இது உகாண்டா தேர்தலில் சோசலிஸ்ட் கட்சியை நான் ஏன் ஆதரிக்கிறேன் போன்ற மொக்கை மேட்டர் இல்லை. மனோன்மணியம் பல்கலையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பல்கலை வளாகத்திற்குள் ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறதாம்.
//ஆங்கிலத்தில் பேச வேண்டும்-பொன்முடி:
விழாவில் கலந்துக் கொண்டு முதுநிலைப் படிப்புகளை தொடங்கி வைத்து, விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டி அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
இந்தியாவிலேயே இதுவரை அறிமுகம் செய்யப்படாத 3 புதிய முதுநிலை படிப்புகள் இங்கே தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 18 ஆண்டுகாலமாக இப்பல்கலைக்கழகம் தென்மாவட்ட கல்விப் பணியை சிறப்பாக செய்து வருகிறது. இப்பல்கலைகழகத்தில் புதிய பட்டப்படிப்பு பாடங்களை நடத்திட வெளிநாட்டு பேராசியர்கள் வருகை தர உள்ளனர்.
இப்பல்கலை கழகத்தில் ஆங்கிலத்தில்தான் மாணவர்கள் பேச வேண்டும் என்று துணை வேந்தர் கூறியதை வரவேற்கிறேன். இதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்க் கூடாது. ஆங்கிலம்தான் நம்மை உலகத் தரத்துக்கு உயர்த்த உதவும் மொழி. சீனர்கள் கூட இப்போது ஆங்கிலம் கற்க ஆரம்பித்துவிட்டார்கள்.//
தமிழுக்குத் தடையா ? என்று படித்ததும் ஒரு நொடி திகைத்தது என்னவோ உண்மைதான். பிறகு நினைத்துப் பார்த்ததில் கல்லூரி முடித்த எத்தனை மாணவர்கள் வேலையில் சேரும் போது சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள் ? தமிழகத்தில் இருக்கும் இயந்திரவியல், தகவல் தொழில் நுட்பம், மற்றும் ஏனைய மாத ஊதியம் வழங்கும் தொழில் சார்ந்த நிறுவனங்கள் அனைத்திலுமே ஆங்கிலமே பொதுவாக புழக்கத்தில் இருக்கிறது. அலுவலக கூட்டங்களில் (Meeting) எப்போதுமே ஆங்கிலத்தில் தான் உரையாடல் நடைபெறும். நான் முதன் முதலில் நேர்முகத் தேர்வை சந்திக்கும் போது ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாததால் ஒரு சில அலுவலகத்தில் (HCL,L&T,WIPRO)எழுத்து தேர்வு நன்கு செய்தும் நிராகரிக்கப்பட்டேன். என்னைப் போன்று ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி இல்லாதவர்கள் பலருக்கும் இதே நிலை இருந்திருக்கும்.
தமிழ்வழிக் கல்வியை உயர்நிலை வரை படித்த மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லும் போது ஆங்கிலபாடங்களைப் படிக்கும் போது திணரவே செய்கிறார்கள். தமிழ்வழிக்கல்வியில் ஆங்கில பாடம் சிறப்பாக சொல்லிக் கொடுக்கப்படாததும் ஒரு காரணம். மற்றும் தமிழ்வழிக்கல்வியில் ஆங்கிலம் ஒரு மொழிப்பாடம் மட்டுமே. 12 ஆம் வகுப்புவரை ஆங்கிலக் கட்டுரைகளை மனப்பாடம் செய்தால் தான் எழுத முடியும் என்பது தான் தமிழ்வழி கல்வி கற்பவர்களின் நிலை. நான் பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வு முடிவில் ஆங்கிலத்தில் தேறுவதுதான் கடினம் என்றே பயந்து கொண்டே தேர்வு முடிவை எதிர்நோக்கினேன். நல்லவேளை தவறவில்லை.
ஆரம்ப பள்ளிக் கூடங்களில் தாய்மொழியை பேசவே கூடாது என்ற விதிகள் தான் மொழியை முடக்கிவிடும். சிறுவயது மொழிகளைக் கற்றுக் கொள்ளும் வயது, அங்கு தடைசெய்தால் தாய்மொழியை பொதுவாக பேச்சில் பயன்படுத்துவது குறைந்துவிடும்.
மனோன்மணியம் சுந்தரானார் பல்கலையில் எடுத்த முடிவு தவறானது அல்ல. மாணவர்கள் ஆங்கில உரையாடலில் சிறந்து விளங்கினால் தான் உலக அளவில் நாம் சிறந்து விளங்க முடியும் பொன்முடி சொல்வதும் சரிதான்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
29 கருத்துகள்:
// ஆரம்ப பள்ளிக் கூடங்களில் தாய்மொழியை பேசவே கூடாது என்ற விதிகள் தான் மொழியை முடக்கிவிடும். //
பள்ளிகள் மட்டும்தானா?? பல்கலைக்கழகங்கள் இல்லயா????
