பின்பற்றுபவர்கள்

25 ஆகஸ்ட், 2008

காழ்புணர்வின்றி வேறில்லை.

திரை ரசிகர்கள், தங்கள் விருப்ப நடிகனின் படம் வெற்றிக்காக காவடி எடுத்தாலோ, தீச்சட்டி ஏந்தி பொதுவில் சென்றால் கூட யாரும் அதையெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளப் போவது இல்லை, ஏற்கனவே திரை ரசிகர்கள் தங்கள் அறிவிலித்தனத்தை கட் அவுட் காலையும் நக்கி பறைசாற்றிக் கொண்டார்கள் தானே.

குசேலன் என்கிற பேரில் தனக்கு இருக்கும் இமேஜை மூலதனமாக வைத்து எடுத்தப்படம் பிரமிட் சாய்மிராவையும், விநியோகஸ்தர்களையும் ஆட்டம் காண வைத்தது பலரும் அறிந்தது தான், உப்பு சப்பு இல்லாத ஒரு படத்துக்கு 60 கோடி விலை வைத்து தமிழ் ரசிகர்களின் உழைப்பை சுரண்ட நடந்த மோசடி தான் குசேலன், இதற்கு ரஜினிகாந்த் உடந்தை, பெங்களூருவில் படம் ஓடவேண்டுமென்பதற்காக தனது நிலையை மாற்றிக் கொண்டார் என்கிற விமர்சனமெல்லாம் ஒருபுறம் இருக்கிறது.

வானத்தின் கீழே என்கிற பெயரில் பதிவெழுதும் ரஜினி ரசிகர், ஒருவர் மனம் பொங்கி இருக்கிறார், அதாவது

எதோ சன் டிவி குசேலனில் ரஜினி காந்த் தோன்றும் காட்சி செயற்கையாக இருந்தது என்று விமர்சனம் செய்ததாம், ரஜினி ரசிகர்கள் அதை கண்டித்தால் யாருக்கும் பிரச்சனை இல்லை. இவர் காழ்புணர்வு என்று தலைப்பிட்டு, சன் டிவியை திட்டும் சாக்கில் கமலஹாசனின் தசவாதரத்தை விமர்சிக்கிறார். விமர்சிக்கும் உரிமை இவருக்குத்தான் இருக்கிறது போலும், அட கமலஹாசனை விமர்சனம் செய்வதை இவரைப் போலவே ரசிக வெறியில் இருக்கும் கமலஹாசன் ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள், ஆனால் சந்தடி சாக்கில் இவரது காழ்புணர்வின் பரிமாறலுக்கு பெரியாரை பயன்படுத்துகிறார்.

"துப்பாக்கி குண்டு எதேச்சையாகப் பாய்ந்ததில் தொண்டையிலிருந்த கேன்சர் நீங்கிவிட்டது என்றும், 12-ம் நூற்றாண்டில் கடலில் போடப்பட்ட ரங்கநாதர் சிலை 10 நூற்றாண்டுகள் கழித்து ரங்கராஜன் நம்பிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க சுனாமியை உருவாக்கியது எனும் கேயாஸ் தியரி பகுத்தறிவையும் ( பெரியார் இருந்திருந்தால் தாடியாலேயே தூக்கு மாட்டிக் கொண்டிருந்திருப்பார்.... என்னே பகுத்தறிவு! ) சிலாகிக்கும் இந்த மோசடிக் கும்பலுக்கு, வாழ்வின் வலிகளையும், நட்பின் உன்னதத்தையும் சொல்லும் குசேலன் லாஜிக் இல்லாத படமாகத்தான் தெரியும். "

இதை வன்மையாக கண்டிக்கிறேன். நான் பேசுவது நிஜமல்ல, வசனகர்த்தாவின் வசனமே என்று ரஜினியே வாய்திறந்த பிறகும் திருந்தாத ஜன்மங்கள் இருக்கும் நாட்டில், முட்டாள் தனமான சினிமா கதைகளுக்காக தந்தை பெரியார் என்று போற்றப்படுபவர் தூக்குமாட்டிக் கொள்ளவேண்டுமோ.

