பின்பற்றுபவர்கள்

19 ஆகஸ்ட், 2009

பொன்னியின் தவப் புதல்வர் - பிள்ளையார் பித்தர் திலகர் அவர்கள் !

ஒரு முறை துர்வாச முனிவர் கைலாசத்துக்கு சென்றார். வாசலில் இருந்த விநாயக பெருமானை பார்க்காமல் விடுவிடுவென்று சென்றார். அவரை வைத்து தமாஷ் பண்ண எண்ணிய கணபதி தனது துதிக்கையை அவர் முதுகை நோக்கி ஃபூ என ஊத, துர்வாசர் நான்கைந்து குட்டிக்கரணங்கள் அடித்து பதறி விழுந்தார். அதை பார்த்துக் கொண்டிருந்த பூத கணங்கள் கலகலவென்று சிரித்தன.

எழுந்து நின்ற துர்வாசர் தனது ஞானதிருஷ்டியை பயன்படுத்தி நடந்ததை அறிந்து கொண்டார். கோபம் கொண்டார். விநாயகரை பார்த்து கண்களில் நெருப்புப் பொறிகள் பறக்க பேசலானார், “நீர் பூலோகத்தில் நாற்சந்திகளிலும், குளத்தங்கரை மரத்தடிகளிலும் வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து கொண்டு இருப்பீராக. உமக்கு தேங்காய் உடைப்பவர்கள், தோப்புக்கரணம் போடும் பக்தர்கள் ஆகியோர் படிப்படியாக குறைந்து போகக் கடவர்” என்று சபிக்கவும் செய்தார். தம்மைப் பார்த்து சிரித்த அத்தனை பூதகணங்களும் பூலோகத்தில் இந்த்துவா திலகங்களாக பிறப்பார்கள் என்றும் அவர் கூற, பூதகணங்கள் பதறிப் போயின. அவர் காலில் விழுந்து, “முனிபுவங்கரே, உமக்கு மூக்குக்கு மேலே கோபம் என்பதை அறிந்தும் நாங்கள் சிரித்தது தவறுதான். மன்னித்து எங்களுக்கு சாபவிமோசனம் தர வேண்டும் என வேண்டின.

விநாயகரும் “துர்வாசரே என்னை இப்படி சபித்து விட்டீர்களே. உமக்கு பசி எடுத்து கோபம் அதிகரிக்கும்போது நானல்லவா உம்மை அழைத்து எனக்கு கிடைக்கும் பிரசாதங்களை உண்ணக் கொடுப்பேன். இப்போது எனக்கே பிரசாதம் இல்லையென்றால் உமக்கு எங்கிருந்து உணவு வரும்”? என கேட்டார். துர்வாசரும் தான் அவசரப்பட்டு சபித்ததை உணர்ந்து சுதாரித்து கொண்டார். “இந்துத்துவாக்களாக பிறக்கும் பூத கணங்கள் ஒரு தருணத்தில் ப்ளாஸ்டராப் பாரிசில் செய்யப்பட்ட உமது சிலைகளை கடலில் கரைப்பார்கள். கடல் மாசு பட்டு சுற்றுச் சூழல் மாசுபடுவதைப் பார்த்து மனம் கொதிக்கும் நாத்திகர்கள் எல்லா இடங்களிலும் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள், உன்னை கடலில் எரிவதை தடுக்க உதவுவார்கள். போலி ஆத்திகம் இன்னும் அழியும். ஆனால் உங்களுக்கு உண்மை பக்தர்களால் உடைக்கப்படும் தேங்காய்களும் பிரசாதங்களும் அதிகரிக்கும். அப்போது என்னை மறந்து விடாதீர்கள்” என சாப விமோசனத்தை கூறினார்.

