பின்பற்றுபவர்கள்

30 ஆகஸ்ட், 2009

வலையில் எழுதி ஒரு மசுரும் ஆகப் போவதில்லை.

கொத்துக் குண்டுகளால் கொத்துக் கொத்தாக தமிழர்கள் மடிகிறார்கள், ஓட்டுப் போடாதிங்கன்னு பலரும் பளாக்கில் பினாத்தினார்கள், தடுக்க முடிந்ததா ?

வென்றதும் கொக்கறித்தக் கூட்டம் தமிழனுக்கு சூடு சொறனையே இல்லை என்று தமிழனிடமே தமிழனை வைத்தே நிரூபனம் செய்தது. வெட்கித் தலை குனிந்தது விட்டு அடுத்த வேலையைப் பார்த்தோம்.

கடற்கரையில் அம்மணமாக கண்களைக் கட்டிவிட்டி ஒவ்வொருவராக அழைத்துச் சென்று சொரி நாயைச் சுடுவது போல் சுட்டுப் போட்டார்களாம், வீடியோ காட்சிகளைப் பார்த்து மீண்டும் துடிக்கிறார்கள்,

அந்தப் கொடும் செயல் வெளியே தெரிந்தும், 'அடப் பாவிகளா நீங்களெல்லாம் இவ்வளவு கேவலமான பிறவிகளா என்று உலகத்தார் காரி உமிழ்வார்களே என்று அச்சப்பட்டு, முதுகெலும்பற்ற கோழைகளாக அப்படியெலாம் நடக்கவில்லை அது களங்கம் கற்பிக்கும் வீடியோ என்று பதறுகிறான், செய்தவனுக்கே அதை ஒப்புக் கொள்ள மனம் கூசிப் போய் பச்சைப் பொய் சொல்லும் போது, அதைப் பார்த்துவிட்டு உணர்ச்சி வசப்படுவர்களால், மேடையில் பேசுபவர்களால், எழுதுபவர்களால் என்ன செய்துவிட முடியும் ?

எவன் செத்தாலும் எம் வீட்டு சொத்துக்கும், பதவிக்கும் குறைவில்லை என்று கொக்கறிக்கும் அரசியல் வியாதி கூட்டங்களை வைத்துக் கொண்டு நாம் உணர்ச்சி வசப்படுவது நம் உடல் நலத்துக்குக் கேடு.

இதோ இன்னொரு நடிகன் கூட தமிழர் எதிர்களுக்கு மாலை போட்டு வலம் வர ஆயத்தமாகிவிட்டான்.

டமிழன்.....டமிழன் நாமலும் அவனுக்கு வாழ்த்து சொல்லிக் கூவுவோம்.

ப்ளாக்குங்கிறது மன அரிப்பை தீர்த்துக் கொள்ளும் இடம் அதில் நம்மை போன்ற ஆசாமிகள், சிறுகதை, கவிதை, விவாதம் ஆகியவற்றை எழுதுவதுடன் நில்லாமல், தமிழன், தமிழ் என்று உணர்ச்சி வசப்படுவதால் ஒரு மசுரும் அறுவடையாகப் போவதில்லை. போயி புள்ளக் குட்டிங்களை படிக்க வையுங்க.

:(

30 கருத்துகள்:

ரகுநாதன் சொன்னது…

அப்படி போடுங்க. நானும் உண்ணாவிரதம், மனித சங்கிலி எல்லாம் கலந்து...ஒரு வருசமா புதினம், பதிவு, சங்கதி, தமிழ்வின், நெருடல், நக்கீரன் என்று ஒன்னு விடாம படிச்சு புலம்பி வந்தேன். கடைசியில் 500 ரூபாய் வாங்கி கொண்டு ஓட்டு போட்டுட்டானுங்க...பத்தாயிரம் கொடுத்தா இவனுகளோட------------------- கொண்டு போய் விட்ருவானுங்க.. பல போட்டி தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த நான், இந்தப் பிரச்சனையில் மனச செலுத்தி, கடைசியில் அவற்றில் தோல்வி அடைந்ததுதான் மிச்சம்...
எவன் பொழச்ச என்ன செத்தா என்ன என் வீடு அடுப்பு எரியுது என்று நினைக்கும் கூட்டத்தில் இருந்து கொண்டு நமக்கு எல்லாம் எதுக்கு பாஸ் பொது சேவை, தமிழின உணர்வு எல்லாம். அதெல்லாம் பராசக்தியோட முடிஞ்சு போச்சுங்க boss.

