பின்பற்றுபவர்கள்

26 ஆகஸ்ட், 2008

கலைஞர் முடிவெடுக்க வேண்டிய நேரம் !

தமிழகத்தில் ஒகனேகல் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதா ? அல்லது இரைச்சல் இல்லாமல் நடைபெறுகிறதா என்பது சரியாக தெரியவில்லை. ஆனல் கர்நாடக அரசு அனைத்துக் கட்சியின் ஆதரவுடன் பிரதமரை சந்தித்து திட்டத்தை நிறுத்தச் சொல்லி கோரிக்கை எழுப்பப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தென்னைமரத்தில் தேள் கொட்டிய பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. தமிழகத்தில் செயல்படுத்தப் போகும் ஒரு திட்டத்திற்காக அதனால் எந்தவித பாதிப்பும் அடையாத ஒரு மாநிலம் எதிராக இருப்பது இந்தியாவிலேயே இதுவே முதன்முறை. அதற்கும் முன்பு அவர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் பல்வேறு அணைகளை உயர்த்திய போது, தமிழகத்திற்கு பாதிப்பு என்று தெரிந்தும். தமிழகத்தின் சார்பில் வெறும் கண்டன போராட்டத்துடனேயே (தமிழர்களுக்குள் அவ்வளவுதான் ஒற்றுமையோ / சக்தியோ) நிறுத்திக் கொண்டார்கள். முல்லை பெரியார் அணை உயரம் கூட்டுவதில் இன்னும் கூட கேரள மாநிலம் சிக்கலை ஏற்படுத்தியே வருகிறது.

நாமும் கன்னடர்களைப் போல் உணர்ச்சிவசப்பட்டால் மலையாளிகளை ஓட ஓட விரட்டி இருப்போம். மாநில பிரச்சனையை மொழிப்பிரச்சனையாக்காது, தனிமனித வாழ்கையுடன் தொடர்பு படுத்தாது நடந்து கொள்ளும் கண்ணியம் அவர்களுக்கெல்லாம் இல்லை. தமிழர்கள் இதுவிசயத்தில் தெளிவடைந்து அனைத்துக் கட்சியனரும் சேர்ந்தே ஒற்றுமையாக ஒகனேகல் திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும். இது போன்ற நேரங்களில் தமிழக எதிர் கட்சிகள் ஒத்துழைப்புக் கொடுத்தால் திட்டம் வெற்றியடைந்து அதன் நற்பெயர் ஆளும் கட்சிக்குச் சென்றுவிடுமோ என்றே நினைத்து மக்கள் நலனை புறக்கணித்து தூய அரசியல் செய்து வருகின்றனர்.

கலைஞர் அணைத்துக்கட்சியனரின் ஒத்துழைப்போடு இந்த திட்டத்தை துரிதமாக முடுக்கிவிட வேண்டும். அதனை ஏற்றுக் கொள்ளாத கட்சிகளை மக்கள் மன்றம் அடையாளம் கண்டு கொள்வார்கள்.

சேது திட்டத்தை இராமன் பெயரை வைத்தாவது நிறைவேற்ற விடுங்கள் என்று சொல்லிய கலைஞர் ஒகனேகல் திட்டத்தை 'ஜெயலலிதா கூட்டுக் குடிநீர் திட்டம்' என்ற பெயரிலாவது நிறைவேற்றியே ஆகவேண்டும். கண்டிப்பாக தமிழர்கள் ஒட்டுமொத்த ஆதரவு கிடைக்கும், நலமான நாகரீக அரசியலுக்கு முன்னோடியாக இருந்தார் என்ற பெயர் நிலைக்கும். இதனை செய்துவிட்டால் கூட்டணிக்காக ஓடிய கட்சிகளையெல்லாம் சேர்த்துக் கொண்டு தான் தேர்தலை சந்திக்க முடியும் என்ற நிலை மாறி மக்கள் ஆதரவுடனேயே ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம்.

செய்வாரா கலைஞர் ?

5 கருத்துகள்:

g சொன்னது…

இறுதி வரியில் நல்ல கேள்வி. அனைவரும் யோசிக்கவேண்டியதுதான்.

manikandan சொன்னது…

இந்த பிரச்சனை தேவையற்றது. கலைஞர் சற்றும் வளைந்து கொடுக்காமல் செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. புகழ் மற்றும் பெருமையை மட்டுமே பெரிதாக எண்ணி செயல்படும் கலைஞர் அவர் பெயரையாவது வைத்து இதை செயல்படுத்தட்டும்.

செய்வாரா கலைஞர் ? இல்லை முரசொலியில் கவிதை எழுதுவதோடு நிறுத்துவாரா ?

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

உடன்பிற‌ப்பே,
நீயுமா வ‌ஞ்ச‌க‌ர்க‌ள் வ‌லையில் வீழ்ந்துவிட்டாய்?
நான் ஒரு நாளைக்கு 20 ம‌ணி நேர‌ம் உழைக்கிறேனே? அப்ப‌டி உழைத்தும் இன்னும் என் பிள்ளைக‌ள் பிர‌ச்ச‌னையையே முடிக்க‌ இய‌ல‌வில்லையே, இதில் குடிநீர் திட்ட‌ப் ப‌ணிக‌ள் வேறா? ஜெய‌ல‌லிதா குடிநீர் திட்ட‌ம் எனும் பெய‌ரை வைக்க‌லாம் என்று கூறி என் நெஞ்சினில் எரித‌ழ‌லை கொட்டிவிட்டாய். இத‌ற்காக‌த்தானா த‌ள‌ப‌தி ச‌ப்பான் போனார்? ( பாங்காங் எத‌ற்கு போனார், ல‌ண்ட‌ண் எத‌ற்கு பேனார் என்றெல்லாம் நீ கேட்க‌க் கூடாது)

2020ல் இந்தியா வ‌ல்ல‌ர‌சாகும் போது தர்ம‌புரி, கிருஷ்ண‌கிரி மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் காவிரி நீரை குடித்துக்கொண்டிருப்பார்க‌ள். ப‌ணிக‌ள் எல்லாம் திட்ட‌மிட்ட‌ப‌டி ந‌ட‌க்கின்ற‌ன‌ என்ப‌தை நீ புரிந்து கொள். சில‌ ந‌டைமுறை சிக்க‌ல்க‌ளால் சிறு கால‌தாம‌த‌ங்க‌ள் ஏற்ப‌ட்டாலும் 2050குள் எல்லா ப‌ணிக‌ளும் முடிவ‌டைந்துவிடும் என்ப‌து திண்ண‌ம். இது போன்ற‌ வீண் ச‌ந்தேக‌ங்க‌ளை உன் ம‌ன‌தில் இருந்து அக‌ற்றிவிட்டு உட‌னே சென்று உளியின் ஓசை ப‌ட‌த்தை பார். இல்லையேல் ந‌ம் தொலைகாட்சியின் மானாட‌ ம‌யிலாட‌ நிக‌ழ்சியைப் பார்.

விஜய் ஆனந்த் சொன்னது…

பாப்போம்.....கலைஞர் என்ன செய்யிறாருன்னு...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கலைஞர் வலைஞராக இருந்தால் நம் உணர்வுகள் அவரின் காதுகளுக்கு எட்டும். எட்டினாலும் ஒன்றும் நடந்து விடாது.

இப்போது எனக்கு ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.(இந்தோனேசியாவில் சிலவருடங்களுக்கு முன்பு ஓர் அதிபர் இருந்தார். அவருடைய மகள் அவர் எங்கு சென்றாலும் அவருடனேயே சென்றார். எதற்கு தெரியுமா?)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்