பின்பற்றுபவர்கள்

3 மார்ச், 2009

ஆப்பசைத்த அதிமுக !

வரும் நாடாளுமன்ற தேர்த்தலில் மட்டுமல்ல, எந்த தேர்தலிலும் தமிழகத்தில் கூட்டணிகள் இல்லாது ஒன்றும் செய்துவிட முடியாது என்ற நிலையாகிவிட்டது, திராவிடக் கட்சிகள் (கொள்கையில்) நீர்த்துப் போய்விட்டதால் பிரிந்திருந்தாலும் முன்பிருந்த பலமென்பது தற்பொழுது இல்லை. போதாக் குறைக்கு தேமுதிக, சமக போன்ற திடீர் கட்சிகள் தோன்றி திரை ரசிகர்களின் வாக்குகளில் கைவைத்ததும் பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றின் வாக்கு வங்கிகள் ஆட்டம் கண்டன. இவை தேர்தலில் வெல்ல வேண்டுமென்றால் எக்காலத்திலும் மாறாத பெருசுகள் நிறைந்த பண்ணையார் கட்சியான காங்கிரசின் வங்கியின் அரவணைப்பு தேவைப்படுகிறது. கடந்த கால தேர்த்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி வைத்த கட்சிகளே வென்றுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி தங்கள் கட்சி வெற்றி தோல்விகளை முடிவு செய்யும் கட்சி என்று பண்ணையார்கள் கொக்கறிக்கின்றனர்.

திமுகவின் விடுதலைப் புலி ஆதரவு , இந்திய தேசியத்துக்கு ஆபத்து, கூவி கூவி காங்கிரசை அதிமுகவிற்குள் இழுக்க முயன்றார் ஜெ. விடுதலை புலிகளை ஒடுக்குவதற்கு திமுக ஆதரவே போதுமானதாக இருப்பதால் ஜெ வை காங்கிரசின் சில தமிழக குழாம் (கோஷ்டிகள்) தவிர்த்து சோனியா கண்டுகொள்வதாக தெரியவில்லை, காரணம் முன்பு ஜெ சோனியாவை பதிபக்தி இல்லை என்று விமர்சித்தாகவோ, அல்லது ஒரு தேர்த்தல் மேடையில் சோனியாவை ஜெ காக்கவைத்து கூட்டத்தை புறக்கணித்த பழைய அவமானமாகக் கூட இருக்கலாம். காங்கிரஸ் சமயம் பார்த்து பழிவாங்கும் என்பதற்கான பல்வேறு எடுத்துக்காட்டுகளில் இவை ஒன்றுதான். தற்போதைய ஈழப் போர்சூழலில் கூட இலங்கை அரசிற்கான இந்திய ஆதரவு நிலைக்குக் காரணம் கூட இராஜிவ் கொலைக்கு பழிக்கு பழி என்ற கணக்கில் என்றே அரசியல் நோக்கர்கள் சொல்வதிலிருந்தும், நடந்து கொள்வதிலிருந்தும் தெரிகிறது.

மற்றபடி சிறையில் சென்று பிரியங்கா வதோரா (பிரியங்கா காந்தி என்று தமிழக காங்கிரஸ் இன்னும் 'காந்தி' பாசத்துடன் அழைக்கிறார்கள் என்பது நல்ல காமடி, திமுக தலைமை மட்டும் ? ஐஸ்வர்யா தனுசுக்கு கலைமாமணி விருது கொடுக்கிறதா ? இல்லை. கலைமாமணி விருது ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு, என்ன ஒரு அரசியல்தனம் !!! எல்லாம் கேவலமான ஓட்டு அரசியல்) சந்தித்தெல்லாம், நாங்கள் (காங்கிரஸ்) கருணை உள்ளம் கொண்டவர்கள் என்று (வெளிக்)காட்டுவதற்கான அரசியல்