இது உண்மையிலேயே சமீபத்தில் கலியுக ஜய ஆண்டில் வைகாசி மாதம் நடந்தது. (மே 27, 1953)

(நன்றி: பொன்னியின் தவப்புதல்வர், பக்கம் 705-706)



ப்ளாஸ்டராப் பாரிஸ் பிள்ளையார் உருவ பொம்மை உடைப்புகளை செய்யுமாறு தனது தொண்டர்களுக்கு கட்டளையிட்ட திலகர் அவர்களிடம் சில ஆர்ய சமஜ் தொண்டர்கள் வந்து, தங்கள் வீட்டு பூஜையறையிலிருந்த பிள்ளையாரை உடைப்பதற்காக எடுக்க முயன்ற போது தத்தம் வீட்டு பெண்மணிகள் கடுமையாக ஆட்சேபம் தெரிவிப்பதாகக் கூறினர். அவர்களிடம் திலகர் “உங்களை யார் வீட்டிலிருந்த பிள்ளையார் பொம்மைகளை எடுக்கச் சொன்னது? கடையில் நாலணா கொடுத்தால் பிள்ளையார் பொம்மை செய்தே தருகிறார்கள். அதை வாங்கிக் கொண்டு போய் கடலில் கரையுங்கள்” என்றாராம். மேலும் திலகர் அவர்களே அவர்கள் குடும்பத்தினர் வணங்கி, நிர்வகித்து வந்த பிள்ளையார் சிலையின் கடற்கரை கரைப்பு ஊர்வலங்களுக்கு தலைமை ஏற்று இருந்து நல்ல பணி ஆற்றியதாகவும் படித்துள்ளேன்.

பல்கி கிண்டலுக்காக எழுதினாலும் உண்மையில் திலகரின் பிள்ளையார் கரைப்பின் தன்வினையாய் முக்குக்கு முக்கு பிள்ளையார் ஊர்வலம், ராமாயண பக்தி பிரசாரத்தால் தெருவுக்கு தெரு ராமாயண பிரவசனங்கள் ஆகியவை நடந்தன.

இந்துத்துவாக்களின் தலைவர் என்னும் முறையிலும், பொன்னியின் தவப்புதல்வன் கதையை வைத்து பார்க்கும் போதும், பால கங்காதார திலகர் துர்வாசரின் சாபம் நிறைவேற உதவியதன் மூலம், உண்மையிலேயே பிள்ளையார் சிலை படுகொலைக்கும் ப்ளாஸ்டர் ஆப் பாரிஸ் என்னும் சுற்றுச் சூழல் கேட்டால் கடல் மாசுபடுவதற்கும் காரண கருத்தா திலகர் என்பது வெள்ளிடை மலை.

:)

கதை மாதிரி நன்றி : திரு டோண்டு இராகவன்

32 கருத்துகள்:

அப்பாவி முரு சொன்னது…

டோண்டூ ராகவன் ஐய்யாவுக்கு தகவல் கொடுத்தாச்சா?.,

ஷாகுல் சொன்னது…

அப்படியென்றால் விநாயகர் ஊர்வலம் பள்ளிவாசலுக்கு அருகில் வரும் போது பத்து பைசா முருக்கு பள்ளிவாசல நொர்றுக்கு.

துலுக்கன வெட்டு துலுக்கச்சிய கட்டு என பல அறுவருக்கத்தக்க கோஷங்களுக்கும் திலகர்தான் காரணம் இல்லையா?

யுவகிருஷ்ணா சொன்னது…

தலைவரே!

சான்ஸே இல்லை. உங்களுடைய ‘மாஸ்டர் பீஸ்’ இது!!!

இதே பாணியை கண்டினியூவவும்.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

கோவி புராணம் நல்லா இருக்கு.

விநாயகரை கிராமத்தில் வேலையில்லாமல் ஆலமரத்தடியில் இருக்கும் பெரிசு ரேஞ்சுக்கு கதை சொல்லி இருப்பதை கண்டிக்கிறேன்.

துர்வாசர் இன்றும் இருக்கிறார்(கள்). உமக்கு உண்டு அவர்களிடம்.

சத்யமேவ ஜயதே..! :)

பின்குறிப்பு : பிராயச்சித்த கட்டுரை அருமை..!

வால்பையன் சொன்னது…

சபாஷ் சரியான போட்டி!

வால்பையன் சொன்னது…

//துலுக்கன வெட்டு துலுக்கச்சிய கட்டு என பல அறுவருக்கத்தக்க கோஷங்களுக்கும் திலகர்தான் காரணம் இல்லையா?//

திலகர் மட்டுமல்ல!
எல்லா இந்து மத வெறியர்களும் காரணம்!

பதி சொன்னது…

அருமை !!!!!

