பின்பற்றுபவர்கள்

9 ஆகஸ்ட், 2009

இது எங்க ஊர் அரிசி உப்புமா !

பேச்சிலர் சமையலில் எப்போதும் சிறப்பிடம் பெற்றிருப்பதில் உப்புமாவுக்கே முதல் இடம், சென்னையில் பேச்சிலராக இருந்த போது அடிக்கடி உப்புமா செய்து சாப்பிட்டத்தன் விளைவாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு உப்புமா என்றாலே உவ்வே...ஆக இருந்தது. இப்பவும் கூட வீட்டில் நீண்ட நாள் தங்கும் திட்டத்துடன் வரும் உறவினர்களை சத்தமில்லாது / சண்டை
இல்லாது அனுப்ப உப்புமா செய்து போடுவது எழுதப்படாத உத்தி :)

பெங்களூரில் காரபாத் என்ற பெயரில் கிடைக்கும் மஞ்சள் நிற உப்புமா
தேங்காய் சட்டினியுடன் உண்ட நினைவுகளிலும் என்றும் அதன் சுவையும் நினைவில் நிற்கும்.  இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என சுழற்சியில் தின்றுவிட்டு அதன் திகட்டல் காரணமாக மாறுபட்ட உணவாக ஒரு காலை / இரவு சிற்றுணவு வகையில் என்றாவது ஒரு நாள் ரவா உப்புமா அல்லது அரிசி உப்புமா செய்து சுவைப்பதுவழக்கம். கன்னடத்தில் உப்புமாவை உப்பிட்டு என்பார்கள், உவர்ப்பு என்கிற சுவைச் சொல்லின் மறுவலே உப்பு, திராவிட மொழிகள் அனைத்திலும் 'உப்பு' என்ற ஒற்றைச் சொல்லே உப்பைக் குறிக்கும் சொல்லாகும். உப்புமா என்ற சொல்வழக்கின்பொருள், மூலம் பற்றி சரியாகத் தெரியவில்லை. உப்பு சுவையை முதன்மையாகக் கொண்டு செய்யப்படுவதால் இந்த உணவுக்கு உப்புமா என்று வந்திருக்கலாம் என்பதைத் தவிர்த்து மற்றேதும் முடிவு செய்ய முடியவில்லை. உப்புமாவில் சேர்க்கப்படும் பொருள்களுக்கு ஏற்ற அதன் பெயர்களும் மாறுகிறது, காய்கறிகள் சேர்த்து செய்தால் அது கிச்சடி என்றும் சொல்லப்படுகிறது


அரிசி உப்புமா செய்வது எப்படி ?

தேவையான பொருள்கள்
* பச்சை அரிசி 1/2 லிட்டர்
* பெரிய வெங்காயம் ஒன்று

* தக்காளி பெரிதாக ஒன்று

* இஞ்சி சிறிதளவு

* இரண்டு பச்சை மிளகாய்
* கறிவேப்பில்லை சிறிதளவு

* வெண்ணை அல்லது சூரியகாந்தி எண்ணை சிறிதளவு

* கடுகு மற்றும் பெரும்சீரகம் சிறிதளவு

* இரண்டு துண்டு பட்டை அல்லது கிராம்பு மற்றும் பிரிஞ்சி இலை இரண்டு

* தோல் நீக்கிய உருளை கிழங்கு ஒன்று

* சிறிய அளவு கேரட் ஒன்று

* இரண்டரை லிட்டர் தண்ணீர்

* தேவையான அளவு உப்பு

* தேவையானல் கடலைப் பருப்பு சிறிதளவு / அல்லது ஊரவைத்த அல்லது பச்சை பட்டாணி

* நிறம் தேவை என்றால் தேவையான அளவு மஞ்சள் பொடி

பச்சரிசியை5 நிமிடம் வாணலியில் இட்டு நன்றாக வறுத்து எடுத்து தனியாக வைக்க வேண்டும், வெங்காயத்தையும் பொடிப் பொடியாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும், தக்காளியை சிறு சிறு துண்டங்களாக வெட்டிக் கொண்டு, இஞ்சியைபொடிதாக வெட்டிக் கொள்ள வேண்டும். உருளை கிழங்கையும், கேரட்டையும் எடுத்து உண்பதற்கு ஏற்ற சிறிய அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.

