பின்பற்றுபவர்கள்

18 ஆகஸ்ட், 2008

முஷா'ரப்' - வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் !

செளதியில் அடைக்கலம்:

இதற்கிடையே அவரை காப்பாற்றும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து தவிர செளதி அரேபியாவும் தீவிரமாக களமிறங்கியுள்ளது. முஷாரப்பிடம் இருந்து நவாஸ் ஷெரீப்பை காப்பாற்றி பாதுகாப்பு தந்த செளதி இம்முறை ஷெரீப்பிடம் இருந்து முஷாரப்பை காப்பாற்றும் வேலையில் இறங்கியுள்ளது.
இது தொடர்பாக செளதி வெளியுறவு அமைச்சர் அஜீஸ் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு செளதியே அடைக்கலம் கொடுக்கும் என்றும் தெரிகிறது.

அவர் பதவி விலகினால் நாட்டை விட்டு கெளரவமாக வெளியேற உதவ வேண்டும் என நவாஸ் ஷெரீ்ப்-சர்தாரி ஆகியோரிடம் செளதி கூறியுள்ளது. அதை இருவரும் ஏற்றுக் கொண்டுவிட்டனர்.

மேலும் படிக்க ...

நன்றி : தட்ஸ்தமிழ்
cartoons : http://www.dawn.com/2008/08/18/cart.htm

அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு பதவி சுகம் அனுபவிக்கிறார்களோ, பதியும் வரலாறு தவிர்த்து அவை யாவும் நிலையல்ல...அவர்கள் வாழும் காலத்திலேயே ஒருநாள் அவை காணல் நீராகிவிடும்.

14 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

இப்பொழுதுதான் தொலைக்காட்சியில் செய்தி பார்த்தேன்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//"முஷா'ரப்' - வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் !"//

இந்நிலை எப்பொழுதும் மாறும் அல்லது மாற்றப்படலாம்....

http://aammaappa.blogspot.com/2008/08/blog-post_3868.html

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
//"முஷா'ரப்' - வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் !"//

இந்நிலை எப்பொழுதும் மாறும் அல்லது மாற்றப்படலாம்....

http://aammaappa.blogspot.com/2008/08/blog-post_3868.html
//

ஏற்கனவே மாறி மாறி வந்த நிலைதான் இன்று. இனிமேலும் மாறனும் என்றால் அதற்க்கான போதிய வயது அவருக்கு இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜ நடராஜன் said...
இப்பொழுதுதான் தொலைக்காட்சியில் செய்தி பார்த்தேன்.
//

தகவலுக்கு நன்றி !

விஜய் ஆனந்த் சொன்னது…

வினை விதச்சவரு வினை அறுத்துக்கிட்டிருக்காரு....

Unknown சொன்னது…

பின்னால் பதவியில் இருப்பவர்கள் ஏற்கனவே பதவியை சொந்த லாபத்துக்காக பயன்படுத்துவதில் பெயர் பெற்றவர்கள்.
நாட்டின் லாபத்துக்காக என நினைத்து சொந்த மக்களையே கொன்று குவித்த கெட்டவர் கையிலிருந்து நாட்டையே விற்றுத் தின்கிற படு மோசமானவர்கள் கைக்கு மாறுகிறது பதவி.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

எல்லா பாகிஸ்தான் அதிபர்களுக்கும் இதே கதிதான்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

சி தயாளன் சொன்னது…

பகடைக்காயின் தேவை முடிந்து விட்டது. சாணக்கியமாக வெட்டப்பட்டிருக்கின்றது. பாகிஸ்தானில் மக்களாட்சி சாத்தியமே இல்லை. இன்னொரு ஜியா உல்ஹக்..முஷாரப் வகையறாக்களை விரைவில் எதிர்பார்க்கலாம்

suvanappiriyan சொன்னது…

கெடுவான் கேடு நினைப்பான். முஷரபின் முடிவு எப்படி என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
வினை விதச்சவரு வினை அறுத்துக்கிட்டிருக்காரு....

5:51 PM, August 18, 2008
//

அரசியல் வாதிகள் எல்லோருக்குமே நித்ய கண்டம் பூரண ஆயுசுதான்.
கலைஞர், அம்மா ஆகியோர் சிறைசென்றதும் காரணங்களைத் தவிர்த்துப் பார்த்தால் அவை காலத்தின் கோலம் தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
பின்னால் பதவியில் இருப்பவர்கள் ஏற்கனவே பதவியை சொந்த லாபத்துக்காக பயன்படுத்துவதில் பெயர் பெற்றவர்கள்.
நாட்டின் லாபத்துக்காக என நினைத்து சொந்த மக்களையே கொன்று குவித்த கெட்டவர் கையிலிருந்து நாட்டையே விற்றுத் தின்கிற படு மோசமானவர்கள் கைக்கு மாறுகிறது பதவி.

6:46 PM, August 18, 2008
//

அவரை பாகிஸ்தான் மக்களே புறக்கணிப்பதைப் பார்கும் போது அவர்கள் சரியான முடிவைத்தான் எடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்கத்தோன்றுகிறது. முஷாரப் நல்லாட்சியாளராக இருந்திருந்தால் அவரது கட்சி தேர்த்தலில் வென்றிருக்கும், கார்க்கில் ஊடுருவல் முஷாரபின் யோசனையில் எழுந்த பிரச்சனைதான். 8 ஆண்டுகள் முஷாரப் அமெரிக்காவின் தயவின்றி அங்கு கோலச்சினார் என்று எவரும் சொல்வதற்கு தயாராக இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
எல்லா பாகிஸ்தான் அதிபர்களுக்கும் இதே கதிதான்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

8:54 PM, August 18, 2008
//

ஜோதிபாரதி, நீங்கள் சொல்வது சரிதான்.
குறுக்குவழியில் பதவிக்கு வருகிறர்கள் எல்லோருக்குமே அதோ(தே) கதிதான் !

கோவி.கண்ணன் சொன்னது…

//டொன் லீ said...
பகடைக்காயின் தேவை முடிந்து விட்டது. சாணக்கியமாக வெட்டப்பட்டிருக்கின்றது. பாகிஸ்தானில் மக்களாட்சி சாத்தியமே இல்லை. இன்னொரு ஜியா உல்ஹக்..முஷாரப் வகையறாக்களை விரைவில் எதிர்பார்க்கலாம்
//

டொன் லீ,
அதென்னவோ சரிதான் !
:)

Samuthra Senthil சொன்னது…

லேட்டா எடுத்தாலும் லேட்டஸ்ட்டா முடிவு எடுத்திருககிறார் முஷாரப். இனியாவது நம் பாரத எல்லையில் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்வோம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்