தான் அவர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று வெற்றிகரமாகப் பணியாற்ற முடியும்.

முக்கியமாக தேசிய மொழியான இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

வட மாநிலங்களுக்கு வரும் பிற மாநில மாணவர்களால் சரளமாக இந்தி பேச முடிவதில்லை. ஆனால் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறார்கள். எனவே நமது நாட்டுக்குள் முக்கியத் தொடர்பு மொழியாக இருக்கும் இந்தியை அனைத்து மாணவர்களும் அறிந்திருப்பது அவசியம்.


- ஏற்கனவே இந்தி நுழைந்ததால், ஆரம்பப் பள்ளிகளில் பலர் தாய்மொழிக் கல்வியை புறக்கணிக்கத் தொடங்கி அண்டை மாநிலங்களில் தாய்மொழி வழிக்கல்வி பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது, வருங்காலத்தில் தாய் மொழியை சிறப்பு பாடமாகத்தான் எடுத்து படிக்க வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டு இருக்கிறது, இந்த லட்சணத்தில் கபில் சிபில் போன்ற இந்தி வெறியர்கள் இந்தியாவை இந்தி மயமாக்கத் துடிக்கிறார்கள். பாம்பே மிட்டாய் விற்பவனுக்கு இந்தி தெரிகிறது கடைசி வரையில் மிட்டாய் தான் விற்கிறான் என்று நண்பர் முத்து தமிழினி குறிப்பிட்டது தான் நினைவு வருகிறது, தமிழகத்தில் தனித் தமிழ் இயக்கம் ஓரளவு வெற்றிபெற்றது போலவே முழுவதும் இந்தியமாக்கிவிட்டால் பிறகு அதிலிருந்து பிற மொழிச் சொற்களை களைந்துவிட்டு சமஸ்கிரத மயமாக்கலாம் என்கிற ஒரு திட்டமாகத்தான் எனக்கு இவை படுகிறது. மாநில மொழி ஆர்வளர்கள் விழித்துக் கொண்டு அம்மணமாகாமல் தப்பிக் கொள்ள வேண்டும். இந்தியாவில் 200 ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்த ஆங்கிலம் அந்நிய மொழி என்றால் அதற்கு முன்பு 300 ஆண்டுகளில் இஸ்லாமிய அரசர்களால் கொண்டுவரப்பட்ட உருது மொழியுடன் சமஸ்கிரதம் சம அளவில் கலந்து ஏற்பட்ட இந்தியும் கூட அந்நிய மொழிதான். இது பற்றிய தகவல் இங்கே.

31 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

ஆஹா! (இலவச)வடை போச்சே

Cable Sankar சொன்னது…

உயிர் இயக்குனர் சாமி இயக்கியது .. சுசி கணேசன் இல்லை கோவிண்ணே..

Cable Sankar சொன்னது…

சுசி கணேசன் இயக்கியது, விரும்புகிறேன், 5ஸ்டார், திருட்டு பயலே..

துளசி கோபால் சொன்னது…

வடை...அதுவும் இலவசமா?????

ஐயோ போச்சே......

ஏழைகள் ஏழைகள்ன்னு திரையிலே சொல்லி என்ன பயன்?

ஏழைகள் வந்து பார்க்கும் அளவுக்கா டிக்கெட் விலை இருக்கு????

கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

/இலவச வடை : அரசு செலவில் சந்திப்பு/

நம்ம ஊரில் இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால், வேலையில்லாமல் இருக்கிற கவிஞர் வாலி கவியரங்கங்களில், அல்லது கிடைக்கிற எல்லா அரங்கங்களிலும், கலைஞருக்கும், வாரிசுகளுக்கும் துதி பாடுவதாகத் தான் இருக்கும்!

இலவசங்களில் தம்மை இழந்துபோயிருக்கும் தமிழர்களுக்கு இன்னொரு சோதனையா? தாங்காது சாமி!

மங்களூர் சிவா சொன்னது…

nice!

வால்பையன் சொன்னது…

நல்ல கலவை!
இந்தவாரம் என் பக்கமும் மசாலா குறைவாம்!