;)))

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

இவ்வளோ விஷயம் இருக்கா

ஜோ/Joe சொன்னது…

இது தேவையா டோண்டு ஐயாவுக்கு :)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரே,
பதிவ பற்றிய தொடுப்பு கொடுத்த ஒன்னரை நிமிடத்தில் எப்படி உங்களால் எதிர்பதிவு போடமுடிகிறது.

அந்த கோயபல்ஸ்க்கு டாக்டர் கோவியாரின் ஸ்டெத்தாஸ்கோப்பு பல்ஸ் ஷரியான பதிலடி.

ஆமா டோண்டு சாருக்கு இவ்வளவு சீக்கிரமா எதிர்பதிவு போடுறியளே அது எப்படி?,

அவருக்கும் உங்களுக்கும் பதிவு சம்மந்தமா தகவல் பரிமாற்றம் இருந்துதா?

இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

இதுக்கெல்லாம் ஒரு நாளும் பதில் கிடைக்காதுன்னு தெரிந்தே, இப்பவெல்லாம் கேள்வி கேக்குறத விட்டுட வேண்டியதா இருக்கு...

எனிவே ஐ லைக்கு டூ!

நல்லா இருங்க...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஐ பர் காட்டு!

எனிவே,

ஐ லைக்கு த கண்பத் போட்டோ!

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

//தொகுப்பு : எதிர்வினை, //

இன்னும் முற்றுபெரவில்லையே, அனானி பின்னூட்டம் இன்னும் உங்க பதிவுல காணோம், -:)

suvanappiriyan சொன்னது…

:-))))

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
டோண்டூ ராகவன் ஐய்யாவுக்கு தகவல் கொடுத்தாச்சா?.,
//

அவரு என் பதிவை தொடர்ந்து படிப்பதாக நேரில் பார்த்த போது சொல்லி இருக்கிறார். படித்து இருப்பார் என்று நினைக்கிறேன்

//ஷாகுல் said...
அப்படியென்றால் விநாயகர் ஊர்வலம் பள்ளிவாசலுக்கு அருகில் வரும் போது பத்து பைசா முருக்கு பள்ளிவாசல நொர்றுக்கு.

துலுக்கன வெட்டு துலுக்கச்சிய கட்டு என பல அறுவருக்கத்தக்க கோஷங்களுக்கும் திலகர்தான் காரணம் இல்லையா?
//

ஊரே பத்தி எரிய ஒரு வீட்டின் மீது எரிந்த தீவெட்டி தான் காரணமாக இருந்தால்....ஊர் எரிய யாரு காரணம் :)

//யுவகிருஷ்ணா said...
தலைவரே!

சான்ஸே இல்லை. உங்களுடைய ‘மாஸ்டர் பீஸ்’ இது!!!

இதே பாணியை கண்டினியூவவும்.
//

உங்கள் காண்டு கஜேந்திரன் பதிவுகள் ரேஞ்சுக்கு... யப்பா.....ஆளை விடுங்க, பகடி செய்ய எனக்கு வராது. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
கோவி புராணம் நல்லா இருக்கு.

விநாயகரை கிராமத்தில் வேலையில்லாமல் ஆலமரத்தடியில் இருக்கும் பெரிசு ரேஞ்சுக்கு கதை சொல்லி இருப்பதை கண்டிக்கிறேன்.//

இது கோவி கதை இல்லை ஸ்வாமி, கல்கி எழுதின கதை மாதிரி.

//பின்குறிப்பு : பிராயச்சித்த கட்டுரை அருமை..!

6:10 PM, August 19, 2009//

யார் செய்ததுக்கு பிராய சித்தம்னு சொல்லவில்லையே !
:)

//வால்பையன் said...
சபாஷ் சரியான போட்டி!

6:25 PM, August 19, 2009
//

வைஜயந்தி மாலா....பத்மினி ரேஞ்சுக்கு பாராட்டியதற்கு நன்றிங்கோ !

///பதி said...
அருமை !!!!!

;)))
//

நன்றி !

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இவ்வளோ விஷயம் இருக்கா

9:08 PM, August 19, 2009
//
இன்னும் நிறைய இருக்கு...அவை நடந்து முடிந்தவை.

