பின்பற்றுபவர்கள்

28 ஆகஸ்ட், 2008

உண்மையும் பொய்யும் ... !

எதிர்வினை ஏற்படுத்தும் எந்த ஒரு நிகழ்வைப் பற்றியும் இரு வேறுப்பட்ட கருத்துக்கள் விதைக்க / வலியுறுத்த மொழியில் பயன்படுத்தும் எளிதான சொல் தான் உண்மை மற்றும் பொய். உண்மை, பொய் இவற்றில் எது உண்மை ? கேள்வியே அபத்தமாக இருக்கிறது...இங்கே எது உண்மை என்பது குழப்பத்தினால் எழும் உண்மை பற்றிய கேள்வி. ஒன்னும் புரியலையா ? நெருங்கிய நண்பர் உண்மையே பேசுபவர் என்று நம்பினாலும், இன்னொருவருக்கும் அவருக்கும் பிரச்சனை எனும் போது நண்பர் பேசுவது தான் உண்மை என்று முடிவு செய்துவிட முடியுமா ? உண்மை எப்போதும் மாறாத ஒன்று. புலன்கள் கூட ஏமாற்றிவிடும் என்பதால் மெய்யறிவின் மூலமே உண்மைகளைப் பற்றிய புரிதல்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும். பொய்யின் தேவைகளைப் போல் உண்மையையின் தேவைகளை, புரிதல்களை சுயநலம் தந்துவிடாது.

பலசமயங்களில் பொய்யைவிட மிகவும் சுடுவது உண்மைகள் தான். தனிமனிதர்களைப் பொறுத்து, நிகழ்வைப் பொறுத்து மறைக்கப்பட்ட பொய்களைவிட தெரியப் போகும் உண்மைகள் அவர்களின் விருப்பமானவையாக இருக்க முடியாது.

நீதிமன்றங்களில் நடக்கும் சிவில் வழக்குகளெல்லாம் உண்மை எது என்ற குழப்பத்தை தீர்ப்பவையா ? எந்த ஒரு மனிதனுக்கும் தன் மன அளவில் எது உண்மை என்பது தெளிவாகவே தெரியும், இருந்தாலும் ஆதாயம் கருதியே ஏற்றுக்கொள்ள மனமின்றி வழக்குவரையில் செல்கிறார்கள். நீதிமன்றங்கள் எதுவும் முக்காலத்தை உணர்ந்தவை அல்ல, வாத அடிப்பாடையில் தீர்ப்புகளை வழங்கும். நீதி என்பது நீதிமன்றங்களின் தீர்ப்புகள் உண்மைக் குறித்தது எழுதப்படுவது அல்ல. வாதங்களைப் பொருத்தது தான் எழுதப்படுகின்றன.

வாய்மையே (சத்தியமே) வெல்லும் என்பது மிகச் சரிதான். சிற்சில சூழல்களில் வாய்மை வாயடைக்க வேண்டிய இடத்தில் அதாவது பெரிய பிரச்சனை வரும் என்று தெரிந்தே பேசக் கூடாத இடத்தில் பேசும் உண்மை, பொய்யைவிட பெரிய விழைவுகளையே ஏற்படுத்திவிடும். அங்கே வெற்றிபெற்ற உண்மை கூட நகைப்புக்கு / வேதனைக்கு இடமானதுதான்.

எளிமையாகச் சொல்வதென்றால்,
பேசவேண்டிய இடத்தில் தவிர்த்துப் பேசப்படும் பொய்யும், பேசக் கூடாத இடத்தில் வேண்டுமென்றே பேசப்படும் உண்மையும் ஒன்று தானே ?

27 கருத்துகள்:

Natty சொன்னது…

மீ த ஃபர்ஸ்ட்டு

நம்ம தலைமை பதிவர் சொல்லிருக்காருல்லே........
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

ஜெகதீசன் சொன்னது…

மீ த செகண்டு....
:)

கிரி சொன்னது…

கோவி கண்ணன் நீங்க எங்கேயோ போய்ட்டீங்க ....இது எனக்கு விளங்கறதுக்கே பல முறை படிக்கணும் போல இருக்கே.... ம்ஹீம்

Kumky சொன்னது…

எதோ புரிஞ்ச மாரியும் இருக்கு, புரியாத மாரியும் இருக்குங்னா...
ஹ்ம்ம்ம் யார் மேல உள்ள கோபமோ.

விஜய் ஆனந்த் சொன்னது…

நல்ல அலசல்!!!

// பேசவேண்டிய இடத்தில் தவிர்த்துப் பேசப்படும் பொய்யும், பேசக் கூடாத இடத்தில் வேண்டுமென்றே பேசப்படும் உண்மையும் ஒன்று தானே ? //

ஒண்ணேதான்....தேவையில்லாத ஒண்ணு...