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...
ஆஹா! (இலவச)வடை போச்சே
//

நீ ஏன் அடிக்கடி எஸ்கேப் ஆகிடுறே. ஜாமால் எங்கேன்னு எல்லோரும் தேடுறாங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//Cable Sankar said...
உயிர் இயக்குனர் சாமி இயக்கியது .. சுசி கணேசன் இல்லை கோவிண்ணே..
//

திருத்திவிட்டே, நன்றி சங்கர் !

//Cable Sankar said...
சுசி கணேசன் இயக்கியது, விரும்புகிறேன், 5ஸ்டார், திருட்டு பயலே..
//
தமிழ் விக்கிப்பீடியாவில் இந்த தகவல் இருக்கிறது. சரி பார்த்தேன். மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
வடை...அதுவும் இலவசமா?????

ஐயோ போச்சே......

ஏழைகள் ஏழைகள்ன்னு திரையிலே சொல்லி என்ன பயன்?

ஏழைகள் வந்து பார்க்கும் அளவுக்கா டிக்கெட் விலை இருக்கு????

11:18 AM, August 26, 2009
//

ஏழைகள் பெயரைச் சொல்லிதான் திரையுலகில் எள்ளுருண்டை முதல்...ஏரோப்பிளேன் வரை காட்டுகிறார்கள். பழைய பார்முலா. இன்னும் தொடர்வதால் தோல்விப்படங்கள் வருகிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணமூர்த்தி said...

நம்ம ஊரில் இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால், வேலையில்லாமல் இருக்கிற கவிஞர் வாலி கவியரங்கங்களில், அல்லது கிடைக்கிற எல்லா அரங்கங்களிலும், கலைஞருக்கும், வாரிசுகளுக்கும் துதி பாடுவதாகத் தான் இருக்கும்!//

பிழைப்பு வாதம், அண்டிப்பிழைப்பு வாதம் பற்றி கேள்விபட்டது இல்லையா நீங்கள். வாலி எந்த டைப்பென்று தெரியாது, இருந்தாலும் எனக்கு விருப்பமான கவிஞர்களில் வாலி முதன்மையானவர்.

//இலவசங்களில் தம்மை இழந்துபோயிருக்கும் தமிழர்களுக்கு இன்னொரு சோதனையா? தாங்காது சாமி!
//
அப்படி ஒரே அடியாக நிராகரிக்க முடியாது, காமராஜரின் மதிய உணவுத் திட்டம் இல்லை என்றால் ஏழைகள் பள்ளிப்பக்கமே எட்டிக் கூட பார்த்திருக்க மாட்டார்கள், இலவசத் திட்டங்கள் அரசியல்வாதிகளுக்கு ஓட்டுக்காக தற்போது பயன்படுவதை மறுப்பதற்கில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

/மங்களூர் சிவா said...
nice!
//

நன்றி சிவா !

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
நல்ல கலவை!
இந்தவாரம் என் பக்கமும் மசாலா குறைவாம்!

1:04 PM, August 26, 2009
//

சரக்கு நல்லா இருந்தாலும் மசலா சைட் டிஸ் தேவைபடும்னு உங்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கு.

’டொன்’ லீ சொன்னது…

// நட்புடன் ஜமால் said...
ஆஹா! (இலவச)வடை போச்சே

//

அடடா ரீ போச்சே...

துபாய் ராஜா சொன்னது…

வழக்கம்போல் கலவை கலக்கல்.

அறிவிலி சொன்னது…

//நட்புடன் ஜமால்
ஆஹா! (இலவச)வடை போச்சே//

ரிப்பீட்டேய்..........

Kamal சொன்னது…

அமெரிக்கால பிச்சைக்காரன் கூட ஆங்கிலம் தான் பேசுவான்....ஆனா அவன் பிச்சை எடுத்துகிட்டு தான் இருக்கான்...அப்புறம் எதுக்கு ஆங்கிலம் கத்துக்கணும் ன்னு கேப்பீங்க போல....
நல்லா தமிழ் மட்டும் கத்துகிட்டு வேற எங்கயும் போகாம குண்டுச்சட்டியில குதுர ஓட்ட வேண்டிதான்....தமழ் காகவும் தமிழக மக்களுக்காக போராடிய மஞ்சள் துண்டின் பேரன் ஹிந்தி தெரிந்தவர் :)))) வாழ்க தமிழ் :)))))))))

T.V.Radhakrishnan சொன்னது…

kalavai super

Karthi Blog சொன்னது…

ஹிந்தி படிப்பதால்,தமிழ் மொழி காணமல் போய்விடுமா என்ன ?