Ravi சொன்னது…

Two things.
1. there is a very small percentage of total population who are familier with internet beyond emails. Even if all those reading the blogs boycot the election, the net effect will be next to nothing
2. We need a systemic change in mentality and it will take time any such changes.

To my knowledge, blogs can be one of points which can stroke our conscience but cannot be the only source of it.

டவுசர் பாண்டி... சொன்னது…

அப்புறம் என்ன மசுருக்கு இந்த பதிவை எழுதினிங்கன்னு கேக்கனும்னு நினைச்சிட்டுதான் உள்ளாற வந்தேன்.

ஆனா உங்களுக்கு ஒரு உண்மைய சொல்லனும்னுதான் இந்த பின்னூட்டம், இங்கன அத்தன பயபுள்ளயும் நீங்க சொல்றதுக்கு முன்னாலயே அவனவன் சோலியமட்டுந்தான் பார்த்துட்டு இருக்கான். புள்ள குட்டியபடிக்க வச்சி நாலு காசு சம்பாதிக்கறதுல குறியா இருக்கறதாலதான் உங்க மாதிரி குமுற முடியலைன்னு நினைக்கிறேன்.

உடனே அப்ப நாந்தான் சோலியில்லாம, புள்ள குட்டிய படிக்க வைக்காம இருக்கேனான்னு டென்சனாவாதிங்க....நான் அப்படில்லாம் சொல்ல வரலே

TBCD சொன்னது…

:(

gulf-tamilan சொன்னது…

:(((

கோவி.கண்ணன் சொன்னது…

//கடைசியில் 500 ரூபாய் வாங்கி கொண்டு ஓட்டு போட்டுட்டானுங்க...பத்தாயிரம் கொடுத்தா இவனுகளோட------------------- கொண்டு போய் விட்ருவானுங்க..//

ஓட்டுப் போட்டவங்களை குறைச் சொல்ல முடியாது, அவர்களில் பலருக்கு என்ன நடக்கிறது என்பதே மறைக்கப்பட்டு இருந்தது.

துபாய் ராஜா சொன்னது…

ரோட்டுல நாய் அடிபட்டுக்கிடந்தா கூட என்னன்னு பார்க்க புளூகிராஸ் இருக்குது...... :(

siruthaai சொன்னது…

மயிலே! மயிலே! இறகு போடு என்றால் போடாது! நான் சிங்கள பாசிட்டுகளுக்கு எதிராக துப்பாக்கி ஏந்த தயார்..என்னோடு என்னால் முடிந்தவரை 120 தோழர்களை சேர்த்த்து இருக்கிறேன். நான் ஒன்றினை கேட்கிறேன்! இணையத்தில் தீட்டும் அட்டை கத்தி வீரர்கள் இசம்,ரசம் ,சாம்பார் என்று புலம்பியதை தவிர வேறு என்ன செய்தீர்கள் ..அது சரி மக்கள் போராட்டம்.. மக்கள் கிளர்ந்து எழவேண்டுமாம்.. என்ன உண்ணாவிரதமா?ஊர்வலமா?பொது கூட்டமா? எல்லாவற்றிலும் நான் கலந்து கொண்டு இருக்கிறேன் ஆனால் எவனும் ஒரு மயிறையும் இந்த இந்தி யாவில் புடுங்கவில்லையே!எப்போது தமிழன் சாவான் என்று விழி மேல் அல்லவா காத்து கொண்டு இருக்கிறார்கள். என்னால் இன்று ஈழத்தமிழர்கள் சுட்டு கொல்லப்படும் காணோளியை காண முடியவில்லையே! என் வயிறு எரிகிறதே! உண்ணாவிரதம் பொதுகூட்டம் தான் புரட்சி என்றால் எவன் இங்கு கண்ணேடுத்து பார்கிறான்.நானும் உண்ணாவிரதம் இருக்கிறேன் நீங்களும் இருங்கள் ..மொத்தமாய் எல்லாரும் செத்து போவோம்.. யாருக்கு என்ன லாபம்? நான் தீர்மானித்து விட்டேன் நீங்கள் சொல்லும் அந்த பொது உடைமையோ அல்லது வேறு ஏதொ நான் ஆயுதமேந்த தயாறாகி விட்டேன் நீங்கள் தயாரா? தய்வுசெய்து உங்கள் உங்கள் தோழர்களை ஓன்றிணைய சொல்லுங்கள் நாம் ஆயுதம் ஏந்தி சேகுவரா போல் போராடுவோம்!ஆயுத பயிற்சியை சீனா கொடுக்கட்டும் கூயுபா கொடுக்கட்டும் கிளம்புவோம் நாம் இது ஈழதிற்கு மட்டும் அல்ல நம் தாய் தமிழகதிற்கும் தான்..