பெயரில்லா சொன்னது…

கோவி,

கோவி பேசப்படுமிடம் பொருள் பொறுத்தே உண்மையும் பொய்யும் வகைப்படுத்தப் படுகிறது.

TBCD சொன்னது…

ஏன்..

ஏன் இப்படி...

புரியல்ல..

சத்தியமா புரியல்ல..

புதசெவி

Unknown சொன்னது…

புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்
பொய்மையும் வாய்மையிடத்து

பின் நவீனத்துவம் / முன் நவீனத்துவம் எழுத முயற்சியா ஜி.கே.

சி தயாளன் சொன்னது…

ஓ....

இக்பால் சொன்னது…

புரியரவங்களுக்கு புரிஞ்சா சரிங்கற மாதிரி. யாரு மேலோயோ உள்ள கோபத்தில எழுதின மாதிரி தெரியுது.

Kanchana Radhakrishnan சொன்னது…

//எளிமையாகச் சொல்வதென்றால்
பேசவேண்டிய இடத்தில் தவிர்த்துப் பேசப்படும்
பொய்யும்,பேசக்கூடாத இடத்தில் வேண்டுமென்றே
பேசப்படும் உண்மையும் ஒன்றுதானே//
அருமையான..அர்த்தம் பொதிந்த வரிகள்.
நீங்கள் யாரைசொல்கிறீர்கள் என ஓரளவு புரிந்துக் கொண்டேன்.

manikandan சொன்னது…

நான் அடிச்ச கருத்து செறிவு மிக்க பின்னூட்டம் வெளியிடவில்லை கோவியாரே நீங்க!

கோவி.கண்ணன் சொன்னது…

// அவனும் அவளும் said...
நான் அடிச்ச கருத்து செறிவு மிக்க பின்னூட்டம் வெளியிடவில்லை கோவியாரே நீங்க!

8:08 PM, August 28, 2008
//

அ அ,
பின்னூட்டம் மட்டுறுத்தலையே எடுத்தச்சே... நான் எதையும் மட்டுறுத்தவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//Natty said...
மீ த ஃபர்ஸ்ட்டு

நம்ம தலைமை பதிவர் சொல்லிருக்காருல்லே........
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
//

உண்மையோ பொய்யோ சுயநலத்திற்கு அல்லாமல் கேடுவிளைவிக்கவில்லை என்றால் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் !

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
கோவி கண்ணன் நீங்க எங்கேயோ போய்ட்டீங்க ....இது எனக்கு விளங்கறதுக்கே பல முறை படிக்கணும் போல இருக்கே.... ம்ஹீம்

10:35 AM, August 28, 2008
//

கிரி,
இன்னும் வெளங்கிற மாதிரி எழுதினால் பதிவு நீளமாக போய்விடுமே !

கோவி.கண்ணன் சொன்னது…

//kumky said...
எதோ புரிஞ்ச மாரியும் இருக்கு, புரியாத மாரியும் இருக்குங்னா...
ஹ்ம்ம்ம் யார் மேல உள்ள கோபமோ.

10:47 AM, August 28, 2008
//

கும்மி,

இதுல யார் மனதையாவது புண்படுத்தும் வரிகள் இருந்தால் சொல்லுங்கள் எடுத்துவிடுகிறேன் :(

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
நல்ல அலசல்!!!

// பேசவேண்டிய இடத்தில் தவிர்த்துப் பேசப்படும் பொய்யும், பேசக் கூடாத இடத்தில் வேண்டுமென்றே பேசப்படும் உண்மையும் ஒன்று தானே ? //

ஒண்ணேதான்....தேவையில்லாத ஒண்ணு...

11:31 AM, August 28, 2008
//

விஜய் ஆனந்த்
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
கோவி,

கோவி பேசப்படுமிடம் பொருள் பொறுத்தே உண்மையும் பொய்யும் வகைப்படுத்தப் படுகிறது.

12:05 PM, August 28, 2008//

வேலன் அண்ணாச்சி,
சரிதான் ! எதற்கும் இடம் பொருள், இங்கிதம் தெரிந்து பேச வேண்டும் என்பார்கள் !

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
ஏன்..

ஏன் இப்படி...

புரியல்ல..

சத்தியமா புரியல்ல..

புதசெவி
//

டிபிசிடி,

பதிவில் எதும் உள்குத்து தேடினீரா ?

அப்படி ஒண்ணும் இல்லை. ஒருவேளை அதனால் தான் புரியலையோ ?

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்
பொய்மையும் வாய்மையிடத்து

பின் நவீனத்துவம் / முன் நவீனத்துவம் எழுத முயற்சியா ஜி.கே.

