பின்பற்றுபவர்கள்

29 ஆகஸ்ட், 2008

திருக்குறளும் மெகா சீரியல்களும் !

திருக்குறளை பொதுமக்கள் வாழ்வியல் நெறியில் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, நெடுந்த்தொடர் இயக்குனர்கள் நன்றாகவே பயன்படுத்துகிறார்கள். நடிகை ராதிகா தொடர்களில் இதை மிகச் சாதாரணமாகப் பார்க்கலாம்.

'சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.' [311]


இதன் பொருள் படி, கதாநாயகி நல்ல நிலையில் உயர்ந்து பெரிய வியாபார ஒப்பந்தம் ஒன்றில் கோடிக்கணக்கில் பணம் வரும் நேரத்தில், அந்த ஒப்பந்தத்தினால் தனது கணவரின் சின்னவீட்டின் பெரிய மகனுக்கு பெரிய நட்டம் என்றால், யாருக்கும் சொல்லாமல் நாயகி ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு பகவான் மேல் பாரத்தைப் போட்டு திருப்பதி படிமேல் 2 வார காட்சி எடுப்பதற்காக ஒவ்வொரு படியாக ஏறிக் கொண்டி இருப்பார்.

'கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.' [312]


இந்த குறள் படி, தன் கணவரின் சின்னவீட்டு பெரிய மகன் ஆயிரம் பேருக்கு முன்னால், கதாநாயகியைப் பார்த்து 'நீ தாண்டி எங்கப்பாவுக்கு வப்பாட்டி' என்று திட்டிவிடுகிறான், தியாக சொரூபமான கதாநாயகி அதைக் அவமானமாகக் கருதாமல் ... கேட்டு சிரித்துக் கொண்டே, 'கண்ணா இன்னிக்கு உனக்கு பிறந்த நாள், காபாலிஸ்வரர் கோவிலுக்கு உனக்காக அர்ச்சனைப் பண்ணப் போகிறேன் வழியவிடு' என்று கூறியபடி ஓரத்தில் துளிர்க்கும் கண்ணீர் சிதறுவதற்குள் அந்த இடத்தைவிட்டுச் செல்கிறார்.

'செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்.' [313]


கதாநாயகி ஒரு கட்டத்தில் மிகவும் பொருக்கமாட்டாமல் கணவரின் சின்னவீட்டு பெரிய மகனை கைநீட்டி அடிச்சிடுறாங்க, அடிச்சப் பிறகு 'அவனை அடிச்சிட்டோமே' ன்னு மனம் வருந்தி வருந்தி மூன்று நாள் தூக்கமே இல்லாமல் கண் சிவக்கிறாங்க

'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.' [314]


இந்த குறள் மிகவும் புகழ்வாய்ந்தது, இந்த குறளை பயன்படுத்தாத மெகாதொடரே இல்லை, மெட்டி ஒலியின் ஒவ்வொரு நாள் தொடருக்கும் இந்த குறள் தான் கருவாக அமைந்தது. பெரியவர் சிதம்பரம் கேரக்டரே இந்த குறளை வைத்துதான் உருவாக்கப்ப்பட்டது, மருமகன் கேரக்டர் அவமானப்படுத்தும் போதெல்லாம் மாப்ளே...மாப்ளே... என்று உருகுவார். ராதிகா சீரியல்களில் சின்னவீடு கேரக்டருக்கு காஞ்சிபுரம் பட்டுப் புடவையை விளம்பர நிறுவனம் பரிசு குலுக்களில் அனுப்பியதாக யாருக்கும் தெரியாமல் அனுப்பி வைப்பார்

'அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.' [315]


நேற்று தன்னை பலர் முன் அவமானப்படுத்திய சின்னவீட்டின் பெரிய மகன் குடிச்சிட்டு கீழே ரத்தம் சொட்ட சொட்ட விழுந்து கிடப்பதைப் பார்த்து தாய்மைகே உள்ள பாசத்தால் காரில் தூக்கிக் கொண்டுவந்து போட்டு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவன் கண் விழிக்கும் வரை அன்னம் ஆகாரமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்து சரியாக கண்விழிக்கும் நிமிசத்துக்கு முந்தைய நிமிசம் சத்தமில்லாமல் வெளியே சென்றிருப்பார்.

'எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.' [317]


பொது எதிரி ஒருவன் தனக்கு பார்டி நேரத்தில் கோக்கில் விசம் கொடுத்துக் கொல்ல முயன்றதைப் போலவே ... இன்னிக்கு அவனே தன் சின்னவீட்டு நடுப்பையனுக்கு பொட்டிக் கடையில் கோக் வாங்கிக் கொடுப்பதைப் பார்க்கிறாங்க, ஒரு வேளை இதிலும் விஷம் இருக்கும்...என்று பதறி...காரை யூ டேர்ன் அடித்து அங்கு நிறுத்துவிட்டு, நடுப்பையன் கோக்கை குடிக்கப் கவிழ்கும் போது... கோக் பாட்டிலை லாவகமாக பிடிங்கி நடுரோட்டில் உடைக்கிறாங்க...

'பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.' [319]


நாளு பேருக்கு முன்னால் கணவரை சத்தம் போட்டு அவமானபடுத்திடுறாங்க நாயகி, அப்பறம் அதை நினைச்சு மனம் புழுங்கி நாலு செவத்துக்குள்ளே அழுமால் மிடுக்காக சென்ற போது நிலைப்படி முன்நெற்றியில் நச்சின்னு இடித்து...ஸ்டிக்கர் பொட்டு நிலைப் படியிலேயே ஒட்டிக் கொள்கிறது.

'நோய் எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.' [320]


மேலே சொன்னது போல் அடுத்த முறை கணவரால் அவமானப்படும் போது, எதிர்த்து சத்தமிடலாம் என்று தொண்டை வரை வந்த குரலை.. நிலைப்படி ஞாபகம் வர அப்படியே நிறுத்திவிட்டு... நெற்றியை தடவிக் கொண்டே .... சத்தம் போடாமல் ... மெதுவாக சிரித்துவிட்டு வெளியேறிவிடுகிறார் நாயகி.

Ref: மூலஉரை வீஎஸ்கே ஐயாவின் மன்னார் குறள் விளக்கம்

32 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

யோவ்...
அடங்கமாட்டீரா?

பழமைபேசி சொன்னது…

தமிழ் முனைவர் பட்டத்துக்கு உண்டான முன்னோட்டம் மாதிரித் தெரியுது? இல்ல, வாங்கியாச்சா??
அந்தத் தடத்தை எங்களுக்கும் சித்த காமிக்கலாமல்லோ???

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
யோவ்...
அடங்கமாட்டீரா?

9:56 AM, August 29, 2008
//

உனக்கு இன்னா வோணும் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//பழமைபேசி said...
தமிழ் முனைவர் பட்டத்துக்கு உண்டான முன்னோட்டம் மாதிரித் தெரியுது? இல்ல, வாங்கியாச்சா??
அந்தத் தடத்தை எங்களுக்கும் சித்த காமிக்கலாமல்லோ???

10:10 AM, August 29, 2008
//

பழமைபேசி,
முனைவர் பட்டம் பெறுவது அவ்வளவு எளிதானதா ? :)

டாக்டர் விஜய் மாதிரி டக்கராக பட்டம் வாங்க ஆசைதான் !

பதிவர் பல்கலைகழகம் எதும் இருக்கிறதா ?

முகவை மைந்தன் சொன்னது…

மெய்யாலுமே நல்ல முயற்சி, தொடருங்கள். இப்படியும் கும்மலாம்னு வழிகாட்டி இருக்கீங்க... வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//முகவை மைந்தன் said...
மெய்யாலுமே நல்ல முயற்சி, தொடருங்கள். இப்படியும் கும்மலாம்னு வழிகாட்டி இருக்கீங்க... வாழ்த்துகள்.

10:40 AM, August 29, 2008
//

முகவை மைந்தன்,

திருக்குறள் பதிவென்றால் நீங்க கண்டிப்பாக வருவிங்க என்று தெரியும் !

:)

எப்படிச் சொன்னால் என்ன திருக்குறளின் கருப்பொருளை சிதைக்காமல் விளங்கும் வகையில் சொல்லனும் அம்புட்டுதானே !

கிரி சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

VSK சொன்னது…

குறளைச் சொல்லி, சீரியலை வாழ வைத்துவிட்டீர்கள் கோவியாரே!:))

குறளுக்கு நல்ல நிகழ்ச்சிகளைத் தொகுத்து அசத்திட்டீங்க!

இதுபோல பதிவுகளைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்!

நசரேயன் சொன்னது…

அருமை..அருமை.. மிக அருமை ..

உங்களுக்கு ஒரு நெடுந்தொடர் எழுதும் திறமை இருக்கிறது என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை

விஜய் ஆனந்த் சொன்னது…

:-)))...

ஆராய்ச்சி பலமா இருக்கே....ஏதும் மெகா சீரியல் டைரக்ட் பண்ணப்போறீங்களா???