தலைப்புக்கு வருவோம், காங்கிரசுக்கு பச்சைவிளக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து சிறுதாவூர் தோட்டம் கதவு திறந்து வைத்திருந்ததை (நக்கீரன் தொடர்ந்து படித்தால் நீங்களும் இப்படி எழுதுவிங்க) சோனியா கண்டு கொள்ளவில்லை. ச்சீ ச்சீ இந்த பண்ணையார் தோட்டத்து பழம் ரொம்ப கசப்பு என்று ஜெ, பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது கூட்டணி அமைக்கத் தயாராகிவிட்டார். இந்த கூட்டணியின் இணையப் போகும் கட்சிகளாக தேவகவுடா, சந்திரபாபு நாயுடு ஆகிய பேராசை தலைமைகளுடன் இணைந்து மூன்றாவது அணி அமைக்கிறார்களாம். சென்றமுறை இதே போன்று மூன்றாவது அணி அறிப்புடனும் சேர்ந்து மேடையில் கைத்துக்கி பிடித்ததும் முடிவுக்கு வந்தது காரணம் தமிழக கட்சிகள் போல் ஜெ மற்ற மாநில கட்சிகளையும் தன்விருப்பத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள் என்று நினைத்தார். அவர்களும் இவரைப் போன்று கட்சி நடத்துபவர்கள் தானே. புட்டுக் கொண்டது, இந்த முறை தேசிய அளவிளான மூன்றாவது கூட்டணி மீண்டும் தொடங்கப் பெற்றுள்ளதாம்.


(மூன்றாவது அணி கூட்டம் - பழைய படம்)

ஜெ தங்களை எப்படியும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வார் என்று காத்திருந்த பாஜகவினருக்கு மீண்டும் பெரிய ஏமாற்றம். ஒவ்வொரு நாள் இரவிலும் சத்திரத்தில் கூடும் ஆண்டிகள் தங்களுக்கு ஒரு மடம் கட்டிக் கொள்ள வேண்டும், வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவேண்டும் என்று பேசிக் கொள்வார்களாம், விடிந்ததும் அவரவர் திருவோட்டைத் தூக்கிக் கொண்டு பிச்சைக்கு கிளம்பிடுவார்களாம், பேச்சு எப்போதும் நடந்து கொண்டே இருக்கும், இதுதான் ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை, மூன்றாவது அணி கூட்டணி தேர்த்தல் வரை தாங்குமா என்ற கேள்வியில் ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதையே நினைவுக்கு வருகிறது

*****

எது எப்படியோ, விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி ஈழவிடுதலையை நசுக்கியும், ஈழத்தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் அனைத்து கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டியது அனைத்து தமிழர்களின் கடமை, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும் இவ்வரிய வாய்ப்பை நழுவ விட்டால், அரசியல் கட்சிகள் தொடர்ந்து தமிழர்களின் முதுகில் ஏறி பயணம் செய்வதை யாராலும் தடுக்க முடியாது. தமிழர்கள் விழித்துக் கொள்வதே அறிவுடமை.

28 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

//அணைத்து கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டியது அனைத்து தமிழர்களின் கடமை//

அனைத்துக் காணொளிகளுக்கும் மயங்காதிருப்பது, தமிழரின் கடமை!


//தமிழர்கள் விழித்துக் கொள்வதே அறிவுடமை.//
தமிழர்கள் இனஉணர்வு கொள்வது அறிவுடமை!

இதாங்க என்னோட கருத்துப்பெயர்வு....

அஃகஃகா!! என்னா ஒரு கோளாறுத்தனம்?!

பழமைபேசி சொன்னது…

என்னது? கோளாறுத்தனம்ன்னா என்னவா? மக்கா, இருங்க ஒரு பதிவு எடுத்து உடுறேன்....

கோவி.கண்ணன் சொன்னது…

//பழமைபேசி said...
அனைத்துக் காணொளிகளுக்கும் மயங்காதிருப்பது, தமிழரின் கடமை!//

பழமைபேசி, நன்று சொன்னீர்கள் !


//தமிழர்கள் விழித்துக் கொள்வதே அறிவுடமை.//
//தமிழர்கள் இனஉணர்வு கொள்வது அறிவுடமை!

இதாங்க என்னோட கருத்துப்பெயர்வு....

