பின்பற்றுபவர்கள்

22 ஆகஸ்ட், 2009

பாலியல் தொழிலும், திருட்டும் !

இந்திய சமய நம்பிக்கையாக கடவுள் நம்பிக்கையின் ஒரு கிளை நம்பிக்கை மற்றும் உறுதியான நம்பிக்கையாக சிலை வழிபாடுகள். 'கடவுளுக்கும் எதாவது செய்யனும் பாஸ்' என்கிற புரிதலாக சிலைகள் வடித்து வைத்து மனுசனுக்கு செய்வது போல், நகை அலங்காரம், மூளிகைக் குளியல்கள், அரசர்களைப் போல் வீதி உலான்னு நடக்குது. அந்த சிலை சக்தி மிக்கது என்று கிளப்பி விடப்பட்டால் வேண்டுதல்களும், காணிக்கைகளும் குவிந்துவிடும், இல்லையென்றால் பாழடைந்து ஒரு வேளை எண்ணெய் கூட கோவிலுக்கு ஊற்றமாட்டார்கள். எல்லாம் 'சக்தி' பற்றிய நம்பிக்கை மகிமைதான். ஆத்திகம், ஆன்மிகம் என்கிற சொல்லில் மிகவும் ஈடுபாட்டுடன் அது குறித்த எதிர்மறை விமர்சனங்களை சகித்துக் கொள்ள முடியாதவர்கள் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கோவில்கள் என்பது நிறுவனமயமாகி ஒரு பிரிவினருக்கு, சாதியினருக்கு வயிற்றுப் பிழைப்பாகிவிட்டது என்று சொன்னால் அவர்கள் மிகவும் சினம் அடைகிறார்கள்.

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதாக வேண்டுதல்கள் மூலம் கோவில்களுக்கு வந்து சேரும் பொருள்கள் மூலம், பக்தர்களுக்கு வசதி செய்து தரச் செலவு செய்வதைவிட கொள்ளைபோகும் செல்வங்கள் பலமடங்கு. ஆண்டவனுக்கும் மேலானோவராக தங்களை நினைத்துக் கொண்டால் ஆண்டவனுக்கு சேவை செய்வதற்கு அங்கு அபகரிக்கப்படும் செல்வங்கள், சொத்துகள் ஆகியவற்றை கூலியாக அல்லது மிகவும் அற்ப சொற்பமாக நினைத்துக் கொள்வார்களோ என்னவோ, கோவில் சொத்தை கொள்ளை அடிக்கிறோம், அபகரிக்கிறோம் என்ற மனசாட்சிகளே எழாது போல.

இறைவன் என்கிற உருவகம், குறியீடு ஆகியவை இல்லாத ஒன்று நினைக்கும் நாத்திகர்கள், இறை குறித்து தாங்கள் எதுவும் பயப்படத் தேவை இல்லை என்பது அவர்களுடைய எண்ணத்திலேயே இருக்கும் ஒன்று. ஆனால் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு இறைவன் பெயரைப் பயன்படுத்தி கொள்ளை அடிப்பதெல்லாம் எந்தவகை இறை நம்பிக்கை என்று தெரியவில்லை. சிலைத் திருடர்களில் நாத்திகர்கள் இருக்கவே முடியாது. நான் முன்பு கூடக் குறிப்பிட்டு இருக்கிறேன். சிலை திருடன் ஒருவனைப் பிடித்து விசாரித்தால் கடவுள் நம்பிக்கை இல்லாததால் தான் நான் சிலையை பொம்மையாக நினைத்துத் திருடுகிறேன் என்று சொல்லுபவன் எவனுமே கிடையாது. கஜினிகள் காலத்தை விட்டுவிட்டுப் பார்த்தால் தற்பொழுது சிலைத் திருட்டில் ஈடுபடுபவர்களில் பிறமத்தினர் மிக மிகக் குறைவு. சிலைத் திருடுபவன் இறைவனின் புகழ் தெரியாது பேராசையால் திருடுகிறான் என்றால், அன்றாடம் அர்சனை செய்யும் அர்சகர்களில் சிலர் கோவில் சொத்தில் கையை வைப்பதும், கையாடல் செய்வது என்ன வகையான ஒழுக்கம் ? என்ன வகையான இறை நம்பிக்கை ? ஆனால் இதற்கு சாக்காகக் கூறப்படும் பொருளாதார நிலைமையைச் சொல்லி பரிதாபம் தேட முயல்வது ஞாயம் தேட முயல்வதும் சரியா ?