வாணலி சூடாகியதும் எண்ணையை ஊற்றி நன்றாக சூடானதும் கடுகு,பெருஞ்சீரகம் போட்டு வெடித்தவுடன், கடலைப்பருப்பு, பட்டை மற்றும் பிரிஞ்சிஇலைகளை சேர்த்து வதக்கிவிட்டு கருகும் முன் வெட்டி வைத்த இஞ்சி பச்சை மிளகாயை போட்டு சிறிது நேரம் வதக்கவும். பிறகு கரிவேப்பில்லையுடன், வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கிவிட்டு, தக்காளி மற்றும் உருளைகிழங்கு, கேரட் துண்டுகளைப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். அதன் பிறகு இரண்டரை லிட்டர் தண்ணீரைச் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். அதன் பிறகு வறுத்து வைத்திருந்த பச்சை அரிசியை அதில் கொட்டி கிளறிவிட்டு, உப்பைச் சேர்த்து, 8 - 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். அதன் பிறகு திறந்து நன்றாக கிளறி, தண்ணீர் வற்றி இருந்தால் 1/4 லிட்டர் தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டுவிட்டு, மிதமான வெப்பத்தில் அடுத்து 5 நிமிடம் வைத்து விட்டு இடையிடையே கிளறிவிட வேண்டும், அரிசி நன்றாக வெந்து தனித்தனியாக பிரிந்து இருக்கும் போது இரண்டு நிமிடம் அப்படியே மூடி வைத்துவிட்டு அதன் பிறகு எடுத்து பரிமாறலாம்.

மேலே சொன்ன பொருள்களில் அளவு மூவருக்கு தேவையான அளவாகும். இந்த அரிசி உப்புமாவுடன், தக்காளிச் சட்டினி அல்லது (கார) அப்பளம் சேர்த்து உண்ண திகட்டமலும் சுவை கூடுதலாகவும் இருக்கும்.







மின் அஞ்சல் வழியாக போட்ட பதிவு, பக்கம் ஒழுங்கில்லாமல் இருப்பதற்கு அதுவே காரணம்.

45 கருத்துகள்:

சி தயாளன் சொன்னது…

:-) கவனம் நாளைக்கே நம்ம சங்கத்து ஆட்கள் வீட்டுக்கு படையெடுத்திட போறாங்க..:-))

நட்புடன் ஜமால் சொன்னது…

சகலகலா வல்லவர் அண்ணன்

கோவி.கண்ணன் வாழ்க.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

உப்புமா...

மமமமமமமமமம ?

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

உப்புமா செய்வது பற்றி ஒரு இடுகையா - காலம் அதிகம் இருக்கிறதா - எப்படித் தள்ளுவதெனத் தெரிய வில்லையா = இதில் படங்கள் வேறு - கத்தியைப் பார்த்தால் பயமாய் இருக்கிறது.

அரிசிக்கடை - மார்க்கெட் - காஸ் அடுப்பு ( அவனா அங்கே ) - பத்த வைக்கறது இதெல்லாம் போட்டோ பிடிக்கலையா


ம்ம்ம் நல்லாருங்க

கோவி.கண்ணன் சொன்னது…

//cheena (சீனா) said...

அன்பின் கோவி

உப்புமா செய்வது பற்றி ஒரு இடுகையா - காலம் அதிகம் இருக்கிறதா - எப்படித் தள்ளுவதெனத் தெரிய வில்லையா = இதில் படங்கள் வேறு - கத்தியைப் பார்த்தால் பயமாய் இருக்கிறது.

