மருத்துவ உலகின் புதிய பரிமாணங்களில் ஒன்றாக உறுப்புக் கொடைகள் 1965 முதலே உலகில் நடைமுறையில் இருக்கிறது. உறுப்பு தானங்கள் பெற காத்திருக்கும் நோயாளிக்களில் உலக அளவில் 5 விழுக்காட்டினருக்கே அண்மைய காலம் வரையில் உறுப்புகள் கிடைத்து வந்தன. அண்மையில் இந்த விழுக்காடு மிகுந்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதற்குக் காரணம் உறுப்பு தானங்கள் பற்றிய விழிப்புணர்வும் தனிமனிதர்களின் பெருந்தன்மையுமே காரணம். அண்மையில் 'பசங்க' படத்தில் காட்டப்படும் இரு சிறுவர்களின் வீடுகளிலும் ஒருவர் வீட்டில் 'இரத்தானம் செய்துள்ள குடும்பம்' என்ற பலகையும், மற்றொரு வீட்டில் 'உடல் தானம் செய்துள்ள குடும்பம்' என்று பலகையும் இருக்கும், அப்படி ஒரு காட்சியை வைத்த இயக்குனர் பாண்டியராஜை வெகுவாகப் பாராட்டலாம்.
'உடல் மண்ணுக்கு' என்கிற பழமொழிகள் பழமையாகும் நடவெடிக்கை என அண்மைய காலங்களில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விபத்தில் இறந்தவர்களின் உடல் தானம் செய்யும் பெற்றொர்களின் எண்ணிக்கை மிகுந்திருப்பது மனித நேயம் வளர்ந்திருப்பதைக் காட்டுகிறது.
உறுப்பு தானங்களுக்கு எதிராக சில கருத்துகள் இருக்கின்றன, உதாரணத்திற்கு உறுப்பு தானம் கிடைப்பது எவ்வளவு எளிதன்று ஆகையால் பணக்காரர்கள் அல்லது பணக்கார நாட்டினர் ஏழைகளைக் குறிவைத்து செயல்படுகிறார்கள், உறுப்புகளின் தேவை வாழ்வியல் ஆதாரம் என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்புகள் விற்பனை மறைமுகமாக பெரிய தொழிலாகவே நடந்து வந்திருக்கிறது. உறுப்புகளைப் பெற சீனாவை பல நாடுகள் முற்றுகை இட்டதாகவும், மரண தண்டனைப் பெற்ற கைதிகளின் உறுப்புகள் விற்கப்பட்டதாகவும் Organ Donation (Opposing Viewpoints) என்ற ஆங்கில நூலில் படித்தேன். இந்தியாவிலும் ஏழைகளின் சிறுநீரகங்கள் மலிவு விலைக்கு சட்டவிரோதமாகப் பெற்றததைத் தொடர்ந்து, உலக நாடுகள் உறுப்பு தானங்கள் குறித்த சட்டதிட்டங்களையும், நடைமுறைகளையும், கவுன்சிலிங்க் எனப்படும் ஒப்புதல் குறித்த அனுகுமுறைகளும் ஏற்பட்டு, உறுப்பு தானங்களை முறைப்படுத்தி இருக்கிறார்கள்.
இறந்த உடல்களில் இருந்து பெறப்படும் உறுப்புகள் அழிவதற்குப் பதிலாக மற்றொருவரைக் காப்பாற்றுகிறது என்கிற புரிதல் இருந்தும், இதற்குத் தடையாக இருப்பது ஒன்றே ஒன்று தான். மதம் !!! ஆப்ரகாமிய மத நம்பிக்கையாளர்கள் அவர்களின் உறுப்புகளை அவர்கள் தானம் செய்யத் தடையாக நினைப்பதற்கு காரணம், 'முழுக்க முழுக்க எனது வாழ்க்கைக்காக கடவுளால் கொடுக்கப் பெற்ற உறுப்புக்களை பிறருக்குக் கொடுக்கும் படி கடவுள் வேத நூல்களில் அறிவுறுத்தவில்லை, எனினும் இஸ்லாமியர்களிடையே உறுப்பு தானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதை மீறி என்னால் உறுப்பு தானம் செய்ய முடியாது' என்ற கருத்து நிலவுவதால் மேற்கத்திய நாடுகளில் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும் மதநம்பிக்கையாளர்களிடையே அவற்றிற்கு பரவலான வரவேற்பு இல்லை, இந்த காரணங்களினால் உறுப்புகளுக்கு காத்திருக்கும் நோயாளிகளில் ஆண்டுக்கு 20 விழுக்காட்டினர்வரை இறப்பை தழுவுவதாக அந்நூலில் குறிப்பிட்டு இருந்தது.
இந்திய சமய நம்பிக்கைகளில் மறுபிறவி பற்றிய நம்பிக்கை இருப்பதால் 'உடல் அழியக் கூடியது, உறுப்புகளை தானம் செய்வதால் தவறு இல்லை என்றும், பல்வேறு தானங்கள் இந்திய சமயங்கள் அனைத்திலுமே வழியுறுத்தப்பட்டு இருப்பதாலும் உடல் வேறு தலைவேறாக உறுப்பு அமைந்திருக்கும் கடவுள் உருவங்கள் இருப்பதாலும்' மன அளவில் உடல் தானம் செய்ய விரும்பும் இந்திய சமய நம்பிக்கையாளர்களை இந்திய சமயங்கள் தடைசெய்ய வில்லை என்றும், ஆனாலும் உறுப்புதானங்கள் பற்றிய விழிப்புணர்வு இந்தியாவிலும் குறைவாகவே இருக்கிறது என்று அந்த நூலில் சொல்லப்பட்டு இருந்தது. மத நம்பிக்கையாளர்கள் பிறமதத்தினருக்கு உறுப்பு தானம் செய்ய முன்வராவிட்டாலும் கூட, தன் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு பொறுத்த வேண்டும் என்ற வேண்டுகோள்களுடன் தானம் செய்ய முன்வரலாம்.