அஃகஃகா!! என்னா ஒரு கோளாறுத்தனம்?!
//

அது.....! கலக்கல் முதல் பின்னூட்டமே மிக்க மகிழ்வைத்தருகிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//பழமைபேசி said...
என்னது? கோளாறுத்தனம்ன்னா என்னவா? மக்கா, இருங்க ஒரு பதிவு எடுத்து உடுறேன்....
//

பழமைபேசி,
புரியல்ல தயவு செய்து விளக்கவும் கேட்கலாம் என்றிருந்தேன். நன்றி !

மதிபாலா சொன்னது…

நண்பருக்கு , இன உணர்வில்லாத தமிழக கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை மிக நியாயமானது. ஆனால் சூழலை யோசியுங்கள்.....இன்றைய அளவில் கூட்டணி என்பது இப்படித்தான் நிற்கும் போலிருக்கிறது.

அதிமுக + மதிமுக + கம்யூ

திமுக + காங்கிரஸ் + வி.சிறு + பாமக

தேமுதிக - மானம் கெட்டுவிடக்கூடாதென்பதால் தேர்தல் புறக்கணீப்பு.

சமக.

இதில் எவை இன உணர்வுக் கூட்டணி???


ஆக , நமது திமுக மீதான கோபமும் , காங்கிரஸ் கூட்டணியைப் புறக்கணிப்போம் என்ற கோஷமும் , அனேகமாக அதிமுக ஆதரவு ஓட்டுக்களை அதிகரிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

ஒருவேளை மத்திய ஆட்சியில் அதிமுக பங்கு பெற்றால் அவர்கள் நேரடியாக புலிகளை ஒழிக்க இந்திய இராணுவத்தையே இறக்கினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

ஒருவேளை எதற்கோ பயந்து எங்கேயோ சூடு போட்டுக்கொள்கிறோமோ என்ற பயம் அடிமனதில் இருந்துகொண்டே இருக்கிறது..

உங்கள் கருத்து என்ன???

கோவி.கண்ணன் சொன்னது…

//மதிபாலா said...
நண்பருக்கு , இன உணர்வில்லாத தமிழக கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை மிக நியாயமானது. ஆனால் சூழலை யோசியுங்கள்.....இன்றைய அளவில் கூட்டணி என்பது இப்படித்தான் நிற்கும் போலிருக்கிறது.

அதிமுக + மதிமுக + கம்யூ

திமுக + காங்கிரஸ் + வி.சிறு + பாமக

தேமுதிக - மானம் கெட்டுவிடக்கூடாதென்பதால் தேர்தல் புறக்கணீப்பு.

சமக.

இதில் எவை இன உணர்வுக் கூட்டணி???


ஆக , நமது திமுக மீதான கோபமும் , காங்கிரஸ் கூட்டணியைப் புறக்கணிப்போம் என்ற கோஷமும் , அனேகமாக அதிமுக ஆதரவு ஓட்டுக்களை அதிகரிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

ஒருவேளை மத்திய ஆட்சியில் அதிமுக பங்கு பெற்றால் அவர்கள் நேரடியாக புலிகளை ஒழிக்க இந்திய இராணுவத்தையே இறக்கினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

ஒருவேளை எதற்கோ பயந்து எங்கேயோ சூடு போட்டுக்கொள்கிறோமோ என்ற பயம் அடிமனதில் இருந்துகொண்டே இருக்கிறது..

உங்கள் கருத்து என்ன???
//

மூன்றாவது அணி எப்போதும் தேர்த்தல் வரை நீடிக்காது, பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்க கட்சியினரை உற்சாகப்படுத்த ஜெ இதில் இறங்கி இருக்கிறார்.