பொன்முடி(தெய்வசிகாமணி) நன்கு படித்தவர், சட்டசபையில் மட்டரகமாக நடந்துகொள்ளக் கூடியவர். நாகரிகம் படிப்பில் இல்லை என்று தவறான உதாரணகர்த்தாவாக இருக்கிறார். தனது தலைவரிடம் சொல்லிவிட்டு அவரின் ஒப்புதலோடு பேசினாரா என்ன என்று நமக்குத் தெரியாது. தமிழ்க்குடிதாங்கி திரு இராமதாசு அய்யாவுக்கும், தோழர் தொல்சுக்கும் தெரிந்தால் சரி.
அன்புடன்,
ஜோதிபாரதி.
எனக்கு துணைவேந்தர் மற்றும் பொன்முடியின் கருத்தில் உடன்பாடு இல்லை. இந்த அணுகுமுறை dominate செய்வதாக உள்ளது. ஒருவர் எந்த மொழியில் பேசுவதென்பது சுய விருப்பம் சார்ந்த சுதந்திரமல்லவா?? அதில் எப்படி அடுத்தவர் தலையிட முடியும்???
நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல, ஆங்கிலம் சரளமாக பேச முடியாததால் கைநழுவிப்போன வாய்ப்புகள் எனக்கும் உண்டு. ஆனால், இந்த காரணத்திற்காக, கல்வி நிறுவனங்கள் சிறப்பு பயிற்சி வகுப்புகள், ஆங்கில குழு கலந்துரையாடல்கள் போன்றவற்றை நடத்தி மாணவர்களை தயார் செய்ய வேண்டுமே தவிர, வளாகத்தினுள் ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் என்பது எப்படி முறையாகும்??? மேலும், ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் என்று மாணவர்கள் கண்காணிக்கப்படுவார்களா?? எனில், கண்காணிக்கப்பில்லாதபோது தடை மீற முயற்சிப்பார்களில்லையா?? அப்போது இந்தத்தடையின் அடிப்படை நோக்கமே அடிபட்டு விடாதா??
இந்த அறிவிப்பில் எந்த தவறும் இல்லை. கண்காணிப்பில்லாத போது அவர்கள் தமிழில் பேசுவார்கள் என்றாலும், ஒரு ஆசிரியரிடம் பேசும்போது கண்டிப்பாக ஆங்கிலத்தில்தான் பேசியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பேச முயற்சியாவது செய்வார்கள்.
தமிழ் மீடியத்தில் படித்த எல்லோருக்குமே (நான் உட்பட) ஆங்கிலம் சரியாக பேச முடியாததால் கைநழுவிப் போன வாய்ப்புகள் இருக்கும். இந்த முயற்சியினால் கண்டிப்பாக ஒரு குறிப்பிடத்தகுந்த அளவிற்கு அந்த பிரச்சினை குறையும்.
ஒரே பிரச்சினை: எத்தனை ஆசிரியர்களால் தவறில்லாமல் ஆங்கிலத்தில் பேச முடியும்?
Kovai Kannan
I never accept your idea about English matter why you are low your Thinking power like this??
many country like French, USSR, Japan,Germany,Touch,...ect
they are not grown till date they are depent in English I am not support shit politicans
Grow up our power everything in tamil in all new technologies update.
Think other point of view many good village student discontinue their study in way of english medium.
Who can response their life??
your are well educated people Think our TN many people still not known education..
step by step everthing hapen
so you make new Step to teach everthing in tamil in your field.
The super Education Minister what a finding Englilsh is important to India Grown :-)))
Becasue now his son build new Engg college so he worried about it
Dear Puduvai siva,
I agree to you regarding France, USSR, china etc. But understand how IT industry has grown in India and Why india is real IT superpower compared to any of the countries where much importance is not given to English.
Moreover, the currently proposed idea is not to ditch Tamil. The students know tamil very well and asking them to speak English during collage will not hamper their tamil speaking capabilities. (thats what Govi Kannan specifically points out)
I agree politicians are shit, but if we are just talking about only bad things in whatever they do, it will lead us nowhere.
//Puduvai Siva :-) said...