http://siruthai.wordpress.com

பிரியமுடன்...வசந்த் சொன்னது…

எப்படியாவது யாராவது இதுக்கு நடவடிக்கை எடுப்பார்களா என்ற ஒரு நப்பாசை,மனக்குமுறல்தான் சார்...

:(

siruthaai சொன்னது…

மேலும் கதறவைக்கும் காட்சிகள் http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15398

மஸ்தான் சொன்னது…

மனசுக்கு மிகவும் கஷ்டமா இருக்கு... நாம பக்கதில இருந்தும் ஒன்னும் செய்ய முடியலைங்கிறத நினைக்கும் போது... சே... :(

ஏதாவது பன்னனும்...

கலகலப்ரியா சொன்னது…

//
எவன் செத்தாலும் எம் வீட்டு சொத்துக்கும், பதவிக்கும் குறைவில்லை என்று கொக்கறிக்கும் அரசியல் வியாதி கூட்டங்களை வைத்துக் கொண்டு நாம் உணர்ச்சி வசப்படுவது நம் உடல் நலத்துக்குக் கேடு.//

ரொம்ப வாஸ்தவம்.. MGR இரட்டை இலைன்னு.. பட்டிக்காடுங்க வாக்களிக்கராங்கன்னு சொன்னதெல்லாம் ஒண்ணுமில்லீங்க..! பரம்பர பரம்பரையா நாம இந்த கட்சின்னு காலர் தூக்கி விட்டுக் கொண்டு அலையும்.. படித்த இளம் சிங்கங்கள் நிறைய..!

//டவுசர் பாண்டி... said...

அப்புறம் என்ன மசுருக்கு இந்த பதிவை எழுதினிங்கன்னு கேக்கனும்னு நினைச்சிட்டுதான் உள்ளாற வந்தேன்.//

தோணும்தான்..!

அபுஅஃப்ஸர் சொன்னது…

சாட்டையால் அடித்து சிந்திக்க வைத்துவிட்டீர்கள்

கதியால் சொன்னது…

இவை வெளியே வந்த வீடியோ காட்சிகள். இன்னும் வெளிவராமல் எத்தனையோ எத்தனியோ அக்கிரமங்கள் இருக்கின்றன. எல்லாம் காலம் செய்த கோலம். விடுதலைப்புலிகளை விமரிசனம் செய்து தம்மை நடுநிலைவாதிகள் என்று காட்டிக்கொண்ட மகா அறிவாளிகள்(??) இப்போ எங்கே எந்த முந்தானைக்குள் கிடக்கின்றார்கள் என்பது தெரியாது. சிங்களவன் சிங்களவன் தான். இதைத்தான் அவன் முடிவெடுத்தான். அவன் உணர்ந்ததை காலம் எல்லோர்க்கும் விரைவில் உணர்த்தும். அது மட்டுமல்ல அவன் வழியே அதி உன்னதமான வழி என்றும் எல்லோரும் உணருவர்

balu சொன்னது…

பிளாக் பின்னூட்டம் போடவேண்டும் என்று நினைத்து மேதாவிமாதிரி நினைத்து. மசுரு பிசிரு எழுதாதீர்கள். பிளாக் எழுதுரவனும் படிக்கிற எந்த நாயிம் ஓட்டுப்போடுறது இல்லை, அப்படி இருக்கும் பொழுது, பிளாகில் எழுதி தமிழ் ஈழம் கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்தீரகள்.
உங்களுக்கு பின்னூட்டம் வேணும் அவ்வளவுதானே.