//ஜோ/Joe said...
இது தேவையா டோண்டு ஐயாவுக்கு :)

9:38 PM, August 19, 2009
//
அவரு காண்டு கஜேந்திரனுக்கே பின்னூட்டம் போடுறவர்.

//தமிழ் ஓவியா said...
;)))
//

:) நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
கோவியாரே,
பதிவ பற்றிய தொடுப்பு கொடுத்த ஒன்னரை நிமிடத்தில் எப்படி உங்களால் எதிர்பதிவு போடமுடிகிறது.

அந்த கோயபல்ஸ்க்கு டாக்டர் கோவியாரின் ஸ்டெத்தாஸ்கோப்பு பல்ஸ் ஷரியான பதிலடி.

ஆமா டோண்டு சாருக்கு இவ்வளவு சீக்கிரமா எதிர்பதிவு போடுறியளே அது எப்படி?,

அவருக்கும் உங்களுக்கும் பதிவு சம்மந்தமா தகவல் பரிமாற்றம் இருந்துதா?

இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

இதுக்கெல்லாம் ஒரு நாளும் பதில் கிடைக்காதுன்னு தெரிந்தே, இப்பவெல்லாம் கேள்வி கேக்குறத விட்டுட வேண்டியதா இருக்கு...

எனிவே ஐ லைக்கு டூ!

நல்லா இருங்க...

10:53 PM, August 19, 2009
//

அவருக்குத்தான் நன்றி கார்டு போட்டாச்சே. இது வரைக்கும் இது தொடர்பாக பிரச்சனை, பிராது ன்னு எதுவும் கொடுக்கல, இனிமேலும் கொடுக்கமாட்டார்னு நினைக்கிறேன்.
:)

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
ஐ பர் காட்டு!

எனிவே,

ஐ லைக்கு த கண்பத் போட்டோ!

10:55 PM, August 19, 2009
//

எனக்கும் தான் படத்தைப் பார்த்தவுடனே காப்பாத்து கண்ணா காப்பாத்துன்னு குரல் கேட்டது, அதையே அதில் சேர்த்துவிட்டேன் :)

//[பி]-[த்]-[த]-[ன்] said...
//தொகுப்பு : எதிர்வினை, //

இன்னும் முற்றுபெரவில்லையே, அனானி பின்னூட்டம் இன்னும் உங்க பதிவுல காணோம், -:)
//
என் பதிவில் அனானிகளுக்கு கதவை திறக்கல !

******

டிவிஆர், சுவனப்பிரியன்

நன்றி நன்றி !

priyamudanprabu சொன்னது…

பாவம் விநாயகர்......

அந்த படம் அருமை

Sanjai Gandhi சொன்னது…

சூப்பர்.. :)

தருமி சொன்னது…

அப்போ, இனிம நான் அங்க போகணுமா?

பித்தனின் வாக்கு சொன்னது…

உண்மையில் பிள்ளையார் சிலை ஊர்வலம் என்பதை திலகர், இந்துக்களின் ஒற்றுமைய் கூட்டி அதை சுதந்திர போராட்டத்திற்கு பயன்படும் என்றுதான் ஆராம்பித்தார். அப்பிடி பயன்படுத்தியும் காட்டினார்.
விநாயகர் சிலை வழிபாடு இப்படிதான் ஆரம்பித்தது. பின் நாளில் அதற்க்கு இருக்கும் வரவேற்ப்பை பார்த்து இந்துத்துவா கூட்டம் அதை இந்துக்களின் விழிப்புனர்ச்சிக்காய் மாற்றிக்கொண்டது.

திலகருக்கு சுதந்திரத்திற்க்காக ஆரம்பிக்கும் போது பின் நாளில் ப்லொக் எளுத்தாளர்கள் எங்கின்ற சம்பாரித்து சாப்பிட்டுவிட்டு சும்மா பொழுதுபோக எளுதும் கூட்டம் இப்பிடி எளுதுவாங்க என்று தெரிந்து இருந்தால் அவரும்
சுதந்திரத்தைப் பத்தியும் விநாயகர் வழிபாடு பத்தியும் அவரும் மேசையில கொஞ்சம் நிலக்கடலையும், எதாதது ஸ்னாக்ஸ் சப்பிட்டு எளுதிட்டுப் போய் இருப்பார். அவருக்கு இப்ப இருக்க ப்லொக் ஏளுத்தாளர்கள் மாதிரி மூளை இல்லாம போய்ருச்சு.