ஈழ நலனில் அக்கரை இல்லாத எல்லா கட்சிகளுமே புறக்கணிக்கப் படவேண்டியவை என்பது எனது கருத்து, அதில் திமுக கூட்டணி கட்சிகளும் அடக்கம் தான்

பழமைபேசி சொன்னது…

ஒரு ஊர்ல ஒரு வணிகன் கடை வெச்சு இருந்தானாம். அவங்கிட்ட ஒருத்தன் வேலைக்கு சேரவே, முதல் நாள் கற்பூரம் எப்படி நிறை அறியறதுன்னு (எடைப் போடுறது) இப்படிச் சொல்லிக் கொடுத்தானாம். தராசுன்னு எதுவுமே இல்லையாமுங்க.... வணிகன் சொல்லிக் குடுத்த விதம்:

அஞ்சேழ் க‌ழ‌ஞ்சினெடை யாழாக்குக் க‌ற்பூர‌ம்
கொஞ்சுகிளி மொழியே கூறுங்கால் ‍ விஞ்சாது
ந‌ன்றான‌ த‌ண்ணீர்க்கு நாழிப‌ல‌ம் ப‌ன்னிர‌ண்டாம்
என்றாயு மேழிர‌ண்டா மென்.

இந்த‌ சூத்திர‌த்தை வெச்சே, அவ‌ன் வாழ்நாள் பூராவும் க‌ற்பூர‌ யாவார‌ம் செய்துட்டு இருந்தானாம். இஃகிஃகி! இதுக்குப் பொருள்? அமெரிக்க‌ தொழில‌திப‌ரை ம‌ண‌ந்த‌ ந‌டிகையின் கதை?? நாளைக்கி வ‌ர்ற‌ ப‌ள்ளைய‌ம் பாருங்க‌....

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

சமக போன்ற திடீர் கட்சிகள் தோன்றி திரை ரசிகர்களின் வாக்குகளில் கைவைத்ததும் பெரிய
//

என்னாது சமக வுக்கு வாக்கு வங்கி இருக்கா??? அண்ணே காலையிலேயே என்னைய மனசுவிட்டு சிரிக்க வைத்த உங்களுக்கு என் நன்றி

எம்.எம்.அப்துல்லா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
priyamudanprabu சொன்னது…

///
ஒவ்வொரு நாள் இரவிலும் சத்திரத்தில் கூடும் ஆண்டிகள் தங்களுக்கு ஒரு மடம் கட்டிக் கொள்ள வேண்டும், வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவேண்டும் என்று பேசிக் கொள்வார்களாம், விடிந்ததும் அவரவர் திருவோட்டைத் தூக்கிக் கொண்டு பிச்சைக்கு கிளம்பிடுவார்களாம், பேச்சு எப்போதும் நடந்து கொண்டே இருக்கும், இதுதான் ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை, மூன்றாவது அணி கூட்டணி தேர்த்தல் வரை தாங்குமா என்ற கேள்வியில் ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதையே நினைவுக்கு வருகிறது
////


ஹ ஹ் ஹா

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

இன்றைய சூழலில் எந்த கட்சியும் ஒட்டளிக்க தகுதியில்லாதவைதான்.

நையாண்டி நைனா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Suresh சொன்னது…

வாழ்த்துக்கள் ! நண்பரே நல்ல பதிவு, நானும் ஒரு பதிவு போடு உள்ளேன் பிடித்தல் போடுங்க வோட்டு :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//எம்.எம்.அப்துல்லா 11:29 AM, March 03, 2009
சமக போன்ற திடீர் கட்சிகள் தோன்றி திரை ரசிகர்களின் வாக்குகளில் கைவைத்ததும் பெரிய
//

என்னாது சமக வுக்கு வாக்கு வங்கி இருக்கா??? அண்ணே காலையிலேயே என்னைய மனசுவிட்டு சிரிக்க வைத்த உங்களுக்கு என் நன்றி
//

மதுரை இடைத்தேர்தல் 900 ஓட்டு வங்கி ஓட்டு இல்லையா ? வேறு யார் போடுவாங்க. சிறுதுளி பெருவெள்ளமெண்டு சொல்லி இருக்காங்க

சுப்ரீம் ஸ்டாரை தவறாக எடை போடுகிறீர்கள், கிபி 20** ல் சமக ஆட்சி அமைக்கும் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
இன்றைய சூழலில் எந்த கட்சியும் ஒட்டளிக்க தகுதியில்லாதவைதான்.
//

கொஞ்சம் மாற்றியும் சொல்லலாம், தேர்த்தலில் நிற்கவே தகுதியற்றவை. மக்களை எந்த முகத்தோடு பார்ப்பார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//அஞ்சேழ் க‌ழ‌ஞ்சினெடை யாழாக்குக் க‌ற்பூர‌ம்
கொஞ்சுகிளி மொழியே கூறுங்கால் ‍ விஞ்சாது
ந‌ன்றான‌ த‌ண்ணீர்க்கு நாழிப‌ல‌ம் ப‌ன்னிர‌ண்டாம்
என்றாயு மேழிர‌ண்டா மென்.//

பழமைபேசி,
எனக்கு முடி உதிர்காலம் வேற நடக்கிறது, ஒண்ணும் புரியல.