pullapoochi சொன்னது…

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்...தமிழ்மணத்தில் உள்ள மொத்த பதிவுகளின் எண்ணிக்கை சுமார் 5000. அதில் தமிழ், தமிழர் தமிழினம் என்று எழுதுவோர் சுமார் 1000. அதில் சீரிய சிந்தனையுடன், ஓட்டுப் போடாதே என்று எழுதியோர் 100 என்று வைத்துக் கொண்டாலும் அதை எத்தனை பேர் படித்திருப்பார்கள்? அதில் எத்தனை பேர் ஓட்டுப் போட்டிருப்பார்கள்? அட குறைந்தது எத்தனை பேர் இந்தப் பதிவைப் படித்திருப்பார்கள்? ஐயா பதிவு எழுதுவோரில் முக்கால்வாசி வெளிநாட்டில் குப்பை கொட்டுவோரே...அதில் எத்தனை பேர் இடைத் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் வந்து ஓட்டுப் போட்டுச் சென்றார்கள்? பிளாக் எழுதும் பெரும்பாலானோர் எந்தப் பத்திரிகையிலும் எழுத முடியாத அல்லது வாய்ப்புக் கிடைக்காதவர்களே. அவர்களுக்கு என்று ஒரு சில நண்பர்கள் மாற்றி மாற்றி பின்னூட்டம் போட்டு சொறிந்து கொள்கிறார்கள். பிறகு ஹிட்ஸ் கணக்கு வேறே...பிறகு அவர்களுக்காகவே எதாவது பதிவு போட வேண்டியது.....

திட்டி எழுதினால் கூட மீ த பர்ஸ்ட்டு என்று ஒரு கேனையன் கமென்ட் போடறான். சீரியஸ் பதிவு போட்டாலும் அப்படி போடுறான்...இவனுகள வெச்சுகிட்டு என்ன புரச்சி பண்றது... இப்ப நீங்களே எதுக்கு இந்தப் பதிவு போட்டு இருக்கீங்க.... இதில பின்னூட்டம் எதற்கு? ஒரு நல்ல பதிவு போட்டால் படித்து விட்டுச் செல்லட்டுமே...உங்கள் இ}மெயில் முகவரி மட்டுமே போதுமே? எதற்கு பின்னூட்டம்?

போங்க போய் புள்ள குட்டிய படிக்க வையுங்க....

யாசவி சொன்னது…

:-(

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

:(
காக்கை குருவி எங்கள் சாதின்ன பாரதி பொறந்த ஊரு...

மாட்ட வேகமா அடிச்சா கேஸ் போட்டு இழுக்கும் மேனகாக்கள் வாழும் நாடு.

இவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இலங்கையில் செய்யும் இனப்படுகொலை பர்வால்ல போலும்.

மடையர்கள் வாழும் நாட்டிற்கு மந்திரிகள் எதற்கு?

தமிழக எம்.பிக்கள் டெல்லிக்கு சென்றது வட நாட்டானிடம் பிச்சை எடுப்பதற்கா?

கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

அத்திவெட்டி கத்திச் சொன்னதுக்குக் கடுமையா கண்டனம் தெரிவிச்சுக்கறேன்:

/தமிழக எம்.பிக்கள் டெல்லிக்கு சென்றது வட நாட்டானிடம் பிச்சை எடுப்பதற்கா?/

பிச்சை எடுக்க அல்ல உரிமைக் குரல் எழுப்பி, பங்கைக் கேட்டு வாங்கறதுக்கு!

மாநில சுயாட்சின்னா இங்கே மொத்தமா சுருட்டறது!
மத்தியில் கூட்டாட்சின்னா, அங்கயும் பங்கு பிரிச்சுக்கறது!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கிருஷ்ணமூர்த்தி


அத்திவெட்டி கத்திச் சொன்னதுக்குக் கடுமையா கண்டனம் தெரிவிச்சுக்கறேன்:

/தமிழக எம்.பிக்கள் டெல்லிக்கு சென்றது வட நாட்டானிடம் பிச்சை எடுப்பதற்கா?/

பிச்சை எடுக்க அல்ல உரிமைக் குரல் எழுப்பி, பங்கைக் கேட்டு வாங்கறதுக்கு!

மாநில சுயாட்சின்னா இங்கே மொத்தமா சுருட்டறது!
மத்தியில் கூட்டாட்சின்னா, அங்கயும் பங்கு பிரிச்சுக்கறது!//

ஐயா,

என்னன்ன மாதிரி உரிமைங்க...?
(இதுக்கு காவிரி உரிமை,பாலாறு உரிமை, பெரியாறு உரிமை இதெல்லாம் சொல்லிப்புடாதிய)

என்னன்ன மாதிரி குரல்ங்க...?
(இதுக்கு மிமிக்ரின்னு மட்டும் சொல்லிப்புடாதீங்க)

தெரியாமத் தானுங்க கேக்குறேன்.