விஷ்ணு. சொன்னது…

//இருந்தாலும் நாலுவார்த்தை 10 வெள்ளி செலவு செய்ததற்காக எழுதியே ஆகனும், பதிவர் கடமைன்னு ஒண்ணு இருக்கே. //

இது தான் கோவி.சார் குசும்போ..

பீர் | Peer சொன்னது…

மதுரை மைந்தனை கடிவேலுவாக்கிய கோவியாரை வன்மையாக கண்டிக்கிறேன். ;)

பீர் | Peer சொன்னது…

ஹிந்தி அந்நிய மொழி என்றால் ஆங்கிலமும் அந்நிய மொழிதான். அதை மற்றும் ஏன் ஏற்றுக்கொண்டீர்கள்? ஆங்கிலம் தெரிந்திருக்காவிட்டால் உங்கள் கிராம எல்லையை நீங்கள் தாண்டியிருக்க முடியாது.

தமிழ் கற்றுக்கொள்ள சொல்வது தமிழ் பற்று. ஹிந்தி கற்றுக்கொள்ளாதே என்பது தமிழ் வெறி. அல்லது அதுவே தான் ஹிந்தி மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்பை காட்டுகிறது. அதுபோலவே ஆங்கிலத்தின் மீது தங்களுக்கிருக்கும் பாசத்தையும்.

ஹிந்தி தெரிந்திராத தமிழனாகிய நான் தமிழ் நாட்டிற்கு வெளியே, ஹிந்தி கற்றுக்கொள்ளும் வரை அனுபவித்த சிரமத்தை, இப்போது புதிதாக தமிழ் நாட்டிற்கு வெளியே வருபவர்கள் அனுபவிப்பதை பார்க்க முடிகிறது. அதனாலேயே அவர்கள் நடப்பு நிலையிலிருந்து மாற முடியாது தவிப்பதையும், ஹிந்தி கற்க முடியா சிலர் வேலையை விட்டு போய்விடுவதையும் பார்க்க முடிகிறது.

>ஹிந்திக்காரன், பம்பாய் மிட்டாய்< மூட்டை சுமக்கும் அரபிகள் அரபுநாட்டிலும், நம்மவர்கள் பாவிக்கும் கழிவறையை துப்புரவு செய்யும் ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்ட நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்ய... அவர்களுடைய தேடல் பம்பாய் மிட்டாயோடும், தான் சுமக்கும் மூட்டையோடும் முடிந்து விடுவது வருத்தமளிக்கிறது.

நமக்கு தெரிந்தவற்றோடு, புதிதாக ஒரு பொருளை தெரிந்து கொள்வதில் என்ன தவறு இருக்கப்போகிறது?

ஆங்கிலம் நம் மீது ஆதிக்கம் செலுத்திய அளவு, ஹிந்தி செலுத்தவில்லை என்பதே உண்மை. அந்நிய மொழியான ஆங்கிலத்தாலேயே அமைக்கப்பட்டிருக்கும் கணிணியை உங்களால் ஒதுக்கித்தள்ளிவிட முடியுமா?


ஒரு வேளை சிங்கையில் தமிழ் இரண்டாம் மொழியாக இருப்பதால், உங்களுக்கு மற்ற மொழிகளின் தேவை இருக்கவில்லை போலிருக்கிறது. :)

ஹிந்தி கற்றுக்கொள்வதால், தமிழின் தொன்மை மாறிவிடக்கூடாது என்று நீங்கள், கற்போருக்கு அறிவுரை சொல்வதே சிறந்ததாக இருக்கும்.

உங்கள் பழைய இடுகையில் இருந்து;

>உலக ஒற்றுமைக்கு ஆங்கிலம்< ஆங்கிலம் கற்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கப்போவதில்லை. அதற்கு ஆங்கிலத்தின் இலகுத்தன்மை காரணமாக இருக்கலாம். உலக ஒற்றுமைக்கு ஆங்கிலம், தேச ஒற்றுமைக்கு ஹிந்தி இருந்துவிட்டு போகட்டுமே.