உறுப்பு தானங்கள் பற்றிய பல்வேறு மத நம்பிக்கைகளும், வரவேற்பும் பற்றிய தகவல் இங்கே (http://www.donatelifeny.org)
சிங்கையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொலைகாட்சியில் பணி புரிந்த காதலர்களில் காதலர் ஒருவருக்கு கல்லீரல் கெட்டுப் போனபோது, காதலி தானம் செய்து காதலரைக் காப்பாற்றினார் என்ற தகவல் பலரால் பேசப்பட்டு பாராட்டப்பட்டது. உறுப்பு தானங்களின் பயன் கருதி சிங்கப்பூர் அரசு, விபத்தில் இறக்கும் ஒருவரின் உடலில் இருக்கும் உறுப்புகள் தானம் செய்ய முன்வரவேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் அதனை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். சிங்கப்பூரில் இருக்கும் பல்வேறு மத அமைப்புகளும் அதற்கு இணங்கவே சிங்கப்பூரில் விபத்தில் மூளை சாவாக இறப்பவர்களின் உறுப்புகள் செயல்படக் கூடியது என்றால் அதை காத்திருக்கும் நோயாளிகளுக்கு பொருத்துகிறார்கள்.
தமிழகத்தில் சென்ற வாரம் திருச்சியைச் சேர்ந்த ஒரு வாலிபரின் உறுப்பு பெற்றோர்களால் தானம் செய்யப்பட்டது, நேற்று சேலத்தில் ஒருவாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருக்கிறது. விஐபிகளில் நடிகர் கமலஹாசன் ஏற்கனவே உடல் தானம் செய்தவர் என்கிற தகவல் பலருக்கும் தெரிந்திருக்கும்.
உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது ? என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
36 கருத்துகள்:
useful article...
pasanga director 'samuthrakani alla..'.. pandiyaraaj...
//இரா. வசந்த குமார். said...
useful article...
pasanga director 'samuthrakani alla..'.. pandiyaraaj...
12:00 PM, August 20, 2009
//
:)
மாற்றிவிட்டேன். 'பசங்க' என்பதற்கு பதிலாக 'நாடோடிகள்' என்று எழுதி இருந்தேன். மற்றொரு நண்பர் பார்த்த்து மாற்றச் சொன்னார்.
நல்ல இடுகை..
நான் சார்ந்திருக்கும் அரிமா சங்கம்
கடந்த ஒரு வருடத்தில் 60 கண் தானங்களை பெற்றுக் கொடுத்திருக்கிறோம்
முதல் தடவையாக, ஒரு நல்ல விஷயத்தை எடுத்துக் கொண்டதற்கு வாழ்த்துக்கள்.
எடுத்துக் கொண்ட விஷயத்தை, வழக்கம் போல ஏதோ ஒரு லேபில் குத்திக் கொண்டு, சர்ச்சைக்குரியதாகவும், திசைமாறிப்போய் விடுவது போல அல்லாமலும் எழுதியிருப்பதற்கு, உளங்கனிந்த பாராட்டுக்கள்!
நல்ல அருமையான பதிவு..பாராட்டுக்கள்.
ஒரு சின்ன சமய கேள்வி :)
உறுப்புதானம் செய்துவிட்டால்
'எழுப்புதல் நாள்' அன்று அந்த உறுப்பு இல்லாமல் செயல்படுவது எப்படி?
உடல் கர்மத்தினால் வந்ததாக சொல்லுகிறார்கள். தானம் செய்வதால் பிறருக்கு நம் கர்மா சென்றுவிடாதா?
நம் உடல் உறுப்பு வேறு ஒருவரின் உடலில் கர்மம் செய்து கொண்டிருக்கும் பொழுது நாம் இறந்த பிறகு நமக்கு எப்படி கர்மம் நிறைவடைந்து முக்தி கிடைக்கும்?
:))
// ஸ்வாமி ஓம்கார் said...
நல்ல அருமையான பதிவு..பாராட்டுக்கள்.
ஒரு சின்ன சமய கேள்வி :)
உறுப்புதானம் செய்துவிட்டால்
'எழுப்புதல் நாள்' அன்று அந்த உறுப்பு இல்லாமல் செயல்படுவது எப்படி?//
எத்தனையோ உடல்கள் அடக்கம் செய்ய முடியாத அளவுக்கு, விமான விபத்து போன்றவற்றில் எரிந்தும், இயற்கை சீரழிவுகளால் உருத்தெரியாமல் அழிவதில் எந்த மதம் சார்ந்த உடல்களும் விலக்கு அல்ல, என்பதை 'எழுப்புதல்' காரர்கள் உணர்ந்து கொள்வதால் உறுப்பு தானம் சிக்கல் இல்லை :)
//உடல் கர்மத்தினால் வந்ததாக சொல்லுகிறார்கள். தானம் செய்வதால் பிறருக்கு நம் கர்மா சென்றுவிடாதா?
நம் உடல் உறுப்பு வேறு ஒருவரின் உடலில் கர்மம் செய்து கொண்டிருக்கும் பொழுது நாம் இறந்த பிறகு நமக்கு எப்படி கர்மம் நிறைவடைந்து முக்தி கிடைக்கும்?
:))
//
உடல் கருவிதானே, கத்தி வெட்டினால் கத்திக்கு தண்டனைக் கிடையாது என்பது ஸ்வாமிக்கு தெரியாதுஆ ?
important issue
:-)
///இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.///
இங்கு நீங்கள் குறிப்பிடுவது உறுப்பு தானத்தையே என்று நினைக்கிறேன். கமலஹாசன் செய்தது உடல்தானம் - மருத்துவக் கல்லூரிக்கு. உறுப்புதானம் மூளைச்சாவு அடைவோர் மட்டுமே செய்யமுடியும். நடிகர் மாதவன் உறுப்புதானம் pledge செய்துள்ளார்.
ஆங்கிலத்தில் கண் (அல்லது உறுப்பு) தானம் செய்ய வலியுறுத்தும்போது donate your eyes என்று சொல்லாமல் pledge your eyes என்று கூறுவதே சரி. இதற்கு நிகராகத் தமிழில் என்ன சொல்ல்லாம்?
//முதல் தடவையாக, ஒரு நல்ல விஷயத்தை எடுத்துக் கொண்டதற்கு வாழ்த்துக்கள்.//
ரிப்பீட்டேய்ய்..