காம உணர்வைக் கட்டுப்படுத்த முடியாதவர்களிடம் தன்னை மூலதனமாக வைத்துச் செய்யும் பாலியல் தொழிலை(விபச்சாரத்தை) விட, அடுத்தவர் பொருளை அபகரிக்கும் திருட்டு(த் தொழில்) மிக மிக ஈனத்தனமானது என்று நான் சொன்னால் அது சரியா ? தவறா ?

13 கருத்துகள்:

iNbAh சொன்னது…

உங்களுடைய கருத்து ஆதங்கம் உண்மையானது தான், திருட்டு பொதுமைப்படுத்தியது இந்த இடத்தில் கோயில்களில் நடக்கும் பகல் கொள்ளையை மட்டும் குறிக்கிறதா இல்லை உலகில் நடக்கும் அனைத்து வகையான திருட்டும் பாலியல் தொழிலுக்கும் சமமானது என்கிறீர்களா? இது நம்பிக்கை சார்ந்த விஷயம், ஒரு சவ்வூடு பரவல் ... ஒரு பட்டிமன்றம் போட்டு 4 மணி நேரம் விவாதித்தாலும் புரியாத புதிர். இதையெல்லாம் பார்த்து பார்த்து தான் அந்தக் கடவுளும் வாயடைத்து சிலையாய் போனாரோ ... ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏய்க்கிற கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும், திருடர்களாய் பார்த்து திருந்தினால் தான் உண்டு. நல்ல தீர்க்கமான சிந்தனை... வாழ்த்துக்கள்....

கோவி.கண்ணன் சொன்னது…

//iNbAh said...
உங்களுடைய கருத்து ஆதங்கம் உண்மையானது தான், திருட்டு பொதுமைப்படுத்தியது இந்த இடத்தில் கோயில்களில் நடக்கும் பகல் கொள்ளையை மட்டும் குறிக்கிறதா இல்லை உலகில் நடக்கும் அனைத்து வகையான திருட்டும் பாலியல் தொழிலுக்கும் சமமானது என்கிறீர்களா? இது நம்பிக்கை சார்ந்த விஷயம், ஒரு சவ்வூடு பரவல் ... ஒரு பட்டிமன்றம் போட்டு 4 மணி நேரம் விவாதித்தாலும் புரியாத புதிர். இதையெல்லாம் பார்த்து பார்த்து தான் அந்தக் கடவுளும் வாயடைத்து சிலையாய் போனாரோ ... ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏய்க்கிற கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும், திருடர்களாய் பார்த்து திருந்தினால் தான் உண்டு. நல்ல தீர்க்கமான சிந்தனை... வாழ்த்துக்கள்....
//

பிறர் பொருளை அபகரித்தல் தன்னை தாழ்த்திக் கொண்டு (பாலியல் தொழில் மூலம்) பொருள் ஈட்டுவதை விட ஈனத்தனமானது என்றே நினைக்கிறேன். தானே விரும்பாமல் பாலியல் தொழிலாளியிடம் செல்பவர் கிடையாது. திருட்டு சமூகக் குற்றம், பாலியல் தொழிலாளியிடம் செல்வது, பாலியல் தொழில் செய்வது தன்னொழுக்கம் குறித்தது மட்டுமே. தனிமனித ஒழுக்கமின்மையைவிட, ஒருவர் புரியும் சமூகக் குற்றம் மிக இழிவானது

Arun Kumar சொன்னது…

@பிறர் பொருளை அபகரித்தல் தன்னை தாழ்த்திக் கொண்டு (பாலியல் தொழில் மூலம்) பொருள் ஈட்டுவதை விட ஈனத்தனமானது என்றே நினைக்கிறேன். @

எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள்

மெய் பொருள் காண்பது அறிவு

Arun Kumar சொன்னது…

நல்லா எழுதி இருக்கீங்க
நன்றி

TBD சொன்னது…

ஆ.! இங்கே பதிந்து விட்டது. தயவு செய்து நீக்கி விடுங்கள்.
முத்துக்கள் இடையே ஒரு கல்

கோவி.கண்ணன் சொன்னது…

//TBD said...
ஆ.! இங்கே பதிந்து விட்டது. தயவு செய்து நீக்கி விடுங்கள்.
முத்துக்கள் இடையே ஒரு கல்
//

உங்களை சந்தித்தது எனக்கும் மிக்க மகிழ்ச்சி !