ஒரு ப்லொக் இருந்துட்ட போதும் நம் சுதந்திர தியாகிகள், பொரியொர்கள், உன்மையான(இப்ப இருக்கரவங்க இல்லை) தலைவர்கள் யாரை வேண்டும் ஆனாலும் விமர்சனம் செய்யும் முறை தவறு.

இந்த மாதிரி தியாகிகள் தலைவர்களை விமர்சனம் செய்யும் முன் அந்த நாதாரிகள் நமக்கு என்ன தகுதி இருக்கிறது என ஒருமுறை யோசிப்பது நல்லது.

கோவி.கண்ணன் சொன்னது…

//PITTHAN said...

உண்மையில் பிள்ளையார் சிலை ஊர்வலம் என்பதை திலகர், இந்துக்களின் ஒற்றுமைய் கூட்டி அதை சுதந்திர போராட்டத்திற்கு பயன்படும் என்றுதான் ஆராம்பித்தார். அப்பிடி பயன்படுத்தியும் காட்டினார்.
விநாயகர் சிலை வழிபாடு இப்படிதான் ஆரம்பித்தது. பின் நாளில் அதற்க்கு இருக்கும் வரவேற்ப்பை பார்த்து இந்துத்துவா கூட்டம் அதை இந்துக்களின் விழிப்புனர்ச்சிக்காய் மாற்றிக்கொண்டது. //

அண்ணே கடைசி வரி கொஞ்சம் மாற்றி இருக்கலாம், அதாவது ந்துத்துவா கூட்டம் அதை இந்துக்களைத் தூண்ட பயன்படுத்திக்கொண்டது.

//இந்த மாதிரி தியாகிகள் தலைவர்களை விமர்சனம் செய்யும் முன் அந்த நாதாரிகள் நமக்கு என்ன தகுதி இருக்கிறது என ஒருமுறை யோசிப்பது நல்லது.

10:55 AM, August 21, 2009//

ஆமாங்க, பித்தன் இன்னும் கோட்சே பாசத்தால் காந்திஜியை தாறுமாறாக எழுதும் கூட்டம் பெருகியே வருவதைக் கவனித்து இருப்பீர்கள். அதை விடுவோம் சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் கலைக்கபடலாம் என்று வலியுறுத்திய காந்திக்கு காங்கிரஸ்காரர்கள் ஆண்டு தோறும் மறக்காமல் மலர் வலயம் வைத்து வருகிறார்கள். :)

ஒரு செயலின் நோக்கம் நிறைவேறிவிட்டால் அதை கலைத்துவிடாவிட்டால் அந்த அமைப்பின் செல்வாக்கும், மக்கள் ஆதரவும் சமூக விரோதிகளின் கைக்கு சென்றுவிடும். காந்தியாக இருந்தாலும் சரி, திலகராக இருந்தாலும் சரி அவர்களா இப்போது வந்து தடுக்கப் போகிறார்கள்.

நன்றி பித்தன்ஜி !

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஆமாங்க, பித்தன் இன்னும் கோட்சே பாசத்தால் காந்திஜியை தாறுமாறாக எழுதும் கூட்டம் பெருகியே வருவதைக் கவனித்து இருப்பீர்கள். //

அப்ப காந்தியை எதுக்குறவங்க எல்லாம் கோட்சே கூட்டமா?

:(

கோவி.கண்ணன் சொன்னது…

//கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவன் has left a new comment on your post "பொன்னியின் தவப் புதல்வர் - பிள்ளையார் பித்தர் தில...":

துத்தேரி...இதெல்லாம் ஒரு கட்டுரை. இதுக்கு 21 பேர் இதுக்கு முன்னாடி ஒரு ஜால்ரா அடிச்சிருக்காங்க.

சுதந்திரப்போராட்டத் தியாகி திலகர்.

வெள்ளையனிடம் பணம் வாங்கிக்கொண்டு சுதந்திரப்போராட்டத்தை கேவலப்படுத்திய பெரிய மனுசன் இல்லை.

