பின்பற்றுபவர்கள்

25 ஆகஸ்ட், 2009

நட்சத்திர கேள்விகளுக்கு நச் பதில்கள் !

தமிழ்மணம் காசி அண்ணாச்சியின் நட்சத்திர கேள்விகளுக்கு என் பதில்,

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

கணிணியில் தமிழைப் பார்பவர்களில் துள்ளிக் குதிப்பவர்களும் இருக்கிறார்கள், முகம் சுளிப்பவர்களும் இருக்கிறார்கள். பதிவுலகம் சாராத பலருக்கு மின் அஞ்சல் அனுப்பும் போது மிகச் சிலர் தான், தமிழில் தட்டச்சு செய்வது எப்படின்னு கொஞ்சம் விவரமாக சொல்லித்தாங்க என்பார்கள், பலர் அதற்கு ஆங்கிலத்தில் கூட பதில் மின் அஞ்சல் அனுப்புவதில்லை. காரணம் மொழி என்பது தகவல் பரிமாற்றும் கருவிதான், அதை இணையம், வின்களம் அளவுக்கு எடுத்துப் போகத்தேவை இல்லை என்றும், அப்படி முனைபவர்களை மொழி வெறியர்கள் என்பதாகவே நினைக்கிறார்கள். பிற(ர்) மொழியை தொடர்ப்புக்கும், தொழிலுக்கும் பயன்படுத்தலாம், தாய்மொழி ஒன்றுதான் அந்த இனத்தின் அடையாளம் என்பதை பலர் உணருவதில்லை. ஒரு இனம் கேலி செய்யப்படுவது அடையாளங்களை மறுக்கிற போது தான் என்பதும், இன அடையாளங்களை அழிப்பது தான் பிற இனங்களின் செயல், அவை காலந்தோறும் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும், வளர்ச்சியடைந்த மொழிகள் எப்படி ஒரு இனத்தால் முனைந்து கொண்டு செல்லப்படுகிறது என்பதைப் பற்றியெல்லாம் இன்னும் பலர் புரிந்து கொண்டப்பாடில்லை. தாய் மொழிப்பற்றிய புரிந்துணர்வு, தேவை பற்றியக் கட்டுரைகள் இன்னும் மிகுதியாக ஆங்கிலம் மற்றும் அவரவர் தாய்மொழி பெயர்பும் சேர்ந்து எழுதப்பட்டு படித்தார்கள் என்றால் ஒருவேளை தாய்மொழியின் தேவை உணர்வார்கள் என்று கருதுகிறேன். நீரிழிவுக்கு உறவுக்காரர்களான் இந்தியர்கள், தமிழர்கள் இனிப்பைக் கூட மருந்து தடவிக் கொடுத்தால் தான் ஒருவேளை ஏற்பார்கள்

2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

பேருந்து முன்பதிவு, தொடர்வண்டி முன்பதிவுகள் எல்லாம் இணையத்தின் மூலம் செய்யும் படி தற்போழுது தனியார் நிறுவனங்களும், அரசுகளும் ஏற்பாடு செய்திருக்கின்றன, நன்கு படித்தவர்களிலே கூட அலுவலகத்தில் நல்ல நிலையில் வேலை செய்பவர்கள், நிறுவன உரிமையாளர்கள் என கடன் அட்டை வைத்திருப்பவர்கள் தவிர்த்து இத்தகைய வாய்ப்புகளை நம்பிப் பயன்படுத்துபவர்கள் குறைவு, காரணம் கடன் அட்டை மோசடிகள் நடப்பதால், இணையம் பயன்படுத்தி நடக்கின்ற பரிமாற்றங்கள் (Transaction) மூலமாக கடன் அட்டை எண் திருடப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் காரணமாகக் கூட இருக்கும். சிங்கையில் பணத்தை நேரடியாக கணக்கில் சேர்க்கும் மின்னியல் எந்திரங்கள் இருந்தாலும் சிலர் அவற்றை நம்பாமல் வங்கிக்கு சென்று வரிசையில் நின்று கணக்கில் சேர்த்துவிட்டு வருகிறார்கள், வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே இப்படி என்றால் இந்தியாவில் கணிணி வழியாக நடைபெறும் சேவைகளை முழுவதும் பலர் பயன்படுத்த ஒரு 10 ஆண்டுகளாக ஆகும். அதுவும் கூட நடுத்தர மக்களிடம் மட்டும் தான். கடவுச் சீட்டு புதுப்பித்தல், பெறுதலுக்கான ON-LINE படிவம் இந்திய தூதரக இணையப்பக்கத்தில் கிடைக்கிறது, ஆனால் அதை அச்சு எடுத்து பூர்த்தி செய்து அனுப்பவேண்டும் என்கிற நிலையில் தான் அந்த இணைய தளம் இயங்குகிறது. மற்ற நாடுகளில் இருப்பது போல் முழுவதும் இணையம் வழியான சேவையாக நடைபெறுவதில்லை. இந்தியாவின் மக்கள் தொகையையும் பொருளியல் ஏற்றத்தாழ்வு சிக்கல்களையும் கருத்தில் கொண்டால் வளர்ந்த
நாடுகளின் கணிணி செயல்பாடுகளை ஒப்பிட்டு பேசுவதும் தவறாகப் படுகிறது. எல்லாம் நடக்கும், நடக்கும் நாள் பிடிக்கும் என்று நம்புகிறேன். மற்றபடி இணைய இதழ்கள், இலக்கியம் சார்ந்த செயல்பாடுகள் இணையத்தில் இந்தியப் பிற மொழிகளைக் காட்டிலும் தமிழில் சிறப்பாக நடைபெறுகிறது.