\\உடல் கர்மத்தினால் வந்ததாக சொல்லுகிறார்கள். தானம் செய்வதால் பிறருக்கு நம் கர்மா சென்றுவிடாதா?\\
செல்லாது, பெறுபவரின் கர்மாவுக்கு மாறிவிடும்
\\நம் உடல் உறுப்பு வேறு ஒருவரின் உடலில் கர்மம் செய்து கொண்டிருக்கும் பொழுது நாம் இறந்த பிறகு நமக்கு எப்படி கர்மம் நிறைவடைந்து முக்தி கிடைக்கும்?\\
கர்மா நிறைவடைவதற்கும், உறுப்புதானத்திற்கும் உள்ள தொடர்பு முக்கியத்துவம் பெறாது.,
//கதிர் - ஈரோடு said...
நல்ல இடுகை..
நான் சார்ந்திருக்கும் அரிமா சங்கம்
கடந்த ஒரு வருடத்தில் 60 கண் தானங்களை பெற்றுக் கொடுத்திருக்கிறோம்//
தங்களின் சேவைக்கு பாராட்டுகள்.
//கிருஷ்ணமூர்த்தி said...
முதல் தடவையாக, ஒரு நல்ல விஷயத்தை எடுத்துக் கொண்டதற்கு வாழ்த்துக்கள்.
//
இதுவரை எழுதியவை 959 இடுகைகள் இருக்கு அத்தனையும் படித்தா, அல்லது ஒரு சோற்றை வைத்து பதம் பார்த்துச் சொல்லும் உங்கள் தனித் திறமையினால்(!) அப்படி சொல்கிறீர்களா உங்களுக்கே வெளிச்சம். பாராட்டுக்கு நன்றி !
// எடுத்துக் கொண்ட விஷயத்தை, வழக்கம் போல ஏதோ ஒரு லேபில் குத்திக் கொண்டு, சர்ச்சைக்குரியதாகவும், திசைமாறிப்போய் விடுவது போல அல்லாமலும் எழுதியிருப்பதற்கு, உளங்கனிந்த பாராட்டுக்கள்!
12:20 PM, August 20, 2009//
பாராட்டுக்கு நன்றி !
என்னங்க செய்வது, நாலு ஆண்டுகளாக எழுதி வந்தாலும் எதையெல்லாம் எழுதலாம், எப்படி எழுதலாம் என்கிற அறிவுரை ஆலோசனைச் சொல்ல உங்களையும், வித்யா மேடத்தையும் போன்ற மிக நல்ல உள்ளங்கள் எனக்கு கிடைக்கதாது தான் என்குறைன்னு நினைக்கிறேன்.
/யாசவி said...
important issue
:-)//
நன்றி மேடம் !
//சரவணன் said...
///இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.///
இங்கு நீங்கள் குறிப்பிடுவது உறுப்பு தானத்தையே என்று நினைக்கிறேன். கமலஹாசன் செய்தது உடல்தானம் - மருத்துவக் கல்லூரிக்கு. உறுப்புதானம் மூளைச்சாவு அடைவோர் மட்டுமே செய்யமுடியும். நடிகர் மாதவன் உறுப்புதானம் pledge செய்துள்ளார்.
ஆங்கிலத்தில் கண் (அல்லது உறுப்பு) தானம் செய்ய வலியுறுத்தும்போது donate your eyes என்று சொல்லாமல் pledge your eyes என்று கூறுவதே சரி. இதற்கு நிகராகத் தமிழில் என்ன சொல்ல்லாம்?
1:12 PM, August 20, 2009/
விரிவான தகவலுக்கு மிக்க நன்றி திரு சரவணன் !
////நிகழ்காலத்தில்... said...
//முதல் தடவையாக, ஒரு நல்ல விஷயத்தை எடுத்துக் கொண்டதற்கு வாழ்த்துக்கள்.//
ரிப்பீட்டேய்ய்..//
நீங்களும் என் பதிவில் எதுவும் பாராட்டும் படி எழுதவில்லை என்ற கருத்து கொண்டிருப்பவர் என்று அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி சிவா.
// \\உடல் கர்மத்தினால் வந்ததாக சொல்லுகிறார்கள். தானம் செய்வதால் பிறருக்கு நம் கர்மா சென்றுவிடாதா?\\
செல்லாது, பெறுபவரின் கர்மாவுக்கு மாறிவிடும்//
பர்மாவுக்கு விசா இல்லாமல் கர்மா செல்லாதா ? :) ஆங் சாங் சூசியை காப்பாறனும்.
// \\நம் உடல் உறுப்பு வேறு ஒருவரின் உடலில் கர்மம் செய்து கொண்டிருக்கும் பொழுது நாம் இறந்த பிறகு நமக்கு எப்படி கர்மம் நிறைவடைந்து முக்தி கிடைக்கும்?\\
கர்மா நிறைவடைவதற்கும், உறுப்புதானத்திற்கும் உள்ள தொடர்பு முக்கியத்துவம் பெறாது.,
1:24 PM, August 20, 2009////
முன் கர்மாவுக்கும் கள்ளத் தொடர்புக்கும் எதாவது மறைமுகத் தொடர்புகள் உண்டா ?
:)
உறுப்பு தானம் செய்வது நல்ல விசயம் .
நல்ல பதிவு
கோவி கண்ணன் புரியாமல் சொன்னது:
/அத்தனையும் படித்தா, அல்லது ஒரு சோற்றை வைத்து பதம் பார்த்துச் சொல்லும் உங்கள் தனித் திறமையினால்(!) அப்படி சொல்கிறீர்களா /
ஒரு சோறுபதம் உதாரணம்,பொருத்தமானதாக இருந்தாலும் கூட, என்னைமாதிரி நேரெதிரான இரண்டு நிலைகளிலும் இருந்து பார்த்தவர்களுக்கு, பல சோற்றைப் பதம் பார்த்தே கருத்தைச் சொல்வது பழக்கமாகி விட்டது.
உதாரணத்திற்கு, உங்களுடைய ஒரு பதிவில்,இப்படி எழுதியிருக்கிறீர்கள்:"கேயாரெஸ் என்னை ஆத்திகன் என்று தான் சொல்கிறார், திருமதி சாம்பசிவம் என்னை நாத்திகன் என்கிறார், எனக்கென்னவோ நாத்திகம் பேசத்தான் பிடிக்கிறது."
ஒரு சோற்றின் பதம் இது.