உன்னைய மாதிரி மடப்பசங்களும் சுதந்திரமா தங்கள்இஷ்டப்படி இருக்கணும், இப்படி மடத்தனமான கட்டுரை எல்லாம் எழுவனும் என்று போராடியவர் தான் திலகர்.

திலகர் இறந்த ஆண்டு 1920.


1953ல் தானைத் தலைவர் பகுத்தறிவுப் பகல்கொள்ளையன் ஈ.வெ.ரா பிள்ளையார் சிலைகளை உடைக்கும் முன்னரே, ஏன் கல்கி கிருஷ்ணமூர்த்திக்கு 21 ஆண்டுகள் ஆகும் போதே திலகர் இறந்துவிட்டார்.

ஆரிய சமாஜ் பற்றி அடிப்படை அறிவு கூட இல்லதவர்கள் தான் இப்படி எழுதுவார்கள்.

ஆரிய சமாஜ் காரர்கள் வீட்டில் சிலை வழிபாடு செய்வது கிடையாது. ஆகவே பிள்ளையார் பொம்மைகள் எல்லாம் அவர்கள் வைத்திருக்க மாட்டார்கள்.

இந்துத்வா பற்றியும் அறிவு லேது. ஆனால், திட்டுவதற்கு நன்கு பயன்படுத்திக்கொள்ளும் வார்த்தை.

இந்துத்வாவின் முக்கிய புள்ளியாகக் கருதப்படுபவர் கோல்வார்கர். திலகர் இல்லை.

இதுக்கு மேலெயும் நீயெல்லாம் பதிவு எழுதியே ஆகணுமா...? அப்படி எழுதனும்னா உனக்குத் தெரிந்த சப்ஜெக்டில் எழுதித் தொலைக்கவேண்டியது தானே. என்ன மயித்துக்குத் தெரியாத சப்ஜெக்டில் மூக்கை நுளைக்கனும் ? //

கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவன், அவர்களே .... கம்யூனிஸ்டுகளுக்கு கால் அல்லது கையும்.....சேர்த்தே....பிடித்துவிடுங்க எனக்கு கவலை இல்லை.

இங்கே எழுதியது புனைவு. ஆனால் ஆண்டு ஆண்டு நடைபெறும் பிள்ளையார் ஊர்வல நிகழ்வும் அதன் மூலம் கலவரங்களும் உண்மை.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

திலகரைத் தூற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட பதிவாக நான் கருதவில்லை. நிகழ்வு உண்மையாக இருக்கலாம். ஆனால் நோக்கம் உன்னதமானது.

பெரியாரை பிழை கூறிய, தூற்றிய கும்பலுக்கு எதிர்வினையாக மட்டும் கருதுகிறேன்.

வால்பையன் சொன்னது…

//உண்மையில் பிள்ளையார் சிலை ஊர்வலம் என்பதை திலகர், இந்துக்களின் ஒற்றுமைய் கூட்டி அதை சுதந்திர போராட்டத்திற்கு பயன்படும் என்றுதான் ஆராம்பித்தார். அப்பிடி பயன்படுத்தியும் காட்டினார்.//


சரி சுதந்திரம் தான் வாங்கியாச்சுல! இப்பவும் எதுக்கு ஊர்வலம், மக்களை ஏமாத்தவா!?

வால்பையன் சொன்னது…

/பின் நாளில் ப்லொக் எளுத்தாளர்கள் எங்கின்ற சம்பாரித்து சாப்பிட்டுவிட்டு சும்மா பொழுதுபோக எளுதும் கூட்டம் இப்பிடி எளுதுவாங்க//

உங்களை பத்தி இங்க யாரும் எதுவும் கேக்கலையே!

வால்பையன் சொன்னது…

//உன்மையான(இப்ப இருக்கரவங்க இல்லை) தலைவர்கள் யாரை வேண்டும் ஆனாலும் விமர்சனம் செய்யும் முறை தவறு.//

இம்மாதிரி பேசி தான் சும்மா இருக்குறவனை தலைவர் ஆக்குறிங்க!
இந்த உலகில் விம்ர்சனத்துக்கு உட்படாத மனிதன் எவனுமில்லை!