Kovai Kannan
I never accept your idea about English matter why you are low your Thinking power like this??
many country like French, USSR, Japan,Germany,Touch,...ect
they are not grown till date they are depent in English I am not support shit politicans
//
You are talking and comparing country with state. Tamilnadu is not a country. Country has own development and business logics, it is not possible in Tamilnadu ! In tamilnadu almost all the companies are MNCs
//Grow up our power everything in tamil in all new technologies update.//
That is a dream only, it will never happen not only in tamilnadu, all the other language in India !
//Think other point of view many good village student discontinue their study in way of english medium.
Who can response their life??
//
They might be started to after 5th std. 6th std onwards english medium. Atleast a year time, they sure gets struggle.
//your are well educated people Think our TN many people still not known education..
step by step everthing hapen
so you make new Step to teach everthing in tamil in your field.
The super Education Minister what a finding Englilsh is important to India Grown :-)))
Becasue now his son build new Engg college so he worried about it
//
I havn't finished my replies for other comments, please wait.
thank you !
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஆங்கிலம் பிறரை ஏமாற்றவும், அடிமைகளை உருவாக்குவதற்கும், அயோக்கியத்தனம் செய்வதற்கும், அரசோ தனியாரோ தன்னுடைய சட்டதிட்டங்களை மக்கள் எளிதல் புரிந்துகொள்ள கூடாது என்பதற்காகவே பயன்படுத்துகிறார்கள்.
விருப்பமுள்ளவர்கள் உலகில் உள்ள எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம் பயன்படுத்தலாம் அதற்கு யாரும் தடைவிதிக்கவில்லை.
தாய்மொழியில் நல்ல திறனுடைய ஒருவன் 120 மணிநேரத்தில் உலகின் எந்த மொழியையும் முறையாகப் பயின்றால் எழுதவும் பேசவும் முடியும் என்பது மொழியியல் அறிஞர்களின் ஆய்வு முடிவு.
மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை எந்தவொரு கண்டுபிடிப்பும் பிறமொழியை கற்றதால் நிகழவில்லை. மாறாக தாய்மொழி மட்டுமே தெரிந்தவர்களாலேயே அனைத்து கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தாய்மொழியை கற்காதவன், தாய்மொழியில் படிக்காதவன், தாய்மொழியை பயன்படுத்தாதவன் எவனுமே சுயமாக சிந்திக்கமாட்டான், பேசமாட்டான், செயல்படமாட்டான்.
ஆங்கிலத்தால்தான் எல்லாம் என்று பேசுபவர்கள் செயல்படுகிறவர்கள் அனைவருமே ஒன்று முட்டாள்கள் அல்லது அயோக்கியர்கள் என்பதை நாம் முடிவுசெய்துகொள்ளலாம்.
//விஜய் ஆனந்த் said...
எனக்கு துணைவேந்தர் மற்றும் பொன்முடியின் கருத்தில் உடன்பாடு இல்லை. இந்த அணுகுமுறை dominate செய்வதாக உள்ளது. ஒருவர் எந்த மொழியில் பேசுவதென்பது சுய விருப்பம் சார்ந்த சுதந்திரமல்லவா?? அதில் எப்படி அடுத்தவர் தலையிட முடியும்??? நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல, ஆங்கிலம் சரளமாக பேச முடியாததால் கைநழுவிப்போன வாய்ப்புகள் எனக்கும் உண்டு. ஆனால், இந்த காரணத்திற்காக, கல்வி நிறுவனங்கள் சிறப்பு பயிற்சி வகுப்புகள், ஆங்கில குழு கலந்துரையாடல்கள் போன்றவற்றை நடத்தி மாணவர்களை தயார் செய்ய வேண்டுமே தவிர, வளாகத்தினுள் ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் என்பது எப்படி முறையாகும்??? மேலும், ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் என்று மாணவர்கள் கண்காணிக்கப்படுவார்களா?? எனில், கண்காணிக்கப்பில்லாதபோது தடை மீற முயற்சிப்பார்களில்லையா?? அப்போது இந்தத்தடையின் அடிப்படை நோக்கமே அடிபட்டு விடாதா??//
விஜய் ஆனந்த்
இங்கு இந்த அறிவிப்பு தமிழைக் குறைத்து மதிப்பிடுவது அல்ல, கல்லூரிவரை வந்துவிட்டர்கள். ஆங்கில உரையாடல் பயிற்சி எடுத்துக் கொண்டால் வேலைக்குச் செல்லும் போது அவனால் எளிதில் நினைத்த வேலையை அடைய முடியும். கேள்விக்கு விடை தெரிந்தால் போதாது, அதை ஆங்கிலத்தில் சொல்வதற்கு தெரியவேண்டும். வகுப்பு நண்பர்களிடம் ஆங்கிலத்தில் பேசும் போது தயக்கம் குறையும், தவறை சரி செய்து விடுவார்கள். பயிற்சிப்பள்ளி, கலந்துரையாடல் எல்லாம் அந்த நேரத்தில் படிப்பது அத்துடனேயே மறந்துவிடும். தனிப்பயிற்சியாக ஸ்போக்கன் இங்கிலீஸ் படித்தவர்கள் எத்தனை பேர் வெற்றிகரமாக ஆங்கிலம் பேசிகிறார்கள் ? கலந்துரையாடலில நான் தேமே என்று உட்கார்ந்திருந்ததால் தான் பொன்முடியின் கூற்று சரி என்று படுகிறது. பொது இடத்தில் நால்வராக பேசும் போது யாரும் தடையை மீற முயற்சிக்க மாட்டார்கள். ஆங்கிலத்தில் தெளிவாகப் பேசவேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பமும். பல பெண்கள் சிலர் இதுவிசயத்தில் ஸ்டைலுக்காகவாவது கற்றுக்கொண்டு முன்னோடியாக இருக்கிறார்களா இல்லையா ?