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஆஹாஹ ஹாஹ! (Courtesy : M.S.Baskar aka Mayavaram Pattabi)

அய்யன் திருவள்ளுவர் வாழ்க!(Courtesy Kalaignar Mu.Karunanithi aka Thamizhinath Thalaivar!?)

துளசி கோபால் சொன்னது…

அடடாடா.......

இனிமே மெகா சீரியல்கள் தமிழ் மரபுப்படி இல்லேன்னு யாரும் நாக்கு மேலே பல்லைப் போட்டுப் பேசுவாங்கன்றீங்க???? நெவர்:-)

இப்பத்தாங்க எனக்குக் குறள் நல்லப் புரியுது. மன்னாருக்குத்தான் டேங்கீஸு.

இன்னொரு சின்ன விஷயம்.

//கொடுத்துக் கொள்ள ...//

கொடுத்துக் கொல்ல

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

10:48 AM, August 29, 2008
//

வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்அ

கோவி.கண்ணன் சொன்னது…

//நசரேயன் said...
அருமை..அருமை.. மிக அருமை ..

உங்களுக்கு ஒரு நெடுந்தொடர் எழுதும் திறமை இருக்கிறது என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை

10:58 AM, August 29, 2008
//

நசரேயன், பாராட்டுக்கு நன்றி !
நெடும் தொடர் பார்பவர்கள் எவருமே அதை எழுத முடியும். நெடும் தொடர் பார்த்து 3 ஆண்டுகள் ஆகுது, மெட்டி ஒலிக்குப் பிறகு பார்த்தது இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
குறளைச் சொல்லி, சீரியலை வாழ வைத்துவிட்டீர்கள் கோவியாரே!:))

குறளுக்கு நல்ல நிகழ்ச்சிகளைத் தொகுத்து அசத்திட்டீங்க!

இதுபோல பதிவுகளைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்!

10:48 AM, August 29, 2008
//

வீஎஸ்கே ஐயா,
சீரியலை வாழவைத்தால் தாய்குலங்களுக்குத்தான் ஆபத்து, வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்ற பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//துளசி கோபால் has left a new comment on the post "திருக்குறளும் மெகா சீரியல்களும் !":

அடடாடா.......

இனிமே மெகா சீரியல்கள் தமிழ் மரபுப்படி இல்லேன்னு யாரும் நாக்கு மேலே பல்லைப் போட்டுப் பேசுவாங்கன்றீங்க???? நெவர்:-)

இப்பத்தாங்க எனக்குக் குறள் நல்லப் புரியுது. மன்னாருக்குத்தான் டேங்கீஸு.

இன்னொரு சின்ன விஷயம்.

//கொடுத்துக் கொள்ள ...//

கொடுத்துக் கொல்ல //


துளசி அம்மா,
டாக்டர் மு.வ, டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன், கலைஞர் மு.கருணாநிதி, சாலமன் பாப்பையா ஆகியோர் காலத்தின் கட்டாயத்தின் படி இதைத் தான் பின் பற்றியிருப்பார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
:-)))...

ஆராய்ச்சி பலமா இருக்கே....ஏதும் மெகா சீரியல் டைரக்ட் பண்ணப்போறீங்களா???

11:02 AM, August 29, 2008
//

விஜய்,
நீ ஜீரோவாக.... சாரி ஹீரோவாக நடிப்பதற்கு ஆயத்தம் என்றால் செய்யலாம். மெகா சீரியல் நாயகர்கள் ஹீரோ இல்லை ஜீரோ !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
ஆஹாஹ ஹாஹ! (Courtesy : M.S.Baskar aka Mayavaram Pattabi)

அய்யன் திருவள்ளுவர் வாழ்க!(Courtesy Kalaignar Mu.Karunanithi aka Thamizhinath Thalaivar!?)

11:33 AM, August 29, 2008
//

ஜோதிபாரதி,
நீங்கள் துளசி அம்மாவுக்கு போட்ட மறுமொழியால் தான் இந்த பின்னூட்டமே புரிகிறது ! நன்றி ! நன்றி !
:)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//VSK said...
குறளைச் சொல்லி, சீரியலை வாழ வைத்துவிட்டீர்கள் கோவியாரே!:))

குறளுக்கு நல்ல நிகழ்ச்சிகளைத் தொகுத்து அசத்திட்டீங்க!

இதுபோல பதிவுகளைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்!

10:48 AM, August 29, 2008
//

இதையெல்லாம் பார்க்கும்போது சிங்கப்பூர் எக்ஸ்போவில் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் கோவியாருக்கும் எதோ புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்பது புலனாகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
அடடாடா.......