அரிசிக்கடை - மார்க்கெட் - காஸ் அடுப்பு ( அவனா அங்கே ) - பத்த வைக்கறது இதெல்லாம் போட்டோ பிடிக்கலையா


ம்ம்ம் நல்லாருங்க//

காலம் காலமாக இட்லி இருந்தாலும் அம்மா செய்து தருவதில் கூடுதல் சுவை இருக்கும், அதெல்லாம் சும்மாவா ? அதே போல் தான், நம்ம பக்குவம் என்று ஒன்று உண்டு.
:))

கோவி.கண்ணன் சொன்னது…

// ’டொன்’ லீ said...

:-) கவனம் நாளைக்கே நம்ம சங்கத்து ஆட்கள் வீட்டுக்கு படையெடுத்திட போறாங்க..:-))//

உப்புமா சாப்பிட்டால் அப்பறம் திரும்ப வரவே மாட்டாங்க 'டொன்' லி

கோவி.கண்ணன் சொன்னது…

// நட்புடன் ஜமால் said...

சகலகலா வல்லவர் அண்ணன்

கோவி.கண்ணன் வாழ்க.//

நன்றி தம்பி !

கோவி.கண்ணன் சொன்னது…

// ஸ்வாமி ஓம்கார் said...

உப்புமா...

மமமமமமமமமம ?//

உப்புமாவுக்கு எதும் சகஸர்நாமம் இல்லையா ? எந்த கோவிலிலும் படைப்பதற்கு யாருமே உப்புமா செய்வதில்லையே ஏன் ஏன் ஏன் :)

சென்ஷி சொன்னது…

ஆஹா.. சமகால இலக்கிய சமையல் குறிப்பு சூப்பர் :)

துபாய் ராஜா சொன்னது…

அண்ணாச்சி,'அரிசி உப்புமா'ன்னா அரிசியை மாவா இல்லாம பரபரன்னு திரிச்சி அப்புறம் உப்புமா மாதிரியே செய்யணும்.ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்.நீங்க செய்திருப்பது வெஜிடபுள் பிரியாணி.:))

(நான் சொல்றது உண்மையா இல்லையான்னு வீட்டுக்கு போன் பண்ணி கேட்டுபாருங்க)

எப்படியோ படங்கள் நல்லாருக்கு.

துளசி கோபால் சொன்னது…

சரியான உப்புமாப் பதிவா இருக்கேப்பா.....

இது கிச்சடி என்று சொல்லும் உணவு வகை.

உப்புமாவுக்குத் தேவை ரவை.

இதே வறுத்த அரிசியை ரவையா உடைச்சுச் செஞ்சால்தான்..... இது உப்புமா.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...

சரியான உப்புமாப் பதிவா இருக்கேப்பா.....

இது கிச்சடி என்று சொல்லும் உணவு வகை.

உப்புமாவுக்குத் தேவை ரவை.

இதே வறுத்த அரிசியை ரவையா உடைச்சுச் செஞ்சால்தான்..... இது உப்புமா.//

துளசி அம்மா,
எங்க ஊரில் அரிசி உப்புமான்னு இதைத்தான் சொல்லுவாங்க. இப்ப பெயர் மாறிவிட்டதா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//துபாய் ராஜா said...

அண்ணாச்சி,'அரிசி உப்புமா'ன்னா அரிசியை மாவா இல்லாம பரபரன்னு திரிச்சி அப்புறம் உப்புமா மாதிரியே செய்யணும்.ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்.நீங்க செய்திருப்பது வெஜிடபுள் பிரியாணி.:))

//
பிரியாணியில் இஞ்சி பூண்டு விழுது சேர்ப்பாங்க. இது பிரியாணி இல்லை உப்புமா ...... உப்புமா.......உப்புமா !