6:55 PM, August 28, 2008
//

சுல்தான் ஐயா,

ஐயன் திருவள்ளுவர் எல்லாவற்றையும் பேசி இருக்கிறார். இங்கே மனதில் தோன்றிய உண்மை / பொய் பற்றிய எண்ணங்களை சிறு தொகுப்பாக எழுதமுயன்றேன். பிந, முந அது எனக்கு விளக்காத பொருள்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//இக்பால் said...
புரியரவங்களுக்கு புரிஞ்சா சரிங்கற மாதிரி. யாரு மேலோயோ உள்ள கோபத்தில எழுதின மாதிரி தெரியுது.

7:22 PM, August 28, 2008
//

திரு இக்பால்,

இதில் கோபத்தைத் தூண்டும் வரிகள் எதுவும் இருக்கிறதா ? எழுதியவன் என்ற முறையில் அப்படிப் பட்ட சிந்தனையில் இதை எழுதவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

kanchana Radhakrishnan said...
//
அருமையான..அர்த்தம் பொதிந்த வரிகள்.
நீங்கள் யாரைசொல்கிறீர்கள் என ஓரளவு புரிந்துக் கொண்டேன்.

7:44 PM, August 28, 2008
//

இராதகிருஷ்ணன் ஐயா,

எழுதியவன் என்ற முறையில் சொல்கிறேன். மேலும் இதில் 'உண்மை/ பொய்' பற்றி எழுதி இருப்பதால்....மெய்யாகச் சொல்கிறேன். யாரையும் குறித்து இதை எழுதவில்லை.

manikandan சொன்னது…

எங்கள எல்லாம் இந்த மாதிரி பதிவு எழுதி யோசிக்க வைக்கலாம்ன்னு நினைக்கறீங்க. நாங்க மாட்டமாட்டோம்.

சரி, இந்த கேள்விக்கு பதில் என்ன ?

ஒருவன் கூறுவது பொய் என்று தெரிந்து இருக்கும் பட்சத்தில் அவன் கூறியது பொய் ஆகுமா ?

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அண்ணே, ரொம்ப நல்ல எழுதியிருக்கீங்க.

கடந்த ரெண்டு நாள பதிவுகள்ல பயங்கர மாற்றம் தெரியுது. கலக்குறீங்க. ஆனா சீக்கிரமே பீரும், பிராந்தியும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒபாவும் மெக்கெயினும் என பல எதிர்பதிவுகள் வந்தாலும் வரும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அவனும் அவளும் said...
எங்கள எல்லாம் இந்த மாதிரி பதிவு எழுதி யோசிக்க வைக்கலாம்ன்னு நினைக்கறீங்க. நாங்க மாட்டமாட்டோம்.

சரி, இந்த கேள்விக்கு பதில் என்ன ?

ஒருவன் கூறுவது பொய் என்று தெரிந்து இருக்கும் பட்சத்தில் அவன் கூறியது பொய் ஆகுமா ?

8:44 PM, August 28, 2008
//

அவன் கூறுவது பொய் என்று பிறருக்கு தெரிந்திருக்கும் போதா அந்த ஆளுக்கும் நமக்கும் உள்ள பழக்கத்தைப் பொறுத்து இருக்கிறது, அற்ப விசயத்துக்கு பொய் சொல்கிறானா என்று பார்க்கவேண்டும், ஆதாயம் கருதி பொய் சொல்கிறானா என்று ஆராய வேண்டும், ஆதாயம் கருதி பொய் சொல்பவர்களைவிட அற்பவிசயத்துக்கெல்லாம் பொய் சொல்பவர்கள் எப்போதும் பொய்யர்களே !

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

வாய்மையே வெல்லும் என்று நீதிமன்றங்களில் எழுதியிருப்பதற்கு அர்த்தம் வாயுள்ளவன வக்கீல வைச்சவந்தான் ஜெயிப்பான் என்பதுதான்.

சொல்லக்கூடாத உண்மை குறித்த உங்கள் கருத்துக்கள் முற்றிலும் உண்மை.

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//பேசவேண்டிய இடத்தில் தவிர்த்துப் பேசப்படும் பொய்யும்//

//பேசக் கூடாத இடத்தில் வேண்டுமென்றே பேசப்படும் உண்மையும் ஒன்று தானே//

கோவி அண்ணா
சமீபத்துல (அண்மையில்) நீங்க இந்த ரெண்டுல ஏதோ ஒன்னு பேசி இருக்கீங்க-ன்னு மட்டும் புரியிது! :)

மீதி எல்லாம் டிபிசிடி அண்ணாச்சிக்கே புரியலை! அடியேனுக்கு எங்கே புரியப் போவது? :))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்