இந்த பதிவருக்கு பெரியாரைப் பற்றி தெரியாமலேயே... பெரியார் என்றுமே பேசப்படுபவர் என்கிற ஒரே காரணத்தினாலேயே பெரியாரை தனது கமலுக்கு எதிரான அரசியலுக்கு பயன்படுத்தி இருக்கிறார். பகுத்தறிவின்மை முட்டாள் தனங்களைக் கண்டால் பெரியார் தூக்குமாட்டிக் கொள்வாரா ? எந்த ஒரு பகுத்தறிவாளனும் அற்ப காரணங்களுக்காக தூக்கு மாட்டிக் கொள்ளமாட்டான். தமிழன விடுதலைக்கு இறுதி மூச்சுவரை பாடுபட்ட தந்தை பெரியாரை இந்த ரஜினி ரசிகர் கமலஹாசனை விமர்சனம் செய்ய அற்பமாக பயன்படுத்தி இருக்கிறார்.

பெரியாரை இழிவு படுத்தும் இந்த இடுகையை வன்மையாக கண்டிக்கிறேன், பெரியாரின் உண்மையான பற்றாளர்கள் கூட தன்னம்பிக்கையற்றவர்கள் அல்ல.

தற்கொலை செய்து கொள்பவர்கள் கோழைகள் என்பது உலகவழக்கு !

பகுத்தறிவு இமயமான பெரியார்,அற்பமான திரைக்கதைக்கும் காட்சிக்கும் தூக்குமாட்டிக் கொள்ளும் பலவீனமான திரைரசிகனல்ல

கடவுள் மறுப்புக் கொள்கையை என்றுமே மாற்றிக் கொள்ளாதாவர் பெரியார். 'அதிசயம் அதிசயம் பெரியார் தான் ஆனதென்ன ராஜாஜி' என்று வாலி பாட்டெழுதிய போது சீறிப்பாய்ந்தவர்கள் பெரியார் தொண்டர்கள். அதாவது நடக்கவே முடியாத, நடக்காத ஒன்றை பெரியாரின் கொள்கைக்கு மாற்றாக எழுதி பெரியாரின் பெயரிலேயே விளம்பரப்படுத்துவது பெரியாரை கேவலப்படுத்துவது போன்றது தான்.

ஆட்டுமந்தைகளாக தன்னைப்பற்றி எண்ணம் சிறிதுமின்றி, சுயமரியாதை இன்றி இருக்கும் இவர்கள் கூட தன் பெயரை பயன்படுத்துவது தெரிந்தால் இவர்களைப் போன்றவர்கள் இருக்கும் நாட்டில் பிறந்ததற்கு பெரியார் ஒருவேளை வருத்தப்பட்டு 'வெங்காயம், வெள்ளைப் பூண்டு, காட்டுமிராண்டி........' என்று கடிந்துகொள்வார்.

நீங்கள் குசேலன் வெற்றிக்காக தீ மிதிங்கள், காவடி எடுங்கள், 10 நாள் பட்டினி கிடப்பதாகவும், ஏன் படம் வெற்றிபெற்றால் நாக்கை அறுத்துக் கொள்கிறேன், கட்டைவிரலை துண்டித்துக் கொள்கிறேன் என்று கூட வேண்டிக் கொள்ளுங்கள், அதைவிடுத்து பெரியாரை உங்கள் அரசியலுக்கு இழுப்பது பலரின் மனதையும் புண்படுத்துகிறது.

17 கருத்துகள்:

முரளிகண்ணன் சொன்னது…

நல்லா சொன்னீங்க

விஜய் ஆனந்த் சொன்னது…

ரொம்பச்சரியா சொன்னீங்க...

தன் கருத்தை நிலைநிறுத்த, பிரபலமானவர்கள், பெரியோர்களை துணைக்கிழுத்திருக்கும் இந்தப்போக்கு கண்டனத்திற்குரியது.