>தெலுங்கை கற்றுக் கொண்டு தேசியம்< தென்னிந்திய மொழிகளான தெலுகையோ, தமிழையோ கற்றுக்கொள்ள அவர்களுக்கு இருக்கும் அறிவு தேடலை விட, நாம் தமிழர்களுக்கு இருக்கும் அறிவு தேடல் அதிகம் என்பதாகவும் கொள்ளலாம். :)

பிற மொழி ஆராய்சியின் பயனாக ஹிந்தி, உருது, சமஸ்கிருதம், அரபி கற்றுகொண்டீர்களா?

பீர் | Peer சொன்னது…

இவ்வளவு நீளம் என்று தெரிந்திருந்தால், எதிர் பதிவாகவே போட்டிருக்கலாம். :)

கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

காமராஜர் அறிவித்த இலவச மதிய உணவுத் திட்டத்திற்கும், இப்போது அறிவிக்கப் படும் கலர் டி வீ, பொங்கல் பொருட்கள்,முதலான இலவசங்களுக்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு.

இந்திப்பெயரை அழிப்பதற்காக, இந்தியை எதிர்த்து அப்புறம் ரயில் வராத நேரமாப் பாத்து தண்டவாளத்துல தலைய வச்சுப்படுத்துப் போராட்டம் நடத்துன தல'யோட ஒப்புதல் வாக்குமூலம்:

"பேரன் ஹிந்தி படிச்சதுனாலதான்...மத்தியில் ஆட்சியிலும் பங்கைக் கேட்டு வாங்க முடிஞ்சது"

மொழி என்பது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் ஊடகம் தான், அதுவே தடையாகி விடக் கூடாது!

கோவி.கண்ணன் சொன்னது…

//மொழி என்பது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் ஊடகம் தான், அதுவே தடையாகி விடக் கூடாது!//

மொழி தகவல் பரிமாற்றச் சாதனம் என்றால் சமஸ்கிரதம் மொழியை கோவிலினுள் வைத்து பாது காப்பது என்ன் ? வேற மொழிகளில் ஓதினால் கடவுள் புரிந்து கொள்ளாதா ? சமஸ்கிரதம் பேசும் கடவுள் தான் கடவுள், அரபி, ஹிப்ரூ மொழி பேசுவதெல்லாம் கடவுள் இல்லையா ?

பேசுவதற்கு மொழியா இல்லை ? சமஸ்கிரதம் போனால் போகட்டுமே என்று பொதுவில் சொல்லிப் பாருங்களேன், அப்பொழுது அது எந்தவகையான அடையாளங்களைக் காட்டுகிறது என்பதை விளங்கிக் கொள்வீர்கள்.

மொழி தகவல் பரிமாற்றத்திற்கானது என்ற ஒரு கருத்து என்றுமே செல்லுபடியானது இல்லை, தாய்மொழியின் (அது எந்த மொழியாக இருந்தாலும் சரி) தேவையை தமிழர்கள் தவிர வேறொருவர் இழிவாக பேசுவது கிடையாது.

மொழி தகவல் பரிமாற்றத்திற்கு என்று மட்டுமே என்று ஞானசம்பந்தர் நினைத்திருந்தால் அவர் பதிகங்கள் அனைத்தையும் அவர் அறிந்திருந்த வடமொழி வழியாகவே பாடி இருக்க முடியும்.

மொழி பண்பாட்டின் கூறு, இன அடையாளம். இவையெல்லாம் வேறொரு நாட்டில் என்னை மாதிரி குப்பை கொட்டுபவர்கள் உணர்ந்திருக்கிறோம்.

கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

கிருஷ்ணமூர்த்தியோட பின்னூட்டத்துக்குப் பதிலாகக் கோவிகண்ணன் கடிச்சது:

/மொழி தகவல் பரிமாற்றச் சாதனம் என்றால் சமஸ்கிரதம் மொழியை கோவிலினுள் வைத்து பாது காப்பது என்ன?/