//ஒரு சோறுபதம் உதாரணம்,பொருத்தமானதாக இருந்தாலும் கூட, என்னைமாதிரி நேரெதிரான இரண்டு நிலைகளிலும் இருந்து பார்த்தவர்களுக்கு, பல சோற்றைப் பதம் பார்த்தே கருத்தைச் சொல்வது பழக்கமாகி விட்டது.
உதாரணத்திற்கு, உங்களுடைய ஒரு பதிவில்,இப்படி எழுதியிருக்கிறீர்கள்:"கேயாரெஸ் என்னை ஆத்திகன் என்று தான் சொல்கிறார், திருமதி சாம்பசிவம் என்னை நாத்திகன் என்கிறார், எனக்கென்னவோ நாத்திகம் பேசத்தான் பிடிக்கிறது."
ஒரு சோற்றின் பதம் இது.//
மீண்டும் நன்றி கிருஷ்ண மூர்த்தி,
ஒருவர் தன்னை ஆத்திகனாக வெளிப்படுத்திக் கொள்வதற்கு, நாத்திகனாக வெளிப்படுத்திக் கொள்வதற்குமான காரணங்கள், நிர்பந்தங்கள் எதுவுமே எனக்குக் கிடையாது.
எனக்கு இருபக்கமும் நண்பர்கள் உண்டு. குறிப்பாக ஆத்திக நண்பர்கள் நிறையவே உண்டு, அவர்கள் பதிவுகளை விமரசனம் செய்யக் கேட்டுக் கொண்டபடி விமர்சனம் செய்து இருக்கிறேன்
http://govikannan.blogspot.com/2008/01/blog-post_29.html
http://kaalangkal.blogspot.com/2008/03/blog-post.html
என்மீதான விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன. உங்கள் விமர்சனங்களுக்கும் நன்றி !
நல்லதொரு விசயம். உறுப்பு தானங்களினால் ஏற்படும் விளைவுகள் என விவரித்து இருப்பது உண்மைதான். இருக்கும்போதே இரண்டு கண்ணில் ஒன்று, இரண்டு சிறுநீரகத்தில் ஒன்று எனத் தருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. இறந்தபின் எடுத்துக்கொள்ளுங்கள் என் உடல் உறுப்புகளை என எழுதிக்கொடுத்தபின்னும் எனக்குள் இருக்கும் அச்சமெல்லாம் எனது உடல் உறுப்புகள் அப்போதும் ஒழுங்காகப் பணியாற்றும் வகையில் எனது வாழ்க்கையை செம்மைப்படுத்தி வாழ்வேனா என்பதுதான்.
மிக்க நன்றி கோவியாரே.
நல்ல விழிப்புண்ர்வுப் பதிவு
நல்லதொரு விழிப்புணர்வு கருத்து பதிவு.
//வெ.இராதாகிருஷ்ணன் said...
இறந்தபின் எடுத்துக்கொள்ளுங்கள் என் உடல் உறுப்புகளை என எழுதிக்கொடுத்தபின்னும் எனக்குள் இருக்கும் அச்சமெல்லாம் எனது உடல் உறுப்புகள் அப்போதும் ஒழுங்காகப் பணியாற்றும் வகையில் எனது வாழ்க்கையை செம்மைப்படுத்தி வாழ்வேனா என்பதுதான்.
//
சரியாகச் சொன்னிங்க, அடுத்தவங்க சொத்தாக மாற்றிய பிறகு அதை சரியாக பாதுகாத்து அளிக்கனுமே !
// ஆ.ஞானசேகரன் said...
நல்ல விழிப்புண்ர்வுப் பதிவு
//
நன்றி !
//துபாய் ராஜா said...
நல்லதொரு விழிப்புணர்வு கருத்து பதிவு.//
நன்றி !
//நீங்களும் என் பதிவில் எதுவும் பாராட்டும் படி எழுதவில்லை என்ற கருத்து கொண்டிருப்பவர் என்று அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி சிவா.//
அப்படி அர்த்தம் இல்லை :))
பாரட்டும்படி நிறைய எழுதி இருக்கிறீர்கள்,
சில விசயங்கள் சாதரணமாக இருந்தால்கூட அதை உங்கள் பார்வையில் அலசும்போது அதன் பல பரிமாணங்கள் கண்டு நான் வியந்தது உண்டு,
ஆனால் இந்த இடுகையின் விசயம் உண்மையிலேயே மதிப்பிற்குரிய விசயமாக கருதுகிறேன். நண்பர் செந்தில்நாதனை மனதில் கொண்டே எழுதி இருப்பதையும் புரிந்து கொண்டேன்.
சரியான விசயத்தை, சரியான சமயத்தில் நீங்கள் தனித்து நின்று எடுத்துக் காட்டியது இதுவே நான் அறிந்த அளவில் இதுவே முதல்முறை.அந்தவிதத்திலும்,
உங்களை பாரட்டும்விதமாகவும்,அதே சமயம் நண்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கருத்தை நினைத்தும் போட்டது ரிபீட்டு,
மிக்க மகிழ்ச்சி சிவாவுக்கு பின் ஒரு :) போட்டிருந்தால் சாதரணமாக எடுத்துக் கொண்டிருப்பேன்.
உங்களை மன வருத்தம் அடைய செய்திருந்தால் என்னை பொறுத்துக்கொள்ளுங்கள்.
சரியா :))))) :))))) :))))
கிருஷ்ணமூர்த்தி பதிலுக்கு கோவிகண்ணன் சொன்னது:
/ஒருவர் தன்னை ஆத்திகனாக வெளிப்படுத்திக் கொள்வதற்கு, நாத்திகனாக வெளிப்படுத்திக் கொள்வதற்குமான காரணங்கள், நிர்பந்தங்கள் எதுவுமே எனக்குக் கிடையாது./
உங்களுக்கான பதிலை எழுதிக் கொண்டிருந்தபோது இங்கே மின்வெட்டு-அதனால் சொல்லவந்ததில் ஒருபகுதி விடுபட்டுப் போனது. உங்களுடைய பதிவில் வந்து பின்னூட்டமிடுவது உங்களுக்கு வருத்தத்தையோ, எரிச்சல் உண்டாக்குவதற்காகவோ இல்லை.