கோவி.கண்ணன் சொன்னது…

//Suresh said...
வாழ்த்துக்கள் ! நண்பரே நல்ல பதிவு, நானும் ஒரு பதிவு போடு உள்ளேன் பிடித்தல் போடுங்க வோட்டு :-)
//

நன்றி, உங்கள் பக்கத்திற்கும் விசிட்டியாச்சு !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

பிரபு, சிரிப்பானுக்கு நன்றி !

Suresh சொன்னது…

நண்பரே நல்ல பதிவு, நானும் ஒரு பதிவு செய்து உள்ளேன் பிடித்தல் போடுங்க வோட்டு :-)

Suresh சொன்னது…

ஹி ஹி சரியாக சொன்னிங்க போங்க :-)

உங்களுடைய வருகைக்கும் பின்நோட்டதுக்கும் நன்றி

முடிஞ்ச தமிழிச்ல ஒரு வோட்டு போடுங்க , யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

Unknown சொன்னது…

ஐயா நீங்க சொன்னது எல்லாம் சரி, இப்போ யாருக்காவது ஒட்டு போட்டாக வேண்டிய கடமை இருக்கு. அதிமுக ஈழ எதிர்ப்பு ஒட்டு விழும் னு நம்பிக்கைல இருக்கு. திமுக வேறு வளர்ச்சிகளை காட்டி, கலைஞர் உடல் நலம் குறைவு கண்பித்து அனுதாப ஒட்டு வாங்க நினைகிறது. வை கோ கூ ட்டனி இல்லாமல் இருந்த பரவாயில்லை. இப்போ மக்கள் என்ன செய்ய வேண்டும் அதை சொல்லுங்க ......

மணிகண்டன் சொன்னது…

***
இப்போ மக்கள் என்ன செய்ய வேண்டும் அதை சொல்லுங்க
***

:)-

மதிபாலா சொன்னது…

இப்போ மக்கள் என்ன செய்ய வேண்டும் அதை சொல்லுங்க//

நமக்கு இப்போ ரெண்டு சாய்ஸ் தான்.

அதனால சுயேட்சைகளுக்கு வோட்டுப் போட்டு செல்லாத ஓட்டு ஆக்குறதுதான் ஒரே வழி.

தங்கர் பச்சான் சொன்னமாதிரி சீமான் அவர்கள் ஒருவேளை சுயேச்சையா போட்டியிட்டாலும் நமது ஆதரவைச் சொல்ல வசதியாய் இருக்கும்.!

கோவி.கண்ணன் சொன்னது…

//செந்தேள் said...
ஐயா நீங்க சொன்னது எல்லாம் சரி, இப்போ யாருக்காவது ஒட்டு போட்டாக வேண்டிய கடமை இருக்கு. அதிமுக ஈழ எதிர்ப்பு ஒட்டு விழும் னு நம்பிக்கைல இருக்கு. திமுக வேறு வளர்ச்சிகளை காட்டி, கலைஞர் உடல் நலம் குறைவு கண்பித்து அனுதாப ஒட்டு வாங்க நினைகிறது. வை கோ கூ ட்டனி இல்லாமல் இருந்த பரவாயில்லை. இப்போ மக்கள் என்ன செய்ய வேண்டும் அதை சொல்லுங்க ......
//

