பின்பற்றுபவர்கள்

1 செப்டம்பர், 2008

'அத்தேரிபச்சா' ... குசும்பன் கொழுக்கட்டை அறிந்த படலம் !

குசும்பன் இந்த ஆண்டு தலை பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுகிறான். பிள்ளையார் சிலைக் கிடைக்கவில்லை என்றால் அவனே உட்கார்ந்துடுவான். இப்ப பிரச்சனை குசும்பனுக்கு கொழுக்கட்டை ரூபத்துல வந்து நிக்குது, திருமதி குசும்பனுக்கு கொழுக்கட்டை செய்யத் தெரியாதாம்...'யோவ் நீ ஊரெல்லாம் ப்ரண்ட்ஸ் வச்சிருக்கியே....கொழுக்கடடை செய்றது எப்படின்னு கேட்டு நீ தான் செய்யனும் ' என்று சொல்லி பூரிக்கட்டையை தூக்கி இருக்கு தங்க்ஸ். பூரிக்கட்டை இல்லாமலேயே கொழுக்கட்டை செய்ய முடியும் என்று ஒருவாறு சமாளித்து பூரிக்கட்டையை வாங்கி வச்சிட்டு, இங்கே சாட்டில் வந்து ஆலோசனை கேட்கிறான்.

கொழுக்கட்டை செய்வது எப்படி ?

அதுக்கும் முன்னால ஒரு பாட்டிக் கால கதையைப் பார்போம்.குசும்பனைப் போலவே ஒருவன், அதனால் குசும்பன் என்றே கதையில் பெயர் வைத்துக் கொள்வோம்.

குசும்பன் ஒருமுறை மாமியார் வீட்டுக்கு சென்ற போது கொழுக்கட்டை செய்து போட்டார்களாம், நல்லா சுவையாக இருந்ததும், பெயரைக் கேட்டு 'கொழுக்கட்டை' என ஞாபகம் வைத்திருந்து மற்றொருநாள் திருமதி குசும்பனைச் செய்யச் சொல்லவேண்டும் என்பதற்காக....திரும்பும் வழியெங்கும் 'கொழுக்கட்டை' ....... 'கொழுக்கட்டை' என்று சொல்லிக் கொண்டே வ்ந்தானாம். வழியில் குறுக்கே ஒரு கால்வாய் ஓடியது, கால்வாயில் இறங்கிச் செல்லாமல் ஒரே தாண்டு தாண்ட வேண்டுமென்பதற்காக...'அத்தேரிபச்சா.....' என்று சொல்லியபடி தாண்டி இருக்கிறான். அத்தோடு கொழுக்கட்டை என்று சொல்லி வந்தது மறந்துவிட்டது. 'அத்தேரிபச்சா.... அத்தேரிபச்சா' என்று சொல்லிக் கொண்டே வீடு வந்தவுடனே, மனைவியிடம் சொல்லி 'அத்ததேரிபச்சா...' செய்து கொடு என்றிருக்கிறான்.

'இது என்ன புதுமாதிரி பலகாரம், நான் கேள்விப்பட்டதே இல்லையே' என திருமதி குசும்பன் மடக்கவும், கோபமாகி, 'உங்க அம்மாவிட்டில் செய்தாங்க, உனக்கு தெரியும்...அத்தேரிபச்சாவை இப்பவே செய்து கொடு...' என்று சொல்லி டார்சர் செய்து, திரும்ப திரும்ப 'அத்தேரிபச்சா செய்' என்று நச்சரித்தானாம். பொறுக்கமாட்டாத மனைவி அப்பளகுழவியை எடுத்து நைய புடைக்க, குசும்பனின் அளறல் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் கூடி இருக்கிறார்கள், அதில் ஒரு பாட்டி, 'ஏண்டி...இந்த அடி அடிச்சிருக்கே...ஒடெம்பெல்லாம் கொழுக்கட்டையாக வீங்கி இருக்கு' என்று சொன்னவுடன் 'கொழுக்கட்டை' என்றதைக் கேட்டு வலியை மறந்து குசும்பன் பிரகாசமாகி....உற்சாகத்தில் துள்ளினானாம். அத்தேரிபச்சா இல்லை, கொழுக்கட்டை செய்து கொடு என்றிருக்கிறான். அப்பறம் தான் மனைவிக்கு விசயமே புரி்ந்து கொழுக்கட்டை செய்து போட்டாளாம்.