உங்கள் பதிவுகளை, நீங்கள் எழுதுவதைப் படிக்காமலேயே கருத்துச் சொல்வதாக நினைத்துக் கொண்டு, நமக்குள் இதற்குமுன்னாலும் விவாதங்கள் உங்கள் பதிவிலேயே நடந்திருக்கின்றன. ஒரு பதிலில், என்னை விட உங்களுக்கு என்னைப் பற்றி அதிகம் தெரியுமோ, முதலில் உங்களைத் தெரிந்து கொள்ளப் பாருங்கள் சார் என்று கூட எழுதியிருக்கிறீர்கள். அங்கேயே, மறுபடி, உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இன்னொரு தடையத்தை விட்டுச் சென்றிருக்கிறீர்கள் என்று பதில் சொல்லியிருக்கிறேன்.
இப்போது, ஒரு விஷயத்தைத் தெளிவாகப் பார்க்கலாம்.
உறுப்புதானத்தைப் பற்றி, இறந்தபின்னும் கூட எப்படி ஒருவர் வாழும் இன்னொருவருக்கு உதவ முடியும் என்ற விஷயத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு அங்கே இங்கே விலகாது இருந்த நேர்த்திக்காகவும், அதில் தெரிந்த சத்தியத்திற்காகவும், உங்களுடைய பதிவிற்கு வாழ்த்துச் சொல்ல மட்டுமே வந்தேன்.முந்தின பதிவுகள் எதுவும் அப்படி இல்லை என்பதைச் சுட்டுவதற்காகவே, முதல் முதலாக என்ற வார்த்தையில் வாழ்த்து ஆரம்பித்தது.
அதை எப்படி எதிர்கொண்டீர்கள் என்பதை நீங்களே திரும்பிப் பாருங்கள். உங்களுக்கு விருப்பம், உடன்பாடு இல்லையென்றால் அதை நிராகரித்திருக்கலாம்,சட்டை செய்யாமல் அலட்சியப்படுத்தியிருக்கலாம், டெலிட் செய்திருக்கலாம். ஆனால், பழக்கதோஷம் மறுபடி வந்து ஒட்டிக் கொண்டு, வித்யா பேரை தேவையே இல்லாமல் இங்கே எதற்குச் சேர்க்க வேண்டும்? அவர்களை, வால்பையன் பதிவிலும், டோண்டு ராகவன் பதிவிலும் பின்னூட்டங்களைப் பார்த்திருக்கிறேன் என்பதைத் தவிர,நான் சொன்ன கருத்திற்கு அவர்களையும் பினையாக்குவது என்னவகையில் நியாயம்?வித்யா அவர்கள் இங்கேயும் தொடந்து உங்கள் பதிவொன்றில் பின்னூட்டவாதத்தில் இருந்ததையும் பார்த்து, நானும் ஒரு பின்னூட்டம் எழுதினேன். அவ்வளவுதான்!
/நாலு ஆண்டுகளாக எழுதி வந்தாலும் எதையெல்லாம் எழுதலாம், எப்படி எழுதலாம் என்கிற அறிவுரை ஆலோசனைச் சொல்ல உங்களையும், வித்யா மேடத்தையும் போன்ற மிக நல்ல உள்ளங்கள் எனக்கு கிடைக்கதாது தான் என்குறைன்னு நினைக்கிறேன்./
இப்படி நீங்கள் எழுதியிருப்பது, எடுத்துக் கொண்ட ஒரு உடனடி கவனத்தில் கொள்ளவேண்டிய,நல்ல விஷயத்திற்கு எப்படிப் பொருந்தி வருகிறது, எப்படி திசைமாறிப்போய் விடுகிறது என்பதை நீங்கள் தான் முடிவு செய்துகொள்ளவேண்டும்.
எப்படி எழுத வேண்டும் என்று எவரும் எவரையும் கட்டாயப் படுத்த முடியாது. இந்தப் பதிவுபோல, எடுத்துக் கொண்ட விஷயத்திற்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்களைத் தொடாமல் இருந்தது மிக நன்றாயிருந்தது என்பது, இப்படி எழுதினால் உபயோகமாய் இருக்குமே என்ற ஆசையைச் சொல்வதாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?
கிருஷ்ணமூர்த்தி said...
//உறுப்புதானத்தைப் பற்றி, இறந்தபின்னும் கூட எப்படி ஒருவர் வாழும் இன்னொருவருக்கு உதவ முடியும் என்ற விஷயத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு அங்கே இங்கே விலகாது இருந்த நேர்த்திக்காகவும், அதில் தெரிந்த சத்தியத்திற்காகவும், உங்களுடைய பதிவிற்கு வாழ்த்துச் சொல்ல மட்டுமே வந்தேன்.முந்தின பதிவுகள் எதுவும் அப்படி இல்லை என்பதைச் சுட்டுவதற்காகவே, முதல் முதலாக என்ற வார்த்தையில் வாழ்த்து ஆரம்பித்தது.//
இன்னொருக்கா..:))
ரிப்ப்ப்பீட்ட்ட்டுங்ஙகிறேன்..)))
ரிப்பீட்டேய்ய்ய் ( இது echo )
//கிருஷ்ணமூர்த்தி பதிலுக்கு கோவிகண்ணன் சொன்னது:
உங்களுக்கான பதிலை எழுதிக் கொண்டிருந்தபோது இங்கே மின்வெட்டு-அதனால் சொல்லவந்ததில் ஒருபகுதி விடுபட்டுப் போனது. உங்களுடைய பதிவில் வந்து பின்னூட்டமிடுவது உங்களுக்கு வருத்தத்தையோ, எரிச்சல் உண்டாக்குவதற்காகவோ இல்லை.
//
சிரமம் பாராது மீண்டும் தட்டச்சு செய்து பதில் சொன்னதற்கு மிக்க நன்றி !