//விஜய் ஆனந்த் said...
// ஆரம்ப பள்ளிக் கூடங்களில் தாய்மொழியை பேசவே கூடாது என்ற விதிகள் தான் மொழியை முடக்கிவிடும். //
பள்ளிகள் மட்டும்தானா?? பல்கலைக்கழகங்கள் இல்லயா????
12:49 PM, August 20, 2008
//
விஜய் ஆனந்த்,
ஆரம்பப் பள்ளியில் தாய்மொழி கற்பது அம்மொழி பேசுபவர்களின் கடமை. +2 வரை தமிழில் படிக்கிறார்கள், பேசுகிறார்கள் அதுவே அவர்களது வாழ்நாளுக்கு போதுமானது. அதன்பிறகு ஆங்கிலப் பயிற்சி மிக மிகத் தேவை
//தாய்மொழியை கற்காதவன், தாய்மொழியில் படிக்காதவன், தாய்மொழியை பயன்படுத்தாதவன் எவனுமே சுயமாக சிந்திக்கமாட்டான், பேசமாட்டான், செயல்படமாட்டான்.
ஆங்கிலத்தால்தான் எல்லாம் என்று பேசுபவர்கள் செயல்படுகிறவர்கள் அனைவருமே ஒன்று முட்டாள்கள் அல்லது அயோக்கியர்கள் என்பதை நாம் முடிவுசெய்துகொள்ளலாம். //
ஆங்கிலத்தாலதான் எல்லாம், தமிழ் வேஸ்ட் அப்படின்னு யாருமே சொல்லல. உலகளாவிய உரையாடலுக்கு ஆங்கிலம் முக்கியம் அதையும் கத்துகோங்கன்னுதான் சொல்றோம்.
சென்னைக்கு ரயில்ல போனா ஈசின்னு சொன்னா, உடனே "நீ பஸ் டிராவல கேவலப்படுத்திட்ட" அப்படின்னு திட்டுனீங்கன்னா ஒண்ணியும் பண்ண முடியாது.
அடுத்தவன் என்ன சொல்றான்னே புரிஞ்சிக்க முடியாம இருக்குறது ஒண்ணு குழந்தை இன்னொண்ணு முட்டாள். மூணாவதா ஒருத்தன் இருக்கான், அடுத்தவன் சொன்னது புரிஞ்சாலும் சும்மா திட்டணுமேன்னு திட்டிட்டு இருப்பானுங்க.. அவனுங்க தான் நீங்க சொன்ன அயோக்கியனுங்க.
உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன். புரியலன்னா நீங்க கொழந்தையா இருக்க சான்ஸ் இல்ல.
பி.கு: உங்களை திட்டுவதற்காக இதை எழுதவில்லை. இதை படிக்கும்போது உங்களுக்கு எரிகிறதல்லவா? எந்த பிரச்சினையையும் நல்ல விதமான கருத்து பறிமாற்றங்கள்தான் அவற்றைப் பற்றி புரிந்து கொள்ளவும், தீர்வு கிடைக்கவும் உதவும்
//ஜோதிபாரதி said...
பொன்முடி(தெய்வசிகாமணி) நன்கு படித்தவர், சட்டசபையில் மட்டரகமாக நடந்துகொள்ளக் கூடியவர். நாகரிகம் படிப்பில் இல்லை என்று தவறான உதாரணகர்த்தாவாக இருக்கிறார். தனது தலைவரிடம் சொல்லிவிட்டு அவரின் ஒப்புதலோடு பேசினாரா என்ன என்று நமக்குத் தெரியாது. தமிழ்க்குடிதாங்கி திரு இராமதாசு அய்யாவுக்கும், தோழர் தொல்சுக்கும் தெரிந்தால் சரி.