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

விக்கிப்பீடியா போன்றவற்றிற்கு தன்னார்வளர்கள் மிகுதியாக செய்திருந்தாலும் அதனை விரைவு படுத்த தன்னார்வளர்கள் குழுக்களாக அமைக்கப்பட்டால், சேர்ந்து கொண்டால் இலக்கு, காலம் ஆகிவற்றை வரையறுத்து சிறப்பாக செயல்பட முடியும், உதாரணத்திற்கு ஒருவர் சிலப்பதிகாரம் பற்றி எழுதத் தொடங்கினால் முடிக்கவே முடியாது, ஆனால் ஒரு குழுவாக செயல்பட்டு எழுதினால் ஆளுக்கொரு பகுதியாக எடுத்துக் கொண்டு சில மாதங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி சேர்த்துவிட முடியும். தன்னார்வளர்களின் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும், விக்கிப்பீடியா தகவல்கள் நம்பகத்தன்மையாக்க அவை தனிமனித செயல்பாடுகளைச் சாராமல் எழுதப்பட்டு இருந்தால் அவை வருங்காலத்தினருக்கு சிறந்த ஆவணமாக இருக்கும். நம்பகத்தன்மைகளை சீர்படுத்த சார்பற்ற குழுக்களாக செயல்பாடுகள் அமைந்து, ஒப்புதல்களுடன் கட்டுரைகள் வெளி இடப்படவேண்டும்.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

பயன்பாட்டு விரிவாக்கத்திற்கு தமிழை இணையத்தில் பயன்படுத்தும் சமூக பண்பாடு மற்றும் தமிழக / தமிழருக்கு நடத்தப்படும் சேவை, வணிக நிறுவனங்களுக்கு வரிவிலக்கு சலுகைகள் போல் அளிக்கலாம், பயனீட்டாளர்களுக்கு சேவை வரி குறைக்க முயற்சிப்பேன்.

5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

படித்து வேலைக்குச் சென்றதும் தமிழ் வாசிப்பு என்பது வார இதழ்களுடனும், தொலைக்காட்சியுடனுமே முடிந்து விடக் கூடியதாக இருந்தது, ஆனால் இன்றைக்கு தமிழில் சரளமாக எழுதுவதும், இலக்கிய ஆக்கங்கள் படைக்க பலர் முயற்சிப்பதற்கும் வலைப்பதிவுகளை எழுதுவதும், வாசிப்பதும் கை கொடுக்கிறது. புதிதாக வலைப்பதிக்க வருபவர்கள் மனத்தடை இல்லாது, ஆபாசம் தவிர்த்து எதைப் பற்றியும் எழுதலாம் என்கிற எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டால், முதலில் எழுதப் பழகி பிறகு அவர்களே அவர்களுக்கான தனித்தன்மையையும் அவர்கள் கலக்கப் போகும் களம் எது என்பதை அவர்களாகவே முடிவு செய்து கொள்வார்கள்.

6.தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

தமிழ்மணம் 5 ஆண்டு சேவை - அது பற்றி தனிப்பதிவு போட்டு இருக்கிறேன். தமிழ்மணம் முன்பு போல் தமிழுக்கு ஒரே திரட்டி கிடையாது, தமிழ் பதிவுகளுக்காக இயங்கும் பல திரட்டிகளில் தமிழ்மணமும் ஒன்று. அதனால் திரட்டிகளில் முன்னோடியாக சேவைகளை மேம்படுத்தித் தொடர வேண்டும் என்பதே தற்போதைய விருப்பம்.