//உங்கள் பதிவுகளை, நீங்கள் எழுதுவதைப் படிக்காமலேயே கருத்துச் சொல்வதாக நினைத்துக் கொண்டு, நமக்குள் இதற்குமுன்னாலும் விவாதங்கள் உங்கள் பதிவிலேயே நடந்திருக்கின்றன. ஒரு பதிலில், என்னை விட உங்களுக்கு என்னைப் பற்றி அதிகம் தெரியுமோ, முதலில் உங்களைத் தெரிந்து கொள்ளப் பாருங்கள் சார் என்று கூட எழுதியிருக்கிறீர்கள். அங்கேயே, மறுபடி, உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இன்னொரு தடையத்தை விட்டுச் சென்றிருக்கிறீர்கள் என்று பதில் சொல்லியிருக்கிறேன்.//
ஆமாம் அது வால் பையன் பதிவில் என் பதிவில் இல்லை. என் பதிவில் நீங்கள் போட்ட ஒரே பின்னூட்டம் (http://govikannan.blogspot.com/2009/07/blog-post_20.html) இந்த பதிவில் பிராமணர் பற்றிய தகுதிகளைப் பற்றிய பின்னூட்டம். நீங்கள் எங்கெல்லாம் பார்பனர், பிராமணர், இந்து நம்பிக்கைகளை கேள்வி எழுப்பி இருக்கிறதோ அவற்றில் உங்களது விமர்சனங்கள் வருகிறது. அவற்றிற்கு பலரால் பல சமயத்தில் என் பதிவில் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியே வருகிறேன். எல்லாவற்றிற்கும் சரியாக பதில் கொடுத்ததும் வித்யா அவசர அவசரமாக பின்னூட்டத்தையெல்லாம் நீக்கி இருந்தார்கள், அவருக்குத்தான் நீங்கள் கொடி தூக்கிக் கொண்டு வந்தீர்கள். வித்யா சொல்வது உங்களுக்கு வேதவாக்காக தெரியவேண்டும் என்பது போல் எனக்கும் தெரியனும் என்று நீங்கள் நினைப்பது தான் பிரச்சனையே. நீங்கள் நான் கிடையாது, எனது எண்ணங்களை நான் பிறரிடமிருந்து கடன் பெறமுடியாது, பிறர் ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு எவருமே எழுத முடியாது சார்.
//இப்போது, ஒரு விஷயத்தைத் தெளிவாகப் பார்க்கலாம்.
உறுப்புதானத்தைப் பற்றி, இறந்தபின்னும் கூட எப்படி ஒருவர் வாழும் இன்னொருவருக்கு உதவ முடியும் என்ற விஷயத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு அங்கே இங்கே விலகாது இருந்த நேர்த்திக்காகவும், அதில் தெரிந்த சத்தியத்திற்காகவும், உங்களுடைய பதிவிற்கு வாழ்த்துச் சொல்ல மட்டுமே வந்தேன்.முந்தின பதிவுகள் எதுவும் அப்படி இல்லை என்பதைச் சுட்டுவதற்காகவே, முதல் முதலாக என்ற வார்த்தையில் வாழ்த்து ஆரம்பித்தது.//
அதை மட்டும் பாராட்டி இருந்தால் நானும் எதுவும் சொல்லி இருக்க மாட்டேன். என் பதில் நீங்கள் எதிர்பார்த்தே அவ்வாறு குறைகளாக நீங்கள் கண்டது போலவும், இது ஒன்றே (உங்களுக்கு பிடித்தது) போல் இருந்ததற்கு நான் என்ன செய்ய முடியும் ? ஆரம்பித்தது நீங்களே. என் பதிவுகளுக்கு எதிர்மறை விமர்சனங்களைவிட எனக்காக அவர்கள் நேரம் ஒதுக்கி இருக்கிறார்கள் என்ற நினைப்பே முதலில் வரும்.
//எப்படி எழுத வேண்டும் என்று எவரும் எவரையும் கட்டாயப் படுத்த முடியாது. இந்தப் பதிவுபோல, எடுத்துக் கொண்ட விஷயத்திற்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்களைத் தொடாமல் இருந்தது மிக நன்றாயிருந்தது என்பது, இப்படி எழுதினால் உபயோகமாய் இருக்குமே என்ற ஆசையைச் சொல்வதாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? //
திரு கிருஷ்ண மூர்த்தி ஐயா,
தற்போது தான் உங்கள் புரொபைல் பார்த்தேன். வயது 55 என்றிருந்தது. இளையர்கள் பொறுப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்று கோபம் வரக் கூடிய வயது. வயதின் காரணமாகவே தமக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்றே நினைக்கக் கூடிய வயது. ஞான சம்பந்தருக்கு முதியவர் அப்பர் பல்லக்கு தூக்கி இருக்கிறார், வயதுக்கும் அறிவுக்கும் தொடர்பு குறைவு, தன்னைவிட வயது குறைவாக இருந்தாலும் விசயம் தெரிந்தவர்களைப் போற்றலாம் என்கிற ஞானம் அவருக்கு இருந்தது. இப்படியாக வயதில் மூத்தவர்கள் புரிந்து கொண்டால் போதும். நாம மேலானது என்று நினைப்பதை பிறர் விமர்சனம் செய்து வந்தால் கோபம் வரும் அப்படியாகத்தான் (மத இறை நம்பிக்கைகள் குறித்து நான் எழுதியவற்றில்) உங்கள் எதிர்மறை விமர்சனங்களை வைத்து, உங்கள் நம்பிக்கைகளை நான் கேள்வி எழுப்புவதாக நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
நானும் கண்மூடித்தனமாக எதையும் எழுதவில்லை. ஒன்றைக் கேள்விக்கு உட்படுத்துபவன் அதைப் பற்றி நிறைய சிந்தித்து இருப்பான் என்பதைப் புரிந்து கொண்டால் போதும். பெற்றோர்கள் சொல்வதை அப்படியே கேட்க வேண்டுமென்றால் குழந்தைகளாக இருக்கும் போது தான் அவ்வாறு இருக்க முடியும். உலக நாடுகளைச் சுற்றும் அவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மிகவும் அறிந்திருபார்கள் என்று பெற்றோர்கள் நினைக்க மாட்டார்கள், வழக்கம் போல் குழந்தையாகவே நினைப்பாங்க. இவையெல்லாம் உளவியல் சிக்கல்.