இனிமே மெகா சீரியல்கள் தமிழ் மரபுப்படி இல்லேன்னு யாரும் நாக்கு மேலே பல்லைப் போட்டுப் பேசுவாங்கன்றீங்க???? நெவர்:-)

இப்பத்தாங்க எனக்குக் குறள் நல்லப் புரியுது. மன்னாருக்குத்தான் டேங்கீஸு.

இன்னொரு சின்ன விஷயம்.

//கொடுத்துக் கொள்ள ...//

கொடுத்துக் கொல்ல

11:43 AM, August 29, 2008
//

துளசி அம்மா,

நியூசியில் தமிழ் மெகா சீரியல் வரவழைச்சு நேரடியாகவே திருக்குறள் பொருள் விளக்கம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறதா ? உங்க வீட்டில் இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்கிற ஒலி கேட்டு இருக்கிறதா ?

இதெல்லாம் இல்லை என்றால் நீங்க கொடுத்து வச்சவங்க !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
இதையெல்லாம் பார்க்கும்போது சிங்கப்பூர் எக்ஸ்போவில் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் கோவியாருக்கும் எதோ புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்பது புலனாகிறது.

11:59 AM, August 29, 2008
//


ஜோதி ஜோதி...........,

இப்படி போட்டு உடைக்கலாமா ?

வீஎஸ்கே மெகா சீரியல் இயக்கப் போகிறாராம், அதோட கதை(சுறுக்கம்?) தீபாவெங்கட்டிடம் சொல்லச் சொல்லி என்னை அனுப்பினார்... இதுதான் உண்மை. இதுல நான் 1 செண்ட் கமிசன் கூட எடுத்துக் கொள்ள விரும்பல. நட்புக்காக இந்த உதவியைச் செய்கிறேன்.

:))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

///ஜோதிபாரதி said...

துளசி அம்மா,
டாக்டர் மு.வ, டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன், கலைஞர் மு.கருணாநிதி, சாலமன் பாப்பையா ஆகியோர் காலத்தின் கட்டாயத்தின் படி இதைத் தான் பின் பற்றியிருப்பார்கள்.

11:53 AM, August 29, 2008
//

ஜோதி,
இதெல்லாம் எனக்கு புதிய தகவல், வீஎஸ்கே மன்னாரை வைத்து சென்னை தமிழில் விளக்கம் எழுதுவார் அதுதான் இந்த பதிவுக்கு முன்னோடி

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//ஜோதி ஜோதி...........,

இப்படி போட்டு உடைக்கலாமா ?

வீஎஸ்கே மெகா சீரியல் இயக்கப் போகிறாராம், அதோட கதை(சுறுக்கம்?) தீபாவெங்கட்டிடம் சொல்லச் சொல்லி என்னை அனுப்பினார்... இதுதான் உண்மை. இதுல நான் 1 செண்ட் கமிசன் கூட எடுத்துக் கொள்ள விரும்பல. நட்புக்காக இந்த உதவியைச் செய்கிறேன்.

:))))))))//


வலையுலகத் தமிழ் மக்களே!

பாத்தீங்களா! பாத்தீங்களா!!

கேட்டீங்களா! கேட்டீங்களா!!

துளசி கோபால் சொன்னது…

//நியூசியில் தமிழ் மெகா சீரியல் வரவழைச்சு நேரடியாகவே திருக்குறள் பொருள் விளக்கம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறதா ? உங்க வீட்டில் இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்கிற ஒலி கேட்டு இருக்கிறதா ?

இதெல்லாம் இல்லை என்றால் நீங்க கொடுத்து வச்சவங்க !//


சாடிலைட் பாத் லே இல்லேன்னாலும் பூஸ்டர் போட்டு ஆஸ்தராலியா வழியா இங்கேயும் சன் டிவி வருதுன்னு பலர் போட்டுக்கிட்டு இருக்காங்க. இலங்கை நண்பர்களும் வேற ஏதோ ஒரு சானல் (அவுங்க நாட்டு செய்தி வருமாம்) வச்சுருக்காங்க.

நம்ம வீட்டுலேதான் இதெல்லாம் ஒன்னும் வச்சுக்கலை. பொதுவா நான் டிவியே அவ்வளவாப் பார்க்க மாட்டேன்.

கோபால் ரிட்டயர் ஆனதும் அவருக்கு 'சன் தொலைக்காட்சி' போட்டுத் தர்றதா முடிவு எடுத்துருக்கு.