********

உண்மையிலேயே குசும்பனுக்கு கொழுக்கட்டை செய்வது பற்றிய குறிப்புக் கொடுக்க வேண்டும் என்று வலையில் தேடினேன். ஏகப்பட்ட குறிப்புகள் இருக்கிறது.

அவற்றில் பிடித்ததை படித்து கொழுக்கட்டை செய்து விநாயக சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடவேண்டும். குசும்பனைப் போல் கொழுக்கட்டை செய்ய நிர்பந்தம் உள்ளவர்களும் முயன்று பார்க்கலாம்

பிடிகொழுக்கட்டை :

தேவையான பொரு‌ட்கள்

அ‌ரி‌சி - 1/2 க‌ிலோ
வெ‌ல்ல‌ம் - 1/2 ‌கிலோ
ஏல‌க்கா‌ய் - 5
தே‌ங்கா‌ய் - அரை முடி

செ‌ய்முறை

அ‌‌ரி‌சி மாவு :

ப‌ச்ச‌ரி‌சியை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்து த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு அல‌சி ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தவு‌ம்.

அ‌ரி‌சி ந‌ன்கு கா‌ய்‌ந்தது‌ம் ‌மாவாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். வெ‌ளி‌யி‌ல் கடை‌யி‌ல் கொடு‌த்து‌ம் அரை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

மாவை சு‌த்தமான கடா‌யி‌ல் கொ‌ட்டி ந‌ன்கு வறு‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். மா‌வி‌ல் இரு‌க்கு‌ம் ஈர‌ப்பத‌ம் போகு‌ம் வரை வறு‌த்து எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

வறு‌ப்பத‌ற்கு ப‌திலாக பலரு‌ம் ஆ‌வி க‌ட்டுவது உ‌ண்டு. அதாவது இ‌ட்‌லி கு‌ண்டா‌னி‌ல் வெ‌ள்‌ளை‌த் து‌ணியை‌ப் போ‌ட்டு அ‌தி‌ல் மாவை‌க் கொ‌ட்டி மூடி ‌விட வே‌ண்டு‌ம்.

5 ‌நி‌மிட‌ங்க‌ள் அடு‌ப்‌பி‌ல் வை‌த்து இற‌க்‌கினா‌ல் மாவு ந‌ன்கு வெ‌ந்து இரு‌க்கு‌ம். ஆனா‌ல் மாவு உ‌தி‌ரியாக‌த்தா‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம்.

த‌ற்போது வெ‌ல்ல‌த்தை பொடியாக இடி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் பொடி‌த்த வெ‌ல்ல‌த்தை‌ப் போ‌ட்டு அரை ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு பாகு போல கா‌ய்‌ச்சவு‌ம்.

அத‌ற்கு‌ள் தே‌ங்காயை‌ப் பொடியாக நறு‌க்‌கி‌‌க் கொ‌ள்ளவு‌ம். ஏல‌க்காயை ச‌‌ர்‌க்கரை வை‌த்து பொடி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். இர‌ண்டையு‌ம் மா‌வி‌ல் கொ‌ட்டி‌க் ‌கிள‌றி‌விடவு‌ம்.

வெ‌ல்ல‌ம் ந‌ன்கு கொ‌தி‌த்தது‌ம் அதனை ‌சி‌றிது ‌சி‌றிதாக மா‌வி‌ல் ஊ‌ற்‌றி‌க் ‌கிளறவு‌ம். மாவை‌க் ‌கிளறுவத‌ற்கு ம‌த்‌தி‌ன் கா‌ம்பு அ‌ல்லது கர‌‌ண்டி‌யி‌ன் கை‌ப்‌பிடி‌ப் பாக‌த்தை‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம்.