ஒன்றை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் அதற்கு என்னால் எந்த ஒரு நிரூபனமும் கொடுக்க முடியாது. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கும். எனக்கு கிடையாது. மதம் கட்டமைத்துள்ள கடவுள்கள் மீது எனக்கு நம்பிக்கையே கிடையாது. நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டது கடவுள் என்கிற புரிந்துணர்வு உணர்வுடன், இறை நம்பிக்கைகள் வெறும் நம்பிக்கை கிடையாது அவற்றையெல்லாம் தாண்டிய உண்மையாக இருக்கும் உறவுகளை உறவுகள் இருக்கிறது என்று நம்பிக்கை கொள்ள முடியாது அவை உணர்வாகவே இருக்கும். அப்படித்தான் இறை உணர்வு. எனக்கு உண்டு. மதங்களையும், நம்பிக்கைகளையும் தாண்டி சிந்துத்துப்பாருங்கள். உங்களுக்கு அறிவுரையெல்லாம் கூறவில்லை. உங்களை மதிப்பதாலேயே இவற்றை எழுதுகிறேன். தவறாக தெரிந்தால் மன்னிக்கவும்.
நல்ல இடுகை..வாழ்த்துக்கள்.
பட்டிமன்றம்போல ஒரு பதிவையும் வெட்டிமன்றமாக்க ஒரே ஒரு குணம் போதும்! அதையும் ஏற்கெனெவே சொல்லியிருக்கிறேன் - last word freak !
கொடி பிடித்த காலம் எல்லாம் எப்பவோ!அது செங்கொடி! அதுகூட லட்சிய வெறியோடு மட்டுமே இருந்தது, நபர்களின் மீது அல்ல.ஆக எவருக்கோ கொடி பிடித்து வந்ததாக நினைத்ததே கூட சரியான கணிப்பு அல்ல.வயது பற்றிப் பேசுவது கூட ஒரு பெர்செப்ஷன் தான்..எனக்கு இன்றைய தலைமுறை இளைஞர்கள் எங்களைவிடத் துடிப்பாக இருக்கிறார்கள், சிறுமைகண்டு பொங்குவார்கள், ஒளிபடைத்த கண்ணினறாய் வாழ்வார்கள் என்பதில் முழு நம்பிக்கை இருக்கிறது!வயது காரணமாக, சிறியவர்கள் எப்போதுமே தப்பு செய்வார்கள் என்று நினைக்கிற சூழலில் நான் வளரவில்லை.
இன்னமும் எங்கே சறுக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்களாக உணர்ந்து மாற்றிக் கொள்ளாத வரையில், அதைப் பற்றிப் பேசுவது எந்தப் பயனையும் அளிக்கப் போவதில்லை.அது சுதந்திரம் பற்றி நீங்கள் எழுதியதாகட்டும், சாதிப் பிரச்சினை, பார்ப்பனர்கள் பற்றியதாக இருக்கட்டும்,எதிலும் ஒரு நெகடிவ் அப்ரோச்-அதுவே உங்கள் பதிவுகளில் core value ஆக இருப்பதை மட்டுமே நான் விமரிசிக்கிறேன். என்னுடைய நம்பிக்கைகளோடு ஒத்துப்போகவில்லை என்று அல்ல.
நீங்கள் நம்புவது, அல்லது நம்பாதது அல்ல இங்கே பிரச்சினை. அது சரி, தவறு என்று நான் எங்கேயுமே சொல்ல வரவில்லை. ஆனால், அது உங்கள் வரைக்கும் தான் சரியாக இருக்கும் என்பது மட்டுமே நான் சொல்ல வருவது.
இப்படி இருவருமே திரும்பத் திரும்ப ஒருவருக்கொருவர் பதில் சொல்கிறேன் என்று நீட்டிக் கொள்வதில் என்ன இருக்கிறது? ஒரு நல்லபதிவை, உங்களுடைய பக்கத்தில் இன்றைக்குப் படித்தேன், சந்தோஷம்! வாழ்த்துக்கள்.
இதற்குமேலும் பேசிக் கொண்டிருந்தோமேயானால், ஒரு சொத்தைக் கடலை பல்லில் சிக்கி, மொத்தக் கடலை சாப்பிட்ட அனுபவத்தையும் கசப்பாக மாற்றிவிடும்! அது வேண்டாமே என்பதற்காகத் தான் போன பின்னூட்டத்தில், உங்களை எரிச்சல் அடையச் செய்வது எனது நோக்கம் அல்ல என்றே தெளிவாக குறிப்பிட்டிருந்தேன். இங்கே இரவு பதினொன்றே கால்! Good night!
//பட்டிமன்றம்போல ஒரு பதிவையும் வெட்டிமன்றமாக்க ஒரே ஒரு குணம் போதும்! அதையும் ஏற்கெனெவே சொல்லியிருக்கிறேன் - last word freak !//
கிருஷ்ணமூர்த்தி ஐயா, மிக்க நன்றி ! உங்கள் கருத்தை நீங்கள் சொல்கிறீர்கள், அதை நான் அப்படியே ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் என் விருப்பம். எனக்கு நெருக்கமானவர்கள் மதநம்பிக்கை, சாதி ஆகியவற்றை போற்றுகிறார்கள் என்பதற்காக அவற்றையெல்லாம் அவர்களைக் கருத்தில், 'அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டால் ...' என்றெல்லாம் மனத்தடை போட்டுக்கொண்டு விமர்சனம் செய்யமால் இருந்துவிடுவோம் என்று நான் நினைப்பது இல்லை. ஒருவரை மதிப்பதும் அவருடைய கொள்கைகளை விமர்சிப்பதும் ஒன்றல்ல என்கிற பக்குவம் என் எழுத்துக்களைப் படிப்பவர்களுக்கும், எனக்கும் இருக்கிறது.
//கொடி பிடித்த காலம் எல்லாம் எப்பவோ!அது செங்கொடி! அதுகூட லட்சிய வெறியோடு மட்டுமே இருந்தது, நபர்களின் மீது அல்ல.//
அதையும் படித்தேன். சுய பட்சாதாபம் ஓங்கி இருந்தது. 50 வயதுக்கு மேல் சில தீவிர நாத்திகர்கள் கூட தீவிர ஆத்திகர்கள் ஆகிவிடுங்க, அப்போது தான் உலகம் நிலையல்ல, உடல் நிலையல்ல என்கிற உண்மை புரியும் போல :)
//ஆக எவருக்கோ கொடி பிடித்து வந்ததாக நினைத்ததே கூட சரியான கணிப்பு அல்ல.வயது பற்றிப் பேசுவது கூட ஒரு பெர்செப்ஷன் தான்..//
வயது பற்றிக் குறிப்பிட்டது உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொள்கிறேன் என்பதைக் குறிப்பிடத்தான். மற்றபடி என்னுடன் பழகுபவர்களில் என்னைவிட 20 வயது குறைந்தவர்களும் உண்டு.