அன்புடன்,
ஜோதிபாரதி.
1:10 PM, August 20, 2008
//
ஜோதிபாரதி,
இது நாகரீகம் பற்றியது அல்ல. மாணவர்களில் ஆங்கிலப் பேச்சு திறமையை மேம்படுத்துவதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடு. இராமதாஸ் ஐயாவும், திருமா அண்ணாவும் இதை எதிர்க்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
// வெண்பூ said...
இந்த அறிவிப்பில் எந்த தவறும் இல்லை. கண்காணிப்பில்லாத போது அவர்கள் தமிழில் பேசுவார்கள் என்றாலும், ஒரு ஆசிரியரிடம் பேசும்போது கண்டிப்பாக ஆங்கிலத்தில்தான் பேசியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பேச முயற்சியாவது செய்வார்கள்.
//
வெண்பூ,
ஒத்தக் கருத்துக்களுடன் இருக்கும் தங்கள் மூன்று பின்னூட்டங்களுக்கும் சிறப்பு நன்றி !
//ஒத்தக் கருத்துக்களுடன் இருக்கும் தங்கள் மூன்று பின்னூட்டங்களுக்கும் சிறப்பு நன்றி ! //
நான் பாதிக்கப்பட்டவன் கோவி. அதனால் வியப்படைய ஏதுமில்லை. இந்த பதிவிற்கு நன்றி.
//வெண்பூ said...
//ஒத்தக் கருத்துக்களுடன் இருக்கும் தங்கள் மூன்று பின்னூட்டங்களுக்கும் சிறப்பு நன்றி ! //
நான் பாதிக்கப்பட்டவன் கோவி. அதனால் வியப்படைய ஏதுமில்லை. இந்த பதிவிற்கு நன்றி.
5:30 PM, August 20, 2008
//
வெண்பூ,
அப்படியா ? தங்கள் அனுபவத்தை எழுதி, அதன் பிறகு ஆங்கிலத்தை மேம்படுத்திக் கொள்ள என்ன முயற்சி எடுத்தீர்கள் என்பதை தனிப்பதிவாக எழுதுங்கள்.
நான் ஆங்கிலம் உரையாடப் பழகவேண்டும் என்பதற்க்காவே சென்னையை துறந்து பெங்களூரூவுக்கு வேலைக்குச் சென்றேன். ஒரு ஆண்டு அங்கு வேலை செய்ததில் சரளமாக கன்னடமும், ஆங்கிலம் பேசுவதற்கும் கற்றுக் கொண்டேன்.
கோவி,
இந்த முறையை நான் ஆதரிக்கிறேன்.
உயர் பள்ளிகளில் ஆரம்பகால ஆங்கிலம் இன்னும் சிறப்பாகச் சொல்லிக் கொடுக்கப் படவேண்டும். அப்படிச் சொல்லிக் கொடுக்கப் பட்டுவிட்டால் இந்த முறையைக் கல்லூரிகளில் இப்படி செயல்படுத்தத் தேவையிருக்காது. ஆனால் இன்றைய நிலையில் கல்லூரிக்குள் நுழையும் மாணவர்கள் ஆங்கிலத்தில் எழுதவோ பேசவோ மிகவும் தயங்குகிறார்கள் என்பது முற்றும் உண்மை. அதே நேரத்தில் சமூகத்தில் ஆங்கிலத்திக்கு அளவுக்கு மீறியே மதிப்புள்ளது. இந்த இடைவெளியைக் குறைக்க வேண்டியது அவசியமாயுள்ளது.
எல்லோரும் புதுவை சிவா போல் ஆங்கிலத்தில் துணிந்து எழுதவோ பேசவோ செய்வதில்லை.
நான் என் வகுப்பறைக்குள் சில ஆண்டுகள் இதை முயன்றிருக்கிறேன். ஓரளவு பயன் இருந்ததாக பழைய மாணவர்கள் சொன்னதுண்டு.
நிச்சயமாக இது தாய்மொழிக்கு, தமிழுக்கு எதிரான ஒன்றல்ல.
//தாய்மொழியில் நல்ல திறனுடைய ஒருவன் 120 மணிநேரத்தில் உலகின் எந்த மொழியையும் முறையாகப் பயின்றால் எழுதவும் பேசவும் முடியும் - கரிகாலன்//
அந்த 120 மணி நேரத்தை எப்போது பயன்படுத்துவது? முறையான கல்வியோடு அந்த 120 மணி நேரத்தைப் பயன்படுத்துவதுதான் இந்த முறையின் நோக்கம்
// கோவி.கண்ணன் said...