:)

// (நான் சொல்றது உண்மையா இல்லையான்னு வீட்டுக்கு போன் பண்ணி கேட்டுபாருங்க)

எப்படியோ படங்கள் நல்லாருக்கு.//

யாருக்கு போன் பண்ணிக் கேட்கனும், வீட்டுக்கார அம்மா வீட்டில் தான் கூடவே இருக்காங்க !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//சென்ஷி said...

ஆஹா.. சமகால இலக்கிய சமையல் குறிப்பு சூப்பர் :)//

:) சமகால இலக்கிய பேச்சிலர் சமையல் !

துளசி கோபால் சொன்னது…

தலைப்பைத்தான் மாத்தியாகணும்.

'இது எங்க ஊர் அரிசி உப்புமா'

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...

தலைப்பைத்தான் மாத்தியாகணும்.

'இது எங்க ஊர் அரிசி உப்புமா'//

பலமான கண்டனங்கள் எழுந்ததால் நீங்கள் சொன்னது போன்று தலைப்பை மாற்றிவிட்டேன் !

:)

துளசி கோபால் சொன்னது…

ஆஹா.............

பீர் | Peer சொன்னது…

கத்தி பெருசா இருந்தாலும், கூரா இல்லை. (உள்குத்து இல்லை)
வாணலி பழசாச்சு, மாத்துங்க.
இந்த உப்புமா சாப்டா, வயிறு உப்புமா?
அடுத்த மெனு என்ன? சுடுதண்ணியா?

கோவி.கண்ணன் சொன்னது…

// பீர் | Peer said...

கத்தி பெருசா இருந்தாலும், கூரா இல்லை. (உள்குத்து இல்லை)//

உள்குத்து ஓகே, கத்தி குத்து தான் நாட் ஓகே !

:)

// வாணலி பழசாச்சு, மாத்துங்க.//

எங்க வீட்டில் இருப்பதிலேயே இது தான் புதுசு ! :) சமையல் செய்தால் வாணலி கருப்படையத்தான் செய்யும். இரண்டு நாள் தொடர்ந்து தேய்தால் பளபளப்பாகும்.:)


// இந்த உப்புமா சாப்டா, வயிறு உப்புமா?
அடுத்த மெனு என்ன? சுடுதண்ணியா?//

அடுத்த மெனு இளநீர் தயாரிப்பது எப்படி ! எப்பூடி ?

சிநேகிதன் அக்பர் சொன்னது…

உப்புமா சுவை மட்டுமல்ல பதிவின் சுவையும் மாறியிருக்கிறது.

ஜோ/Joe சொன்னது…

//இந்த உப்புமா சாப்டா, வயிறு உப்புமா?//

:))))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//இது எங்க ஊர் அரிசி உப்புமா !"//

சிங்கை உப்புமாவா? நாகை உப்புமாவா?

ஆயில்யன் சொன்னது…

/கோவி.கண்ணன்


//துபாய் ராஜா said...

அண்ணாச்சி,'அரிசி உப்புமா'ன்னா அரிசியை மாவா இல்லாம பரபரன்னு திரிச்சி அப்புறம் உப்புமா மாதிரியே செய்யணும்.ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்.நீங்க செய்திருப்பது வெஜிடபுள் பிரியாணி.:))

//
பிரியாணியில் இஞ்சி பூண்டு விழுது சேர்ப்பாங்க. இது பிரியாணி இல்லை உப்புமா ...... உப்புமா.......உப்புமா !

:)//

ராஜா அண்ணாச்சி சொல்றதுதான் கரீக்ட்டு :))

கொஞ்சம் டிரையா இருக்கும் நீங்க செஞ்சுருக்கிறது உப்புமா இல்ல இல்ல இல்லவே இல்ல (பிரிஞ்சி இலை பட்டை - மூலப்பொருட்கள் கரீக்ட்டு உப்புமா தான் டப்பு) :))))

துபாய் ராஜா சொன்னது…

// துபாய் ராஜா said...
அண்ணாச்சி,'அரிசி உப்புமா'ன்னா அரிசியை மாவா இல்லாம பரபரன்னு திரிச்சி அப்புறம் உப்புமா மாதிரியே செய்யணும்நீங்க செய்திருப்பது வெஜிடபுள் பிரியாணி.//