எனக்கும் பதிவெழுத நேரம் வேணுமுல்லே:-))))

குட்டிபிசாசு சொன்னது…

திருக்குறளில் இவ்வளாவு மேட்டர் இருக்கா? இதை வச்சி 133 பதிவு போடலாமே!!

கோவி.கண்ணன் சொன்னது…

// குட்டிபிசாசு said...
திருக்குறளில் இவ்வளாவு மேட்டர் இருக்கா? இதை வச்சி 133 பதிவு போடலாமே!!

12:41 PM, August 29, 2008
//

குட்டிபிசாசு,

133 குறளையும் பிரிச்சு மேய்ந்தால் 1330 பதிவு போட்டுவிடலாம் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...

சாடிலைட் பாத் லே இல்லேன்னாலும் பூஸ்டர் போட்டு ஆஸ்தராலியா வழியா இங்கேயும் சன் டிவி வருதுன்னு பலர் போட்டுக்கிட்டு இருக்காங்க. இலங்கை நண்பர்களும் வேற ஏதோ ஒரு சானல் (அவுங்க நாட்டு செய்தி வருமாம்) வச்சுருக்காங்க.

நம்ம வீட்டுலேதான் இதெல்லாம் ஒன்னும் வச்சுக்கலை. பொதுவா நான் டிவியே அவ்வளவாப் பார்க்க மாட்டேன்.//

துளசி அம்மா,
உங்களுக்குத்தான் ஜிகே வுடன் செலவிடவே நேரம் சரியாக இருக்குமே

//கோபால் ரிட்டயர் ஆனதும் அவருக்கு 'சன் தொலைக்காட்சி' போட்டுத் தர்றதா முடிவு எடுத்துருக்கு.

எனக்கும் பதிவெழுத நேரம் வேணுமுல்லே:-))))//

ஏன் ஏன் இந்த கொலவெறி, கோபால் ஐயா உங்களை கண் கலங்காமல் பார்த்துக் கொள்கிறார், சன் டிவி மெகசீரியல் பார்க்க வைத்து அவரை கண் கலங்க வைக்க நினைப்பது ஞாயமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...

வலையுலகத் தமிழ் மக்களே!

பாத்தீங்களா! பாத்தீங்களா!!

கேட்டீங்களா! கேட்டீங்களா!!

12:09 PM, August 29, 2008
//

ஜோதி,

சூரியன் எப் எம் மாதிரி சொல்றிங்களே. அவரு 48 எபிசோட் கொண்ட 'கனவு மெய்படும்' என்ற மெக கதை எழுதினார். அதில் நடிக்க தீபாவெங்கட்டுக்கு விருப்பம் இல்லையாம். கதையில் மாமியார் கேரக்டரே இல்லைன்னு நிராகரிச்சிட்டாங்க.

manikandan சொன்னது…

//VSK said...
குறளைச் சொல்லி, சீரியலை வாழ வைத்துவிட்டீர்கள் கோவியாரே!:)) //

சீரியலை சொல்லி குறளை வாழவைக்கிற நிலைமை தான் இப்போ.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

அம்மாடியோ... பயங்கரமான ஆராய்ச்சியா இருக்கே? உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இதை படிக்க வழிமொழிகிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

////ஜோதிபாரதி said...

வலையுலகத் தமிழ் மக்களே!

பாத்தீங்களா! பாத்தீங்களா!!

கேட்டீங்களா! கேட்டீங்களா!!

12:09 PM, August 29, 2008
//

ஜோதி,

சூரியன் எப் எம் மாதிரி சொல்றிங்களே. அவரு 48 எபிசோட் கொண்ட 'கனவு மெய்படும்' என்ற மெக கதை எழுதினார். அதில் நடிக்க தீபாவெங்கட்டுக்கு விருப்பம் இல்லையாம். கதையில் மாமியார் கேரக்டரே இல்லைன்னு நிராகரிச்சிட்டாங்க.//

யார் இல்லாட்டியும் பரவா இல்லை. மாமியார் மருமகள் கண்டிப்பா இருக்கணும். அது தான் மெகா சீரியலுக்கு கோல்டன் ரூல். கொஞ்சம் அவரிடம் எடுத்து சொல்லவும். மற்றபடி சூரியன் யாரிடமோ காப்பி அடித்தது என்று நினைக்கிறேன். நான் சிறு வயதில் ஒரு விளம்பரத்தில் கேட்ட ஞாபகம்.

இக்பால் சொன்னது…

பாவம்யா திருவள்ளுவர். தன் திருக்குறளுக்கு இந்த மாதிரி மேற்கோள் காட்டுகிறார்களே என்று நொந்திடுவார்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்