இந்தக் கேள்விக்குப் பதில் தேட ஆழ்வார்கள் காலத்திலேயிருந்து ஆரம்பிக்கணும்!வைணவர்கள் தமிழுக்கு முதலிடம் கொடுத்து வளர்த்த கதையை ஆன்மீகச் செம்மல் கேயாரெஸ் இடமிருந்தோ,அல்லது இன்றைக்கும் பெருமாள் புறப்பாடு நடக்கும்போது, திவ்யப்ரபந்த கோஷ்டி பெருமாளுக்கு முன்னாள் நாலாயிரமும் பாடி வரும்போது, வேதம் நீங்க சொல்ற சமஸ்கிரதத்துல சொல்லிக் கொண்டு வருபவர்கள் பெருமாளுக்குப் பின் வருவதையும் பார்த்தோ தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் கேள்விப்பட்டு, அல்லது பார்த்து, அல்லது நினைத்தே கோபப்படுகிற நிறைய விஷயங்களை, வைணவ மரபு, நிதானமாக, உறுதியாக நின்று மாற்றி வந்திருக்கிறது.இறைவனை வழிபட மொழிகள் தேவையே இல்லை, இதயத்தின் மொழியே இறைவனது மொழி என்பதையும் வைணவர்கள் வாழ்வுநெறியாகக் காட்டியிருக்கிறார்கள்.

சமஸ்கிரதத்தை பொத்தி வச்சுப் பாதுகாப்பது கிடக்கட்டும்,எதன் மீதோ, எவர் மேலோ எதற்காகக் காரணமில்லாத வெறுப்பை பொத்திவச்சுப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

கோவிகண்ணன் அடுத்ததாச் சொன்னது:

/மொழி தகவல் பரிமாற்றத்திற்கானது என்ற ஒரு கருத்து என்றுமே செல்லுபடியானது இல்லை, தாய்மொழியின் (அது எந்த மொழியாக இருந்தாலும் சரி) தேவையை தமிழர்கள் தவிர வேறொருவர் இழிவாக பேசுவது கிடையாது./

உண்மையைத் தலைகீழாகப் பார்ப்பது என்பது இதுதான்! மொழி, எப்போதுமே, முதலும் கடைசியுமாகக் கூட, தகவலைப் பரிமாறிக் கொள்கிற சாதனம் தான்!

தாய்மொழியின் தேவையை, அதன் பெருமையை மறுப்பவர்கள் யார்?
"டமில் வால்க" என்று கூக்குரலிட்டுக் கொண்டிருப்பவர்களா, அல்லது,தாய்மொழிக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், புதிய விஷயங்களைக் கொண்டு வந்து செர்ப்பவர்களா?

தமிழனை மொழியின் பெயரால் எளிதில் கிளர்ந்தெழச் செய்து, முட்டாளாக்கிவிட முடியும் என்பது, கலிங்கத்துப் பரணியில் இருந்து, நேற்றைய நாட்களில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடுவாக,தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வந்திருக்கிறது!

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்கள் கேள்விப்பட்டு, அல்லது பார்த்து, அல்லது நினைத்தே கோபப்படுகிற நிறைய விஷயங்களை, வைணவ மரபு, நிதானமாக, உறுதியாக நின்று மாற்றி வந்திருக்கிறது//

கிருஷ்ண மூர்த்தி சார்,

வைணவ மரபு என்கிற பொதுப்படுத்துதல் கூட தவறுதான். தமிழ் மொழியில் திவ்யபிரபந்தம் பாடுபவர்கள் தென் கலை வைணவம் சார்ந்தவர் மட்டுமே, வடகலைகாரர்களுக்கு வடக்கு வேதம் தான் அவர்களின் முடக்கு வாதத்துக்கு மருந்து என்று தமிழை தள்ளியே வைத்துள்ளார்கள், அதே செயலை சிதம்பரம் போன்ற கோவில்களில் சைவ பார்பனர்களும் (தீஷ்சிதர்கள்) செய்து வருகிறார்கள்.

வைணவம் போற்றுகிறது என்று பொதுப்படுத்தும் முன் வைணவம் என்பது பொதுவான பெயர் மட்டுமே, வைணவர்கள் அனைவரும் போற்றவில்லை என்ற பொருளில் அல்ல என்பதை நான் அறிவேன்.

//சமஸ்கிரதத்தை பொத்தி வச்சுப் பாதுகாப்பது கிடக்கட்டும்,எதன் மீதோ, எவர் மேலோ எதற்காகக் காரணமில்லாத வெறுப்பை பொத்திவச்சுப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள்?//

என்ன பண்ணுவது ஐயா, தமிழை நீச பாசை என்று கூறுவோர்களை லோக குருக்களாக அடையாளப்படுத்துபர்களும் இருக்கிறார்கள், அவர்களுக்கு தமிழர்களான அடிவருடிகளும் உண்டு, அவர்களெல்லாம் பேசாதிருக்கும் போது அடியேன் அவ்வப்போது தமிழுக்கு எதிராக பேசுபவர்களை நினைத்து எழுதுகிறேன்.