Unknown சொன்னது…

Yes, your are right, I appreciate your words. Keep it up.
Renga

ஜோசப் பால்ராஜ் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஜோசப் பால்ராஜ் சொன்னது…

சினிமாவ சினிமாவா மட்டுமே பார்க்க எப்ப நாம எல்லாம் பழகிக்க போறோம்னு தெரியலை. ஒரு நடிகர் படம் எடுத்தா அதை பார்க்குற ரசிகனுக்கு அதை எப்டி வேணும்ணாலும் விமர்சிக்க உரிமை இருக்கு. நான் சொல்றது படத்த மட்டும்தான். மத்தபடி சினிமாவுக்கும் பெரியாருக்கும் முடிச்சு போடுறது எல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம். ரஜினியோட இந்த படம் நல்லா இல்லைன்னா அடுத்தப்படத்த நல்லபடியா எடுத்து சரி செய்யப்போறாரு. அதுக்காக கமல் படத்த வம்பிழுக்கிறது கூட தப்புத்தான். ஒரு கோட்டை அழிக்காமலயே சிறிதாக்க‌ அதன் அருகில் பெரிய கோடு போடுவதுதான் முறை. அதை விட்டுவிட்டு என்னால பெரிய கோடு போட முடியலை, அதுனால உன் கோட்ட அழிப்பேன்னு அலும்பு பண்றதுதான் குசேலன் தோல்விக்கு தசாவதாரத்த திட்றது. இதுல பெரியாரை உள்ளாற நுழைக்கிறது எல்லாம் தாடியிலேயே தூக்குப் போட்டுக்குவாரு என்கிற வார்த்தை பதத்திற்காக நிரப்பப்பட்ட சொல் அலங்காரம் தான். சொல் அலங்காரம் எழுத்தில் தேவை ஆனால் அது எழுதுவதன் நோக்கத்தை சிதைக்க கூடாது. இங்கு நீங்கள் குறிப்பிடும் நபரது எழுத்தில் சிதைவுதான் நிகழ்ந்துள்ளது.

பரிசல்காரன் சொன்னது…

ஜோசப் பால்ராஜின் கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன்!

Unknown சொன்னது…

இளிச்ச வாயனகு ... ஊர் எல்லாம் ... உதை ..
ரஜினி என்ன பண்ணாரு.. கமல் என்ன பண்ணாரு..
சும்மா இருண்ட ஷங்கு ஊதி கெடுத்தன ஆண்டி ...
நல்ல பதிவு

ஜோ/Joe சொன்னது…

கமல் அபிமானியாக அல்ல ,பெரியார் அபிமானியாக இந்த பதிவை வழிமொழிகிறேன்.

Sanjai Gandhi சொன்னது…

நல்லா தான் சொல்லி இருக்கிங்க...

//குசேலன் என்கிற பேரில் தனக்கு இருக்கும் இமேஜை மூலதனமாக வைத்து எடுத்தப்படம் பிரமிட் சாய்மிராவையும், விநியோகஸ்தர்களையும் ஆட்டம் காண வைத்தது பலரும் அறிந்தது தான், உப்பு சப்பு இல்லாத ஒரு படத்துக்கு 60 கோடி விலை வைத்து தமிழ் ரசிகர்களின் உழைப்பை சுரண்ட நடந்த மோசடி தான் குசேலன், இதற்கு ரஜினிகாந்த் உடந்தை, பெங்களூருவில் படம் ஓடவேண்டுமென்பதற்காக தனது நிலையை மாற்றிக் கொண்டார் என்கிற விமர்சனமெல்லாம் ஒருபுறம் இருக்கிறது.//

யார் இவனுங்களை 60 கோடி குடுத்து வாங்க சொன்னது... லாபமோ நஷ்டமோ.. எதுவா இருந்தாலும் பகிந்துக்கலாம்னு ஒரு ஒப்பந்தம் போட்டு எல்லா படங்களையும் வாங்க வேண்டியது தானே.. லாபம் வந்தா இவன் ஊட்ல அடுக்கி வச்சிப்பானுங்க.. நஷ்டம் வந்தா தயாரிப்பளர் ஊட்ட எழுதி கேபபனுங்களா? என்ன கொடுமை கோவி இது? :(

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி !

//SanJai Said...

நல்லா தான் சொல்லி இருக்கிங்க...

