பின்பற்றுபவர்கள்

27 ஆகஸ்ட், 2008

எண்ணப் படம் பார்த்ததுண்டா ?

விசித்திரமானது மனித மனம், மனம் பற்றி அறிவியல் ஆன்மிகம் அனைத்தும் பொருள் உரைத்தாலும் மிகச் சரியாக மனம் என்பது எப்படி செயல்படுகின்றது என்பதற்கான தெளிவுரை எவருவே இதுவரை எழுதவில்லை.

ஒரு நாளைக்கு மனித மனத்தில் தோன்று எண்ணங்கள் சுமார் 40,000 வரை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இவை மனிதருக்கு மனிதர் வேறுபடலாம்.

மனதில் ஏற்படுத்தும் எண்ணங்களில் முதன்மையான இருவகைகளில் ஒன்று நல்ல எண்ணங்கள், மற்றது கெட்ட எண்ணங்கள், இதைத் தவிர்த்து மூன்றாவதாக ஒருவகை எண்ணங்கள் உண்டு அவை தேவையற்ற எண்ணங்கள் என்ற வகையில் வரும்.

எண்ணங்கள் உற்பத்தி தன்னிச்சையான செயல் போன்றது தான், தட்டச்சு செய்யும் போது ஒவ்வொரு விரலையும் சிந்தித்து சிந்துத்து அழுத்துவதில்லை. பழக்கத்தின் காரணமாக நினைக்க நினைக்க அடித்துக் கொண்டே இருக்கும், நமது விரல் செயல்படுகிறது என்ற உணர்வே இல்லாது தட்டச்சு செய்வது நடப்பது போன்றது தான் மனதில் தோன்றும் எண்ணங்கள். அவை அனிச்சையானது. அடுத்த வினாடியில் செய்ய வேண்டியது எதுவுமில்லை என்றாலும் சிந்தனைகளில் எதாவது ஓடிக் கொண்டே இருக்கும், குழந்தைகளுக்கு பேச்சுவரும் வரை எண்ணங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் அதன் பிறகு அலை அலையாய் எண்ணங்கள் ஏற்பட்டு அறிவு வளர்ச்சியின் விதையாக மாறிவிடும். ஆரம்பத்தில் தேடலாக தொடங்கும் எண்ணங்கள் பிறகு அதனுடன் ஒப்பீட்டிற்காக தோன்று எண்ணங்கள் சேர்ந்துவிடும்.

தன்னால் சிந்திக்கக் கூடிய (அதாவது சுய சிந்தனை) நிலையில் தான் மனதில் மேற்சொன்ன பகுப்பில் (நல்ல / கெட்ட / தேவையற்ற THAT IS POSSITIVE / NEGATIVE OR BAD / WASTE THOUGHTS) எண்ணங்கள் சுழல ஆரம்பிக்கின்றன. இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே நமக்கு வந்து செல்லும் எண்ணங்கள் சுமார் 50 இருக்கும். ஒரு இரண்டு நிமிடம் எதுவுமே செய்யாமல் மன ஓட்டத்தை மட்டுமே கவனியுங்கள் உங்கள் சிந்தனைகள் எங்கெல்லாம் சென்றுவருகிறது என்பதைப் பற்றி அறிவீர்கள், அந்த இரண்டு நிமிடத்தில் தோன்றிய எண்ணங்களில் 90 விழுக்காடு தேவையற்ற எண்ணங்களாகவே இருக்கும்.

உடல் சார்ந்த அயற்சியைவிட மனம் சார்ந்த அயற்சியே சோர்வை மிகுதியாக தரும். இந்த மனச்சோர்வின் மூல காரணிகளே எண்ணங்கள் தான். நல்ல எண்ணங்கள் மனச்சோர்வை ஏற்படுத்தாது மாறக உற்சாகம் தரும், கெட்ட எண்ணங்களும் தேவையற்ற எண்ணங்களும் மனச்சோர்வை ஏற்படுத்தும். நம் எண்ணங்களில் 10 விழுக்காடு கெட்ட எண்ணங்கள், 80 விழுக்காடு வீனான எண்ணங்கள் என 90 விழுக்காடு இருக்கிறது. மூளையில் இருந்துதான் எண்ணங்களுக்கான சக்திகள் செலவிடப்படுகின்றன. மூளை தொடர்ந்து இயங்கும் போது தேவையற்ற எண்ணங்களினால் மூளையின் சக்தி குறைந்து மனச்சோர்வாகிறது, உடல் நலம் மனநலத்துடல் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதால் உடல்சோர்வையும் ஏற்படுகிறது. தகுந்த பயிற்சியின் மூலம் தேவையற்ற எண்ணங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். வெற்றியாளர்கள் அனைவருமே இலக்கு ஒன்றின் மீதான குறியில் ஒருமுகமாகி தேவையற்ற எண்ணங்களை குறைத்துக் கொண்டவர்கள் தானே.