தேர்தல் நேரத்தில் எதிர்ப்பு ஆதரவு மாறலாம். இப்போதைக்கு ஈழவிடுதலை பற்றி நாடாளுமன்றத்தில் பேசுகின்ற ஒரே கட்சி பாஜக தான். ஆனால் அதன் 'இந்து' அரசியலில் நம்பிக்கை வைக்க முடியவில்லை. ஆட்சி அதிகாரம் கிடைத்தால் உண்மையிலேயே ஈழவிடுதலைக்கு உதவுவார்களா தெரியவில்லை. தற்போதைக்கு வேறு வழியே இல்லை என்றால் தமிழ் ஈழம் குறித்து பாஜக வாக்குறுதி எதும் தந்தால் ஆதரிக்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
***
இப்போ மக்கள் என்ன செய்ய வேண்டும் அதை சொல்லுங்க
***

:)-
//

இப்ப நான் என்ன செய்யனும் - தம்பி படத்தில் வசனம் எழுதிய சீமான் தான் நினைவுக்கு வருகிறார்

கோவி.கண்ணன் சொன்னது…

//மதிபாலா said...
இப்போ மக்கள் என்ன செய்ய வேண்டும் அதை சொல்லுங்க//

நமக்கு இப்போ ரெண்டு சாய்ஸ் தான்.

அதனால சுயேட்சைகளுக்கு வோட்டுப் போட்டு செல்லாத ஓட்டு ஆக்குறதுதான் ஒரே வழி.

தங்கர் பச்சான் சொன்னமாதிரி சீமான் அவர்கள் ஒருவேளை சுயேச்சையா போட்டியிட்டாலும் நமது ஆதரவைச் சொல்ல வசதியாய் இருக்கும்.!
//

சீமான் / அமீர் ஆகியோர் போட்டியிட்டால் வெற்றிபெறச் செய்யலாம், அதிமுக கூட்டணியில் வைகோ கட்சியையும், திமுக கூட்டணியில் திருமா கட்சியினரையும் வெற்றிபெற வைக்கலாம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//முன்பு ஜெ சோனியாவை பதிபக்தி இல்லை என்று விமர்சித்தாகவோ, அல்லது ஒரு தேர்த்தல் மேடையில் சோனியாவை ஜெ காக்கவைத்து கூட்டத்தை புறக்கணித்த பழைய அவமானமாகக் கூட இருக்கலாம்.//

அரசியல்வாதிகளின் பிறவி குணமாகிய செலக்டிவ் அம்னீசியா, அரசியல் கட்டுரை எழுதுபவர்களுக்கு வருவதில்லையே ஏன்? கண் முன்னே நிக்கிறீங்க! சாட்சியாக!!

இப்படியெல்லாம் போட்டு ஒடைச்சா, பாவம் எம் தமிழர்களின் மரணத்தில் போரியல் சிந்தனை விதைத்த சிந்தனைச் செல்வி புரட்சித் தலைவியும், மத சார்பற்ற கூட்டணி மட்டுமே காணும்(இடையில பா.ச.க வுடன் கூட்டணி வச்சதை சத்தியமா மறந்துடுங்க, பாபர் மசூதி இடிச்சதுக்கபுறம் கொஞ்சநாள் பா.ச.க மத சார்பற்ற கட்சியாக இருந்தது என்பதை நினைவில் கொள்ளவும்) முத்தமிழ் வித்தகர் ஐயா கலைஞரும் எப்படி கடைய போட்டு யாவாரம் பண்றது?

பாவம் இவர்கள் இருவரின் பாசக்கயிற்றில் வைகோவும், திருமாவும் தொங்குவதைப் பார்த்தால் பாவமா இருக்கு. ஏன் இவங்களுக்கு இந்த பொழப்பு?

அவங்க யாவாரத்துக்கு ஏன் இவங்க போய் உதவி பண்ணுறாங்க?

பாச மலர் / Paasa Malar சொன்னது…

கணினியில் மொத்தமாகப் பதிவு செய்து..அவ்வப்போது அங்கே வெட்டி..இங்கே ஒட்டி..இது போலாகிவிட்டது கூட்டணி..

நீங்கள் பழையபடம் என்று சொல்லியிருந்தாலும்..இது மீண்டும் வெளியிடப்படக்கூடும் புதுப்படமாக..

ஆனா சமீபத்திய டாப் காமெடி...

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் கலைமாமணிதான்..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்