//எனக்கு இன்றைய தலைமுறை இளைஞர்கள் எங்களைவிடத் துடிப்பாக இருக்கிறார்கள், சிறுமைகண்டு பொங்குவார்கள், ஒளிபடைத்த கண்ணினறாய் வாழ்வார்கள் என்பதில் முழு நம்பிக்கை இருக்கிறது!வயது காரணமாக, சிறியவர்கள் எப்போதுமே தப்பு செய்வார்கள் என்று நினைக்கிற சூழலில் நான் வளரவில்லை.//
மிக்க மகிழ்ச்சி !
//இன்னமும் எங்கே சறுக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்களாக உணர்ந்து மாற்றிக் கொள்ளாத வரையில், அதைப் பற்றிப் பேசுவது எந்தப் பயனையும் அளிக்கப் போவதில்லை.//
இதைத்தான் முன்முடிவு என்பது. ஒருவரைப்பற்றி தவறாகவே நினைத்துவிட்டு அவருக்கே 'நீங்கள் சரி இல்லை, நீங்கள் அப்படித்தான்' என்று வலிந்து வலிந்து சொல்ல முயற்சிப்பது.
அவரவருக்குத்தானே மிகச் சரியாக அவர்கள் (Self) எப்படிப்பட்டவர்கள் என்பது தெரியும்.
//அது சுதந்திரம் பற்றி நீங்கள் எழுதியதாகட்டும், சாதிப் பிரச்சினை, பார்ப்பனர்கள் பற்றியதாக இருக்கட்டும்,எதிலும் ஒரு நெகடிவ் அப்ரோச்-அதுவே உங்கள் பதிவுகளில் core value ஆக இருப்பதை மட்டுமே நான் விமரிசிக்கிறேன். என்னுடைய நம்பிக்கைகளோடு ஒத்துப்போகவில்லை என்று அல்ல.//
என்னால் எல்லாம் சரியாகத்தான் போய் கொண்டிருக்கிறது என்று நினைக்க முடியாது. பார்பான் முகத்தில் இருந்து பிறந்தான் அதனால் உயர்ந்தவன் என்று இன்றும் சில பார்பனர்களும், அவர்களது அடுப்பொடிகளும் கூறும் போது நகைக்காமல் இருக்க முடியவில்லை. அவ்வாறு கூறுபவர்கள் பற்றி நீங்கள் வேண்டுமானால் பெரிது படுத்தாமல் இருக்கலாம், அதையெல்லாம் பாசிட்டீவாக எடுத்துக் கொண்டு அவர்களுக்கு மாலை போட என்னால் முடியாது. 'பார்பனர்கள் காலை கிருஷ்ணன் கழுவினான்' என்று இருக்கு வேதத்தில் எழுதி இருப்பதை படித்துவிட்டும், இருக்கு வேதமே உயர்ந்தது என்று நினைப்பதுடன், பார்பனன் கிருஷ்ணனைவிட உயர்ந்தவன் என்று கருத்து கொண்டிருப்பவர்கள் நீங்கள் சொல்வது போல் பாசிடிவ் கொள்கை வைத்திருக்கலாம், எனக்கு சத்தியமாக கிடையாது. என்னுடையது எழுத்துகள் எல்லாமே முரண்பாடுகளைச் சுட்டும் எதிர்மறை எண்ணப் பதிவுகள் தான்.
"ஒரு நெகடிவ் அப்ரோச்-அதுவே உங்கள் பதிவுகளில் core value" என்று நீங்கள் என் எழுத்துக்கள் பற்றிச் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்.
மிக்க நன்றி. வீன் விவாதங்களைத் தொடர்வதில் நானும் விருப்புக் கொண்டவன் அல்ல.
நல்லதொரு விழிப்புணர்வு கருத்து பதிவு.//
இப்பொழுது பரவலாக உடல் உறுப்புகளை தானம் செய்யும் விழிப்புணர்வு வந்துள்ளது வரவேற்க பட வேண்டிய செயல்.
தக்க சமயத்தில் கருத்தை பதிவு செய்துள்ளார் பதிவாளர் நல்ல அருமையான பதிவு..பாராட்டுக்கள்.
சோ.ஞானசேகர்...
ரொம்ப நல்ல பதிவு. நாம் இன்னும் எத்தனை விஷயங்களில் விழிப்புணர்வு அடைய வேண்டியிருக்கிறது என்று நினைக்கும்போது மலைப்பாக இருக்கிறது.
திஸ் இஸ் 21ஸ்ட் செஞ்சுரி காட் டேமிட் என்று கத்த வேண்டும் போல!
நல்ல பதிவு. பின்னூட்டங்களில் அருமையான தகவல்கள் கிடைத்தன.
அப்புறம் //'பசங்க' படத்தில் காட்டப்படும் இரு சிறுவர்களின் வீடுகளிலும் ஒருவர் வீட்டில் 'இரத்தானம் செய்துள்ள குடும்பம்' என்ற பலகையும், மற்றொரு வீட்டில் 'உடல் தானம் செய்துள்ள குடும்பம்' என்று பலகையும் //
முதலில் காட்டப்படுவது, 'கண்தானம் செய்துள்ள குடும்பம்' என்று வரும்.
விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பதிவு.
அத்துடன் ஏராளமான தகவல்களும். மிக்க நன்றி
வணக்கம்
20,012013இன்று உங்களின் படைப்பு வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமானது பாராட்டுக்கள் அருமையான பதிவு நல்ல கருத்தை விதைத்துள்ளீர்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். //
நல்ல அருமையான விளக்கம்.
மண்ணுக்கு வீணாய் போகும் உடலை மற்றவ்ர்களுக்கு உபயோகப்பட் கொடுப்பது நல்ல கொடையே!
நல்ல பகிர்வுக்கு நன்றி.
நானும் என் கண்வரும் கண் தானத்திற்கு பதிவு செய்து இருக்கிறோம்.
இன்றைய வலைச்சரத்தில் வைடூரியமாய் ஜொலிப்பதற்கு. மனோ அவர்களுக்கு நன்றி, உங்கள் பதிவை எங்களுக்கு படிக்க பகிர்ந்தமைக்கு.
கருத்துரையிடுக