இது தொடர்பதிவு, இதே கேள்விகளுக்கு பதில் எழுதி, கேள்விகளை கை மாற்றிவிட மாதவிப் பந்தலார், கேஆர்எஸ் என்றழைக்கப்படும் பதிவர் நண்பர், ஆன்மிகச் செம்மல், திரு கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களை அழைக்கிறேன்.

8 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\புதிதாக வலைப்பதிக்க வருபவர்கள் மனத்தடை இல்லாது, ஆபாசம் தவிர்த்து எதைப் பற்றியும் எழுதலாம் என்கிற எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டால், முதலில் எழுதப் பழகி பிறகு அவர்களே அவர்களுக்கான தனித்தன்மையையும் அவர்கள் கலக்கப் போகும் களம் எது என்பதை அவர்களாகவே முடிவு செய்து கொள்வார்கள்.\\

புதியவர்களுக்கான உற்சாகமூட்டக்கூடிய வழிகாட்டுதல்கள்

வாழ்த்துக்கள்

பீர் | Peer சொன்னது…

நண்பர் நிகழ்காலத்தை வழிமொழிகிறேன்.

நான் எழுதுவதற்கு(?) முழுக்காரணமும் நீங்கள்தான், ஐயா.

இந்தப்பெருமை எல்லாம் உங்களையே சாரும்.

Unknown சொன்னது…

நானும் முதலானவரையே வழிமொழிகிறேன் ...

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/தமிழ் வாசிப்பு என்பது வார இதழ்களுடனும், தொலைக்காட்சியுடனுமே முடிந்து விடக் கூடியதாக ...../

இன்னமும் இருக்கிறது என்பது தான் உண்மை! அது இன்னமும் இறந்த காலமாகி விடவில்லை.

நட்சத்திரக் கேள்விகள், சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கின்றன!

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

நீங்க புதுசா வரவங்களை Rag பண்ணுவீயளோ-ன்னு நினைச்சேன்! ஆனா இப்பிடி நச்-ன்னு சொல்லிட்டீங்களே-ண்ணா! :)

//
1. மனத்தடை இல்லாது,
2. ஆபாசம் தவிர்த்து
3. எதைப் பற்றியும் எழுதலாம் என்கிற எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டால்,
4. அவர்கள் கலக்கப் போகும் களம் எது என்பதை அவர்களாகவே முடிவு செய்து கொள்வார்கள்//

சூப்பரு! :)

//ஒரு இனம் கேலி செய்யப்படுவது அடையாளங்களை மறுக்கிற போது தான் என்பதும்//

அடையாளங்களை அழுத்தமாகப் பிடித்துக் கொள்ளும் போதும் கேலி செய்யப்படும்! :)
அந்தக் கேலி...அடையாளங்களை விட வேண்டும் என்ற "பிறழ்வான" நோக்கத்தில் தான்! :(

பகுத்தறிவுத் தொடர் சங்கிலியை ஆன்மிகத்துக்கு கொடுத்த பாரி வள்ளல் கோவி அண்ணாவுக்கு நன்றி! :)
இன்னிக்கி நைட் உட்கார்ந்து எழுதிடறேன்-ண்ணா!

வால்பையன் சொன்னது…

//பீர் | Peer
நண்பர் நிகழ்காலத்தை வழிமொழிகிறேன்.

நான் எழுதுவதற்கு(?) முழுக்காரணமும் நீங்கள்தான், ஐயா. //

இது வேற நடக்குதா!
நடக்கட்டும் நடக்கட்டும்!
தமிழ் உலக கணிணியெல்லாம் பரவட்டும்!

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

கோவிகண்ணன் உடைத்துச் சொன்னது:

/தமிழ்மணம் முன்பு போல் தமிழுக்கு ஒரே திரட்டி கிடையாது, தமிழ் பதிவுகளுக்காக இயங்கும் பல திரட்டிகளில் தமிழ்மணமும் ஒன்று./

பத்தோட பதினொண்ணு, அத்தோட இது ஒண்ணுன்னு ஆகாம முழிச்சுக்குவாங்கன்னு நம்புவோம்!

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

இந்தாங்க ஸ்ரீலஸ்ரீ கோவி அண்ணே! :)
தமிழ்மணம் வழங்கும் "காசி" அல்வா! :))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்