இன்னும் எழுதலாம் படிப்பவர்கள் சோர்ந்துவிடுவார்கள் ! - இது இங்கு எனக்கு ஏற்பட்ட வீனான எண்ணம் ! :)

16 கருத்துகள்:

கிரி சொன்னது…

பின்னூட்டம் போல பதிவுகளை போடும் கோவி கண்ணன் வாழ்க :-)

பெயரில்லா சொன்னது…

//வெற்றியாளர்கள் அனைவருமே இலக்கு ஒன்றின் மீதான குறியில் ஒருமுகமாகி தேவையற்ற எண்ணங்களை குறைத்துக் கொண்டவர்கள் தானே.//

உண்மை.

thamizhparavai சொன்னது…

வீணான எண்ணங்களைத் தவிர்ப்பதற்கு சில,பல அறிவுரைகளையும் வழங்கினால் நன்றாக இருக்கும். மற்றபடி இப்பதிவு தேவையான ஒன்று.மேலும் எதிர்பார்க்கிறேன்.
கோவை அருகே புன்செய்புளியம்பட்டியில் இயங்கிவரும் 'உயிரே கடவுள்' இயக்கம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா...?

கோவி.கண்ணன் சொன்னது…

// கிரி said...
பின்னூட்டம் போல பதிவுகளை போடும் கோவி கண்ணன் வாழ்க :-)

3:46 PM, August 27, 2008
//

இது வர்றேன்ன்ன்ன்ன்ன்ன்... !

நையப் புடைப்பது என்றால் என்ன தெரியுமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
//வெற்றியாளர்கள் அனைவருமே இலக்கு ஒன்றின் மீதான குறியில் ஒருமுகமாகி தேவையற்ற எண்ணங்களை குறைத்துக் கொண்டவர்கள் தானே.//

உண்மை.

4:15 PM, August 27, 2008
//

நன்றி அண்ணாச்சி !

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ்ப்பறவை said...
வீணான எண்ணங்களைத் தவிர்ப்பதற்கு சில,பல அறிவுரைகளையும் வழங்கினால் நன்றாக இருக்கும். மற்றபடி இப்பதிவு தேவையான ஒன்று.மேலும் எதிர்பார்க்கிறேன்.
கோவை அருகே புன்செய்புளியம்பட்டியில் இயங்கிவரும் 'உயிரே கடவுள்' இயக்கம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா...?

4:31 PM, August 27, 2008
//

தமிழ்ப்பறவை மிக்க நன்றி !

'உயிரே கடவுள்' பற்றி கேள்விப்பட்டது இல்லை, அதுபற்றி பதிவிட்டீர்கள் என்றால் தெரிந்து கொள்வேன்.

விஜய் ஆனந்த் சொன்னது…

பதிவை ஊன்றிப் படித்ததன் காரணமாக, பின்னூட்டம் போடலாம், போட வேண்டாம் என்ற இரு எண்ணங்களும் கடந்த ஒரு மணி நேரமாக என் மனதில் மாற்றி மாற்றி தோன்றிக்கொண்டுள்ளன.

அதுபோல, கிரியின் கருத்துக்கு ரிப்பீட்டேய் போட்டால் கோவியண்ணன் எவ்விதம் எதிர்வினையாற்றுவார் என்பது குறித்தான பலதரப்பட்ட எண்ணங்களும் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன.

ஆகையினால், ஒரே மணியில் எனது ஒரு நாளுக்குண்டான 40,000 எண்ணங்களையும் காலி பண்ணிவிட்ட கோவியாரை, மீதியுள்ள இன்றைய தினத்திற்கு தகுந்த ஏற்பாடுகளைச்செய்து என்னை காப்பாற்றுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

thamizhparavai சொன்னது…

கோவை பக்கமுள்ள நண்பர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.. கண்டிப்பாகப் பதிவிடுகிறேன் 'உயிரே கடவுள்' இயக்கம் பற்றி..