//துளசி கோபால் said...
இது கிச்சடி என்று சொல்லும் உணவு வகை.
இதே வறுத்த அரிசியை ரவையா உடைச்சுச் செஞ்சால்தான்..... இது உப்புமா.//

//ஆயில்யன் said...
ராஜா அண்ணாச்சி சொல்றதுதான் கரீக்ட்டு :))

கொஞ்சம் டிரையா இருக்கும் நீங்க செஞ்சுருக்கிறது உப்புமா இல்ல இல்ல இல்லவே இல்ல (பிரிஞ்சி இலை பட்டை - மூலப்பொருட்கள் கரீக்ட்டு உப்புமா தான் தப்பு) :))))

ஒத்த கருத்திட்ட துளசி அம்மாவுக்கும், ஆயில்யன் அண்ணாச்சிக்கும் நன்றி.

// கோவி.கண்ணன் said..
பிரியாணியில் இஞ்சி பூண்டு விழுது சேர்ப்பாங்க. இது பிரியாணி இல்லை /

உங்க 4வது,5வது படங்களில் இஞ்சி மற்றும் மசாலா பொருட்கள் உள்ளன. இது பிரியாணிதான்.பிரியாணிதான்.

இது எங்க ஊர் அரிசி உப்புமான்னு தலைப்பை மாத்திட்டதால இத்தோட நிறுத்திக்கிறோம். :))

//யாருக்கு போன் பண்ணிக் கேட்கனும், வீட்டுக்கார அம்மா வீட்டில் தான் கூடவே இருக்காங்க !
:)//

ரொம்ப சந்தோசம். நீங்கள் அலுவலகத்தில் இருந்தால் வீட்டுக்கு போன் பண்ணி கேளுங்கள் என்ற அர்த்தத்தில் சொன்னேன். :))

suvanappiriyan சொன்னது…

:-)))))))

ஆ.ஞானசேகரன் சொன்னது…

தக்காளி சாதம் போல இருக்கு... ஆனா நீங்கள் சொல்லும் உங்கள் ஊர் அரிசி உப்புமா... எப்படியோ ஒரு பெயர் இருந்தா சரி.... ஆத்தடி பச்சா கொழுக்கட்டை போல இதுவும் ஒன்றா?

அப்பாவி முரு சொன்னது…

அண்ணே வீட்டுல இருக்கீங்களா?

உடனே பார்க்கணும் போல இருக்கு,

உடனே கிளம்பி உங்க வீட்டுக்கு வர்றேன்!!!

மதிய சாப்பாடு 12 மணிக்குத் தானே....

ந. சசிகுமார் சொன்னது…

இப்பவும் கூட வீட்டில் நீண்ட நாள் தங்கும் திட்டத்துடன் வரும் உறவினர்களை சத்தமில்லாது / சண்டை
இல்லாது அனுப்ப உப்புமா செய்து போடுவது எழுதப்படாத உத்தி :)
////

naanga vanthaalum appadithaanaa

அறிவிலி சொன்னது…

கோவியாரே

ஈ அடிக்கற இடத்துல இரும்புக்கு என்ன வேலை? :)))))

நீங்க செஞ்ச பதார்த்தத்துக்கு தக்காளி ஃப்ரைடு ரைஸ் அப்படின்னு பேரு வைக்கலாமா?

நெஜமான அரிசி உப்புமாவுக்கு

http://mykitchenpitch.wordpress.com/2007/02/07/arisi-uppuma-1/

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8426&mode=threaded&pid=122228

http://samaiyalkalai.blogspot.com/2007/11/blog-post_9802.html

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்பர் said...

உப்புமா சுவை மட்டுமல்ல பதிவின் சுவையும் மாறியிருக்கிறது.//

நீங்க ஒரு ஆளாவது கோவியார் பாவம்னு பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ/Joe said...