மின் அஞ்சல் govikannan at gmaildotcom

அகல் விளக்கு சொன்னது…

//கஜினிகள் காலத்தை விட்டுவிட்டுப் பார்த்தால் தற்பொழுது சிலைத் திருட்டில் ஈடுபடுபவர்களில் பிறமத்தினர் மிக மிகக் குறைவு. //

உண்மைதான்.............

அப்பாவி முரு சொன்னது…

//வேண்டுதல்கள் மூலம் கோவில்களுக்கு வந்து சேரும் பொருள்கள் மூலம், பக்தர்களுக்கு வசதி செய்து தரச் செலவு செய்வதைவிட கொள்ளைபோகும் செல்வங்கள் பலமடங்கு//

அரசியல்வாதி பொறுக்கித் தின்ன அரசியல்,

அரசு ஊழியன் பொறுக்கித் தின்ன அரசாங்கம்,

கோவில் ஊழியன் பொறுக்கித் தின்ன கோவில்!

kumar சொன்னது…

//இந்திய சமய நம்பிக்கையாக கடவுள் நம்பிக்கையின் ஒரு கிளை நம்பிக்கை மற்றும் உறுதியான நம்பிக்கையாக சிலை வழிபாடுகள். 'கடவுளுக்கும் எதாவது செய்யனும் பாஸ்' என்கிற புரிதலாக சிலைகள் வடித்து வைத்து மனுசனுக்கு செய்வது போல், நகை அலங்காரம், மூளிகைக் குளியல்கள், அரசர்களைப் போல் வீதி உலான்னு நடக்குது. அந்த சிலை சக்தி மிக்கது என்று கிளப்பி விடப்பட்டால் வேண்டுதல்களும், காணிக்கைகளும் குவிந்துவிடும், இல்லையென்றால் பாழடைந்து ஒரு வேளை எண்ணெய் கூட கோவிலுக்கு ஊற்றமாட்டார்கள்.
//சூப்பர்

முதல் பத்தியிலயே பட்டய கிளப்பீட்டீங்க,

நான் போன எல்லா கொவில்களிலும் பார்த்திருக்கேன்,
மூலவருக்கும்னு மட்டும்னு இல்ல எந்த சாமி சிலைக்கு அதிகமா பணம் விழுகிறதோ அந்த சாமிக் சிலைக்குத்தான் பூசை அலங்காரமெல்லாம் ரொம்ப ஜோரா நடக்கும்.

மத்த சிலைகளையெல்லாம் கன்டுக்கவே மட்டாங்க‌

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//அது சரியா ? தவறா ?//


ம்ம்ம்ம் தெரியலயேஏஏஏஏஎ
நடந்துகொண்டுதானே இருக்கு

PITTHAN சொன்னது…

தங்களுடைய எளுத்துக்கள் நன்றாக உள்ளன. ஆனால் இன்று அர்ச்சகர்களை வீட அறங்காவலர் கொள்ளை அதிகமாக உள்ளன.தட்டில் விலும் 5ரூபாய் திருடும் சாதீயை வீரமாக விமர்சிக்கும் கூட்டம், கோடி கணக்கில் கோவில் சொத்தை (இடம்) கொள்ளை அடிப்பவனை காணாதுவிட்டுவிடும். கோவில் வழிபடும் இடம் அதை சம்பாதிக்கும் இடமாக மாற்றியது. மடாதிபதிகளும்,ஆதினங்ளும் தான். 15000 சம்பளத்திற்க்காக் நாம் போடும் வேடங்களும் கூறும் பொய்களும் எத்தனை. முதுகு முலுதும் அலுக்கு வைத்து பொதுவில் அனைவரையும் திட்டாமல், வெறும் ஓடும் பாம்பை அடிப்பது போல் ஒரு சாதி வர்ககத்தை மட்டும் திட்டி எளுதும் உங்கள் வீரம் மிகவும் பாராட்டப்பட வேண்டியதுதான். என்னை பொறுத்த வரை பாலியலும்விபச்சரமும், சாராயக்கடையும், vieda அரசியல் மற்றும் மோசமான midia is worst