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

மிக நல்ல பதிவு கோவி.க அண்ணா.
சிறப்பான தலைப்பு, தொடர்ந்து இது போல் எழுதுங்கள் .

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ்ப்பறவை said...
கோவை பக்கமுள்ள நண்பர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.. கண்டிப்பாகப் பதிவிடுகிறேன் 'உயிரே கடவுள்' இயக்கம் பற்றி..
//
தமிழ்ப்பறவை,
பதிவாக போடுகிறேன் என்கிறீர்கள்
அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
மிக நல்ல பதிவு கோவி.க அண்ணா.
சிறப்பான தலைப்பு, தொடர்ந்து இது போல் எழுதுங்கள் .

5:32 PM, August 27, 2008
//

பால்ராஜ்,
முடிந்த அளவு நல்ல எண்ணங்களை பகிர்ந்து கொள்வேன் !

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
பதிவை ஊன்றிப் படித்ததன் காரணமாக, பின்னூட்டம் போடலாம், போட வேண்டாம் என்ற இரு எண்ணங்களும் கடந்த ஒரு மணி நேரமாக என் மனதில் மாற்றி மாற்றி தோன்றிக்கொண்டுள்ளன.//

விஜய்,

பின்னூட்டம் போடுவது ஒரு பெரிய முடிவா ? அதுக்கு 2 மணி நேரம் யோசனையா ? அப்படியென்றால் அது வீணான எண்ணங்கள் என்று பிரித்துக் கொள்ளூங்கள்.

//அதுபோல, கிரியின் கருத்துக்கு ரிப்பீட்டேய் போட்டால் கோவியண்ணன் எவ்விதம் எதிர்வினையாற்றுவார் என்பது குறித்தான பலதரப்பட்ட எண்ணங்களும் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன.//

இது நெகட்டீவ் எண்ணங்கள் ! :)

//ஆகையினால், ஒரே மணியில் எனது ஒரு நாளுக்குண்டான 40,000 எண்ணங்களையும் காலி பண்ணிவிட்ட கோவியாரை, மீதியுள்ள இன்றைய தினத்திற்கு தகுந்த ஏற்பாடுகளைச்செய்து என்னை காப்பாற்றுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
//
இப்படி சரியாக முடிவு செய்தீர்களே இதுதான் பாஸிட்டிவ் எண்ணங்கள் !

:)

Kanchana Radhakrishnan சொன்னது…

அருமையான பதிவு..இப்படிஎல்லாம் உங்களால் எப்படி எழுத முடிகிறது கோவிசார்.அதுவும் எழுதித் தள்ளுகிறீர்கள் ஒருநாளைக்கு இரண்டு மூன்று என்று.
உங்கள் பதிவுகள் பற்றி நான் ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்>

கோவி.கண்ணன் சொன்னது…

//kanchana Radhakrishnan said...
அருமையான பதிவு..இப்படிஎல்லாம் உங்களால் எப்படி எழுத முடிகிறது கோவிசார்.அதுவும் எழுதித் தள்ளுகிறீர்கள் ஒருநாளைக்கு இரண்டு மூன்று என்று.
உங்கள் பதிவுகள் பற்றி நான் ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்>

12:17 AM, August 28, 2008
//

இராதா கிருஷ்ணன் ஐயா, பாராட்டுக்கு மிக்க நன்றி ! படித்தது, கேட்டது, அனுபவம் அதன் பிறகு அவை மனதில் ஏற்படுத்தும் எண்ணங்களைத்தான் தொகுப்பாக எழுத முயற்சித்து பகிர்ந்து கொள்கிறேன்.

என்னைப்பற்றி பதிவா... ?

எனக்கு இலவசம் விளம்பரம் கிடைப்பது வெல்லம் சாப்பிடுவது போலத்தானே. நடத்துங்க ! உங்களால் கிடைக்கும் பாராட்டு எனக்கு கிடைக்கும் ஆசி தான் !

ஜெகதீசன் சொன்னது…

என்ன ஆச்சு கோவியாரே? நேற்று கணக்கில் சில பதிவுகள் குறையுது?

துளசி கோபால் சொன்னது…

பதிவுகளைப் படிப்பதும்கூட ஒரு அனிச்சைச் செயலா இருக்கு. அதுக்கும் இந்த வீணான எண்ண ஓட்டம்தான் காரணம்:-))))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்