விஜய் ஆனந்த்
இங்கு இந்த அறிவிப்பு தமிழைக் குறைத்து மதிப்பிடுவது அல்ல, கல்லூரிவரை வந்துவிட்டர்கள். ஆங்கில உரையாடல் பயிற்சி எடுத்துக் கொண்டால் வேலைக்குச் செல்லும் போது அவனால் எளிதில் நினைத்த வேலையை அடைய முடியும். கேள்விக்கு விடை தெரிந்தால் போதாது, அதை ஆங்கிலத்தில் சொல்வதற்கு தெரியவேண்டும். வகுப்பு நண்பர்களிடம் ஆங்கிலத்தில் பேசும் போது தயக்கம் குறையும், தவறை சரி செய்து விடுவார்கள். பயிற்சிப்பள்ளி, கலந்துரையாடல் எல்லாம் அந்த நேரத்தில் படிப்பது அத்துடனேயே மறந்துவிடும். தனிப்பயிற்சியாக ஸ்போக்கன் இங்கிலீஸ் படித்தவர்கள் எத்தனை பேர் வெற்றிகரமாக ஆங்கிலம் பேசிகிறார்கள் ? கலந்துரையாடலில நான் தேமே என்று உட்கார்ந்திருந்ததால் தான் பொன்முடியின் கூற்று சரி என்று படுகிறது. பொது இடத்தில் நால்வராக பேசும் போது யாரும் தடையை மீற முயற்சிக்க மாட்டார்கள். ஆங்கிலத்தில் தெளிவாகப் பேசவேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பமும். பல பெண்கள் சிலர் இதுவிசயத்தில் ஸ்டைலுக்காகவாவது கற்றுக்கொண்டு முன்னோடியாக இருக்கிறார்களா இல்லையா ? //
கோவி,
இந்த அறிவிப்பு தமிழைக் குறைத்து மதிப்பிடுவதாக நான் எங்கும் குறிப்பிடவில்லை. அது என் எண்ணமும் இல்லை. மொழி எதுவாயினும், அதில் தேர்ச்சி (pass இல்லை!!) பெற அணுகும் முறை சரியானதாக இருக்க வேண்டுமல்லவா?இந்த தடை அறிவிப்பு ஒருவித அடக்குமுறை போன்ற தோற்றத்தை அளிக்கிறது என்பதே என் கருத்து. இதை நான், அண்ணா பல்கலை துணைவேந்தரின் dress code பற்றிய தடை அறிவிப்புடன் ஒப்பிடலாமல்லவா? அதை என்னால் எப்படி ஒப்புக்கொள்ள முடியவில்லையோ, அதேபோல்தான் இதுவும்.நான் தனியாரின் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி பற்றி கூறவில்லை, கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தே.பொது இடத்தில் நால்வராக பேசும் போது, யாரும் தடையை மீற முயற்சிக்க மாட்டார்கள் என்பதற்கு எவ்வளவு வாய்ப்புள்ளதோ, அதே அளவுதான் நால்வராக இருக்கும் தைரியத்தில் வேறு மொழியில் பேச முயற்சிப்பதற்கும் உள்ளது அல்லவா?ஆங்கிலத்தில் தெளிவாகப் பேசவேண்டும் என்பதே அனைத்து மாணவர்களின் விருப்பமும் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வழி எனக்கு சற்றும் ஏற்புடையதாயில்லை.
பள்ளிக்கல்வியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வரை ஆங்கிலம் படித்த ஆங்கிலம் அறிந்த ஆசிரியர்களைக் கொண்டு ஒரு பாடமாக ஆங்கிலம் என்ற ஒரு மொழியை பயிற்றுவித்தாலே மிகச்சிறப்பாக ஆங்கிலத்தை கற்கமுடியும். மொழிபெயர்ப்பு கலையை கல்லூரி பருவத்தில் கற்றுத்தரவேண்டும்.
பன்மொழி அறிவு என்பது ஆங்கிலத்திற்காக மட்டும் இருக்கக்கூடாது. மாணவர்களுக்கும் நாட்டிற்கும் தேவையும் விருப்பமும் இருந்தால் நமது அண்டைநாட்டு மொழிகளையும் அண்டை மாநில மொழிகளையும் கற்கும் வாய்ப்பும் இங்கே உருவாக்கப்படவேண்டும். இந்தநிலை நம்நாட்டில் இருந்தால் நம் அண்டை நாட்டு மக்களையாவது நன்கு புரிந்துகொள்ளலாம்...
20ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நம் அண்டை வீட்டில், அண்டை மாநிலத்தில், அண்டை நாட்டில் இருக்கும் மொழிகளுக்கு இருப்பதில்லையே ஏன்?