மாவு எ‌ந்த இட‌த்‌தி‌லு‌ம் க‌ட்டி‌ப்போ‌ய் ‌விட‌க் கூடாது. த‌ண்‌ணீரு‌ம் அ‌திகமா‌கி‌விட‌க் கூடாது. ச‌ப்பா‌த்‌தி‌க்கு ‌பிசைவது போ‌ல் வெ‌ல்ல‌ம் த‌ண்‌ணீரை ஊ‌ற்‌றி ‌பிசை‌ந்து அதனை கொழு‌க்க‌ட்டை‌க்கு ‌பிடி‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

த‌ற்போது இ‌ட்‌லி கு‌ண்டானை த‌ண்‌‌ணீ‌ர் ஊ‌ற்‌றி ஒரு த‌ட்டு ம‌ட்டு‌‌ம் வை‌த்து அடு‌ப்‌பி‌ல் மூடி வை‌க்கவு‌ம்.

5 ‌நி‌மிட‌ங்க‌ள் க‌ழி‌த்து 10 கொழு‌க்க‌ட்டைகளை அடு‌க்‌கி மூடி ‌விடவு‌ம். ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து 15 கொழு‌க்க‌ட்டைகளை அடு‌க்கவு‌ம். இ‌ப்படியே ‌சி‌றிது ‌சி‌றிதாக அடு‌க்‌கி 15 ‌நி‌மிட‌ம் வேக ‌விடவு‌ம்.

இ‌ட்‌லி கு‌ண்டானை இற‌க்‌கி கொழு‌க்க‌ட்டைக‌ள் உடையாம‌ல் எடு‌த்து‌ப் ப‌ரிமாறவு‌ம்.

23 கருத்துகள்:

குசும்பன் சொன்னது…

ம்ம் ஒரு நாத்திகவாதியை புள்ளையார் சதுர்த்திக்கு ஒரு ஸ்பெசல் போஸ்ட் போடவெச்ச எனக்கு பிள்ளையார் கொழக்கட்டை கொடுப்பார்:)))

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
ம்ம் ஒரு நாத்திகவாதியை புள்ளையார் சதுர்த்திக்கு ஒரு ஸ்பெசல் போஸ்ட் போடவெச்ச எனக்கு பிள்ளையார் கொழக்கட்டை கொடுப்பார்:)))
//

குசும்பன்,
உன்கிட்ட நான் எப்போதாவது சொன்னேனா, பதிவில் எங்காவது நான் நாத்திகவாதி என்று எழுதி இருக்கேனா ?

நான் கொள்கையற்றவன் இறைவனைப் போலவே !

இது எப்படி இருக்கு !
:)

ஜெகதீசன் சொன்னது…

உங்க பாட்டியும் இந்தக் கதை சொல்லீருக்காங்களா??

எங்க தாத்தா சொல்லீருக்கார் எங்களுக்கு...

:))

குசும்பன் சொன்னது…

//நான் கொள்கையற்றவன் இறைவனைப் போலவே !

இது எப்படி இருக்கு !//

ஈய்யத்தை காய்ச்சி காதில் ஊற்றியது போல் நாராசமாக இருக்கு.

கோவி.கண்ணன் சொன்னது…

// குசும்பன் said...
//நான் கொள்கையற்றவன் இறைவனைப் போலவே !

இது எப்படி இருக்கு !//

ஈய்யத்தை காய்ச்சி காதில் ஊற்றியது போல் நாராசமாக இருக்கு.

2:09 PM, September 01, 2008
//

ஏன் ஏன் கொலைவெறி ?

இறைவனுக்கு கொள்கை இல்லை, மதத்துக்குத்தான் அவைகளெல்லாம்.

:)

விஜய் ஆனந்த் சொன்னது…

கொழுக்கட்டையில இவ்ளோ மேட்டரு இருக்குதா...

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

இ‌ட்‌லி கு‌ண்டானை இற‌க்‌கி கொழு‌க்க‌ட்டைக‌ள் உடையாம‌ல் எடு‌த்து‌ப் ப‌ரிமாறவு‌ம்.//

உடையாமல் எடுக்கனுமா? நீங்க செஞ்ச கொழுக்கட்டைய எல்லாம் சுத்தியல் வைச்சு அடிச்சுல்ல உடைக்கனும்னு சொல்லிக்கிட்டாங்க??

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

இந்த அத்திரிபாச்சா கதையை நானும் கேட்டிருக்கிறேன்!