வால்பையன் சொன்னது…

/இந்த மாதிரி தியாகிகள் தலைவர்களை விமர்சனம் செய்யும் முன் அந்த நாதாரிகள் நமக்கு என்ன தகுதி இருக்கிறது என ஒருமுறை யோசிப்பது நல்லது. //

விமர்சனத்துக்கு உட்படும் நாதாரிகள், தகுதியில்லாததால் தான் என்,கோவி போன்ற நாதாரிகள் விமர்சனம் பண்றோம்!

வால்பையன் சொன்னது…

கம்யூனிஸ்டுகளுக்கு கை அடிப்பவர் என்ன சொல்ல வர்றாருன்னு தெரியலையே!?

பெயரில்லா சொன்னது…

//
இங்கே எழுதியது புனைவு. ஆனால் ஆண்டு ஆண்டு நடைபெறும் பிள்ளையார் ஊர்வல நிகழ்வும் அதன் மூலம் கலவரங்களும் உண்மை.
//

கோ.க

பிள்ளையார் ஊர்வலத்தினால் தான் கலவரங்கள் நிகழ்கின்றன என்பதற்கு என்ன ஆதாரம் ?

கலவரங்கள் என்றுமே நடந்து வந்துள்ளது. பிள்ளையார் ஊர்வலம் என்பது ஒரு சாக்கு. இரு பிரிவினருக்குமே.

கலவரங்கள் ஏன் வருகின்றன? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய உனக்கு நேரமில்லை. ஆனால் நுணிப்புல் மேய்வது போல் மேம்போக்காக பிள்ளையார் ஊர்வலத்தினால் தான் கலவரங்கள் வருகிறது என்று தீர்ப்பு சொல்வது.

ஓள்பையன் மிகவும் அறிவாளி என்று தன்ன்னை நினைத்துக்கொண்டுள்ளான். ஆனால் உண்மையில் நிலைமை தலைகீழ். எந்த விஷயத்திலும் ஆழ்ந்த அறிவு இல்லை. எல்லா விஷயத்திலும் நான் முந்தி என்று முந்திக்கொண்டு கருத்து மட்டும் சொல்லுவான்.

வால்பையன் சொன்னது…

சரிங்க புத்திசாலி!
உங்க அட்ரஸ் கொடுங்க நீங்க வச்ச பேருக்கு எதாவது செய்ய ட்ரை பண்றேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவன் said...

கோ.க

பிள்ளையார் ஊர்வலத்தினால் தான் கலவரங்கள் நிகழ்கின்றன என்பதற்கு என்ன ஆதாரம் ?//

சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலைத்துக்கு போனால் எப் ஐ ஆர் நகல்கள் கிடைக்கும்.


//கலவரங்கள் என்றுமே நடந்து வந்துள்ளது. பிள்ளையார் ஊர்வலம் என்பது ஒரு சாக்கு. இரு பிரிவினருக்குமே.//

நானும் பிள்ளையார் சூரனை அழிப்பது போல் அவரே நேரடியாக கலவரம் பண்ணுகிறார்னு சொல்லவில்லையே.

//கலவரங்கள் ஏன் வருகின்றன? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய உனக்கு நேரமில்லை. ஆனால் நுணிப்புல் மேய்வது போல் மேம்போக்காக பிள்ளையார் ஊர்வலத்தினால் தான் கலவரங்கள் வருகிறது என்று தீர்ப்பு சொல்வது.//

அதானே கலவரங்கள் ஏன் வருகிறது ?
நிலவரம் மோசமானால் கலவரங்கள் வருது.


//ஓள்பையன் மிகவும் அறிவாளி என்று தன்ன்னை நினைத்துக்கொண்டுள்ளான். //

இப்படி சொன்னால் அப்பறம் ஏன் அவரு ஆள் பிடித்துக் கொடுப்பியான்னு கேட்கமாட்டார். வார்த்தை நிதானம் நிதானம்.
காயடிக்கிறவங்க கலவரப்படலாமா ?

//ஆனால் உண்மையில் நிலைமை தலைகீழ். எந்த விஷயத்திலும் ஆழ்ந்த அறிவு இல்லை. எல்லா விஷயத்திலும் நான் முந்தி என்று முந்திக்கொண்டு கருத்து மட்டும் சொல்லுவான்.//

சரி அவருகூட பார்ல ஒன்சிட்டிங்க், 5 ரவுண்ட் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வாங்க.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்