கோவி.கண்ணன் சொன்னது…

//PITTHAN said...
தங்களுடைய எழுத்துக்கள் நன்றாக உள்ளன.//

நன்றி நன்றி !

// ஆனால் இன்று அர்ச்சகர்களை வீட அறங்காவலர் கொள்ளை அதிகமாக உள்ளன.தட்டில் விலும் 5ரூபாய் திருடும் சாதீயை வீரமாக விமர்சிக்கும் கூட்டம், கோடி கணக்கில் கோவில் சொத்தை (இடம்) கொள்ளை அடிப்பவனை காணாதுவிட்டுவிடும். கோவில் வழிபடும் இடம் அதை சம்பாதிக்கும் இடமாக மாற்றியது. மடாதிபதிகளும்,ஆதினங்ளும் தான். 15000 சம்பளத்திற்க்காக் நாம் போடும் வேடங்களும் கூறும் பொய்களும் எத்தனை. முதுகு முலுதும் அலுக்கு வைத்து பொதுவில் அனைவரையும் திட்டாமல், வெறும் ஓடும் பாம்பை அடிப்பது போல் ஒரு சாதி வர்ககத்தை மட்டும் திட்டி எளுதும் உங்கள் வீரம் மிகவும் பாராட்டப்பட வேண்டியதுதான். என்னை பொறுத்த வரை பாலியலும்விபச்சரமும், சாராயக்கடையும், vieda அரசியல் மற்றும் மோசமான midia is worst
//

பித்தன் ஜி,

(பார்பனர் அல்லாத) அறங்காவலர்களோ, ஆதினங்காளோ வேறு எந்த பொறுக்கியாக இருந்தாலும் அவங்க யாருமே வேதம் படிச்ச்வங்க கிடையாது, தன்னை நீதிபதி என்று சொல்லிக் கொள்பவர்கள் திருடினால் தண்டனை யார் கொடுப்பது ? வசதிக்கும் வாய்ய்ப்புக்கும் ஏற்ற அளவில் தான் திருடும் பொருளின் மதிப்பு இருக்கும், ஆனால் எல்லாமே திருட்டுத்தான்.

நல்லார் ஒருவருக்காக எல்லோர்க்கும் பெய்யும் மழை சரிதான். நல்லார் ஒரே ஒருவர்தான் ஒரு ஊரில் இருக்கிறார் என்பது ஊருக்கு பெருமையானது அல்ல

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

உண்மையில் பாலியல் தொழிலாளர்கள் பரிதாபமானவர்கள்

அவர்கள் மீது கோபப் படுவதை தவிர்த்து அனுதாபப் படவேண்டும். அவர்களை வேறு தொழில்களுக்கு திருப்ப வழிவகைகள் செய்ய வேண்டும். தினமும் ஒரு வேளை சாப்பாடுக்கு உத்திரவாதம் கொடுத்தால் கூட பெரும்பாலான பாலியல் தொழிலாளர்கள் திரும்பி விடுவார்கள்.

அவர்கள் மீது பாலியல் சுரண்டல் மீண்டும் நடக்காத வரையில் அவர்கள் அதே தொழிலுக்கு திரும்புதல் அரிது.


அதற்கான வழிவகைதான் சரியாக அமைவதில்லை.


----------------------------------


திருடுதல் என்பது ஒரு போதை போலவே இருக்கிறது. பெரும்பாலும் ஒரு சாகஸ உணர்வுடந்தான் நடத்தப் படுகிறது. வெறும் வயிற்றுப் பாட்டுக்காக நடைபெறும் திருட்டுக்கள் மிகக் குறைவு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்