நல்ல (குசும்பனுக்கு) உபயோகமான பதிவு :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
உங்க பாட்டியும் இந்தக் கதை சொல்லீருக்காங்களா??

எங்க தாத்தா சொல்லீருக்கார் எங்களுக்கு...

:))

2:04 PM, September 01, 2008
//


ஜெகதீசன்,

மாநகரவாசிகள் தவிர்த்து அனைவருமே இந்த கதையைக் கேட்டு இருப்பார்கள், கதைபடி மனைவிதான் அடிவாங்குவதாக இருக்கும், குசும்பன் மீதான பாசத்தால் இங்கே மாற்றி இருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
கொழுக்கட்டையில இவ்ளோ மேட்டரு இருக்குதா...

2:28 PM, September 01, 2008
//


விஜய்,
நீ தெரிஞ்சு தான் சொல்றியா ? தெரியாமல் தான் சொல்றியா ? பிள்ளையாருக்கே வெளிச்சம் !

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
இ‌ட்‌லி கு‌ண்டானை இற‌க்‌கி கொழு‌க்க‌ட்டைக‌ள் உடையாம‌ல் எடு‌த்து‌ப் ப‌ரிமாறவு‌ம்.//

உடையாமல் எடுக்கனுமா? நீங்க செஞ்ச கொழுக்கட்டைய எல்லாம் சுத்தியல் வைச்சு அடிச்சுல்ல உடைக்கனும்னு சொல்லிக்கிட்டாங்க??

2:28 PM, September 01, 2008
//

பால்ராஜ்,
அதான் எனக்கும் புரியலை, கொழுக்கட்டையை அப்படியே விழுங்க முடியாது, இதுல ஒண்ணு இரண்டு ஒடஞ்சா என்ன, செய்முறை நான் எழுதல, எடுத்து ஒட்டினேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
இந்த அத்திரிபாச்சா கதையை நானும் கேட்டிருக்கிறேன்!

நல்ல (குசும்பனுக்கு) உபயோகமான பதிவு :)

2:36 PM, September 01, 2008
//

சுந்தர்,

வந்து கும்மியில் கலந்து கருத்து தெரிவித்ததற்கு என்ன எப்போ எந்த பதிவில் பின்னூட்டமாறு செய்யப் போகிறேனோ ?

:)

பரிசல்காரன் சொன்னது…

விநாயகரும் ஒரு குசும்பன்தான்!

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
விநாயகரும் ஒரு குசும்பன்தான்!

4:08 PM, September 01, 2008
//

குசும்பன் விநாயகனின் தம்பிதானே, பேரு சரவணவேலு :)

வால்பையன் சொன்னது…

இப்படியெல்லாம் சொன்னால் குசும்பனுக்கு மறக்க வாய்ப்பிருக்கிறது!
குளவிகட்டையால் வீங்குரமாதிரி நாலு போடு போட்டா ஜென்மத்துக்கும் மறக்காதுன்னு நினைக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
இப்படியெல்லாம் சொன்னால் குசும்பனுக்கு மறக்க வாய்ப்பிருக்கிறது!
குளவிகட்டையால் வீங்குரமாதிரி நாலு போடு போட்டா ஜென்மத்துக்கும் மறக்காதுன்னு நினைக்கிறேன்

5:59 PM, September 01, 2008
//

வால்பையன்,

குசும்பன் மீது ஏன் இந்த கொல வெறி, திருமணம் ஆகி இன்னும் ஒரு ஆண்டு கூட ஆகவில்லை. அதுக்குள்ள காசியாத்ரைக்கு டிக்கெட் எடுத்துக் கொடுப்பிங்க போல !

Thamira சொன்னது…

கோவி ://பால்ராஜ்,
அதான் எனக்கும் புரியலை, கொழுக்கட்டையை அப்படியே விழுங்க முடியாது, இதுல ஒண்ணு இரண்டு ஒடஞ்சா என்ன, செய்முறை நான் எழுதல, எடுத்து ஒட்டினேன்//
என்ன கோவி, லாஜிக் இல்லாம பேசுறீங்க.. முறுக்கை உடைக்காம சாப்பிடுறோமா? தோசையைப் பிய்க்காமல் விழுங்குறோமா? அதுமாதிரிதான். கொழுக்கட்டைன்னா உடையாமத்தான் இருக்கணும். (எங்க வீட்ல நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ பூவரசம் இலையில் 'இலைக்கொழுக்கட்டை' செய்வாங்க, அதை அடிச்சுக்கறா மாதிரி இன்னி வரைக்கும் நான் இன்னொரு கொழுக்கட்டையை பார்த்ததில்லை, என் தங்கம் செய்யும் கொழுக்கட்டைகளை பற்றி சொல்லணும் என்றால் பின்னூட்டம் பத்தாது, பதிவுதான் போடணும்.)