என்னை மீண்டும் கேட்டால், வடமொழிக்கு ஆதரவாக பேசும் தமிழர் ஒருவர், தமிழ் நீசபாசை என்றவன் தமிழனே அல்ல, அவனுக்கு தமிழ் நாட்டிலும் இடம் இல்லை என்று சொல்லிவிட்டு வடமொழிக்கு ஆதரவு கரம் நீட்டினால் நானும் அவர்களுக்கு பாராட்டுகள் சொல்லுவேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழனை மொழியின் பெயரால் எளிதில் கிளர்ந்தெழச் செய்து, முட்டாளாக்கிவிட முடியும் என்பது, கலிங்கத்துப் பரணியில் இருந்து, நேற்றைய நாட்களில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடுவாக,தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வந்திருக்கிறது!

11:34 AM, August 28, 2009//

அரசியல்வாதிகளால் மொழியை வைத்து எளிதில் மக்களை உணர்ச்சி வசப்பட வைக்க முடியும்,

கிபி 6 ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் என்ற பெயரில் ஞானசம்பந்தர் தலைமையில் தமிழை சமணத் தமிழர்கள் அழிக்கிறார்கள் என்ற குற்றச் சாட்டு வைத்து, அனல் வாதம், புனல்வாதமெல்லாம் செய்து அவர்களில் (தமிழ்ச் சமணர்களை) 80,000 பேரை கழுவில் ஏற்றிக் கொன்றதாக வரலாறு, மதுரையில் இருக்கும் தாங்கள் இது பற்றி அறியாமல் இருந்திருக்க முடியாது.

நான் எனது தமிழ் சார்ப்பு நிலைக்கும், தமிழ் பற்றுக்கும் ஒரு அரசியல்வாதியின் பேச்சை தூண்டுகோலாக வைத்துக் கொள்வது கிடையாது.

கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

கோவி கண்ணன் பதில் உரையைச் சொன்னது:
/வடகலைகாரர்களுக்கு வடக்கு வேதம் தான் அவர்களின் முடக்கு வாதத்துக்கு மருந்து என்று தமிழை தள்ளியே வைத்துள்ளார்கள்/

இதுவே ஒரு தவறான கற்பிதம் தான்!

வைணவத்தை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டுபேசும் போது, வெறுப்பை வளர்ப்பது வீண் வேலை, தமிழைத் தழைத்தோங்கச் செய்யப் பிறர் சொல்லும் சாத்திரமும், தத்துவமுமே கூட தமிழில் இருந்தால் தான் முடியும் என்று காரியத்தில் காட்டியதற்காக!

இங்கே சமணமும் கூடத் தமிழுக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறது என்பதை மரபை மறக்காத, மரபைப் பேணவேண்டும் என்பதில் நம்பிக்கையுள்ள பலபேருக்குத் தெரியும்!

சைவம் வெள்ளாளனின் குரலாக எழுந்து, சமணத்தை ஒடுக்கியபோது சில கோளாறுகளும் உள்ளே நுழைந்தன என்பதை வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள்.

லோககுரு என்று சொல்லிக் கொள்பவர்கள் அத்தனை பேரையும் இந்த பூ லோகம் குருவாக ஏற்றுக்கொண்டதில்லை! அதனால்தான் இன்னமும் அது பிழைத்திருக்கிறது:-))

http://consenttobenothing.blogspot.com/2009/08/blog-post_21.html
இந்தப் பதிவில் ஏற்கெனெவே சொன்னது தான் இது!

கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

கழுவேற்றியதாகச் சைவம் தம்பட்டம் அடித்துக் கொள்வது 8000 தான்! 80000 அல்ல! இப்படி ஈரைப்பேனாக்கி பேனைப் பெருமாளாக்குகிற வேலையில்,மிகைப்படுத்தி, உணர்ச்சி வசப்பட்டு, திசை மாறுவதே நம்மில் பெரும்பாலோருக்கு வாடிக்கையாகவும், பிரியமான பொழுதுபோக்காகவும் இருக்கிறது!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்