//இந்த உப்புமா சாப்டா, வயிறு உப்புமா?//

:))))))))))))//

உப்புமாவில் புலிப்பால் கலந்தால் உப்புமோ ! தெரியலை !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// //இந்த உப்புமா சாப்டா, வயிறு உப்புமா?//

:))))))))))))

1:38 AM, August 10, 2009
Delete
Blogger T.V.Radhakrishnan said...

//இது எங்க ஊர் அரிசி உப்புமா !"//

சிங்கை உப்புமாவா? நாகை உப்புமாவா?//

இந்தியக் கடவு புத்தகம் தான் வைத்திருக்கிறேன். எங்க ஊர் என்றால் சிங்கை அல்ல.

கோவி.கண்ணன் சொன்னது…

// ஆயில்யன் said...

/கோவி.கண்ணன்


//துபாய் ராஜா said...

அண்ணாச்சி,'அரிசி உப்புமா'ன்னா அரிசியை மாவா இல்லாம பரபரன்னு திரிச்சி அப்புறம் உப்புமா மாதிரியே செய்யணும்.ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்.நீங்க செய்திருப்பது வெஜிடபுள் பிரியாணி.:))

//
பிரியாணியில் இஞ்சி பூண்டு விழுது சேர்ப்பாங்க. இது பிரியாணி இல்லை உப்புமா ...... உப்புமா.......உப்புமா !

:)//

ராஜா அண்ணாச்சி சொல்றதுதான் கரீக்ட்டு :))

கொஞ்சம் டிரையா இருக்கும் நீங்க செஞ்சுருக்கிறது உப்புமா இல்ல இல்ல இல்லவே இல்ல (பிரிஞ்சி இலை பட்டை - மூலப்பொருட்கள் கரீக்ட்டு உப்புமா தான் டப்பு) :))))//

:) ஆயில்யன், உங்களுக்கு இது உப்புமாவா பிரியாணியா சரியாச் சொல்லுங்க. இப்ப எனக்கு மறுபடியும் ஐயம் வந்துட்டு !

கோவி.கண்ணன் சொன்னது…

//ரொம்ப சந்தோசம். நீங்கள் அலுவலகத்தில் இருந்தால் வீட்டுக்கு போன் பண்ணி கேளுங்கள் என்ற அர்த்தத்தில் சொன்னேன். :))

3:31 AM, August 10, 2009//

நான் அலுவலகத்தில் இருந்தால் வீட்டில் எப்படி உப்புமா கிண்ட(ல்) முடியும் ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// சுவனப்பிரியன் said...

:-)))))))//

நன்றி சுவனப்பிரியன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...

தக்காளி சாதம் போல இருக்கு... ஆனா நீங்கள் சொல்லும் உங்கள் ஊர் அரிசி உப்புமா... எப்படியோ ஒரு பெயர் இருந்தா சரி.... ஆத்தடி பச்சா கொழுக்கட்டை போல இதுவும் ஒன்றா?

10:12 AM, August 10, 2009//

அந்தக் கதையும் தெரியுமா. அத்தேரி பச்சா உப்புமா இது !

கோவி.கண்ணன் சொன்னது…

// அப்பாவி முரு said...

அண்ணே வீட்டுல இருக்கீங்களா?

உடனே பார்க்கணும் போல இருக்கு,

உடனே கிளம்பி உங்க வீட்டுக்கு வர்றேன்!!!

மதிய சாப்பாடு 12 மணிக்குத் தானே....//

உப்புமா வாசம் உட்லண்ட்ஸ் வரைக்கும் 'அடிக்குதா' ?

அவ்வ்வ்வ்வ்வ்

கோவி.கண்ணன் சொன்னது…

//Sasikumar said...