வடுவூர் குமார் சொன்னது…

குசும்பன் வீட்டில் பண்ணி நாம் சாப்பிட வரவரைக்கும் நன்றாக இருக்காது,சிங்கையில் எங்காவது கிடைக்குதா? அதுவும் எனக்கு வெல்லக் குழக்கட்டை தான் பிடிக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//தாமிரா said...
கோவி ://பால்ராஜ்,
அதான் எனக்கும் புரியலை, கொழுக்கட்டையை அப்படியே விழுங்க முடியாது, இதுல ஒண்ணு இரண்டு ஒடஞ்சா என்ன, செய்முறை நான் எழுதல, எடுத்து ஒட்டினேன்//
என்ன கோவி, லாஜிக் இல்லாம பேசுறீங்க.. முறுக்கை உடைக்காம சாப்பிடுறோமா? தோசையைப் பிய்க்காமல் விழுங்குறோமா? அதுமாதிரிதான். கொழுக்கட்டைன்னா உடையாமத்தான் இருக்கணும். (எங்க வீட்ல நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ பூவரசம் இலையில் 'இலைக்கொழுக்கட்டை' செய்வாங்க, அதை அடிச்சுக்கறா மாதிரி இன்னி வரைக்கும் நான் இன்னொரு கொழுக்கட்டையை பார்த்ததில்லை, என் தங்கம் செய்யும் கொழுக்கட்டைகளை பற்றி சொல்லணும் என்றால் பின்னூட்டம் பத்தாது, பதிவுதான் போடணும்.)

6:40 PM, September //

தாமிரா,

முறுக்கை கடிச்சு சாப்பிடுவது பற்கள் உள்ளவர்கள் செய்வது, பல்செட் வைத்திருப்பவர்கள் உடைச்சு தான் சாப்பிடுவாங்க, பாட்டிகள் பாக்கு இடிப்பது போல் இடித்து சாப்பிடுவார்கள்.

எங்கள் வீட்டிலும் இலைக்கொழுக்கட்டைதான் செய்வாங்க !

உங்க வீட்டில் கொழுக்கட்டை செய்வதைப் பற்றி நீங்க பதிவு போட்டே ஆகனும், பதிவு போட்டால் குசும்பனுக்கு மொட்டையடிப்பதாக திருப்பதிக்கு வேண்டிக்குவேன்.
:)

மங்களூர் சிவா சொன்னது…

குசும்பனுக்கு கொழுக்கட்டை வேண்டாமாம் அத்திரிபாச்சாதான் வேண்டுமாம் திருமதி. குசும்பன் உடனடியாக கவனிக்க!!

பெயரில்லா சொன்னது…

//மங்களூர் சிவா said...

குசும்பனுக்கு கொழுக்கட்டை வேண்டாமாம் அத்திரிபாச்சாதான் வேண்டுமாம் திருமதி. குசும்பன் உடனடியாக கவனிக்க!!//

ரிபிட்டேய்

Thamiz Priyan சொன்னது…

///வடகரை வேலன் said...

//மங்களூர் சிவா said...

குசும்பனுக்கு கொழுக்கட்டை வேண்டாமாம் அத்திரிபாச்சாதான் வேண்டுமாம் திருமதி. குசும்பன் உடனடியாக கவனிக்க!!//

ரிபிட்டேய்///
ரிப்பீட்ட்ட்ட்ட்டேய்க்கு ஒரு ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டேய்

Sanjai Gandhi சொன்னது…

சின்ன வயசுல கேட்ட கதை.. ஆனா இப்போ குசும்பனை வைத்து படிக்கும் போது செம குஜாலா கீதுபா.. :))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்