இங்கிலாந்திலிருந்து மகிழுந்திலேயே சென்றுவரக்கூடிய நாடு பிரான்சு அந்த நாட்டில் ஆங்கிலம் சுங்கச்சாவடி தாண்டி போகமுடியாது போகவும் தேவையில்லை... அவர்கள் உலகத்தரத்திற்கு இல்லையா...
அண்மையில் ஒரு பிரெஞ்சுக்காரரிடம் நான் ஆங்கிலத்தில் உரையாட நேர்ந்தது அவருக்கு புரியவில்லை... “உங்களுக்கு ஆங்கிலம் தெரியாதா?” என்று கேட்டேன். அதற்கு அவர் “எனக்கு ஏன் ஆங்கிலம் தெரியவேண்டும்” என்று கேட்டார். “உங்களுக்கும் எனக்கும் எந்தவிதத்திலும் தொடர்பில்லாத மொழியை நீங்களும் நானும் ஏன் பேசவேண்டும். நான் தமிழ்நாட்டு வரும்போது ஓரளவு தமிழ் கற்றுக்கொண்டுதான் வந்தேன். நீங்கள் தமிழிலேயே பேசுங்கள் எனக்கு புரியும்” என்று சொன்னார்.
உலகத்தரத்திற்குப் போகனும்னா ஆங்கிலம் தெரியவேண்டும் என்பது என்னவென்று எனக்குப்புரியவில்லை... உலகத்தரம் என்றால் என்ன?
//உலகத்தரத்திற்குப் போகனும்னா ஆங்கிலம் தெரியவேண்டும் என்பது என்னவென்று எனக்குப்புரியவில்லை... உலகத்தரம் என்றால் என்ன? //
கரிகாலன், மறுபடியும் குழப்பம். உலகளாவிய உரையாடல் என்பது வேறு உலகத்தரம் என்பது வேறு. அமுல் நிறுவனத்தை நிறுவிய குரியனின் செயல் உலகத்தரமானது, அதற்கு ஆங்கிலம் தேவையில்லை. ஆனால் நமக்கு உலகமயமாக்கலின் நன்மைகளை பெறுவதற்கு ஆங்கிலம் அவசியமாகிறது. உதாரணமாக மென்பொருள் நிறுவனங்கள் ஜப்பானில் புதிய மென்பொருள் ஆர்டர் கிடைத்தால் உடனடியாக ஜப்பானிய மொழி தெரிந்தவனை தேடுவார்கள்.
நமது சேவைத் துறை (சர்வீசஸ் இண்டஸ்ட்ரி) பெரும்பாலும் ஆங்கிலம் பேசும் நாடுகளையே சார்ந்திருப்பதால் அதை நாம் கற்றுக்கொள்வது அவசியமாகிறது.
இரண்டாவது, அறிவியல் முன்னேற்றங்கள் உலகின் எந்த மூலையில் நடந்தாலும் அதைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள ஒரு பொது மொழி தேவை. இப்போதைக்கு அது ஆங்கிலம். நாளைக்கே அது ப்ரெஞ்ச் என்றால் எல்லோரும் அதையே கற்பார்கள்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள ஃபிரான்ஸின் மிக முக்கிய அறிவியல் ஆராய்ச்சி நிலையம் செர்ன்(CERN). அமெரிக்காவிற்கு வெளியே அறிவியல் ஆராய்ச்சியில் முண்ணனியில் இருக்கும் நிறுவனம். அதன் வலைப்பக்கம் ஆங்கிலத்தில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி இல்லாவிடில் அவர்களின் கண்டுபிடிப்புகள் சரிவர வெளியுலகத்துக்கு தெரியாமல் போய்விடும் என்பது அவர்களுக்கு புரிந்திருக்கிறது.
“ஆங்கிலம்தான் நம்மை உலகத் தரத்துக்கு உயர்த்த உதவும் மொழி.”
இந்த வரி கட்டுரையின் தொடக்கத்தில் உள்ளது. மீண்டும் கட்டுரையை படிக்கவும்.
//(HCL,L&T,WIPRO)எழுத்து தேர்வு நன்கு செய்தும் நிராகரிக்கப்பட்டேன். //
நல்லவேளை நாம் பிழைத்துக்கொண்டோம்.... என்ற விருப்பபாடலை விரும்பி கேட்கும் நேயர்கள்.
HCL,L&T,WIPRO நிறுவனத்தார்:)
//"பொன்முடியை நான் ஏன் ஆதரிக்கிறேன் ?"//
ஏன்னா உங்க கிட்டதானே 234 தொகுதி எம்.எல்.ஏக்களும் இருக்கிறார்கள்!