இப்பவும் கூட வீட்டில் நீண்ட நாள் தங்கும் திட்டத்துடன் வரும் உறவினர்களை சத்தமில்லாது / சண்டை
இல்லாது அனுப்ப உப்புமா செய்து போடுவது எழுதப்படாத உத்தி :)
////

naanga vanthaalum appadithaanaa//

வந்த உடனே அப்படி அல்ல, நாளைஞ்சு நாள் ஆன பிறகு உப்புமா தான் காலை உணவு !

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவிலி said...

கோவியாரே

ஈ அடிக்கற இடத்துல இரும்புக்கு என்ன வேலை? :)))))

நீங்க செஞ்ச பதார்த்தத்துக்கு தக்காளி ஃப்ரைடு ரைஸ் அப்படின்னு பேரு வைக்கலாமா?

நெஜமான அரிசி உப்புமாவுக்கு

http://mykitchenpitch.wordpress.com/2007/02/07/arisi-uppuma-1/

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8426&mode=threaded&pid=122228

http://samaiyalkalai.blogspot.com/2007/11/blog-post_9802.html//

அண்ணே,

கோவியாரைக் காலை வார உங்கள் உப்புமா தேடல் மெய் சிலிர்க்க வைக்குது.

:)

Vidhoosh சொன்னது…

இது அரிசி உப்புமாவே இல்லை. உங்க ஊர் எதுங்க??

--வித்யா

துளசி கோபால் சொன்னது…

வீட்டுப்பெரியவர்களிடம் விசாரிச்சப்ப உங்க ஊர் அரிசி உப்புமாவுக்கு அசல் பெயர் 'உசிரி' ன்னு சொன்னாங்க!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இந்த உப்புமா
பதிவு தப்புமா
இது குப்புமா
ஒரு கப்புமா
தட்டுல அப்புமா
கம கம கமா

உப்புமா பதிவர் கோவியார்
இனி உப்புமா விருது வழங்குவார்.
முதல் விருது எனக்குத் தான்!
குப்புக்கு இல்லாத உப்புமாவா?
:) :P

சிரத்தை எடுத்து செய்திருக்கிறீர்கள்...

கம்ப்யூட்டர் எஞ்சினீயருக்கு
கத்தரிக்காயும் வெட்டத் தெரியவேண்டும் என்று இந்த பதிவு சொல்லாமல் சொல்கிறது.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//Vidhoosh said...
இது அரிசி உப்புமாவே இல்லை. உங்க ஊர் எதுங்க??

--வித்யா//

நாக்குக்கு ருசியா சமைச்சு குடுக்குறதுனால அவரு ஊரு நாக் பட்னா. :P

Radhakrishnan சொன்னது…

ஆஹா அரிசி உப்புமா பற்றிய இடுகை சுவையாகத்தான் இருந்தது.

உப்புமா கிண்டி வையடி எனும் ஒரு பாடல் இருக்கிறது. அதில் குறிப்பும் வரும். நான் ரவா உப்புமா மட்டுமே கேள்விப்பட்டதுண்டு.

அரிசி உப்புமா வித்தியாசமாக இருக்கிறது. எப்பொழுது அரிசி அப்படியே உபயோகிக்கப்படுகிறதோ அப்போது அதன் பெயர் சோறு அல்லது சாதம் என்றாகிவிடுகிறது. எனினும் வட்டாரத்துக்கு வட்டாரம் பெயர் மாறுவது இயற்கைதானே. இந்த உப்புமாவை சப்புக் கொட்டிச் சாப்பிடலாம்.

Jawahar சொன்னது…

அண்ணே,

இதுக்கு எங்க ஊர்லே வெஜிடபிள் பிரைட் ரைஸ்னு பேரு! படங்கள்லாம் நல்லா இருக்கு. அதனாலே சாப்பிடவும் நல்ல இருக்கும்ன்னு நினைக்கிறேன். அப்டியே ஒரே ஒரு மொக்கை போட்டுக்கறேன் :

"அரிசி உப்புமா?"

"ஓ.. உப்பிச்சுன்னா அது பேர் பொறி"

http://kgjawarlal.wordpress.com

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்