//குசேலன் என்கிற பேரில் தனக்கு இருக்கும் இமேஜை மூலதனமாக வைத்து எடுத்தப்படம் பிரமிட் சாய்மிராவையும், விநியோகஸ்தர்களையும் ஆட்டம் காண வைத்தது பலரும் அறிந்தது தான், உப்பு சப்பு இல்லாத ஒரு படத்துக்கு 60 கோடி விலை வைத்து தமிழ் ரசிகர்களின் உழைப்பை சுரண்ட நடந்த மோசடி தான் குசேலன், இதற்கு ரஜினிகாந்த் உடந்தை, பெங்களூருவில் படம் ஓடவேண்டுமென்பதற்காக தனது நிலையை மாற்றிக் கொண்டார் என்கிற விமர்சனமெல்லாம் ஒருபுறம் இருக்கிறது.//

யார் இவனுங்களை 60 கோடி குடுத்து வாங்க சொன்னது... லாபமோ நஷ்டமோ.. எதுவா இருந்தாலும் பகிந்துக்கலாம்னு ஒரு ஒப்பந்தம் போட்டு எல்லா படங்களையும் வாங்க வேண்டியது தானே.. லாபம் வந்தா இவன் ஊட்ல அடுக்கி வச்சிப்பானுங்க.. நஷ்டம் வந்தா தயாரிப்பளர் ஊட்ட எழுதி கேபபனுங்களா? என்ன கொடுமை கோவி இது? :( //

குசேலனுக்காக பிரமிட் மட்டும் வெளியீட்டாளர்கள் கொடுத்த "விலை மிக அதிகம் தான்"

:)

Thamira சொன்னது…

அதைப்போன்ற அற்ப பதிவுகளுக்கெல்லாம் பதில் எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்கவோ அல்லது தேவையில்லாது அதுபோன்ற‌ பதிவின் மீது விளம்பர வெளிச்சமோ பாய்ச்சியிருக்கத்தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன்.

Unknown சொன்னது…

அற்பத்தனமாக எழுதும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு பதிவெழுதி பிரபலப்படுத்துவது நேர விரயம்.

Kanchana Radhakrishnan சொன்னது…

மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.எதையும் விமரிசக்கலாம்..நையாண்டி செய்யலாம்..ஆனால் தேவையற்றவர்களை...அது தலைவர்கள் என்று இல்லை..யாராய் இருந்தாலும் சரி..இழுப்பதை தவிர்க்க வேண்டும்.

மோகன் சொன்னது…

கோவி, உங்களுடைய ரஜினியைப் பற்றிய பிற பதிவுகளை பார்த்தால் உங்களுக்கு ரஜினி மீது ஏதோ ஒரு வெறுப்பு/காழ்ப்புணர்வு உள்ளதுப் போன்று தோன்றுகிறதே?
http://pathivu.wordpress.com

Mathuvathanan Mounasamy / cowboymathu சொன்னது…

கோவி.கண்ணன் சரியாத்தான் சொல்லியிருக்கிறீங்கள். ஆனால் எல்லோருடைய கருத்துக்களையும் உள்வாங்கினாலும் அனைத்துக்கும் பதிலளிக்கவேண்டியதில்லையே என்பது எனதெண்ணம். விடு்ங்கள் தங்கள் காழ்ப்புணர்வுகளை எழுத்துக்களால் விழித்து நோய்களையாவது குறைத்துக்கொள்ளட்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மோகன் Mohan :

கோவி, உங்களுடைய ரஜினியைப் பற்றிய பிற பதிவுகளை பார்த்தால் உங்களுக்கு ரஜினி மீது ஏதோ ஒரு வெறுப்பு/காழ்ப்புணர்வு உள்ளதுப் போன்று தோன்றுகிறதே?
http://pathivu.wordpress.com //

திரு மோகன் Mohan,
ரஜினி எனது ஏழ்மையைப் போக்குவதாக வாக்குறுதி கொடுத்து ஒரு படம் நடித்துத் தருவதாகச் சொன்னார், இன்றுவரை சொன்ன சொல்லை அவர் காப்பாற்றவில்லை என்பதால் எனக்கு அவர் மீது வெறுப்பு / காழ்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்டம் அளித்த
முரளிகண்ணன்,
விஜய் ஆனந்த், ரெங்கா, பாலா, ஜோசப் பால்ராஜ், பரிசல்காரன், ஷேர்விவேக், ஜோ, சஞ்செய், தாமிரா, சுல்தான் ஐயா, காஞ்சனா இராதா கிருஷ்ணன் ஐயா, மதுவதனன் ஆகியோருக்கு நன்றி !

அந்த பதிவுக்கு எதிர்வினையாற்றியது தேவையற்றதாகவே நானும் உணர்கிறேன். :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்