(இரத்த பூமியாக இருந்தாலும் நாங்க விளையாடுவோம்ல்ல:)))
(இரத்த பூமியாக இருந்தாலும் நாங்க விளையாடுவோம்ல்ல:)))
இ போட்டால் வீரியம் குறைகிறதாம் அதனால் ரத்தம் என்றே இனி சொல்வோம் என்று அய்யனார் சொல்லி இருக்கிறார்.
கரிகாலன், பொன்முடி கூறிய மையக் கருத்தை ஆதரிக்கிறேனே தவிர ஒவ்வொரு வார்த்தையையும் அல்ல. இதைத்தான் நான் முந்தைய பின்னூட்டம் ஒன்றிலும் சொல்லியிருப்பேன்.
சப்பை கட்டு கட்டவில்லை. அதுதான் நிஜம். ஆங்கிலம்தான் உலகத்தரத்துக்கு உயர்த்தும் என்பதில் எனக்கும் உடன்பாடில்லை.
கட்டுரையின் கடைசி வரி...
//மாணவர்கள் ஆங்கில உரையாடலில் சிறந்து விளங்கினால் தான் உலக அளவில் நாம் சிறந்து விளங்க முடியும் பொன்முடி சொல்வதும் சரிதான்.//
உலகத்தரம் அல்ல.. உலக அளவில்..
Thanks for your kind replay
Dear Kannan and Veenpoouvu
Puduvai siva
நாங்க்ள் படிக்கும் போதெல்லாம் 5ம் வகுப்புவரை ஆங்கிலம் இல்லை.6ம் வகுப்புத்தான் ஆங்கிலம்
தொடங்கும்..அப்படி படித்து ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் நாங்கள்.அதனால் ஆங்கிலம்
அவசியம் இல்லை என்று கொள்ளக்கூடாது.மெத்த படித்த தமிழன்...தமிழ் தெரிந்தவனிடம்
தமிழில் பேசலாமே...
சில பள்ளிகளில் ஆங்கிலம் தான் பேச வேண்டும்..தமிழில் பேசினால் ஃபைன் என்பதைத்
தான் எதிர்க்க வேண்டும்.
//நாங்கள் படிக்கும் போதெல்லாம் 5ம் வகுப்புவரை ஆங்கிலம் இல்லை.6ம் வகுப்புத்தான் ஆங்கிலம்
தொடங்கும்//
நானும் இந்த வகைதான். ஆனால் அப்போது எங்களுக்கு 6-8 வகுப்புகள் முடியும் முன்னரே ஆங்கிலத்தை அடிப்படை இலக்கணத்தோடு -conjugation of verbs, parts of speech, degrees of comparison, direct & indirect speech, voices..எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க.
இப்போ அதெல்லாம் எங்கே போச்சுன்னு தெரியலை. அட, காலேஜ் வர்ர பையனுக்கு nouns, verbs, adjectives, adverbs அப்டின்னா என்னன்னு கேட்டுப் பாருங்க. (நான் கேட்டுப் பார்த்திருக்கேன்)
இதற்கு அடிப்படைக் காரணம்(எனக்குத் தெரிந்து): என்றைக்கு ஆங்கிலத்திற்கு workbook அப்டின்னு ஒன்று வந்ததோ அன்றைக்கே ஆங்கிலக் கல்விக்குச் சாவு மணி அடிச்சிட்டாங்க.
தமிழும் பசங்களிடம் என்ன பாடுபடுகின்றது என்பதும் தெரியும்.
subjects - அறிவியல் பாடங்களில் மிக ஆழமாகக் கற்பிக்கிறோம் என்ற ஆசையில் அடிப்படையான மொழிக் கல்விக்கு - அது ஆங்கிலமோ தமிழோ - முக்கியமின்றி செய்துவிட்டது இன்னொரு அடிப்படைக் காரணம்.
என் இளங்கலையில் நான் படித்த பெரியபுராணமும் மனோன்மணியமும், As You like It, Macbeth-ம், Thomas Hardy-ம் எனக்குத் தந்த மொழியறிவை இப்போது உள்ள மாணவர்கள் பெற முடிவதில்லை.அதேபோல் நான் படித்த அறிவியல் பாடங்களை விடவும் இன்றைய மாணவன் 3-4 மடங்கு படிக்கிறான் என்பதும் மறுக்க முடியாதது. இவ்வளவு படித்தும் தான் படித்ததை சரியான முறையில் பேச்சிலோ எழுத்திலோ கொடுக்க முடியாததுதான் கொடுமை.
இது பற்றிய என் கருத்து என் ஆங்கிலப்பதிவில் பார்க்க ...
கருத்துரையிடுக