அப்பாவி முரு சொன்னது…

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...


ஐயா,

என்னன்ன மாதிரி உரிமைங்க...?
(இதுக்கு காவிரி உரிமை,பாலாறு உரிமை, பெரியாறு உரிமை இதெல்லாம் சொல்லிப்புடாதிய)

என்னன்ன மாதிரி குரல்ங்க...?
(இதுக்கு மிமிக்ரின்னு மட்டும் சொல்லிப்புடாதீங்க)

தெரியாமத் தானுங்க கேக்குறேன்.//

அதான் உரிமைக்கான அர்த்தத்தை தெளிவாச் சொல்லீட்டாரே,


மாநில சுயாட்சின்னா இங்கே மொத்தமா சுருட்டறது!
மத்தியில் கூட்டாட்சின்னா, அங்கயும் பங்கு பிரிச்சுக்கறது!

அவ்வளவுதான்

அப்பாவி முரு சொன்னது…

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...


ஐயா,

என்னன்ன மாதிரி உரிமைங்க...?
(இதுக்கு காவிரி உரிமை,பாலாறு உரிமை, பெரியாறு உரிமை இதெல்லாம் சொல்லிப்புடாதிய)

என்னன்ன மாதிரி குரல்ங்க...?
(இதுக்கு மிமிக்ரின்னு மட்டும் சொல்லிப்புடாதீங்க)

தெரியாமத் தானுங்க கேக்குறேன்.//

அதான் உரிமைக்கான அர்த்தத்தை தெளிவாச் சொல்லீட்டாரே,


மாநில சுயாட்சின்னா இங்கே மொத்தமா சுருட்டறது!
மத்தியில் கூட்டாட்சின்னா, அங்கயும் பங்கு பிரிச்சுக்கறது!

அவ்வளவுதான்

ஆ.ஞானசேகரன் சொன்னது…

///எவன் செத்தாலும் எம் வீட்டு சொத்துக்கும், பதவிக்கும் குறைவில்லை என்று கொக்கறிக்கும் அரசியல் வியாதி கூட்டங்களை வைத்துக் கொண்டு நாம் உணர்ச்சி வசப்படுவது நம் உடல் நலத்துக்குக் கேடு.///

ம்ம்ம்ம்கும் என்னத்த சொல்ல

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சிந்திக்கக் கூடியவர்கள் சிந்திக்கட்டும் அண்ணா.....

யுவகிருஷ்ணா சொன்னது…

நல்ல நகைச்சுவைப் பதிவு!

கபிலன் சொன்னது…

எல்லோருக்கும் இருக்குற மனக்குமுறல். எவ்வளவோ அறப்போராட்டம் நடத்தியாச்சு. நம்முடைய குரல் அவங்களுக்கு கேட்கவில்லையா? மக்களின் உணர்வுகளை நசுக்கும் நயவஞ்சக அரசியல் நரிகள், திராவிடர் என்ற போர்வையில்.

என்ன பண்றதுன்னு தெரியல..

LOSHAN சொன்னது…

விடுங்கண்ணே.. எவ்வளவோ நடந்து போச்சு.. என்ன உண்மை வெளி வந்து என்ன ஆகப் போகிறது.. யாரை நொந்து நடக்கப் போவதென்ன..

PITTHAN சொன்னது…

தங்களின் கோபம், புரிகின்றது, நல்ல காலம் கண்டிப்பாக வரும். வினை விதித்தவர்கள் வினை அறுப்பார்கள்.

SanjaiGandhi சொன்னது…

//கொத்துக் குண்டுகளால் கொத்துக் கொத்தாக தமிழர்கள் மடிகிறார்கள், ஓட்டுப் போடாதிங்கன்னு பலரும் பளாக்கில் பினாத்தினார்கள், தடுக்க முடிந்ததா ?//

கொடநாட்டு மகாராணியின் தளபதிகள் அரியனை ஏறினால் சுபிட்ஷம் பிறக்கும். தனி ஈழம் மலரும் என்றெல்லாம் சொல்லி வாக்கும் கேட்டார்களே.. தடுக்க முடிந்ததா?

http://govikannan.blogspot.com/2009/04/blog-post_27.html

SanjaiGandhi சொன்னது…

சிங்களர்களின் மேலும் தொடரும் ஈனத்தனத்தை கண்டிக்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்